Saturday, April 25, 2020

GITA STORIES


கீதை கதைகள்   J K   SIVAN  
                                                  
              முதல் அத்யாயம். -  சுசர்மன் கதை  

நாதா எனக்கு  ஸ்ரீ  ராமனின் கல்யாண குணங்களை, அவன் சரித்திரத்தை பற்றி சொன்னீர்கள். அவன் ஆயிர நாமங்களை எப்படி சுருக்கமாக  சொல்லமுடியும் என்று கேட்டேன்.  உடனே  எனக்கு ஸ்ரீ ராம ராமேதி ரமே மனோரமே  என்று ஆரம்பித்து ஸ்ரீ ராமா என்ற மந்த்ரத்தை மூன்று தரம் சொன்னாலே  மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்று உபதேசித்தீர்கள்.

எனக்கு தாங்கள்  ஸ்ரீ கிருஷ்ணன் பற்றியும்  அவன் உபதேசித்த  கீதையை பற்றியும் இப்போது சொல்லவேண்டும் என்று கைலாசத்தில் பரமேஸ்வரனை  பார்வதி கேட்கிறாள்.  அவளை உத்தேசித்து நமக்கு அற்புதமாக விஷயம் கிடைக்கிறது.

பகவத் கீதையின் முதல் அத்தியாயமே சோகத்தில் துவங்குகிறது.  அர்ஜுனன்  தனது நெருக்கமான உறவுகளை எதிரிகள் சைன்யத்தில் காண்கிறான்.  என்னவர்களை அழித்து எனக்கு வெற்றி வேண்டாம் என்று வில்லை கீழே போடுகிறான். 

கிருஷ்ணன்  என்றாலே  கருமை  நிறத்தவன்  ன்று அர்த்தம். பறவைகளில் அதிக உயரத்தில் பறக்கும்  கூர்மையான  பார்வையுடைய  கருடன் அவன் வாஹனம்.   அவன் இருக்குமிடம்  பாற்கடல்.  அதில் அவன் படுக்கை என்ன தெரியுமா?  ஆயிரம்  சிரங்களை   உடைய ஆதிசேஷன். அவனை தான்  விஷ்ணு என்று சகல தேவர்களும் அறிவார்கள். தொழுவார்கள்.

என்னருமை  பார்வதி  சொல்கிறேன் கேள்.  மிக பலம்  வாய்ந்த முரன்  எனும்  ராக்ஷஸனை வதம் செய்தபின்  கிருஷ்ணனாகிய  விஷ்ணு  பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். 

அப்போது அவர் தேவியாகிய மஹாலக்ஷ்மி  ''நாதா,  நீங்கள் சர்வ வல்லமை பொருந்திய  காக்கும்  ரக்ஷிக்கும்  கடவுள் என்றாலும் உங்கள் முகத்தில் என்ன ஏதோ  கவலை தெரிகிறது?'' என்கிறாள்.

''இல்லை தேவி,  என் பக்தர்கள் என் சக்தியை அறிவார்கள். என் பெயரைச் சொல்லி தங்களுக்கு பலம் சேர்க்கிறார்கள். அதனால் அவர்களை துன்புறுத்தும் சங்கடங்களிலிருந்து  விடுபடுகிறார்கள்.   தீயவை அவர்களிடமிருந்து நீங்கி  பரிசுத்தமாகிறார்கள்.  அவர்களை நான் கண்காணித்து காக்கிறேன்.

நாதா, நீங்கள் எல்லாவற்றையும் இயக்குபவர். ப்ரபஞ்சமே உங்கள் சங்கல்பத்தால் இயங்குகிறது. வாஸ்தவம். ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம்  எனும் முத்தொழிலும்  புரிகிறீர்கள். ஆனால் எதிலும்  நீங்கள் பட்டுக் கொள்வதில்லை. சம்பந்தமின்றி இருக்கிறீர்கள். 

