Friday, April 3, 2020

KALIYUG PREDICTION


                                               தீர்க்க  தரிசனம் 

அவனவன் அடுத்து என்ன ஆகுமோ  என்ற கவலையில் இனம் புரிபடாத கிருமியை சமாளிக்கும் தருணத்தில், யாரடா  இவன்  பாகவத புராணம் என்ன சொல்கிறது என்று எழுதுபவன்?   

''இவன் இல்லை சார்  சிவன்''  தான்.   வேறு யாருமில்லை . அதில் இதெல்லாம் பற்றி ஏற்கனவே  ஒரு ரிஷி புட்டு  புட்டு வைத்திருக்கிறார்.  நாமெல்லாம்  ''கஷ்டர்'' களாக அவதிப்படுகிறோமே இது பற்றி  ''சுகர்''   சொல்லி இருப்பது என்ன தெரியுமா?. 

இப்போது நாம் இருக்கும் கலியுகத்தில் நடப்பதை, இனி நடக்கபோகிறதை,  5000 வருஷத்துக்கு முன்பே எப்படி  இவ்வாறு  சுகரால்  அறிந்து கொள்ள  முடிந்தது?    தீர்க்க தரிசனம் எல்லாம் பொய்   இல்லை ஸார்!
 
 ''மதம், உண்மை, சுத்தம், பொறுமை, கருணை, ஆயுசு,  தேக சக்தி,  ஞாபகம், எல்லாம்  ஒவ்வொரு நாளா  குறைஞ்சு போகும், காரணம் கலியுடைய  வளர்ச்சி.''..  ஸ்ரீமத் பாகவதம். 12.2.1
sri-suka uvaca:  tatas canu-dinam dharmah, satyam saucam ksama daya, kalena balina rajan, nanksyaty ayur balam smrtih

''பணம் தான் ஐயா ஒருத்தனை  பெரிய ஆளாக காட்டும். உயர் குடும்ப பிறவி, குணாதிசயம், நடத்தை,  நீதி நேர்மை,  எல்லாமே  ஒருத்தனுடைய  பணபலம், அதிகார  சக்தியை வைத்து தான்  ஓஹோ என்று பேசப்படும்''   ஸ்ரீ பா. 12.2.2

vittam eva kalau nrÌ„Ì£nÌ£Ä mÌ, janmÄ cÄ ra-gunÌ£odayahÌ£, dharma-nyÄ ya-vyavasthÄ yÄ mÌ, kÄ ranÌ£amÌ balam eva hi

''ஆணும் பெண்ணும் யார் யாரோவாக இருந்தாலும்   உடல் உருவத்தால்  ஈர்க்கப்பட்டு  ''ஒன்றாக''    தாம்பத்ய, குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்.   வியாபாரத்தில் வெற்றி என்பதே ஏமாற்றும் சாமர்த்தியத்தில்  தான்.    ஆண்மை, பெண்மை எல்லாமே காமத்தின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும்.   வெறும் பூணல் அணிந்தவன் தான் பிராமணன்.  மற்றதெல்லாம் ?''  ஸ்ரீ பா. 12.2.3

dÄ mpatye 'bhirucir hetur, mÄ yaiva vyÄ vahÄ rike, strÄ«tve pumÌ stve ca hi ratir, vipratve sÅ«tram eva hi
''ஆன்மீக, தெய்வீகம்  என்பதே வெறும் வேஷமாகும்.  உடுத்தும் ஆடை, அணியும் அணிகலன், பூசும் விஷயம் இதை  வைத்து  தான் அவனை ஆன்மீகனாக காட்டும்.  வெளிப்பூச்சு சாமியார்கள். . உள்ளே  குப்பை.   ஏதோ ஒரு கோட்பாடு என்று  ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு  தாவுவான்.  சுகமாக  டாம்பீகமான  வாழ்க்கை  முறை தான்  அவனை சமூகத்தில் உயர்த்தி காட்டும். எளிய நல்லவழியில் பொருள் ஈட்டி  வாழ்பவன் சந்தேகிக்க படுவான்.  பேச்சு சாமர்த்தியம், பொய், வார்த்தை ஜாலம் காட்டுகிறவன் அறிஞன், பண்டிதன், படித்தவன் என்று கை தட்டப்படுவான். நிறைய படித்த சாது, வெளியே காட்டிக்கொள்ளாதவன் நாயினும் கீழ்.
ஸ்ரீ. பா. 12.2.4

