Wednesday, June 29, 2022

RAMADAS DEVOTION

காருண்ய ஸிந்தோ   ஸ்ரீ ராமா -- நங்கநல்லூர் J.K. SIVAN

பகவான்  பக்தர்களை சோதனை செய்வதற்கு காரணம்  நமது மனசு கூட தங்கம் என்பதால்.   நெருப்பில்  காய்ச்சி ஸ்புடம் போட்டால் தான்  தங்கம்  மாசுகள் நீங்கி பொன்மயமாக  ஒளிரும்.  சூட்டோடு அதை அடித்தால் தான் அதன் கடினம் நீங்கி  வளைக்கிறபடி  வளையும்.

 கோபன்னா  என்கிற  பத்ராசல  ராமதாஸர்  அப்படி ஒரு ராம பக்தர் சிறையில் வாடி பாடிய பாடல்கள்   நம் கண்முன்னே  ராமனைக்  கொண்டு நிறுத்துபவை.  

கோபன்னாவின்  மாமா மத்தன்னா கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானாஷா வின்  மந்திரி.    அவர் செல்வாக்கால் சுல்தானிடம் கோபன்னாவுக்கு உத்யோகம் கிடைத்து, கஜானா விலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராசலம் ராமர் கோவிலை புதுப்பித்தார். விஷயம்  சுல்தான் காதுக்கு எட்டி  தானா ஷா கொதித்தான்.
''கோபன்னா, உடனே  எடுத்த  பணத்தை கஜானாவில் கட்டு. உன் தலையை காப்பாற்றிக்கொள்''.  மத்தன்னா  கெஞ்சி உயிர் தப்பியது ஆனால்  பன்னிரண்டு வருஷம் கோல்கொண்டா சிறையில் ஜெயில் தண்டனை''.

சிறையில்  ''ராமா  உன்னை பார்க்க முடியவில்லையே என்று  கோபன்னா வாடி ராமனையே நினைந்து உருகி பாடினார்.   கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில்  சுல்தானைப் பார்க்க  இருவர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று.
வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி பெற்று உள்ளே  சென்றார்கள்.
''யார் நீங்கள் ? என்ன விஷயம்? என்றான் தானாஷா '
''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்''
''ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். எண்ணி  சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னா வை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் மூட்டையிலிருந்த  தங்க மோஹராக்களை  கலகலவென்று  வந்த இருவரும் கொட்டினார்கள்.
''அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' .
சுல்தானின்  ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். பணத்தை எண்ணினதில்   சுல்தானுக்குச்  சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' - வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக் கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
''ஓஹோ, எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா.   சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான்.

'கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்குச்  சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு  ஒன்றுமே  புரியவில்லை.
'சுல்தான்,  என்ன சொல்கிறீர்கள்?  நானா? செல்வந்தனா? என்னுடைய ஆட்களா?   யார் அவர்கள்? உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? - குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.

'என்ன விளையாட்டு,  வேஷம்,   இது  கோபன்னா?  இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே வந்து  என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட மூட்டை இருந்தது.

''சுல்தான் சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள். எனக்காக  யார் வந்து யார் பணம் கட்டியது?  அவர்கள் யார் ?
''என்ன கோபன்னா, உங்களது பணியாளர்கள் என்றார்கள்,   தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக்   கேட்டேனே.''
கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது.

''சுல்தான் யாரும் எனக்கு அப்படி இல்லையே. என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை!
''கொஞ்சம் இருங்கள் எனக்கு அவர்கள் பெயர் மறந்து விட்டது. இதோ என் சேனாபதி. அவர் அப்போது அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர். சேனாபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான்.
 ''அஹமத், இங்கே வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?''
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் பெயர் 'ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி''

 கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கிய வாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.
தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.
பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.அவர் பாடிய பாடல்களில் ஒன்று :

eteeruga nanu dayachoosedavo inavamsottama rama
na tarama bhava sagara meedanu naLina daLekshana rama ॥
Charanam:
sree raghu nandana seeta ramana srita jana poshaka rama
karunyalaya bhakta varada ninu kannadi kanupu rama ॥

kroora karmamulu neraka jesiti neramulenchaku rama
daridryamu pari haramu cheyave daiva sikha mani rama ॥

vasava nuta rama dasa poshaka vandana mayodhya rama
bhasura vara sadguna mulu kalgina bhadradreeswara rama ॥


''ஹே ராமா, ரவிகுல சோமா, ரகுகுல திலகா, நீ எந்த விதத்திலாவது, எப்படியாவது ஒரு வழியில், என் மீது கருணை காட்டமாட்டாயா உத்தமா? தாமரைக்கண்ணா, உன் தயவில்லாமல், அருளில்லாமல், கருணையில்லாமல் என்னால் இந்த கொடிய சம்சார சாகரத்தை கடக்க முடியுமா? நீ தானே தாரக ராமன்.

ராகவா. ரகுராமா, சீதா மணாளா, ரகுநந்தனா, பக்தர்களை அரவணைத்து காக்கும் பக்தவத்சலா.   கருணை நிரம்பிய ஆலயமே, பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவனே,கோசலைக்கு மகனாக பிறந்து அவளுக்கு வரமளித்தவனே,  ராமா நான் எண்ணற்ற கொடூர குரூர செயல்கள் புரிந்தவன் என்றாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன் அப்பா, என் கொடுமைகளை புறக்கணித்து, என்மீது கருணை கொள்வாய்.நான் நிரம்ப அவஸ்தை பட்டுவிட்டேன் அதற்கெல்லாம் பரிகாரமாக, என் பக்தியை ஏற்று அருள்வாய்.என் தெய்வ சிகாமணியே. ஓ ராமா என் துன்பத்திலிருந்து என்னை விடுவி.இந்திராதி தேவர்கள் வணங்கும் தசரதன் மகன் தாசரதீ எனக்கு அபயம் அளிக்க வேண்டும். பக்த பரிபாலனம் செய்யும் பட்டாபிராமா''

வழக்கம் போல அவரது தாய் மொழியிலான இந்த தெலுங்கு பத்ராசல ராமதாசர் கீர்த்தனையை அற்புதமாக மனமுருகி பாடி இருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. எத்தனையோ பேர் பாடிஇருந்தாலும் இது மனதை தொட்டதால் நானும் பாடிப் பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக்   

 https://youtu.be/MKXTj0qH42g

RAGAVENDRA

  'பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய .......''  J.K. SIVAN


ஸ்ராத்த காரியங்களுக்கு  நடுத்தர வர்க்கம் கஷ்டப்படாமல் சாஸ்த்ரோக்தமாக  செய்து வைக்கும் ஒரு அருமையான கைங்கர்யத்தை நங்கநல்லூர்  ஸ்ரீ ராகவேந்திர ஆலயம் நடத்தி வருவது நமது பாக்யம்.      ராகவேந்திரர் எத்தனையோ பக்தர்களுக்கு அருள் புரிந்துவருவதில் இது மகத்தானது. மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல விஷயத்தை யார் எப்போது வேண்டுமானாலும் நினைத்துப் பார்ப்பது நல்லது தானே.

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரை அறியாத ஹிந்து கிடையாது. ஜீவசமாதியில் இருந்து கொண்டு இன்றும் எண்ணற்ற பக்தர்களை போஷிப்பவர்.

மூல பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதமாக அளிக்கப்படும் மிரிதிகா என்னும் மண் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் அது பூஜையில் வைக்கப்பட்டு வருகிறது. குரு ராகவேந்திரர் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்ந்தன:

ஒரு முறை சோழ ராஜாவின் ஆட்சியில் அரசியல் சிக்கல் உட்பூசல் உண்டாகி மன்னன் மனம் வாடிய நேரம். ராஜ்யம் கலகத்தால், கொள்ளைகளால் ஒரு பக்கம் வாடியது. நாடு முழுதும் பஞ்சம் வேறு வாட்டி நாடே தவித்தது. அரசன் கஜானாவை காலி செய்தும் போதாமல் தன் சொந்த சொத்து, நகைகளையும் விற்று மக்களுக்கு சேவை செய்தான். அப்படியும் பஞ்சம் தீரவில்லை. குரு ராகவேந்திரரை பற்றி கேள்விப்பட்டு அவர் அருளை வேண்டினான். மகான் உடனே தஞ்சை விரைந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி தன் தவ வலிமையால் அமைதி நிலைநாட்டி சோழநாடு மீண்டும் செழித்து மக்கள் சந்தோஷமாக வாழ வகை செய்தார். அரசன் மகிழ்வோடு ஒரு மிக விலையுயர்ந்த மணி மாலையைப் பரிசளித்தான். மகான் அதை வாங்கி தான் அப்போது பூஜை செய்து கொண்டிருந்த யாக (ஹோம) தீயிலிட்டார். அரசன் அவர் தன்னை அவமானம் செய்ததாக நினைத்து வருந்தினான். அவன் மனநிலையை அறிந்த ராகவேந்திரர் யாகத்தீயில் அக்னி அம்சமான பரசுராமரை பிரார்த்தித்தார் . யாகத் தீயிலிருந்து மணிமாலை மீண்டும் வெளி வந்தது. ராஜா  மகானின் காலில் வீழ்ந்து ஆசி வேண்டினான்.

ராகவேந்திரருடைய சீடர்களில் ஒருவர் தன் கல்வி கேள்வி பூர்த்தி ஆனவுடன் ஆச்சர்யன் ஆசியுடன் தன் வீடு திரும்பும் நேரம். அவர் விடைபெறும்போது மகான் துங்கபத்ரை நதிக்கரையில் ஸ்நானத்துக்கு தயாராயிருந்தார். வழக்கமாக சிஷ்யர்கள் குருகுல ஆஸ்ரமம் முடிந்து திரும்புகையில் சிலருக்கு எதாவது பணமுடிப்பும் தரப்படும். இந்த சிஷ்யரோ பரம ஏழை. ஆனால் அந்த நேரம் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு மஹான் என்ன செய்யமுடியும்?
"என்னிடம் உனக்கு தர ஒன்றுமில்லேயே அப்பா? என்றார் குரு.
“சுவாமி, எனக்கு ஒன்றுமே வேண்டாம். எனக்கு கல்வியறிவு புகட்டிய செல்வமே போதும். உங்கள் கையால் சிறிதளவு இந்த ஆற்று மண்ணைத் தந்தால் அதுவே எனக்கு பெரும் செல்வம்." என்றான் சீடன்.
ஒருகணம் கண்மூடி தியானித்து குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக் கொடுத்தார் மகான். அதை பொக்கிஷமாகப் போற்றி துணியில் முடிந்து தலைமேல் வைத்துகொண்டு புறப்பட்டான் சீடன். நாளெல்லாம் நடந்து இரவில் தங்க ஒரு ஊரின் ஒரு மாளிகை வாசலுக்கு வந்தான். உள்ளே சென்று ஒதுங்க வழியில்லை. வெளியே வீட்டுத் திண்ணையில் படுத்தான்.

அன்றிரவு அந்த மாளிகையின் பிரபுவின் மனைவிக்கும் பிரசவ காலம். இதுவரை நான்கு ஐந்து முறை பிரசவித்து உடனே அந்த சிசு மரணமடைந்த வருத்தம். இன்றிரவாவது பிறக்கும் இந்த குழந்தையாவது பிழைக்காதா என்ற ஏக்கம் அவர்களுக்கு.

பிரசவ நேரத்தின் பொது வாசலில் ஒரு கரிய பூதம் தோன்றி உள்ளே நுழைய முயற்சித்தது. அனால் சீடன் வாசலில் தலைக்கு வைத்து படுத்திருந்த சிறிய மணல் மூட்டை ஒரு பெரிய நெருப்பு அரணாக அந்த பூதத்தை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது. அதன் வெப்பத்தில் பூதம் கத்தியது. சீடன் எழுந்து அதை நோக்கினான். குருவை நினைத்து சிறிது மணலை எடுத்து அதன் மீது வீசினான். பெரும் காட்டுத்தீயாக மாறி அந்த மணல் பூதத்தை சுட்டெரித்தது. பெரும் கூச்சலுடன் அது எரிந்து சாம்பலாகியது. சப்தத்தை கேட்டு பிரபு வெளியே ஓடிவந்தார். விவரம் அறிந்தார். ஏன் ஒவ்வொரு முறையும் தன் குழந்தைகள் மடிந்தன என்ற காரணத்தை உணர்ந்தார். அதற்குள் உள்ளேயிருந்து மருத்துவச்சி வெளியே ஓடி வந்து
“அய்யா உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்” என்று சந்தோஷத்தோடு அறிவித்தாள். இதற்கப்புறம் பிரபு தன் தங்கையை அந்த சீடனுக்கு மணம் செய்வித்து அவனும் ஒரு ப்ரபுவானான் என்று கதை நீளும்.  அறியவேண்டிய உண்மை மந்த்ராலய மகானின் கைப்பிடி மண்ணும் பொன்னுக்கு நிகராக ஒருவனை வாழ்வில் உயர்த்தியதுதான் .

ஒரு சமயம் ஒரு பிரபு அவரைச் சீண்டினான். அந்த ஊரில் ஒரு பெரும் பூஜை செய்ய மகானை அழைத்தான். எல்லோர் முன்னிலையிலும் அன்று அவரை அவமதிக்க எண்ணி ஒரு உலர்ந்த கட்டையை அவர் முன் வைத்து,
"நீங்கள் தான் தவ லிமை மிக்கவர் என்று புகழ்கிறார்களே. இதைத் துளிர்க்க செய்வீர்களா” என சவால் விட்டான்.
மகான் கண்மூடி “ மூலராமா!! இது உனக்கு விட்ட சவால் அல்லவோ?. என்ன செய்ய வேண்டு மோ 
செய்” என்று கமண்டல ஜலம் சிறிது அதன் மீது தெளித்தார்.
காய்ந்த அந்த மரக் கட்டை அழகிய பச்சை இலைகளுடன் துளிர்த்ததை நான் எதற்கு உங்க ளுக்கு சொல்லவேண்டும்?

இது போல் எண்ணற்ற அநேக அதிசயங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். ஒன்றை மட்டும் கூறி நிறுத்துகிறேன்.

வெள்ளைகாரன் நம்மை  ஆண்ட காலம். கிழக்கிந்திய கம்பனியில் அப்போது மன்ரோ  கலெக்டர். மந்த்ராலயம் இருந்த இடம், ராகவேந்திரா மடத்துக்கு சொந்தம் என்பதற்கு போதிய ஆவணம் காட்டவில்லை எனவே மந்த்ராலயத்தை கம்பனி ஆட்சிக்குள் கொண்டுவர நிர்பந்தம். ஆனால், அதை நிறைவேற்று முன் மந்த்ராலயத்தை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு முடிவு எடுக்க கலக்டர் மன்ரோ  சென்றார். ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் அந்த மடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்யு முன் அந்த பிருந்தாவனத்துக்குள் சென்று வணக்கம் செலுத்த மன்றோ உள்ளே நுழைந்தார்.

