Thursday, April 23, 2020

WORSHIP RAMA



ராமனைப் பாடுவோம்  J K SIVAN

ஸ்ரீ ராம பக்தர்களில் முதன்மையானவர்  ஸ்ரீ  பத்ராசலம் ராமதாஸ். சுல்தான் கொடுத்த பணத்தை ராஜ்ய காரியத்துக்கு பயன் படுத்தாமல் ஸ்ரீ ராமர் கோவில் கட்டிவிட்டு சிறை ப்படுகிறார். கோல்கொண்டா சென்றால் போது அந்த கோட்டையில் அவர் இருந்த சிறை அறையை இன்னும் பார்க்க முடிகிறது. அதில் பல வருஷம் சிறை  இருந்த ராமதாசருக்கு ஸ்ரீ ராமனும் லக்ஷ்மணனும் அவர் பணியாளர் களாக மூட்டை நிறைய பொற்காசுகள் நிரப்பிக்கொண்டு சுமந்து சுல்தானிடம் அவனுக்கு சேரவேண்டிய பணத்துக்கு மேலே அதிகமாக செலுத்தி ராமதாசரை  சிறையிலி ருந்து விடுதலை செய்ய சொல்கிறார்கள்.
சுல்தான் விடுதலை செய்ய ராமதாச ரிடம் வந்து
''உங்களிடமிருந்து பெறவேண்டிய நிதிக்கு அதிகமாகவே உங்கள் பணியாளர்கள் என்னிடம் செலுத்தி விட்டார்கள்  உங்களை விடுதலை செயகிறேன்'' என்கிறான்.
''நான் பணம் அனுப்பினேனா, என் பணியா ளர்களா? அப்படி ஒன்றும் இல்லையே, என்னிடம் பணமோ  எனக்கு பணியாளர்களோ எதுவுமே இல்லையே'' என்று திகைக்கிறார்.
'இரு வீரர்கள் வாட்டசாட்டமாக கம்பீரமாக   பொற்காசு மூட்டைகளை சுமந்து வந்தார்களே . உங்கள் விடுதலை  செய்ய பணம் கட்டி ரசீது பெற்று  விடுதலை பத்திரம் எழுதி  வாங்கிக்கொண்டார்களே''
யாரவர்கள், எப்படி இருந்தார்கள்  என்று ராமதாஸ் ஆச்சர்யமாக கேட்டபோது ராம லக்ஷ்மணர்களை விவரிக்கிறான் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்.
கண்களில் நீர் மல்க  அது ராமர் லக்ஷ்மணர்கள்  பத்ராசல கோவில் மூர்த்திகள்  என்கிறார்.
சுல்தான் ராமதாசர் பக்தியை மெச்சி  அவரை தக்க மரியாதையோடு  பத்ராசலம் அனுப்பி  வைக்கிறான். தானும் தொடர்ந்து போய்  ராம லக்ஷ்மணர்களை தரிசிக்கிறான் என்று கதை தொடரும்.
ராமதாசர் கீர்த்தனைகள் மனதைத்  தொடு பவை. தெலுங்கிலிருந்தாலும் எளிதில் புரிபவை. பக்தி பாவம் இருந்தால் மொழி தேவை இல்லை.
ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய இந்த ஸ்ரீ பத்ராசல ராமதாஸ்  கீர்த்தனை எளியது பாட ருசியானது.
நானும்  பாடிப்பார்த்தேன்.  யூ  ட்யூப் லிங்க்  கிளிக் செய்து கேட்கவும். https://youtu.be/ft9AOVbQqzk


bhajarE SrirAmam hE mAnasa
bhajarE raghurAmam
bhaja raghurAmam bhanDana bheemam
rajanee charaNa kamala rAmam rAmam
|vanaruha nayanam kanadaLi Sayanam
manasija kOTI samAnam mAnam ||
TAraka nAmam daSaradha rAmam
Sri  tulaseedaLa Sreekara dAmam |
|SyAmala gAtram satya charitram
rAmadAsa hrud rAjeeva mitram |

''ஓ மனமே, ஸ்ரீ ராமன் பெருமையை பாடு. ரகுவம்ச நாயகன், ரகுகுல திலகன் ராமனைப் பாடு. எதிரிகளை நிர்மூலமாக்குபவன். அவன் பெயர் சொன்னாலே  இடி கேட்ட நாகம் போல கொடியவர்கள் நடுங்குவார்களே .  தாமரை திருவடிகளை பக்தர்களுக்கு என்று பிரத்யேகமாக தருபவன். ஸ்ரீ ராமனை வணங்கு. திருவடிகள் மட்டுமா, அவன் கண்களும் தாமரை இதழ் போன்றவை அல்லவா? ஆயிரம் மன்மதனுக்கு சமானமான அழகன் அல்லவா அவன்? போற்றத்தக்கவன் ஸ்ரீ ராமன். சம்சார சாகரத்திலிருந்து கரை சேர்ப்பவன். தசரதனின் புத்ரன் ஸ்ரீ ராமன். அவனை மனம் குளிர  துளசி பத்ரங்களால் அர்ச்சிப்போம். தெய்வீகமான அனுபவம் பெறுவோம்.  அவன் தேகம் நீல நிறத்தில் எவ்வளவு அழகாக கண்ணைப் பறிக்கும் கம்பீர உருவம். சத்தியத்தின் உருவம் அல்லவா ஸ்ரீ ராமன்.  தாமரை மலராகிய  பக்தி மிகுந்த இந்த ராமதாசனின் ஹ்ருதயத்தை மலரச்செய்யும் சூர்யன் அல்லவா ஸ்ரீ ராமன். என் உயிரினும் மேலானவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...