liÅ„gamÌ evÄ Å›rama-khyÄ tÄ v, anyonyÄ patti-kÄ ranÌ£am, avrÌ£ttyÄ nyÄ ya-daurbalyamÌ, pÄ nÌ£dÌ£itye cÄ palamÌ vacahÌ£

''பணமில்லாதவன் பிணம்.   இல்லாதவனை இல்லாளும் வேண்டாம், ஈன்றெடுத்த  தாய் வேண்டாள் , செல்லாது அவன் வாயில் சொல்,  எல்லாம் ரொம்ப கரெக்ட். CORRECT .  ஊரை ஏமாற்றுபவன் தன  ரொம்ப  நாணயமானவன் என மதிக்கப்படுவான். பேரம் பேசிதா  கல்யாணங்கள்  நடை பெறும் . . சும்மா  ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தரம் குளிப்பவனே  சுத்தமானவன் என்று போற்றப்படுவான்... ஸ்ரீ  பா. 12.2.5

anÄ dÌ£hyataivÄ sÄ dhutve, sÄ dhutve dambha eva tu, svÄ«kÄ ra eva codvÄ he, snÄ nam eva prasÄ dhanam

தூரத்தில் எங்கோ தென்படுகிற  குட்டை தான்  புண்ய ஸ்தலமாகிவிடும்.  முடியாலங்காரம் தான்  அழகை தீர்மானிக்கும். வயிற்றை  எப்படியாவது நிரப்புவதே வாழ்க்கை லக்ஷியமா கிவிடும்.  தடாலடி அடிக்கிறவன் தான்  சத்ய புருஷன் என  பெருமைக்குரியவன்.  எவனாவது ஒருவன் மனைவி பிள்ளைகுட்டிகளுடன் குடும்பம் நடத்தினால் அவனைப்போல படு சாமர்த்தியக்காரன் சமயோசிதன்  கிடையாது  என்ற  நிலை வரும்.  கோவில் மத சம்பந்த விஷயங்களில் ஈடுபடுவது ஏதோ ஒருவித  கௌரவத்தை  சுய லாபத்தை  அடையவே  தான்.    சுகருக்கு எப்படி  நமது அறநிலைய சமாசாரங்கள் தெரிந்தது?  ஸ்ரீ. பா.12.2.6

dÅ«re vÄ ry-ayanamÌ tÄ«rthamÌ, lÄ vanÌ£yamÌ keÅ›a-dhÄ ranÌ£amS, udaramÌ -bharatÄ svÄ rthahÌ£, satyatve dhÄ rsÌ£tÌ£yam eva hi
dÄ ksÌ£yamÌ kutÌ£umba-bharanÌ£amÌ, yaÅ›o 'rthe dharma-sevanam

நேர்மை, நீதி, எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அராஜகம், ,திமிர், அசுர பலம்  கொண்ட கூட்டம்  லஞ்ச லாவண்ய சாஸ்திரத்தில் கரைகண்டு  சமூகத்தில் கொடி பிடித்து  உலவும். அதில்  சக்தி வாய்ந்தவன் ராஜாவாக, நாட்டை  ஆளுபவனாக தலையெடுப்பான். தேர்தல் என்று சொல்ல தெரியவில்லை சுகருக்கு.   ஸ்ரீ. பா.12.2.7

