Saturday, September 30, 2017

விவேக சிந்தாமணி 3

விவேக சிந்தாமணி 3 J.K. SIVAN

பாண்டியன் கத்தியை தூக்கிக் கொண்டு சேதுவை நோக்கி ஓடினானே ? அவனைக் கொன்றானா? -- இந்த கேள்வியெல்லாம் கதைகளில் விறுவிறுப்புக்காக வரும். விடை தெரிந்தவுடன் அது அதோடு நின்றுவிடும். மறுபடியும் அதை படிக்க மாட்டோம். பாண்டியன் என்ன செய்தான் சேதுவுக்கு என்ன ஆயிற்று என்று தான் தெரிந்து போய்விட்டதே.

வேதாந்த சார விஷயங்கள் பாண்டியன் சமாச்சாரம் இல்லை. எத்தனை தரம் படித்தாலும் புதிதாக மனதில் பதியும். முன்பு தோன்றாதது இப்போது தோன்றும். விளங்காதது விளங்கும். இது தான் அசைபோடுவது. ஆத்ம விசாரம் இது தான். திரும்ப திரும்ப அதையே நினைப்பது. புரிந்து கொள்வது.

ஆதிசங்கரரின் விவேக சிந்தாமணி அடுத்த சில ஸ்லோகங்களை பார்ப்போம்.

आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगण्यते।
इहामुत्रफलभोगविरागस्तदनन्तरम्।
शमादिषट्कसम्पत्तिर्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥१९॥

முதலாவது எது நித்யம் அது அநித்தியம், எது நிஜம், எது நிழல் என்று பகுத்தறியும் சக்தி வேண்டும்.
அத்தியாவசியமானது புலனடக்கம். அப்போது தான் எது வேண்டத்தக்கது, எது வேண்டாதது என்று புரியும். எதை வேண்டாமென்று நிராகரிக்கிறோமோ அது தான் தியாகம். கீதை தியாகத்தை பற்றி சொல்கிறது என்பதை வேடிக்கையாக சொல்வது வழக்கம். அதாவது ''கீதா கீதா'' என்று ''மரா மரா'' மாதிரி திரும்ப திரும்ப சொல்லும்போது அது ''தாகீ தாகீ'' ஆகிவிடுகிறதே அதன் அர்த்தம் தியாகி என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். .

இரண்டாவது, செய்யும் கர்மத்தின் பலன் எங்கேயாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று அறிந்து அதை அகற்றுவது,

மூன்றாவது, என்று சொல்லும் ஆறு வகையான ஆசாரங்கள், தர்மங்கள் இருக்கவேண்டும். (சமம் : மனதை அடக்குவது, தமம் : ஐம்புலன்களை அடக்குவது, உபரதி: எல்லாம் ஒன்றே என்ற மனம், தர்சனம், திதிக்ஷா: பொறுமை, ஏற்றுக்கொள்வது. சமாதானம்: சத்தியத்தில் நாட்டம், ஸ்ரத்தா: செய்யும் கர்மத்தில் குருவிடத்தில் சாஸ்திர சம்பிரதாயத்தில் கவனம், நம்பிக்கை )

நான்காவதாக மோக்ஷம், முக்தி அடையவேண்டும் என்ற தீராத ஒரு விருப்பம். நிச்சயம் நம்மிடம் இதில் ஒன்றும் இருக்காது என்று தெரியும். எனினும் கொஞ்சம் கொஞ்சமாக இதில் ஈடுபடலாமே.
ब्रह्म सत्यं जगन्मिथ्येत्येवंरूपो विनिश्चयः।
सोऽयं नित्यानित्यवस्तुविवेकः समुदाहृतः ॥२o॥

சங்கரர் நம்மிடம் ரொம்ப எதிர்பார்க்கிறார். பிரம்மம் ஒன்றே சத்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சம் நம்மை சுற்றி இருக்கிறதே, உண்மையாக சாஸ்வதமாக நிரந்தரமாக் உள்ளது போல் காண்கிறதே, அது மாயை, வெறும் கண்கட்டி வித்தை. காசு கொடுக்காமல் பார்க்கும் மோடி மஸ்தான் வேடிக்கை என்று புரிந்து கொள்ளவேண்டும். இது உணர்ந்தாலே நித்ய அநித்திய வஸ்துக்களுக்கான வித்யாசம் புரியும்.