நீண்ட மண் தரையில், சுற்றிலும் இடுப்பளவு மண் சுவர், மேலே தென்னை ஓலை வேய்ந்த கூரை, எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள், அமைதியான அந்த இடத்தில் நுழைந்த மன்ரோ, எதிரே ஒரு அதிக உயரமற்ற சற்றே பருமனான தேகத்தில் ஒரு முதியவரை கண்டார். காவி உடை, கழுத்து நிறைய துளசி மாலை, உடலில் சந்தன கீற்றுக்கள் நெற்றியில் நாமம், ஆழ்ந்த கூரிய ஊடுருவும் அமைதியான கண்கள், வெண்ணிற தாடி, தலையை மூடிய மெல்லிய காவித்துணி. புன்சிரிப்பில் வெண்ணிற வரிசையான பற்கள் உறுதியான உதடுகளுக்கு இடையே தெரிந்தது.
''வாருங்கள்'' என்று பொருள் பட கையால் சைகை செய்து தலை ஆட்டினார்''முதியவர். 
மன்றோ கை கூப்பி வணங்கினார்.  அருகே யாருமில்லை. ஆங்கிலத்தில் மன்ரோ  நிதானமாக பேசினார்.
''நீங்கள் இந்த ஆலயத்தை சேர்ந்தவரா?
''ஆலயமல்ல, மடம் . நான் இங்கு தான் இருக்கிறேன்.'' தெளிவான ஆங்கிலத்தில் அவர் பதிலத்தார்.
''இந்த மட விஷயமாக ஒரு முக்ய செய்தி சொல்லவேண்டும்''.
''என்ன வேண்டும் சொல்லுங்கள்''?
''இது எங்கள் அரசாங்க மனை. இதில் அத்து மீறி எந்த ஆதாரமும் இன்றி உங்கள் மடம் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. இங்கிருந்து உங்களை அப்புறப்படுத்த ஆணை இட எனக்கு அதிகாரம் இருப்பதால், அதை செய்யுமுன் தீர விசாரிக்க நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்கிறார்  மன்ரோ.
''இங்கே எந்த அத்து மீறலுமில்லை. உங்கள் ஆட்சிக்கு முன் இந்த பிரதேசத்தை ஆண்ட அரசன் இந்த இடத்தில் எங்கள் மதத்துக்காக ஒதுக்கி அது அரசாங்க தஸ்தாவே ஜில் பதிவாகி இருக்கிறது. எனவே அதை பரிசீலனை செய்த பிறகு நீங்கள்  முடிவெடுக்கவேண்டும்.''

மன்ரோ  துருவித்துருவி கேட்டார். எந்த அரசன், எப்போது, எதற்காக, எப்படி எந்த இடத்தை மடத்துக்கு மான்யமாக அளித்தான் என்று கேட்டதற்கெல்லாம் அந்த முதியவர் பொறுமையாக, பெயர்கள், காலம் நேர குறிப்புகள் கொடுத்ததை மன்ரோ  குறித்துக் கொண்டார்.

''எனக்கு இது தெரியாது. யாரும் சொல்லவில்லையே. நல்லவேளை உங்களை நேரில் சந்தித்தது நல்லதாக போய் விட்டது'' என்கிறார் மன்ரோ .

அந்த பெரியவர்  மன்ரோவிற்கு அந்த ஆஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார். ''இந்தாருங்கள்'', என தன் கையால் மன்ரோவுக்கு  பிரசாதம் வழங்கினார். 

''இது என்ன? நான் என்ன செய்யவேண்டும்?''
''பொங்கல்பிரசாதம்  என்று இதற்கு பெயர். இதை உண்ணவேண்டும்.'''
''ஒ நான் அப்படியே செய்கிறேன்''

அதை ஜாக்ரதையாக தான் தங்கி இருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று ''இதை இன்று என்னுடைய உணவோடு கலந்து விடுங்கள் '' என்று உத்தரவிட்டு, அதை உண்டார் மன்ரோ .
போகுமுன்பு அவரை வணங்கி

''இவ்வளவு  நேரம் எனக்கு எல்லாவற்றையும் திருப்திகரமாக விளக்கினை  நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்றார் மன்றோ.
''என்னை ராகவேந்திரர்'' என்பார்கள்
''ஒ இந்த பெயர் கேட்டிருக்கிறேன். அது நீங்கள் தானா? ஆனால் நீங்கள் பல வருஷங்களுக்கு முன்பே ........''
''ஆமாம். எனது ஸ்தூல சரீரம் இதோ இந்த ஜீவ சமாதிக்குள் இருக்கிறது..''..
மன்ரோ  அதிசயித்து சிலையானார்.

 அவரைப் பார்த்ததிலிருந்து மன்ரோவுக்கு உள்ளே ஏதோ ஒரு விவரிக்கமுடியாத சந்தோஷம் தோன்றியது. நாகபாசத்தில் கட்டுண்டவர் போல் ஆனார். எந்த நாளில் எந்த ஓலைச்சுவடியில், எந்த அரசாங்க முதிரையுடன் மந்த்ராலயம் மடத்துக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை மகான் தெரிவித்த தெல்லாவற்றையும் விவரங்கள் சேகரித்துக் கொண்டு சென்னபட்னம் வந்து அதிகாரிகளை அனுப்பி சேகரித்து, வாங்கி பரிசீலித்தார்.

தேடிய ஆவணங்கள் சுவாமி சொன்ன இடங்களிலேயே இருந்தன. மந்திராலயம் இருந்த நிலமும் தானமாக அளிக்கப்பட்டது தெரிந்தது.

''மந்த்ராலயம் மடத்திற்கே சொந்தம். எனவே அரசாங்கம் அதில் தலையிட உரிமையில்லை'' என மன்ரோ  ஆணை பிறப்பித்தார்.
பிறகு குருவருளால் மன்ரோ  தென் மாநிலங்களுக்கு கவர்னர் ஆனார். இன்றும் குதிரை மேல் சென்னையில் தீவுத் திடலில் (ISLAND GROUND) கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். சென்னையில் உள்ளோருக்கு தெரியும். சென்னைக்கு புதியவர்கள் மன்ரோ  சிலையை பார்க்கும்போது ராகவேந்திரரை மனதில் வணங்கலாம். சுவாமியை நேரில் பார்த்து பேசி, அவர் கையால் பிரசாதம் வாங்கி உண்ட வெள்ளைக்காரர் அல்லவா? மவுண்ட் ரோடில்  அந்த பக்கம் போகும்போதெல்லாம்  நாம்  மன்றோ சிலையை வணங்கி ராகவேந்திரரை தியானிப்பது வழக்கம்.
மகானும் மன்றோவும் பேசியது எவர் கண்ணிலும் படவில்லை எவர் காதிலும் விழவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை என மன்றோ வெளியிட்ட அரசாங்க அதிகார செய்தி வெளிவந்தது. கீழே அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மகிழவும்.

ராகவேந்திரர்  மந்த்ராலயத்தில்,  மாஞ்சாலி எனும் இடத்தில்  ஜீவசமாதி அடையுமுன் அளித்த அறிவுரைகள்:
1. நேர்மையான முறையில் வாழாவிட்டால்  நேரிய சிந்தனை வராது .
2. ஜன சேவை ஜனார்த்தன சேவை.தரித்ரனுக்கு செய்யும் உதவி    நாராயணனுக்குச் செய்யும் சேவை. மானவ சேவையே மாதவ சேவை.
3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு தூர போய்விடுங்கள். செப்பிடு வித்தையில் ஏமாறாதே.
4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
5. பகவான் மீது பக்தி அவசியம். அது வெறும் மூட பக்தியாக இருக்கக் கூடாது.

SWAMIDESIKAN


 


#சுவாமி_தேசிகன்   - நங்கநல்லூர் J K SIVAN
அடைக்கலப்பத்து  --    பாசுரம்  8

ஒவ்வொரு விடியற்காலையும் தூப்புல் கிராம அக்ராஹாரத்தில் அந்த கணீர்  வெண்கல குரல் கேட்கும். அற்புதமான ஸ்லோகங்களை பக்தி பாவத்தோடு பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி எடுத்து வரும் அந்த முதியவரை கால் அலம்பி நமஸ்கரிக்க காத்திருப்பார்கள்.  ஏற்கனவே  அங்கிருந்த வைணவர்
கள் முடிவெடுத்தாயிற்று. இன்று ஒரு வித்தியாச பிக்ஷை பண்ணவேண்டும்.  அவரை மகிழ்விக்க வேண்டும் என்று. 
ஆகவே அன்று வழக்கத்தை காட்டிலும்   அநேகர் ஆர்வமாக  சுவாமி தேசிகர் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.  தூப்புல் கிராமம்  சிறியது. ஒரு சில  தெருக்கள்மட்டுமே  கொண்ட அக்ரஹாரம்.  அன்று ஏன் அநேகர்  என்ற  காரணம்  அவர்களுக்கு தெரியும். வழக்கம் போலவே  
தனது  உஞ்சவிருத்தி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு  ஸ்வாமிதேசிகர்  அந்த தெருவில் நுழைவதற்கு முன்பு கணீரென்று  காஞ்சி  வரதராஜ பெருமாள் மீதான ஸ்லோகம்   இசையோடு  அந்த அக்ரஹாரத்தில் நுழைத்து விட்டது.   ஒவ்வொரு வீட்டு வாசலிலும்  அக்ஷதையோடு  ஆண்களும் பெண்களுமாக  பிக்ஷை இடுவதற்கு நின்று   கொண்டிருந்தார்கள்.அவர்களது அக்ஷதையில் விசேஷமாக இன்று பொன்னாலான அரிசி  தானியங்களும் மணிகளும்  கலந்திருந்தன.  

இந்த காலத்தில்  நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்  ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.  தானியம்  விற்பனை செய்யும் வியாபாரிகள்  அரிசி பருப்பு   எடை கூட வேண்டும் என்பதற்காக பொருத்தமான  கற்களையும்  பிளாஸ்டிக் பொருள்களையும் வாங்கி  அந்த அரிசி  பருப்பு தானியங்களோடு கலந்து விற்பனை  செய்கிறார்கள் என்று படிக்கிறோம், யூ ட்யூப் வீடியோ பார்க்கிறோம்.   இதற்கென்றே தானியங்களில் கலக்கும் அதே நிற கற்கள் விற்பவர்களிடம் இருக்கும். நல்லவேளை கலப்படத்தில் கலப்படம் இல்லை.  நியாயமாக கலப்பட கல்  விற்பனை செய்து பணம் சம்பாதித்து வீடு கட்டுகிறார்கள்.

அன்று வழக்கத்தை விட   சீக்கிரமாகவே சுவாமி தேசிகனின் உஞ்சவிருத்தி பாத்திரம்  நிரம்பிவி விட்டதால்  அவர்  வீட்டுக்கு திரும்பினார்.

'' அம்மா கனகவல்லி,  பெருமாள் அனுக்ரஹம் ,   இன்று   சீக்கிரமே திரும்பி விட்டேன்.   இந்தா இதை வைத்து  இன்று பிரசாதம் தயார் செய். வரதனுக்கு  ஆராதனை செய்து பிரசாதம் உண்போம்.''  என்கிறார்  தேசிகன்.

கனகவல்லி  பாத்திரைத்தை வாங்கி பார்த்தவள்  அதிசயித்தாள் .'

'' நாதா, இன்று  என்ன  அக்ஷதையில்  பல பளபளவென்று ஏதேதோ   கலந்திருக்கிறதே''  என்றாள்  மனைவி கனகவல்லி.

தேசிகர்  அக்ஷதை பாத்திரத்தை பார்த்தார்.   இது வரை அவர் அதை பார்க்கவில்லையே.  அதில் அரிசி, தானியங்களோடு   பொன்னும் மணியும் கலந்திருந்ததை கண்டு முகம் வாடியது.  ஒரு குச்சியால்  ''இந்த புழு பூச்சிகளை அப்புறப்படுத்து முதலில் '' என்கிறார்.  ஜன்னல் வழியே  பக்தர்கள்  அடியார்கள் கொடுத்த பொன்னும் பொருளும் வெளியே தூக்கி  எறியப்படுகிறது. இதை   கவனித்துக் கொண்டிருந்த பக்தர்கள் கண்களில் நீர் வழிய அவரை வணங்குகிறார்கள்.
இதனால் அன்று அவர்களது உணவுக்கு தேவையான அரிசியும் குறைந்து விட்டது. அரைப்பட்டினி.
இப்படி வாழ்ந்தவர்கள்  தேசிகர் தம்பதிகள்.   1317ல் அவர்களுக்கு  வரதராஜ பெருமாள்  அனுகிரஹத்தால் பிறந்த மகன் வரதாச்சார்யன்.எப்படிப்பட்ட  அப்பா!  அவரைப் பின்பற்றி வளர்ந்தான் வரதாச்சார்யன்.
அவனுக்கு கருட மந்திரம் உபதேசிக்க  திருவஹீந்திரபுரத்தில் கருடனை நோக்கி தவம் இருக்கிறார். கருடன் வேத ஸ்வரூபி அல்லவா?  பல நாள் விரதம். அங்கே  பெருமாள் சந்நிதிக்கு எதிரே ஒரு சிறு குன்றின் மேல் ஏறி கருட த்யானத்தில் ஆழ்கிறார். கருடன்  நேரில் வந்து காட்சி தந்து,  சுவாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய் கிறார்.  

கருடனை வணங்கி நமஸ்கரித்து  பின்னர்  தேசிகன்  கருடன் உபதேசித்த ஹயக்ரீவ மந்த்ர ஜபம் செய்கிறார். தேசிகன்  விருப்பப்படி ''என் நாவை விட்டு நீங்காதே ஹயக்ரீவா''  என்ற வேண்டுகோளை ஏற்ற  ஹயக்ரீவர், தேசிகன்   நுனி நாக்கில் தங்குகிறார்.

''இந்தா  இதை பெற்றுக்கொள். என்னை தினமும் உபாசி '  என்று  ஹயக்ரீவர்  தனது  உருவ  விக்கிரஹத்தை  தேசிகனுக்கு அளிக்கிறார். இன்றும்  அதை தரிசிக்க  நீங்கள் உடனே திருவஹீந்திரபுரம் செல்லவேண்டும்.  தேவநாத சுவாமி ஆலயம் பிரசித்தமானது. பலமுறை சென்று தரிசிக்க எனக்கு பகவான் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்யம். 