evamÌ prajÄ bhir dusÌ£tÌ£Ä bhir, Ä kÄ«rnÌ£e ksÌ£iti-manÌ£dÌ£ale, brahma-vitÌ£-ksÌ£atra-śūdrÄ nÌ£Ä mÌ , yo balÄ« bhavitÄ nrÌ£pahÌ£
 பஞ்சம், பட்டினி, இல்லாமை, வரிச்சுமை, ஆகியவை  மக்களை வாட்டும் .   இலை ,தழை, காய், கிழங்கு, வேர்,  பூ, காய், எல்லாம் பசியில்  தின்பதற்கு  தேடுவான். கண்ணில்   பட்ட  ஊர்வன, ஓடுவன , நீந்துவன , என்று பிடித்து தின்பான். அழிவான்.  சுகர் ஸார்  ஜாடையாக  பாம்பு, நண்டு, நாய் தின்று கொரானா போன்ற  இயற்கை உற்பாதங்கள்  வரும் என்று சொல்கிறாரா?   ஸ்ரீ பா  12.2.9

Å›Ä ka-mÅ«lÄ misÌ£a-ksÌ£audra-phala-pusÌ£pÄ sÌ£tÌ£i-bhojanÄ hÌ£, anÄ vrÌ£sÌ£tÌ£yÄ vinaÅ„ksÌ£yanti, durbhiksÌ£a-kara-pÄ«dÌ£itÄ hÌ£

குளிர்,  உறைபனி,  புயல், வெள்ளம், அக்னி  வெப்பம், பேய் மழை, இதனால் எல்லாம்  மக்கள்  துன்புறுவார்கள்.  இப்படி இயற்கை துன்பம் இருப்பது  போதாதென்று  தமக்குள் , மத கலவரம், சண்டை, பசி, தாகம், நோய், தீராத கவலை எல்லாம் வேறு வரவழைத்துக் கொள்வார்கள்.   ஸ்ரீ. பா. 1
2.2.10

śīta-vÄ tÄ tapa-prÄ vrÌ£dÌ£-himair anyonyatahÌ£ prajÄ hÌ£  ksÌ£ut-trÌ£dÌ£bhyÄ mÌ vyÄ dhibhiÅ› caiva
santapsyante ca cintayÄ 

அடக்கொடுமையே,  ஒரு சந்தர்ப்பத்தில்  இந்த மக்களின் ஆயுஸ்  30 தாண்டாதாமே. அடப்பாவிகளா  அதற்குள்ளேயே  இத்தனை சாதிப்பீர்களா? ஸ்ரீ  பா. 12.2.11

trimÌ Å›ad vimÌ Å›ati varsÌ£Ä nÌ£i, paramÄ yuhÌ£ kalau nrÌ£nÌ£Ä m
இது நூற்றுக்கு ஆயிரம்  மார்க்  பெறுகிறது.  மக்கள்  தாய் தந்தைகளை, வயதானவர்களை  பராமரிக்க மாட்டார்கள்...  சுகர் மகரிஷி.  நீங்கள் இட்ட சாபமா அல்லது கலியுகத்தில் நடக்கும் என்கிறீர்களா. இதை உங்களால் தடுக்கமுடியுமா  ப்ளீஸ்...   ஸ்ரீ பா.  12.3.42

na rakshishyanti manujah sthavirau pitarav api

ஒருத்தருக்கொருத்தர்  வெட்டி,, குத்திக்கொண்டு மாய்வார்கள்...  ஒரு   பைசாவுக்காக கொலை செய்யக்கூட  மறுயோசனை செய்யவே மாட்டார்கள்.  நட்பு  நல்லுறவு  எல்லாம் காகிதத்தில் தானாம்.  சொந்தக்காரனை விடு,  பெற்றோரையே கூட  காசுக்காக கொல்லத் தயங்க மாட்டார்களாம்.  சுகர்  காலத்தில்  தினத்தந்தி உண்டா?   ஸ்ரீ  பா  12.3.41

kalau kakinike 'py arthe, vigrihya tyakta-sauhridah, tyakshyanti ca priyan pranan, hanishyanti svakan api

