Saturday, September 30, 2017

விவேக சிந்தாமணி 3

விவேக சிந்தாமணி 3 J.K. SIVAN

பாண்டியன் கத்தியை தூக்கிக் கொண்டு சேதுவை நோக்கி ஓடினானே ? அவனைக் கொன்றானா? -- இந்த கேள்வியெல்லாம் கதைகளில் விறுவிறுப்புக்காக வரும். விடை தெரிந்தவுடன் அது அதோடு நின்றுவிடும். மறுபடியும் அதை படிக்க மாட்டோம். பாண்டியன் என்ன செய்தான் சேதுவுக்கு என்ன ஆயிற்று என்று தான் தெரிந்து போய்விட்டதே.

வேதாந்த சார விஷயங்கள் பாண்டியன் சமாச்சாரம் இல்லை. எத்தனை தரம் படித்தாலும் புதிதாக மனதில் பதியும். முன்பு தோன்றாதது இப்போது தோன்றும். விளங்காதது விளங்கும். இது தான் அசைபோடுவது. ஆத்ம விசாரம் இது தான். திரும்ப திரும்ப அதையே நினைப்பது. புரிந்து கொள்வது.

ஆதிசங்கரரின் விவேக சிந்தாமணி அடுத்த சில ஸ்லோகங்களை பார்ப்போம்.

आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगण्यते।
इहामुत्रफलभोगविरागस्तदनन्तरम्।
शमादिषट्कसम्पत्तिर्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥१९॥

முதலாவது எது நித்யம் அது அநித்தியம், எது நிஜம், எது நிழல் என்று பகுத்தறியும் சக்தி வேண்டும்.
அத்தியாவசியமானது புலனடக்கம். அப்போது தான் எது வேண்டத்தக்கது, எது வேண்டாதது என்று புரியும். எதை வேண்டாமென்று நிராகரிக்கிறோமோ அது தான் தியாகம். கீதை தியாகத்தை பற்றி சொல்கிறது என்பதை வேடிக்கையாக சொல்வது வழக்கம். அதாவது ''கீதா கீதா'' என்று ''மரா மரா'' மாதிரி திரும்ப திரும்ப சொல்லும்போது அது ''தாகீ தாகீ'' ஆகிவிடுகிறதே அதன் அர்த்தம் தியாகி என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். .

இரண்டாவது, செய்யும் கர்மத்தின் பலன் எங்கேயாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று அறிந்து அதை அகற்றுவது,

மூன்றாவது, என்று சொல்லும் ஆறு வகையான ஆசாரங்கள், தர்மங்கள் இருக்கவேண்டும். (சமம் : மனதை அடக்குவது, தமம் : ஐம்புலன்களை அடக்குவது, உபரதி: எல்லாம் ஒன்றே என்ற மனம், தர்சனம், திதிக்ஷா: பொறுமை, ஏற்றுக்கொள்வது. சமாதானம்: சத்தியத்தில் நாட்டம், ஸ்ரத்தா: செய்யும் கர்மத்தில் குருவிடத்தில் சாஸ்திர சம்பிரதாயத்தில் கவனம், நம்பிக்கை )

நான்காவதாக மோக்ஷம், முக்தி அடையவேண்டும் என்ற தீராத ஒரு விருப்பம். நிச்சயம் நம்மிடம் இதில் ஒன்றும் இருக்காது என்று தெரியும். எனினும் கொஞ்சம் கொஞ்சமாக இதில் ஈடுபடலாமே.
ब्रह्म सत्यं जगन्मिथ्येत्येवंरूपो विनिश्चयः।
सोऽयं नित्यानित्यवस्तुविवेकः समुदाहृतः ॥२o॥

சங்கரர் நம்மிடம் ரொம்ப எதிர்பார்க்கிறார். பிரம்மம் ஒன்றே சத்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சம் நம்மை சுற்றி இருக்கிறதே, உண்மையாக சாஸ்வதமாக நிரந்தரமாக் உள்ளது போல் காண்கிறதே, அது மாயை, வெறும் கண்கட்டி வித்தை. காசு கொடுக்காமல் பார்க்கும் மோடி மஸ்தான் வேடிக்கை என்று புரிந்து கொள்ளவேண்டும். இது உணர்ந்தாலே நித்ய அநித்திய வஸ்துக்களுக்கான வித்யாசம் புரியும்.

साधनान्यत्र चत्वारि कथितानि मनीषिभिः।
येषु सत्स्वेव सन्निष्ठा यदभावे न सिध्यति॥१८॥

The wise have spoken about four qualifications the presence of which in an aspirant will lead to realization and the absence of which will result in not achieving that goal.

ஆத்மா என்று நம்முள் ஒன்று இருக்கிறதே தெரியுமோ? அது தான் உண்மையிலேயே நாம். இதை அறியவே நான் யார் நான்யார் என்று தேடுகிறோம். சாக்ரடீஸ் காலத்திலிருந்து உன்னை அறிவாய் என்று திரிகிறோம். இது தெரியாமை, அறியாமை என்றார்கள் ரிஷிகள். இதை அறியாமல் உலகை அறியமுடியாது.. அதை உணர்ந்து கொள்ள நாலு தகுதிகள் உள்ளனவே. ஒருக்கால் அந்த தகுதிகள் காணோம் என்றால் ஆன்மாவை தேடாமல் டி.வி. பார்க்கலாம்.

ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அத்வைத ரத்னம். சிறு ரெண்டடி ஸ்லோகங்களில் பக்தியை, ஞானத்தை,ஆன்மாவை கர்மத்தை, தர்மத்தை, குரு பக்தியை , பரோபகாரத்தை,முக்தியை பற்றியெல்லாம் வெகு அழகாக தனித்வத்தோடு சொல்கிறார். அந்த ஸ்லோகங்களை ஸம்ஸ்க்ரிதத்திலும், ஆங்கில வடிவிலும், தமிழில் எனக்குத் தெரிந்த வரையிலும் விளக்கி தந்திருக்கிறேன்.

वेदान्तार्थविचारेण जायते ज्ञानमुत्तमम्।
तेनात्यन्तिकसंसारदुःखनाशो भवत्यनु॥४५॥

உலகோரே, வாட்டி எடுத்து வதைக்கும் துன்பங்களிலிருந்தும், மாயையின் சோதனைகள், வாதனைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற ஒரு வழி இருக்கிறதே, உபநிஷதங்கள் வேதங்கள் உரைக்கும் மந்திரங்கள் அவற்றின் பொருளுணர்ந்து ஓதுதலும் அவற்றின் மூலம் கிடைக்கும் ஞானமும் செய்யும் தியானமும் தான்அந்த உபாயம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...