Tuesday, December 31, 2019

THIRUVEMBAVAI

திருவெம்பாவை   J K   SIVAN  

                                        16.         ஊருக்கெல்லாம் சோறு

மணி வாசகர் எழுத்து மனதை மிருதுவாக  தடவிக்கொடுக்கும் தன்மை கொண்டது. அந்த தொடுதலில் பக்தியும் அன்பும்  கலந்திருக்கும்.  தேனும்  பாலும் போல.  நமக்கு  ஊட்டமளிக்கும்  உணவை, உடலுக்கு அல்ல, உள்ளத்துக்கு தருவது.  இப்படி  உணவளிக்க  ஒரு  ஊரே தமிழகத்தில் உண்டு. அந்த ஊர் பற்றி சொல்கிறேன்.
அதற்கு முன் இன்றைய  திருவெம்பாவை பாடலை  அறிவோம்;

16. முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

''மேகமே! முதலில்  நீ   இந்தக் கடல் நீரைக் குடி. நிறைய குடி. பிறகு எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு மேலே காட்சி தா. எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, மின்னலாக பளிச்சிடு . எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, இடி இடித்து சப்தம் செய். அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது  அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று தேன் மழையாக நிறைய விடாமல் பூமி குளிர பொழிவாயா?'' என்று கேட்கிறார் மணி வாசகர்.  ஒரு சிறு பெண் வாயிலாக.  


நான்  நங்கநல்லூரில்  சில  நண்பர்களோடு  ஒரு முறை  திருவையாறு சப்தஸ்தான யாத்திரை சென்றேன். அந்த  ஏழு  ஊர்களில் , சப்த ஸ்தானத்தில், ஒன்று  ''திருச்சோற்று துறை''   எனும்  ஸ்தலம். ஓதனவனேஸ்வரர் என்று சிவனுக்கு அங்கே  நாமம்.   
 நம்மைப்போல் சிவன் ஒரு மேனி கொண்டவன் அல்ல, உமையொரு பாகனாதலால் திருமேனி ஒன்றாய் பலவாய் காண்பது. சிவனை வரையறுத்து சொல்ல வார்த்தைகள் இனி பிறக்கவேண்டும். எந்த வேதமும், தேவர்களும், ரிஷிகளும், முனீஸ்வரர்களும், அறியா பழமனாதி அல்லவா அவன். அவனை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள அன்பு ஒன்றே போதும். எங்கும் நாம் தேடிக் காணாமுடியா அவனை அடியார் நெஞ்சங்களில் எளிதாக உணரலாம். குறை குற்றம் அற்ற ஏற்றம் கொண்டவன்.  அவன் யார், எந்த ஊர், என்ன பேர், உறவினர் யார், உற்றார் யார், பெற்றார் யார் எதுவுமே அறியமுடியாத ஆச்சர்யமாக அல்லவோ உள்ளான். பேசாமல் இரு கை சிரத்தில் வைத்து ஓம் நமசிவாய என்று சொல்லி மனம் நிறைவது ஒன்று தான் வழி.

இப்படிப்பட்ட ஒரு சிவனை சப்தஸ்தான க்ஷேத்ரம் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் கண்டேன். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது திருச்சோற்றுத்துறை. சோற்றுத்துறைநாதர், ஒதவனேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவன் இங்கே ஸ்வயம்பு. அப்பர், சுந்தரர், சம்பந்தர் தரிசித்து பாடல் பெற்றது.

சிவனின் வாஹனமான  நந்திகேஸ்வரன்  திருமணத்தின் போது அனைவருக்கும் இந்த  ஸ்தலத்திலிருந்து 
 தான் உணவு சென்றது. சிவன் சோற்றுத்துறை நாதர் என்றும் அம்பாள் அன்னபூரணி என்றும் பெயர் கொண்டதிலேயே இது  தெரிகிறது. அடியார் பசிதீர உணவு தரும் தலம். காவிரி தென்கரையில் 13வது சிவஸ்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் மூன்றாவது ஸ்தலம். இங்கே தான் சப்தஸ்தான விழாக்காலத்தில் அனைவருக்கும் அன்ன தானம் .

முகப்பு வாயலின் மேற்புறத்தில்  சுண்ணாம்பு  சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார்கள்.

