Thursday, April 30, 2020

POET KALAMEGAM




              காளமேகத்தோடு  கொஞ்ச நேரம்.   J.K. SIVAN


நான்  தமிழ் பண்டிதன் அல்ல, ஆங்கில மேதாவி அல்ல, சமஸ்க்ரித வித்துவான் அல்ல.. ஒரு சாதாரண ரசிகன். எனக்கு பிடித்ததை நான்  தேடிப்பிடித்ததை,  ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்பவன். அப்படி பகிரும்போது உங்களோடு நான் மீண்டும் மகிழ்கிறேன். என்னிடம் பெரிதாக எதிர்பார்ப்பு  இருக்க வேண்டாம்.

நிறைய நண்பர்களுக்கு காளமேகத்தைப் பிடித்திருக்கிறது , தமிழ் பாடல்கள் பிரிக்கிறது என்று அறிய ரொம்ப சந்தோஷம். எனக்கும்  காளமேகத்தை ப்பிடிக்கும். என்ன அறிவு, என்ன ஞானம், என்ன எழுத்து வன்மை, வண்மை !

அவரது நகைச்சுவையை இன்று கொஞ்சம் பரிமாறுகிறேன்.

இருபொருள் விளங்க சொல்வது சிலேடை எனப்படும். படிக்கும் போது மேலெழுந்தவாரியாக ஒன்று பொருள் படும். உன்னிப்பார்த்தால் மற்றோர் அருமையான உள் அர்த்தம் புலப்படும்.

இதைத் தமிழறியா அன்பருகளுக்குச் சொல்ல வாய்ப்பில்லை. அவர்களால் ரசிக்கமுடியாதே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.ஷேஸ்பியரை தெலுங்கிலோ தமிழிலோ உருதுவிலோ  ரசிக்க முடியுமா. பாரதியை பஞ்சாபியில் நேபாளியில் அனுபவிக்கமுடியுமா. அந்தந்த மொழியில் உள்ள களஞ்சியங்களை அவரவர்கள் தான் ரசிக்க முடியும்.  மேலெழுந்தவாரியாக  அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு   ஜூக் னு மாதிரி கூட   செய்ய முடியும்.   ''அங்கே நீ  அப்போ கார்லே  வந்தியா சொல்லு  மழையிலே அப்பாவோட?''  என்று படிக்கவோ கேட்கவோ எப்படி இருக்கும்?

15ம் நூற்றாண்டு கவிஞர், காளமேகம். ஆசுகவி, திட்டினால் பலிக்கும். சபித்தால் அவ்வளவு தான். காளமேகம் என்பதே பட்டப்பெயர். நிஜப்பெயர் வரதராஜன்.  காளமேகம் என்றால்  சூழ் கொண்ட  கருப்பு மேகங்கள் எப்படி மழையைக் கொட்டித் தீர்க்குமா அது போல் கவிதைகள் சரமாரியாக கொட்டும் ஞானஸ்தர்.

குறை கூறுவது போல் நிறை கூறுவது ''நிந்தா ஸ்துதி'' என்று வடமொழியில் உண்டு. புகழ்வது போல் இகழ்வது வஞ்சப்புகழ்ச்சி என்று ஒன்று கூட உண்டு. அது இதற்கு எதிர்மறையானது.

காளமேகம் ஒரு தடவை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கருட சேவை உத்சவத்தில் கூட்டத்தில் நிற்கிறார். பக்தர்கள் வெள்ளமாக  தரிசிக்கிறார்கள்.  தெருவில் ஊர்வலம்.  கருடன் மீது பெருமாள் ஆரோகணித்து ஆனந்தமாக  ஆடிக்கொண்டே  நகர்கிறார்.  காளமேகம் பார்த்துக்கொண்டு சும்மா  இருப்பவரா? 

உடனே ஒரு பாடல் பிறக்கிறது.   '' ஆஹா   இந்த  வரதராஜ  பெருமாள் ரொம்ப ரொம்ப   நல்லவர் தான் . இன்றைய நாளும் நல்ல நாள் தான்.  திருநாள்  தான். அதனால் தான்  ஸ்வாமியை அலங்கரித்து ஊர்வலம் வருகிறார்கள்..  ஆனால் இந்த பெருமாள் சும்மாயிருக்காமல் ஏதோ சேட்டை பண்ணி இருப்பதால் தான் ....., அய்யய்யோ ஓடி வாருங்கள், இதைப் பாருங்கள் ஒரு பெரிய பருந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே!! இத்தனை பேர் இருக்கிறீர்களே வந்து அவரை காப்பாற்றவேண்டாமா?  கருட வாஹனம் பெரிதாக அலங்கரித்து அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து நகர்வதை தான் சொல்கிறார்.  யாருக்காவது கருடன் மேல் வரதராஜ பெருமாளை பார்க்கும்போது கருடன் கடத்திப் போவதை போல்  நினைக்க தோன்றுமா? அது தான் காளமேகம்.  என்ன அழகு தமிழ் பாருங்கள்.

''பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!

இன்னொன்று சொல்லி நிறுத்துகிறேன்.   அந்தக்காலத்தில் ஹோட்டல் கிடையாது. யார் வீட்டிலாவது அதிதி விருந்தாளியாக  சாப்பிட வேண்டும். இல்லை யென்றால்  இலவச சாத்திரங்கள் ஊர்களில் இருக்கும்.  யாத்ரீகள் தங்க  பசியாற  இந்த சத்திரங்களில்  உணவு தருவார்கள். 

காளமேகம்  நல்ல பசி, வயிற்றைக் கிள்ள நாகப்பட்டினம்  வந்து சேர்ந்தார். எல்லாம் நடை தான் 


வழியில் யாரிடமோ கேட்டு  ஒரு   தர்ம அன்ன  சத்திரம் இருப்பதை தெரிந்துகொண்டு வந்தார்.  அந்தக் கால ராஜாக்கள் தர்மவான்கள் ஏற்பாடு. இந்த மாதிரி சத்திரங்கள்  எல்லாம். அந்த சத்திரம் நடத்திய வருண குல காத்தான் என்பவன்  கொஞ்சம்  தமிழ் ஆர்வம் கொண்டவன்.   வந்த யாத்திரிகர்  காளமேகப்புலவர்  என்று   அறிந்து அவரிடம் பேசுகிறான்.  ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. அவரது கவிதையும் புலமையும் பிரசித்தமாயிற்றே. மதிய உணவு  தீர தீர  மேலே மேலே சாதம் வடித்து வருபவர்களுக்கு போடுவார்கள். முன்பாகவே வடித்து வைத்து வீணாக்க மாட்டார்கள். ஆகவே  காளமேகம் மற்றும் யாரோ சிலர்   வந்ததால் சாதம் தயாராகிறது.  அது முடிகிறவரை பேச்சு கொடுக்கிறான்.