சென்னைக்கு சற்றே தூரத்தில் கடலூர்  அருகே  இருக்கும்  திருவஹீந்திரபுரம்.  வாய் சுளுக்கிக்கொள்ளுமே என்று பயந்து திருவந்திபுரம்  என்று சுருங்கிய பெயர்.  ஆழ்வார்கள் கொண்டாடும் இந்த க்ஷேத்ரத்தில்   ஹேமாம்புஜவல்லி சமேத தேவநாத பெருமாள் அருள் பாலிக்கிறார்.  தாயாருக்கு செங்கமலவல்லி,  வைகுண்டநாயகி,  அமிர்த வர்ஷிணி   என்றும் திருநாமங்கள்.  

ஆலய  வாசலில்  எதிரே ஒரு சிறு குன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.    ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய  சோழர்கள் கட்டிய  ஆலயம்.   குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு, பட்டயங்கள் உள்ளன. ஐந்து நிலை  ராஜகோபுரம்.  ஹயக்ரீவர் (குதிரை முக  பெருமாள்) ஆதி சேஷன் (வஹீந்திரன் என்று ஒரு பெயர்) இந்திரனை வழிபட்ட ஸ்தலம் என்பதால்  திருவஹீந்திர புரம்.

தேவநாத பெருமாள் சந்நிதி எதிரே உள்ள   அந்த சிறிய குன்றுக்கு  ஒளஷத கிரி என்று  பெயர். இங்கே கெடிலம் என்ற நதி ஆலயத்தை ஒட்டி,  தெற்கு வடக்காக  ஓடுகிறது.  இது மாதிரி வடக்கு  நோக்கியோடும் நதிகள் உத்தரவாஹினி எனப்படும்.

அடைக்களப்பத்து 8 வைத்து ஸ்லோகம்  அறிவோம்:
திண்மை குறையாமைக்கும், நிறைகைக்கும் தீவினையால்,
உண்மை மறவாமைக்கும், உள மதியில் உகக்கைக்கும்,
தன்மை கழியாமைக்கும், தரிக்கைக்கும், தணிகைக்கும்,
வண்மையுடை அருளாளர், வாசகங்கள் மறவேனே ||8||

எனக்கு உன் மீதுள்ள பற்று, நம்பிக்கை சற்றும் குறையாமல் இருக்க உன்னருள் வேண்டுகிறேன் அத்திகிரிசா. எனக்கு ஞானம் தா. எனது முன் வினை பாபங்கள் உன்னை நான் விடாமல் நினைத்து உன் அருள் பாடுவதை மறக்காமல், தடுக்காமல், செய்யவேண்டும். பரிபூர்ணமாக உன்னை சரணடைகிறேன். எனக்கருளவேண்டும் என்னப்பனே. சதா உன் நினைவில், சம்சார பந்தங்களின் தொடர்பு இன்றி நான் வாழ நீ அருளவேண்டும் கஞ்சி வரதராஜா.

Tuesday, June 28, 2022

SHEERDI BABA

மனிதருள் ஒரு தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஷீர்டி ஸாய்பாபா 

13   பக்கிரி பாபாவானார்.

மஹான்கள்  ஒருவரா இருவரா !!  எண்ணற்றவர்  அவ்வப்போது தோன்றி நம்மை நல்வழிப் படுத்த இறைவன் ஒவ்வொருவராக அனுப்புகிறான். நாம்  அவர்களால்  பயன் பெறாமல் அவஸ்தைப்பட்டால் அது நம் அறியாமை, அறிவீனம் தவறு.  
அப்படி நம்மிடையே தோன்றி

அருள்பாலித்தவர்  ஷீர்டி ஸாய்பாபா .

அவரைப்பற்றி வெகு அற்புதமாக  ஹேமத் பந்த் தபோல்கர்  எழுதிய புத்தகம் தான்  ஸ்ரீ ஸாய் ஸத்  சரித்திரம்   பல மொழிகளில் வெளிவந்துள்ளது.   ஆங்கிலத்தில் என்னிடம் இருந்த சில பிரதிகளை கெட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தேன்  இன்னும் ஐந்தோ பத்தோ இருக்கிறது. நேரில் நங்கநல்லூர் வந்து  என்னிடம் பெறலாம். அனுப்ப இயலாது.  அதில் இருந்து சில விஷயங்கள்.

சந்து பாய் என்பவர்  தனது  மருமாள் கல்யாணத்தை  ஷீர்டி கிராமத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார் . இதற்காக  சந்துபாய் ஷீர்டிக்கு முன்னதாகவே சென்று எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள ஆயத்தமானார். அவருக்கு பழக்கமாகி விட்ட அந்த இளம் பக்கிரியையும் '' என் கூட வா'' என்று அழைத்தார். காளை பூட்டிய வில்வண்டிகள் ஷீர்டிக்கு புறப்பட்டன. ஷீர்டி யில் மஹல்ஸா பதி வாசலில் காத்திருந்து வந்தவர்கள் அனைவரையும் தக்க மரியாதையோடு வரவேற்றார்.

மஹல்சாபதி  கண்ணில் வண்டியிலிருந்து ஒரு இளம் பக்கிரி இறங்குவது தென்பட்டது. விடு விடு வென்று அந்த வண்டி அருகே சென்றார். இரு கைகளை கூப்பி ''ஆயியே ஸாய்'' (வாங்கோ அப்பா) என்று உள்ளன்போடு வரவேற்றார். அதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. யாரும்  அந்த இளம் பக்கிரியை இதுவரை அப்படி கூப்பிட்டது மில்லை. அன்றிலிருந்து அந்த இளம் பக்கிரி  ஸாயிபாபா ஆகிவிட்டார்.    எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம், தக்க கருவி வேண்டாமா?

ஒரு  விசித்திர சம்பவம்  சொல்கிறேன் கேளுங்கள்;
 பாபா ஒரு கிரிமினல் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஒரு பணக்காரன் வீட்டில் கொள்ளையடித்த திருடர் கும்பல் மேல் வழக்கு. திருடர்களை பிடித்த போலீஸ் விசாரணையில் அவர்கள் தாங்கள் திருடவில்லை, அந்த பொருள்களை பக்கிரி தான் கொடுத்தார் என்று வாக்கு மூலம் அளிக்க போலீஸ் சாய் பாபாவை தேடி வந்தது.  பாபா எங்கும் ஓடி ஒளிபவரில்லையே. எளிதில் அவரை வெள்ளைக்கார அரசாங்க போலீஸ் பிடித்தது. விசாரணை நடந்த அழகு இது:

''ஏ பக்கிரி, நீ தான் திருடப்பட்ட பொருள்களை இந்த திருடர்களுக்கு கொடுத்தவனா?'' 
''ஆமாம்.''''
''எங்கிருந்து அந்த திருட்டு பொருள்கள் உனக்கு கிடைத்தது. உண்மையை ச் சொல்''
"இதில் என்ன பொய் . எங்கிருந்து எல்லாம் கிடைக்குமோ அங்கிருந்து கிடைத்தது'
''பூடகமாக பேசாதே. ஒழுங்காக பதில் சொல். பக்கிரி. யார் இதெல்லாம் உன்னிடம் கொடுத்தது விவரம் எல்லாம் சொல் '
"ஓ. எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்''

''போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
''நான் தானே எல்லாம் கொடுப்பவன். என்னுடைய அனுமதி இல்லாமல் யார் எதைப் பெற முடியும்?'' என்று 
மேற்கொண்டு விளக்கினார் பாபா.

போலீஸ் இனி மேல் பேசி பிரயோஜனமில்லை என்று அவர் மேல் திருடன் என்று ஒரு குற்றச் சாட்டு பத்திரிக்கை தயார் செய்தது. வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி விட்டான். நீதிமன்றத்தில் உண்மையை கூறவேண்டும்.

பாபாவை ஷீர்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து போனார்கள். நீதிபதி கேள்விகள் கேட்டான்.
''உன் தந்தை பெயர் என்ன ?''
''பாபா (அப்பா)''
உனக்கு எது மதம்?'
'''கடவுள் மதம் '''
'நீ எங்கிருந்து வந்தவன் ? "
ஆத்மாவிலிருந்து''
"நீ என்னய்யா ஜாதி ?''
"தெய்வீக ஜாதி''
மாஜிஸ்திரேட் விழித்தான்.
''சரி நீ போகலாம்''

இதற்குள் பிடிபட்ட  திருடர்களுக்கு  போலீஸ்  சரியான ''விருந்து'' கொடுத்ததும் திருடர்கள் உண்மையைக் கக்கி விட்டார்கள். எங்கிருந்து எடுத்தார்கள் எப்படி என்ற விவரம் எல்லாம் போலீஸ் அறிந்து கொண்டுவிட்டது. ஸாய் பாபா வந்தவழியே சென்றார்.

ஒரு மார்கழி பஞ்சமி திதி. தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடினார்கள். ஷிர்டியில் நல்ல கும்பல். பல்வந்த் கைஜாக் என்ற ஒரு பணக்கார கல்விமான் மசூதி பக்கம் நடந்து கொண்டிருந் தார். பாபா கையில் ஒரு கம்புடன் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
''சைத்தான், சைத்தான்'' என்று சொல்லி சிலருக்கு அடியும் விழுந்தது. ஏன் பாபா இப்படி பைத்தியம் பிடித்தவன் போல் நடந்துகொள்கிறார்?? என்று அநேகருக்கு வியப்பு.

''எனக்கு பிரசவ வலி . எல்லோரும் தூர போய்விடுங்கள்.'
அப்போதெல்லாம் பாபா ரொம்ப இப்படியெல்லாம் கத்துவார். கொம்பால் சிலரை  விரட்டியும் அடித்தும் இருக்கிறார். கொம்பை வீசி எறிவதும் உண்டு. அவரைக்கண்டு பயந்து ஓடி விடுவார்கள்.
சற்று நேரம் கழித்து ''பல்வந்த் கைஜாக், வாருங்கள் '' என்று பாபா அழைத்ததும் கைஜாக் வந்தார்.மசூதிக்குள் சென்றார்கள். பாபாவோடு உள்ளே சென்ற கைஜாக்  அருகில் இருந்த  பாபாவை தேடுகிறான்.  பாபாவைக்  காணோம். எங்கே போனார். எப்படி மாயமானார்?

கைஜாக்  அங்கே ஒரு அதிசயத்தை பார்க்கிறார்.  தரையில் மூன்று தலை குழந்தை ஒன்று. ''எனக்கு பிரசவ வலி''   என்று பாபா'' சொன்னதன் அர்த்தமா இது? மூன்று தலை இருந்ததால் தத்தாத்ரேயரோ ? அன்று அவர் ஜெயந்தி யாயிற்றே ? பிறந்து விட்டாரோ? சின்ன கை குழந்தை. நிறைய கைகள். தத்தாத்ரேயர்,  பாபா தான்  தத்தாத்ரேயரோ?

பல்வந்த் கைஜாக் வெளியே ஓடி ''எல்லோரும் வாருங்கள் இங்கே'' என்று உரக்க கூவினார். அதிசய குழந்தையை கண்ட எல்லோரும் கண்மூடி தத்தாத்ரேயரை வணங்கினார்கள். அடுத்த 
 கணமே அங்கே பாபா நின்றார்.  அந்த அதிசய குழந்தையைக்  காணோம்.

அந்த நிமிஷம் முதல் பாபாவை எல்லோரும் தத்தாத்ரேயராக வணங்க ஆரம்பித்தனர். 
தூங்கிக்கொண்டிருந்த  ஷீர்டி கிராமம்  விழித்துக் கொண்டது. ஜேஜே என்று எண்ணற்ற பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வரத்  துவங்கினார்கள்.


HAPPINESS

 சந்தோஷம்....   நங்கநல்லூர்  J K  SIVAN 


''ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து கண் திறந்தால்  நான் சந்தோஷமாக இருக்கேன்''என்று சொல்றீங்களே?  நிஜம்மாவா?''என்று என்னை ஒருவர் கேட்டார்.  

''ஆமாம். இதில் எதற்கு பொய் ? நான் சந்தோஷமாக இருக்கும்போது இல்லேன்னு ஏன் சொல்லணும்?'''

'சந்தோஷமா இருக்க என்ன வழி?'''

'இந்த கேள்வியை என்னைக் கேக்காதீங்க. உங்களை யே கேட்டுக்கோங்க''

'என்ன சார்? இடக்கு மடக்கா பேசறீங்க, நான் உங்க  ஹெல்ப் தானே கேக்கறேன்?''

''இடக்கு மடக்கு, வடக்கு தெற்கு எதுவும் இல்லை இதிலே. நீங்க சந்தோஷமாக இருக்கிறது உங்க மனசிலே தான் இருக்கு சார்

'' கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்

'சந்தோஷம் அடையறது என்பது உங்க கிட்ட இல்லாத ஒன்றை எப்போதும்  தேடிக்கொண்டு அலைவதில் இல்லை.  உங்க கிட்டே எப்போதும் இருக்கிறதை
தெரிஞ்சுண்டு  அது இருப்பதற்காக  பகவானுக்கு நன்றி சொல்வதில் தான் இருக்கு நான் கிருஷ்ணனுக்கு அப்படி தான் எப்போவும் நன்றி சொல்றவன்.'

சந்தோஷம்  உங்க சொந்த,பந்தம், நட்பு, சொத்து, 
உத்யோகம், சம்பளம்  அந்தஸ்தில் எல்லாம்  இல்லே. அது உங்களோடு எப்போவும் இருக்கிறது.  அங்கே தான் ஆரம்பிக்கிறது. தொடர்கிறது.

சந்தோஷம்  பணம் சம்பாதிச்சு, சேர்த்து,  பணக்காரன் ஆனா கிடைக்கிறது இல்லே. இலவசமா உங்க கிட்டேயே எப்போதும் இருப்பது.  வெளியிலிருந்து கிடைக்கிற  வஸ்து  இல்லே.  இன்னொருத்தர் மூலம் கிடைக்காது. உன்னுள்ளேயே  இருக்கிறதை தேடவேண்டிய விஷயம். இல்லாததை  நினைக்காமல், தேடாமல், இருக்கறதை
 வைத்துக்கொண்டு  திருப்தி அடை . அது தான் சந்தோஷத்தை உனக்கு கொடுக்கும். 

சந்தோஷம் என்பது மனசு கொடுப்பது. .  நீ உலகத்தை எப்படி பார்க்கிறாய், அனுபவிக்கிறாய் என்று உன் மனம் தான் தீர்மானிக்கிறது. அதை கட்டுக்குள் திருப்திப்படு .

உனக்கு எது தேவை, எது வேண்டாம் என்று தீர்மானிக்
கும்சக்தி உன் மனதுக்கு இருந்தால் சந்தோஷம் உனக்காக காத்திருக்கும். 

