Friday, April 3, 2020

THEERTHTHANARAYANAR




தீர்த்த நாராயணர்  J K  SIVAN 


                   விளம்பரமில்லாத  ஜீவன் முக்தர் 

இந்த பதிவோடு  தீர்த்தநாராயண ரிடமிருந்து விடை பெறுகிறோம்.

நான்  அடிக்கடி சொல்லி வருகிறேன்.  நிறைய பேருக்கு  தீர்த்தநாராயணரை  தெரியாவிட்டால் பரவாயில்லை.  ஆனால்  ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி போன்ற நூல்களை இயற்றிய  ஸ்ரீ நாராயண தீர்த்தர்  எனும் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்  தான் அவர்  என்று ஆள் மாறாட்டம் செய் து பாவம்  நாராயண தீர்த்தரையும்  தொந்தரவு செய்வது வேண்டாம்  என்பதற்காகவே  நான் நாராயண தீர்த்தரை பற்றி  விஷயங்கள் சேகரித்து எழுதுகிறேன்.

தான் ஜீவ சமாதியாவதற்கு  சில மாதங்களே இன்னும் இருக்கிறது என்று உணர்ந்த தீர்த்த
நாராயணர் ஒருநாள்  பஞ்சநத சாஸ்திரிகளை அழைத்தார். 

''ஹே  பஞ்சு, இன்னும்  கொஞ்ச நாள் தான் இருக்கு. நீ   ஒரு  காரியம் என்ன பண்ணுகிறாயா?.  மூன்று முழம் ஆழத்திலே சதுரமா ஒரு குழி வெட்டு.  இங்கே துளஜா  ராஜா ஆட்களை விட்டு  ஒரு கோயில் கட்டேறேன்னு வேலை எல்லாம் ஆரம்பிக்கிறார்கள்.  கர்ப்பகிரஹம்  எங்கே வருதுன்னு  சரியா தெரிஞ்சு அங்கே நான் சொன்ன குழியை வெட்டு''. 

பஞ்சநத சாஸ்திரி   தானே  வேலையை ஆரம்பித்தார்.  மடியாக  ஸ்னானம் செய்து விட்டு குழி தோன்றுவதற்கான  மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு  குழி தோண்டினார் . என்ன ஆச்சர்யம் பாருங்கள்.  தீர்த்த நாராயணர்  சொன்ன இடத்தில் குழி தோண்டி மண் அப்புறப்படுத்தும்போது  மண்ணிலிருந்து ஒரு ஸ்படிக லிங்கம்,  நரசிம்ம மூர்த்தி ஸ்வாமிகள் சாளக்ராமமும் கிடைத்தது.   பக்தியோடு  ஸத்குரு முன்னே சமர்ப்பித்தார் .

''குழி வேலை முடிச்சுட்டு இன்னொரு தரம் ஸ்நானம் பண்ணிட்டு  வா''.  அப்படியே செய்தார் சாஸ்திரி.

''பஞ்சநதா,  என்  சமாதிக்கு அப்புறம் இந்த  ரெண்டு விக்ரஹங்களையும்  பூஜா விதிப்படி  நீ ஆராதனை செய்துண்டு வா  ''    பஞ்சநத சாஸ்திரிகள் பிறகு  அஷ்டமா சித்திகளையும்  சுவாமிகளால் பெற்றார்.

ஸ்வாமிகளுக்கு  தினமும்  ஆகாரம் தானே  தயாரித்து அழைத்துவந்த பிராமண ஸ்திரீ,
 ஸ்வாமிகள் சமாதி அடையப்போகிறார் என்ற சேதி கேட்டு வருந்தி   அவர்  பாதங்களில் விழுந்து ''சுவாமி என்னையும் அனுகிரஹித்து  அழைத்துக் கொள்ளவேண்டும் '' என்று வேண்டினாள்.

''என் சமாதிக்கு பிறகு இங்கே தங்கி மூர்த்தி பூஜைகளுக்கு  நைவேத்திய காரியங்களை கவனி. உன் மனோபீஷ்டம் நிறைவேறும்''

 சடைச்சாமி  ஸ்வாமிகளை வணங்கி எனக்கு என்ன உத்தரவு என்று வேண்டினார்.   ஸ்வாமிகள் அவரை   நாயன்மார்கள் போல் சிவனடியாராக அனுக்ரஹித்தார்.     

சமாதி அடையும் நாள் நெருங்கியது. 

''பஞ்சாநதா,  இங்கே  குப்த சிவன் வருவான்.  துளஜா மஹாராஜா தயாரித்துக் கொடுக்கும்  கருங்கல் மூடு பாறைகளை  உற்ற இடத்தில் வைத்து விடு. நான் சமாதியில் அமர்ந்தவுடன் நீயும் குப்த சிவனுமாக மூடுபாறையால்  குழியை மூடிவிடுங்கள்''. அப்புறம் உங்கள் விருப்பப்படி சாஸ்த்ரோக்தமாக  பூஜா விதானங்கள்  ஆரம்பிக்கலாம்''  என்றார் தீர்த்த நாராயணர்.

இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கிறது . துளஜா ராஜா ராணியோடு பரிவாரங்களோடு வந்து விட்டார். ஸ்வாமியை ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு அங்கேயே தங்கினார்.  சரியாக ஒரு நாள் முன்னர்  குப்த சிவன் வந்துவிட்டார். ஸ்வாமியின் பாதங்களில் நமஸ்கரித்து விட்டு  மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களை திட்டமிட்டு செய்யலானார்கள்.

மறுநாள், சுவாமி ஒன்றும் நடக்காதது போல் தானாக அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார்.  அவரால்  உயிர் பெற்ற ஆடு அவர் முன் வந்து நின்றது. என்ன தோன்றியதோ, அதற்கு?  ஏன் எனக்கு ஒரு கட்டளையும் இடாமல் செல்கிறீர்கள்? என்று கேட்க எண்ணமோ? ''மே'' என்று சில நிமிஷங்கள் விடாமல் கத்தியபின்  ஸத்குருவை மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்தது.  முன் கால்களை நீட்டி தலையை அதன்  மேல் வைத்து நமஸ்கரித்தது .   தலையை அவர் பாதங்களில் வைத்து புரட்டியது. 

ஸத் குரு  ஆட்டின் தலையை தடவிக்கொடுத்து ''நீ என் முன்னே எப்போதும் இருந்து என்னை தரிசனம் செய்து கொண்டே  இருப்பாய்''  என்கிறார்.

ஆடு  ஆலய  கர்ப்பகிரஹம் முன்னால் ஓடி  நேர் எதிரே  ரிஷப ரூபத்தில் சிலையானது.   கூடியிருந்த அனைவரும் இந்த ஆச்சர்ய சம்பவத்தை  கண்கூடாக பார்த்து  கைகூப்பி  ஸ்வாமிகளை வணங.கினார்கள் . எவராலும் எதுவும் பேசமுடியவில்லை.  

தீர்த்த நாராயணர் குறிப்பிட்ட  சமாதியடையும்  நேரம் வந்தது.  தீர்த்தர்   குழியில் இறங்கி நின்றார்.  வலது புறம் பஞ்சநத சாஸ்திரி  இடது புறம்  குப்தசிவன் நமஸ்கரித்து நின்றார்கள். தீர்த்தர் கைகளை கூப்பி   அண்ட சராசரங்களுக்கு அதிபதியான ப்ரம்மா  விஷ்ணு சிவன்  போன்றோருக்கு  ஆதாரமான பரப்ரம்மத்தை  தியானம் செய்து விட்டு குழியில் அமர்ந்தார். சில வினாடிகள்  ஆனவுடன்  பஞ்சநத சாஸ்திரிகள் , குப்த சிவன் இருவரும் குழியை  பாறையால் மூடி,  அபிஷேக  பூஜா நிவேதனங்கள் முடிந்தது. ராஜ  குடும்பம் பரிவாரங்களோடு நமஸ்கரித்து பிரசாதம் பெற்று தஞ்சாவூர் அரண்மனை சென்றார்கள். எல்லோருக்கும் அன்னதானம் நிறைவேறியது.

தீர்த்தநாராயணர்,  நாராயண தீர்த்தராக, கருதப்பட்டு  திருப்பூந்துருத்தியில் நாராயண தீர்த்தர் சமாதி என்று  அதை மாற்றிவிட்டார்கள். கிருஷ்ணன்  மேல்  பாடியவர்  வைஷ்ணவ
 பக்தர் சந்நிதியில்  ரிஷப வாஹனம் எப்படி இருக்கமுடியும்?  தீர்த்தநாராயணர் பஜனை கீர்த்தனைகள் பாடவில்லை, அவர் ஒரு சந்நியாசி.
பஞ்சநத சாஸ்திரி வம்சத்தினர், குப்த சிவன் சிஷ்யர்கள்  மற்றும்  பலர் எதற்காக இந்த குளறுபடியை தடுக்காமல்  எல்லோருக்குமே  மறதி என்பதும் ஆச்சர்யம் தான்.  

எனது நண்பர்  அண்ணாநகர் சந்திரசேகரன்  திருப்பூந்துருத்தி சென்று அங்கே  ஆலயத்தில் தீர்த்தநாராயணர் பெயர் பதித்த ஒரு துறவி   சந்நிதி படம் இருக்கிறது என்று படம் அனுப்பினதை இணைதந்திருக்கிறேன். 




  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...