''ஐயா  பு லவரே ஒரு கவிதை சொல்லுமே நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்''   என்றான் காத்தான். .

பசியிலும்   காளமேகத்துக்கு  நகைச்சுவை.  மணி மூன்று நாலு  ஆகுமோ? இன்னும் எத்தனைமணி காத்திருக்கணுமோ இலையில் சோறு விழ? அவர்கள் மெதுவாக வேலை செய்வதைப்பார்த்து ஒரு ஹாஸ்ய கவிதை. காத்தானைப்பார்த்து பசியோடு சிரித்தார். தொண்டையைக் கனைத்தார். புறப்பட்டது ஒரு கவிதை.

''அடே காத்தான், உன் சத்திரத்தில் பகல் போஜனத்துக்கு, சாயந்திரம் தான் அரிசியே வரும். அதைக் களைந்து நீ உலையில் போட்டு அது வேக, இரவு வந்து அனைவரும் குறட்டை விட்டு தூங்கும் நேரமாகிவிடும். ஒரு கரண்டி சாதம் என் இலையில் விழ மறுநாள் காலை சூரிய உதயம் தொடங்கிவிடும்'' நல்ல இன்ஸ்டன்ட் சர்வீஸ் அப்பா உன் சத்திரத்தில்'' என்ற பொருள் பட ஒரு கவிதை இதோ:

''கத்துகடல் சூழ்  நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்''.

THIRUKKOLOOR PEN

திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

54 கண்டு வந்தேன் என்றேனோ
திருவடியைப் போலே

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரிய திருவடி கருடன். சிறிய திருவடி ஹனுமான். இங்கே சின்ன திருவடி ஹனுமான் பற்றி பேசுகிறோம். சமீபத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் 8-9வது படிக்கும் குழந்தைகளை சந்தித்தபோது ஒரு பெண் ஹனுமான் யார் சொல் என்ற கேள்விக்கு பாரதத்தில் வரும் ஒரு அசுரன் என்றாள் . அந்த அதிர்ச்சி ஆச்சர்யம் இல்லை. குழந்தைகளுக்கு வீட்டிலோ, பள்ளியிலோ நமது இதிகாசங்கள் அறிமுகம் இல்லை. தானாக தெரிந்துகொள்ள புத்தகங்கள் படிக்கும் வழக்கமோ டிவியில் நல்ல விஷயங்களோ இல்லை.
வாட்சப்பில் FB யில் ஈடுபாடு நிறைய எல்லோருக்கும் இருப்பதால் முடிந்தவரை வரை அதில் சொல்லி தருவோம்.. ராமா
யணத்தில் சீதையை ராவணன் ஒருநாள் திடீரென்று தூக்கிச் சென்று விடுகி
றான். ராமனும் லக்ஷ்மணனும் அவளை தேடி அலைகிறார்கள். வழியில் கிஷ்கிந்தா எனும் வானர பிரதேச அரசன் சுக்ரீவன் அவன் மந்திரி , ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின் அரசனும் அவன் அமைச்சன் ஹநுமானும் நண்பர்களாகி ராமன் இலங்கையில் சீதையை கண்டுபிடிக்கிறான். பிறகு சுக்ரீவன் படைகளோடு ராமலக்ஷ்மணர்கள் இலங்கைக்கு சேது பாலம் அமைத்து சென்று ராவணாதியர்களை கொன்று சீதை மீட்கப்படுகிறாள்.
தெற்கு திசையில் தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணை யிட்டான். கடல் தாண்டி சென்ற ஹனுமா ன், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார்.
சீதையை தேடிச்செல்ல பல திசைகளுக்கும் வானர வீரர்கள் செல்கிறார்கள். தென் திசை தேடும் வீரர்களில் ஹனுமான் ஒருவன்.
ஹனுமான் பிரபாவம் நிறைய எழுதி இருக்கிறேன். இங்கே இந்த அளவு போதும். ஹனுமான் சொல்லின் செல்வன். கெட்டிக்காரன். தைரியசாலி, மகா பலம் கொண்டவன். கடலை தாண்டி சென்று இலங்கையில் இறங்கி சீதையை கண்டு பிடிக்கிறான். அவள் இவனை பார்த்ததில்லை, என்பதால் ராமதூதன் என்று நிரூபிக்க ராமன் கொடுத்த கணையாழியை தருகிறான். விரைவில் ராமர் வந்து மீட்பர் கவலை வேண்டாம் என்று தைரியம் சொல்லி அவளை சந்தித்ததற்கு சாட்சியமாக அவளது சூடாமணியை வாங்கி சென்று ராமனிடம் கொடுக்கிறான்.
ஆவலோடு ஹனுமான் நல்ல சேதி கொண்டுவர காத்திருந்த ராமன் முன்பு பறந்துவந்து குதிக்கிறான். முதல் வார்த்தை ''கண்டேன் சீதையை'' அப்புறம் விவரம். அந்தக்காலத்தில் தந்தி இப்படி தான் சுருக்கமாக வார்த்தைகளில் அடிப்பார்கள். முக்கிய சேதி இப்படி தான் பரவியது. போஸ்ட் கார்ட் எழுதினாலும் க்ஷேமம் என்கிற வார்த்தை தான் முதலில் இருக்கும்.
ஹனுமானின் சமயோசிதத்தை கண்டு மகிழ்ந்த ராமர் அவனை ஆரத்தழுவுகிறார்.
இதை நினைவு கூற வைக்கிறது இன்று நமக்கு யார் தெரியுமா?
திருக்கோளூர் எனும் ஊரில் இருந்து மூட்டை முடிச்சோடு வெளியேறி வேறு ஊருக்கு செல்லும் ஒரு பெண்மணி. அவளை ராமானுஜர் கேட்கிறார்.
''இது தானே திருக்கோளூர் எனும் க்ஷேத்ரம்?''
''ஆமாம் ஐயா''''
நீ இந்த ஊரா அம்மா?'
ஆமாம் ஐயா''''
எங்கே மூட்டை முடிச்சோடு செல்கிறாய்?'' ''வேறே ஊருக்கு வாழ செல்கிறேன்'
''அம்மா என்ன இது ஆச்சர்யமாக இருக்கி றதே, எங்கிருந்தெல்லாமோ விசாரித்து, தேடிக்கொண்டு ஒவ்வொருவரும் திருக்கோளூர் எனும் இந்த புனித க்ஷேத்ரம் ஒருமுறையாவது வந்து சேரமாட்டோமா, பாக்யமிருந்தால் இங்கே வசிக்கமாட்டோமா என்று ஆசைப்படுகிறார்களே . நீ எதற்கம்மா இந்த க்ஷேத்ரத்தை விட்டு வேறு எங்கோ செல்ல நினைக்கிறாய்?
அதற்கு தான் அவள் பதில் சொல்கிறாள்
.''ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன, சிறிய திருவடி ஹநுமானைப் போல கேட்க சுகமாக ஒரு நல்ல வார்த்தை பெருமாளுக்கு சொன்னவளா, அவரை மனம் மகிழ்ச்சி செய்தவளா? எனக்கு என்ன யோக்கியதாம்சம் இருக்கிறது இந்த புனித க்ஷேத்ரத்தில் வசிப்பதற்கு?'' என்கி றாள்.