''நாதா, இப்போது சற்று ஓய்வெடுத்துக்  கொண்டு இருக்கும்போது எனக்கு தங்களது சக்தி,  சர்வலோகத்தையும்   இயக்கும்   மஹிமையைப்  பற்றி  எனக்கு  விளக்கிச் சொல்வீர்களா?
'' அம்மா மஹாலக்ஷ்மி, நான் அவ்வப்போது  அவதாரம் எடுப்பதன் காரணமே,  பூமியில் தீய, கொடிய  கருணையற்ற, பாதக  செயல்களால் தெய்வீகமான  எண்ணங்கள் மறையக்கூடாது,  சாதுக்கள்  தீனார்கள்  துன்புறக்கூடாது என்று தடுக்க, அவற்றை அழிக்கவே.    அப்படி  அவதரிக்கும்போது மக்களோடு  கூடி இருக்கவே  விரும்புவேன்.    அதற்காக அவர்களுக்கு  பொருள்களாக   உருவங்களாக  காட்சி அளிப்பேன். என்னை அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும் உதவும் என்பதற்காக.   அவர்களின் மனத்திலும்   இதயத்திலும் இடம் பெறுகிறேன்.  இதை கீதையில் விளக்கி இருக்கிறேன்.

' நாதா, தெய்வமே,  எனக்கு  எப்படி  கீதையின்  வெறும்  18 அத்தியாயங்களில் அளவற்ற,  எல்லையில்லா விளக்குவதற்கு இயலாத உங்கள் பெருமையை, மஹிமையை, சக்தியை உணர்த்த முடிகிறது? என்று  யோசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது ?''  என்கிறாள் மஹாலக்ஷ்மி.

''ஆம்,  மஹாலக்ஷ்மி,   உண்மையில்  நான்  தான்  கீதை, கீதை  தான்  நான்.  முதல் ஐந்து அத்யாயங்களில்  என் முகம்,  அடுத்த பத்து அத்தியாயங்கள் என் கரங்கள்,  அடுத்த ஒன்றில் என் வயிறு,  கடைசி  ரெண்டில் என் பாதங்கள் உருவகம். 

 ஆகவே தான்  கீதையின்  ஏதாவது ஒரு அத்யாயமோ , அதில் பாதியோ, ஏதேனும்  ஒரு ஸ்லோகமோ,  அல்லது   அதில் பாதியோ, உச்சரித்தாலும்  சுசர்மனைப் போல் முக்தி அடையலாம்.

''நாதா  சுசர்மன்  யார் ? எப்படி  முக்தி அடைந்தான்?''

'' மஹாலக்ஷ்மி  நீ  விடமாட்டாய் ஆகவே  உனக்கு சுசர்மன்  கதை சொல்கிறேன் கேள்.''  மஹாவிஷ்ணு சொல்லும்  சுசர்மன் கதை நாமும்  கேட்போமே. 

''சுசர்மன் ஒரு முட்டாள், கல்வி அறிவற்றவன். எந்த நற்காரியமும் செய்யாது  தீயவர்களுடன் சேர்ந்து பாபா கார்யங்கள் செய்து   ஜீவித்தவன்.   ஒரு பழத்தோட்டத்தில்  நடந்து செல்லும்போது ஒரு  விஷ நாகம் தீண்டி மரணம்  அடைகிறான்.  அவன்   பாப கர்மாக்களுக்கு தக்கவாறு   நரகத்தில் தண்டனை அனுபவித்து  மீண்டும் பூமியில் ஒரு   காளையாக பிறக்கிறான். ஒரு வண்டிக்காரனிடம் மாட்டிக்கொண்டு   பொதி சுமந்து நிறைய   அடிவாங்கி   பாரம்  இழுத்து  நுரை தள்ளி ஏழு  எட்டு வருஷம் ஓடிவிடுகிறது.  

