Sunday, June 5, 2022

VETRI VERKAI

 வெற்றி வேற்கை 2 -  நங்கநல்லூர்   J K  SIVAN 

அதிவீர ராம பாண்டியன்.


 தஞ்சாவூர் ஜில்லா  எல்லையில்  கடலோரத்தில் இருக்கும் ஊர்  மரக்கலங்கள்  மூலம்  கடல் வாணிபம் செய்யும் பல  இஸ்லாமியர்கள்  மரைக்காயர்கள்  என்ற அடையாளத்தோடு வாழும் ஊர்  அதிராம்பட்டினம். அந்த ஊர்  ராஜா அதி வீர  ராம பாண்டியன்.  அவன் பெயரால்  உருவான அதிவீரராம பட்டினம்  சுருங்கி  அதிராம்பட்டினமாகிவிட்டது.  ராஜா  பிரபல எழுத்தாளன். சிந்தனையாளன். பலான  விஷயங்கள்  பற்றியும் ஆராய்ந்து புத்தகம்  எழுதி இருக்கிறான். நாம் அந்த பக்கமே   போகப்போவதில்லை.  

இந்த பெயரில்  ஒருவருக்கு மேல் இருப்பதால்  இந்த ராஜாவை முதலாம் அதிவீர ராம பாண்டியன் (1564-1606) என செப்பேடுகள் சொல்கிறது.  இலக்கியப்  பணியோடு  கோவில் திருப்பணிகளும்  செய்தவன்.   ஸமஸ்க்ரிதம்  அறிந்தவன்.  ஹர்ஷன் எழுதிய  நைஷததத்தை  தமிழில்  இதை பாண்டியன் தான் நைடதம் என  இயற்றினான். எனக்கு  ரொம்ப பிடித்தது  அவனுடைய  வெற்றி வேற்கை,  அற்புதமான ஒரு நூல். இதற்கு இன்னொரு பெயர்  நறுந்தொகை.   

 தென்காசியில்  உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது .  அதிவீர ராம பாண்டியனின் ஒரு அருமையான  நறுந்தொகை  செய்யுள்  உதாரணத்துக்கு கொடுக்கிறேன். யாரையும்  சும்மா  ஆளைப்பார்த்து  எடை போடாதே என்பதை விளக்குகிறது இந்த பாடல்.

''தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

''பனம்பழம்  சாப்பிட  இனிப்பாக சுவையாக இருக்கும். அதன் விதை பெரியது. பெரிய உயரமான மரமாக வளரும். என்ன பிரயோஜனம்?. ஒரு ஆள் கூட  வெயிலுக்கு அதன் கீழே நிழலுக்கு  நிற்க முடியாதே.   ஆல மர விதை அப்படி இல்லை. கடுகு மாதிரி தான் உருவம்.  அடேங்கப்பா, அது முளைத்து மரமானால் ஒரு பெரிய  ராஜா தனது யானை குதிரைப் படையோடு அதன் நிழலில்  இளைப்பாறலாம்.  ஆகவே  ஒருவனின் உருவத்தை  வைத்து இவன் பெரியவன்  சிறியவன் என்று  தப்பு கணக்கு போடுவது தான் தப்பு.
பார்ப்பதற்கு பெரிய  ஆசாமி பெரியவன் இல்லை  சின்ன வாமனன்  விஷயம் இல்லாதவனும் இல்லை 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...