Saturday, June 4, 2022

GAYATHRI MANTHRAM

 

காயத்ரி மந்த்ரம்  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

உலகத்திலேயே  சிறந்த  கடவுள் வாழ்த்து   காயத்ரி மந்த்ரம்.  எனக்கு முன்னாலேயே  இதை  ஒரு
அமெரிக்க  விஞ்ஞானி  முந்திரிக்கொட்டை மாதிரி  சொல்லிவிட்டாரே.(டாக்டர்  ஹோவார்டு ச்டீங்கேரில்) அவர் இதைச் சும்மா  சொல்லவில்லை.   நிறைய மதங்களின்  முக்ய  வேதங்களை  அலசி அவற்றின் சக்தியை  விஞ்ஞான  பூர்வமாக  வடிகட்டின பிறகு  தான்  முடிவாக  சொன்னவர். அப்படி என்ன அவர்   கண்டுபிடித்தார்?
1. காயத்ரி மந்த்ரத்தை  உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு  வினாடியில்  வெளிவருகிறது.
2. காயத்ரி மந்த்ரத்திற்குத்தான் மற்ற மந்த்ரங்களை விட  உலகத்திலேயே  சக்தி  அதிகம்..
3. காயத்ரி மந்த்ரத்தின்   சப்த அலைகள் ஆன்ம சக்தியை  அதிகப்படுத்தக் கூடியவை.
4.ஜெர்மனியில்  ஹாம்பர்க் சர்வகலாசாலை  நிபுணர்கள் இரவும் பகலும் இதை  ஆராய்ச்சி செய்து  உயிர் வாழ உடலுக்கும்  மனதுக்கும்  அது  தெம்பு  கொடுப்பதை  அறிந்தது.
5. தென் அமெரிக்காவில் சுரினாம்  என்கிற  நாட்டில்  தினமும்  மாலை   ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம்   பல வருஷங்களாக ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும்  இந்த  நல்ல  பழக்கம் வழக்கத்துக்கு  வந்ததாம்.   காயத்ரி மந்த்ரம் தோன்றிய இந்த தேசத்தில்  அதைப்பற்றி  ஏன் கவலைப்படுவதில்லை?


காயத்ரி மந்த்ரம்  2500  லிருந்து  3500 வருஷங்களுக்கு முன்னால்  ஸ0ம்ஸ்க்ரிதத்தில் ரிக்வேதத்தில் தோன்றியது. அதற்கும் முன்னாலேயே  கூட  எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக  காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

துரதிர்ஷ்ட வசமாக  பல  நூற்றாண்டுகளாக    வெள்ளைக்காரர்களுக்கு தெரிந்த  அளவுக்கு  ஹிந்துக்க ளாகிய நம்மில்  அநேகருக்கு  காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்களும்  அதை மூடி மறைத்து  தமக்குள் ரகசியமாகவே வைத்திருந்தவர்கள்.  பெண்களுக்கும் காயத்ரி மந்திரத்துக்கு  சம்பந்தமில்லை,பிராமண ரல்லாதவர்க்கும்  இது  தேவையில்லை என்று   இன்றளவும் சொல்பவர்கள் இருக்கிறார்களே. எப்படி எல்லோருக்கும் பரவும்?  காயத்ரி தேவி  மனது  வைத்தாளோ   என்னவோ  இன்று  உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின்  மகிமை  பரவி ஒலிக்கிறது.  தாராளமாக  எல்லோரும் சொல்லலாம். ராகம் போட்டு பாடாமல் அதற்குரிய ஸ்வரத்தோடு  உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். கோபுவைப் போய்  பாலு பாலு என்று கத்தினால் திரும்பிக்கூட பார்க்கமாட்டானே.  காயத்ரி அருள் பெற  சரியாக மந்த்ர உச்சாடனம் வேதம் சொல்லிய   சந்தஸில்  மீட்டரில்  சொல்லவேண்டும்.  பாடக்கூடாது. 
காயத்ரி மந்த்ர அர்த்தம் அற்புதமானது. சக்தி வாய்ந்தது.   ஓம்  எனும்  ப்ரணவ சப்தம்  எல்லா  மந்த்ரங்களுக்கும்  மூலாதாரம்.     பரம் பொருளை  நாட இந்த மந்தரத்தை எல்லோரும் சொல்லவேண்டும். 

முதலில் நாம்  சொல்ல ஆரம்பிப்போமா?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...