ஒருநாள்   நிறைய பாரம் சுமந்து வெகுதூரம் நடந்து களைத்து, வழியில் மயங்கி விழுகிறான்.  ''ஐயோ பாவம்   காளை  மாடு பொதி சுமந்து மயங்கி விழுந்துவிட்டதே என்று  ஒரு கூட்டம்  அதை சுற்றி நின்றது. அந்த கூட்டத்தில் ஒரு ரிஷி. அவர்  காளைக்காக   ப்ரார்த்திக்கிறார்.  கூட்டத்தில் தீய ஒழுக்கம் கொண்ட ஒரு பெண்ணாக  இருந்தும்   மனமுருகி கடவுளிடம்  வேண்டி அதற்காக  பரிதாபப்  படுகிறாள்.  காளை இறந்து  விடுகிறது.  எம  தர்மன்  அந்த  ஒழுக்கமற்ற பெண்ணின் பிரார்த்தனையின் சக்தியால்  சுசர்மன் ஒரு  நல்ல  பிராமண  குடும்பத்தில் பிறக்கிறான்.   அவனுக்கு தனது முற்பிறவி  ஞாபகம்  வருகிறது.  ஒரு பெண்ணின் பிரார்த்தனையால்  தனக்கு இந்த நற்பிறவி  கிடைத்தது என்று உணர்ந்து அவளைத்  தேடுகிறான்.  அம்மா   நான்  கேள்விப்பட்டவரை நீங்கள்  தீய வாழ்க்கை நடத்துபவள்  என்றாலும் உங்களுக்கு எப்படி தெய்வீக சக்தி  கிடைத்து  என்னையும் ரட்சித்தீர்கள் என்பதற்கு  ஏதேனும  காரணம்   இருக்கவேண்டும் அது என்ன ?

'' அப்பா  என்னிடம் ஒரு  கிளி.  அது  நல்ல  விஷயங்களை எனக்கு எப்போதும் போதிக்கும்.அதன் பேச்சை கேட்டதன் புண்யம் என்று வேண்டுமானால்  சொல்வேன்.  பிராமணனாக பிறந்த சுசர்மன் கிளியை அவள் வீட்டில் பார்த்து  கிளியை வணங்குகிறான்.  

''நீங்கள்   யாரோ  தெரியவில்லை,இப்போது  கிளியாக இருக்கிறீர்கள். நான்  சுசர்மன் எனும்  அயோக்கிய, பாபியாக வாழ்ந்து  நரக  தண்டனை அனுபவித்தது   பொதி சுமக்கும் மாடாக அவதிப்பட்டு  இந்த  பெண்மணியின்  மூலம்,உங்கள் புண்யத்தால்  பிராமணனாக பிறந்தேன். நீங்கள்  யார்  என்று அறியலாமா?

'' அன்பரே, நான் பூர்வ ஜென்மத்தில் ஒரு  பண்டிதன். வித்யா கர்வம், மமதை கொண்டு,   பல நல்லவர் களிடத்திலும்  குறை, தப்பு கண்டுபிடிப்பதில் மகிழ்ந்தவன்.  அடுத்த பிறவியில்  கிளி .  காட்டில் ஒரு துறவி என்னை அவர் ஆஸ்ரமத்துக்கு எடுத்து சென்றார். கூண்டில் வளர்ந்தேன்.   துறவியும்  மகன்,கே சிஷ்யர்களும்  கீதை முதலோ அத்தியாயத்தை பாராயணம்  செய்வதை கேட்டேன்.   அவர்களோடு கூடவே  நானும்  உச்சரித்தேன்.  ஒரு நாள் ஒரு திருடன் என்னை பிடித்துக்கொண்டு போய்  இந்த பெண்ணிடம்  என்னை விற்றுவிட்டான்.  இது தான் என் கதை'' என்றது கிளி.

அப்புறம் ?  என்றாள்  மஹாலட்சுமி.
''சுசர்மனும்  அந்த பெண்மணியும்பகவத் கீதை முதல் அத்தியாயத்தை பாராயணம் செய்தார்கள்.கிளியோடு சேர்ந்து  மோக்ஷம் அடைந்தார்கள் என்று  முடித்தார் மஹா விஷ்ணு.  

கீதையின் முதல்  அத்யாயத்துக்கே இவ்வளவு மஹிமையா?
மஹா விஷ்ணுவே  ஸ்ரீ மகாலக்ஷ்மியிடம்   சொல்லி இருக்கிறார்.  அதை  அப்படியே  பரமேஸ்வரன் பார்வதியிடமும்  சொல்லி இருப்பதால்   கீதை  முதல்  அத்யாயம்  நாமும் படிப்போம். மோக்ஷம் அடைவோம். சுசர்மன் பட்ட  கஷ்டம் நம்மை அணுகாமல் இருக்க வேண்டாமா? 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...