Wednesday, September 13, 2017

புஷ்கர கங்கா



மாயூரம்   மஹா புஷ்கர கங்கா ஸ்னானம்   J.K. SIVAN 

ப்ரம்மா ஒரு தாமரைப்பூவை தூக்கிக்கொண்டு பறந்தபோது கீழே  என்ன பார்த்தார்? ஒரு பயங்கர ராக்ஷஸன் வஜ்ரநாமா ஒரு பெரிய யாகம் நடத்துகிறானே  எதற்காக ?  விசாரித்தபோது தெரிந்தது தேவர்களை அழிக்க அந்த யாகம் என்று.  உடனே கையில் இருந்த பூவை அந்த ஹோம குண்டத்தில் போட்டார்.  அது ஹைட்ரஜன் பாம்ப்  மாதிரி படார் என்று வெடிக்க வஜ்ரநாமா தூள் தூளானான் . அந்த இ

டம் தான் புஷ்கரம். வடக்கே ராஜஸ்தானில் அஜ்மீர் பக்கம் புஷ்கர்  என்ற பெயரில் இருக்கிறது.
பிறகு ப்ரம்மா யாகம் பண்ணி அதிலிருந்து சுப்ரபா என்று ஒரு நதி தோன்றியதாக பாரதத்தில் ஒரு செய்தி. அதை புஷ்கரகங்கை என்பார்கள்.  
 குரு பகவான் (நவகிரஹங்களில் ஒருவர்) தவம் பிரமனை வேண்டி தவம் செய்து  அவனிடமிருந்து புஷ்கரகங்கையை  பெறுகிறார். ''ப்ரம்மா உன்னை விட்டு நான் போகமாட்டேன் என்றது புஷ்கரகங்கை''  குருவுக்கு  ஏற்கனவே வாக்களித்தாகிவிட்டதால்  துலாராசியில் குரு பெயர்ந்து துலாராசிக்கு ஏற்ற காவிரியில் புஷ்கரகங்கை சேர்ந்து கொள்கிறாள். அதால் தான் பெரிய கூட்டம் இப்போது  
துலா காவேரி ஸ்னானம் புகழ் பெற்றது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ என்று ஒரு சொல்.  எத்தனை புண்ய நதி ஸ்னானம் செய்தலும் மாயவரம் துலா ஸ்னானத்துக்கு ஈடாகாது.  அதனால் தான்  லக்ஷக்கணக்கான ஹிந்துக்களை அழைக்கிறது. '
பொதுவாக  கங்கை ஸ்நானம் மூன்று இரவு தங்கி, யமுனையில் ஐந்து இரவு தங்கி ஸ்நானம் செயகிற பலனை ஒரு முறை மாயவரம் காவேரி துலா ஸ்னானம் அளிக்கிறது என்பது ஐதீகம்.  12 கிணறுகளில், 12 நதிகளுக்குரிய புனிதநீரும் காவிரியில் கலப்பதால் 12 ராசிக்காரர்களும் இதில் நீராடி பலனடையலாம்
இந்த மஹா புஷ்கர  ஸ்நானம் செப்ட் 12 முதல் 24 வரை கங்கை அங்கே இருக்கும் நேரத்தில் தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...