Monday, February 28, 2022

PURUSHA MRUGAM

 


புருஷா  மிருக  சிவ பக்தி  -  நங்கநல்லூர்  J K  SIVAN
 
இன்று  மஹா சிவராத்ரி. மாசி மாசம்  கிருஷ்ண பக்ஷ  சதுர்த்தசி.   பக்தர்கள் பங்கேற்கும் ஒரு அற்புத விரதம்  கன்யா குமரி பக்கம்  சிவாலய ஓட்டம் விசேஷம்.  தமிழ் நாட்டில் பல பகுதிகளில்   இது பிரசித்தம்.   நாங்கள் பல  சிவாலயங்கள்  15-20 பேர்   ஒரு வண்டி வைத்துக்கொண்டு   ராத்ரி பூரா  சிவாலய தரிசனம் செய்திருக்கிறோம்.  இதெல்லாம் மூன்று வருஷம் முன்பு. அப்புறம் கொரோனா இதை நிறுத்திவிட்டதே.   இன்று  புருஷாமிருகம் பற்றி  சொல்கிறேன் தெரியாதவர்களுக்காக.

''கோகிலா, புருஷா மிருகம் பற்றி தெரியுமா உனக்கு?''

'' என்ன  மாமா  சொல்றேள்?  புருஷா மிருகமா?  என்ன  ஜாடையாக  என் புருஷனை பற்றி  சொல்றேளா?  ஆமாம்  அதை ஏன்  கேக்கறேள் ... அவர்  எல்லாம்  ஒரு  புருஷனா.... மிருகம் தான்,   காண்டா மிருகம்.. புருஷன் என்கிற மிருகம்..

''ஐயையோ   இல்லேம்மா, உன் புருஷன் பற்றி நான் பேசலே..  இது ஒரு சிவபக்தன் பற்றி...வேறே  புருஷா மிருகம்''

''இல்லே சிவன் மாமா, எனக்கு புருஷாமிருகம் னு ஒண்ணு  இருக்கிறதான்னே  சுத்தமா  தெரியாது.''

கோகிலாவுக்கு சொல்றதை உரக்க   உங்களுக்கும்  சொல்றேன் இதை. கேளுங்கோ, சாரி,  படியுங்கோ. 
என் சிறிய வயதில்  கோடம்பாக்கம்  வடபழனி ஆண்டவர் கோவில் அருகேயும் பின்னர்  ஆற்காடு ரோடு  வெங்கீஸ்வரர் கோவில் அருகேயும்  வசித்ததால்   இந்த  கோவில்களுக்கும்  மற்றுமுள்ள சில  கோவில்களுக்கும், வாகன மண்டபங்களுக்கும்   சென்று விளையாடுவது  எங்கள் பொழுதுபோக்கு.

மூஷிகவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை,கருட வாகனங்கள் தெரியும்.  ஒரு வாகனம்   இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்ட ஒரு  புது வாகனமாக  வேடிக்கை யாக இருந்தது. அப்பாவை கேட்டதற்கு  'அது தாண்டா  புருஷா  மிருகம்''   என்றார். அதற்கு மேல் என்னோடு பேச அவருக்கு நேரம் இல்லை.  என்னால்  புருஷா மிருகத்தை  சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஈடுபாடும் இல்லாமல் போய்விட்டது.  அது  என்போல இன்னும்  பலருக்கும் இன்னும் கூட  தெரியாமல் இருக்கலாம்? நிறைய  சிவன் கோவில் உற்சவங்களில்  மனித தலையுடன் ஒரு மிருகஉடல்    மண்டி போட்டு உட்கார்ந்து  உத்ஸவ  விக்ரஹத்தை தூக்கி வருவதை  நிறைய பேர்  பார்த்திருப்பீர்கள்.  அப்படித்தானே?  அது தான் புருஷா மிருகம்.

மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. என்னுடைய    ''ஐந்தாம் வேதம் '' புத்தகத்தில் கூட அதை   எழுதி இருக்கிறேன்.    

யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்கிறான்.  அது வெற்றிகரமாக நிறைவேற  புருஷாமிருகத்தை அந்த யாகத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று  ரிஷிகள் சொல்லி விட்டார்கள். கண்ணனும் குறும்பாக சிரித்தான்.

''டேய்  பீமா  நீ தான்  சரியானவன். போய்  அதை  அழைத்துக் கொண்டு வா' என்று கிருஷ்ணன் யோசனைப்படி  யுதிஷ்டிரன் அனுப்ப,  பீமன் எங்கெங்கோ   காட்டில் அதை தேடுகிறான்.  ஒரு நடுக்காட்டில் அதை பிடித்து  ''என்னுடன் வா'' என்று வேண்டிக்  கேட்கிறான்.  

''ஓஹோ,    உன்  தமையன்  யுதிஷ்டிரன்  ராஜசூய யாகமா , நான் வருகிறேன்  ஆனால் ஒரு கண்டி ஷன்.  நானும்  நீயும்  இங்கிருந்து   ஓடுவோம்.  என்னை விட நீ முதலில் ஹஸ்தினாபுரம் போய்  சேர்ந்தால் நான் உன் அடிமை.   நீ முதலில் ஓடு.   நாலு காத  தூரம் நீ ஓடிய  பிறகு  நான் உன்னை துரத்துகிறேன். ஹஸ்தினாபுரம் போய்  சேர்வதற்குள் என்னிடம் நீ பிடிபட்டால்   நீ  என்  அடிமை. உன்னை தின்று  விடுவேன்.  நான்  தோற்றால்  நீ சொல்வதெல்லாம் செய்கிறேன். சம்மதமா?'' . நிபந்தனை  ஒப்புக்கொள்ளப்பட்டது.

''ஓடு''  என்றது  புருஷாமிருகம்.  பீமன் தலைதெறிக்க  ஹஸ்தினாபுரம் நோக்கி  ஓடினான்.  புருஷாமிருகம் வேகமாக அவனை துரத்தியது.   அவனை விட  அதன் வேகம்  அதிகம் என்று புரிந்து  கொண்டான்.  எப்படியோ  ஒரு  காலை   ஹஸ்தினாபுரம் எல்லைக்குள்  வைத்துவிட்ட சமயம்  புருஷாமிருகம் அவனது இன்னொரு காலைப் பிடித்து விட்டது.

''நான் உன்னை ஜெயித்து விட்டேன். இனி பீமா  நீ என் அடிமை ''என்றது.  நான் நீ பிடிப்பதற்கு முன் ஹஸ்தினாபுரம் எல்லையை  நான்  தொட்டு  விட்டதால் நீ தோற்றாய் , நான் தான் ஜெயித்தவன்.  நீ தான்  என் அடிமை''   என்றான் பீமன்.   ரெண்டு  பேரும்  நீதி தவறாத  யுதிஷ்டிரனிடம் தத்தம்  வழக்கை   எடுத்துச் சொன்னார்கள்.

யுதிஷ்டிரன் அளித்த தீர்ப்பு வினோதமாக இருந்தது. ''இருவர்  சொல்வதிலும் நியாயமுண்டு.  ஆகவே  பீமனை ரெண்டாக வெட்டுவோம்.  நீ ஜெயித்ததாக சொல்கிற   நீ பிடித்த  அவனது  கால் பகுதி  சேர்ந்த  பாதி உடல் உனக்கு.  மீதி உடல் பாகம்  அவன்  ஜெயித்ததாக சொல்வதால் என்னிடம் இருக்கும்.

''யுதிஷ்டிரா,இது என்ன விபரீத தீர்ப்பு.  அவனை ரெண்டாக வெட்டி கொல்வதை  விட என்னிடமே அடிமையாக விட்டு விடலாமே?

''நீ சொல்வதில் நியாயமில்லையே புருஷாமிருகமே , அவன் உடலில் பாதி  உன் அடிமையில் லையே? எப்படி  நீ உரிமை கொண்டாட முடியும்?

''உன் சகோதரன் என்று கூட பாராமல் நீ  நேர்மையாக  தீர்ப்பளித்ததால் என் பாதியை விட்டுத் தருகிறேன். நீயே  அவனை முழுதாக வைத்துக் கொள் ''என்றது புருஷாமிருகம்.  புருஷாமிருகம் வந்ததால் யாகம் வெற்றிகரமாக முடிந்து தக்க பரிசுகளுடன் யுதிஷ்டிரனை வாழ்த்திவிட்டு  காட்டுக்கு திரும்பியது.    

இந்த கதை  வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.   ரிஷி வியாக்கிரபாதர் ஒரு முனிவர். சிவபக்தர். வண்டுகள் தொடாத மலர்களை பறித்து சிவனுக்கு  அர்ச்சனை செய்ய  காடும்  மலைகளும், மரங்களும், செடியும் ஏறி பறித்தார்.  கல்லும் முள்ளும், இடையூறாக இருந்ததால் ''பரமேஸ்வரா எனக்கு புலியின் கால்களைக் கொடேன்''  என்று  கேட்டுப் பெற்றுக்கொண்டவர்.  அவர்  புருஷாமிருகம் இல்லை.

புருஷா  மிருகம்  ஒரு சிறந்த சிவபக்தன்.  வேகமாக ஓடக்கூடியது.  அதன் பலஹீனம்  weakness  என்ன  என்று பீமன் தெரிந்து வைத்திருந்தான்.  வழியில் எங்காவது  சிவலிங்கத்தை பார்த்து  விட்டால்  புருஷாமிருகம் நின்றுவிடும். சிவபூஜை செய்த்துவிட்டு தான் பயணம் தொடரும்.

யுதிஷ்டிரனின் ராஜசூயயாகத்தில் யாகசாலை தூய்மை பெற புருஷாமிருகம் தேவைப்பட்டது.  நாம் கிரஹப்ரவேசம்   சுப கார்யங்கள் செய்யும்போது பசுமாட்டை கொண்டுவருவதில்லையா. அதுபோல்.   நாம்  படங்களில் பார்ப்பது போல்  பீமன்  தொந்தியும் தொப்பையுமானவன் அல்ல.  வ்ருகோதரன்.  ஓநாய் போல்  சின்ன இடை வயிறு உடைய  சக்திமிக்கவன். வேகமாக ஓடும்   வாயு புத்ரன்.  ஹனுமான் சகோதரன். வாயு எவ்வளவு வேகம் என்பதை  புயல்கள் நமக்கு அறிவுறுத்துகிறது அல்லவா?  ஆனால்  புருஷாமிருகம்  அவனை விட இன்னும் வேகமாக ஓடும்.   பீமனை  புருஷ மிருகம்  நெருங்கும் போதெல்லாம்  பீமன்  அதன் பார்வையில் படும்படியாக  ஒரு  சிவலிங்கத்தை  கீழே  வைத்து விட்டு வேகமாக ஓடுவான். 12 சிவலிங்கங்கள் இதற்காக கையில்  ஸ்டாக்  வைத்திருந்தான்.    
ஆங்காங்கே  பீமன் போட்ட  சிவலிங்கத்தைப் பார்த்ததும்,   அவனைத் துரத்தி வேகமாக ஓடிவந்த  புருஷா முருகன், நின்று விடும்.  தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, அப்புறம்  வேகமாக  அவனைத் துரத்தும்.

இப்படியே  ஹஸ்தினாபுரம் எல்லை வரை பல சிவலிங்கங்களை வழியில் வைத்துவிட்டு  ஓடினாலும்  ஒரு கால்  ஹஸ்தினாபுர எல்லையில் இருக்கும்போது இன்னொருகாலை பின்னால்  புருஷாமிருகம் பிடித்துவிட்டது.