साधनान्यत्र चत्वारि कथितानि मनीषिभिः।
येषु सत्स्वेव सन्निष्ठा यदभावे न सिध्यति॥१८॥

The wise have spoken about four qualifications the presence of which in an aspirant will lead to realization and the absence of which will result in not achieving that goal.

ஆத்மா என்று நம்முள் ஒன்று இருக்கிறதே தெரியுமோ? அது தான் உண்மையிலேயே நாம். இதை அறியவே நான் யார் நான்யார் என்று தேடுகிறோம். சாக்ரடீஸ் காலத்திலிருந்து உன்னை அறிவாய் என்று திரிகிறோம். இது தெரியாமை, அறியாமை என்றார்கள் ரிஷிகள். இதை அறியாமல் உலகை அறியமுடியாது.. அதை உணர்ந்து கொள்ள நாலு தகுதிகள் உள்ளனவே. ஒருக்கால் அந்த தகுதிகள் காணோம் என்றால் ஆன்மாவை தேடாமல் டி.வி. பார்க்கலாம்.

ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அத்வைத ரத்னம். சிறு ரெண்டடி ஸ்லோகங்களில் பக்தியை, ஞானத்தை,ஆன்மாவை கர்மத்தை, தர்மத்தை, குரு பக்தியை , பரோபகாரத்தை,முக்தியை பற்றியெல்லாம் வெகு அழகாக தனித்வத்தோடு சொல்கிறார். அந்த ஸ்லோகங்களை ஸம்ஸ்க்ரிதத்திலும், ஆங்கில வடிவிலும், தமிழில் எனக்குத் தெரிந்த வரையிலும் விளக்கி தந்திருக்கிறேன்.

वेदान्तार्थविचारेण जायते ज्ञानमुत्तमम्।
तेनात्यन्तिकसंसारदुःखनाशो भवत्यनु॥४५॥

உலகோரே, வாட்டி எடுத்து வதைக்கும் துன்பங்களிலிருந்தும், மாயையின் சோதனைகள், வாதனைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற ஒரு வழி இருக்கிறதே, உபநிஷதங்கள் வேதங்கள் உரைக்கும் மந்திரங்கள் அவற்றின் பொருளுணர்ந்து ஓதுதலும் அவற்றின் மூலம் கிடைக்கும் ஞானமும் செய்யும் தியானமும் தான்அந்த உபாயம்.



மழலைச் செல்வம்


மழலைச் செல்வம்.-- J.K. SIVAN

ஒவ்வொருவரும் தமது வாழ்வில் மனமார விரும்புவது புத்ர பாக்யம். பேரன் பெயர்த்தி பிறந்த சந்தோஷம் பெரிசுகளிடம் பார்க்க வேண்டுமே! குழந்தைகளில் ஆண் பெண் வித்யாசமே கிடையாது. என்னை பெண்ணாக்கி தெருவில் நடக்க விட்டிருக்கிறார்கள் என் சின்ன வயதில். எத்தனை வீடுகளுக்கு வெட்கம் தெரியாமல் பாவாடை சட்டை, கவுன் போட்டுக்கொண்டு கன்னி மையோடு கையில் வளையலோடு சென்றிருக்கிறேனோ!

குழந்தை ஆண் தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. இருந்தும் செல்லம் கொஞ்சும் போது நாம் ஆணைப் பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கி அழைத்து மகிழ்கிறோம். இதையும் மீறி குழந்தையை செல்ல நாய்க்குட்டி, கிளி, என்றும் சில பேர் அக்றிணைப் பொருளாகக் கூட கொஞ்சுவது அதீத ப்ரேமையால். இது இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை அல்லவா?

எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்ரீ குருவாயூரப்பனை தனது செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டு வீடெங்கும் எங்கு நோக்கினும் குட்டி கிருஷ்ணனின் பல வித ரூப தரிசனம். அவர் வீட்டில் நானும் என் நண்பர் சுந்தரம் ராமச்சந்திரனும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியில் மகிழ்ந்து திளைத்தோம். அவர் படுக்கையில் அருகே ஒரு சிறு குட்டிக் கட்டில் (தொட்டில்) , அதில் மெத்தை, போர்வை, தலையணை, அதில் குட்டி கிருஷ்ணன் படுத்துக்கொண்டிருப்பான். அவனுக்கென்று தனி உடைகள், ஆபரணங்கள். பார்த்து பார்த்து ஊர் ஊராக சென்று வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார் அந்த கிருஷ்ண ப்ரேமி. அவரோடு அவனும் சாப்பிடுவான். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் ரேஷன் கார்டில் இல்லாத, வாக்காளர் பட்டியலில் இல்லாத, ஒரு குடும்ப நபர் அந்த குட்டி கிருஷ்ணன். வெளியே எங்கு போனாலும் அவனிடம் சொல்லிக்கொண்டு போவது. அவனுக்கும் ஏதாவது வாங்கி வருவது.... இதுபோன்று