HELP




                            இந்த கீச்சுக்குரல்....  J K   SIVAN 


பூர்வீக சொத்து நிறைய  நிலமும்  நீச்சுமாக இருந்தது வாஸ்தவம்.  நீலகண்ட சாஸ்திரி போகும் வரை எல்லாம் கட்டுப்பாட்டில் இருந்தது. பரசுராமன் தலை எடுத்தானே தவிர  தத்தாரி  பட்டம் தான் வாங்கமுடிந்து அந்த கவலையில் சாஸ்திரிகள் மண்டையை போட்டுவிட்டார்.    பரசுராமன் க்ஷத்ரியர்கள் அசுரர்களை,  அரசர்களை ஒழிப்பது என்று அவதாரம் எடுத்தாலும்  அந்த பெயர் கொண்ட  தஞ்சாவூர் பரசுராமன்  அப்பா தாத்தா சொத்தை அழிப்பதற்கே அவதாரம் எடுத்தவன்.


அலமேலுவை திருவையாற்றில் கல்யாணம் பண்ணிக்கொடுத்தபோது அவள் அப்பா நாலைந்து வீடு நிலம் மாடு கன்று தென்னந்தோப்புடன் சேர்த்து தான் நீலகண்ட சாஸ்திரியிடம்  கொடுத்தார்.  பரசுராமன் மாப்பிள்ளையாக வந்து அதை முதலில் அழித்தான்.  

தர்மன் சொக்கட்டான் ஆடி ராஜ்யத்தை இழந்தான். பரசுராமன் தானாகவே எந்த சகுனியும்  இல்லாமல்  தனது வீட்டு திண்ணையிலேயே   இருப்பதை எல்லாம் ஒன்று ஒன்றாக இழந்தான். 

ஏதோ ஒரு வருஷம்  எதிர்த்த வீட்டில்  கோபாலய்யர்  குடும்பம்   கும்பகோணம் மகாமகம் பார்க்க
 புறப்பட்ட   போது   அலமேலுவும் அவர்களோடு  சேர்ந்து கொண்டு கும்பேஸ்வரனை வேண்டி  கணவனுக்கு நல்ல புத்தி கேட்க கிளம்பினாள்.    கழுத்தில் கடைசியாக இருப்பது  அப்பா சொத்தில் ஒன்றான  எட்டு வடம் சங்கிலி  ஒன்று  தான் பாக்கி.  

''நான் வரலே  நீ போ ''என்று  பரசுராமன் தனியாக அவளை அனுப்பி விட்டான். 

கும்பகோணம் மகாமகம் ஸ்னானம் ஏக கும்பல்.  எதிர்த்த வீட்டு கும்பல் காணாமல் போய்  விட்டது தேடினால் கிடைக்கவில்லை.  கையில் காசு இருந்த பை  அவர்களிடம் தான் இருந்தது.  என்ன செய்வது என்று புரியவில்லை. அக்காலத்தில்  மொபைல் போனோ,  வேறு எந்த விதமான  வசதியோ இல்லை. மேலும் அலமேலு  வெகுளி.  படிக்காதவள் .  யாரோ  ஒரு 18 வயது வாலிபன் அருகே ஸ்னானம் செய்து கொண்டிருந்தவன்  அழுது கொண்டிருந்த  அவளை மெதுவாக கரையேற்றினான்.   அவன் பரம ஏழை. 

தாமோதரன் காலேஜ் படிச்சுட்டு வேலை தேடுபவன் கிடைக்கவில்லை.  அப்பா சுந்தரமய்யர் அம்மா கல்யாணி ஒரு பஸ்ஸில்  திருவனந்தபுரம் போகும்போது  விபத்தில் ஒன்றாகவே இறந்துபோய்  அவன் யாருமில்லாத அனாதை  .  படித்துக்கொண்டே  சுயமாக ஏதாவது  சின்ன சின்ன வேலை செய்து வயிறுகழுபவன். சென்னையிலிருந்து மஹாமஹம் தரிசனத்துக்கு  வந்தவன். 

''ரொம்ப சந்தோஷம் டா பையா''  எப்படியோ என்னை  தஞ்சாவூர் பஸ் லே  ஏத்தி உக்காரவச்சே. அங்கே இறங்கி கிட்டே தான் வீடு. போய் சேர்ந்திடுவேன்''  

''அம்மா  நீங்க  என் அம்மா மாதிரியே  இருக்கீங்க. உங்களை நமஸ்காரம் பண்ணி வேண்டிக்கிறேன்'' நான் நினைக்கிறது நடக்கணும் . என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ''

''என்னப்பா நீ  நினைக்கிறே ?''

''ரியல் எஸ்டேட் லே நிறைய விஷயம் கத்துண்டிருக்கேன்''     வக்கீலுக்கு படிச்சிண்டிருக்கேன்  இன்னும் ஒரு வாரத்தில் பரிக்ஷை. ஒரு வக்கீலாகணும்னு லக்ஷியம்.  அதே சமயம்  சென்னைக்கு பக்கத்திலே ஒரு சின்ன இடம் ரொம்ப  நல்ல ப்ரொஸ்பெக்ட்ஸ் இருக்கு. அதை மட்டும் வாங்கிட்டேன்னா கொஞ்சம் கொஞ்சமாக  கால் ஊன்றி  ரியல் எஸ்டேலே சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்'' ஆனா ...

''என்ன ஆனா?''
   
''அந்த பழைய வீட்டோட இருக்கிற நிலத்தை வாங்க பணம் இல்லையே. எங்கே  போவேன்  ரெண்டு  லக்ஷத்துக்கு? கடன் கேட்டா யாரும் கொடுக்க மாட்டேங்கிறா'' அந்த இடத்துலே பிளாட் போட்டு வித்தா பலமடங்கு சீக்கிரமே சம்பாதிக்கலாம்னு  விஜாரிச்சு வச்சிருக்கேன்.''

ஒரு யோசனையும் பண்ணாமல்  அலமேலு கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து அவனிடம் கொடுத்தாள் '' 

தாமோதரன் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்.  அவன் அதிர்ந்து போகும்போது ''குழந்தே, இது இன்னும் கொஞ்ச நாள் லே  சீட்டாட்டத்திலே என் புருஷனாலே என்னை விட்டு போகப்போறது. நீயாவது உருப்படியா இதை வச்சுண்டு   உழைச்சு முன்னுக்கு வா'' எனக்கு பிள்ளை குட்டி கிடையாது. நானும் ஒரு அனாதை. 

