Sunday, June 12, 2022

SIVA VAKYAR


சித்தர்கள்:  நங்கநல்லூர்   J  K  SIVAN
#சிவவாக்கியர்

''நறுக்கு தெறித்தால் போல '' என்ற வார்த்தையை  உபயோகிக்கிறோம்.  எப்போது?  யாராவது  ஒருவர் பளிச்சென்று  தூக்கி எறிந்து பேசினால்,  உள்ளே  மனம் நெஞ்சு சுடும்போது வார்த்தை பிரயோகிக் கும்போது,  அல்லது  வழவழா  கொழகொழா  இல்லாமல்  உண்டு இல்லை என்று சொல்லும்போது.......
ஆனால் அதையெல்லாம் விட   வேறு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது.

அற்புதமான உயர்ந்த  சிறந்த கருத்தை  வைராக்கியத்தை, ஆழ்ந்த பக்தியை,  எளிய வார்த்தையில்  வலிமை மிக்கதாக சுருக்கிச்   சொல்லும்போது அதை நறுக்கு தெறித்தாற் போல்  எனலாம். உதாரணமாக     உபநிஷதங்களை  சுருக்கி ஒரு சில வார்த்தைகளை   ''மஹா வாக்கியம்'' என்கிறோம். ஒரு மஹா வாக்கியம்
எடுத்துக் கொள்வோம். ''தத்வமஸி''  தத்  த்வம் அஸி : அது நீயாக இருக்கிறாய்..  எவ்வளவு யோசிக்க வைக்கும் வலிமை மிக்க வாக்கியம். இதை எத்தனை நூறு புத்தகங்கள், மஹான்கள், விவரித்து பேசுகிறார்கள்.  சாந்தோக்ய உபநிஷத்தில்  6ம்   அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி  ரிஷி,என்ற மகரிஷி தனது  மகன் ஸ்வீதகேதுவுக்கு உபதேசிப்பது இது. இந்த விஷயத்தை ஒரு தனி பதிவாக எழுதுகிறேன்.

சிவவாக்கியர்  என்கிற சித்தர்  அப்படி தான்  பளிச்சென்று சுருக்கமாக  எளிய தெளிவான தமிழில் எழுதுபவர்.  இதோ சில:

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துறக்க வேணுமே!!

அறிவில் சிறந்தவர்களே  பெரியோர்களே,  மெத்த படித்தவர்களே,  எனக்கு தெரிய வில்லை, உங்களை கேட்கிறேன், சொல்கிறீர்களா?  
நமது உடம்பு இருக்கிறதே,  இது  ஆரம்பம் எது என தெரியாமல் உருவான அநாதி காலத்தை சேர்ந்ததா?
அதெப்படி சொல்லலாம்?  இந்த உடலின் உள்ளே இருக்கிறதே  உயிர் என்ற ஒன்று, அதை தான் ஒருவேளை  அநாதி என்று சொல்கிறார்களா?
  யார் சொன்னது அப்படி,?  
இந்த பஞ்ச பூதங்களால் அல்லவோ  உடல் ஐம்புலன்களோடு  உருவாகிறது  அது தானே  அநாதி?  
இந்த வாதம் சரியானதா?  
இதையெல்லாம் சிந்தித்து  எவரெவரோ  ஞானிகள் எழுதிய நூல்கள் எல்லாம்  அனாதியா? 
ஆஞ்ஞா எனும் சக்ரத்தில்  இந்த உடலில் உள்ள சதாசிவம் அனாதியா?
யோக ஞானம் அறிந்து எல்லாவற்றையும்  விளக்க வரும் யோகிகளே!!!  சீக்கிரம் சொல்லுங்கள்?  எது அனாதி ?
எது தொடக்கமும் முடியும் அற்று இருக்கின்றதோ, எது சுய ஒளிபடைத்து விளங்குகின்றதோ, எது உள்ளதும் இல்லாததாகவும் உள்ளதோ அதுவாகிய சிவமே அனாதி. எங்கும் எப்போதும் என்றென்றும் எக்காலத்தும் நித்தியமாய் உள்ளதே அனாதி.  
இப்படித்தானே நான் அறிவேன்!!  என்கிறார்  சிவவாக்கியர் 

இன்னும் சொல்லுவார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...