இந்த  புருஷ  மிருகம்   மனித தலை, புலி உடல்  ....உள்ட்டா   நரசிங்கம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்...சிலைகள் பல கோவில்களில் இருக்கிறது.  யாளி பார்த்திருக்கிறீர்களா?  அது மாதிரி.

புருஷ மிருக சிற்பங்களை  ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். புருஷ மிருகத்தின்  உடல் சிங்கத்தை போலவும் தலை ஒரு தாடி வளர்த்த ரிஷி போலவும் உள்ளது. புருஷ மிருகத்தின் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் கோயிலில் உள்ள சக்கரம் போல் செதுக்கப்பட்டுள்ளது. ரிஷியின் முகம், தாடி, தலைமுடி மிருகத்தின் கால்களின் நகங்கள், வாலில் உள்ள கொத்தான முடி முதலியன சிறப்பாக ஒரே கல்லில் மிகச்சிறந்த சிற்பியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களுக்கு இணையாக உள்ளது. இந்த புருஷ மிருக சிலை என்றால் அது மிகையாகாது. எனக்கு தெரிந்து  சைதாப்பேட்டை  காரணீஸ்வரர் கோவிலில்  புருஷாமிருக வாகனம்  பார்த்த  மாதிரி ஒரு கவனம்.

சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்கள், ‘கோபாலா..... கோவிந்தா....’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் கன்யா குமாரி  புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்குச் செல்வர்.
பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவில் செல்வார்கள்.  பின்னர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.
அங்கிருந்து, மேலாங்கோடு சிவன்  கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப்போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீரு வழங்கப்படும். 12–வது சிவாலயமான திருநட்டாலத்தில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சுவாமி சிவன்- விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.




SIVALAYA OTTAM


 சிவராத்திரி நினைவுகள்  -   நங்கநல்லூர்   J K  SIVAN


தூக்கம் என்பது  ஒரு சில மணி நேரங்கள் என்பதால் எனக்கு தினமுமே சிவராத்திரியாக தான் இருக்கிறது.சும்மா  படுக்கையில் படுத்து , எதையெல்லாமோ நினைத்துக்கொண்டு  உருள்வதற்கு பதில்  கம்பியூட்டர்  எதிரே அமர்ந்தால் என்னை மறந்து, எனக்குத் தெரிந்த, நான் படித்து புரிந்துகொண்ட, கேட்ட, பாடிய  சில  ஆன்மீக  விஷயங்களை எழுத ஆர்வமாக இருக்கிறது.  இந்த ஆர்வம் எட்டு வருஷத்துக்கு மேலாக  தொடர்வதால் 105-110  புத்தகங்கள் எழுதி அச்சேர தயாராக உள்ளது. 35 புத்தகங்கள் இதுவரை அச்சேறி வெளியாகிவிட்டது.  தினமும் 20 மணி நேரம் குறைவில்லாமல்  படிப்பதிலும் எழுதுவதிலும் செலவாவது ஒரு  தனி  சுகம்  தான்.  கொரோனாவுக்கு  கோடி நமஸ்காரம். எங்கும் வெளியே நகராமல் செய்துவிட்டதால் அதிக நேரம்  என் காட்டில்  ஆன்மீக மழை.
இன்று சிவராத்திரி.  வருஷா வருஷம் முன்பெல்லாம் சிவராத்திரிக்கு    சில  நண்பர்களோடு ஒரு வண்டி வைத்துக்கொண்டு  மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 7 மணி வரை  பல சிவாலயங்கள் செல்வோம்.  வழியெல்லாம் பாட்டு, பஜன், நாம ஸ்மரணம், கோவில் பிரசாதங்கள் மட்டுமே  உணவு.

கோவில்களில்  நிறைய வில்வம் எடுத்துக்கொண்டு போய் கொடுப்போம்.  தேவார, திருவாசக, சிவபுராண கோரஸ்,  ருத்ரம் சமகம் சேர்ந்து சொல்வோம்.   இது நின்றுபோய் இது மூன்றாவது சிவராத்திரி.  தேங்க்ஸ் டு கொரோனா.   சிவனும் கிருஷ்ணனும் எனக்கு இரு கண்கள்.  ரமாபதியும் உமாபதியும்   ரமாபதி பற்றி எழுதாத நாளே கிடையாது.  

ஹரி ஹரன்  பற்றிய  சில  ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லட்டுமா, கேட்கிறீர்களா?
நமது பாரத தேசத்தில் எத்தனையோ  சிவன் கோவில்களில் விஷ்ணு இருக்கிறார்.   சென்னையில் கூட  சில இடங்களில் சிவ விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. ஹரிஹரனும்  இணை புரியாதவர்கள், இருவரும் ஒருவரே என்று கூட  சொல்கிறோம்.

இந்து மதத்தில் சைவம்  என்று  சிவனை உபாசிப்பவர்களும்  வைஷ்ணவர்கள்  என்று  விஷ்ணு அம்சமான   கிருஷ்ணன்,  பாண்டுரங்கன்,  விட்டலன் ,  ராமன், கிருஷ்ணன், நரசிம்ஹன்  என்று  பல  அவதார மூர்த்திகளையும்  மூலமான  நாராயணனையும் வழிபடும்  ரெண்டு வித  பக்தர்கள் கோஷ்டி இருக்கிறதே.   ரெண்டும்  ஒன்றே என்று  கொள்வோர்களும், இல்லை  வேறு வேறு  என்போர்களும்  இருந்து விட்டு போகட்டும்.  அவரவர் போக்கு அவரவர்  நம்பிக்கையைப் பொருத்தது.  இவர்கள்  இருவருமே  கிட்டத்தட்ட  ஒன்றே  அல்லது  ஒரே  மாதிரியே  என்று  புலப்பட்டால்  ஆச்சர்யமில்லை. கொஞ்சம்  அலசுவோமா?

விஷ்ணு   ஹரி                                                                                          
சிவன்   ஹரன்
விஷ்ணு துளசி மாலை  தரிப்பவர்                                                                    
சிவன் வில்வமாலை தரிப்பவர்
விஷ்ணுவுக்கு   சுதர்சன சக்ரம்  ஆயுதம்                                                                        
சிவனுக்கு  திரிசூலம்  ஆயுதம்
விஷ்ணுவுக்கு லக்ஷ்மி  மார்பில்                                                                                    
சிவனுக்கு  பார்வதி பாதி உடம்பில்
விஷ்ணு செய்தது   சப்தம் நிறைந்த  போர்க்களத்தில் கீதோபதேசம்                
சிவன் செய்தது   கல் ஆல  மரத்தடியில்  ரிஷிகளுக்கு  மௌன உபதேசம்
விஷ்ணு பக்தர்களுக்காக  நிறைய அவதாரங்களில்   லீலைகள்புரிந்தவர் .                                          
சிவன் தனது அடியாரை  சோதித்து நிகழ்த்தியவை  திரு விளையாடல்கள்
விஷ்ணு  பாற்கடலில்  பள்ளி கொள்பவர்                                                      
சிவனோ  பனிமலையில்  வாசம் செய்பவர்
விஷ்ணு இருக்குமிடம்  பாற்கடலில்  வைகுண்டம்                                                                
சிவன்  இருப்பது  பனிமலைகள் நிறைந்த கைலாசம்
விஷ்ணு  அர்ஜுனனுக்கு  சாரதி                                                                        
சிவன்  அர்ஜுனனுக்கு பாசுபதம்  கொடுத்தவர்
விஷ்ணு என்றாலே  வேணுகானம் செய்பவர்                                                                  
சிவன்  சாமகானத்தில் மயங்குபவர்
விஷ்ணு  பாற்கடலில்  அம்ருதத்தை  வழங்கியவர் :                                  
சிவனோ  பாற்கடலில்  வாசுகியால்  பாற்கடலில் வெளிவந்த ஹாலஹால விஷத்தை உண்டவர்.
விஷ்ணுவுக்கு  (கிருஷ்ணன்)பசுக்களுடன்  நேசம்                                                                            
ரிஷபமே  வாகனம்  சிவனுக்கு
விஷ்ணு  விஸ்வரூபமாக மூன்றாம்  காலடிக்கு மண்  எங்கே என்று கேட்டவர்.          
ப்ரம்மா விஷ்ணு தேடியும்  அடி முடி  காண முடியாத  ஸ்தாணு சிவன்
விஷ்ணு அலங்காரப் பிரியர்                                                                          
சிவன்  அபிஷேகப்ரியர்    
விஷ்ணு  பெயர்  கண்ணன்                                                                        
சிவன்  பெயர்  முக்கண்ணன்
கிருஷ்ணன் யமுனைநதி வாசப்ரியர்                                                                  
சிவன் கங்கையையே சூடியவர்
கிருஷ்ணன் சந்தனம்  பூசுபவர்                                                                            
சிவன்   சாம்பலைப் பூசுபவர்
விஷ்ணு கௌஸ்துப மாலை அணிபவர்                                                  
சிவனுக்கு  ருத்ராக்ஷமாலை
இன்னும்  எத்தனை  எத்தனையோ  இருக்கு  சொல்வதற்கு.  நேரமோ, இடமோ  தான்  போதாது.

 சிவராத்திரியின் போது   சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் கன்யா குமரியில் நடைபெறும்  ஒரு பிரபல  சம்பவம்   சிவாலய  ஓட்டம்.   இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.

  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண் டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட் டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக் கப்படும் கல்குளம் விளங்கியது.
கல்குளத்தை சுற்றி
1. திருமலை மகாதேவர் கோவில்
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
8. மேலாங்கோடு சிவன் கோவில்
9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
12. திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்
உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
                                                                                                                                    

MAHA SIVARATHRI

 மஹா சிவராத்ரி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவனுக்கு என்று ஒரு சிறப்பாக கொண்டாடப்படும் ராத்திரி இது. அன்று தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று சொல்வதுண்டு. இப்படித்தான் காஷ்மீரத்தில் கொண்டாடு கிறார்கள். சிவராத்ரிக்கு 3 நாள் முன்னாடி வைபவம் ஆரம்பித்து சிவராத்ரிக்கு பிறகும் 2 நாள் தொடரும். 
சிவன் அபிஷேகப் பிரியன். ருத்ரம் சமகம் ஆயிரக்கணக்கில் சொல்லி அபிஷேகம் நடக்கும்போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அந்த மந்திர சப்தத்துக்கு தனி ஒரு சக்தி உண்டு. நான் ஸ்ரீ மஹா ருத்ர குழுவில் சேர்ந்து பல கோவில்களில் சிவன் முன்னால்  அமர்ந்து சொல்லியிருக்கிறேன். அந்த ஆனந்த அனுபவத்தை எப்படி  சொல்வேன்?  அனுபவித்திருக்கிறேன். த்ரியம்பகம் என்ற மஹா மிருத்யுஞ்சய ஜபத்தை விடாமல் சொல்லிக்  கொண்டும் இருப்பதும் என்  வழக்கம்.

ஓம்  ந ம சி வா ய என்பது பஞ்சாக்ஷர மந்த்ரம். ஐந்தெழுத்து மந்திரம் என்று தமிழ் மறை சொல்லும். ஹர ஹர மஹா தேவா, சம்போ மஹா தேவா என்று சிவனை உச்சரித்து வணங்குவது வழக்கம். சிவராத்ரியை  வடக்கே   சிவனின் ஆனந்த தாண்டவத்தை சம்பந்தப் படுத்தியும் கொண்டாடு கிறார்கள்.
இந்த வருஷம் 1ம் தேதி மார்ச், நாளை,  சிவராத்திரி எப்போதும்  மாசி மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் வரும்.   இன்று  இரவெல்லாம் உபவாசம் இருந்து, கண் விழித்து, வில்வார்ச்சனை, நாம ஜபம், அபிஷேகம் நடக்கும்.

