Friday, October 23, 2009

karnataka tour in 4 days







கொட்டும் மழையில் கர்நாடக புனித பயணம்




எங்காவது எப்போதாவது இருபது பேர் சேர்ந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம் அல்லவா? அதிலும் பெண்கள் பெரும்பான்மையானால் சொல்லவும் வேண்டுமா? இதுதான் உண்மையிலேயே முப்பதாம் தேதி செப்டம்பர் நடந்தது. சென்னை மங்களூர் ரயிலில் பிரயாணம் செய்த இருபது பெரும் அக்டோபர் முதல் தேதி மங்களூர் சென்றபோது தான் தெரிந்தது. எங்களுடன் மற்றொருவரும் தொடர்ந்து நான்குநாட்களும் இடைவிடாமல் தொடரப்போகிறார் என்று. அவர் வேறு யாரும் இல்லை. ஸ்ரீமான் வருணன் தான். மங்களூரில் அவருடன் தான் மங்கலாதேவி கோவிலுக்கும் கோகர்நேஸ்வரர் கோவிலுக்கும் சென்றோம்.

கர்நாடக தேச கோவில்களில் மிகவும் சிரத்தையுடன் பக்தியுடன் வழிபடுகிறார்கள். காசு அங்கு பிரதானமாக இருக்கவில்லை. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் முன்பு வழியில் மலைப்பாதையில் காடில் என்கிற ஒரு ஊரில் ஜலதுர்கதேவி கோவில் இருக்கிறது. இருபுறமும் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கிடையில் ஜலதுர்க தேவி ஒரு தீவு போல் காட்சியளிக்கிறது. கொட்டும் மழையில் பராசக்தியின் அருள் பார்வையுடன் சூடாக ரசம் சாம்பார் சாதமும் சுட சுட பாயசமும் கொடுத்தால் யாரவது வேண்டாமென்பர்களா? உடிப்பியில் ஸ்ரீ கிருஷ்ணனை சாளரம் வழியாகதான் அந்தக்காலத்தில் ஸ்ரீ மத்வச்சர்யரும், ஸ்ரீ கனகதாசரும் கண்டதுபோல் நாமும் கண்டு மகிழ்ந்தோம். அழகிற்கு மறுபெயர் கிருஷ்ணன் என்பது மறுக்க முடியாத உண்மை. கர்நாடகாவில் எங்குசென்றாலும் கோலி பஜ்ஜி என்று யாராவது கொடுத்தால் அதை மறுப்பவன் அதிர்ஷ்டமில்லாதவன். மங்களூர் போண்டாவுக்கு தான் அந்த ஸ்பெஷல் பெயர் அங்கு. எந்த காபிகடையில் நுழைந்து சூடாக காபி சாப்பிட்டாலும் அது அமிர்தம். ஐந்து ரூபாவிற்கு அருமையான காபி. சாப்பாடும் அந்தவூர் மக்கள் மாதிரி இனிமையானது. ரசமோ, சாம்பாரோ எது சாப்பிட்டாலும் இனிக்கிறது. அரபிக்கடல் ஓரத்தில் முருதேஸ்வர் என்கிற ஒரு அழகிய ச்வர்கபூமி உள்ளது. அதை பாதுகாப்பதுபோல பிரம்மாண்டமாக யோகநிஷ்டையில் சிவன் வானுக்கும் பூமிக்குமாக அமர்ந்திருக்கிறார். நான் உன்னைவிட பெரியவன் என்கிற