Tuesday, October 17, 2017

லோகா ஸமஸ்த்தா ஸு கினோ பவந்து:

               
 லோகா  ஸமஸ்த்தா   ஸு கினோ பவந்து: 
                                         J.K. SIVAN 

எங்கே பார்த்தாலும்  படார்  டபார்  என்று  காதைப் பிளக்கும் சப்தம் கேட்கிறது.  ஏதோ யுத்த பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது.  தெருவில் எந்த நேரம் எது வந்து தாக்குமோ என்று பயத்தோடு கீழே பார்த்து செல்ல வேண்டி இருக்கிறது.  செத்ததாக  தோன்றும் ஏதோ ஒன்று திடீர்ன்னு உயிர் பெற்று வெடிக்கிறது இல்லை பறக்கிறது. வண்டியில் சென்றால் கை  நடுங்கி பாலன்ஸ் தவறி விழுந்து விடுவோமோ? எதிரே யார் மீதாவது மோதிவிடுவோமோ?

தெருவெல்லாம் ஏற்கனவே குப்பை. இப்போது அதிகம்.  கந்தக நெடி மூச்சு திணறுகிறது. ஒரு நாய்  மாடு கண்ணில் படவில்லை. ஒரு பறவை மூச்சு காட்டவில்லை.

கண்ணன் அவற்றை எங்கோ பதுங்க வைத்துள்ளான்.  காசெல்லாம் கரியாகி , கரியெல்லாம்  காசாகும் நேரம் இது. போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே.

வீட்டில்  குத்து விளக்கு எரிகிறது. அதன் எதிரே புல்லாங்குழல் கையிலேந்தி ''ஆடாது அசங்காது நிற்கிறாயே  ''உன் பார்வை ஒன்றே போதுமே''

வெளியே உள்ள சப்தம் என் மனதில் இல்லாமல் அமைதி ஓடட்டும். குப்பைகள் அகலட்டும். வா  வந்து இரு அதில்.
பாரோ க்ரிஷ்ணய்யா.     நீ எங்கும் இருப்பவன் எல்லோர் மனத்திலும் குடி புகுந்துவிடு. என்றும்  நிறைவைக் கொடு. எதிலும் நிம்மதியைக் கொடு.  இயற்கையின் சீற்றமும் போதும். வறட்சியும் போதும்.

''மந்திரி நமது  ராஜ்யமதிலே
மாதம் மும்மாரிமழை  பொழிகிறதா?""

 என்று ராஜா மந்திரியை கேட்கவேண்டாம்.  சட பட என்று வானம் அடிக்கடி பொத்துக்கொண்டு பொழியட்டும். எங்கும் சுபிட்சம் நிலவட்டும்.  நோய் நொடி மறையட்டும்.  ஒற்றுமை எங்கும் நிலவட்டும். அன்பு உன் எதிரே ஒளிவீசும் தீபத்தைப் போல அழகாக ஒளி வீசட்டும்.

இனிப்பு  நாக்கை தாண்டி இதயத்திலும் நிறையட்டும். நெஞ்சில் பரவட்டும். கண்ணில் கருணை தெரியட்டும். எல்லோரும் நல்லவரே. உன் படைப்பில் எது மட்டம்?

தீபாவளி  தீபாவளி  தீபாவளி  --  லோகா சமஸ்தா  சுகினோ பவந்து.   இது தானே உனக்கு பிடித்த மந்திரம். அதை திருப்பி திருப்பி சொல்கிறேன். இன்று மட்டும் அல்ல   ஒருநாள்  வாழ்த்தாக இல்லை. வாழ்நாள் முழுதும் எதிரொலியாக 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...