Thursday, September 28, 2017

நவராத்திரியில் சிவராத்திரி -

நவராத்திரியில் சிவராத்திரி - J..K. SIVAN

நான் சிவன். எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் சிவராத்திரி. ரெண்டு மூணு மணி நேரத்திற்கு மேல் தூக்கம் இல்லை. கம்பியூட்டர் கை கொடுக்கிறது. walking ஸ்டிக் தேவை இல்லை. writing மவுஸ் உதவுகிறது.
ஏனோ திடீரென்று நவராத்திரியில் சிவராத்திரி பற்றி எழுத தோன்றிற்று.
சிவராத்திரி ஆண்களுக்கு. நவராத்திரி பெண்களுக்கு சிறப்பானது. ''ஆண்களுக்கு ஓரிரவு சிவராத்திரி, . பெண்களுக்கோ ஒன்பதுநாள் நவராத்திரி'' ஒரு சுகமான பாட்டு. சிவராத்திரி மஹா சிவராத்திரி என்று உலகம் பூரா ஹிந்துக்களால் கொண்டாடப் படுவது. நிறைய சிவன் கோவில்களுக்கு எவ்வளவோ பேரை அழைத்துக்கொண்டு இரவெல்லாம் சென்றிருக்கிறேன்.
ருத்ரம் சமகம் நிறைய சொல்வோ
ம். ஒவ்வொரு கோவிலிலும் அபிஷேகங்கள் வில்வ அர்ச்சனை கண்கொள்ளா காட்சி. இரவே பகலாகிவிடும்
பிரளயம் முடிந்தது. மீண்டும் பிரபஞ்சத்தில் ஜீவராசிகள் வளர்ந்தன. கைலாசத்தில் பார்வதி யோக த்யானத்தில் இருக்கும் சிவனை ஒருநாள் கேட்டாள் :
''ஸ்வாமி, உங்களுக்கு எந்த வழிபாடு மிகவும் மனம் கவர்ந்தது?
'' பங்குனி மாச கிருஷ்ண பக்ஷ அமாவாசைக்கு பதின்மூன்றாம் நாள் இரவு சிவராத்திரி என்று பக்தர்கள் கொண்டாடுவது நான் உவக்கும் திதி. என் பக்தன் என்னை மனதில் நினைத்து உபவாசம் இருக்கும் நாள். வேறு எந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் எனக்கு வேண்டாம். நான்கு வகையில் நான்கு வேளைகளில் ஆலயத்தில் ஒவ்வொரு காலத்திலும் (மூன்று மணி நேரம்) அபிஷேகித்து வில்வ அர்ச்சனை செய்வது போதும். எனக்கு எந்த ஆபரணமும் அலங்காரமும் வேண்டாம். அபிஷேகங்களை பால், தயிர், நெய்,தேன் என்று நாலு காலமும் செய்யும் அபிஷேகம் பரம திருப்தி அளிக்கிறது. மறுநாள் காலை நித்ய கர்மாநுஷ்டானம் முடித்த பின் பிராமண அதிதி போஜனம் (பாரணை) செய்த பின்னர் உபவாசத்தை முடித்தல். பார்வதி, இது ஒன்றும் பெரிய கோலாகல பண்டிகை இல்லை. மனதையும் உடம்பையும் சுத்தமாக கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ஒரு சிறு வழி'' என்கிறார் பரமசிவன்
''பார்வதி உனக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள். காசியில் ஒரு வேடன். அன்று முழுதும் அடர்ந்த காட்டில் வேட்டையாடி அவன் பிடித்த சிறு மிருகங்கள் பறவைகளை கொன்று சாயந்திரமாக வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போகிறான். அவனது தொழில், ஜீவனம் அது. இருட்டிவிட்டது. களைப்பு பசி. தூக்கம் வேறு கண்ணை சுற்றியது. ஒரு மரத்தின் அடியில் சற்று இளைப்பாறினான். அன்று தான் நான் சொன்ன சிவராத்திரி என்று அவனுக்கு எப்படி தெரியும்? இரவாகி விட்டதால், மரத்தடியில் இருப்பது ஆபத்து. இரவில் கொடிய வன விலங்குகள் பசியோடு வந்து அவனை விழுங்கிவிடும். ,மரத்தில் ஏறி ஒரு கிளையில் அமர்ந்தான். கொண்டுவந்த வலையில் இருந்த பறவைகள், சிறு மிருகங்களை ஒரு மரக்கிளையில் கட்டி வைத்தான். அது வில்வ மரம் என்றும் அவன் கவனிக்கவில்லை. தூக்கத்தில் சாய்ந்து மரக்கிளையிலிருந்து கீழே விழுந்து விடுவோம் என்று இரவு முழுதும் விழித்திருந்தான்.
மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததும் தெரியாது. தூக்கத்தை விரட்ட பொழுது போக்க, மரத்தின் கிளைகளில் இருந்த இலைகளை பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்டுக்கொண்டிருந்தான். அது என் மேல் விழுந்தது. பனி த்துளிகள் இலையோடு சேர்ந்து அவனால் என் மேல் குளிர்ச்சியாக அபிஷேகமாகியது.
பொழுது விடிந்தது. கீழே இறங்கி மூட்டையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
அவன் காலம் முடிந்ததும் அவனுக்கு தெரியாது. போகும் வழியில் பசியோடு இருந்து இரவு முழுதும் விழித்தவன் மயங்கி விழுந்து இறந்தான். எம தூதர்களை அந்த ஜீவனை எடுத்துக்கொண்டு போகும்போது என் பூத கணங்கள் அவனை எமதூதர்களிடம் இருந்து மீட்டு கைலாசம் கொண்டுவந்தார்கள். எமதூதர்களும் சிவகணங்களுக்கும் வாதம். சிறிய கைகலப்பு. எமதூதர்கள் தோற்றனர். எமனுக்கு செய்தி போயிற்று. என்ன காரணத்துக்காக எமதூதர்களிடமிருந்த அந்த வேடனின் ஜீவனை சிவகணங்கள் கைப்பற்றின என்று கேட்க யமதர்மன் வந்தபோது நந்திகேஸ்வரன் அவனை நிறுத்தி சிவராத்திரி மஹிமை பற்றி கூறி அந்த வேடன் என்னை திருப்திப்படுத்தியதை கூறினான். யமதர்மன் ஆச்சர்யமடைந்து வேடனின் ஜீவனை கைலாசத்தில் விட்டு திரும்பினான்.
விஷயம் மெதுவாக பார்வதி மூலம் எங்கும் பரவி பூலோகத்தில் சிவராத்திரி மஹிமை அறியப்பட்டு வைபோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...