பெரியவாளின் வார்த்தையில் சில இத்தோடு  அளிக்கிறேன்: 

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராசுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.

அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக் குள் ஒரு திவ்விய மூர்த்தியிருக்கும். பார்த்திருப்பீர்கள். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. கவனித்திருக்க மாட்டீர்கள். இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.   
இந்த லிங்கோத்பவர் யார்?

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

என்ன அர்த்தம்? பாதாளம் முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும். ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் இல்லை. எந்த வஸ்துவை எதிரில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை பிரதி பலிக்கும். குண-தோஷம் இல்லாதது . ஞானம் எப்படிப் பரிசுத்தமாக  இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். நிர்விகாரமானது.  பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தம் ஸ்படிக லிங்கம். அது எதையும்  மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ் களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்மா வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது  தெரியும்.

மேலே சொன்ன  ஸ்லோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. "பூர்ணேந்து" என்று சுலோகத்தில் வருவது, 'பூரண இந்து!';    இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும்,கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட "ஸகள" ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா 'நிஷ்கள'   தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை   உச்சியில் வைத்திருக் கிறார். அதிலிருந்து அம்ருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வ ரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அம்ருதம் மிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோக மெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் ருத்ர அபிஷேகம் செய்வது. ருத்ர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம் தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவைகளுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை காட்டவே லிங்காகாரம்.

சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. "பிரபஞ்சமே 'எல்லிப்டிக்' காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள  வட்டமாகத்தான் இருக்கிறது" என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் "ஆவிஸ்புரத்" என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது நமக்கு ஆப்த பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; நேரில் அவருடைய உருவத்தையும் பார்த்தால் இன்னமும் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்ரஹம் பண்ணினால் தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால் தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அரு வுருவான லிங்கமான தோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்யரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தான்  அவர் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.   
அடி  முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரி யாகும்.

அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லி  தோண்டும்  ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பக்ஷிக்குப் பறப்பது ஸ்வபாவம். பக்ஷியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம்  திரும்பி வந்தது. 'நான் கண்டு விட்டேன்' எனப் பொய் சொல்லியது. அதனால் தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படிஇருக்கிறது.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால்,பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்;   சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத   பரமேஸ்வரனை  'என்  சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்கார மில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு 'ஆசுதோஷி' என்று ஒரு பெயர் இருக்கிறது. 'ஆஷுடோஷ் முகர்ஜி' என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தர்  வங்காளத்தில்  இருந்தது தெரியுமா?. ஆசுதோஷி  என்கிற வார்த்தை தான்' ஆஷுடோஷ்' என்றாயிற்று. 'ஆசுகவி' என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்ரஹம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம்  வேறில்லை.''

இனி  ஒரு சின்ன சிவராத்திரி மகிமை கதை சொல்லி முடிக்கிறேன்.   வாரணாசியில் ஒரு வேடன். தான் கொன்ற பறவைகளோடு காட்டிலிருந்து திரும்பினான். இரவு நேரம் நெருங்கவே களைத்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். கண் அயர்ந்தான். கண் விழித்த போது இரவு. இருட்டு. அன்று சிவராத்திரி என்பது அவனுக்கு எங்கே தெரியும்? மரத்தில் ஏறினான். கொன்ற பறவைகளை ஒரு மரக் கிளையில் கட்டினான். பொழுது விடிய காத்திருந்தான். அவன் ஏறியது ஒரு வில்வ மரம். கீழே ஒரு லிங்கம் இருந்தது  அவனுக்கு இருட்டில் தெரியாது.  தூக்கம் வரவில்லையே என்ன செய்வது? நேரம் போவதற்காக மரத்தில்  இருந்த  இலைகளைப் பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். எல்லாமே கீழே  லிங்கத்தின் மேல் விழுந்தது. பனி நீர் வேறு அதன் மேல் சொட்டியது.  அபிஷேகமும்  ஆயிற்று, வில்வார்ச்சனையும் ஆயிற்று!!   பொழுது விடிந்தது. வேடன் வீடு சென்றான். 

சில காலத்தில்  அந்த வேடன்  இறந்தான். அவன் உயிர் யமலோகம் கொண்டு போகப் பட்டது. அதை தடுத்து சிவ கணங்கள் அவன் உயிரை  சிவலோகம் கொண்டு செல்ல விரும்பின. எம தூதர்கள் தோற்றனர். எமனுக்கு விஷயம் போயிற்று. சிவலோகம் வந்தான் யமன். நந்தி அவனிடம் சிவராத்ரி மகிமை பற்றியும் அந்த வேடன் ஆற்றிய சிவ பக்தியும் சொல்ல அந்த வேடன் கைலாச பதவி அடைந்தான். அன்றிலிருந்து சிவ பக்தர்களை சிவன் உத்தரவு இன்றி யமன் தொடுவதில்லை.

இதையே கொஞ்சம் முன் பிறவி சமாச்சாரம் சேர்த்து இன்னொரு  ஸ்வாரஸ்ய கதையாகவும் சொல்வதுண்டு. ராஜா சித்ரபானு இக்ஷ்வாகு வம்சம். மஹா சிவராத்திரியில்  மனைவியோடு சர்வேஸ்வர பக்தியோடு உபவாசம் இருந்து  சிவ பூஜை பண்ணினான். அன்று ரிஷி அஷ்டாவக்ரர் அவன் அரண்மனைக்கு வந்தார்.
''நீ எதை உத்தேசித்து சிவராத்திரி விரதம் இருக்கிறாய்?''
''எனக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்தது. வாரணாசியில் நான்   ஸுஸ்வரன் என்ற ஒரு வேடனாக இருந்தேன் என்று மேலே சொன்ன கதையை சொன்னான். உபரி விஷயம் என்னவென்றால் ஒரு மானைக் கொல்ல அம்பு குறி பார்த்தான். அதன் குடும்பம் அருகில் நின்றது. அவை அந்த மானின் மரணத்தால் அடையப் போகும் சோகம் கண்ணில் தெரிந்தது. எனவே மானைக் கொல்லவில்லை. அவன் வைத்திருந்த தோல் பையில் துளை. அதன் வழியாக அதில் இருந்த நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பொழுது போகாமல் பசியோடு விடியும் வரை அந்த மரக் (வில்வ) கிளையில் அமர்ந்து இலைகளைக் கிள்ளி  கீழே போட்டு பொழுது போக்கினான். கீழே ஒரு சிவலிங்கம். அதன் மேல் எல்லா வில்வ இலைகளும், நீர்ச் சொட்டுகளும் இரவெல்லாம் விழுந்தது. மறுநாள் காலை பசியோடு வீட்டுக்கு போகும் போது வழியில் உணவு கிடைத்து அதை சாப்பிடும்  முன்பு  யாரோ ஒரு முதியவன் ''எனக்கு ரொம்ப பசியா இருக்கிறதே, எதாவது இருந்தால் கொடேன் என்று சொன்ன போது தன் உணவை அவனுக்கு கொடுத்தான்''
இதனால்  அந்த  வேடனுக்கு சிவராத்திரி விரதம், வில்வ அர்ச்சனை, அபிஷேக பலன், அதிதி போஜன பலன் அனைத்தும் கிடைத்து மறுஜென்மத்தில் சித்ரபானு ராஜாவானான் என்று வரும்.

சிவ புராணத்தில் ஆறு விஷயங்கள் முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவலிங்கத்துக்கு இடைவிடாது அபிஷேகம் , ஜலம் , பால், தேன், வில்வ தளம், விபுதி, பன்னீர், சந்தனம், தயிர்,இளநீர், இவற்றால் நைவேத்யம். பழங்கள், சாம்ப்ராணி, ஊது பத்திகள், தீபம், வெற்றிலை பாக்கு,  வஸ்த்ரம். மந்திர உச்சாடனம்  செய்வது  ஸம்ப்ரதாயம் ..


Sunday, February 27, 2022

PESUM DEIVAM

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN

115.   கயா விஜயம் 

1935ம் வருஷம்  சங்கர ஜெயந்தியை மஹா பெரியவா  வடக்கே  அத்வா  மஹா ராஜா  அரண்மனை யில்  கொண்டாடினார்.  அந்த பக்கம் எல்லாம் மஹா பெரியவா சந்திரமௌலீஸ்வரர் பூஜை செய்யும் அழகையோ, அவரது வழிபாட்டு முறைகளைப் பற்றியோ  ஆர்வமாக  கேட்டிருக்கிறார்களே  தவிர கண்ணால் பார்க்கும் பாக்யம்  இல்லை அல்லவா?  இப்போது கிடைத்தால்  விடுவார்களா?

பாடலிபுர   வேத சாஸ்திர பண்டிதர்கள்  ஒன்று கூடி பேசி  ஒரு  விழா  ஏற்பாடு செய்தார்கள். அதன் படி  மஹா பெரியவா தங்கியிருந்த   பாகீரதி  பில்டிங்  கட்டிடத்தில் இருந்த  சங்கரமடத்திலிருந்து கங்கைக்கரை வரை நீளமாக ஒரு  ஊர்வலம் நகர்ந்தது.  மடத்து யானை மீது ஆதி சங்கரர் பெரிய படம்  மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவருடைய  பாதுகைகளோடு  புறப்பட்டது.  மஹா பெரியவா யானை பின்னால்  நடந்து வந்தார். அவரைச் சுற்றி முன்னாலும்  பின்னாலும்  ஏராள மான பக்தர்கள் கூட்டம்.  வேத கோஷங்கள் வானை எட்டின.  அந்த ஊரில்  நாதஸ்வர கோஷ்டியும் இருந்தது தான் விசேஷம்.  வெளுத்து வாங்கிவிட்டார்கள்  வித்வான்கள். . சகல ராகங்களும் ஜம்மென்று வாசித்தார்கள்.  தவில் அபாரம்.  சங்கீதமும்  ஆன்மீகமும் ஒன்றை ஒன்று மிஞ்சுபவை,  இணை பிரியாதவை அல்லவா?  மஹா பெரியவா சங்கீதப்ரியர்.   


மஹா பெரியவா  கங்கையில் நீர் எடுத்து  சங்கரர் பாதுகைகளுக்கு  அபிஷேகம் செய்த காட்சி மறக்க  முடியாதது. பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.   ஊர்வலம்  மடத்துக்கு திரும்பிவந்த பின்  மஹா பெரியவா  ஆதிசங்கரர்  படத்துக்கும்   பாதுகைக்கும்  பூஜை பண்ணினார்.  அப்புறம் ஹிந்தியில்  ஆதிசங்கரர் பற்றியு,   அத்வைதத்தை விளக்கியும்  அழகாக  மஹா பெரியவா  பேசினார்.  அங்கிருந்த பண்டிதர்களுக்கு  எல்லாம்  பரிசு, விருதுகள் அளித்தார்.  

அடுத்த  நாள் பாடலிபுரமே திரண்டு  வந்து விட்டது.  வெகுநேரம்  மகா பெரியவாளுக்கு பாதபூஜை, பிக்ஷா வந்தனம்  பண்ணினார்கள்.  ஒருவர் பாக்கி விடவில்லை. அடுத்து எப்போது இப்படி ஒரு பாக்யம் கிடைக்குமோ?  பாட்னா பண்டிதர்களோடு,  ஹை கோர்ட் ஜட்ஜ் சட்டர்ஜீ, தலைமை ஜட்ஜ்கள் , இன்ஜினியர்கள், டாக்டர்கள்  வக்கீல்கள்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள்  வித்வான்கள்  மடாதிபதிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், என பலர் வந்து மஹா பெரியவா தரிசனம் பெற்றார்கள். திருவிடை மருதூர்க் காரர்  ராவ் சாஹேப்  R  மகாலிங்க ஐயர், பாட்னா அரசாங்க அதிகாரியாக அங்கே பணியாற்றிக்  கொண்டிருந்தவர் ஏற்பாடுகளை  முன்னின்று நிறை வேற்றினார்.  

