Wednesday, October 11, 2017

நிர்வாண தசகம்




நிர்வாண தசகம் - J.K. SIVAN

ஆதி சங்கரர் நர்மதை நதிக்கரையில் அரண்யத்தில் தனது குரு கோவிந்த பாதரை காண்கிறார்.

ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட கோவிந்த பாதர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு ''நீ யார் அப்பா?'' என்று கேட்கிறார். அவரை குருவாக வேண்டிய சங்கரர் அப்போது சொல்லிய பதில் தான் பத்து ஸ்லோகங்களாக (தசகமாக) நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

நிர்வாணம் என்றால் ஆடையின்றி இருப்பது அல்ல. அப்படி தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் அது ஆத்மாவை குறிக்கும் சொல். இல்லாதது போல் இருப்பது. அதனால் தான் இந்த ஸ்லோகங்களில் ஆதி சங்கரர் ஆத்மாவை விவரிக்கும்போது நான் அது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்

தன்னை மனது தேகம், ஐம்புலன்கள் சம்பந்தப்படாத ஒரு பரிசுத்த ஆத்மாவாக, அறிவித்துக் கொள்கிறார்.

न भूमिर्न तोयं न तेजो न वायुर्न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनैकान्तिकत्वात्सुषुप्त्यैकसिद्धस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥१॥

Na bhoomir na thoyam na thejo na vayu,
Na Kham nendriyam vaa na thesham samooha,
Anaikanthikathwath suspthyeka siddha,
Thadekovasishta Shiva kevaloham. 1

ந பூமிர்ந தோயம் ந தேஜோ ந வாயுர்ந கம் நேந்த்ரியம் வா ந தேஷாம் ஸமூஹ: |
அநைகாந்திகத்வாத்ஸுஷுப்த்யைகஸித்தஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௧||

குருநாதா, என்னை இந்த கேள்விகள் பல முறை நானே கேட்டுக் கொண்டேன். அதில் நான் அறிந்தது நான் இந்த பூமி அல்ல, நான் பூமியைச் சுற்றிலும் உள்ள நீரும் அல்லன். ஒளி தரும் அக்னியும் இல்லை. ஆகாசமும் நான் அல்ல. எங்கும் காணும் காற்றும் இல்லை நான். ஐம்புலன்கள் ஆட்டுவிக்கும் இந்த தேகமும் அல்ல. நான் சொன்னதெல்லாம் ஒன்று சேர்ந்த உருவமும் அல்ல. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நான் சொன்னதெல்லாம் நிரந்தரம் இல்லாதது. நான் சிவன் எனும் ஆத்மன். மூன்று நிலைகளிலும், தூக்கம், விழிப்பு, கனவு என்று எதிலும் உள்ளவன். எதுவுமே இல்லாமல் போனாலும் இருப்பவன்.'' இது நிர்வாண தசகத்தில் முதல் ஸ்லோகம்.

நீ யார் என்று ஒரு வாத்தியார் கேட்டால் நாம் இப்படி பதில் சொன்னால் நமக்கு வாத்தியாரே கிடைக்க மாட்டார். நாம் வேறு ஆதி சங்கரர் வேறு. கோவிந்தபாதர் புரிந்து கொண்டார். ஆத்மஸ்வரூபன் அத்வைதன் அந்த பாலகன் என்று. சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார்.

न वर्णा न वर्णाश्रमाचारधर्मा न मे धारणाध्यानयोगादयोऽपि ।
अनात्माश्रयोऽहं ममाध्यासहानात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥२॥

Na varna , na varnasramachara dharma,
Na me dharana dhyana yogadhayopi,
Anathmasrayo aham mamadhya sahanath,
Thadekovasishta Shiva kevaloham. 2

ந வர்ணா ந வர்ணாச்ரமாசாரதர்மா ந மே தாரணாத்யாநயோகாதயோ(அ)பி |
அநாத்மாச்ரயோ(அ)ஹம் மமாத்யாஸஹாநாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௨||

குருநாதா ஜாதி என்று மனிதர்கள் தங்களை பிரித்துக் கொள்கிறார்களே நான் அந்த அல்லது எந்த ஜாதியும் இல்லாதவன், வாழ்க்கையில் பல படிகளாக, பருவங்களாக காண்கிறார்கள் அதில் ஒன்றும் நான் இல்லை, நான் மனிதர்கள் விதிக்கும் விதிகள் இல்லை. அதில் காண்கிறான் குணமும் இல்லை. நான் தியானமும் இல்லை, மந்திரமும் இல்லை, யோகவழிமுறையும் இல்லை. இந்த ''நான் '' ''எனது'' தானே எல்லா குளறுபடிகளும் காரணம். நான் அது ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் நான் உண்மையில் யார் என்று கேள்வி தானே எழும்புகிறதே. நான் அந்த சிவன் எனும் ஆத்மன், தூக்கம் விழிப்பு கனவு எதிலும் உள்ளவன்.எல்லாவற்றையும் அகற்றினாலும் எஞ்சி மிஞ்சி நிற்பவன்.

न माता पिता वा न देवा न लोका न वेदा न यज्ञा न तीर्थं ब्रुवन्ति ।
सुषुप्तौ निरस्तातिशून्यात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥३॥

Na matha pitha vaa na deva na loka,
Na veda na yagna na theertham bruvanthi,
Sushupthou nirasthadhi soonyath makathwath,
Thadekovasishta Shiva kevaloham. 3
ந மாதா பிதா வா ந தேவா ந லோகா ந வேதா ந யஜ்ஞா ந தீர்தம் ப்ருவந்தி |
ஸுஷுப்தௌ நிரஸ்தாதிசூந்யாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௩||

நான் எது அல்ல என்று மேலே ரெண்டு ஸ்லோகத்தில் சொன்ன ஆதி சங்கரர் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் இதெல்லாம் நான் இல்லை என்று விவரிக்கிறார் பாருங்கள்.

நான் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. எனக்கும் அப்படி யாரும் இல்லை. நான் வானுலகில் வாழும் தேவதைகளோ தெய்வங்களோ இல்லை. அப்படி ஏதாவது பூமியில் காணப்பட்டால் நான் அதுவும் இல்லை. நான் வேதம் எதுவும் இல்லை. ஹோம குண்ட அக்னியோ யாக யஞமோ இல்லை. அப்படியானால் நான் ஒருவேளை புண்ய நதிகளோ என்று எண்ணினால் தவறு. நான் அதுவும் இல்லை. நான் தூக்கத்திலும் இருப்பவன். திரும்ப மூன்றாவது முறை சொல்கிறேன். நான் சிவன், ஆத்மன். எங்கும் எதிலும் உள்ளவன். எதை பிரித்து எடுத்தாலும் அதற்கு பின்னாலும் உள்ளவன்.

சங்கரர் மேலே சொன்னதெல்லாம் ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


தசகத்தில் மூன்று சொல்லிவிட்டேன். இன்னும் ஏழு தொடரும்.

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...