பாவனையில் கோவிலின் கோபுரம் நம் கழுத்தை ஒடிக்க பார்க்கவைக்கிறது. காந்தி பிறந்த இரண்டாம்தேதி அக்டோபர் அன்று கொல்லூர் மூகாம்பிகையை காண புறப்பட்டோம். கொல்லூருக்கு செல்லுமுன் தயவு செய்து எலும்பு எதனை என்று மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். எதனை என்னினிர்களோ அதைபோல் குறைந்தது இருமடங்காக இயற்கையன்னை மலைப்பாதையில் பரிசளிக்கிறாள். அன்னையைக்கான ஆடிக்கொண்டே சென்றோம். சிருங்கேரியில் மலைகளின் இடையில் துங்கபத்ரை ஆற்றின் கரையில் அமைதி தவழும் ஸ்தலம் தேடி சாரதா தேவி பக்தர்களை வரவேற்கிறாள். என்ன அழகு முகம்! கண்களில் தான் எத்தனை கருணை வெள்ளம். வீணையுடன் காட்சிதந்து உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நேர்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். நுங்கும் நுரையுமாய் ஓடும் துங்கபத்ரை மேல் ஒரு பாலம். கடந்து சென்றால் குருநிவாசத்தில் ஒரு ஆச்சரியம். இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீட ஜகத்குரு பரதிதீர்த்தர் வந்து தரிசனம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு மண்டபத்தில் அமர்ந்தோம். தெய்வம் மெதுவாக நடந்து வந்தது. அனைவர்க்கும் ஆசி வழங்கியது. தவத்தின் வலிமை முகத்தில் கண்களில் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது. அனைத்தும் அறிந்த மகான் அமைதி தவழும் புன்னகையுடன் ஒவ்வொருவரையும் கண்டு ஆசியளித்தார். உள்ளும் வெளியும் அமைதி அடையவைக்கும் இன்ப சூழ்நிலை. ஆற்றைகடந்து விடுதி அடைந்தோம். அந்த இரவு மனநிம்மதியை அள்ளி தந்தது. காந்திஜிக்கு நன்றி. மகேஸ்வரியில் (இதுதான் எங்கள் மினிபஸ் பெயர்) அமர்ந்து மழை தொடர மூன்றாம் தேதி காலை தர்மச்தலாவைதேடி சென்றோம். இல்லை இல்லை ஆடி சென்றோம். கர்நாடக அரசே பயணிகள் மேல் கொஞ்சம், கருணை வையுங்களேன். வாகனங்கள் படும் அவதியும் அதனுள் மக்கள் அல்லாடுவதையும் கூடிய சிக்கிரம் நிவர்த்தி செய்ய மூகாம்பிகையும் சாரதாதேவி யும் உங்களுக்கு அருள் புரியட்டும். இரவுக்குள் எப்படியாவது மேல்கொட் சென்று தங்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. மக்கள் தீர்ப்பு மகேஸ்வரன் தீர்ப்பு என்பார்கள். ஆனால் மகேஸ்வரி தீர்ப்பு வேறு விதமாக இருந்ததே! நன்றாக