''நான் இதை கடனா பாவிச்சு எப்படியும் ஒருநாள் திருப்பி கொடுப்பேம்மா''

''நான் இதை இப்பவே மறந்தாச்சு..எனக்கு நீ ஒன்னும் திருப்பி தரவேண்டாம். உன்னைப்போல  யாராவது  நாணயமா உழைச்சு முன்னேற அந்த பணத்தை உபயோகி. உனக்காக என் கிருஷ்ணனை வேண்டிக்கிறேன்''

தாமோதரன் பரசுராமன் செயல்களை பற்றி அறிந்து  அவள்  கஷ்டங்களை தெரிந்துகொண்டு  வருந்தினான். மாமியைப் பார்த்த பார்வையில் கண்களில் கண்ணீர். 

 பரசுராமன் வீடு திரும்பியவளிடம்  ''அலமேலு கழுத்து சங்கிலி எங்கே காணோம்?''

''காணோமா? நடிகையர் திலகமாக  சங்கிலியை தேடி,  ''அடேடே  மஹாமஹா கும்பல்லே யாரோ அறுத்துண்டுட்டாளோ''  என்று கத்தினாள். அடித்தான்   கண்  கிட்டே இன்னும்  தையல் போட்ட  வடு இருக்கு.  அழுதாள். விஷயம்  மறந்துபோய் வருஷம் ஆறு   ஓடிவிட்டது. பரசுராமனிடம் எந்த மாறுதலும் இல்லை. ஒவ்வொன்றாக எல்லாம் கரைந்துபோய் இருக்கும் வீடு ஒன்று தான். அதையும்  விற்பதற்கு ஏற்பாடு நடந்தது. அவன் பேரில் இருந்ததால்  அலமேலுவுக்கு தெரியாமலேயே விற்று விட்டான்.  சீட்டில் காலத்தோடு 
பணமும் கரைந்தது. பரசுராமன் உயிரும் வியாதியில் படுத்து  ஒருநாள்  விலகியது. நிர்க் கதியாக  வீட்டில் அவளை விட்டு விட்டு ஹாலில் சுவற்றில்  படமானான்.

ஏதோ ஒரு சிலர்  உதவியுடன், உடலால் உழைத்து காலம் தள்ளினாள் அலமேலு. 
ஒருநாள்  வீட்டு வாசலில்  வக்கீல் ஒருவன் வந்து நின்றான். 'அருகே  உள்ளூர்  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்''
''அலமேலு அம்மா நீங்களா?
''ஆமாம்''  நீங்க யாரு?
இவரு  இந்த வீட்டு ஓனர் வக்கீல்,  வீட்டை  காலி  பண்ணி ஒப்படைக்காம  வருஷம்  நாலரை ஆவுது.  கோர்ட் ஆர்டர் வாங்கி உங்களை அப்புறப்படுத்த வந்திருக்கேன். நாளைக்கு காலை பத்துமணிக்குள்ளாற  சாமான் எல்லாம் எடுத்துக்கிட்டு காலி பண்ணனும். இல்லேன்னா  கைது பண்ணவேண்டி வரும். 

''ஐயோ  என் புருஷன்  படுபாவி  எனக்கு ஒண்ணுமே பண்ணாமே, என்னை  நிராதரவா   நடுத்தெருவில் நிக்க வச்சிட்டா போய்ட்டான். கடைசி நாலுமாசம் படுக்கையா  கிடந்தபோது கூட வீட்டை வித்தாச்சுன்னு சொல்லலியே. ராவும் பகலும் பக்கத்திலேயே இருந்து  காப்பாத்தினேனே'' 

''ஐயா,  வக்கீல், போலீஸ்காரரே , ஒரு வாரம் டைம் கொடுங்கோ நான் ஏதாவது ஏற்பாடு பண்ணிண்டு போய்ட்றேன்''
''இல்லேங்கம்மா  ஏற்கனவே  நோட்டீஸுக்கு பதிலே போடலே. வீடையும்  காலி பண்ணலே. ரொம்ப டிலே ஆயிடுச்சே.
மறுநாள் காலையிலே அண்டை அசல் வீட்டில் சில சாமான்களோடு அடைக்கலம் புகுந்தாள் . யாரோ அங்கே ஒரு அனாதை இல்லத்தில் அவளை சேர்த்தார்கள்.''
ஆறு மாதம் ஆகிவிட்டது.  அனாதை இல்லத்துக்கு வருபவர்கள் ஏதாவது கொஞ்சம் உதவுவார்கள். வாழ்நாளை எண்ணிக்கொண்டு  மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தபோது ஒரு நாள்  அனாதை இல்ல முதலாளி அவளை அழைத்தார்.
''ஐயோ  பணம் கேட்க போகிறாரே. எங்கே போவேன் இதற்கும் ஆபத்து வந்துவிட்டதா?''
அவர் அறையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். 
அம்மா உங்களை இங்கேயிருந்து இப்போவே  ரிலீஸ் பண்ணுகிறேன். இனிமே நீங்கள்  செளக்கியமாக இவரோடு போகலாம்.
''யார் இவர்? நான் எதற்காக இவரோடு போகவேண்டும்?  நான்  இங்கேயே  இருக்கேன்.  என்னால் இனிமே சமையல் வேலை செய்ய உடம்பில் தெம்பில்லையே '' கண்ணும் சரியா தெரியலே''
''அம்மா  நீங்க  சமைக்கலாம் வேண்டாம்.  எங்க வீட்டிலே சமையலுக்கு ஆள்  இருக்கு '' வந்தவர் குறுக்கிட்டார்.
''யாரு நீங்க?  இந்த கீச்சு குரல் கேட்ட மாதிரி இருக்கே ன்னு ஒரு கணம் யோசித்தாள் .  ஞாபகம் இல்லை. 
''நான் எதுக்கு இந்த இடத்தை விட்டு போகணும். எனக்கு வேறே போக்கிடம் இல்லை. வயசும்  ஆயுடுத்து. இங்கேயே நான்  கடைசிகாலத்தில் இருந்துட்டு  போயிடறேனே''
''உங்க வீட்டுக்கு தாம்மா  நீங்க போக போறேள் ,  'அலமேலு க்ரஹம்'' சென்னை தாம்பரத்தில்   அலமேலு லேஅவுட் லே.  என்கிறார்  வந்தவர். 
''யார் நீங்க என் பேரு  சொல்றேள் ''
''உங்கள் பிள்ளை.  அனாதை  தாமோதரன். இந்தாங்கோ''
 கையிலே ஒரு சின்ன நகைப்  பெட்டி. அதை வாங்கி திறந்தாள். புதிகாக  எட்டு வட சங்கிலி, அதில் அவளுடைய  அப்பா கல்யாணத்துக்கு  கொடுத்த பழைய  ராமபட்டாபிஷேக டாலர் இணைத்திருந்தது.
''பகவானே, தாமோதரனா, .... கும்பகோணத்தில்..மகாமக குளத்திலே ...
''ஆமாம்மா  நீங்க  பிச்சை போட்ட   உங்கள்சங்கிலியை வித்து தான் தாம்பரத்திலே   நிலம் விலை பேசி வாங்கி அதை இம்ப்ரூவ் பண்ணி  அலமேலு லேஅவுட் போட்டு,  ஒரு வீடு உங்கள் பேரில் கட்டி அதிலே இருக்கேன். மத்த  பிளாட்  எல்லாம்  நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். வக்கீலாக வேலை செய்றேன். 

