Wednesday, April 15, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை     J K SIVAN
                                                                                                                                                                                51    எங்கும் உண்டு என்றேனோ பிரஹலாதனைப் போல்
                                                                                                                                                                                                                பாகவத  புராணத்தில் ருசிகரமான தகவல்கள் உண்டு.  வைகுண்டத்தில்  விஷ்ணுவின் கேட் கீப்பர்கள்  GATE KEEPERS   ஜயனும்  விஜயனும்.  சனகாதி  முனிவர்கள்
ஒரு முறை  விஷ்ணுவை பார்க்க  அனுமதிக் காததால்  அந்த ரிஷிகளின் சாபத்தால்  ஜெயவிஜயர்கள்   பூமியில்  பிறக்கவேண்டும்.  அவர்களுக்கு  ஒரே   ஆப்ஷன்  OPTION என்ன தெரியுமா?   பல மனித பிறவிகளா அல்லது மூன்று  ராக்ஷச  பிறவிகளா?  எது.?

''நாங்கள்  விஷ்ணுவின்  எதிரியாகவே  சில  ராக்ஷஸ பிறவிகள் எடுத்து அவரால்  வதம் செய்யப்பட்டு  மீண்டும்   இங்கே வரவே விரும்புகிறோம்'   என்று  விரும்பி  சாபத் தால்  சத்ய  யுகத்தில்  அவர்கள்  ஹிரண்யன்  ஹிரண்யாக்ஷன்,  த்ரேதா யுகத்தில் ராவணன் கும்பகர்ணன், துவாபர யுகத்தில்  சிசுபாலன்  தந்தவக்ரன் என்று பிறந்தவர்கள்.

க்ரித யுகம் எனும்   சத்ய  யுகத்தில்,  விஜயன்  ஹிரண்யன்  எனும் ராக்ஷஸ  ராஜா வாக பிறக்கிறான்.   அவன்  பிள்ளை பிரஹலாதன். ஹிரண்யன் விஷ்ணுவின் பரம வைரி . ஹிரண்யன்  தவம் செய்து  பிரம்மாவிடம் வரம் பெற்று   மரணத்தை வெல்ல, பல கண்டிஷன்கள் போட்டு அவை அனைத்திலும்  விஷ்ணுவால் வெல்லப்பட்டு  விஷ்ணுவின்  அவதாரமாகிய  நரசிம்மனால் மரணம் எதுகிறான் என்பது நரசிம்ம சரித்திரம்.

பூரி  ஜெகந்நாதர்  ஆலயம் சென்றவர்கள்  அங்கே விஜயன் சிலை இருப்பதை பார்த்திருக்கலாம்.    எல்லா விஷ்ணு  ஆலயங்களிலும்  துவார பாலர்களாக பெருமாள் சந்நிதி முன்பு வாயிலில்  ஜெய விஜயர்கள் நிற்பதை காண்கிறோம்.

ஹிரண்யனுக்கு நேர்  எதிர் வாரிசு  பிரஹ லாதன்.    எதுவும் எல்லாமே மகாவிஷ்ணு என்பவன்.   ஓம் நமோ நாராயணாய: எனும்  அஷ்டாக்ஷரமந்த்ரத்தை  மூச்சாக கொண்ட வன். மரணத்துக்கு அஞ்சாதவன்.  எவ்வளவோ  முயன்றும்  ப்ரஹ்லாதனை  மாற்ற முடிய            வில்லை  ஹரண்யனால்.    விஷ்ணுவின் மேல் உள்ள    த்வேஷத்தால் சொந்த மகனை
கொல்ல ஆணையிடுகிறான்.

ஹுஹும்.  விஷம், கடல், நெருப்பு,  மலை உச்சியிலிருந்து தள்ளி, சிறை,   எதற்கும்  மசிய வில்லை  பிரஹலாதன். விஷ்ணுவால் எல்லா ஆபத்துக ளிலிருந்தும் காப்பாற்றப்படுகிறான்.
ஹிரண்யனின் முடிவு காலம் நெருங்கி  விட்டது. கோபத்தின் உச்சியில்   ப்ரஹ்லாதனை கேட்கிறான்?

'' யாரடா அவன்  உன் நாராயணன்?. எப்போதும்  அவனையே  புகழ்கிறாய். பாடுகிறாய். உன்னையும்  அவனோடு சேர்த்து கொல் கிறேன். இந்த க்ஷணமே சொல்  எங்கே  இருக்கிறான் உன் நாராயணன்? காட்டு  அவனை?

"அப்பா,  நாராயணன் இல்லாத  இடமே  இல்லை.  அவர் எங்கும்  எதிலும்  காண்பவர் ''

' ஹாஹா  அப்படியா.  எங்குமே  இருப்பவனா அவன்./ ...... எங்கே  சொல்  இதோ நாம்  நிற்கிறோமே இந்த  அரண்மனை மண்டபத்தின்  தூண் இருக்கிறதே அதிலும்  உள்ளவனா.?

''ஆமாம்  அப்பா, சந்தேகமே இல்லை. அவர்  தூணிலும்  இருப்பவர்,துரும்பிலும்  இருப்பவர்''

''ஓஹோ  அப்படியென்றால் உன்  நாராயணனை உன் கண்ணெதிரே வெட்டி வீழ்த்துவதைப்  பார்''...  கோபத்தோடு ஹிரண்யன் உடைவாளை உருவி  எதிரே தோன்றும் ஒரு தூணைச்  சிதைக்கிறான்.

அந்த  தூணிலிருந்து நரசிம்மனாக எம் பெருமான் வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்த விஷயம் நம்  எல்லோருக்குமே தெரியும்.   நரசிம்மன்  தக்க நேரத்திற்காக  காத்திருந்து, இரவுமில்லாத, பகலுமில்லாத அந்தி நேரத்தில், ஆகாயத்திலும் பூமியிலுமில்லாத  தனது தொடையில் அவனை வைத்து,  வீட்டின் வெளியிலும் உள்ளேயும் இல்லாத  வாயிற் படியில் அமர்ந்து,  மனிதன் தேவர்கள், மிருகம்  எதுவுமில்லாத  பாதி சிங்கம், பாதி மனிதனான நரசிம்மம் ,  எந்த ஆயுதமும் இல்லாத  தனது நகங்களால், ஒரு சொட்டு ரத்தம் கீழே விழாதவாறு அதை குடித்து  ஹிரண்ய கசிபுவை  கொல்வது  ஆச்சர்யமான வர்ணனை.  எழுத   நூறு பக்கம் ஆகிவிடும்.

திருக்கோளூர் பெண்பிள்ளை  விவரமானவள். எல்லாம்  விறல் நுனியில் வைத்திருப்பவள்  அல்லவா?

''ஸ்ரீ ராமானுஜரே , என்னை திருக்கோளூரில் ஏன்  வசிக்காமல் வெளியூர்  செல்கிறாய் என்று கேட்கிறீர்களே, நான் நான் என்ன  ப்ரஹ்லா தனைப் போல   எங்கு ம் எதிலும்  நாராயணன் உண்டு என்று நம்பியவளா? நிரூபித்தவளா? எனக்கு என்ன யோக்கி யதை இருக்கிறது இந்த புண்ய க்ஷேத்ரத்தில்  வாசம் செய்ய , சொல்லுங் கள்?  என்று கேள்வி கேட்டு  மடக்குகிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...