ஓடிக்கொண்டிருந்த மகேஸ்வரி க்லச் வயர் அறுந்து இரவு ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் நின்றுவிட்டது. நல்லவேளை அந்த தெருவில் விளக்கு வெளிச்சம் இருந்தது. நைட் வாச்மன் தன்னுடைய டார்ச் விளக்கையும் கொடுத்து பெண்கள் அனைவருக்கும் இயற்கை உபாதையிலிருந்து மீட்டார். அவர் வாழ்க! வேறு வழியின்றி ஒரு டாட்டா சபாரி வண்டியில் இருபதுபெரையும் அமுக்கி அடைத்து புளிமூட்டையாய் ஹிட்லர் யூதர்களை நடத்தியதுபோல் அடைத்து மேல்கொட் சென்றோம். இரவுமுடிந்து மணி இரண்டாகிவிட்டது. எங்களில் ஒரு வீராங்கனை எங்கோ சுற்றி ஒருவரை அணுகி ஒரு சத்திரத்தில் இடம் பிடித்தார். கடுங்குளிரில் மஞ்சுளா செய்த உதவி ராணி மங்கம்மா பல சத்ரங்களை கட்டியதைவிட மேல் என்று சொல்கிறார்கள் மற்ற அனைவரும். அக்டோபர் நான்காம் தேதி காலையில் குளித்து சூடான காபி பருகி மேல்கொட் திருநாராயண புர செல்வபிள்ளையை வணங்கி வெளியே வந்தபோது மகேஸ்வரி ரிப்பேர் ஆகி வந்து நின்றது. வாயு மனோவேகம் ஆக கிளம்ப நல்லவேளையாக வழியில் இடர்ப்பாடுகள் இல்லாததற்கு ஸ்ரீ ராமானுஜர் தான் காரணம். எனென்றால் தொண்டனூர் என்ற பெயரிருந்தலும் மக்கள் மத்தியில் இன்று தொண்ணுறு என்று அழைக்கப்படும் ஊருக்கு நாங்கள் சென்றபோது மணி பன்னிரண்டு நடுபகல். ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில், ஸ்ரீ நரசிம்மன் கோயில், தாமுகந்த மேனியுடன் காட்சி தரும் ஸ்ரீ ராமானுஜர் திருவுருவம், ஆதிசேஷனாக ஆயிரம் நாவுடன் சமணர்களுடன் வாதிட்ட அவர் கோபாக்னியுடன் அரவம்போன்ற முகம்படைதவராக காட்சியளித்தது கண்முன்னே என்றும் நிற்கிறது. வரும் வழியில் நாகமங்களா என்ற சிற்றூரில் பாஞ்சஜன்யத்தில் நாகம் சுற்றிக்கொண்டு சங்கம் சக்ரம் இடம் மாறி ஏந்தி பெருமாள் காட்சியளிக்கிறார். பாண்டவபுரா என்ற இடத்தில உணவருந்தி (எல்லாம் இனிப்புதான்!) மைசூர் வந்தடைந்தோம். நிமிஷாம்பாள் தேவி கோவில் சிறிதாக இருந்தாலும் கிர்த்தியில் பெரியது. அழகிய அம்பாள் ஆனந்தமாக சில நிமிஷத்தில் காட்சி தந்தாள். கடைசியாக ஸ்ரீரங்க பட்டினம் ரங்கநாதரை சேவித்து விடைபெற்றோம். வெற்றிகரமான இந்த புனித பயணம் சென்னையில் அக்டோபர் ஐந்தாம் தேதி வந்து சேர்ந்ததும் நீங்கா நினைவாக மனதில் இடம்பிடித்தது;