போனமாசம் இந்த சங்கிலியை எடுத்துண்டு  தஞ்சாவூர் வந்தேன். உங்க அட்ரஸ் ஜாக்கிரதையா வச்சிருந்தேன். அங்கே போய் பார்த்தேன். வீட்டை இடிச்சு புதுசா கட்டிண்டு இருக்கா.  அக்கம் பக்கத்திலே  கேட்டதில் வீடு வித்துட்டு இந்த அனாதை இல்லத்தில் இருக்கறதா  எதிர்த்த பக்கத்து வீடுகளில் சொன்னா.  ஒருத்தர் இந்த அட்ரஸ் கொடுத்தார். வந்து  இவரை பார்த்தேன்.  உங்களுக்காக இந்த வருஷ  பணம் பாக்கின்னு சொன்னார். கட்டிட்டேன்.  இருந்தாலும்  என் வீடு இப்போ  ரெடியா ஆயிடுத்து. முதல்லே உங்கள அங்கே அழைச்சுண்டு போகணும்னு இவர் கிட்டே அனுமதி வாங்கிண்டுட்டேன். நீங்க  அங்கே வந்து  என்னோடு இருக்கலாம்.  
''உனக்கு கல்யாணம் ஆயுடுத்தா?
'' நீங்க தானே  என் அம்மா .  யாரையாவது பார்த்து பண்ணி வையுங்கோ''.
   




''

Wednesday, April 29, 2020

siva puranam




ஒரு விசித்திர குடும்பம் J K SIVAN

அப்பன் பொறுப்பில்லாதவரோ ? யாரைப் பார்த்தாலும் அவரை பித்தன், பேயன் என்றே சொல்கிறார்களே . எப்போ பார்த்தாலும் தனியே ஒரு மலை உச்சியில் போய் அரைக்கண் திறந்த படி உட்காருவார். அப்படி உட்கார்ந் திருப்பவர் அருகே சென்று ஏதாவது பேசினால் அவ்வளவு தான். நெருப்பு சுடும்ல்ல. இதுக்குன்னு ஒரு கண்ணு நெத்திலே இருக்கு. எரிச்சிடுவாரு.

மற்ற நேரத்தில் சுடுகாட்டுலே போய் சாம்பலை வாரி பூசிக்கிட்டு தா தை னு ஆட்டம். எப்போ கோபம் வரும்னு தெரியாது. யாரானாலும் சாம்பலாக்கிடுவார் . ரொம்ப ஜாக்கிரதையாக பழகவேண்டிய ஆளு.
ஏன் இப்படி இருக்கிறார்?, ஒருவேளை அப்பா, அம்மா, பேச்சை கேக்கலியா, அவங்க நன்றாக வளர்க்கவில்லையா?
யாருக்கு தெரியும் பா ? அவருக்கு அப்பா அம்மாவே கிடையாது. அவர் தனி. ஒருத்தர். முதல் ஆள். பிறப்பு இறப்பு தெரியாதவர். அதெல்லாம் கிடையாது. என்ன உத்யோகம் இவருக்கு கொடுக்கிறது? உயிரை வாங்கு றாரே? என்னா செய்றது இவரை? அட அந்த உத்யோகமே கொடுத்திடலாம். அதுக்கும் சரியான ஒரு த்தர் வேணும்ல.
''எல்லாத்தையும் நீயே முடிச்சுடுப்பா'' ன்னு விட்டுட்டாங்க.
அவருக்கு எதுவுமே தேவை இல்லீங்க. டைலர் கிட்டே போற வேலையே இல்லை. எங்கே யாவது ஒரு யானை, புலி கண்ல பட்டுதுன்னா, தோலை உரிச்சு, இடுப்புல சுத்திக்குவாரு. வெம்புலியோ ஐம்புலனோ இவர்கிட்டே வாலாட்டாது.

இன்னொரு வேடிக்கையான விஷயம். இவரு போட்டிருக்கிற நகையை எவனும் அறுத்துக் கினு ஓடவே மாட்டான். விஷம் கக்கிற பெரிய நல்ல பாம்பை, தலையிலே, கழுத்திலே, கையிலே, உடம்பிலே சுத்திக்கினா எவன்யா கிட்டே வருவான்?. கண்ணு தெரியாம கிட்டே வந்து மாட்டிக்கினவனை தூக்கினு தான் போவணும். ஆனாலும் அவருக்கு அந்த பாம்புங்க எவ்வளவு அழகு தருது பா. எதையும் லக்ஷியம் பண்ணாத அப்பான்னு சொன்னேனே அவரு கிட்டே சாப்பிட ஒரு தட்டு கூட இல்லைப்பா. ஒரு மண்டை ஓட்டை தான் கையிலே வச்சிருக்கிறாரு. என்ன தோணுச்சோ. நிறைய தட்டு தேவைப்பட்டா ஒண்ணு கழட்டிக்கலாம் னு நினைச்சாரோ என்னவோ, நிறைய மண்டை ஓட்டை துளை போட்டு கட்டி மாலையா கழுத்திலே போட்டுக் கிறாரு. சுடுகாட்டு சாம்பலை வாரி உடம்பிலே பூசிக்கிறாரு. நெத்தி பூரா வேறே. வேறே வாசனை சாமான் மேலே ஆசை இல்லேப்பா.

''அவர்கிட்டே போய் உங்களைப் போல் யாரும் இல்லீங்க'' ன்னு மட்டும் சொல்லிடுங்க, அப்புறம் பாருங்க நீங்க எது கேட்டாலும் குடுத்துடுவாரு. இவரு குணம் தெரிஞ்சு மத்தவங்க ஒரு தடவை என்னா செய்தாங்க தெரியுமா? அது ஒரு பெரிய கதை சுருக்கமா சொல்றேன் கேளு.

''அதோ பார் பெரிய கடல். எப்படி இருக்குது. எல்லாமே பால் , வெள்ளையா இல்லை ?

பின்னே பாலு கருப்பாவா இருக்கும்?