சந்தோஷம் வெளிலே பொட்டலமா  வாங்கற வஸ்து  இல்லே. நீயே உண்டாக்கிறது உனக்குள்ளேயே.  

சந்தோஷம் என்பது எல்லாம் நல்லதா  எங்கேயாவது
இருக்கிறதா என்று தேடி  பார்க்கிறது இல்ல.  நல்லதை , இருக்கிற எல்லாத்திலேயும் பார்க்கிறது. இந்த வித்யாசம் உனக்கு தெரியுதா? தெரிஞ்சா சந்தோஷம் உன்கிட்டே இருக்கிறது புரியும். 

வாழக்கை இப்படி தான் இருக்கணும் என்று ஒரு தீர்மானம் பிளான் எதுவும்  பண்ணாமல்,  அது அமைந்துள்ள விதத்தை  ஏற்று   அதைக்   கொண்டாடி மகிழ்ந்தால்  அது தரும் நீ தேடும்  சந்தோஷத்தை.  

கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க.  வாழ்க்கை  ரயில்லே  சந்தோஷம் என்கிறது  ஏதோ நீ போய் சேரப்போற  ஸ்டேஷன் இல்ல,   அது தான்  உன் பயணம். அதை சுகமாக்கிக்க.  அது எல்லா இடத்திலேயும் எப்போதும் நீ அனுபவிப்பது.  எங்கேயோ போய்  சேர்ந்ததும்  கிடைக்கிறது இல்ல.''

MUCHUKUNDHAN

 


எரிந்தவன் கதை.    நங்கநல்லூர்  J K   SIVAN 

நல்லது  செய்பவர்களுக்கு,  நல்லவர்களுக்கு, துன்பமும்,  கஷ்டமும்  சோதனையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.   நமக்கு இறைவனை நினைக்க அவன் அருள் பேர்  துன்பம் அவசியமாகிறது.   

கடவுளே  மனிதனாக வந்து பிறந்த போதும் இந்த சோதனை கிருஷ்ணனுக்கும் பிறந்த கணம் முதல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. மரணம் அவனை ராக்ஷஸர்கள் வழியாக துரத்தியது. அனைத்தையும் எதிர்கொண்டு  அந்த ராக்ஷஸர்களுக்கு அவர்கள் தர விரும்பிய மரணத்தை அவர்களுக்கே  தந்து அழித்தான்.
மதுராபுரி  ராஜாவாக செயல் படும் போது நாலா  பக்கத்திலும் எதிரிகள்  பெருகி, வலுக்கவே, ராஜ்யத்தை மேற்கே துவாரகைக்கு மாற்றினான்.  கிருஷ்ணன் எதிரிகளைக்  கண்டு அஞ்சி, பயந்து மதுரையிலிருந்து ஓடவில்லை. யாதவர்களைக் காப்பாற்றவே இந்த மாற்றம். அங்கே கடற்கரையில் ஒரு நகரம் உருவாகியது. துவாரகை நமக்கு கிடைத்தது. கர்க மஹரிஷி புத்திரன்  மகன் காலயவன் மூலம் யாதவர்களுக்கு ஆபத்து  என்று கண்ணனுக்கு தெரியும். . யாதவர்களால் காலயவனைக் கொல்ல முடியாது என்பது சிவன் கொடுத்த வரம்.  ஆகவே  துவாரகைக்கு குடியேறினார்கள்.

ஜராசந்தன் கண்ணனை   வென்று கொல்ல  முடியாமல்,  சிசுபாலன் மூலம் சால்வனின் நண்பனாகி  அவனோடு  இருந்த   காலயவனை உபயோகித்து  யாதவ குலத்தையும்  கிருஷ்ணனையும் அழிக்க திட்டம் தீட்டினான். 

மதுராவிலிருந்து காலயவன் துவாரகைக்கு  வந்துவிட்டான்.  அவனை எப்படி முடிப்பது என்று கிருஷ்ணன்  ஏற்கனவே தீர்மானித்து காத்திருந்தான். காலயவனை  யாதவ குல  கிருஷ்ணன்  கொல்ல முடியாது.  ஆகவே  காலயவனிடமிருந்து தப்பி ஓடுவது போல் கிருஷ்ணன் காலயவனை பின் தொடரச் செய்து, ஒரு மலைக் குகை அருகே சென்றான்.  அந்த குகையில் பல  யுகங்களாக முசுகுந்தன் தூங்கிக்கொண்டு  இருந்தான். அவன் தூக்கத்தை யாராவது  கெடுத்தால்  கண் விழித்துப் பார்த்த அக்கணமே அவனை  எழுப்பி யவன் மரணமடைவான் என்று இந்திரனிடம் வரம் பெற்றவன் முசுகுந்தன். 

இது கிருஷ்ணனுக்கு தெரியாதா?  முசுகுந்தன் இருந்த குகைக்குள் ஓடி இருட்டில் ஒளிந்து கொண்டு தனது பீதாம்பரத்தை தூங்கிக் கொண்டிருந்த  முசுகுந்தன் மேல் போர்த்திவிட்டான்.  பின்னாலே ஓடிவந்த காலயவன், கிருஷ்ணன் தான் போர்த்திக்கொண்டு படுத்து ஒளிந்து  கொண்டிருக்கிறான் என்று  நினைத்தான்.

''பேடிப்பயலே , கிருஷ்ணா, இங்கேயா வந்து தூங்குபவன் போல் பாசாங்கு பண்ணுகிறாய். உன்னை என் கையால் கொல்லும்  முன்  அச்சாரமாக முதலில் பலமாக  ஒரு உதை வாங்கிக் கொள், இந்தா '' என்று காலால் ஓங்கி தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை உதைத்தான்.

முசுகுந்தன் துவாபர யுகத்தில் கிருஷ்ணனின்  வருகைக்காக காத்திருந்து  அவனை சதுர் புஜனாக தரிசித்துவிட்டு விண்ணுலகம் போக காத்திருந்தவன் அதுவரை எவர் தொந்தரவும் இல்லாமல் இந்த குகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

காலயவன் காலால் உதைத்ததும்  முசுகுந்தன்  உறக்கம் கலைந்தது.  கடுங்கோபமாக,  ''யார் அது என்னை உதைத்து அவமதித்து எழுப்பியது''   என்று காலயவனை உற்றுப் பார்த்தான். இந்திரன் கொடுத்த  வரம் அந்த கணமே பலித்தது.  

ஒரு பெருந் தீ  முசுகுந்தன் கண்ணில் இருந்து புறப்பட்டு காலயவனை விழுங்கி அவன் எரிந்து  அந்த ஸ்தலத்திலேயே  சாம்பலானான்.  

தீயின் ஒளியில்  முசுகுந்தன் அந்த குகையில் இன்னொருவன் இருப்பதைப்  பார்த்தபோது அங்கே  சதுர்புஜ நாரயணன் தரிசனம் அவனுக்கு கிடைத்து மகிழ்ந்த முசுகுந்தன் சந்தோஷ மாக கிருஷ்ணனை வணங்கி விண்ணுலகம் திரும்பினான்.

Monday, June 27, 2022

ORU ARPUDHA GNANI

#ஒரு_அற்புத_ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN

ஹிந்துக்கள்  நம் எல்லோர் வீட்டிலும்  பெண்கள் மஹா லக்ஷ்மிகள் என்று போற்றப்படுபவர்.  . நிறைய  பெண் குழந்தைகளுக்கு  ''லக்ஷ்மி'' ''மஹா லக்ஷ்மி '' என்றும் அஷ்ட லக்ஷ்மிகள் பெயர்களை வைக்கிறோம்.  ஆனால் பேச்சு வழக்கில் அவர்கள் லட்சுமி, லஷ்மி,  லெஷ்மி, லெஸ்மி , லச்சா,  லக்கி, எச்சுமி, எச்சி என்றெல்லாம் குறைந்து போகிறார்கள்.  லக்ஷ்மியை இப்படி இழிவு படுத்தவேண்டாம்.  வாய் நிறையவே கூப்பிடலாமே .

இப்படி ஒரு லக்ஷ்மி அம்மாள் எச்சம்மாளாக திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமி கள் ரமணர் இருவருக்குமே .பக்தையாக சேவை செய்தவள்.  அடிமை. பாவம். அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்த படிப்பற்ற   இளம் விதவை.அனாதை. குரு கடாக்ஷத்தால் வாழ்வில்  துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.  
 படிப்பு வாசனை கிடையாது,  பணமோ சொத்து சுதந்தரமோ இல்லாதவளுக்கு போக்கிடம் எது?  முற்காலத்தில் இப்படிப்பட்ட துர்பாக்கிய சாலிகள் அநேகர் வாழ்ந்தார்கள். சமுதாயத்தின்  கொடுமை.

ஒரு தடவை ஒரு மாத காலம்  எச்சம்மாவுக்கு பித்த வாத ஜுரம். படுக்கையில் போட்டு விட்டது. ஸ்வாமிகள் தினம் தினம்  எந்நேரத்திலும் வரும் அவள் வீட்டுக்கு வருவார். எப்போது  என்று யாருக்கும் தெரியாது. அவரும்  ஏன் ஒரு மாத காலம் அந்த பக்கமே போகவில்லை?  எச்சம்மாள் சுவாமி சுவாமி என்று பிதற்றினாள். அவள் பெண் செல்லம்மாள் ஸ்வாமியை தேடி ஒருநாள் பூத நாராயணன் கோவில் வாசலில் பார்த்து காலில் விழுந்து

''அப்பா ஏன் வீட்டுக்கு வரலே. என் அம்மாவுக்கு ஜுரம் நாரா தோலா ஆயிட்டாளே . உங்களேயே நினைச்சு பிரார்த்தனை பன்னறாளே வாங்கோ'' என்றாள் .

''ஓஹோ நாளைக்கு பார்ப்போம்'' என்ற ஸ்வாமிகள் மறுநாள் காலை 6 மணிக்கே வந்து விட்டார். எச்சம்மாள் படுத்திருந்த கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தார். செல்லம்மாவுக்கும் விஷ ஜுரம் தொற்றிக் கொண்டது..

''எனக்கு தயிர் சாதம் குடு'' என்று கேட்டார். முடியாமல் செல்லம்மா கொண்டு வந்து கொடுத்தாள் . ஒரு கவளம் சாப்பிட்டார்.

 ''இந்தா. இதை  எச்சம்மாவுக்கு கொடு. நீயும் சாப்பிடு''.  அவள் வாய்க்கு அருகே நீட்டினார். செல்லம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அதை எச்சம்மாவுக்கு ஊட்டினாள். தானும் சாப்பிட்டாள். அன்று சாயந்திரம் எச்சம்மா எழுந்து உட்கார்ந்தாள். செல்லம்மாள் மறுநாள் காலை மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தாள்.

எச்சம்மாவுக்கு ரமணன் என்று ஒரு பேரன். ஒருநாள்  கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டு வீக்கம். நடக்க முடியவில்லை. அந்த காலத்தில் எலும்பு முறிவைக் கூட சுளுக்காக பாவித்து மந்திரித்து உருவி குணமாயிற்று. வலி அதிகமாகவே, அழுதான்.  எச்சம்மா  பேரனைத்    தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு நடந்தாள்.   போகும் வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகளை எதிரே பார்த்துவிட்டாள் . ரமணனை இறக்கி விட்டு வணங்கினாள் . சுளுக்கு விஷயம் சொன்னாள் .
''ஓஹோ ஆஸ்பத்திரிக்கு போறியோ . போ போ'' என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ரெண்டு கை மண்ணை வாரி எடுத்து ரமணன் உடம்பு கை கால் பூரா தானே பூசிவிட்டு, துளி மண்ணை அவன் வாயிலும் போட்டு சாப்பிடுடா '' என்றார்.

ரமணனைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், வெள்ளைக் கார டாக்டர் ரமணனை '' இறக்கி நடக்க வை'' என்கிறான். ரமணன் ஜோராக நடக்கிறான். வலி எங்கே போனது?

''கையைப் பிடித்துக் கொண்டு கிட்டே அழைத்து வா''' என்கிறான் டாக்டர். ரமணன் தலையை மாட்டேன் என்று ஆட்டிவிட்டு படு வேகமாக ஆஸ்பத்திரி வாசலை நோக்கி ஓடுகிறான்!!! காலில் தான் ஒன்றுமே ப்ராப்ளம் இல்லையே. எதற்கு வந்தாய்?'' என்று எச்சம்மாவை கோபிக்கிறான் வெள்ளைக்கார டாக்டர்.

இதே போல்  முன்பு ஒரு முறை பித்த ஜுரம் கண்டபோது மூன்று நாள் வாட்டியது. திடீரென்று டு ஸ்வாமிகள் வந்து விளாம்பழம் சக்கரை போட்டு சாப்பிடேன் என்றதும் அவ்வாறே செய்தவள் குணமடைந்தாள் .

என்ன காரணம் சொல்வது இதற்கெல்லாம்?? மந்திரமா, மாயமா? அதிசயமா? தெய்வ சக்தியா? நிச்சயம் பக்தி தந்த தெய்வ சக்தியே. சித்தர்கள் யோக சக்தியே.

ஒருநாள் ஸ்வாமிகள்  எச்சம்மா  வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது.

  'நீ  என்ன பூஜை பண்றே?''
''உங்க படத்தையும்,  ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள் .

''எவ்வளோ நாள் இந்தமாதிரி எல்லாம் பூஜை பண்றது.  தியானத்தில் இருக்க வேண்டாமா?''  என்கிறார் சுவாமி.

''எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''

'இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மாஸனம்  போட்டு அமர்ந்தார்.அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்துமணிக்கு இது நடந்து  மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர்  அசையவே இல்லை.  சமாதி நிலை.    மாலை  நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோபேர் தன்னையே  பார்த்து க்கொண்டிருந்தது எதுவுமே  தெரியாது அவருக்கு.  மெதுவாக கண் திறந்தார்.
''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும்  நீ''
நம்மால் முடியுமா?

SWAMI DESIKAN

 ஸ்வாமி தேசிகன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

அடைக்கலப்பத்து  --    பாசுரம்  7


ஸ்வாமி தேசிகன் எழுதியவற்றை எல்லாம் படிக்க ஆரம்பித்தாள்  100 வருஷம் கொண்ட  ஒரு வாழ்நாள் நமக்கு போதாது. அவர் எப்படித்தான் இவ்வளவு எழுதினாரோ. சமீபத்தில் அவருடைய  யாதவாப்யுதயம் ஸ்லோகங்களை மேலோட்டமாக பார்த்தேன். ஆயிரக்கணக்கான பக்கங்கள்.  24 சர்க்கங்களாக  தெவிட்டாத தேனமுதமாக அமைந்துள்ளது.  இது ஒன்றை எழுதவே  எனக்கு  இன்னும்  நாலைந்து  பிறவி வேண்டும் போல் இருக்கிறது.  ஆகவே மனதளவில் எழுதி மனதளவில் உங்களோடு பகிர்கிறேன்.