வாசலைக் கடந்து உள்ளே விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் .வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன. .வெளிப் பிரகாரத்தின் தென் கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அருள் பாலிக்கும் அன்னபூரணி. ஒப்பிலாம்பிகை. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவன் தொலையாச் செல்வர்.அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.

இரண்டாவது வாசலைத் தாண்டி நுழைந்தால் பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை. நேரே பார்த்தால் மூலவர் சந்நிதி. தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருள் பாலிக்கிறார்.

ஒரு முறை திருச்சோற்றுத்துறை மற்றும் பகுதிகளில் வறட்சி. பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடியபோது அருளாளர் என்ற சிவபக்தர் " பரமசிவா, இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று கதற, ஜோ என்று மழை பொழிய ஊர் வெள்ளக் காடானது. அதில் ஒரு பாத்திரம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார்.

அந்த அக்ஷய பாத்திரத்தால், ஊரில் எல்லோருக்கும் சோறும், , நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலைகளை பார்க்கலாம்.

அர்த்த மண்டபத்தில் நுழைந்ததும் கண்ணில் படுபவர் ஆறுமுகப் பெருமான். தனிக் கோயிலில் அம்பாள் திருமணக்  கோலமாக காட்சி தருகிறாள். முதலாம் ஆதித்த சோழன் காலத்திய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. சோழர் காலக் கல்வெட்டுக்கள் யார் யார் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்
காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்தார்கள் என்பதை நம்மால் படிக்க முடியாத தமிழ் எழுத்தில்  சொல்கிறது.

சித்திரை பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். இது தான் சப்தஸ்தான விழா.

MARGAZHI VIRUNDHU



s
மார்கழி விருந்து    J K   SIVAN 



                                 16.      மணிக் கதவம் தாள் திறவாய்

வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். இந்த குளிர் மட்டும் பொல்லாதது. துளிக் கூட நிம்மதியாக இருக்க விடுவதில்லை. குளிரும் பனியும் பெரிசுகளுக்கு பரம வைரி. வெட வெட வென்று நடுங்கிக் கொண்டு கம்பளிகளுக்குள்ளே மறைந்து கண் மட்டும் ரெண்டு வெளியே தெரியும். இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாகவே குளிர் நடுங்க வைக்கிறது.

ஆனால் ஆயர்பாடியில் நிலைமையே வேறு. சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் சுகமாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள். 
மற்ற பெண்களையும் எழுப்பி நீராட வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,  உள்ளும்  புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் தா என்று வேண்டுகிறார்கள். சொட்ட சொட்ட  ஈர ஆடையை பிழிந்து சுற்றிக்கொண்டு அந்தப் பெண்கள் இதோ யமுனைக் கரையில் இருக்கிறார்கள். அவர்கள் நீராடி நோன்பிருந்து கூட்டமாக நின்று கொண்டிருக் கிறார்கள்.

'ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்?''

'நந்தகோபனது அரண்மனை போன்ற வீட்டுக்கு.     இன்று என்ன விசேஷம் தெரியுமா? 
இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் ஈட்டி போன்ற ஆயுதங் களோடு காவல் காத்துக் கொண்டிருக்கிறான். யாரும் உள்ளே நெருங்க முடியாது. கண்ணனைக் கண் போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். ஏன்?   நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்படும் ராக்ஷஸர்கள் மூலம் எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாமே? சொல்லிவிட்டா வருவார்கள்? நாம் தான் ஜாக்கிரதையாக குட்டி கிருஷ்ணனை காப்பாற்றவேண்டும்!! என்ற நினைப்பு அந்த வாயில் காப்பானுக்கு. அவனைக் காப்பதே அந்த கண்ணன் தான் என்று அவன் எப்படி அறிவான். அறிந்தால் ஏன் ஈட்டி வேல் பிடித்துக்கொண்டு வாசலில் நிற்கிறான்?

'சிறுமிகளா , யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த வேளையிலே இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு.?''

''ஐயா வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய உங்களது கோட்டை மணிக்கதவைக் கொஞ்சம் திறவுங்கள் எங்களை கொஞ்சம் உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்.