ஏன் கடலு வெளுப்பா அப்படி இருக்குது?
அதுக்குள்ளாற தேன் மாதிரி ஒண்ணு இருக்குதே அதுக்கு அமிர்தம் னு பேரு . அதை எடுத்து சாப்பிட்டா, சாவே கிடையாதுப்பா.

''அப்போ வாங்க உள்ளே இறங்கி எடுத்து சாப்பிடலாம். கும்பல் சேர்ந்தா கிடைக்காம போயிடும்.''
''அதெல்லாம் அவ்வளோ சுளுவு இல்லே தம்பி. இந்த பாலை தயிர் மாதிரி கடையணும் ?.
''எல்லாத்தையுமா ?''
''பின்னே, கொஞ்சூண்டு கடைஞ்சா அமிர்தம் வராதே, அவ்வளவு பாலையும் கடைஞ்சா ஒரு சொம்பு அமிர்தம் தேறும்,''
''சரி எப்படி கடையறது?
''அதுக்கு வழி கண்டுபிடிச்சுட்டாங்க.. மத்து மாதிரி ஒரு பெரிய மலையை புடுங்கி வச்சிட்டாங்க. மந்தர மலையாம். அதை சுத்தி கடையறதுக்கு கயிறுக்கு எங்கே போறது?

தேடிப் பிடிச்சு நீளமா ஒரு பெரிய பாம்பு வாசுகி ன்னு பேரு. தேவருங்க அசுரர்ருங் கன்னு ரெண்டு சைட்லே நின்னுகிட்டு பால் கடலை கடைஞ்சாங்க.

வாசுகியோடு விஷம் முதல்லே வந்தது. அப்புறம் தான் அம்ருதம். எங்கே
பார்த்தாலும் கொடிய ஹால ஹால விஷம். என்ன செய்யறது இதை? இந்தாங்கோ ன்னு கொடுத்தா யார் யா வாங்கிக்குவா? இருக்கவே இருக்காரு நம்ம சாமி.''

''உங்கள மாதிரி உண்டா, நீங்கள் தான் இந்த விஷம் எவரையும் கொல்லாமல் பார்த்துக் கோணும் '' ஏதாவது வழி சொல்லுங்க'' ன்னு கேட்டவுடனே இவருக்கு தலை கால் புரியவில்லை.
''கவலைப்படாதேங்க, அதற்கென்ன நானே அதை முழுங்கிடுறேன். அப்புறம் அதால் யாருக்கும் துன்பம் விளையாதே'' என்று சொன்னவர் ஏதோ அல்வா சாப்பிடக் கொடுத்தது போல் அந்த கொடிய விஷத்தை, '' லபக்'' என்று எடுத்து ஒரே வாயில் விழுங்கிட்
டாருப்பா.

அவரு ஸம்ஸாரத்துக்கு இவரைப் பத்தி நல்லா தெரியும்லே. அதுக்கு தானே இவரை தனியா விடக்கூடாதுன்னு அவரு பாதி உடம்புலே இருந்து கினு பார்க்கறாங்கல்லே. அவரு முழுங் கின அந்த விஷம் எல்லாம் உள்ளே இறங்காமல் ஒரே அமுக்கு அமுக்கிறாங்கல்லே. அது பாதி கழுத்திலே அப்படியே கப்புனு நின்னு போச்சு. நீல கழுத்து காரர்னு இப்போ கூட எல்லோரும் அதனால் தான் சொல்றாங்க. ஆளு ஏற்கனவே செக்கசேவேலுன்னு இருப்பாரா, பளிச்சுனு நீல மா கழுத்தி லே விஷம் நின்னுது கூட அவருக்கு அழகா இருக்குதுப்பா.
''அடேடே அப்புறம்'''
அப்புறம் என்னா. அம்ருதம் வந்துதுப்பா. தேவருங்க அதை எடுத்துக்கிட்டாங்க. வேறே என்னாவெல்லாமோ கூட அப்போ வந்தது.. பெரிய லிஸ்ட் பா அது. அதெல்லாம் யார் யாருக்கோ கொடுத்தாங்க. அப்பால சொல்றேன்.
நீ சுருட்டப்பள்ளி போயிருக்கிறயா?
இல்லேயே ஏன்?
ஒரு தபா நீ போவணும் பா. அருமையான ஊர் பா. அங்கே ஒரு கோவில்லே நீளமாக காலை நீட்டிக்கினு ஸம்ஸாரம் மடிலே படுத்துக்கினு இருக்கிறார் போய் பார். அது மாதிரி உலகத்திலே எங்கேயுமே கிடையாது பா படுத்துகினு இருக்கிற நம்ம சாமி.''

''சாமிக்கு என்ன பேர்?
''பள்ளி கொண்ட ஈஸ்வரர்.. படுத்துக்கினு இருந்து அவரை நான் பார்த்ததே இல்லை.' சுத்தி எல்லோரும் நிக்கிறாங்க. ப்ரம்மா, விஷ்ணு ரிஷிங்க. எல்லோர் முகத்திலேயும் கவலை .
''ஏங்க ?'
'இம்மாம் விஷம் முழுங்கினா என்னாத்துக்கு ஆவும்? ஆனா அவருக்கு ஒண்ணும் ஆவல. ஆவாது. அது தான் அவரு. பிறப்பு இறப்பு எதுவுமே கிடையாது பா அவருக்கு.''விஷம் சும்மாவா இருக்கும்? திகு திகு ன்னு எரிச்சல் குடுத்தது. பேசாம சில் லுனு ஐஸ் மலை உச்சியில் போய் உக்காந்துட்டார். அந்த இடம் இருக்குது இப்போ கூட. கைலாசம் என்கி
றாங்க. வருஷா வருஷம் எம்புட்டு பேர் போய் பார்த்துட்டு வராங்க. அவருக்கு எவ்வளவோ வேலை, பேசாம எப்போவும் பனி மலைமேல் எப்படி உக்காந்து கிட்டே இருக்கிறதுன்னு ஒரு யோசனை பண்ணார் போல.''

''எங்கேயாவது போனா கூட சில்லுனு இருக்கணும்னு ஏன்னா செய்யலாம்னு யோசிக்கும்போது ஒருத்தன் வந்தான்.

''யார் நீ?ன்னாரு.-
''சாமி நான் பகீரதன். உங்களைப் பார்த்து உங்க உதவி வேணும்னு கேட்க வந்தேன். ''
என்ன செய்யணும் உனக்கு?

''எங்க தாத்தன் பாட்டன் பூட்டன் அவனுக்கு பாட்டன் பூட்டன் எல்லோரும் நரகத்தில் இருக்காங்க. அவங்க மோக்ஷம் போகணும்னா
ஆகாச கங்கை நதியை இங்கே கொண்டார
ணும் னாங்க . நான் பல வருஷம் தவம் இருந்தேன். நேத்து கங்கை அம்மா வந்து பேசினாங்க.