தேசிகனின் அப்பா சோமயாஜி அனந்தசூரி, அம்மா  தோத்தராம்பா இருவரும்  ரொம்ப எளிய வைணவ தம்பதிகள்.  காஞ்சிமாநகர் தூப்புல் எனும் ஊரில் வாழ்ந்தவர்கள்.  புத்ரபாக்கியம்  வேண்டி   திவ்ய தேச க்ஷேத்ராடனம் சென்று முடிவில்  திருப்பதிக்கு வந்து தங்கினார்கள்.  புஷ்கரிணி யில் ஸ்னானம் செய்து வராஹரையும்  வெங்கடாசலபதி ஸ்ரீனிவாச பெருமா ளையும் தரிசித்து எங்களுக்கு புத்ர பாக்யம் அருளுங்கள்  என மனமுருகி பிரார்த்தித்தார்கள்.  அன்றிரவே கனவில் ஒரு ஆச்சர்யம்.  

திருப்பதி வெங்கடாசலபதி  தன்னுடைய  கர்பகிரஹத்திலிருந்த கண்டாமணியை எடுத்து     ''இந்தாம்மா தோத்தராம்பா , நீ கேட்ட பிள்ளை ''     என்று அவளிடம் அளிக்கிறார். தோத்த
ராம்பா அதிசயத்தில் வாய் பிளந்து அந்த மணியை விழுங்குகிறாள். காலையில்  கனவை கணவனோடு பகிர்கிறாள். இருவருக்கும் புளகாங்கிதம்.

கனவா அல்ல நினைவா என்று  அன்று காலையிலேயே  நிரூபணம் ஆகிவிட்டதே.    காலையில் வழக்கம்போல் பட்டர் கதவை திறந்து நித்ய பூஜை  ஆராதனையை ஆரம்பிக்கும்போது ''எங்கே மணியைக் காணோம்'. இங்கே தானே  வழக்கம்போல் வைத்தேன் ' என்று தேடுகிறார்.  அங்கே அப்போது திருமலை ஜீயர் வருகிறார்.

''திருவாராதனை ஏன் தாமதம்? என்ன தேடுகிறாய், கவலை உன் முகத்தில் ?''

''சுவாமி,  நேற்று நான் இங்கே தான் ஜாக்கிரதையாக  பெருமாளின்  ஆராதனைக்குரிய  கண்டாமணியை வைத்தேன் எங்கு தேடியும் இப்போது காணவில்லையே. என்ன ஆயிற்று என்று கவலையாக உள்ளது ''

''தேடாதே அது எங்கே என்று எனக்கு தெரியும். அதைச்  சொல்லத்தான் வந்தேன்.   அப்பனே, எனக்கு ஒரு திவ்ய  கனவு நேற்றிரவு.  நீ தேடும் மணியை இந்த ஆலயத்திற்கு வந்திருக்கும் ஒரு பக்த தம்பதிகளுக்கு  ஸ்ரீ  வேங்கடேசன் கொடுத்ததை கனவில் கண்டேன். அந்த பெண்ணும் அதை விழுங்குகிறாள். கோவில் மணி ஒன்றே போதும்.  எப்போது வேங்கடேசனே அதை எடுத்து கொடுத்துவிட்டானோ,   வேறு மணி வைக்க வேண்டாம். ஆலய  கண்டாமணியே போதும்.''  என்கிறார் திருமலை ஜீயர்.  
இன்றுவரை திருப்பதியில் வேங்கடேசன் சந்நிதியில் மணி இல்லை.

மிக்க திருப்தியுடன், பெருமாளுக்கு நன்றி கூறி  அனந்தசூரி தம்பதிகள்  காஞ்சி நகர்  தூப்புல் கிராமம் திரும்புகிறார்கள்.  விரைவில் கோடி சூர்ய பிரகாசத்துடன் ஒரு பிள்ளை பிறக்கிறான். வேங்கட நாதன் என்று நாமகரணம்.  1268 வருஷம் புரட்டாசி திருவோணம் அன்று  திருப்பதி வெங்கடேசனின் மணி அம்சமாக வேங்கடநாதன் பிறந்தான்.  தாய் மாமன்  அப்புள்ளாரிடம் கல்வி பயின்று வேத சாஸ்த்ர நிபுணனாகிறான். அவர் கருட மந்த்ர உபதேசம் செய்கிறார்.
21ம் வயதில் கனகவல்லியுடன் திருமணம். உஞ்சவிருத்தி ஜீவனம். எல்லோருக்கும் ஞான தானம்.  வேங்கட நாதன் எனும் பெயர் மறைந்து   சுவாமி தேசிகன் என்ற புகழ்ப்  பெயர் கூடுகிறது. யார் பொருள் பணம் கொடுத்தாலும் தொடுவதில்லை.  உஞ்சவிருத்தியில்  தான பாத்திரத்தில்  விழும் அரிசியோ தானியமோ தான் அன்றைய உணவுக்கு ஜீவாதாரம்.   தேசிக னிடம் அருள் உபதேசம் பெறுபவர்கள்  ஒரு முடிவெடுத்தார்கள்.  ''நாம் எவ்வளவு  சாஸ்திர  வேத ஞானம் இவரிடம் பெறுகிறோம், அவரோ எதையும் வேண்டாம் என்கிறாரே,  அவர் பாத்திரத்தில் விழும் அரிசியை தானியங்களை மட்டும் தானே பெறுகிறார்.  நாம்  பொன்னை தானியங்களாக்கி  அரிசியோடு கலந்து அதில் நிரப்பிவிடுவோம்''  
அவ்வாறே செய்கிறார்கள்.  

சுவாமி தேசிகன் அதை என்ன செய்தார்  என்று சொல்வதற்கு முன்  அவரது அடைக்கலப்பத்து  7ம் ஸ்லோகம் கொஞ்சம் பார்ப்போம்:

''உமதடிகள் அடைகின்றேன் என்று, ஒரு கால் உரைத்தவரை,
அமையும் இனி என்பவர் போல், அஞ்சல் என கரம் வைத்து,
தமது அனைத்தும் அவர் தமக்கு, வழங்கியும் தாம் மிக விளங்கும்,
அமைவுடைய அருளாளர், அடி இணைய அடைந்தேனே ||7||

''பகவானே, காஞ்சி வரதராஜா , நான் உன்னை வந்தடைந்து விட்டேன். நீயே கதி. உன் தாமரைத் திருவடிகளே சரணம் என  தனது கால்களில் விழுபவர்களுக்கு  அவன் என்ன செயகிறான்?    ''குழந்தாய், அஞ்சாதே, யாமிருக்க  பயமேன் ''என  தனது திருக்கரத்தை  சிரசில் வைத்து ஆறுதல் அளிக்கிறான். கேட்கும் முன்பாகவே  பக்தனை ரக்ஷித்து நன்மை பயக்குகிறான். செல்வம் கொழிக்கிறது.  தேஜஸ் ஒளி வீசுகிறது. அத்திகிரிசா, இது தெரிந்து தானே  நான் உன் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன்.  எனக்காப்பது உன் வேலை இனி .

தொடரும் 

THARPANAM

 


தர்ப்பண சமாச்சாரம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN

பக்தி வேறு கடமை வேறு.  வீட்டில்  பெற்றோரை  பட்டினி போட்டுவிட்டு  வெளியே பெருமைக்கு  பேர் பெறுவதற்கும் செய்யும்  தான தர்மத்தால் எந்த பயனும் இல்லை.   பித்ரு சாபம், பித்ரு தோஷம் ரொம்ப கடுமையானது.  பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டிய மாதத்தில் வேறு பூஜைகளோ, ஹோமமோ செய்யமாட்டார்கள்.  வேறு மங்கள நிகழ்ச்சிகள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த மாதத்தில் வேறு எந்த ஹோமத்திலோ, , ஆலய நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளமாட்டார்கள்.

தர்ப்பணம் செய்யும் நாளில்  தர்ப்பணம் முடியும் வரை நித்ய பூஜை கிடையாது.
அமாவாசை அன்று  பித்ருக்கள் ரொம்ப பசியோடும் தாகத்தோடும்  வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருப்பார்கள், எள்ளும் நீரும் தர்ப்பண மந்திரத்தோடு அளிக்க வேண்டும்.  அமாவாசை அதனால் பித்ரு திதி எனப்படுகிறது.அவர்கள் ஆசியோடு தான் குடும்பம் தழைக்க முடியும். க்ஷேமமாக இருக்க முடியும்

 மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய 4 மாதங்களிலும் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி திதியன்றும்  அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்வது வழக்கம்.

 தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்  ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும்.

''அம்மா  அப்பாவுக்கு ஸ்ராத்தம்  பண்ணாமல் எங்களுக்குச்  செய்யும் பூஜையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று விஷ்ணு சிவன் ரெண்டு பேருமே  சொல்கிறார்கள்.
ஸாஸ்த்ர  பிரகாரம் சமைத்து,  ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் ஸ்ராத்தத்துக்கு பார்வண சிராத்தம் என்று பெயர்.
ஹோமம் பிண்டதானம்   இல்லாமல்  வெறுமே  சமைத்து  பரிமாறும்  ஸ்ராத்தம்  சங்கல்ப ஸ்ராத்தம்.
ஒருத்தருக்கு சமைத்துப்போட  தேவையான பொருட்களை மட்டும் கொடுத்து   அரிசி, வாழைக்காய், காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள்  மட்டும்   தக்ஷணையோடு  தரும் ஸ்ராத்தம் ஆம ஸ்ரார்த்தம்.
ஸ்ராத்தம்  பண்ண  எவ்வளவு செலவாகுமோ அந்த பணத்தை விட நாலு மடங்கு கூட தக்ஷணை யாக தந்து செய்யும்  ஸ்ராத்தம் ஹிரண்ய ஸ்ராத்தம் .
ஸ்ராத்தம்  பண்ணவே  ஒரு வசதியும் இல்லாதவன் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
 பித்ரு  ஸ்ராத்தம்  அன்று  முறையாக ஹோமம் பண்ணி, சாப்பாடு போட்டு  ஸ்ராத்தம்  செய்து பிராமண போஜனம் அளித்து  பித்ருக்களாக ஆவாஹனம் பண்ணி அந்த பிராமணர்களை திருப்தி செய்தால்,  அந்த குடும்பத்தினருக்கு   நீண்ட ஆயுள்,  உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை பித்ருக்கள் அளிக்கிறார்கள் என்று நம்பிக்கை.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் ஸ்ராத்தம்  பண்ணுகிறார் களே, அந்த ஸ்ராத்த உணவு  பித்ருக்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா?  சரியான பித்ருவை அடையவேண்டும் என்பதற்காகத்தான், பித்ருவின்  நாமம்  கோத்ரத்தையும் அந்த  குறிப்பிட்ட திதியில் தர்ப்பணம் செய்து ஸ்ராத்தம் பண்ணுகிறோம்.  சரியான அட்ரஸ் இருப்பதால் ஒருவருக்கு பெறவேண்டியது மற்றவருக்கு தப்பாக போய் சேராது.

சில சம்பிரதாய விதிகள் சொல்கிறேன
வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும்  ஒரே நாளில் வந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பித்ரு ஸ்ரார்த்தம் பண்ணவேண்டும்.

 அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.

 பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்   வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

 தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
 பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர் களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

இன்னும் நிறைய இருக்கிறது.

gopinath

 கோபிநாதன்   -    நங்கநல்லூர்  J K  SIVAN 



சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற பின்  கிருஷ்ணன் மதுரா திரும்பியபோது நகரமே    கோலாகலமாக அவனை வரவேற்றது. கிருஷ்ணனின் தாத்தா  உக்ர சேன மகாராஜாவின் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம்.

''கிருஷ்ணா, உனக்காக தான் நான் காத்திருக்கிறேன். உன் கல்வி முடிந்தது, இனி  நீயே ராஜா' என்று அறிவித்து விட்டார். 

கண்ணன்  சந்தோஷம் அடையவில்லை.  அவன் எண்ணம்  பிரிந்தாவனம் சென்றது. யசோதா  நந்தகோபன், கோபியர்,  ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப  பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின.  தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து  உணர்ச்சி வசப்பட்டபோது  கண்களில் நீர் ஆறாக பெருகியது. 
கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன்  உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன். அடிக்கடி கண்ணனை  சந்திப்பவன். 
 ''கிருஷ்ணா  நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?''

''உத்தவா, இனி நான்  மதுராபுரி  அரசன். பழைய  பிருந்தாவன  கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று  சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி  ஓடி ஆடி விளையாட முடியாதே.''

உத்தவனுக்கு பக்தி உணர்வு போதாது. அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.

''உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு  என்னுடைய  கடமையை எடுத்துச்  சொல். என்னை மறந்து வாழ உபதேசி.  வேதாந்த ஞானத்தை போதி. என்னை மறந்து வாழ வேண்டிய நிலையை எடுத்துரைத்து விட்டு வா''

''கிருஷ்ணா, எப்படி  கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?''

'நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய்.  ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்கமாட்டேன் என்று சொல்.  போ. ''

உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன்.  கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம்  அளித்து  கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ''என்னைத்  தவிர வேறு யாரையும் அவர்கள்  பார்த்ததில்லை. நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும்.  என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் '' என்கிறான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது.  கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை  உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்டபின் தானே  நான் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக  காத்திருக்கிறேன்'' என்கிறாள் யசோதை. 
''நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பி யதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்றுவிட்டான்'' என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.
''யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்ச லுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப் பேற்றான்.  பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி  நகர  மஹா ராஜா அவன். நம்மை கண்ணையா மறந்து போக வேண்டிய நிலைமை .  நாம் என்ன செய்யமுடியும்?''

ஊர்க்  கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ''ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள்  உத்தவனைப்  பார்க்கிறார்கள்.

.''கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டுவந்திருக் கிறேன்'. விரைவில் உங்களை சந்திப்பான்.

''இல்லை  சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும்.  கிருஷ்ணன் கல் நெஞ்சன். எங்களை மறந்துவிட்டான். அவனில்லாமல் நாங்கள் வெறும் நடை பிணங்கள் இங்கே'' என்கிறார்கள். 

வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதை பார்த்தான் உத்தவன்.  சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக  பேசாமல் நின்றாள்.
''உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய்  நந்தகோபன் யசோதை  இருவரும்  அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ  அமர்ந்திருப்பது போலவே எப்போதும்
 உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம்  உன்னை அவளுக்கு அருகிலேயே நீ  இருப்பது போல் ஆறுதளிக்கிறது''என்று சொல். 

உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில்லை என்று உணர்கிறான்.  எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான்.  எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே'' என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த  பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.  
கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை.  அவர்களே  ''எங்களுக்கு கிருஷ்ணன் நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை'' என்று கூறிவிட்டார்களே .

ராதையின் முன் நிற்கிறான் உத்தவன்.
''அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் '' என்கிறான்.  

''உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்'' என்று அனுப்பிவிட்டாள் .

கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.
''என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோ ருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண் டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?'' என கேட்கிறான்.

''கிருஷ்ணா,   எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன்.

''கிருஷ்ணா, நீ  கிருஷ்ணன் இல்லை,''கோபி நாதன்''
என்கிறான் உத்தவன். 

ARUT PUNAL

 அருட்புனல்  -  நங்கநல்லூர் J K  SIVAN 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 

7.    பிராமணி வந்தாள்.

எப்போது யார் யாரோ சந்திக்கவேண்டும் என்பது பகவானின் சங்கல்பம்.  குரு தானாகவே முன் பின் தெரியாத சிஷ்யனை தேடி வருவார். சிஷ்யன் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காத குரு தானாகவே தக்க நேரத்தில் வருவார். அது போல் தான் பகவானும் எப்போது பக்தனுக்கு அருள் புரியவேண்டும் என்று சங்கல்பிப்பவன். நமது விருப்பத்தின் படி நடக்கும் காரியம் இல்லை இது.

காற்று  வீசுகின்றபோது செய்தியும் பரவலாக நாலு இடம் போய் தான் சேரும்.   இதைத்தான் நாம்  ''காற்று வாக்கிலே  காதில் விழுந்த சேதி'' என்கிறோம்.

தக்ஷிணேஸ்வரத்தில் நடப்பது காற்று  வாக்கில் அதே போல் கமார்புகூர் வரை  சென்று ராம கிருஷ்ணரின் தாய் காதில்  சேதியாக விழுந்து அவளைத்  துன்புறுத்தியது.  ''ஐயோ,   என்ன ஆச்சு என் கதாதரனுக்கு  ஏன் இந்த மன நிலை, உடல் நிலை , சித்த ஸ்வாதீனம் ஏன்  இழந்து விட்டான்  என்கிறார்கள்?''என்று அந்த  தாய் தவித்தாள். ஆள் மேல் ஆள் விட்டு  ''உடனே ஊருக்கு வா''    என்று ராமகிருஷ்ணரை வரவழைத்து விட்டாள் .

ஊருக்கு வந்த  பின்னாலும்  ராமகிருஷ்ணருக்கு பழைய நண்பர்களோடு ஓட்டுதல் உறவாடல் இல்லை. தனித்தே  இருந்தார். தெய்வீக  ஜுரமும் அதன் சூடும்  அவரை விடவில்லை.

கமார்புகூர் மயான பூமிக்கு செல்வார்.   அங்கே அமைதியாக பாடம் புகட்டும்  மனித வாழ்வின் அநித்தியம், அதன் எண்ணங்களின் நிராசை, ஏமாற்றங்கள் ஆகியவை மனதை நிரப்பியது. இதை எல்லாம் கீழே அழுத்தி விட்டு  பவதாரிணி அவர் மனதை முழுதுமாக  ஆக்ரமித்தாள் .

அம்மாவின் கைச்  சாப்பாடுராமகிருஷ்ணரின்  உடம்பை கொஞ்சம் சரிப்படுத்தியது. பழையபடி  உடல் உருவில் காட்சியளித்தார். ''இருபத்தி மூன்று வயதாகிவிட்டதே. இந்த பயலுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் சரியாகி   விடுவான். இவனை உலக வாழ்க்கையின் ருசிகளை அனுபவிக்க விட்டு மனைவி என்பவள் அவனை மீட்டு விடுவாள் '' என்று தாய் நினைத்தாள் .

மெதுவாக அவனிடம் பேச்சு கொடுத்தபோது    ''நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்'' என்கிறார் ராமகிருஷ்ணர்.

ஐந்து வயது சாரதாமணி அடுத்த  ஊரான ஜெயராம் பட்டி என்ற ஊரில் கண்டு  பிடிக்கப் பட்டாள் . நல்ல பெண்.  அந்தச்   சிறுவயதிலேயே தெய்வ பக்தி கொண்டவள்.சரியான ஜோடி என்று தீர்மானிக்கப்பட்டு ராமகிருஷ்ணருக்கும் சாரதாமணிக்கும் கல்யாணம் நடந்தது. அந்த காலத்தில் குழந்தை திருமணங்கள் நடந்து பெண் ருதுவானதும் கணவன் வீட்டுக்கு வருவாள்.    மற்ற சடங்குகள் அதற்குப் பிறகு நடந்து கணவன் மனைவியாக இல்லறம் நடப்பது தான் வழக்கம்.  அப்போது சாரதா  சட்டம்  அமுலுக்கு வரவில்லை. கணவன் உடலோடு மனைவியை உயிரோடு எரிக்கும் சதி  எனும்  கொடிய  பழக்கம்  வழக்கத்தில் இருந்தது.  

எங்கள் குடும்பத்தில் சக கமனம்  எனப்படும்  ஸதி எனும்  உடன்கட்டை ஏறுதல் இருந்திருக் கிறது.  சில எள்ளுப்பாட்டிகள்  உயிரோடு வாழும்போதே  கணவனோடு  மறைந்தவர்களா, மறைக்கப்பட்டவர்களா  என்பது தெரியவில்லை. அவர்களை சுமங்கலிப்பெண்டுகள் என்ற சடங்கில் மரியாதையோடு வணங்குகிறோம்.

சாரதாமணியின் வாழ்க்கையில் நடந்த  குழந்தைத்  திருமணம்  '' இல் வாழ்க்கை '' என்பது இல்லாததாக,  ஒரு கனவாகி விட்டது.

ஒன்றரை வருஷகாலம் கமார்புகூரில்  தங்கியபின் ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரம் திரும்பினார். பவதாரிணி ஆலயத்தை மிதித்ததும் பழையபடி அல்ல, இன்னும் கூடுதலாகவே  அவருக்கு சமாதி அனுபவங்கள், அழுகை, அன்னையை நாடல், தேடல், திகுதிகுவென  உள்ளே அக்னி,  தூக்கமின்மை, எல்லாமே அதிகரித்துவிட்டது.

என் கையில் ஒன்றில் ஒரு ரூபா நாணயம், மற்றொன்றில்  ஒரு கைப்பிடி மண்  -- இது ரெண்டுமே பிரயோஜனம் இல்லாதது. இதனால் என் அன்னையை காணமுடியாது என்று கங்கையில் ரெண்டையும் வீசி எறிவார்.  ஒரு ரூபாய் அப்போது மிக பெரிய பணம். இப்போதைய நமது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்று கூட சொல்லிப் பார்க்கலாம். சுத்தமான வெள்ளைக்கார  ராஜா  ராணி தலை போட்ட கனமான வெள்ளி நாணயம்  ஆயிற்றே.

மனதில் சுத்தமாக பெருக்கி மெழுகி துடைத்தது போல் பக்தி ஒன்றே இருந்தது. பார்க்கும் பெண்கள் யாவருமே பவதாரிணியாக எப்படி தோற்றமளிக்கிறார்கள் என்று வியந்தார்?! நமக்கு அந்த பக்குவம்  பல ஜென்மங்களுக்கு அப்புறமும் வருமா என்பது சந்தேகம் தான்.

ராமகிருஷ்ணருக்கு நீண்ட கூந்தல்.    பெண்கள் மாதிரி. அதால் ஒரு தாழ்ந்த குலத்தவன் வீட்டை பெருக்கினார் என்று சரித்திரம் கூறுகிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அவர் மனதில் ஜாதி வித்யாஸம், ஏழை பணக்காரன், ஆண்  பெண்  வேறுபாடு எதுவுமே இல்லை.

மரத்தடியில் சிலை போல் அமர்வார். பறவைகள் தலையில் வந்து உட்காரும். அலகால் ஏதாவது தானியம் கிடைக்கிறதா என்று வயல் போல் நினைத்து தேடும். பாம்புகள் சாவதானமாக உடலில் ஊரும். பகல் இரவு இரண்டும் ஒன்றேயாகி பவதாரிணி நினைப்பு ஒன்றே  கண் முன்னே படமாக ஓடியது.  

ஒரு தாடிக்கார  சந்நியாசி  ராமகிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டார்.  ''ஆகா,   இந்த சந்நியாசி தானே முன்பு  ஒருமுறை கூட,  என்னுடலில் இருந்து வெளிப்பட்டு ஒரு பாபியை சூலத்தால் கொன்றவர்.  அவரே இப்போதும்   உடலில் இருந்து வெளி வந்து ''அடே ,மனதை அவள் மேல் நிலை நிறுத்து'' என்று கட்டளையிடுகிறார்.   அடிக்கடி வருவார், தூர தேசங்களுக்கு சென்று அங்குள்ள சேதிகள்  சொல்வார்.

''தியானத்தில் மூழ்கினால் உன் மனதே உனக்கு குருவாகி வழி நடத்தும் '' என்று பிற்காலத்தில்  ராமகிருஷ்ணர்   சொன்னது இதை   நினைவில்  வைத்து தான்.

1861ல்  ராணி ராஸமணி காலமானாள். மதுர்பாபு முழுப்பொறுப்பேற்றார். ராமகிருஷ்ணருக்கு சகல வசதிகளும் செயது தந்தார். மனதில் நினைத்ததை நடத்தி வைத்தார்.

காலம் சென்றது. கிழக்கு வங்காளத்திலிருந்து தக்ஷிணேஸ்வரத்துக்கு  ஒரு பிராமண சன்யா சினி ஒருநாள் வந்தாள்.  ஐம்பதுக்கு மேல் வயது இருக்கும். உடலை சீராக  . காவி யுடை தரித்த வள்.  ரெண்டு மாற்று துணிகள், சில புத்தகங்கள் ஜோல்னா பையில். இது தான் இந்த உலகில் அவளது மொத்த சொத்து.

அந்த பெண்மணி  தாந்த்ரீக சக்தி மிக்கவள். முகத்தில் ஒரு தனி தெய்வீக களை.  யாராயிருந்  தாலும்  அவளைக் கண்டதும்  வணங்க வைத்தது. வைஷ்ணவ சம்பிரதாய வழிபாட்டுமுறைகள் தெரிந்தவள். ஒருவேளை பவதாரிணி தக்க நேரத்தில் அவளை ராமக்ருஷ்ணரிடம் அனுப்பி னாளோ?  ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் ஒரு மாறுதல்  உண்டாயிற்று அந்த  சன்யாசி னியைக் கண்டதிலிருந்து.  

'தாயே  வாருங்கள், உங்களை பார்த்தாலே  என்  அன்னை  என் எதிரில் வந்தது போல் தோன்றுகிறது என உபசரித்து வணங்கினார்  ராமகிருஷ்ணர்.  என் மனம் சதா சர்வ காலமும் நீ எங்கே இருக்கிறாய் என் முன்னே வா, பேசு,   உன்னோடு என்னை அழைத்துச்  செல் என்று தேவி பவதாரிணியை நாடுகிறது.  

''அம்மா  நீங்களே சொல்லுங்கள் நான் பைத்தியமாகி விட்டேனா?'' ஏன்  என்னை எல்லோரும்  பைத்தியம் என்கிறார்கள்?''

''மகனே, உலகில் எல்லோருமே பைத்தியங்கள் தானப்பா. பணத்தைத்  தேடி, பெண்ணையும் பொன்னையும்  தேடி, வசதிகளைத்  தேடி, பேர் புகழ் தேடி, சொத்து சுதந்திரங்களை தேடி ராவும் பகலும்  பேயாக அலையும் பைத்தியங்கள். நீ கடவுளை நாடும் பைத்தியம். உனக்கு வேதங்கள்  சொல்லும் மஹா பாவம் (BHAVAM ) சித்தியாகிறது. இப்படிப்பட்ட மனோ நிலையில் தான் ராதை  யிருந்தாள் . சைதன்ய மஹா பிரபுவும் இருந்தார் ''  என்றாள்  பிராம்மணி.  பிராம்மணி  என்று தான் அவளை எல்லோரும் அழைத்தார்கள்.

பிராம்மணி ஸ்ரீ ராமகிருஷ்ணரை தனது குழந்தையாக கருதினாள். அவரும் அவளை பவ தாரிணி தாயாக  நேசித்தார்.  அவருடைய நாம சங்கீர்த்தன  கீர்த்தனைகளை ரசித்தாள். ராமகிருஷ்ணரால் உலகம் ஆன்மீக அலைகளை பெற்று உய்யப் போகிறது என்று உணர்ந்தாள்.

KRISHNA STORY


கோபிநாதன்   -    நங்கநல்லூர்  J K  SIVAN 

சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற பின்  கிருஷ்ணன் மதுரா திரும்பியபோது நகரமே    கோலாகலமாக அவனை வரவேற்றது. கிருஷ்ணனின் தாத்தா  உக்ர சேன மகாராஜாவின் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம். ''கிருஷ்ணா, உனக்காக தான் நான் காத்திருக்கிறேன். உன் கல்வி முடிந்தது, இனி  நீயே ராஜா' என்று அறிவித்து விட்டார். 

கண்ணன்  சந்தோஷம் அடையவில்லை.  அவன் எண்ணம்  பிரிந்தாவனம் சென்றது. யசோதா  நந்தகோபன், கோபியர்,  ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப  பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின.  தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து  உணர்ச்சி வசப்பட்டபோது  கண்களில் நீர் ஆறாக பெருகியது. 

கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன்  உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன். அடிக்கடி கண்ணனை  சந்திப்பவன்.  
''கிருஷ்ணா  நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?''.
''உத்தவா, இனி நான்  மதுராபுரி  அரசன். பழைய  பிருந்தாவன  கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று  சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி  ஓடி ஆடி விளையாட முடியாதே.''
உத்தவனுக்கு பக்தி உணர்வு போதாது. அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.

''உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு  என்னுடைய  கடமையை எடுத்துச்  சொல். என்னை மறந்து வாழ உபதேசி.  வேதாந்த ஞானத்தை போதி. என்னை மறந்து வாழ வேண்டிய நிலையை எடுத்துரைத்து விட்டு வா''

''கிருஷ்ணா, எப்படி  கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?''

'நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய்.  ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்கமாட்டேன் என்று சொல்.  போ. ''

உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன்.  கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம்  அளித்து  கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ''என்னைத்  தவிர வேறு யாரையும் அவர்கள்  பார்த்ததில்லை. நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும்.  என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் '' என்கிறான் கிருஷ்ணன்.
++
கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது.  கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை  உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்டபின் தானே  நான் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக  காத்திருக்கிறேன்'' என்கிறாள் யசோதை. 

''நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பியதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்றுவிட்டான்'' என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.

''யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப் பேற்றான்.  பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி  நகர  மஹாராஜா
 அவன். நம்மை கண்ணையா மறந்து போக வேண்டிய நிலைமை .  நாம் என்ன செய்யமுடியும்?''

ஊர்க்  கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ''ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள்  உத்தவனைப்  பார்க்கிறார்கள்.
''கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டுவந்திருக்கிறேன்''.''  விரைவில் உங்களை சந்திப்பான்.
''இல்லை  சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும்.  கிருஷ்ணன் கல் நெஞ்சன். எங்களை மறந்துவிட்டான். அவனில்லாமல் நாங்கள் வெறும் நடை பிணங்கள் இங்கே'' என்கிறார்கள். 

வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.
கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதை பார்த்தான்
உத்தவன்.  சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக  பேசாமல் நின்றாள்.

''உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய்  நந்தகோபன் யசோதை  இருவரும்  அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ  அமர்ந்திருப்பது போலவே எப்போதும் உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம்  உன்னை அவளுக்கு அருகிலேயே நீ  இருப்பது போல் ஆறுதளிக்கிறது''என்று சொல். 

உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில்லை என்று உணர்கிறான்.  எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான்.  எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே'' என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த  பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.  

கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை.  அவர்களே  ''எங்களுக்கு கிருஷ்ணன் நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை'' என்று கூறிவிட்டார்களே .
ராதையின் முன் நிற்கிறான் உத்தவன். ''அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் '' என்கிறான்.  

''உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்'' என்று அனுப்பிவிட்டாள் .

கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.

''என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோ ருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?'' என கேட்கிறான்.

''கிருஷ்ணா,   எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன். கிருஷ்ணா, நீ  கிருஷ்ணன் இல்லை,''கோபி நாதன்'' என்கிறான் உத்தவன். 


 

krishna story

 


விசித்திர  குழந்தை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

உலகத்தில் மற்ற குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன்.  பிறந்த கணம் முதல்  அவன் உயிரைப் பறிக்க எத்தனையோ ராக்ஷஸர்கள் அவனைத் தேடி அலைந்தார்கள்.  அவர்களின் அத்தனை முயற்சிகளையும் வென்று அவர்களையும் கொன்று குழந்தைமுதலாக  கிருஷ்ணன் உயிர் வாழ்ந்து வளர்ந்தான். 


 பத்து பதினோரு வயதுக்குள் பல ராக்ஷஸர்களை எதிர்த்து கொன்று அவன் மதுரா சென்றான். அங்கே அவன் சென்றதே அவன் கொடிய மாமன் அவனைக் கொல்ல  செய்த சதிதான். அதையும் முறியடித்து, மற்ற  ராக்ஷஸர்களையும் கொன்று  எண்ணற்ற அதிசயங்களைப்  புரிந்து எல்லோர் அன்பையும் சம்பாதித்து, ''இனி நீ தான் எங்கள் மதுராபுரி ராஜா'' என்று நகரமே  ஏகோபித்து வேண்டியபோது தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது கிருஷ்ணனால்.

'' இல்லை  நான் கல்விபயிலும் வயதில் கல்வி குருவிடம் சேர்ந்து பயில வழியில்லாமல் போனது.  கல்வி முறையாக குருவிடம் கற்காதவன் அரசனாக தகுதி அற்றவன்'' என்றான்.

தனது தந்தை தாயை விடுவித்தபிறகு இந்த நாட்டின் பழைய ராஜாவையும் சிறையிலிருந்து மீட்டு மீண்டும் ராஜாவாக்கினான் 

ஒவ்வொரு பிள்ளையும் பிரம்மச்சாரி யாக குருவிடம் உபதேசம் பெறவேண்டிய வயதில் கிருஷ்ணனுக்கு மட்டும்  தாமதம் இத்தனை காலம் ஏற்பட்டது. அதை தவிர்க்க தான்  வ்ருஷ்ணிகுல குரு  கர்காச்சார்யர், சாந்தீப முனிவர் இருவரும் உடனே  கிருஷ்ண பலராமர்களுக்கு உபநயனம் செய்வித்தார்.  

அப்போது  தான் கிருஷ்ணன் தனது அத்தை குந்தி தேவி  அவள் பிள்ளைகள்  பாண்டவர்களை  முதலில் சந்தித்தான்.  ஹஸ்தினாபுரத்திலிருந்து  குந்தி தேவி பாண்டவர்கள், விதுரனோடு   மதுராவுக்கு  வந்தாள் .  கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. இருவரும்  நர நாராயணர்கள் அல்லவா?  

அவந்தி  புரத்தில்  இருந்த சாந்தீப முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பலராமன் இருவரும்  வேத சாஸ்த்ர ஞானம் பெற்றார்கள்.  உபநிஷத் கற்றார்கள்.  க்ஷத்திரியர்கள் என்பதால் ஆயுத, யுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.  64  கலைஞானங்களும் சுலபத்தில் கிருஷ்ணன் அறிந்தான்.  பகவானையே சீடனாகப்  பெற்ற  சாந்தீபனி முனிவர் எவ்வளவு புண்யம் பண்ணியவர்.  அவன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்று எளிதில் புரிந்து கொண்டார். 64 நாட்களிலேயே சகல சாஸ்திரங்களும் தனுர்வேதமும் கண்ணன் அறிந்து கொண்டான் என்று ஹரிவம்ச புராணம் சொல்கிறது. மற்ற சிஷ்யர்கள் போல் இல்லாமல்  கிருஷ்ணன் தனது குருவுக்கு  அளித்த காணிக்கை குருதக்ஷிணை  விசித்திரமானது. அவன் காரியம் எல்லாமே  அதிசயம் தானே.

குரு தக்ஷணையாக இறந்து போன சாந்தீபனி ரிஷியின் மகன் உயிரை  பாஞ்சஜனன்
 எனும் ராக்ஷஸனைக்  கொன்று  மீட்டுத் தந்தான். அந்த ராக்ஷஸன் தான் மீனாக  குருவின் மகனை விழுங்கியவன்.   அந்த ராக்ஷஸனையே  சங்காக மாற்றி  கையில் வைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் கையில் உள்ள சங்கம்  பாஞ்சஜன்யம் என்று தெரியுமல்லவா?


Sunday, June 26, 2022

ORU ARPUDHA GNANI

 

#ஒரு_அற்புத_ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்
 
வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹா ஸ்வாமி என்று தான் அவரைப் பற்றி முதல் எழுத தோன்றியது.   அவர் ஒரு ப்ரம்ம ஞானி.  

திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த  சம்பவங்களாக இருந்தபோதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம்  அவர்  விளம்பரப் பிரியர் அல்லர். எவரையும்  அருகிலே சேர்க்காதவர் என்பதால் . அவரையே  விடாமல்  தொடர்ந்து   அவர்  செயல்களை சொற்களை விவரிக்க யாரும் காணோம்.  பக்தர்களுக்கு  விசித்திரமாக  காட்சி அளித்து  அருள் புரிந்தவர். அதை அந்தந்த குடும்பங்கள் தமக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே பராமவள் மறைந்து விடுகிறது.  
 அத்திப் பூத்ததுபோல்  அவரிடமிருந்து  அதிசய  அனுபவங்கள் பெற்ற ஒன்றிரண்டு  பக்தர்கள்  எழுத்தில் வடித்ததில்  அறிந்த , கசிந்த  விஷயங்கள் தான் சேகரித்து  அளிக்கிறேன். அப்படி ஒரு திவ்ய பக்தர்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரிகள். அவர் எழுதிய விஷயங்களே போதும் போதும்.  

இன்று ஒரு சில சம்பவங்கள் அனுபவிப்போம்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே  முடிந்தபோது அவர் அனுமதித்த  போது நிழலாக,  சிஷ்யனாக  சேவை செய்யும் மாணிக்கசாமிக்கு ஒருநாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்:

''இதோ பார் மாணிக்கம், உனக்கு  குரு தெரியணுமா"'' ஆமாம் சாமி'
'அவரையே  உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த  மாணிக்க சாமியிடம் 
 ''அப்படின்னா  நீ    ஈயைப்    போல்  சுத்தமாக இருக்கணும்.   எறும்பு மாதிரி  பலத்தோடு இரு,   நாய்  மாதிரி  அறிவோடு இருக்கணும்,  ரதியைப் போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ  குரு தெரிவார்'' என்ரூ சொல்லி விட்டு  போய்விட்டார்  சேஷத்திரி ஸ்வாமிகள்.

மலர்களின் மதுவும், மலமும்   ஈயைப் பொறுத்தவரை  ஒன்றே.  ஆகவே  இரண்டிலும்  அது  ஆனந்திக்கிறது. எனவே மனதளவில் அது சுத்தமானது.

பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும் பகலும் உழைக்கும் எறும்பு சுறு சுறுப்புக்கு பேர் போனது. தன்னை விட பெரிய  சர்க்கரைக்  கட்டியை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போகும்.   ஆகவே,  அதை  பலமிக்கது என கருதலாம்.

 காதையும், வாலையும் எவனோ குறும்பு  குப்பு சாமி வெட்டிவிட்டான் என்றாலும்  காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய்  தன்னுடைய அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை  அளித்த அந்த குப்புசாமியை நன்றியோடு  நக்கி நெருங்கு கிறது.  அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது  அந்த அளவுக்கு தானே.

எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு  எப்போதும் அவனுக்கு பணிவிடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த  ரதி என்று  கருதப்படுபவள்.

இதைத் தான்  ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார். எவ்வளவு பெரிய விஷயம்.

எனவே ஐம்புலன் வசமாகாமல்  சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே  உணரமாட்டான்.  லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடுபடுத்திக் கொள்வான்.

நமது  கர்மங்கள் எல்லாமே  நமக்கு ஏதாவது ஒரு பயனை அளிப்பவை.  நல்ல கர்மம் நல்ல பயனை தரும்.  கெட்டதைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல.  எந்த  கர்மபயனும்  அதோடு சம்பந்த ப்படுத் தாது.'' என்பார்  ஸ்வாமிகள்.

KRISHNA IN MIND

 எண்ணத்தில் கண்ணன்      நங்கநல்லூர்  J K  SIVAN 


''கண்ணா நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னை உணர நீ என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று வைத்துக்கொண்டால், என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை எவ்வாறு கண்டு ரசிப்பேன்? எனக்கு பார்வையும் நீ, நான் பார்க்கும் காட்சியும் நீ. உன்னுடைய மனித உருவை எனக்கு காட்டுகிறாயா? ''

ராதா இவ்வாறு காண ஏங்கும்போது அவன் மதுராவில் அல்லவா இருந்தான். ஆனாலும் அவள் இவ்வாறு எண்ணி கண்ணை மூடி திறந்தாள். எதிரே கண்ணன் தோன்றினான்.

'கோபாலன் வந்தான் கோவிந்தன் வந்தான்'' என்று எப்போது கோபியர் ஆடிப்  பாடினாலும் ராதை அவன் வந்ததை பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை வழக்கமாக சந்திக்கும் மதுவனத்துக்கு ஒரே ஓட்டம் ஓடினாள். கண்ணன் இருந்த இடம், அவன் இன்னும் அங்கேயே இருப்பான் என்று கால மெல்லாம் யமுனையின் சுடுமணலில், கொட்டும் மழையில் நின்றாள் . வனங்களில் அலைந்து தேடினாள். 
  ''ஹே, பறவைகளே , பசு கன்றுகளே , நீங்கள் என்  கண்ணனைக் கண்டீர்களா''  என  வினவினாள் .

நம்மால் முடியுமா. முயற்சிக்கிறோமா. நிச்சயம் முடியும்.  ' முயற்சி திருவினை'  ஆக்குமே, கண்ணன் தோன்றுவானே!
அவனை நினைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி என்னுள் உணர்கிறேனே. ராதா நெஞ்சில் நிரப்பிக்  கொண்டு இருக்கிராலே , அங்கே இல்லாமல் போவானா?

''ராதா, உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்றான் கிருஷ்ணன்.
''நீ. உன் நினைவு கண்ணா. அது போதும் '
அவள் பாடினாள். பாடிக்கொண்டே இருந்தாள்.  

 ''கிருஷ்ணா உனக்கு நினைவிருக்கிறதா? நீ அந்த காளிங்கன் பாம்பின் மீது நர்த்தனம் ஆடினாயே, நீ ஆடிய ஆட்டத்தில் உன் காலில் நீ அணிந்திருந்த தண்டை கொலுசு ஜிங் ஜிங் என்று ஒலித்ததே அதை இன்னொரு முறை கேட்கவேண்டுமே?''

அடுத்த கணமே ராதையின் காதில் அந்த ''சலங் சலங்'' ஒலி மீண்டும் கணீர் என்று கேட்டது. 
நாம் இப்போது எதற்கெடுத்தாலும் '' தேங்க்ஸ்'' என்கிறோம்.   நாம்  சொல்லும்  ''தேங்க்ஸ் குட் மார்னிங், ஈவினிங்,  நைட்''   இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. உண்மையில் அப்படி வாழ்த்தும்  எண்ணம் மனதில்  இல்லை..அர்த்தமற்ற உணர்வற்ற வார்த்தைகள்.  வாய் மட்டும் மெஷின் மாதிரி சொல்கிறது.  எந்த அர்த்தம் தெரிவிக்க அதை உபயோகிக்கிறோம்?. மனப்பூர்வமாக வரும் வார்த்தைகளா அவை? யோசித்து பாருங்கள். 
ராதையின் தேங்க்ஸ் அவள் பேசாமல் உகுத்த ஆனந்தக் கண்ணீர். தனை மறந்த நிலை.  அப்படித்  தான் அவள்  கண்ணனை அனுபவித்தாள்.. .
ராதாவை உணர அவளுக்கிருந்த கிருஷ்ண ''பசியும் தாகமும்'' நமக்குள் இருக்க வேண்டும். அவள் பக்தியும் பிரேமையும் எவ்வாளவு ஆழம் என்பதை நாமும் மூழ்கினால் தான் புரியும். '

ரொம்ப  நீளமாக எழுதிவிட்டேனோ? ஒரு வினாடி விஷயமல்லவோ இது. 