'' சிறு பெண்களா யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் தடுக்காமல் குறுக்கிடாமால் தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.

''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்த வர்கள். கோபியர் குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள்.புரிகிறதா?'' என்றால் ஆண்டாள்.

''நான் கிருஷ்ணனையே நேரில் கேட்டு அனுமதி தருகிறானா என்று தெரிந்து தான் உங்களை உள்ளே விடமுடியும். அதுவரை வெளியே நில்லுங்கள்'' என்றான் வாயில் காப்போன். அவர்கள் அங்கேயே பாடிக் கொண்டு நின்றார்கள். உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே அனுமதித்தான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

வில்லிபுத்தூரில் அப்போது---

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் நேரம் தான் அந்த ஆஸ்ரம வாயிற் கதவைத்  திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள். அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே பார்த்துக் கொண்டிருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு மாற்றிக்கொண்டு வந்து பாடினாள். மேலே ஆயர்பாடியில் நாம் கண்ட காட்சி அவள் செய்த அந்த அற்புதக் கற்பனை,  தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

‘’'அம்மா கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்ல  லங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன்?''     சிரித்தாள் கோதை.

சொல்கிறேன் கேள். முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' யோசித்து பதில் சொல்?

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?'' சிரித்துக்கொண்டே கேட்டாள் கோதை.

''கிருஷ்ணனை வேண்டித்தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம் என்பதால் தான்.

பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி பாதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லி   விட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் விஷ்ணு சித்தர்.

Monday, December 30, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K  SIVAN

                                      
   35  இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே

நமது பாரத தேசத்தின் இரு கண்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றை எழுதியவர்கள் இரு ரிஷிகள். ராமாயணத்தை வால்மீகி முனிவர் இயற்றினார். 24000  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்கள். 7000 வருஷங்களுக்கு முன்பு ராமர் காலத்தில் வாழ்ந்ததாக அறிகிறோம்.

ஒரு சாதாரணனும்  கூட  ரிஷி யாகி  ராமாயணம் இயற்ற முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் வால்மீகி.  ராமாயணம் கதை அல்ல. அது ராமனின் வாழ்க்கை சரித்திரம், வால்மீகியும் த்ரேதா யுகத்தவர்.அவர் எழுதிய ராமாயணத்தில்  ராமனை சந்தித்தது  சீதையும் அவளுடைய   இரண்டு பிள்ளைகளையும்  ரக்ஷித்தவர்   என்ற  காட்சிகளும் உண்டு.   ராமர்  வால்மீகியை சந்தித்தது  வனவாசத்தில். 

ஒரு சந்தர்ப்பத்தில்  துணிவெளுக்கும் வண்ணான் வீட்டில் நடந்த சம்பாஷணையை கேட்ட  ஒரு இரவு ரோந்து காவலன்  சீதையை தரக்குறைவாக அந்த வீட்டில் பேசியதை கேட்டு  மறுநாள்  அதை ராமனிடம் கூறுகிறான்.  ராமர்  சீதையை இதனால் அரண்மனையை விட்டு  காட்டுக்கு  அனுப்புகிறார். அவள் அப்போது  பூரண கர்ப்பவதி.

''லக்ஷ்மணா,  சீதைக்கு  இனி  இங்கே  இடமில்லை.   நீ  உடனே அவளைக்  காட்டில் கொண்டு விட்டுவிட்டு வா...''  

ராமனின்  ஆணையை  மீறமுடியாத லக்ஷ்மணன் அவளைக் காட்டில் வால்மீகி முனிவர் ஆஸ்ரமம் அருகே  கொண்டு விடுகிறான்.  தனது ஆஸ்ரமம் அருகே  ஒரு அபலைப்  பெண் பூரண கர்ப்பவதியாக கைவிடப்பட்டிருப்பதை கண்ட முனிவர் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து  சீதை சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளைப்  பெறுகிறாள்.  வால்மீகி அந்த ரெட்டையருக்கு லவன் குசன் என்று நாமகரணம் செய்கிறார்.  ராமாயணத்தை முழுதும் அவர்களுக்கு கற்பிக்கிறார். முதன் முதலில் ராமாயணம் அறிந்தவர்கள்  லவனும் குசனும் தான்.  பின்னர் அந்த இரு குழந்தைகளும் ராமரின் அஸ்வமேத யாகத்தின் போது  அயோத்தியில் ராமாயணத்தை பாடுகிறார்கள். 