வேறு சில நண்பர்களையும் நான் அறிவேன்.
அவர்கள் தெய்வங்களையே தம்மோடு இணைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

நம்மில் பலரோ, கோவிலுக்கே செல்லாதவர்கள், கோவிலுக்கு போனாலும் மனதை வெளியே உள்ள செருப்பில் நிலைத்து நிறுத்தி, வெங்கடேசன் முன் நின்று கொண்டு அடுத்த கணமே ஜருகண்டி என்று பிடித்து தள்ளப்படுவதற்கு முன் அவனைப் பார்க்கக் கிடைத்த சில நிமிஷங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு இயந்திரமாக கை கூப்புபவர்கள்.

ஒருவருக்கு கண்ணன் குழந்தையாக அதுவும் பெண் குழந்தையாக தோன்றினான்..அவர் அவனைக் கொஞ்சுவதைப் பார்ப்போமா ?

''என் கண்ணம்மா, குழந்தை, நீ சின்னஞ் சிறு கிளியடி, , எனது செல்வக்களஞ்சியம். அம்மம்மா. எத்தனை கஷ்டங்களடி துன்பங்கள், அவை எல்லாவற்றிலிருந்தும் நான் தேறி, விடு பட்டு, வாழ்வில் அடுத்த கட்டம் முன்னேற வைத்தவளே நீ தான்.

கண்ணம்மா, உன்னை நான் எப்படிப்பார்க்கிறேன் தெரியுமோ? என் கனி அமுதாக. என்னுடன் பேசுகின்ற தங்கப் பதுமையாக. அழகான ஓவியமாக. நான் ''வாடி, வாடி என்னருகே என்று உன்னைத் தேடி தேடி வருவேன். உன்னை அள்ளி அப்படியே மார்புற அணைத்துக் கொள்ள நெஞ்செல்லாம் ஆசையோடு வருவேன். நீ என்ன செய்வாய் தெரியுமா? ஆடிக்கொண்டே என்னருகே வருவாய். என் தேனினும் இனிமையான சுவையே''

கண்ணம்மா என்று கூப்பிடுவேனே, நீ ஓடி வருவாயே, அதைப் பார்த்து என் உள்ளம் எப்படியெல்லாம் பனிமலை மேல் இருப்பதுபோல் குளிரும் தெரியுமா?

எங்காவது வெளியே சென்று வீடு திரும்புவேன். என் கண் உன்னைத் தான் முதலில் தேடும். நீ விளையாடிக் கொண்டிருப்பாய் எங்காவது. நான் உன்னை நெருங்குவதற்கு முன்னரே, என் மனம் ஆவி எல்லாம் அங்கே ஓடிப் போய் உன்னைக் கட்டித் தழுவுமே.''

உச்சி முகர்தல் ஒரு சிறந்த அனுபவம். எத்தனை பெற்றோர்கள் அதனை அனுபவித்திருக்கிறார்கள் . அது கொடுக்கும் இன்பம் ஷாம்பூ வாசனைக்கும் அப்பாற்பட்டது . என் பேரன், என் பேத்தி, என்று பாட்டி தாத்தா ஒரு புறம் உரிமை கொண்டாடட்டும். தந்தை தாய்க்கு கிடைக்கும் இன்பம் எவ்வளவு அவர்களை பெருமிதத்திலும் யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற கர்வத்திலும் உயர்த்திக் காட்டும்.

''சார் உங்க பையன், ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ, படு கெட்டிக்காரன். ஒரு கணக்கு கொடுத்தேன். பளிச்சுன்னு பதில் சொன்னான் சார். அசந்து போய்ட்டேன். ஐ க்யூ ஜாஸ்தி அவனுக்கு. எப்படி சார் உங்க பையனை இப்படி வளர்த்தீர்கள்?'' ரொம்ப அறிவாளி உங்க பையன், ரொம்ப வினயமானவன், அழகன், ஆள் மயக்கி, படிப்பு விளையாட்டு எல்லாத்திலேயும் உங்க பையன் தான் சார் முதல்'' என்று ஊரில் பலர் மெச்சும்போது நான் இந்த உலகத்தில் இல்லை. வானுலகில் மிதந்தேன்.