Saturday, June 25, 2022

TRUE DEVOTION

 


என்ன தான் உன் ப்ரேமையோ!   -  நங்கநல்லூர்   J K SIVAN 

யாருமே  கிருஷ்ண பக்தியில் ராதைக்கு ஈடாக முடியாது.
ராதைக்கு அப்படி  கிருஷ்ணன் மேல் பக்தி. தலைகீழாக நின்று தவம் செய்து என்னதான் ப்ரயத்தனப்  பட்டாலும் எவ்வளவு படித்தாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும் , கேட்டாலும்,  ராதா--கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாதது. புரிந்து கொள்ள புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பாதம் ஹல்வா என்று அதன் படத்தை பல விதத்தில் வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள்  கணக்கில் அதன் ருசியை பற்றி எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. பாதம் ஹல்வா ருசியாக இனித்தது என்று எழுதினால் அதன் ருசி தெரியவா போகிறது?.

இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். நாமே ராதாவாக மாறி கண்ணனை நேசித்தால் ஒருவேளை  அப்போது தான்  தூய பிரேமை அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் அனுபவிக்க வேண்டியது. உனக்காக நானோ எனக்காக நீயோ அனுபவிக்க முடியாது. அளவில்லாமல் எண்ணற்ற இன்ப அனுபவங்கள் பிரவாகமாக ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறாக உருவாகும் போது தான் பக்தி என்பதன் உள்ளர்த்தம் புரியும். அப்போது தான் நெருப்பு என்று சொன்னால் அதன் உஷ்ணம் புரியும்.

கடவுளிடம் எதாவது ஒன்று நமக்கு தேவை என்ற போது மட்டும் வேண்டிக்கொள்கிறோம். அவர் எப்படி இதை நிறைவேற்றுவார்?  இது தான் நம்முடைய  ப்ராப்ளம்.   எங்கு, என்றைக்கு, எவர் மூலம் கொடுப்பாய்?  என்று அவனை வேண்டினால் அந்த எதிர்பார்ப்பு முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. கடவுளை நாம் சந்தேகிப்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

ராதா கண்ணனை முழுமையாக   தன்னுடைய உயிர் மூச்சாக நம்பினாள், தானே கண்ணன் என்று உணர்ந்தவள்.   கண்ணா  நீ வேறோ நான் வேறோ  என்று இணை பிரியாதவள். அவள் எண்ணத்தில் அதனால் தான் கண்ணன் பிரதிபலித்தான் .  சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும்.  ஆண்டாளின்  பாசுரங்களும் அவ்வாறே.

ராதை எப்போதும் தன்னை மற்ற கோபியர்களை விட உயர்ந்தவள், சிறந்தவள், தலைவி, எனக் கருதவில்லை. சொல்லவில்லை.  அப்படி ஒரு நினைப்பு அவளுக்குள் எழவே இல்லை . அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரை அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்றச்  செய்தது.

ஒரு சிறு வேண்டுகோள். எந்த காரணத்தைக் கொண்டும் நம்மிடையே உலவுகின்ற சில படங்களில், நாட்டியங்களில், நாடகங்களில், தொலைக் காட்சிகளில், கதைகளில், கவிதைகளில், சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற ராதாவை ரசித்து விட்டு இது தான் , '' ராதா கிருஷ்ணன் காதலா , பிரேமையா , அப்பட்டமாக இது தானா'?''  மட்டரகமாக  இருக்கிறதே''  என்று எடை போட வேண்டாம். அறியாமையால் அதெல்லாம் வெளிப் படுத்தப்பட்டவை.

உங்கள் மனதில் நீங்கள் போடும் எடை உங்களுடையதாகவே இருக்க வேண்டும். மற்றவரிடம் கடன் வாங்கிய கருத்தாக அமைய வேண்டாம். அதாவது மேலே சொன்ன, படம் கதை, பாட்டு, நாடகம், நாட்டியம் இத்யாதி இத்யாதி...அவரவர் மனநிலையை பிரதிபலிப்பது. உண்மையை வெளிப்படுத்துவது இல்லை.  அது முடியாது. ஏன் என்றால் அவரவர் அதை அனுபவிக்க வேண்டும் அப்போது சொல்லமுடியாது, எழுத முடியாது. அந்த ஆனந்தத்தை  வார்த்தைகளில் படங்களில் கொண்டுவரமுடியாது.. ஸ்வானுபவம்.  இதை தான்  கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்கிறோம்.

விரகத்தை விரசமாக்க கூடாது. புனிதம் கெட்டுவிடும். பெருமை மங்கிவிடும். உயர்ச்சி தாழ்ந்து விடும். ஆங்கிலத்தில் ஒருவர் எழுதின RADHA என்கிற எழுத்தை திருப்பிப்போட்டால் ARADH என்று வருகிறதே ஓஹோ ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனை யின் பிரதிபலிப்போ, தத்துவமோ?  RADHA  தான் ADHAR என்று வருவதால் கிருஷ்ணனுக்கு ராதா தான் ஆதாரமா? ராதா ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ''ஆராதி''த்தவள், 'ஆதார'' மாக கொண்டவள் என்று இப்படி கூட அர்த்தமாகிறதே.  அறிய முடிகிறதே. இப்படி தான் சிந்திக்கவேண்டும். அப்போது தான் உங்கள் மனதில் ராதா க்ரிஷ்ணன் பிரேமை ஒருவாறு அஸ்திவாரம் பெறும். ராதாவை உண்மையாக உணரமுடியும்.

ஒரு குட்டிக்கதை சொல்லாவிட்டால்  என் மண்டை வெடித்து விடும்.
ராதா ஏதோ ஒரு கிராமத்துக்கு நடந்து போனாள் . நேரம் ஆக ஆக சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது ஒரு மர நிழலில் சற்று இளைப்பாறலாமே என்று தோன்ற எங்குமே மரமோ நிழலோ எதுவுமே இல்லை. அவள் விடுவிடுவென்று சுடு மணலில் மேலும் நடந்தாள். 
அவள் ஏன் கண்ணனை அப்போது நினைக்கவில்லை? 
கண்ணனை நினைத்தால் கால் சுடாதே. 
ஏன் அப்படிச் செய்யவில்லை? 
காரணம் என்ன தெரியுமா?
'' மாட்டேன், மாட்டவே மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இந்த  சுடுமணலில் நடக்கும் கஷ்டம் என்னோடு போகட்டும். நிழலில் சென்று அங்கே அவனை நினைக்கிறேன். அவனோடு இளைப் பாருகிறேன்'' -
 இது தான் ராதா. .

THE TWO FRIENDS


இரு நண்பர்கள்    -   நங்கநல்லூர்  J K  SIVAN 

வசுதேவர் யது வம்ச மன்னன்.  போஜ மன்னன் குலத்தில் பெண்ணெடுத்து கல்யாணம் ஆனா அன்றே  ஊர்வலத்தில் மனைவியின் சகோதரன் அசரீரி ஒன்றை கேட்க அதன் விளைவாக  சிறைப்பட்டு  மணவாழ்வு தேவகியோடு தொடங்கியவன்.  பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கம்சன் வாளுக்கு பலி கொடுத்த தகப்பன்.

எட்டாவதாக கடவுளே பிள்ளையாக வந்து பிறந்தும் அவன் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் அவனை இரவோடு இரவாக  கோகுலத்தில் நண்பன் நந்தகோப மஹாராஜா வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவன் விட்டுவிட்டு அவன்   பெண்குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்படியான ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டது  வசுதேவருக்கு. இதுவும் பிள்ளையாக  பிறந்த அந்த தெய்வமே சொல்லியபடி செய்தது தான். 

வசுதேவருக்கும்  சேர்த்து  கோகுலத்தில் நந்தகோப மஹாராஜா தனக்கு பிள்ளை பிறந்ததை விமரிசையாக கொண்டாடினார். 

வேத கோஷங்கள் முழங்கின. பிரதான ஜோசியர்களை கூப்பிட்டு ஜாதகம் கணிக்க சொன்னார்.   எல்லோரும் குளித்து புத்தாடைகள் உடுத்து பலவித உணவு பண்டங்கள் பரிசுகள் அனைவருக்கும்  விநியோகித்து ஆர்வமாக ஜோசியர் என்ன சொல்லப்போகிறார் ஜாதகம் கணித்து என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.

ஏராளமான பிராமணர்கள்  தானம் பெற காத்திருந்தார்கள். ரெண்டு லக்ஷம் பசுக்களை அலங்கரித்து தங்க வெள்ளி நகைகள் பூட்டி  தானம் பண்ணினார்  நந்த மஹாராஜா.
பித்ருக்கள், தேவதைகள் எல்லோருக்கும் திருப்தியாக  மரியாதை பண்ணினார்.
மலை மலையாக  எங்கும்  தானியங்கள், நவமணிகள். எல்லோருக்கும்  வழங்கினார்கள். . 
மேல தாள வாத்தியங்கள் முழங்கின.  கம கமவென  பன்னீர்கலந்த சந்தனம் அள்ளி அள்ளி வாரி தெளித்தார்கள். 

தெருவெல்லாம் அழகிய மாக்கோலம் வண்ண வண்ண கண்கவரும்  ஓவியங்கள். எங்கும் பூக்கள், மாவிலை தோரணங்கள்.  பசுக்கள், கன்றுகள் காளைகள் எல்லாம் குளித்து கொம்புகளில் வண்ணம் பூசிக்கொண்டு கழுத்தில் மாலைகளோடு நடந்தன. கோகுலம்
கிராமம்  பூரா எல்லோர் இல்லத்திலும்  விழா கோலம்.

ஊரே  திரண்டு நந்த மஹாராஜா வீட்டில் தான் காணப்பட்டது.  எல்லோரும்  கண்ணனைப்
பார்த்துவிட்டு  ''செல்வமே  நீ நீடூழி வாழ்ந்து எங்களையெல்லாம் ரக்ஷிக்க வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் வெண்ணையை கட்டி கட்டியாக  வீசி விளையாடி மகிழ்ந்தார்கள்.
எங்கும் சங்கீத வித்துவான்கள்  சுகம் சங்கீத்.  வாத்தியங்கள் விதவிதமாக ஒலித்தன.
நாட்டிய பெண்கள் நர்த்தனமாடினார்கள். 

''நாராயணா மஹா விஷ்ணு, என் குழந்தைக்கு தீர்க்காயுசு கொடுத்து காப்பாற்றப்பா''என்று நந்தகோபன் வேண்டிக்கொண்டபோது மஹாவிஷ்ணு, நாராயணன் தான் தனது மகன் கிருஷ்ணன் என்று  அவருக்கு  தெரியாதே.

வசுதேவன் மனைவி ரோகிணியும் அங்கே இருந்தாள்.  கண்ணன் பிறந்ததை அவளும் கொண்டாடினாள் . அவள் மகன்  பலராமனும் அவளோடு குட்டி தம்பியை பார்த்து மகிழ்ந்தான்.

குழந்தை பிறந்தநாள் கொண்டாடிய பிறகு நந்தகோபன் பேரரசன் மதுரா ராஜ்ய கம்சனுக்கு கப்பம் கட்ட  புறப்பட்டார் . 
ஒரு விஷயம்:
எட்டாவது குழந்தை ஒரு பெண் என்று தெரிந்தும் அவளைக் கொல்ல  முயற்சித்து அவள் தப்பித்து ''முட்டாள் கம்சா உன் யமன் எங்கோ வளர்கிறான். அனாவசியமாக  உன் சகோதரி யை வதைக்காதே'' என்று  எட்டு கரங்களோடு  யோகமாயை காட்சி தந்து  எச்சரித்த போது
கம்சன் ஆடிப்போய்விட்டான். வசுதேவரையும் தேவகியையும்   சிறையிலிருந்து விடுவித்து  அவர்கள் வீட்டுக்கு அனுப்பினான்.
 
நண்பன்  நந்தகோபன்  மதுராவுக்கு  வந்ததை அறிந்து நண்பனை சந்திக்க வசுதேவர் நந்தகோபன் தங்கியிருந்த இடம் சென்றார். நந்தகோபன் அவரைக்  கட்டி அணைத்தார் .  வசுதேவரின் இரு மகன்களும்  (பலராமனும் கிருஷ்ணனும்) நந்தகோபன் வீட்டில் வளர் கிறார்கள். அவர்களை பற்றி அறிய ஆவல். ஆனால் நேரடியாக கிருஷ்ணனைப் பற்றி கேட்க முடியாதே. பரம ரஹஸ்யம் அல்லவா?   ஊரில் எல்லோரும் சுகமா, வீட்டில் எல்லோரும் சுகமா.  நாட்டு மக்கள் நலமா என்று சுற்றி வளைத்து கேட்டார்.  எல்லோரும் சுகம் என்று அறிந்து மகிழ்ந்தார்.

''நண்பா வசுதேவா ,  பாவம்  நீயும்  தேவகியும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் அறிவேன்.ஊரில் எல்லோரும்  பேசுகிறார்களே.  பிறந்த பிள்ளைகள் அனைவரையும்  கொடியவன் கம்சனுக்கு இரையாக கொடுத்த பெற்றோர் களாச்சே . எட்டாவது கடைசி குழந்தை பெண்  என்றும் பார்க்காமல் கொல்ல  முயன்றானாம். அது காளி அம்சமாம். அவன் கையிலிருந்து நழுவி வானில் பறந்ததாம். நமது கர்ம வினைகள் தாம் நம் வாழ்வை இப்படி சிதறடிக்கிறது. இதை எல்லாம் உணர்ந்த ஞானி நீ. அதனால்  வந்த துன்பம் அனைத்தும்  ஏற்றுக்கொண்டு  எங்கள் ஊரிலிருக்கும் அனைவரின் நலம் பற்றி  அன்போடு  ஆர்வமாக  விசாரிக்கிறாய்.. நாங்கள் யாவரும் நலம், என் வீட்டில் என் குழந்தைகள் சந்தோஷமாக வளர்கிறார்கள். ஊரில் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை'' என்கிறார் நந்தகோபர்.

''ரொம்ப  நன்றி நந்தகோபா,  கம்சனை சந்தித்து  கப்பம் கட்டியாகிவிட்டது  என்றால் உடனே  ஊர்  திரும்பு.  எனக்கு  என்னவோ  கோகுலம் நீ உடனே திரும்பவேண்டும் என்று தோன்றுகிறது.  அங்கே  நீ இல்லாத நேரம்  ஏதோ சில அசம்பாவிதங்கள் நேரலாம் என்று மனதில் படுகிறது. 
உடனே போ''

வசுதேவர் வீடு திரும்பினார்.  நந்தகோபனும்  கோகுலம் திரும்பினார். கம்சன் அனுப்பிய பூதகி ஏற்கனவே  வீட்டில் இருப்பது அவருக்கு  வீட்டில் நுழைந்தபோது தான் தெரிந்தது.

 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...