''ஜகம் புகழும் புண்ய கதை....   ''பாட்டு  மறக்கமுடியாத ஒரு அருமையான ராகமாலிகை பாடல் இன்றும் கேட்க  இனிமையானது.  நீங்களும்  கேட்டிருப்பீர்கள். 

வால்மீகியைப் பற்றி ஒரு  விஷயம். பிறந்தபோது  அவரது பெயர்  அக்னி சர்மா.   ப்ருகு கோத்ர  பிராமணர்.  ஒரு நாள் நாரதரை சந்திக்கிறார்.  ''மரா மரா '' என்று  விடாமல் சொல்லு  என்று உபதேசம் பெற்று  ''ராம'' த்யானம் அவரை முழுதும் ஆட்கொண்டு சிலையாக அமர்ந்து அவர்மேல்  கரையான் புற்று கூட மலை போல் உருவாகி,  அவர் பெயர்  வால்மீகி ஆகியது.  வால்மீகி என்றால் ''புற்றிலிருந்து'' உருவானவன் என்று அர்த்தம். ரிஷியாகி விட்டார்.

ஒரு நாள் கங்கைக்கரையில் சிஷ்யன் பாரத்வாஜனோடு ஸ்னானத்திற்கு சென்றபோது   தமசா எனும் ஒரு சிற்றாறு  குறுக்கிடுகிறது.  

''பாரத்வாஜா, எவ்வளவு அழகான நீரோடை பார்த்தாயா, பளிங்கு மாதிரி பரிசுத்த நீர்,  நல்லோர் இதயம் மாதிரி தெளிவானது,   இன்று இங்கே ஸ்னானம் செய்வோம் என்று அருகில் செல்கிறார்.  அங்கு  ஒரு ஜோடி கிரவுஞ்ச பறவைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.  அவைகளை ரசித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ எய்யப்பட்ட ஒரு அம்பு ஆண் பறவையை  ஸ்தலத்திலேயே  கொன்றுவிட,   பெண் பறவை கதறி அழுது தானும்  உயிர் விடுகிறது.   சில வினாடிகளுக்கு முன்பு அங்கு நிலவிய  சந்தோஷம், ஆனந்தம், அடுத்த கணத்திலேயே  மீளாத  சோகத்தில், மரணத்தில் முடிகிறதை கண்கூடாக காண்கிறார்.   ஆழ்ந்த சோகம் அவரது நெஞ்சை பிழிகிறது.  அதேசமயம்  யார் இதற்கு காரணம் என்று கோபம். 
 யார்  அம்பை எய்தது என்று திரும்பி பார்க்கும்போது ஒரு வேடன் கையில்  வில்லோடு  வணங்குகிறான்.

मा निषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः।यत्क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम्॥
'mā niṣāda pratiṣṭhā tvamagamaḥ śāśvatīḥ samāḥyat krauñcamithunādekam avadhīḥ kāmamohitam

''இனி உனக்கு வாழ்வில் நிம்மதி கிடையாது. தீங்கு செய்யாத, சந்தோஷமாக  ஆனந்தமாக  விளையாடிக் கொண்டிருந்த ஜோடிப்பறவைகளில்  ஒரு  பறவையை காரணமின்றி கொன்ற உனக்கு இது தான் தண்டனை''  என்று சபிக்கிறார் வால்மீகி.

இது தான் ஸமஸ்க்ரிதத்தில்  வால்மீகியிடமிருந்து புறப்பட்ட  முதல் ஸ்தோத்ரம். பிறகு  ப்ரம்மா ஆசிர்வாதத்தால் ஆதி கவி  வால்மீகியால்    ராமாயணம் இயற்றப்படுகிறது.

விஷ்ணு தர்மோத்தர புராணம்  வால்மீகி த்ரேதா யுகத்தில் ப்ரம்மா அம்சமாக  அவதரித்து ராமாயணம் எழுதினவர் என்கிறது.  அவரே  பின்னர் கலியுகத்தில் துளசிதாசராக அவதரித்தவர்.

