Saturday, June 4, 2022

GEETA GOVINDHAM

 கீத  கோவிந்தம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஜெயதேவர் 

ஜெகந்நாதன் கருணை .

வெகு காலத்துக்கு முன்னே, பகவானை வேண்டி  புத்ர பாக்யம் பெற்றார்கள்.     குழந்தை பிறந்தது மகிழ்ந்த பெற்றோர்  அந்த குழந்தையை  நன்றி காணிக்கையாக தெய்வத்திடம்  ஒப்படைப்பதாக  கோவில்களிலோ, , அதை பராமரிப்பவரிடமோ  வளர்க்க  விட்டுவிடுவதும் வழக்கமாக இருந்தது.

 பழைய  ஒரிஸ்ஸாவில் ஒரு கிராமத்தில்  நாராயண  ஸாஸ்திரிக்கும்  அவர் மனைவி கமலா பாய் என்பவளுக்கும்  பலவருஷங்கள்  குழந்தை இல்லாததால்  பூரி ஜெகந்நாதனை வேண்டினார்கள். 
''குழந்தை இல்லாதது உன் சங்கல்பம். நான் உன்னை குழந்தை பிறக்கவேண்டும் என்று கேட்கமாட்டேன். நீயாக பார்த்து அருள் புரிவாய்'' என்று வேண்டினார்.  கமலா பாய் பெண்ணல்லவா? விடாமல் ஜெகந்நாதனை உன் அருளால் எனக்கு ஒரு குழந்தை பாக்யம் வேண்டும் என்று கெஞ்சினாள். கணவனிடம் தன்னுடைய  பிரார்த்தனையை சொல்லவில்லை. ஜெகந்நாதன் அவள் பிரார்த்தனையை ஏற்றான். ஒருநாள் ஸாஸ்த்ரி  கனவில் '' வெகு சீக்கிரம் உன் மனைவியின் பிரார்த்தனையின் பலனாக ஒரு குழந்தை பிறக்கும்'' என்று சொன்னபோது  சாஸ்திரிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் மனைவி மேல் கோபம்.

'' முட்டாள் பெண்ணே,  என்ன காரியம் பண்ணினாய் கமலா நீ.  கடும் தவம் புரிந்து பகவானை ப்ரார்த்தித்தது  லோக க்ஷேமத்துக்காக.  ஆத்ம ஞானம் பெற.    நீயோ  உன்   சுய நலத்துக்காக பிரார்த்தனை செய்து தவப்பலனை வீணடித்துக்  கொண்டாய்.  உன் செயலால் என் தவத்தையும்  வீணாக்கி விட்டாய்''  என்று  கோபித்து ரெண்டு நாள் பேசாமல் சாப்பிடாமல் கணவனும் மனைவியும்  உபவாசம். 

மூன்றாம் நாள் காலை ஒரு வயோதிக பிராமணர் கதவை தட்டினார். அதிதியை உபசாரம் செய்து வணங்கினார்கள்.   அவர்கள் முகத்தை கவனித்து அந்த அதிதி 
 
''ஏன் ரெண்டு பேர் முகத்திலும் ஏதோ விசனம், சோகம், தெரிகிறது. உண்மையைச் சொல்லுங்கள்'' என்கிறார். நடந்ததை சொன்னார்கள். 

''பகவான் ஜெகந்நாதன் சங்கல்பத்தை மாற்ற நீங்கள் யார்?  அதை ஏற்காமல் நிராகரித்தால் உன் வாழ்க்கையே பயனற்றதாகி விடும் என்று ஸாஸ்திரிக்கு உபதேசித்துவிட்டு சென்றார்.   ஸாஸ்த்ரி தம்பதிகள் பழைய நிலைக்கு திரும்பி பல மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது.

ஒரிஸ்ஸாவில்  குர்தா ஜில்லாவில்  ப்ராச்சி என்ற நதிக்கரையில் கெண்டுளி சாசன்  என்ற கிராமத்தில்  (பூரி ஜகந்நாதர்  ஆலயம் அருகே  சில கி.மீ. தூரத்தில்) மேலே சொன்ன சாஸ்திரி தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஜெயதேவர் என்று பெயரிட்டார்கள். 

கீத கோவிந்தம் அளித்த ஜெயதேவர் பற்றிய சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைய இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...