Monday, October 23, 2017

என் கேள்விக்கென்ன பதில்?



என் கேள்விக்கென்ன பதில்?
J.K. SIVAN

எத்தனை எத்தனையோ மஹான்கள், சித்த புருஷர்கள் நம்மிடையே தோன்றி இருக்கிறார்கள். பலரை விடாது கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அவர்களது ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள். அர்த்தம் பொதிந்தவை. எந்த காலத்திற்கும் முக்யமாக தற்காலத்துக்கும் பொருந்தியவை.

அப்படிப்பட்ட ஒரு சித்தர் தான் சிவ வாக்கியர். அவர் வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக இருக்கும். தண்டவாளத்தில் ரயில் வண்டி ஓடுவதைப் போல ஆடி அசைந்து இதமாக மனதை தொடும். வேகமாக உள்ளே பதியக்கூடியதும் கூட.

வேத கால ரிஷிகள் மீன் தின்றார்களா? இல்லையா? மீன்கள் நீரில் என்னவெல்லாம் செய்தனவோ. அவை இப்படி உபயோகித்த ஆற்று நீரைத் தானே பருகினார்கள், அதில் தானே குளித்தார்கள். மீனை விடு. மானை சாப்பிடவில்லையா? அப்போதும் இப்போதும்? மான் தோலின் மீது தான் அமர்வதே அப்போதும் இப்போதும்! மான்தோலை சிறிது கொண்டது தானே உபவீதம் எனும் பூணுல்.

ஆடு சமாச்சாரமும் அப்படித்தான். அப்போதும் இப்போது சில இடங்களிலும்
வாஜபேய யாகம். வேறு விதத்தில் உணவுத்தட்டில் இப்போது.

பசு? ரிஷிகள் தொடவில்லை. இப்போதுள்ள சிலர்? புதைத்த இறந்த பசுவின், மாமிசம், கழிவு, சாணம் கூட காய்கறிகள் விளைய உரம் தானே! காய்கறிகளில் பசு மாமிசம்.......??

நிறுத்துங்கள் போதும். இது என்ன சிவவாக்கியர் என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு கழக ஆசாமி மாதிரி விதண்டாவாதம் பேசுகிறீர்கள். போதும் உமது வியாக்கி யானம். கேட்க தயாராக இல்லை இங்கு யாரும்! இப்படித்தான் நானும் நினைத்தேன்.

இது சிவவாக்கியர் தான். ஏன் எதற்கு எந்த சந்தர்ப்பத்தில் இப்படி சீறுகிறார் என்று புரியவில்லை. ஆனால் அவரது எழுத்தில் உள்ள வேகம், வாதம், சற்று சிந்திக்க வைக்கிறது. விடை தெரியாத வினாக்கள்!!. இனி பாடல்களை பார்ப்போம்.

மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்


மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...