''டேய் பகீரதா, என்னை இங்கே கூப்பிடறேயே, நான் வேகமா கீழே இறங்கி வந்தா உங்க பூமி அந்த வேகத்தை தாங்காது. யாரு தடுப்பாங்க அதை தெரியுமா உனக்கு ? என்ன செய்யப்
போறே?''

''தெரியலேம்மா, நீங்களே சொல்லுங்க''ன்னு கேட்டேன் . அவங்க தான் ஒரே ஒருத்தர் தான் என்னோட வேகத்தை தாங்கமுடியும். அவரு கிட்டே போய் வேண்டிக்கோ. அவர் மேலே இறங்கி நான் மெதுவா பூமிக்கு வரேன். உங்களை தான் அவங்க சொன்னாங்க.''

''இவரு தான் எப்போதும் பிரத்தியாருக்கு உதவ உடனே சரின்னுடுவாரு''. கங்கையை வரச் சொல்லுன் னுட்டாரு'' '
'அப்புறம் ?'
''ரெண்டு கையும் இடுப்பிலே வச்சிக்கினு கங்கையம்மா வேகமாக ஓ ஓ ன்னு மேலே ஆகாசத்திலிருந்து பெரிய சத்தத்தோட கீழே வர இடத்திலே தலையை விரிச்சுக்குனு நிக்கிறார். அப்படியே சில்லுனு அந்தம்மா கீழே அவர் தலையிலே இறங்கிட்டாங்க. அவங்களை மெதுவாக கீழே இறக்கி விட்டுட்டு மீதியை தலையிலே வச்சிக்கிட்டாரு. சில்லுனு அவங்க எப்போதும் அவர் உடம்பிலே இருக்கிறாங்க. சூடு எரிச்சல் பத்தி அப்புறம் நினைக்கவே நேரமில்லே.'' அந்தம்மா அவர் தலை மேலே எப்போவும் இருக்கிறாங்க.

''இதிலே இன்னொரு விஷயமும் இருக்குப்பா''.
''என்னதுங்க?''
''அவருக்கு எப்போவும் குளிச்சிட்டே இருக்க ரொம்ப பிடிக்குமே''' இந்த கங்கையம்மா தலைமேலேயே எப்போதும் இருக்கிறதால சில்லுன்னு ராவும் பகலும் அவருக்கு ஸ்நா
னம் பண்ணிக்கிட்டே இருக்க முடியுது. . தண்ணியை தேடிக்கிட்டு எங்கேயும் போகவே வேணாம்.
''சாமி ரொம்ப வித்யாசமானவரா இருக்கா ரே.''
'' 'ஆமாம்பா இப்போ சொல்றதே கேட்டுக்கோ'
''யாரேனும் பாடம் கேக்க வந்தா வாத்தியாரு என்ன செய்வாரு?'' .
எழுதிக்காட்டுவாரு, உரக்க பேசிக்கிட்டே சொல்லிக்கொடுப்பாரு இல்லையா. இவரு கிட்டே நிறைய ரிஷிங்க வந்து பாடம் கேக்கறாங்க. அவருக்கு தான் தெரியாததே இல்லையே''.
''இவரு பேசாம ஒரு மரத்தடிக்கு போனார். சாதாரணமா நாம் பார்க்கற பச்சை இலை சத்தம் போட்டுக்கிட்டே ஆடுமே அந்த மரம் இல்லை. சத்தம் ஒரு பொட்டு கூட இருக்க கூடாதே. அதனாலே ஒரு மரத்தை பிடிச்சாரு. அது கல்லுலே ஆனது. ஆடாது அசையாது. அதுங் கீழே உக்காந்துகிட்டு என்ன பண்ணினாரு தெரியுமா?'
'''பாடம் சொல்லி கொடுத்தாரா?
''''பாடம் தானாகவே தெரிஞ்சுக்க வச்சாரு. ஒண்ணுமே பேசலே. எல்லாரையும் கண்ணாலே பார்த்துக்கிட்டே இருந்தாரு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை அரை மூடினார். அது அவர் வழக்கம் இல்லையா?. எதிரே உக்கார்ந்தவங்க மௌனமா அவரையே பார்த்துக்கிட்டு இருந்தாக. தெற்கு பக்கம் பாத்துக்கிட்டே எவ்வளவு நேரம் அசையாம உட்காந்தாருன்னு தெரியாது. தெக்கே பாத்து உக்காந்ததாலே தக்ஷீணா மூர்த்தின்னு பேரு.
அவங்க அத்தனை பேருக்கும் எதை கேட்க வந்தங்களோ அதெல்லாம் பட்டுனு புரிஞ்சுடுச்சு. அதனாலே தான் நான் புரிஞ்சு ''போச்சு''ன்னு சொல்லல.''
''பேசாமலேயே அப்படி புரியவைக்க முடியுமாப்பா?''
''ஏன் முடியாது. இப்போ கூட கொஞ்சம் வருஷம் முன்னாலே நம்ம திருவண்ணா மலை ரமண ரிஷிக்கிட்டே நிறைய கேள்வி கேக்கணுமுன்னு ஒரு வெள்ளைக்காரரு நோட்டிலே கேள்வி எழுதி எடுத்துக்கிட்டு போனாரு. ஒரு மணிக்கு மேலே எதிரே உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தார். ஒண்ணும் கேள்வி கேக்கலே. ரமணரும் ஒரு வார்த்தை பேசலே . வெள்ளைக்காரரு அப்புறம் ரமணரை வணங்கிட்டு எழுந்து வந்துட்டாரு. என்னங்க ஏதோ எல்லாம் கேக்கணும்னு எழுதிக்கிட்டு வந்திங்களே, ஒன்னும் கேக்கலியா ன்னு நண்பர் கேட்டப்போ என்ன சொன்னாரு தெரியுமா வெள்ளைக்காரரு.

''எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சுடுச்சு '' பேசாமலேயே விளக்கிட்டாருன்னாரு.'' மனசு மனசுகூட பேசும்போது வார்த்தை தேவையில்லை பா.
நம்ம சாமிக்கு ஆட்டம் மட்டும் இல்லை பாட்டுக்கூட பிடிக்கும். இதை தெரிஞ்சுக் கினு ஒரு பெரிய ராக்ஷஸன் என்னா பண்ணான் தெரியுமா? ரொம்ப வருஷம் தவம் இருந்தான். தனது உடம்பிலிருந்து நரம்பெடுத்து எலும்பிலே ஒரு வீணை பண்ணி சாம கானம் என்கிற ரொம்ப நிரடலான வேதத்தை பாட்டா பாடினான். வாசிச்சான். அவன் வீணை வாசிக்கிறதுலே பெரிய வித்துவான் பா. அவரு உட்காந்திருந்த கைலாச மலையை ஆட்டிட்டான் பாடியே .
இவருக்கு படா சந்தோஷம்.
'டேய் நீ கேட்டதெல்லாம் கொடுத்துட்டேன் போ ''ன்னுட்டாரு.
அப்புறம்?
அவனுக்கு எல்லா பலமும் வஞ்சிடுச்சி. சர்வ சக்தி பெற்ற ராவணன் பா. அவன் அக்கிரமம் தாங்க முடியா மல் அப்புறம் நம்ம கிருஷ்ணன் தான் ராமரா வந்து அவனை முடிச்சிட்டாரு.''