நமது சென்னையில்  திருவான்மியூர்  வால்மீகி பெயரால் உருவானது. திரு வால்மீகி ஊர் தான் திருவான்மியூரானது. 

1300 வருஷ  வால்மீகி கோவில் ஒன்று வடக்கே  இருக்கிறது.   உ.பி. யில்  திரிவேணி  அருகே உள்ள  தமஸா   நதிக் கரையில்  பித்தூர்  என்ற கிராமத்தில்  வால்மீகி ஆஸ்ரமம் இருக்கிறது  அங்கே தான் சீதையை லக்ஷ்மணன் கொண்டு விட்டான். அங்கே தான்  லவ குசர்கள்  பிறந்தார்கள். அங்கே தான்  வால்மீகி ராமாயணம் எழுதினார். அந்த நதியை கடந்து அக்கரையில்  ஆஸ்ரமத்தை அடையலாம்.   இல்லை யென்றால் சுற்றி வந்து  கண்டகி நதி பாலத்தின் மேல் சென்று அக்கரையில் ஆஸ்ரமத்தை  அடையலாம்.இப்போது  தமஸா  நதி இரு கிளைகளாக  பூர்ணபத்ரா, தாம்ர பத்ரா  சிற்றாறுகளாக  செல்கிறது.  

திருக்கோளூர் பெண்மணி  இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.   ராமானுஜருக்கு பதிலளிக்கையில் 

“வால்மீகி போல், ஸ்ரீ இராமருக்கு சேவை புரிந்தவளா, ரெண்டு  இளவரசர்களை வளர்த்தவளா?  நான் எப்படி திருக்கோளூரில் வசிக்க பொருத்தமானவள்?'' என்று  கேட்கிறாள்.

   

MARGAZHI VIRUNDHU



மார்கழி  விருந்து   J K   SIVAN
                                                           

                         
     15        ''நானே தான் ஆயிடுக''

கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இப்போது அது  வேகமாக  மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம் போய் விட்டது. பக்தி கோவில் பண்பு அனைவரையும் இணைத்திருந்த நிலை மறைந்து விட்டது. நகரத்தின் நரக வாழ்க்கை அங்கேயும்  இடம் பெயர்ந்து விட்டது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை.

ஆயர்பாடியில் ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு. அந்த ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக உற்சாகமாக கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களையும் விடியற் காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பை பண்போடு செய்ய வைக்கிறாள் என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.

வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். ஒருவார்த்தை சொல்லி வைக்கிறேன் ஜாக்கிரதை.   வைதேகி பொல்லாத வாயாடி!

“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!” ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் அவள் பதிலுக்கு குரல் கொடுத்தாள் .

“ஆண்டாள் உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே. இவ்வளவு சீக்கிரமே ஏண்டி வந்து என்னை எழுப்புகிறாய். மற்ற எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர்? அதற்குள் என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,

“எல்லாருமே வந்தாகிவிட்டது. யமுனை நதிக்கும் கிளம்பி நடந்தாய்விட்டது. . இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பற்றி நீ அடிக்கடி  ''கஜ ஸம்ஹாரா ''  என்று  நீட்டி  இழுத்து  பாடுவாயே அதை நாங்கள் எல்லோரும் கேட்க வேண்டும்.  ஆகவே   நீ உடனே அதைப் பாட சீக்கிரமாக எழுந்து   வெளியே வாடி”

யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகத் தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில்அவளுக்கு நிகர் அவளே தான். படுக்கையில் கிடந்த அந்தப்பெண் எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள்,யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். அவள் சிறப்பாக பாடினாள். அந்த கிருஷ்ணனே அவள் பாட்டைக் கேட்டு மயங்கினான். அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.

ஆயர் பாடியில் நம் வேலை முடிந்து இனி வில்லிப்புத்தூருக்குச் சென்று அங்கே நடப்பதைப் பார்ப்போம்

ரங்கமன்னார்  கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். பெரியாழ்வார்  தனது  மகள் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றிச் சொன்னதில் அவருக்கு பரம சந்தோஷம். தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து பாசுரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க வந்துவிட்டார்.

''கோதை,   ரங்கபட்டருக்கும்   ஒரு தடவை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கிறார்.   அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதைக் கேட்கிறேனே.''

