Saturday, April 18, 2020

PESUM DEIVAM



PESUM DEIVAM  J K SIVAN
'இவரே  எங்கள்  தெய்வம்''

அவர் ஒரு பிரபல எழுத்தாளர். பிரபல  வாராந்திர பத்திரிகை ஆசிரியர். பிறகு  தானே ஒரு  பத்திரிகை  ஆரம்பித்து அதன் ஆசிரியராக  இருந்து அந்த  பிரபல வார பத்திரிக்கை   எண்ணற்ற தமிழர்  வீடுகளில் விரும்பி படிக்கப்பட்டது.   அவரது  வெளிநாட்டு  பயண கட்டுரைகள்  நல்ல வரவேற்பை பெற்ற காலம்.  அவர்  பல நாடுகளுக்கு  பறந்து  ஆங்காங்கு  பார்த்தவர்கள்,  பார்த்தவைகள், பார்க்க வேண்டிய வைகள்   பற்றியெல்லாம் ரசிகர்கள் மகிழ ருசிகரமாக எழுதுபவர். 

இதையெல்லாம் விட  முக்கியம் அவர் காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் பரம  பக்தர். எங்கு  சென்றாலும் மஹா பெரியவா  படம் இல்லாமல்  செல்ல மாட்டார்.  தினமும்  அந்த படத்தை  எடுத்து   வைத்துக்கொண்டு மனசார பூஜை பண்ணி வணங்கிவிட்டு தான்   மற்றைய வேலைகள்.
ஒரு தடவை உலக பயணத்தில்  எங்கோ  ஒரு மூலையில் உள்ள  நாட்டில்  ஒரு  முடுக்கு  நகரத்தில்  அவர்  தங்கி  அந்த  ஊரைப்பற்றி  விவரங்கள்  சேகரிக்க முயன்றார்.   அவரது  நண்பர்  ஒரு   ஆங்கிலேயர்  அங்கு  அப்போது இருந்ததால்  அந்த  ஊருக்கு  சென்றி ருந்தார்.
எழுத்தாளர் வந்து  அந்த ஊரில்  தங்குவதற்கு,  தங்க,  சௌகர்யமாக  இருக்க,  அந்த ஊரில்  இருந்த தனது உறவினர் வீட்டில்  எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்  வெள்ளக்கார நண்பர்.   எழுத்தாளரும்  அந்த  வீட்டிற்கு  சென்றார்.  தனி  அறை . அதில்  அவர்  தங்கியிருந்தபோது   ஒரு நாள்  காலை  நண்பரும் அவர் உறவினருமான வெள்ளைக்காரர்கள்  எழுத்தாளர் அறைக்கு வந்து அவர் சௌகர்யங்கள் வசதி பற்றி விசாரிக்க வந்தார்கள்.

அப்போது  காலை  வேளை.   எழுத்தாளர்   அந்த அறையில்  மஹா பெரியவா படத்தை   மேசையில்  வைத்து வணங்கிக்  கொண்டிருந்தார்.
வீட்டின் சொந்தக்காரர்  மஹா பெரியவர் படத்தை பாரத்தை ஆச்சர்யமாக  பார்த்தார்.
''படத்தில் இருப்பவர் யார்?"
"அவர் நான் வணங்கும் தெய்வம்"
'' நீங்கள்  எந்த  மதத்தினர்?
''இந்துக்கள்''
''இந்து  கடவுள்கள்  நிறைய  கைகள், தலைகள்,  ஏதோ  ஒரு  பட்சி அல்லது  மிருகத்தின்   மேல்  --   இப்படி தான்  எனக்கு  அறிமுகம். இந்த  கடவுள்  யாரோ  ஒரு  கிழவராக இருக்கிறாரே''
''நீங்கள்  சொல்வது  வாஸ்தவம். இவர்  நம்மைப்போல்  இந்த  உலகில்  மனிதனாக  இருப்பவர்.  மிக எளிமை யானவர்
''ரிஷிகள்  என்று சொல்வார்களே  உங்கள் ஊரில்? இவர்  அவரா?''
''இவர்  ஒரு  சக்தி வாய்ந்த  தெய்வம், ரிஷியும்  கூட''

"சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? அப்படியென்றால்   நாம் நினைத்தது   நிறைவேறுமா? .
அந்த  வெள்ளையர் குரலில்  ஆர்வமும் ஆவலும்  இருந்தது. 
 ''நாம் அவரை  உண்மையாக  வேண்டிக் கொண்டால்,  நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த கருணைக் கடல் அதை நிறைவேற்றிவைப்பார்''
.''நிச்சயமாகவா?''
''எள்ளளவு  சந்தேகமும் எனக்கில்லை. நான்  அவர்  பக்தன்.   எழுத்தாளரின் குரலில் இருந்த  அழுத்தம் சொன்ன தோரணை, அவர் குரலில் ஒலித்த  பக்தி,   வெள்ளையரை  நம்பச் செய்தது.