1935ம் வருஷம் மே  மாதம் 11ம் தேதி மஹா பெரியவா பாட்னாவை விட்டு புறப்பட்டார். காசியிலிருந்து  ராமேஸ்வரம் போக வேண்டும்.  பாட்னா அருகே  ஒரு  அழகான  ஊர் பெயர்  ஹர் ஹர். கங்கையின் வடகரையில் உள்ள பட்டணம்.  அங்கே  கண்டகி நதி துல்லிய  கங்கையின் உபநதியாக ஓடுகிறது.  அதில் மஹா பெரியவா  ஸ்னானம் செய்தார்.  அப்புறம் அங்கிருந்து புன்புன் நகரம் சென்றார். அங்கே புன்புனா நதி  கண்ணைப்பறித்துக்கொண்டு  ஓடுகிறதே.  அதிலும் மஹா பெரியவா ஸ்னானம் செய்தார். நமது பாரத தேசத்தில்  அதிக புண்ய நதிகளில் ஸ்னானம் செய்தவர்களில் முதன்மையாக  மஹா பெரியவா தான் இருப்பார் போலிருக்கிறது.  அங்கிருந்து
தேஹதா என்கிற ஊர் சென்றடைந்தார்.  அங்கே தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

அந்த பிரதேசத்தில்  கன்யாகுப்ஜ  பிராமணர்கள் ஜாஸ்தி  வசித்தார்கள்.  பஞ்ச கௌடர்கள் எனும் பிரிவை சேர்ந்தவர்கள்.  

இங்கே  ஒரு  சின்ன  விளக்கம் சொல்லிவிடுகிறேன்.  
பிராமணர்கள் வடக்கே இருப்பவர்கள் தெற்கே இருப்பவர்கள் என்று  தங்களுக்குள் சில ஜாதியரை ஒரு குழுவாக சேர்த்து வைத்துக் கொண்டு  இருந்தார்கள்.   வடக்கே  பிஹார் பக்கம்  இருந்தவர்கள் பஞ்ச கௌடர்கள் எனும் பிராமண குரூப்.

ராஜ தரங்கிணி கேள்விப்பட்டதுண்டா?  12ம் நூற்றாண்டு  ஸமஸ்க்ரித  கவிஞர்  கல்ஹணர் இயற்றியது. அதில் பஞ்ச கௌடர்கள் யார் என்று விளக்கப்பட்டிருக்கிறது.  பஞ்ச என்றால் ஐந்து.  பஞ்ச கௌடர்களில் ஐந்து  வகையினர்  அடக்கம்.  விந்தியமலைப்  பிரதேசத்துக்கு வடக்கே வாழ்ந்த பிராமணர்கள் ஸரஸ்வத்  பிராமணர்கள், கன்யாகுப்ஜ  பிராமணர்கள், கௌடர்கள்-கௌர்கள், உத்கல  பிராமணர்கள்,  மைதிலி பிராமணர்கள். ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியான  ஸாஹ்யாத்ரி காண்டம்  கூட இதைச்  சொல்கிறது.  தக்ஷிண பிரதேசத்தின்  பஞ்சகௌடர்களைப் பற்றி சொல்கிறது.   அது சொல்வது என்ன தெரியுமா?  

பஞ்ச கௌட  பிராமணர்கள் என்பவர்கள்  கன்னோஜி  பிராமணர்கள், காமரூப பிராமணர்கள், உத்கல  பிராமணர்கள்,  மைதிலி பிராமணர்கள்,  கூர்ஜர பிராமணர்கள் எனும் ஐந்து பிரிவினர்.   அவர்கள்  ஸ்மார்த்தர்களாக இருந்தாலும், வைஷ்ணவர்களாக இருந்தாலும்  பாகவதர்களாக இருந்தாலும்  இதில் சேர்த்தி. 

தெற்கு பிரதேசத்தில் இதுபோல் ஒரு குரூப் இருந்தது அது தான் பஞ்ச திராவிடர்கள். அதற்குள் இப்போது போக நேரமோ, இடமோ இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.

ஹர்ஹர் பட்டணத்திற்கு  மஹா பெரியவா வந்ததை  அறிந்ததும்   பஞ்சகௌட பிராமணர்கள் வரவேற்பளித்தனர். பாத பூஜை, பிக்ஷா வந்தனம் பண்ணினார்கள்.   பூக்களால்  அலங்கரிக்கப்பட்ட ஒரு தேரில் மஹா பெரியவாளை  அமர்த்தி  ஊர்வலம் அழைத்துச் சென்றார்கள்.  இதை  ஏற்பாடு செய்தவர்  ஸ்ரீ  மாதவ மிஸ்ராவும் அவருடைய நண்பர்களும். ரொம்ப நேர்த்தியாக இருந்தது.   உள்ளூர் மக்கள்   எந்த  ஆச்சார்யரையும் , மடாதிபதி, பீடாதிபதியையும் அதுவரை  பார்த்ததில்லை என்பதால் ரொம்ப ஆர்வமுடன் வரவேற்று தரிசனம் செய்தார்கள். 

1935ம் வருஷம்  20ம் தேதி கயாவுக்கு மஹா பெரியவா வருகை தந்தார்.   ஊருக்கு வெளியே  திஹாரி  மகாராஜா,  சன்யாசிகள்,  யோகிகள்,  வேத பிராமணர்கள், மற்ற ஊர் மக்கள் எல்லோரும் வாத்திய வேத கோஷங்களோடு  பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்கள். இதற்கு ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவர்கள்  ரத்தன் சர்க்கார், முராரி லால்,  கிரிதாரி லால்,  மற்றும்  மேத்தா சமாஜ அங்கத்தினர்கள்.  ஆயிரக்  கணக்கானர் சமாஜ கட்டிடத்தருகே சேர்ந்துவிட்டார்கள்.  வரவேற்பு பத்திரிகை  வங்காள மொழியில் வாசித்தளிக்கப் பட்டது. மஹா பெரியவா  ஸமஸ்க்ரிதத்தில்  பேசினார்.   பல்வேறு  ப்ராமண வகுப்புகளில் பிறந்திருந்தாலும், எல்லோரும் ஒற்றுமையாக  ஹிந்து சமூகம் க்ஷேமமாக இருக்க  பாடுபட்டு நல்வழிகளை பின்பற்றவேண்டும், குழந்தைகளை  சிறந்த முறையில் எதிர்காலத்துக்கு தயார் செய்யவேண்டியதின் அவசியம் பற்றி  என்று அறிவுரை கூறினார். 
தொடரும் 



dhakshinamurthi

 தக்ஷிணாமூர்த்தி  ஸ்தோத்ரம்  -    நங்கநல்லூர்   J K  SIVAN 

மௌன குருவே   -  2    


4. निधये सर्वविद्यानां भिषजे भवरोगिणाम् ।
गुरवे सर्वलोकानां दक्षिणामूर्तये नमः ॥४॥

Nidhaye Sarva-Vidyaanaam Bhissaje Bhava-Roginnaam |
Gurave Sarva-Lokaanaam Dakssinnaamuurtaye Namah ||4||

நிதயே ஸர்வவித்யானாம் பிஷஜே பவரோகிணாம் |
குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே னமஃ ||

ஹே,  தக்ஷிணாமூர்த்தே, ப்ரபோ, நமஸ்காரம். ஞானம் என்று எதை எல்லாம் உணர்கிறோமோ அதனைத்தும் உன்னிலே தானே அடக்கம். நீ தானே உலக பந்தம், சம்சார பவ ரோகம் எனும் வியாதிகளுக்கெல்லாம் சர்வ நிவாரண ஓளஷதம் அகில லோக குரு நீ ஒருவன்தானே. தென்திசைநோக்கி அமர்ந்து மௌன ஸ்வரூபமாக அருள்பவன். நமஸ்காரம்.

5. ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये ।
निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमः ॥५॥

Om Namah Prannava-Arthaaya Shuddha-Jnyaanai[a-E]ka-Muurtaye |
Nirmalaaya Prashaantaaya Dakssinnaamuurtaye Namah ||5||

ஓம் நம ஃ ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே |
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்தயே னமஃ ||

''ஹே தக்ஷிணாமூர்த்தி ப்ரபோ, உனக்கு நமஸ்காரம். உன்னை தரிசித்ததும் தான் பிரணவம் எனும் ஓங்கார மந்திரத்தின் உருவம் என்ன என்று புரிகிறது. எல்லாம் ஒன்றே எனும் அத்வைத சித்தாந்தம் புரிகிறது. பரிசுத்த  ஆத்ம ஞானம் எப்படியிருக்கும் என  உணரமுடிகிறது 

6. चिद्घनाय महेशाय वटमूलनिवासिने ।
सच्चिदानन्दरूपाय दक्षिणामूर्तये नमः ॥६॥

Cid-Ghanaaya Mahe[aa-Ii]shaaya Vatta-Muula-Nivaasine |
Sac-Cid-Aananda-Ruupaaya Dakssinnaamuurtaye Namah ||6||

ஹே,  தக்ஷிணாமூர்த்தி ப்ரபோ, எண்ணற்ற எண்ண அலைகள் ஓயாமல் ஒழியாமல் என்னுள் எழுந்து எனை அலைக்கழிக்கும் வேளையில் என் உள்ளுணர்வாக நீ அவற்றை தடுத்து நிறுத்தி, ஓட்டத்தை தடுத்து  அசைவற்ற ஒரு நிலையில் அவற்றை இறுக்கி  நிறுத்தி, என்னை பிரம்மானந்தம் அனுபவிக்க செய்பவனே. கடுகினுள்  ஒரு  பெரிய  கடல் போல ஒரு சிறு விதையில் பரந்த ஆலமரமே,  அணுவுக்குள் அணுவான நீதான்  அண்ட பகிரண்டம்  எல்லாமே, என உணர்த்துகிறாய். மஹா ஈஸ்வரா., மஹேஸ்வரா, அதற்கு தான்  இந்த கல் ஆலமரத்தடி மௌன உபதேசமா? சச்சிதானந்த ஸ்வரூபமே.

ஸ்ரீ ரமண பகவானின் குரல் அக்ஷரமண மாலை ஸ்லோகத்தில் கேட்கிறதா?

''மௌனியாய்க் கற்போன் மலராதிருந்தான் மௌனமிதாமோ வருணாசலா?''
கருங்கல் பாறையைபோல் வாயே திறக்காமல் திரு அருள் புரியாமல் மௌனமாக இருப்பது ருந்தால்,இது உனக்கு அழகோ, அருணாசலா? இந்த மௌனம் உனக்கேற்றதா,அருணாசலா?” 

குற்றமுற் றறுத்தெனைக் குணமாய் பணித்தாள் குருவுரு வாயொளி ரருணாசலா ! அ..மண.மாலை சுலோ 19


அசையாமல் என்னை ஆட்கொண்ட இந்த திரு அண்ணாமலை தனது குரு என்றும் அருணாசலம் என்பதே பகவானின் குரு கிருபையின் மொத்த உருவம் என்கிறார்.

