Tuesday, June 14, 2022

NARAYANEEYAM

 #ஸ்ரீமந்_நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K   SIVAN 


உச்ச கட்ட பக்தி 

நமது ஹிந்து சனாதன தர்ம மதத்தில் சில அற்புத காவியங்கள் புனிதமானவை.  நாராயண பட்டத்ரி இயற்றிய  நாராயணீயம் அவற்றில் ஒன்று.  மற்ற காவியங்களுக்கு  கிடைக்காத  பெருமை, மஹிமை,  நாராயணீயத்துக்கு உண்டு.  எப்படி என்றால்,  இது ஒன்று தான்  முழுக்க முழுக்க  குருவாயூரப்பனும்  நாராயண பட்டத்ரியும்  நேரில் பேசுவது போல் இயற்றப்பட்டது.  கற்பனை அல்ல, உண்மையும் அது தான். 

''குருவாயூரப்பா, நான்  உன்னை  உன் மத்ஸ்யாவதாரம் முதல் வர்ணித்து எழுதவேண்டும் என்று ஜோசியன் மூலம் சொன்னாயா?'
'''ஆமாம் . பட்டாத்ரி, அதற்கென்ன இப்போது?\
''''நான்  உன்னைப் பற்றி எழுதி பாட  அதைக்  கேட்க அவ்வளவு ஆவலா உனக்கு?'
'''ம்ம்.  சரி சரி.  ஆரம்பி'''
'நாராயணா, உன்னைப்பற்றி நான் எழுதப் போவதன்  பெயர்  நாராயணீயம்.  அதை நான் எழுத சில கண்டிஷன் உண்டு .  அது தெரியுமா உனக்கு? 
நீ   அதற்கு ஒப்புக்கொண்டு  அதை பூர்த்தி செய்தால்  தான் நான் பாடுவேன்?'''
முடியாது என்றால் என்ன செய்வாய் பட்டத்ரி?''
''இதோ மெதுவாக எழுந்து   என் ஊரைப் பார்க்க 
போய்விடுவேன்''
''சரி சரி உன் கண்டிஷன் என்ன அதைச் சொல் முதலில்''  என்றான் கிருஷ்ணன்.

இப்படி வேறே எங்காவது நிகழ்ந்திருக்கிறதா?   

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ராஜா குலசேகர ஆழ்வார்  திருப்பதி வெங்கடேச பெருமாளோடு பேசி இருக்கிறார்.  ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே  ரங்கநாதருடன் பேசுவார்கள். ராமானுஜர்  திருக்கச்சி நம்பி  ஆகியோர்  காஞ்சிபுரம் வரதராஜ பெருமானோடு பேசி இருக்கி
றார்கள்.
அப்பய்ய தீக்ஷிதர்  சிதம்பரம்  நடராஜனோடு பேசியவர்
.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர்  மதுரை மீனாக்ஷியோடு பேசியவர்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்  காளி  பவதாரிணியோடு
 பேசியவர்...  
சுந்தரர்  சிவனோடு பேசியவர். தோழர்.
முருகப் பெருமானும்  கச்சியப்ப சிவாச்சார்யாரும்
 பேசியவர்கள்.
திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும்  பேசியவர்கள்
ஒளவைப் பாட்டியோடு  முருகன் பிள்ளையார்இருவ ருமே பேசி இருக்கிறார்கள். 
இன்னும் சிலரும் உண்டு. வேறெந்த மதத்திலும் இதெல்லாம் பார்க்க படிக்க வழியில்லை.

நாராயண பட்டத்ரி  ''கிருஷ்ணா, உன்  சிறுவயது உருவத்தை, பிருந்தாவன ரூபத்தை, காளிங்க நர்த்த னத்தை   ரீவைண்ட் பண்ணி திரும்ப  காட்டு, அதைப்  பார்க்காமல் நான் எழுதுவது எப்படி முடியும்?'' என்று கேட்க  அதெல்லாம்  குருவாயூரப்பன் செய்து காட்டி இருக்கிறான்.

நூறு தசகங்களும் நூறு நாளில்  அப்படி கேட்டு கேட்டு எழுதியது தான்.

''இதெல்லாம் நீ கேட்டால்  மட்டும்  போதாது. என் வாத நோய் குணமாகவேண்டும்'

''முதலில் நீ பாடி முடி. பலன் அப்பறம் தானே கிடைக்கும்''
என்று சமாளித்தான் குருவாயூரப்பன்... 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...