''கண்ணம்மா உன் பட்டுக் கன்னத்தில் முத்தமிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ரகசியம். இழுத்து பிடித்து அணைத்து இச் சென்று ஒரு கன்னத்தில் முத்தம் பதிக்கும்போது காசு கொடுக்காமலேயே, டாஸ்மாக் போகாமலேயே நிறைய கள் வெறி என் நெஞ்சில் ஏற்பட்டு விடுமே. அப்படி ஒவ்வொரு தரமும் உன்னை இருக்கிப் பிடித்து அணைத்துக் கொள்ளும் போதேல்லாம் என் கண்ணம்மா, எனக்கு நினைவே அழிந்து விடும். நான் யார், என்ன பெயர், எந்த ஊர், என்ன உலகம் என்றே தெரியாத ஒரு உன்மத்தத்தின் உச்சியில் ஒரு இன்ப போதை எனக்கு தானாகவே லயித்துவிடும். எனக்கு அதிலேயே இருக்க ரொம்ப ரொம்ப ஆசை கண்ணம்மா.

யாராவது ஏதாவது உன்னைச் சொன்னாலோ, உனக்கு எங்காவது அடிபட்டாலோ, உனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்து விட்டாலோ, நீ விசனத்தோடு பொங்கி வரும் அழுகையோடு, முகம் சிவப்பாக நிற்பதைக் கண்டால் எனக்கு உலகமே சுற்றுமடி கண்ணம்மா. என்னன்னவோ பயங்கரமான எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி என்னை அடியோடு குலைத்து விடும். உன் ஒரு நெற்றிச் சுருக்கத்தில் என் நெஞ்சு பதினாயிரம் சுக்கலாக வெடித்து விடுமே. பித்தம் பிடித்தவனாகி விடுவேனே. வேண்டாம், அந்த அனுபவம், வேண்டவே வேண்டாம் கண்ணம்மா அந்த துன்பம் .

அந்த மாதிரி ஒரு கணம் நீ துன்பத்தில் ஆழ்ந்து உன் கண்ணிலிருந்து முத்துக் களாக கண்ணீர் வந்தது என்றால் நான் தொலைந்தேன். அங்கே சொட்டுவது உன் கண்ணீராக இருக்காது கண்ணம்மா, அங்கே என் உதிரம், என் ரத்தம் கொதித்து ஆறாக நெஞ்சிலிருந்து பொங்கி எழுந்து வெள்ளமென பெருகி ஓடும்.
உன்னைப் பொத்தி பொத்தி வளர்க்கிறேன் கண்ணம்மா. என் கண்ணின் பாவை மட்டுமல்ல பார்வையும் கூட நீ தானடி தெய்வமே.

எனக்கு என்று தனியாக ஒரு உயிர் இருக்கிறது என்று யாரேனும் நினைத்தால் அவர்களைப் போல் விஷயம் அறியாதவர்கள் உலகத்திலேயே கிடையாது. எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் அது என்னிடம் இல்லையே. அதைத் தான் உன் உயிர் என்று நான் உன்னுள் வைத்திருக்கிறேனே.

நீ மழலையில் பேசும் போதெல்லாம் நான் மயங்கிப்போய் விடுவேனே. எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள் என்னை வாட்டும். தூக்கமின்றி தவிப்பேன். அப்போதெல்லாம் உன் ஒரு பேச்சு, மழலை மொழி, என் அத்தனை துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிடுமே.

விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே, சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?

அப்போது இருக்கும் மன நிலை தான் உனது முல்லைச் சிரிப்பில் கண்ணம்மா. நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவனையும் அந்த முல்லை மலர் முன் கொண்டு நிறுத்துங்கள். அவன் மூர்க்கம் அனைத்தும் தொலைந்து அவன் சன் மார்க்கம் பெறுவானே. நான் சந்தோஷப்படுவதில் என்ன ஆச்சர்யம்.