கடவுள் பெயரால் தானம் தர்மம்  வாங்கி வயிறு வளர்ப்பார்களாம். பண்பில்லாதவர்கள்.  பார்ப்பதற்கு நல்லவர் போல்  எளியவர்கள் போல் காவி உடை தாடி எல்லாம் இருக்கும். மதம்  தர்மம் சனாதனம்  எதுவும் சரியாக தெரியாதவர்கள்  மதத்தலைவர்கள் போல்  உயர்ந்த பீடத்தில் அமர்வார்கள்.  வாய் கிழிய  ரொம்ப நேரம்  உபதேசிப்பார்கள் என்று சுகர் எழுதியது ஐந்தாயிரம் வருஷத்துக்கு முன்னாலா என்று சந்தேகமாக இருக்கிறது. இங்கே தான் எங்கேயோ ஒளிந்துகொண்டு   இப்போது நடப்பதை பார்த்துவிட்டு அப்போது எழுதியதாக  புருடா விடுவது போல் தோன்றவில்லையா?   ஸ்ரீ.பா. 12.3.38

sudrah pratigrahishyanti, tapo-veshopajivinah, dharmam vakshyanty adharma-jna, adhiruhyottamasanam
பணியாளர்கள், வேலை செய்பவர்கள், எஜமானனிடம் காசு குறைந்துவிட்டது என தெரிந்ததும், அவன் எவ்வளவு தான் நல்லவன், ஊருக்கு உண்மையாக உழைப்பவன் என்று தெரிந்தும், உதாரண புருஷன், யோக்கியன் என்று அறிந்தும்,  அவனுக்கு உதவாமல் வேறு இடம் தேடிக் கொள்வார்கள்.  பரம்பரை பரம்பரையாக  காப்பாற்றினானே  என்ற  நன்றி எண்ணம் துளிக்கூட  மனதில் இருக்காது.  பால் கறக்காத  பசு  நிறைய  காசுக்கு ஆகாரமாவதற்கு  விலை பேசப்படும்.   ஸ்ரீ பா. 12.3.36

patim tyakshyanti nirdravyam, bhritya apy akhilottamam, bhrityam vipannam patayah, kaulam gas capayasvinih

நகரமோ கிராமமோ எங்கு நோக்கினும் கள்வர்கள், கயவர்கள் தான் மலிந்து காணப்படுவார்கள்.  சந்தர்ப்ப வாதிகள், நிரீஸ்வரவாதிகள், பகுத்தறிவாளர்கள், அரசியல் வியாதிகள் என்று  சொல்ல தெரியவில்லையா சுகரே,  அவர்கள் வேதத்திற்கு புது வியாக்கியானம் சொல்வார்கள்.  காசுக்காக, ஜீவனத்திற்காக  படித்தவர்கள், கற்றுணர்ந்த புத்திமான்கள், அர்ச்சகர்கள், எல்லோருமே  தீயவர்களுக்கு   அடிவருடியாக  துணை போவார்கள்.   ஸ்ரீ பா. 12.3.32

dasyutkrishta janapada, vedah pashanda-dushitah, rajanas ca praja-bhakshah, sisnodara-para dvijah

சுகர்  முடிவில் ஒரு சின்ன  ரஹஸ்யம் சொல்கிறார்.   இப்படி எல்லாம் மோசமான நிலை இருந்தாலும்  கலியுகத்தில் ''கிருஷ்ணா '' என்ற ஒரு சொல் ஒருவன் சொல்வானேயாகில் சம்சார கடலில் இருந்து தப்பி  விடுபட்டு விஷ்ணுலோகம் செல்ல வாய்ப்புண்டு''    ஸ்ரீ  பா. 12.3.51 

kaler dosha-nidhe rajann,  asti hy eko maha gunah,  kirtanad eva krishnasya,  mukta-sangah param vrajet



நண்பர்களே, சுகர்  பரிக்ஷித்துக்கு சொன்னது  வாஸ்தவம் போல் தானே இருக்கிறது. '' ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே''... என்கிற சுலப நாமாவளி சொல்லிக்கொண்டே இருப்போம். காசா பணமா? போகிற வழிக்கு  மோக்ஷம் தானாக கிடைக்கும்போதே  விடுவானேன். மோக்ஷம் போவது இருக்கட்டும். சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே போகலாமே..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...