''ஐயா உங்களுக்கு இந்த சிவ சாமி பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.''
நான் சொன்னது கொஞ்சம். இன்னும் எத்தனை யோ வருஷம் பூரா சொல்லலாம்''
''.என்னங்க செஞ்சாரு அப்படி
நம்ம தமிழ் நாட்டிலே நம்ம சாமி இருக்காரே. . மதுரைலே சொக்கன்னு பேரு. பாண்டிய ராஜா சங்கம் நடத்துவான். நிறைய பண்டிதர்களை எல்லாம் கூப்பிட்டு அவங்கவங்க சாமர்த்தியம் படிப்பு எல்லாம் காட்டி போட்டி போட்டு ஜெயிச்சவங்க பரிசு வாங்குவாங்க. இவரு அதிலெல்லாம் பங்கேற்பார். ஒருத்தருக்கு பரிசு கூட வாங்கிக்கொடுத்தார். திரு விளையாடல் னு நிறைய வேடிக்கை வித்தை எல்லாம் காட்டி சிவனடியார்களை சோதனை பண்ணி முக்தி கொடுத்திருக்கார். திருவிளையாடல் படம் போய் பாருங்க. கொஞ்சம் தெரிஞ்சிக்
கலாம். மத்ததை படித்து புரிஞ்சிக் கலாம்
.குடும்பம்னு சொன்னீங்களே.
ஆமாம் ஒரு புள்ளை ஒரு குட்டி இருக்கு. அவங்களைப் பத்தி அப்புறம் சொல்றேன்.

Tuesday, April 28, 2020

BHADRACHALAM RAMADAS KRITHI




கருணைக்கடலே J.K. SIVAN

கோபன்னா ராம பக்தர். அவருடைய மாமா மத்தன்னா. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானா ஷாவுக்கு மந்திரி. கோபன்னா மாமாவின் செல்வாக்கால் சுல்தானின் கஜானாவிலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராச்சலம் ராமர் கோவிலை புதுப்பித்தார். விஷயமறிந்த தானா ஷா கொதித்தான். உடனே ஆணை இட்டான்.

''கோவில் கட்ட என் பணம் கிடையாது .எனவே பணத்தை உடனே கட்டு இல்லாவிட்டால் பன்னிரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை''. நல்லவேளை கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால் சுல்தானின் கோல்கொண்டா சிறையில் கோபன்னா வாடினார். ராமனையே நினைந்து உருகி பாடினார்.

கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில் இருவர் நின்றனர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.

''யார் நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?''
''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்''
''ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?

ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்துகொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள்.

ராஜாவின் ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச் சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' - வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக்கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
''ஓஹோ எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''

சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா '
சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான். ''கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு புரியவில்லை.

'சுல்தான், நானா? செல்வந்தனா? என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? - குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.

''என்ன சொல்கிறீர்கள் கோபன்னா. இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட பை இருந்தது.

''சுல்தான் சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள். எனக்காக பணம் கட்டிய அவர்கள் யார் ?
''என்ன கோபண்ணா உங்களது பணியாளர்கள் என்கிறார்கள் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கேட்டேனே.''

கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது. ''சுல்தான் யாரும் எனக்கு அப்படி இல்லையே. என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை

''கொஞ்சம் இருங்கள் என் சேனாபதி அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர். சேனாபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான். ''அஹமத், இங்கே வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?''
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் 'ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி'' என்று சொன்னார்கள் . ம். கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கியவாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.

தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.

பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.
அவர் பாடிய பாடல்களில் ஒன்று :

ஹே ராமா, ரவிகுல சோமா, ரகுகுல திலகா, நீ எந்த விதத்திலாவது, எப்படியாவது ஒரு வழியில், என் மீது கருணை காட்டமாட்டாயா உத்தமா?
தாமரைக்கண்ணா, உன் தயவில்லாமல், அருளில்லாமல், கருணையில்லாமல் என்னால் இந்த கொடிய சம்சார சாகரத்தை கடக்க முடியுமா? நீ தானே தாரக ராமன்.ye theeruga nanu daya joochedavoராகவா. ரகுராமா, சீதா மணாளா, ரகுநந்தனா, பக்தர்களை அரவணைத்து காக்கும் பக்தவத்சலாகருணை நிரம்பிய ஆலயமே, பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவனே,கோசாலைக்கு மகனாக பிறந்து அவளுக்கு வரமளித்தவனே,ராமா நான் எண்ணற்ற கொடூர குரூர செயல்கள் புரிந்தவன் என்றாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன் அப்பா, என் கொடுமைகளை புறக்கணித்து, என்மீது கருணை கொள்வாய்.நான் நிரம்ப அவஸ்தை பட்டுவிட்டேன் அதற்கெல்லாம் பரிகாரமாக, என் பக்தியை ஏற்று அருள்வாய்.என் தெய்வ சிகாமணியே. ஓ ராமா என் துன்பத்திலிருந்து என்னை விடுவி.இந்திராதி தேவர்கள் வணங்கும் தசரதன் மகன் தாசரதீ எனக்கு அபாயம் அளிக்க வேண்டும். பக்த பரிபாலனம் செய்யும் பட்டாபிராமா
வழக்கம் போல அவரது தாய் மொழியிலான இந்த தெலுங்கு பத்ராசல ராமதாசர் கீர்த்தனையை அற்புதமாக மனமுருகி பாடி இருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. எத்தனையோ பேர் பாடிஇருந்தாலும் இது மனதை தொட்டதால் நானும் பாடிப் பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக்: https://youtu.be/MKXTj0qH42g
Ye theeruga nanu daya joochedavo
Inavamsotthama Raama.
Naa tharamaa Bhava saagarameedanu nalina dalekshana raama

Shree Raghunandana Seetharamanaa Sritha jana poshaka raama.
Karunyalaya- bhaktha varada ninu.
kannadi kaanupu raama

Krura karmamulu neraka chesithi
neramu lenchaku raama ridryamu parihaaramu seyave- daiva sikhamani raama...



Vasavanutha raamadhasa poshaka vandhamayodhya ramaaDasarchchitha maa kabayamu changave Dasarathi Raguramaa

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...