ஒரு குழந்தையை அதன் தந்தை 'தனது நண்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ''அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டு.'' ஆறு வயது ''அம்பி மாமாவை பார்த்தான். சிரித்தான்.

அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டுடா. சீக்கிரம் ''.

''அம்பி பேசுடா பயலே நான் கேட்க காத்திருக்கிறேன்'' என்றார் அந்த மாமாவும்.
அம்பி பேசினான். '' மாமா மர்கயா'' அம்பியின் அப்பாவுக்குஇந்தி தெரியாது. சந்தோஷமாக மாமா பக்கம் திரும்பும்போது மாமா வெளியே சென்று வெகு நேரமாயிருந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

கண்ணம்மா, உன் பேச்சுக்கள் எனக்கு இன்பக் கதைகள். எத்தனை பெரிய பெரிய ஆசிரியர்களின் புத்தகம் படித்தாலும் உன் வார்த்தை போல் அவை எனக்கு இனிக்கவில்லையடி. புத்தகம் அறிவைத் தந்தது. அன்பைத் தரவில்லை. நீ அன்பையே புத்தகமாக தருகிறாயே கண்ணம்மா. அன்பே தெய்வம் என்பது உன்னில் நான் அறிந்த பாடம்.

நான் நகைகள் நிறைய வாங்கி நெஞ்சில் மார்பு மறைக்க அணிவதில் விருப்பமில்லாதவன். விருப்பமிருந்தாலும் அதை ஆசை நிறைவேற வசதி இல்லாதவன். எனக்கு இப்படிப்பட்ட நகைகள் தரக்கூடிய பெருமை, இன்பம், சுகம், எல்லாமே, உன்னை மார்புறத் தழுவும்போது கிடைக்கும் போது நான் அனுபவிக்கிறேனே அதற்கு கால் தூசியாகுமா? எனக்கு வாழ்வில் பெருமிதம் உறுவதற்கு, சுகமடைய, ஈடிணை அற்ற நான் பெற்ற சங்க நிதி பத்ம நிதி எது தெரியுமா, நீ, நீ, நீயே கண்ணம்மா. என் செல்வமே.


இது வரை நீங்கள் படித்தது என் கற்பனையல்ல. நான் ரசித்து மகிழ்ந்த மகாகாவி சுப்ரமணிய பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்று கண்ணனை குழந்தையாக பாவித்து அனுபவித்த மகா காவியம். இதோ அது:

8. கண்ணம்மா - என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10

OUR WORLD

SWAMIJI'S TIME - J.K. SIVAN

OUR WORLD

Can we do good to the world? In an absolute sense, no; in a relative sense, yes. No permanent or everlasting good can be done to the world; if it could be done, the world would not be this world. We may satisfy the hunger of a man for five minutes, but he will be hungry again. Every pleasure with which we supply a man may be seen to be momentary. No one can permanently cure this ever-recurring fever of pleasure and pain. Can any permanent happiness be given to the world? In the ocean we cannot raise a wave without causing a hollow somewhere else. The sum total of the good things in the world has been the same throughout in its relation to man's need and greed. It cannot be increased or decreased. Take the history of the human race as we know it today. Do we not find the same miseries and the same happiness, the same pleasures and pains, the same differences in position? Are not some rich, some poor, some high, some low, some healthy, some unhealthy? All this was just the same with the Egyptians, the Greeks, and the Romans in ancient times as it is with the Americans today. So far as history is known, it has always been the same; yet at the same time we find that, running along with all these incurable differences of pleasure and pain, there has ever been the struggle to alleviate them. Every period of history has given birth to thousands of men and women who have worked hard to smooth the passage of life for others. And how far have they succeeded? We can only play at driving the ball from one place to another. We take away pain from the physical plane, and it goes to the mental one. It is like that picture in Dante's hell where the misers were given a mass of gold to roll up a hill. Every time they rolled it up a little, it again rolled down. All our talks about the millennium are very nice as school-boys' stories, but they are no better than that. All nations that dream of the millennium also think that, of all peoples in the world, they will have the best of it then for themselves. This is the wonderfully unselfish idea of the millennium!

இன்று விஜயதசமி.

இன்று விஜயதசமி. - J.K. SIVAN

விஜய தசமி ஷீர்டி சாய் பக்தர்களுக்கு ஒரு விசேஷ நாள்.

