Thursday, April 30, 2020

THIRUKKOLOOR PEN

திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

54 கண்டு வந்தேன் என்றேனோ
திருவடியைப் போலே

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரிய திருவடி கருடன். சிறிய திருவடி ஹனுமான். இங்கே சின்ன திருவடி ஹனுமான் பற்றி பேசுகிறோம். சமீபத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் 8-9வது படிக்கும் குழந்தைகளை சந்தித்தபோது ஒரு பெண் ஹனுமான் யார் சொல் என்ற கேள்விக்கு பாரதத்தில் வரும் ஒரு அசுரன் என்றாள் . அந்த அதிர்ச்சி ஆச்சர்யம் இல்லை. குழந்தைகளுக்கு வீட்டிலோ, பள்ளியிலோ நமது இதிகாசங்கள் அறிமுகம் இல்லை. தானாக தெரிந்துகொள்ள புத்தகங்கள் படிக்கும் வழக்கமோ டிவியில் நல்ல விஷயங்களோ இல்லை.
வாட்சப்பில் FB யில் ஈடுபாடு நிறைய எல்லோருக்கும் இருப்பதால் முடிந்தவரை வரை அதில் சொல்லி தருவோம்.. ராமா
யணத்தில் சீதையை ராவணன் ஒருநாள் திடீரென்று தூக்கிச் சென்று விடுகி
றான். ராமனும் லக்ஷ்மணனும் அவளை தேடி அலைகிறார்கள். வழியில் கிஷ்கிந்தா எனும் வானர பிரதேச அரசன் சுக்ரீவன் அவன் மந்திரி , ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின் அரசனும் அவன் அமைச்சன் ஹநுமானும் நண்பர்களாகி ராமன் இலங்கையில் சீதையை கண்டுபிடிக்கிறான். பிறகு சுக்ரீவன் படைகளோடு ராமலக்ஷ்மணர்கள் இலங்கைக்கு சேது பாலம் அமைத்து சென்று ராவணாதியர்களை கொன்று சீதை மீட்கப்படுகிறாள்.
தெற்கு திசையில் தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணை யிட்டான். கடல் தாண்டி சென்ற ஹனுமா ன், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார்.
சீதையை தேடிச்செல்ல பல திசைகளுக்கும் வானர வீரர்கள் செல்கிறார்கள். தென் திசை தேடும் வீரர்களில் ஹனுமான் ஒருவன்.
ஹனுமான் பிரபாவம் நிறைய எழுதி இருக்கிறேன். இங்கே இந்த அளவு போதும். ஹனுமான் சொல்லின் செல்வன். கெட்டிக்காரன். தைரியசாலி, மகா பலம் கொண்டவன். கடலை தாண்டி சென்று இலங்கையில் இறங்கி சீதையை கண்டு பிடிக்கிறான். அவள் இவனை பார்த்ததில்லை, என்பதால் ராமதூதன் என்று நிரூபிக்க ராமன் கொடுத்த கணையாழியை தருகிறான். விரைவில் ராமர் வந்து மீட்பர் கவலை வேண்டாம் என்று தைரியம் சொல்லி அவளை சந்தித்ததற்கு சாட்சியமாக அவளது சூடாமணியை வாங்கி சென்று ராமனிடம் கொடுக்கிறான்.
ஆவலோடு ஹனுமான் நல்ல சேதி கொண்டுவர காத்திருந்த ராமன் முன்பு பறந்துவந்து குதிக்கிறான். முதல் வார்த்தை ''கண்டேன் சீதையை'' அப்புறம் விவரம். அந்தக்காலத்தில் தந்தி இப்படி தான் சுருக்கமாக வார்த்தைகளில் அடிப்பார்கள். முக்கிய சேதி இப்படி தான் பரவியது. போஸ்ட் கார்ட் எழுதினாலும் க்ஷேமம் என்கிற வார்த்தை தான் முதலில் இருக்கும்.
ஹனுமானின் சமயோசிதத்தை கண்டு மகிழ்ந்த ராமர் அவனை ஆரத்தழுவுகிறார்.
இதை நினைவு கூற வைக்கிறது இன்று நமக்கு யார் தெரியுமா?
திருக்கோளூர் எனும் ஊரில் இருந்து மூட்டை முடிச்சோடு வெளியேறி வேறு ஊருக்கு செல்லும் ஒரு பெண்மணி. அவளை ராமானுஜர் கேட்கிறார்.
''இது தானே திருக்கோளூர் எனும் க்ஷேத்ரம்?''
''ஆமாம் ஐயா''''
நீ இந்த ஊரா அம்மா?'
ஆமாம் ஐயா''''
எங்கே மூட்டை முடிச்சோடு செல்கிறாய்?'' ''வேறே ஊருக்கு வாழ செல்கிறேன்'
''அம்மா என்ன இது ஆச்சர்யமாக இருக்கி றதே, எங்கிருந்தெல்லாமோ விசாரித்து, தேடிக்கொண்டு ஒவ்வொருவரும் திருக்கோளூர் எனும் இந்த புனித க்ஷேத்ரம் ஒருமுறையாவது வந்து சேரமாட்டோமா, பாக்யமிருந்தால் இங்கே வசிக்கமாட்டோமா என்று ஆசைப்படுகிறார்களே . நீ எதற்கம்மா இந்த க்ஷேத்ரத்தை விட்டு வேறு எங்கோ செல்ல நினைக்கிறாய்?
அதற்கு தான் அவள் பதில் சொல்கிறாள்
.''ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன, சிறிய திருவடி ஹநுமானைப் போல கேட்க சுகமாக ஒரு நல்ல வார்த்தை பெருமாளுக்கு சொன்னவளா, அவரை மனம் மகிழ்ச்சி செய்தவளா? எனக்கு என்ன யோக்கியதாம்சம் இருக்கிறது இந்த புனித க்ஷேத்ரத்தில் வசிப்பதற்கு?'' என்கி றாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...