அருணாசலம் தான் பகவான் ரமணரின் குரு. அருணாசலம் எனும் மலை ‘குருவுருவாய்” ஒளிர்ந்து கொண்டிருக்கும்.ஆனால் அது மௌனமாக இருக்கும்.அந்த அருணாசலம் தனது ஒளியினால் நமது குறைகளையெல்லாம் அழித்து நம்மை குணவான் களாக்கிவிடும். அப்படிப்பட்ட அருணாசலமே
கிரியுருவாகிய.கிருபைக் கடலே என்று பகவான் 17 வது சுலோகத்தில் கூறியுள்ளார்.

பகவான் ரமணர் சொன்னபடி ஆதி சங்கரர் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தியை ஸ்தோத்திரம் செய்யவேண்டுமென்று சங்கல்பித்து கொண்டார்.ஆனால் மௌனத்தை என்னவென்று துதிப்பது? ஆதலால் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைப் பிரித்துச் சொல்லி, இவை  யெல்லாவற்றிற்கும் விலக்ஷணமான (வேறுபட்ட) தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திரம் செய்தார். இதைவிட மௌனத்தைத் துதிப்பது எப்படி?”

எவ்வளவு அருமையான விளக்கம்! மௌனம்  என்பது ஸ்திதி,சிருஷ்டி, நாசம் (லயனம்) எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிச்சலனமான ஒரு நிலை.  மௌனம் என்பது ஆத்மஸ்புரணையே! ஆன்மாவின் ஸ்புரணை ஏற்பட்டால் சலனங்கள் அற்றுப் போகின்றன.அங்கு பேரமைதி நிலவும்.

மௌனம் என்று சொல்லிக்கொண்டே தாங்கள் சொல்ல வேண்டியதை எழுதிக் காட்டு கிறார்கள்.அதெல்லாம் வியவகார மில்லையா?( மௌனமாகாது).”

“ வெளியிலிருந்து ஏற்படுகின்ற இடையூறுகளைப் போக்கடிப்பதற்கு ஒருவர் வாங் மௌனம் அனுஷ்டிக்கலாம்.ஆனால் அது தான் யதார்த்தமான மௌனமென்று அவர் நினைத்து விடக்கூடாது.

மௌனம் என்றாலே இடையறாத பேச்சுத் தான். அதை அடைவது என்பதற்கு ஏதோ தனியாக முயற்சி செய்யவேண்டாம்.  அது எப்போதுமுள்ளது. அதை மறைக்கின்ற சித்த விருத்திகளை களைந்தெறிய வேண்டுமே தவிர, அதையடைவதற்கு முயற்சி வேண்டியதில்லை”.

“ சிரவண மனமாதிகள் பாஹ்யம்,ஆந்தரம் என்று இரு வகை.     ஆந்தர சிரவண மனனங்கள் மனம் பக்குவம் அடைந்து ஸ்புரிக்க வேண்டும்.”

“ எப்பொழுதும் ஹ்ருதய குகையில் ‘அஹம்,அஹம்’ என்று பிரகாசிக்கும் ஆத்ம ஸ்புரணையை அறிவதே ஆந்தர சிரவணம்.அதிலேயே நிலையாக நிற்கப் பழகிக் கொள்வது ஆந்தர மனனம்.’நான்’ தானாக நிற்பது நிதித்யாசம்.”

இதெல்லாம்மே ரமண மஹரிஷியின் கருத்துக்கள். பகவான் அருளிச்செய்த ‘ஹ்ருதய குஹர மத்யே’ எங்கிற சுலோகத்தில் தெளிவாக கூறியுள்ளார்:

ஹ்ருதய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்ம மாத்ரம்
ஹ்யஹ மஹமிதி ஸாக்ஷாத் ஆத்ம ரூபேண பாதி !!
ஹ்ருதி விச மனசா ஸ்வம் சின்வதா மஜ்ஜதா வா !
பவன சலன ரோதாத் ஆத்மனிஷ்டோ பவ த்வம் !!

“இதயமாம் குகையின் நடுவில் ஏகப் பொருளாக பிரம்மம் ,”நான்,நான்”என ஆத்ம ரூபமாக ஒளிர்கிறது.மனதினால் தன்னை யெண்ணி இதயத்துள் சென்றோ, மூச்சையடக்கி அதனால் மனதை இதயத்தினுள்சூழ்ந்திட செய்தோ, இதயத்துள் ஆத்மாவில் நிஷ்டமாவாய்” எங்கிறார் பகவான்.

‘நான்’ பூரணமாக சரணகதி அடைவது தான் மௌனம்;அங்கு பூரண சாந்தி நிலவுகிறது.’மௌனம்’ என்பதை வார்த்தைகளால் வியாக்கியானிக்க முடியாது..மௌனத்தில் எந்த சிந்தையும் கிடையாது.நிச்சலனமான மௌனத்தை நிலை பெறச் செய்ய முடியும் என்றால் அது தான் முக்தி.

ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தி மௌனத்தையே தனது உபதேச மொழியாகக் கொண்டிருந்தார். பகவான் ரமணரும் அதே வழியில் தான் வந்தவர்.

பகவானிடம் ஒரு பக்தர்     “ சுவாமி,  மௌனம் எப்படி சக்தி வாய்ந்த உபதேச மொழியாக முடியும்?” என்றார்
''ஞானியொருவன் எந்த குகையில் உட்கார்ந்திருந்தாலும் அவரிடமிருந்து வருகின்ற ஆன்மீக அலைகள் எல்லோரையும் அவரிடம் ஈர்க்கும். அவர் பேச வேண்டியதில்லை, குரு ஆன்மீக ஒளியைக் காட்டுபவர். மௌனத்திலிருந்து தான் பேச்சே உருவானது. பேச்சு என்பது மௌனம் சிந்தனையாகி பிறகு வார்த்தைகளாக வெளிவருவது.
விவேகானந்தர் ''மௌனம் தான் சக்தி  வாய்ந்த பிரார்த்தனை” என்பார்..

Saturday, February 26, 2022

DHAKSHINAMURTHI

 

தக்ஷிணாமூர்த்தி  ஸ்தோத்ரம்  -    நங்கநல்லூர்   J K  SIVAN 


மௌன குருவே   -1  



குரு என்பவர் பேசுபவர். காலேஜ் ,பள்ளிக்கூடம், பாடசாலை என்றெல்லாம் சென்றால்  நமக்கு  பாடங்களை கற்பிப்பவர்.    நிறைய பேசுகிறார்.  லெக்சர் அடிக்கிறார்.    அதால் கற்பவர்கள் பயனுறுகிறார்கள்!!!! பாடசாலைகளில்   வேதம் சொல்லும் உபாத்யாயர் உரக்க மந்திரங்களை,  ஸ்லோகங்களை சொல்கிறார். சிஷ்யர்கள் மாணவர்கள் கேட்டு திருப்பித் திருப்பி அதை சொல்லி கற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தானே?

எனவே ஒரு உபதேசம் கற்றுக் கொள்ளும்போது பேச்சு அவசியம். இது எப்போது? ஆரம்ப நிலையில். ஒன்றைக் கற்றுக் கொள்ளும் நிலையில்.  உபதேசம் எப்போது ஆரம்பமாகிறது?  நீ ஒன்றை அறிந்துகொண்டு, தெரிந்து கொண்டு, பிறகு அதை உள்வாங்கி அலசி, அதன் பொருளை உணரும்போது உனக்கு சந்தேகங்கள் சில தோன்றுமே,  எது சரியானது. எதை எப்படி உணர வேண்டும் என ? தேடுவாயே  அப்போது.!

உன் மனதில் புகுந்து அதை சீர் படுத்தி, சலனம் அகற்றி, சந்தேகங்களை  அகலச் செய்யும்போது வார்த்தைக்கு எங்கே இடம்?  அங்கே இருப்பது ஒன்றே தான். மனம், மனம், மனம். வேறெதுவும் காணாமல் போன நிலை. அதை அப்படி அறியச் செய்யும் குரு ஒருவர் தான் மௌன குரு. தக்ஷிணாமூர்த்தி.

''சும்மா இரு'' என்று தனது குரு உபதேசித்த போது அதை சரியான முறையில் அறிந்த தாயுமானவர் ''சும்மா இருத்தல் சுகமே'' என்று பாடல்களில் அனுபவ பூர்வமாக உரைத்திருப்பது   ''சுப் சாப் ரஹோ'' ''பேசாம இருடா'' அல்ல.      சர்வமும் ஒடுங்கி மனம் ஒன்றே ஆத்மாவாக பரிமளிக்கும் நிலை.

ஆதி சங்கரர் மஹான்.  யுக புருஷன். அவர் எழுதியிருக்கிற தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகங்களை இப்போது பார்ப்போம்.

मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।
आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥

Mauna-Vyaakhyaa Prakattita Para-Brahma-Tattvam Yuvaanam
Varssisstthaam-Te Vasad Rssigannaih Aavrtam Brahma-Nisstthaih |
Aacaarye[a-I]ndram Kara-Kalita Cin-Mudram-Aananda-Muurtim
Sva-[A]atmaaraamam Mudita-Vadanam Dakssinnaamuurti-Miidde ||1||

ஓம் மௌனவ்யாக்யா ப்ரகடிதபரப்ரஹ்மதத்வம்யுவானம்
வர்ஶிஷ்டாம்தேவஸத்றுஷிகணைராவ்றுதம் ப்ரஹ்மனிஷ்டைஃ |
ஆசார்யேம்த்ரம் கரகலித சின்முத்ரமானம்தமூர்திம்
ஸ்வாத்மராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்திமீடே ||

மௌனம் ஒன்றே உலகில் மிகவும் விரிவான பிரசங்கம். மௌனம் ஸர்வார்த்த சாதகம். மௌனத்தில் எதை வேண்டுமானாலும் பெறலாம். மௌனம் ஒன்றே சம்மதத்திற்கு அறிகுறி என்றெல்லாம் சொல்கிறோம். அசையாது கல்லால மரத்தின் அடியில் சர்வஞர்களான ரிஷிகள் உன்னிடம் பெற்ற அந்த ஞானத்திற்கு வார்த்தை எது. மொழி ஏது? அருட்பார்வை ஒன்றே அறிவுக்கனலாக சுடர் விட்டதே. பரப்ரம்மத்திற்கு விளக்கம் சொல்ல  முடியுமா?. மௌனம், அதி மௌனம், ஆழ்ந்த மௌனம். இது ஒன்றே அதீத ஞானம். இதயத்தை தொடுவது மௌனம். வார்த்தைகள்  சுடக்கூடியவை.  சுடும். அதனால் தான் கண்டவர் விண்டிலரா?  தன்னிலே உன்னைக் கொண்ட, கண்ட நிலையா? அந்த சுகம் தாம் ப்ரம்மானந்தமா? நமஸ்காரம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமி.