எண்ணற்றோர் அன்றும் இன்றும் பாபாவை நம்பி வேண்டி பயன் பெற்ற அதிசய சம்பவங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் எழுத நூறு வருஷமாவது ஆகும் அப்போதும் முற்றுப் புள்ளி வைக்க முடியாதபடி தொடரும்.

மைலாப்பூரில் வியாழக்கிழமைகளில் தெருவில் ஒரு அங்குலம் கூட இடைவெளி கிடையாது.எண்ணற்ற சா
ய் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். பார்க்கவே புளகாங்கிதம். ஏதோ ஒரு மந்திர சக்தி நம்மை பிணைக்கிறது. ஷீர்டி ஒரு புண்ய பூமி.

அவர் முக்கால்வாசி நாள் வெறும் காலோடு தான் நடந்தார். காலணி அணிவது சில நேரங்களில். நீளமான குர்தா ஒன்று முழுக்கையோடு, முழங்கால் தாண்டி கீழே பாதிக் கால் வரை அணிந்திருப்பார். ஒரு தரம் ஷீர்டி பக்கம் பெரும் புயல். மக்கள் ஓடிவந்தனர். பொருள், விளைச்சல் சேதம். பாபாவிடம் முறையிட்டனர். பாபா ஏ புயலே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் நிறுத்து உன் அட்டகாசத்தை என்பது போல் கைகளை ஆட்டி ஏதோ சொன்னார். அடுத்த சில நிமிஷங்களில் புயல் ஓய்ந்தது என்கிறார்கள். இயற்கையைக் கூட கட்டுப் படுத்தக்கூடிய சக்தி மகான்களுக்கு உண்டு

''மஹால்சபதி உன் குடும்பத்தில் ஒரு துரதிர்ஷ்டம் நேரப்போகிறது.ஆனால் அதற்காக கவலைப்படாதே. யாமிருக்க பயமேது ' என்கிறார் ஒருநாள். சில நாள் கழித்து அந்த குடும்பத்தில் அனைவருமே நோய் வாய்ப்பட்டனர். பல டாக்டர்கள் மருந்து கொடுக்க வந்தபோது பாபா ''நோய் சில நாள் பாதிக்கபோகிறது. உங்கள் மருந்து பயன் தராது .போங்கள் '' என்கிறார். டாக்டர்கள் போய்விட்டார்கள். தனது கையில் ஒரு கட்டையோ செங்கல்லோ வைத்துக்கொண்டு தான் இருந்த மசூதியை சுற்றி வந்தார். ''ஹே நோயே, என்ன நினைத்துக்கொண்டி
ருக்கிறாய். உன்னால் இதை அணுக முடியும்.எ போ இங்கிருந்து'' என்று தன கையில் இருந்த கல்லை காட்டுகிறார். அடுத்த ரெண்டே நாளில்மஹாலசபதி வீட்டில் அனைவரும் குணமாகிறார்கள்.

இதே விஜய தசமி 1918ல் அக்டோபர் 15 அன்று வந்தது. அன்று ஒரு மஹா சம்பவம் நடந்தது.

அதற்கு ரெண்டு வருஷங்களுக்கு முன்பே 1916ல் ஷீர்டி சாய் பாபா ''நான் இன்னும் கொஞ்சம் காலத்தில் இதே தேதியில் மறைவேன் '' என ஜாடையாக உணர்த்தின சம்பவம் இது..

அன்று சாயந்திரம் பக்தர்கள் சீமோலங்கன் கிராமத்திலிருந்து எல்லை கடந்து ஷீர்டிக்கு திரும்பி வந்தது பற்றி பாபாவுக்கு திடீரென்று ஏனோ ரொம்ப கோபம் வந்துவிட்டது. தலையை சுற்றி அணியும் துணியை எடுத்து விசிறினார். இடுப்பு துணி, நீண்ட குர்தா எல்லாவற்றையும் கழற்றி னார் . துண்டு துண்டாக எல்லாவற்றையும் கிழித்து அருகே எப்போதும் எரியும் அக்னி குண்டத்தில் (துனி) போட்டார். கண்கள் சிவக்க நின்றார். ''வாருங்கள் எல்லோரும். நான் இந்துவா முஸ்லிமா என்று சந்தேகம் தானே. வந்து பாருங்கள்'' என்று கத்தினார்.