இத்துடன் இணைக்கப்படிருக்கும் போட்டோ ஆல்பம் உங்களையும் எங்களோடு சேர்த்து மேற்கண்ட எல்லா ஸ்தலங்களுக்கும் கொண்டு செல்லும்.http://www.blogger.com/blogger.g?  blogID=1154919537190898461#editor/target=post;postID=6848157350233161431
if you have any difficulty in viewing the photos  pl contact  jksivan@gmail.com

MAHA SIVARATHRI

MAHA SHIVARATHRI

Following is the brief history of Maha Shivarathri

On the day of Mahashivratri, celebrations take place in all the Shiva temples across India. Devotees bathe at sunrise in any holy water source (like the Ganga or Shiv Sagar tank at Khajuraho). They offer prayers to the Sun, Vishnu and Shiva. The Shivlingam is bathed with the five sacred offerings of a cow, called the panchagavya - milk, sour milk, urine, butter and dung. Thereafter the five foods of immortality - milk, clarified butter, curd, honey and sugar - are placed before the Shivlingam. Dhatura and Jati, though poisonous fruits, are believed to be sacred to Shiva and thus offered at his temple. People also decorate the linga with flowers and garlands and offer incense sticks and fruit. Devotees celebrate the day by observing a fast during the day and offer prayers throughout the night. All through the day, devotees abstain from eating food and break their fast only the next morning, after the nightlong worship. The day is considered especially auspicious for women. Married women pray for the well being of their husbands and sons, while unmarried women pray for a husband like Shiva, who is considered the ideal husband. Hymns in praise of Lord Shiva are sung with great fervor and devotion. People repeat the Panchakshara Mantra, Om Namah Shivaya. It is believed that one who utters the name of Shiva during Shivratri with proper devotion is freed from all sins. He reaches the abode of Shiva and lives happily there. He is liberated from the cycle of birth and death. According to the Shiva Purana, the Mahashivratri worship must incorporate six items: the ceremonial offer of cooling bael leaves to the hot-blooded deity, representing purification of the soul; the vermilion paste applied on the linga after bathing it, representing virtue; food offering which is conducive to longevity and gratification of desires; incense, yielding wealth; the lighting of the lamp which is conducive to the attainment of knowledge; and betel leaves marking satisfaction with worldly pleasures. These six items, till today, form an indispensable part of Mahashivratri, be it a simple ceremony at home or grand temple worship. By offering water, hugging the linga, lighting the diya and incense, and ringing the temple bells, devotees call into focus all their senses, making them acutely aware of themselves and the universe to which they belong.Mahaashivratri and Parvati:There is another possible reason for the origin of the all-night worship. Maha Shivratri being a moonless night, people worship the God who wears the crescent moon as an adornment in his hair, God Shiva. This was probably to ensure that the moon rose the next night. According to one myth, Parvati performed tapas, prayed, and meditated on this day to ward off any evil that may befall Her husband on the moonless night. Another popular belief is that Mahashivratri is actually the celebration to mark the holy union of Lord Shiva and Parvati on this day.Lord Shiva and Brahma:According to another legend in the Shiva Purana, once Brahma and Vishnu were fighting over who was the superior of the two. Horrified at the intensity of the battle, the other gods asked Shiva to intervene. To make them realize the futility of their fight, Shiva assumed the form of a huge column of fire in between Brahma and Vishnu. Awestruck by its magnitude, they decided to find one end each to establish supremacy over the other. Brahma assumed the form of a swan and went upwards and Vishnu as Varaha went into the earth. Nevertheless, light has no limit and though they searched for thousands of miles, neither could find the end. On his journey upwards, Brahma came across a ketaki flower wafting down slowly. When asked where she had come from, Ketaki replied that she had been placed at the top of the fiery column as an offering. Unable to find the uppermost limit, Brahma decided to end his search and take the flower as a witness. At this, the angry Shiva revealed HIS true form. He punished Brahma for telling a lie, and cursed him that no one would ever pray to him. The ketaki flower too was banned from being used as an offering for any worship, as she had testified falsely. Since it was on the 14th day in the dark half of the month of Phalguna that Shiva first manifested himself in the form of a linga, the day is especially auspicious and is celebrated as Mahashivratri. Mahakaleshwar Shiv's Lingum:In Ujjain in the famous temple of Mahakaleshwar Shiv's Lingum is worshipped with the performance of all the religious rites and rituals. The story goes that a powerful demon who lived on Ratnamal mountain attacked Avanti - the name of the present-day Ujjain in those days - and killed a Brahmin sage by putting him in fire. The angry Lord Shiv opened his third eye and burnt the demon to ashes. On that very spot of land where Lord Shiva opened his third eye and killed the demon appeared the Shiv-Lingum. A majestic temple was built on that ground. The mention of this temple is found in `Adi-Brahma Puran' and its detailed description in the `Gyan-Samhita'. The illustrious king Vikramaditya during the time he was the ruler of Ujjaini, visited the MahaKaleshwar temple every morning, after his bath. He bowed before the Shiv-Lingum in all humility and prayed to Lord Shiv to mercifully grant prosperity and happiness to his subjects and peace to the land over which he ruled. He placed one hundred and eleven Bel leaves one by one on the Shiv lingum and while placing each leaf he praised Lord Shanker by reciting the shlokas.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...