2 वटविटपिसमीपेभूमिभागे निषण्णं
सकलमुनिजनानां ज्ञानदातारमारात् ।
त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं
जननमरणदुःखच्छेद दक्षं नमामि ॥२॥

Vatta-Vittapi-Samiipe-Bhuumi-Bhaage Nissannnnam
Sakala-Muni-Janaanaam Jnyaana-Daataaram-Aaraat |
Tri-Bhuvana-Gurum-Iisham Dakssinnaamuurti-Devam
Janana-Maranna-Duhkhac-Cheda Dakssam Namaami ||2||

வடவிடபிஸமீபே பூமிபாகே னிஷண்ணம்
ஸகலமுனிஜனானாம் ஜ்ஞானதாதாரமாராத் |
த்ரிபுவனகுருமீஶம் தக்ஷிணாமூர்திதேவம்
ஜனனமரணதுஃகச்சேத தக்ஷம் னமாமி ||

எங்கும் நிசப்தம். காற்றே கூட பய பக்தியோடு மெதுவாக  பவ்யமாக  விடாமல் வீசுகிறது. எங்கும் எதுவும் அமைதியில் மூழ்கியுள்ளது.    எதிரே மிகப் பெரிய ஆலமரம். அதன் இலைகளும் அசையவில்லையே.  அதனால்  தான்  கல்லால மரமோ?  மரத்தின் அடியில் நீ. ஒரு காலை மடக்கி மற்றொரு கால் மீது போட்டுக்கொண்டு  உட்காரும் பழக்கம்  உன்னால் தானா? ஆஹா  அதில் தான் என்ன சுகம்?   நீ ஒருகால், இடது கால்.  தூக்கி ஆடுபவன். அது அழகாக ஆட காரணம் அது ஒரு அழகிய  பெண்ணின் கால்.  ஓஹோ  உன் இடது பாதி  உமாதேவி யல்லவா? அர்த்தனாரீஸ்வரன் தானே நீ. உன்னைத் சுற்றிலும் எண்ணற்ற ரிஷிகள். முனிவர்கள். ஞானம் தேடி வந்தவர்கள்.  உன்னை  விட்டால் வேறு எங்கே கிடைக்கும் அது?  திரிலோக குரு அல்லவா நீ,   தென் திசை   நோக்கி அமர்ந்ததால் தானே உன் பெயர்  தக்ஷிணா மூர்த்தி. பிறப்பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகா உன்னை நமஸ்கரிக்கிறேன்..

3. चित्रं वटतरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा ।
गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तुच्छिन्नसंशयाः ॥३॥

Citram Vatta-Taror-Muule Vrddhaah Shissyaa Gurur-Yuvaa |
Guros-Tu Maunam Vyaakhyaanam Shissyaas-Tuc-Chinna-Samshayaah ||3||

சித்ரம் வடதரோர்மூலே வ்றுத்தாஃ ஶிஷ்யாஃ குருர்யுவா |
குரோஸ்து மௌனவ்யாக்யானம் ஶிஷ்யாஸ்துச்சின்னஸம்ஶயாஃ ||

ஆஹா!   என்ன அபூர்வ காட்சி இது. கண் இமைக்க  மறந்து போய் விட்டதே!  ஆலமர வேர்கள் திண்டு திண்டாக  மலைப்பாம்பு போல்  பெரிதாக மேடை அமைத்திருக்கிறதே. அதன் மேல் கீழ் வேர் கட்டைகளில் உன் ''சிஷ்ய பிள்ளைகள்'' அதாவது மஹா  பெரிய ரிஷிகள், முனீஸ்வரர்கள், ஞானிகள். எல்லாருமே வெண் தாடி வேந்தர்கள். அவர்களோடு பார்க்கும்போது நீ இளையவன். ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் மூத்தோன்,  முந்தையவன். தாய் தந்தை அற்ற,  தான் தோன்றி. ஸ்வயம்பு.  சம்பு .மஹா தேவன்.வயதற்ற வயதானவன்.

குருவே,  நீ பேசவில்லை. சிஷ்யர்கள் நெஞ்சிலே தான்  புகுந்து விட்டாயே . உன் ஆத்மா அவர்கள் ஆத்மாவோடு இணைந்து விட்டது. மெஷின் வேலை செய்ய துவங்கி விட்டதே.....

NELLAIYAPPAR TEMPLE TIRUNELVELI

  தாமிர சபேசன்    நங்கநல்லூர்   J K  SIVAN  


இப்போதிருக்கும் பழைய புராதன சித்திர  நேர்த்தி கொண்ட கோவில்களை இனிமேல் நம்மால் கட்டமுடியாது. இருப்பதையாவது ஜாக்கிரதையாக  கண்ணில் மணி போல்  பாதுகாத்தோமானால் எதிர்காலம் நமக்கு நன்றி கூறும். இல்லையேல் நாம்  நமது முன்னோருக்கு
 நன்றி கொன்றவர்களா
வோம்.

நான் பலமுறை  கண்டு பிரமித்து  இங்கேயே  இருந்து விடலாமா  என்று நினைக்க வைத்த  சில  அற்புத  கோவில்களில்  ஒன்று  திருநெல்வேலி  நெல்லையப்பர் புராதன சிவாலயம்.  சிவனுக்கு  இங்கே வேணுவன நாதர் என்றும் பெயர். அம்பாள்  காந்திமதி. நிறையபேர்  gandhiமதி  சொல்லும்போது நெளிவேன்.   தாமிரபரணி வடகரை கோவில்களில் ஒன்று.  7ம்  நூற்றாண்டு   தேவாரங்களில் பாடல்  பெற்ற  ஸ்தலம்.  பதினாலரை  ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது.   பாண்டிய ராஜாக்கள்  சோழர்கள் பல்லவர்கள், சேரன், மதுரை நாயக்கர்கள் இந்த  ஆலயத்தை அவ்வப்போது சீரமைத்து இருக்கிறார்கள்.    நாலு பக்கம் சுவர்கள்  கட்டியதால் ஆக்கிரமிப்பு இல்லை.  இப்போது அரசு அறநெறித்துறை  கண் பார்வையில் உள்ளது.!!  நெல்லையப்பர்  காந்திமதி ஆலய   கோபுரங்கள், கர்பகிரஹம் எல்லாம் நின்றசீர் நெடுமாற  பாண்டியன் 7ம் நூற்றாண்டிலேயே  கட்டிவிட்டான்.
                                 
அம்பாள் சிவன்  இரு கோவில்களையும்  சங்கிலிமண்டபம் என்று ஒரு மண்டபம் கட்டி இணைத்தவர்   1647ல்  வடமலையப்ப பிள்ளையன் என்ற சிவபக்தர்.

வடமலையப்பன்    திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள சோழபுர த்தில் பிறந்தவர். சிறிய தகப்பனாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்து  கருத்து வேற்றுமையினால் கோபித்து, வீட்டை விட்டுச் சென்றவர்.  நமது அன்றாட  பாஷையில் வீட்டை விட்டு  ''ஓடியவர்''.  கல்வி, கேள்விகளில்  தேர்ந்த  வடமலையப்பனை   ஸ்ரீரங்கத்தில்   கர்த்தாக்களின் ஆச்சாரியரான, தாத்தாச்சாரியார்  “பிள்ளை” போல் வளர்த்து,  நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கரிடம் நான் இவனை  என் “பிள்ளை” போல் வளர்த்து தங்களிடம் அனுப்புகிறேன் என்று கூறியமையால், இவர் வடமலையப்ப பிள்ளை என்றும், தாத்தாச்சாரி என்ற ஐயனிடம் இருந்து வந்த பிள்ளை என்பதைக் குறிக்க ”பிள்ளையன்” என்றும்  பேர் வந்ததாம்.   “பிள்ளை” மார்கள்  சமூகப்பெயர்களில்   பிள்ளையன்  என்ற  பெயரும் உண்டு.  புலவராற்றுப்படையில் சான்றுகள் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.   நாயக்க மன்னன் வடமலையப்ப பிள்ளையை   திரு நெல்வேலிச் சீமை தளபதியாக  நியமித்தான்.  அந்த சிவபக்தர் மண்டபம் கட்டியதை  மேலே  சொல்லி இருக்கிறேன்.

1648ல்  டச்சுக்காரர்கள்  திருச்செந்தூரில் புகுந்து    சுப்ரமண்யனையும், நடராஜனையும்  தங்கச் சிலை  என்று தூக்கிச் சென்றுவிட்டனர். கடல் கொந்தளித்து அவர்கள் கப்பல் கவிழும் நிலையில்  அந்த விக்ரஹங்களை கடலில் போட்ட பிறகு உயிர் தப்பினர்.  

சிலைகளை  திருச்செந்தூர் கோயிலில் காணோம் என்ற  விஷயம்  திருநெல்வேலியில்  வடமலையப்ப பிள்ளை காதில் விழுந்ததும்  அவர்  உடனே  பஞ்சலோக சிலைகளை வார்ப்படம்  செய்யச்  சொல்லிவிட்டார்.   அன்றே ஒரு கனவு.    எங்கே  கடலில் சிலைகள் இருக்கிறது என்று இடம் அடையாளம் காட்டப்பட்டது . எங்கே ஒரு கழுகு வட்டமிடுகிறதோ அங்கே  கடலில்  ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அங்கே  அடியில் விக்ரஹங்கள் இருப்பதை  சொல்லியது.

பிள்ளை  உடனே ஒரு படகில்   நீர் மூழ்குபவர்களை அனுப்பி  அந்த இடம் அப்படியே  கனவில் வந்தது போல் கடலில் தோன்ற  விக்ரஹங்கள் மீட்கப்பட்டன.  1653ல்  புனருத்தாரணம்.  வடமலைப் பிள்ளை  ஆர்டர் கொடுத்து செய்யப்பட்ட  சிலைகள் முருகன் குறிச்சி  என்கிற ஊரில், பாளையம் கோட்டையில்    திருப்பிரந்தீஸ்வரர் கோவில்,   (வெங்கு பச்சா கோவில் என்றும் சொல்வதுண்டாம் ). அங்கே  ஸ்தாபிதமாகியது.  யாராவது  பாளையம் கோட்டைக்கார  பக்தர்கள் இந்த கோவில் பற்றி தெரிந்தால் படங்களும் விவரங்களும் எனக்கு அனுப்பலாம்.     J K  SIVAN  9840279080   வாட்சாப் நம்பர். வடமலையப்பர்  அளித்த முருகன் நடராஜர்  அங்கே ஸ்தாபிதமாகி இருக்கிறதாம்.  

நெல்லையப்பர்  கோவிலில்   கல்வெட்டுகள் வீரபாண்டியன்,  மாரவர்ம சுந்தர பாண்டியன், ராஜேந்திர சோழன் காலத்தவை  நிறைய இருக்கிறது.   நெல்லையப்பரை உடையார், 
உடைய நாயனார் என்று சொல்கிறது.  அம்பாள் நாச்சியார் எனப்படுகிறாள்.

சிவபெருமானின்  சிறப்பைப்  போற்றும் ஐந்து   நடராஜர்  சபைகளில்   நெல்லையப்பர்  ஆலயம்  தாமிர சபை என்ற பெயர்  பெற்று   விசேஷமானது. தாமிர சபைக்கு பின்னால்  சந்தன சபாபதி சந்நிதி உள்ளது. தாமிரசபையிலிருந்து பார்க்கும்படியாக அமைந்துள்ளது.   இங்கே  பெரிய சபாபதியும் உள்ளார்.  

நெல்லையப்பர்  ஆலயம்  கொள்ளை கொள்ளையாக  அற்புத சிற்ப வேலைப்பாடுகள் நிறை



ந்த ஆலயம்.  சப்த ஸ்வரங்கள்   த்வனிக்கும்  கற்தூண்கள் இங்கே அற்புதமாக இருக்கிறது.  எப்படித்தான் சிற்பி இதை உருவாக்கினானோ? இந்த கோவிலை பற்றி நிறையவே சொல்லவும் எழுதவும் விஷயம் இருந்தாலும்  ஒருதடவை நேரில் சென்று பார்த்து அனுபவிப்பது போல் அது ஆகாது.  பேப்பரிலும் , கம்ப்யூட்டரில் படம் போட்டும்  பக்கம் பக்கமாக  ஹல்வா  பற்றி   எழுதியோ   ஹல்வா என்று சொல்லியோ இனிப்பை அனுபவிக்க முடியுமா, நெல்லையப்பர் கோயில் சென்று வாசலில்  இருக்கும்  இருட்டுக்கடை அல்வாவை  வாங்கி விழுங்கினால்  தானே ருசி புரியும்.  நான்  இந்த   உலகப் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை  நேரில் சென்று வாங்கி விழுங்கியது பலமுறை.