அருகிலிருந்தோர் நடுங்கினார்கள். பயத்திலும் பக்தியிலும் யாரும் அவர் அருகே வரவில்லை. ஆடையின்றி நின்ற பாபாவின் அருகே மெதுவாக பாகோஜி ஷிண்டே எனும் குஷ்டரோகி பக்தர் சென்றார். தன் மீதிருந்த நீண்ட வஸ்திரத்தை பாபாவின் இடையில் சுற்றினார்.

''பாபா என்ன ஆயிற்று?'' என்று கேட்டார். இன்று சிமோலங்கன் -- தசரா நாள் என்கிறார்

''ஆமாம் தசரா. இது என்னுடைய சீமோலங்கன் - தசரா என்று தரையில் ஒரு கம்பினால் அடிக்கிறார் பாபா. இரவு 11 மணி வரை பாபாவின் கோபம் ஏனோ அடங்கவில்லை. வழக்கமாக நடக்கும் சாவடி ஊர்வலம் அந்த இரவு நடக்குமா என்று பக்தர்கள் பயந்தனர். நடு இரவு 12 மணிக்கு பாபா வழக்கம்போல் சாந்தமாக காணப்பட்டார். வழக்கமாக அணியும் உடைகளை அணிந்தார். சாவடி ஊர்வலம் நடை பெற்றது. கூடவே வந்தார். தசரா தான் உலகைக் கடக்கும் நாள் என்று உணர்த்திய சம்பவம் இது.

ஒரு பக்தர். ராமச்சந்திர பாடில். உடல் நிலை ரொம்ப தீவிரமாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். வீட்டில் என்னென்னவோ மருந்து மாயம் பண்ணி பார்த்தும் குணமில்லை. சில நாட்களோ மணிகளோ தான் பூலோக வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அந்த இரவு பாபா நள்ளிரவில் பாட்டிலின் படுக்கைக்கு அருகே வந்து நின்றார். பாட்டில் மெதுவாக பாபாவின் கால்களை பிடித்துக் கொண்டார்

''இனிமே நம்பிக்கை இல்ல பாபா. எப்ப கிளம்புவேன் நிச்சயமாக என்று சொல்லுங்க பாபா ''

” நீ எதுக்கு அலட்டிக்கிறே. உனக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. உன் சீட்டு கிழியாது. ஆனா தாதியா பாட்டில் பத்தி சொல்லமுடியாது. அவன் இன்னும் ரெண்டு வருஷத்தில் விஜயதசமி அன்னிக்கு போயிடுவான்''

பாட்டீலுக்கு குணமாகி சைக்கிள் ஒட்டிக்கொண்டு சென்றார்.

வருஷம் ரெண்டு ஓடியது. 1918 விஜயதசமி அன்று. தாத்தியா பாட்டீலுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்தார். பாபாவுக்கும் நல்ல ஜுரம். தாத்தியா பாட்டில் பாபாவின் பரம பக்தர். அவர் உடல் நிலை மோசமாகிக்கொண்டு வந்தது. நெஞ்சில் பாபாவின் நினைவு மட்டும்.

பாபா சொன்னது நினைவுக்கு வந்தது. ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி இருவருமே பாபா சொன்னது போல் நடக்கப் போகிறது என்று பயந்தார்கள். தாதியா பாட்டிலின் இறுதிக்கணம் நெருங்கியது. பாபா அவர் அருகே ஜுரத்தோடு வந்தார். அவரை தொட்டு தடவிக்கொடுத்தார். பிறகு தான் ஜுரத்தோடு போய் அமர்ந்தார். படுத்தார். புதிதாக ஒரு வாடா அவருக்காக அமைத்துக் கொண்டி ருந்தார்கள். எநாக்கு இந்த மசூதியிலிருப்பது சரிப்பட வில்லை. என்னை தூக்கிக்கொண்டு அந்த தகடி வாடாவில் கொண்டு விடுங்கள் '' என்று சொன்னார். அங்கே தான் இன்றும் அவரது சமாதியை தரிசிக்கிறோம். அங்கே முரளிதரனை ஸ்தாபிதம் பண்ண உத்தேசமாக இருந்தது. பாட்டில் பிழைத்தார். பாபா சொன்ன நேரத்தில் மறைந்தார்.

'நான் இந்த சமாதியிலிருந்து உங்களோடு தொடர்பில் இருப்பேன்'' யாமிருக்க பயமேன்'' என்றார் பாபா.



விஜய தசமி ஷீர்டி சாய் பக்தர்களுக்கு ஒரு விசேஷ நாள்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...