''நானும்  அவரை வேண்டிக் கொண்டு  என்  குறையை,முறையீட்டை  சொன்னால்  உதவுவாரா"?   
வீட்டுக்கார  வெள்ளையர்  குரலில்  அவர் மனதில் ஆழத்தில் இருந்த  சோகம்,   ஏக்கம் த்வனித்தது .

'' அவருக்கு  எந்த  வித்தியாசமும் கிடையாது.   நம்பிக்கையோடு  யார்  வேண்டினாலும்  குறை நிவர்த்தி செய்வார்''
இப்போதே  வேண்டிக்கொள்ளவா?
தாராளமாக.
"என் மகன் எங்கோ போய்விட்டான்...சில  மாதங்கள்  ஆகிவிட்டது.  அவனைப் பிரிந்து  என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள்.  உடலில் நோய்  பாதிப்பு.  எங்கு தேடியும்  எனக்கு  ஒரு சேதியுமில்லை.  அதனால் தான் நீங்கள் சொன்னதில்  ஒரு நம்பிக்கை.

"எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியு ங் கள்..உங்களுக்கு அவரது அருள் நிச்சயம்கிட்டும்.

டப் பென்று   அந்த  வெள்ளைக்காரர்  சிலைபோல்  அங்கேயே  அந்த  இடத்தி லேயே  மகா பெரியவா   படத்தின் முன்பு  அமர்ந்து கொண்டார்.  கண்கள்  மூடியிருந்தது.  கைகளை சேர்த்து  கட்டிக் கொண்டிருந்தார்.  நேரம்  நழுவியது.  நிசப்தம்.  சுமார்  அரை மணி  நேரத் திற்கு  பிறகு   கண்களை திறந்தார்.

''  நண்பரே,என்னவோ  தெரியவில்லை,  என்  மனம்  இப்போது ரொம்ப  லேசாகி விட்டது. இந்த  மனித  தெய்வத்தின் படத்தின் முன் மனமுருகி வேண்டி எனக்கு  அருள் புரியும்படி வேண்டிக் கொண்டேன்''என்கிறார் வெள்ளையர்.

சில மணி நேரம் அந்த  அறையில்   மகா பெரியவா பற்றிய  விஷயங்கள்  பற்றி வெகு ஆர்வமாக அவர் பக்தியோடு  கேட்டுத் தெரிந்துகொண்டார்.  இன்னும் அவரைப் பற்றி அறிய  புத்தகங்கள் கேட்டார்.  இந்தியா வந்து அவரை தரிசிக்க ஆவல்  என்கிறார். அப்போது  தான் அந்த வெள்ளையர் வீட்டில்  அவர் வசிக்கும் அறையில்  வீட்டு போன் ஒலித்தது.  ஆங்கிலேயர் போய் போனை   எடுத்தார்.
''யார்  பேசுவது ?''
''என்ன  அப்பா  என்  குரல்  மறந்து போய்  விட்டீர்களா""   --   காணமல்   போன அவர்  பையன்.
போனில் வந்த செய்தி அவருக்கு அளவுகடந்த வியப்பைஅளித்தது. காணாமற்போன அவரதுமகன்தான் பேசினான்,  தான் ஒரு நண்பனோடு  ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்ற தாகவும், இப்போது ஊருக்கு வந்து விட்டதாக வும், இன்னும் சற்று நேரத்தி ல்  வீட்டுக்கு வருவதாகவும் சொன்னான்.
வீட்டுக்கார வெள்ளையருக்கு  மெய் சிலிர்த்தது. பேசும் தெய்வம்  மஹா பெரியவா படத்தை  வணங்கிவிட்டு எழுத்தாளரை   இருகக்   கட்டிக் கொண்டார்.   கண்களில்  ஆறாக கண்ணீர். 
 "உங்கள் தெய்வம்.மட்டும் அல்ல,  எங்கள் தெய்வமும் இனி இவர்தான்....இந்த உருவில் தான்  எங்கள்  தெய்வத்தையம்  இனி பார்ப்போம்"

என்று அவர் மனைவியும் அவரோடு சேர்ந்து உரக்க  கூறினாள் . கடல் கடந்து எங்கேயோ வாழ்ந்த  வெள்ளைய  தம்பதிகள்  தாங்கள் அனுபவித்த  அதிசயத்தில்,  ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.

  ''மணியன்   உங்களுக்கு  நன்றி''  என்று  அந்த  தம்பதிகள்  மனமுவந்து  சொன்னார்கள்.  

ஆம்  அந்த   எழுத்தாளர்   இதயம் பேசுகிறது ஞானபூமி   ஆசிரியர் மணியன்  தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...