Friday, February 25, 2022

AVVAIYAR

 பாட்டி சொல் தட்டாதே  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.''

ஒரு நாட்டுக்கு  வேளாண்மை, விவசாயம் எவ்வளவு முக்கியம்  என்று வாய் கிழிய  வானளாவ  பேசிக்கொண்டே  விளை நிலங்களை  பட்டா போட்டு  விற்று தின்று  ஏப்பம் விடுகிறோம்.  அது எவ்வளவு முக்கியமானது என்று  அந்த காலத்திலேயே  ஒரு பாட்டி சொல்லியிருக்கிறாள்
ஆற்றங்கரையில் ஆற்றுநீரை  தரைக்கு கீழே  உறிஞ்சி குடித்துக் கொண்டு வளமோடு இருந்த மரமும் ஒருநாள் விழுந்துவிடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒருநாள் விழுந்துவிடும். பின் எது தான் விழாது என்கிறீர்களா?   விவசாயம், வேளாண்மை ஒன்று தான் சாஸ்வதம்.   நிலத்தை பண்பட்டு  உழுது, அதன் விளைச்சலைக்  கண்டு ஆனந்தித்து, உண்டு வாழ்தலே ரொம்ப  உசத்தி.  பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குப் பழுது உண்டு என்கிறாள் பாட்டி.
''ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்''

நன்மை அடைபவரை யாரால் தடுக்க முடியும்,  அழிக்கமுடியும்? சாவாரை யாரால்  சாகாமல் காக்க முடியும், தடுக்கமுடியும்? பிச்சை எடுப்பவரை யாரால் விலக்க முடியும்? உலகில் இவை எல்லாம்  நிகழத்தான் செய்யும். அதற்கு தான் விதி என்று பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.

''பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.''

நமது நாடு ஒன்றில் தான் உலகிலேயே  அதிகமாக  பிச்சைக்காரர்கள்  தென்படுகிறார்கள் என்று நமக்கு கின்னஸ் ரெகார்ட் வேறே.   இப்படி ஒரு பட்டம் விருது நமக்கு தேவையா? பிச்சை எடுக்கும் வாழ்க்கை மிகமிக இழிவு.  இதை அந்த காலத்திலேயே  பாட்டி  ஒழிக்க வேண்டும் என்று சொன்னவள்.அந்த  பிச்சைக்கார  வாழ்க்கைக்கு மூத்த குடிவாழ்க்கை எது தெரியுமா? சொல்கிறேன் கேள். பலப்பல ஆசைகளைக் காட்டி கேட்போர் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இடித்து நப்பாசை கொள்ளும்படிச் செய்து அவர்கள் தரும் பொருளால் தன் வயிற்றை வளர்த்தல் ஆகும். சீச்சீ! இப்படி வாழ்வது மானக்கேடு. இந்த மானக்கேட்டோடு வாழ்வதைக் காட்டிலும் தன் உயிரை விட்டுவிடுவது மேலானது என்கிறாள்.  அந்தக்  காலத்திலும்   இப்படிப்பட்ட  அட்வர்டைஸ்மென்ட் ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

''சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்''

ஓம்  நமசிவாய   என்னும் பஞ்சாக்ஷர   சிந்தனையில் ஆழ்ந்திருப்பவனுக்கு  எந்த நாளும்  ஒரு ஆபத்து,  அபாயம்  கிடையாது. மகிழ்ச்சியோடு  வாழ்வதற்கு உரிய தந்திர மந்திரம் இதுதான். இதுவே நமது அறிவுக்கெட்டிய  நல்ல  வழி.  மீதி எல்லாம்  விதி வசத்தால் ஏற்படுவதை அப்படியே  ஏற்றுக்கொள்ளும்  விஷயம்  ஆகிவிடும்.  கர்ம பலன் தான் விதி. 


''தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி''

உலகத்தில்  எத்தனையோ  அதிசயங்கள்  அற்புதங்கள்  என்று பெரிய  லிஸ்ட் வைத்திருக்கிறோம். சிலதைப் பார்க்க முடிகிறது, மற்றதெல்லாம் படத்தில் பார்க்க வேண்டியது  தான்.எது அற்புதம்  என்று பாட்டி ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறாள். பூமியிலிருந்து நமக்கு கிடைக்கும்  தண்ணீரின்  அளவு, அதன் சுவை  எதுவுமே  நல்ல நிலத்தின்  தன்மையால் அமைகிறது.  அது போல தான்   தாராளமாக வாரி வழங்கும்  வள்ளல்களை  நல்ல குணம் படைக்கிறது.  அவர்களை தான் தக்கோர் என்கிறோம்.  உள்ளம் நல்ல தாக இருந்து  அதில்  கருணை, இரக்கம், தயை  நிறைந்திருந்தால்  பலருக்கு நன்மை கிடைக்கிறது.   பெண்ணிடம் நல்ல குணம் நேர்மை, கற்பு நெறி, இருந்தால்  குடும்பமே, உலகமே  அதனால் பயனுறுகிறது. இதெல்லாம்  அல்லவோ  இந்த உலகத்துக்கு  பாதுகாப்பு.  நாலு பக்கம் உப்பு தண்ணி நிறைந்த  கடலாபாதுகாப்பு? 

KRISHNASHTAKAM

ஆதி சங்கரர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் 

இது  ஆதி சங்கரர்  நம் அனைவருக்கும்  வைத்து விட்டுப்  போன ஏராளமான ஐஸ்வர்யங்களில்  ஒரே  ஒரு சின்ன  துக்குணியூண்டு எடுத்து தருகிறேன். இது கிருஷ்ணாஷ்டகம் என்ற எட்டு   குட்டி ஸ்லோகங்கள். குட்டி கிருஷ்ணன் மீது அவர்  பாடிய ஸ்லோகங்களும் குட்டியாகத்  தான்  இருக்கிறது.
பழைய ஒரு  மலையாள  வீடு. அதில் இரு ஆசாரமான தம்பதியர். அவர் பெயர் சிவகுரு. அவர் மனைவி ஆர்யாம்பா.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு ஏழைப் பிராமண குடும்பம். பல வருஷங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு தீராத குறை, இருவர் மனத்திலும். பிள்ளை யில்லையே!  திரிச்சூர் சென்று வடக்குநாதனை வேண்டினால் கைமேல் பலன் கொடுப்பானல் லவா?. மகாதேவா, எங்களுக்கு ஒரு மகனைத் தருவாயா?

மகாதேவன் வேண்டியவர்க்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவனாச்சே. திரிசூரில் ஒரு மண்டலம் தங்கி தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து விரதமிருந்தனர் இருவரும்.
ஆர்யாம்பா கனவில் ஈஸ்வரன் தோன்றினான்.

‘’உன் வயிற்றில் பிள்ளையாய் நானே வருவேன்’’ என்றான். எவனோ, பெயர் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்று வாடும்போது சிவனே நானே உன் மகன் என்றால் எப்படியிருக்கும் என்று இந்த சிவன் எழுதப்போவதில்லை. மனதில் நினைத்தால் இனிக்கும் அந்த இன்பம் எழுத்தில் வருமா?
ஈஸ்வரனைப்  பொருத்தவரை இது ஒரு தக்க தருணம் எனலாம். ஏனென்றால் இது நிகழ்ந்த காலத்தில் நிரீஸ்வரவாதிகள் பெருகி, கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தம் இந்து தார்மீகத்தை விழுங்கிக்  கொண்டு வந்த நேரம்.

''சனாதன தர்மத்தை பின்பற்றுவர்கள் தக்க துணையின்றி, சாய்ந்து கொள்ள ஒரு பக்க பலமின்றி திணறுகிறார்களே. உடனே நீங்கள் ஏதாவது செய்து இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்யவேண்டும் என்று பிரம்மாதி தேவர்கள் சதா  சிவனை வேண்ட அந்த தக்ஷிணா மூர்த்தி  நானே அவதரிப்பேன் '' என்று வாக்களித்தார். எனவே ஆரியம்பா கனவில் கண்ட சிவன் பிள்ளையாய்ப்  பிறந்தான், சிவனின் பெயரான சங்கரன் (சம்: மங்களம், கரன்: தருபவன்) என  அவர்கள் வைத்த  பெயருக்குத் தகுந்தபடி சகல சந்தோஷத்தையும் தந்தான். சாஸ்திரம் சகலமும் கற்றான். இனி கற்க ஒன்றுமில்லை என்ற நிலை வந்ததோ என்னவோ அந்த அவதார புருஷனுக் கல்லவோ தெரியும். வந்த கார்யம் சடுதியில் நடக்க ஆயத்தமாகக் கூட இருக்கலாம். சன்யாசம் கொள்ள மிக்க விருப்பம் உண்டாயிற்று. பால் மணம் மாறாப் பாலகன் என்று கூட சொல்லும் ஏழு வயதில் இப்படி ஒரு ஆசையா?  ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு சந்நியாசியாகி சங்கரன் தனது குருவைத் தேடி புறப்பட்டுவிட்டான்.

பாதசாரியாக பல தேசங்கள், வனங்கள், எல்லாம் கடந்து நர்மதை நதிக்கரையில் தனது குரு கோவிந்த பாதரை தரிசித்து வணங்கினார் சங்கரர்.

அதன் பிறகு எத்தனையோ அனுபவங்கள், அத்வைத வேதாந்த பிரகடனம். எதிர்த்தோர்களுடன் வாத, விவாதங்கள். சகலத்திலும் வெற்றி. தோற்றவர்கள் சீடர்களாகவும் ஆனார்கள். ஷண்மத ஸ்தாபனம். நான்கு மடங்கள் உருவாயின.

எண்ணற்றோர் வியந்தனர். சைவம் துளிர்விட்டு வளர்ந்து விரைவில் நாடெங்கும் நான்கு திசை யிலும் பரவி மிகப்பெரிய விருக்ஷமாகியது. எத்தனையோ வேத, வேதாந்த, உபநிஷத்துக்கள், பாஷ்யங்கள் சங்கரரால் தோன்றின. காற்றில் ஸம்ஸ்க்ரிதம் மணத்தோடு நிறைந்தது.
எங்கோ பனிமலையில் சங்கரர் தம் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்க தனியே மலையாள தேசத்தில் ஒரு தாய் வயதான காலத்தில் தினமும் பூர்ணா நதியில் ஸ்நானம் செய்து தனது குடும்ப தெய்வமான கிருஷ்ணனை வழிபாட்டு, மகன் சங்கரனையும் இடைவிடாது நினைத்துவந்தாள். அவள் மனதில் கிருஷ்ணனும் சிவனும் ஒன்றாகவே இடம் பெற்றார்கள். பிரிக்க முடியாதவர்களல்லவா ஹரியும் ஹரனும்.  

ஒருநாள் ஆற்றுக்குப் போகும் வழியில் கிழவி தடுக்கி விழுந்தாள். பிறகு அவளால் வழக்கமான ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியவில்லை.   ''என் நெஞ்சில் குடிகொண்ட கிருஷ்ணா, என் ஆருயிர் மகனே சங்கரா, என்னால் தினமும் ஸ்நானம் செய்ய போக முடியவில்லையே, எப்படி ஆசாரத்துடன்உன்னை வழிபடுவேன்?

