Thursday, September 14, 2017

ஹரி தர்சனம்


 சூர் சாகரம் 
                                     
      ஹரி தர்சனம்

பாலும் கசந்ததடி, தூக்கம் மறைந்ததடி, கண்ணீர் பார்வை மறைத்ததடி,  நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ வருத்தங்கள். யாருக்கு? ஒருவராக இருந்தால் அடையாளம் பெயர் சொல்லலாம். ஊரே இப்படி. அனைத்து கோபியர் நிலையும்  இதே என்றபோது எப்படி சொல்வது?


 ஏன் என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்கிறேன்.  

அந்த ஊரின் ஜோதி வெளியேறிவிட்டது. மகிழ்ச்சி குடி பெயர்ந்தது. ஆனந்தம் அடுத்து ஊருக்கு போகிறது.

கோகுலத்தை விட்டு கண்ணன் சென்றுவிட்டானே. கண்களே, இன்னுமொரு முறை அவனை கண்டு ஆனந்தியுங்கள். அவன் இதோ மறைந்து விடுவான்.
அவன் தாமரைக் கண்களை கண்டு மகிழ்ந்த எங்கள் கண்களோ இனி பனித்து , துயரத்தை தான் ஒவ்வொருநாளும் வெளிப்படுத்தும். 

எங்கே அவன்? அழகிய கரு நீல நெற்றியில் சிவந்த சிந்தூரத்திலகன்.  கண் முன்னாலேயே நிற்கிறதே அவன் கருநீல கழுத்தில் ஜொலிக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.அவன் பேசும்போதெல்லாம் அசையுமே! இத்தனை நாள் எங்களை மகிழ்வித்த அந்த தெய்வத் திரு உருவத்தை  இனி பிருந்தாவனத்தில் எங்கே பார்க்கமுடியும்?

எங்கள்  அனைவரையும்  அன்பினாலே பிணைத்து இன்பமூட்டிய அவன் எங்கள் கயிற்றில் சுறுக்கை மாட்டி விட்டதை போல் அல்லவா இருக்கிறது இப்போது?

உள்ளே  இத்தனை உணர்ச்சிகளை கழுத்து வரைக்கும் கொண்டுள்ள  கோபியர் வெளியே துன்பத்தை துயரத்தை காட்டிக்கொள்ளாமல் அன்றாட வேலைகளை செய்து கொண்டு  பேசாமல் இருக்கிறார்களே,  அடடா இது என்ன நிலைமை என்கிறார் சூர்தாஸ். அவர்கள் சிரித்து சாதாரணமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் உள்ளே ஒரு தாங்கமுடியாத எரிமலையை அல்லவோ சுமக்கிறார்கள்!

கிருஷ்ணா,  நீ இன்றி  காசியே அமைதி இழந்து விட்டதே,  பிருந்தாவனத்தில் எங்கள் நிலையை சொல்லவா வேண்டும் கிருஷ்ணா என்று  கோபியர்கள் கூறுவதை கேட்டுவிட்டு  சொல்கிறார்  சூர் தாஸ் .

Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ......
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki........

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...