Saturday, October 7, 2017

​​குருவாஷ்டகம்

​​குருவாஷ்டகம் ​4 ​ J.K. J.k. Sivan

With this posting, the eight slokas of Jagadguru Adhi Sankara's GURU ASHTAKAM is concluded:.

​ தத: கிம்? தத: கிம்? தத: கிம்? தத: கிம்?

न भोगे न योगे न वा वाजिराजौ, न कन्तामुखे नैव वित्तेषु चित्तम् ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 7 ॥

Na bhoge na yoge na va vaaji ​raajow,
Na kantha ​m​ukhenaiva vitheshu chittam,
​manachchena lagnam Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim. 7

ந போ⁴கே³ ந யோகே³ ந வா வாஜிராஜௌ
ந காந்தாமுகே² நைவ வித்தேஷு சித்தம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே
​​தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 7॥
உலகத்தில் ஒருவனுக்கு சுகம் என்பது அவன் உண்ணும் உணவிலோ, போகப்பொருள்களிலோ, யோகத்திலோ எல்லாம் இல்லை. உலக உணர்வு வெறும் மிருக உணர்வாக இருப்பது மனிதனுக்கு பொருந்தாது. குழந்தை குட்டி என்று குடும்ப விருத்தி அவனை மிருகத்திலிருந்து வேறு படுத்தாது.பணமும் குடும்பமும் அவன் பெறவேண்டிய சுகத்தை தராது. இதிலெல்லாம் சுகம் தேடி பெறுபவனின் வாழ்க்கையில் தான் என்ன பயன். ஒரு கண நேரமாவது அவன் தனது குருவின் பாதார விந்தங்களில் பணிந்து அருள் பெறவில்லையென்றால் மற்றதில் கிடைக்கும் சுகத்தால் ​​என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?​​​
​​
अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये, न देहे मनो वर्तते मे त्वनर्ध्ये ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 8 ॥

Aranye na va swasya gehe na karye,
Na dehe mano vartha medath vanargye,
Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim.

​அரண்யே ந வா ஸ்வஸ்ய கே³ஹே ந கார்யே
ந தே³ஹே மநோ வர்ததே மே த்வநர்க்⁴யே ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 8॥​ 8
​இயற்கையின் மொத்த உருவம் காடு, வனம் , ஆரண்யம். ​காடைப் பிடிக்காதவன் கிடையாது. தன்னுடைய பெரிய வீடு வாசல் இதிலும் அவன் புத்தி போகவில்லை. சரி. அவன் செய்யும் நித்ய கடமையில் அவன் மனம் செல்ல வில்லை. அதுவும் சரி. அவன் தேகத்தின் மீதும் அவனுக்கு எண்ணம் போக வில்லை. ரொம்ப சரி. இதெல்லாம் விட்டு வேறு விஷயங்களிலும் அவன் நினைப்பு இல்லை. ஓஹோ இதெல்லாம் ஒருவனை மிகப்பெரிய ஞானி, மஹான் என்று ஆக்கி விடுமா? ஒரு கணமாவது அவன் மனம் அவனது குருவை நினைத்ததா? அவரது தாமரைத் திருவடிகளில் சரணடைந்தானா? அப்படி செய்ய வில்லையா? பிறகு மற்ற அவனது சிறந்த செயல்களால் ​என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?​​​

​இந்த எட்டு குரு அஷ்டகங்களை ஒருவன் உணர்ந்து அதன் படி குருவை வணங்கி அவரை சரணடைவானாகில் அவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அவன் ராஜாவாக இருக்கட்டும், பெரிய ஞானியானாலும் சரி, சிஷ்யனாக இருப்பினும் சரி, கிரஹஸ்தனானாலும் சரி, வாழ்க்கையில் அவன் பெறவேண்டிய அருளை பெறுவது நிச்சயம். அது என்ன கிடைத்தற்கரிய ப்ரம்மத்தோடு இணையும் பாக்கியம் .
கு³ரோரஷ்டகம் ய: படே²த்புண்யதே³ஹீ
யதிர்பூ⁴பதிர்ப்³ரஹ்மசாரீ ச கே³ஹீ ।​​
லபே⁴த்³வாஞ்சி²தார்த²ம் பத³ம் ப்³ரஹ்மஸம்ஜ்ஞம்


கு³ரோருக்தவாக்யே மநோ யஸ்ய லக்³நம் ॥​​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...