பக்தியோடு வருத்தம் தோய்ந்த தாயின் தீனமான குரல் இருவருக்குமே கேட்டது.
சங்கரர் கிருஷ்ணனை நினைத்தார். கிருஷ்ணன் தோன்றினான். அம்மாவின் குறை சொல்லப் பட்டது.
''ஏற்கனவே தெரியுமே'' என்றான் கிருஷ்ணன்.
''என்ன செய்வது சொல் கிருஷ்ணா ''
''நீயே ஆற்றின் போக்கை மாற்றி தாயின் குறை போக்க வழியை உண்டாக்கு " என்றான் கிருஷ்ணன்.
''சரி, அப்படியென்றால் ஆற்றை இப்படி போகும்படியாக மாற்று'' - சங்கரரின் கால் கட்டைவிரல்  தரையில் ஒரு வரை படம் மண்ணில் வரைந்தது. வரைபடம் போலவே பூர்ணா நதி  தாயின் புழக்கடையில் ஓடினாள். அதிசயம் ஊரில் அடங்கவில்லை. நதி தனது போக்கை சங்கரர் வீட்டுப் பின் புறம் வரை மாற்றிக்கொண்டது சாதாரண விஷயமா?

சாசலம் என்ற பெயர் கொண்ட அந்த கிராமம் சங்கரர் காலடியில் உருப்பெற்ற நதியின் போக்கால் 'காலடி'' என்ற பெயர் பெற்ற. விவரம் இது தான். கிருஷ்ணனின் லீலையில் மகிழ்ந்து சங்கரர் மனம் பக்தியில் பொங்கியது.

நதி புறப்பட்டது போலவே கிருஷ்ணாஷ்டகம், அச்சுதாஷ்டகம்  கோவிந்தாஷ்டகம் எல்லாம் அற்புதமாக பக்தி ரசம் சொட்ட சொட்ட சங்கரர் நாவில் புறப்பட்டு நமக்குக் கிடைத்துவிட்டது. சங்கரரின் தாய் வணங்கிய கிருஷ்ணன் கோவில் அந்த வீட்டிலேயே சங்கரரால் ஸ்தாபனமாகியது. இன்றும் நாம் காலடியில் அந்த கோவிலை தரிசித்து கிருஷ்ணனை வணங்கலாம்.

அந்த புகழ் வாய்ந்த சங்கரர் போற்றிப்பாடிய கிருஷ்ணாஷ்டகம் எட்டு சிறிய எளிய ஸமஸ்க்ரித ஸ்லோகங்கள், ஏற்கனவே உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது, நீங்கள் அடிக்கடி கேட்டது, பாடியது, பாடப்போவது இது தான் :

वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । 
 दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥

 Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam 
Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum ||

'வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||  

 என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன்  தானே   ஜகத் காரணம்! ஹே! கிருஷ்ணா, தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ நீ  சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால் தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்  கொண்டிருக்கிறார். கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்  காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே. அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? 

தொடரும்  

Thursday, February 24, 2022




 

Sri Chakra Amma.  -  Nanganallur J K SIVAN   

I am aware that, many of my reader friends,  may not have heard or known about  Sarkkarai Amma.  

Let me   briefly  introduce her to you in English  so that  our  non-Tamil knowing  friends and spiritual minded may also be benefited to  know about this great soul.  I usually write in Tamil  mostly  covering  various  spiritual topics.

Anandamba, was different from normal children of her age.  Born in 1854 , nearly 170 years ago, at  Devikapuram   a small hamlet near Polur  in Thiruvannamalai District, Tamilnadu (India),   She liked to spend most of her time in solitude  at a corner in the western corridor of the famous Sri Bruhannayaki temple in her village.  It was facing the sanctum sanctorum of the principal deity, ambal.  She  always preferred to sit  there conveniently viewing the goddess. She was too young to know meditation but was able to concentrate  enjoying the beauty of the goodess before her.  Devika's temple is at the centre of the village and it is named after her as Devikapuram. I visited this  temple  and enjoyed the serene quiet environment and atmosphere still prevalent there.

Anandamba's father  Sesha Gurukkal was the priest of the temple. So she frequented the temple to  sit in meditation that came to her naturally. She  learnt byheart  ''Shiva sthuthi''  taught by her father and chanted it.  She experienced inexplicable joy and peace within her.  She never mingled with children fo her age as a result and was enjoying  the quiet  meditation.

As was the custom , Anandamba was married at 9 years . Sambasivan  her husband was 24 years old, already a widower.   He was head of the   small mutt in   Komaleeswaranpet, Chennai (Madras). This locality is now known as Pudupet. now a busy thoroughfare connecting  Annasalai with Egmore. I lived in this small town Komaleeswaranpet for a few  years and  remember the happy days I spent there.  Now  it is crowded with scraps and used automobile spare parts dealers most of them being muslims.  The former name   Komaleeswaran pet has disappeared.  Lord Siva of the beautiful temple there is named Komaleeswaran.

As a matured girl, Anandamba was sent to Komaleeswaranpet to live with her husband. The monastery  had  a room for Sambasivan to live.  Unfortuntely he was indifferent toward her, treating her totally like a servant  maid, seeking pleasures elsewhere.   It is in fact a  blessing in disguise for Anandamba. Right from her tender age, she was not inclined to normal family life, her mind always immersed in spirituality.

Therefore  Anandamba  used to go to Komaleeswaran Temple and spend her time after attending to household chorus. At home, there was a raised platform in a corner of the terrace that served as the seat of meditation.

Sambasiva, because of his reckless lifestyle, died early and Anandamba  was widowed at  20 yrs. The relatives cried and wept for her misfortune but  instead it gave her immense relief and freedom from family life.  She could now devote her full time in meditating on Shiva.

Sesha Gurukkal took his young widowed daughter Anandamba to Devikapuram.  She walked to Polur, to live with her brother.  It was there that  Anandamba  blossomed into a fully matured spiritual soul.  It gave her the opporutnity to meet  Nakshatra Gunamba, a  saintly  woman  who lived in a hillock called Nakshatra Kunru (The Star Hillock) near Polur.  Another  saint  Sri  Vitoba Swami, the silent mendicant, also lived there.  She communicated with him and certain other spiritual souls as well.  Polur is  nearThiruvannamalai, the centre of saints and mystics  such as Ramana Maharishi, Seshadri  Swamigal,  Visiri swamigal et al.

Anandamba was drawn so close to  Nakshatra Gunamba  and became her disciple. The saint treated her as her own daughter.  
'Amma, I have to go back shortly to Komaleeswaranpet, Madras,  but how can be  separate and  away from you.''

''Dont worry my child,  I shall provide you with invisible  wings to fly anytime you like to visit me here from Madras''
>
> It is one of the  eight  siththis,  yoga achievements,  known as ''Lahima''  , the power to become thin like air and move about  at will. Thus  the Yogini  Nakshatra Gunamba , attached  so much toward Anandamba ,  transformed all her spiritual prowess to Anandamaba before the Yogini left this world. which she knew would be very soon. In fact Anandamba had within her the Yogini Nakshatra Gunamba from then on.

The Yogini  initiated Anandambaa into  Sri Chakra Upasana which is an intense spiritual practice of observing Godliness in the female form.
After returning to Komaleeswaranpet, Madras, Anandamba continued her meditation at the terrace of her residence.  She forgot all her worldly obligations, even foregoing food and water.  The relatives around thought she had become mentally deranged  after losing husband at the age of 20.  She stayed at the terrace permanently  and visited the Komaleeswaran temple  in between sitting at the entrance of the temple.  She spent most of her time  following the intense spiritual practice of Sri Chakra Upasana chanting.

The day of attainment of bliss arrived one fine day as predicted by Nakshatra Gunamba, when Anandamba was in deep meditation. She was suddenly flooded by blinding rays of a very bright circular light, leaving her with the feeling that she herself had been lit and was shining.  She started laughing hysterically and since then the laughter became a permanent feature of her. People engrossed in their mundane activities, took her to be lunatic.

Doctor M.C. Nanjunda Rao a famous physician and a devotee of Swami Veivekananda used to visit Komaleeswaranpet and  happened to meet Anandamba.  He was a philanthropist also treating the poor  patients without any fee.
He donated  cash and kind  for all good causes taking active part in varied social services.

Anandamba’s brother Arunachalam  who stayed with her at the mutt, fell ill and Dr. Nanjunda Rao was  called to attend to him.  It is then that  Dr  Rao  came to know about his sister Anandamba hearing the  loud laughter of Anandamba from the upstairs  and wondered who was it. The relatives introduced Anandamba as a mad woman staying upstairs  Dr. Rao became curious and  observing the behaviour of Anandamba  and noticed her sitting at the entrance of Komaleeswara Temple. He  went near her and asked  ''why are you laughing uninterrupted?''

“My son,” she said looking at  Dr Rao,  “The inherent nature of the soul is experiencing happiness always. The pleasure and sorrow affect the physical structure of the body only. You are not the body. You are in a body; that’s all. And that is, what all happen to the body that is your temporary cage do not relate to you that is the atman, the inner self. The inner self is destined to be happy always. And you know a happy person always enjoys and laughs in amusement at watching things around. Those who are ignorant about this fact would only weep or be happy that relate to the body!”

 Dr. Nanjunda Rao, a spiritually minded person, was shaken, as it hit  by a powerful lightning. He could immediately identify her as a spiritually advanced person and not an insane woman as others  branded her.

Dr Rao  started interacting with Anandamba,  regularly and  became her disciple.   He observed her as a staunch  Sri Chakra Upasaka  and began referring to her as  ''Sri Chkkarathamma''  which in course of time became  ''Sakkaraiamma"

Dr Rao took his guru Sri Sakkarai Amma  to Varanasi, and Thiruvannamalai also once.  She met  Sri Seshadri Swami and Sri Ramana, the two spiritual giants of the day. When she asked the blessings of Sri Ramana, he said she was already a blessed soul.

Sarkarai amma  was seen flying  above like a bird going places.   Sri Thiru.Vi. Kalyana  Sundara Mudaliyar, a great Tamil scholar and social activist of yesteryears  had recorded in his book “Ulloli” (The Inner Light) that he had once seen Sri  Sakkarai Amma gliding like a huge bird and hopping on the parapet wall of the hostel terrace.  He further states that she was subjected to various scientific tests under Dr Edgar Thurston, CIE, the then curator of Madras Museum to find out Sri Sakkarai Amma’s mysterious feat of flying like a bird.  He then concluded that some humans rarely possess inbuilt mechanism of wings and Sri Sakkarai Amma was one bestowed with that kind of mechanism!
Thiru Vi.Ka, the great Tamil scholar's writing is reproduced here:
 ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்  மாடியில் பறந்து வந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக் குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோ தத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

In  1901 Dr  Nanjundarao took  Sarkkarai Amma  to Marundheeswarar (Shiva) temple in Thiruvanmiyur situated at the south east end of Chennai (Madras).  where she prayed for the blessings on all her disciples. While returning from the temple, Sri Sakkarai Amma pointed out a casuarinas grove on the way and told Dr. Rao that she would soon put aside her mortal remains and it should be buried there. Rao felt sad to hear that but nodded silently.
“My Samadhi will be scarcely noticed by people, leave alone revering it. But it will become a centre of immense spiritual power, comforting whoever comes there to pray. The spot will be a TEMPLE OF PEACE,” Sri Sakkarai Amma said.  As predicted, Sri Sakkarai Amma left her physical frame on February 28, 1901. Her mortal remains were taken in a procession and buried in the spot identified by her. Dr. Rao had already bought the land  and built a Samadhi over the spot and also constructed a small temple.  Anyone  visiting Thiruvanmiyur may visit the  temple and samadhi of Sri Chakra Amma.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...