கோதை அமர்ந்தாள் . எதிரே இருந்த ஓலைச்சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் அவள் குரலில் வெளியேறி அந்த நந்தவனத்தில் இருந்த மரம் செடி கொடிகளும் ஆர்வமாக கேட்ட பாசுரம் இது தான்.

''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு, தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த மகாலட்சுமி தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தான் நிச்சயமாக தோன்றுகிறது. இதிலே பொருந்தியிருக்கிற உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும். எனக்கு  புரிஞ்சிக்கிற  சக்தியில்லை ''

''ஒருத்தர் கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும்.'' ஆயர்பாடியிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவனாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும். லோக க்ஷேமத்துக்காகவே தான் உங்க பொண்ணு கோதை, இதை பாடியிருக்கா, சுவாமி.''

முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் அப்பறம், தானே முதல்லே, ஆண்டாளோடு நோன்புக்கு வந்தாளே இதற்கென்ன அர்த்தம்? 

வைஷ்ணவன் தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன். இல்லையென்றால் விஷ்ணு சம்பந்தப்பட்ட ''வைஷ்ணவன்'' என்ற பெயர் பொருத்தமே  அவனுக்கு இருக்காதே.

ராமன் காட்டுக்குச் சென்றதற்கு தன் தாயோ, கூனியோ காரணம் இல்லை, தானே என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி தான்  இது.    இதைத்தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.''

கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். அவர் தனக்குள் முணுமுணுத்தது நம் காதிலும் விழுகிறது:

'ஆண்டாள், இந்த பாசுரத்தில் கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணுரர்களைக் கொன்றதையும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள் தெரியுமா? உலகில் பிறந்த ஒவ்வொருவனுக்குள்ளேயும், காம,க்ரோத,மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணுரர்கள்  இருக்கிறார்களே அந்த கிருஷ்ணனைத் துதி பாடி ''அவர்களையும் கொல்லப்பா என் செல்லப்பா என்று வேண்டிக்கொள்ளவே.''

THIRUVEMBAVAI


திருவெம்பாவை                           J K  SIVAN


         

         பேசாமடந்தையும்  பௌத்தமும்
நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை இது. 
அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும்  சைவ சமய  சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவையில்லை எனலாம்.

திருவெம்பாவை  15வது  பாடலில்  மணிவாசகர் சித்திரிக்கும்  ஒரு காட்சி இது:

15. ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.''

'' என் அழகிய பெண்களே! இதோ இவளைப்  பாருங்கள். பித்தா பிறை சூடி பெம்மானே, என்று சதா ஆடிப் பாடி  அரற்றுபவள்..  ஒவ்வொரு சமயத்தில் திடீர் திடீரென்று  ''எம்பெருமான் என் பெருமான்'' என்று சொல்லி   ஓடி வந்து  எப்பொழுதும்   நம்மிறைவனது பெருமையை வாயினால் உச்சரிப்பதை  விடாதவள் . 


அதனால் அவள் பெறும்  மன மகிழ்ச்சி அவளது விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காதவள் ., பொய்கையில் நீராடிய நீர் உடலில் சொட்ட சொட்ட  , அதைவிட கண்களில்  சிவன் மேல் கொண்ட பக்தியால் கண்ணீர் பிரவாகமாக நீண்ட தாரை தாரையாக ஒழுக, பூமியின்மேல் வீழ்ந்து வணங்குகிறாள்.  அவனருளால் அவன் தாளை வணங்குபவள்.

எனக்கு இந்த உலகில் வேறொன்றும் வேண்டாம்.   என் சிவனே போதும்.  அவனது நாமமன்றி 
 வேறொன்றும் நான் அறியேன் பராபரமே என்பவள் . பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? நான் ஏன் நீர் சொட்ட குளித்துவிட்டு நிற்கிறேன் என்றால் அவனைப் பார்த்து 
விட்ட பிறகு தான். 

 அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக சில்லென்று பனி நீராக ஓடுவது தெரியவில்லையா?.  அவன் அபிஷேகப் பிரியனல்லவா? அவன் மீது வைத்த அன்பினால் தானே ''அன்பே சிவமாக'' அமர்ந்திருக்கிறேன்'' .   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த இந்த   சிவாலய  தீர்த்தத்தில்  நீங்களும்  குதித்து ஆடுவீராக.    எப்படிப்பட்ட  த டுத்தாட்கொள்பவர்  அந்த மகேஸ்வரன்  என்பதை  சுந்தரரை கேட்டு  தெரிந்துகொள்ளுங்கள்.  கதை கதையாக சொல்வார். 

அடேயப்பா,  சேக்கிழார் தனது பெரிய  புராணத்தில்  தான்  ஒன்றுவிடாமல்  இதெல்லாம் எழுதி வைத்திருக்கிறாரே.

மணிவாசகர் மனதில் குடிகொண்ட  எத்தனையோ  சிவாலயங்களில்  இரு முக்கிய ஆலயங்கள். ஒன்று   ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை,  மற்றொன்று  சிதம்பரம் .  

சிதம்பரத்தில் மணிவாசகர் ஒரு அதிசயம் செய்தது நினைவு கூர்வோம்.

அவர்காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம்   சைவமதம்  தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது.    ஈழத்தில்  இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து  அவர்கள்  மதத்தை  பரப்பி  சைவமதத்தை  இழிவாக பேசினார்கள்.  அரசர்கள்  சிலரும் ஆதரித்தார்கள்.  

 எப்படி இந்த பௌத்தர்களை வாதத்தில் வெல்வது. தக்க சைவமத தலைவர் எவருள்ளார் என்று தேடிய நேரம்  தில்லை மூவாயிரவர்  சோழநாட்டு மன்னனிடம்  மணிவாசகர் சிதம்பரம் வந்து தவச்சாலையில் தங்கி இருப்பதைக்  கூறி  சிறந்த  சிவபக்தர் அவரால் பௌத்தர்களை  வாதத்தில் வெல்ல முடியும் என அரசனிடம் உணர்த்தி  அவரை அழைக்க சொல்கிறார்கள். அரசன் அனுமதி பெற்று  தில்லை மூவாயிரவர் எனும் தீட்சிதர்கள்  மணிவாசகரை அணுகுகிறார்கள். 

''என்ன,  சோழமன்னன் என்னை ஈழத்திலிருந்து வந்திருக்கும்  பௌத்த குருவோடு வாதத்தில் ஈடுபட அழைக்கிறாரா, என் இறைவனுக்கு நான்   செய்யும்  ஒரு தொண்டாக  மன்னன் அழைப்பை  மதித்து தில்லை நடராஜன் அருளோடு  வருகிறேன்'' என்கிறார்.

தில்லையில்  ஒரு மண்டபத்தில் ஏராளமான   பக்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள்  சபையில் கூடி விட்டார்கள்.  பௌத்த குரு  தன்னுடைய  சீடர்களோடு  ஏராளமான  ஓலைகள், , சுவடிகள்  சகிதம் வந்து அமர்ந்துவிட்டான்.   வாதத்தில் சைவத்தை தவிடு பொடியாக்கி  விடுவோம் என்கிற நம்பிக்கை அவன் முகத்தில்  ஆணவமாக  தெரிந்தது.   மணிவாசகர் என்ற துறவி வந்து அமர்ந்ததும்  அவரை ஏளனமாக பார்த்தான். இந்த பரதேசியா என்னை எதிர்ப்பவன்?   சோழமன்னன் நம்பிக்கையோடு வாதவூரரான மணிவாசகர் வாதத்தில் வெல்வார் என்று அமைதியாகி இருந்தும் அவன் முகத்தில் அவர் ஜெயிக்கவேண்டுமே என்ற கவலை இருந்தது.

தீயாரைக் காண்பதுவும் தீது என்று தீர்மானித்த  மணிவாசகர்  அரசனை தனக்கும் பௌத்தகுருவுக்கும் இடையே ஒரு திரை போட சொல்கிறார்.  திரைக்குப்  பின்னாலிருந்தே பௌத்தகுருவின்  கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். 

பௌத்த குருவின் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லி சைவ மத பெருமையை பறை சாற்றுகிறார். மணிவாசகர்.  பல மேற்கோள்கள் காட்டுகிறார்.   பௌத்த குரு இதை எதிர்பார்க்கவில்லை.  இனி வாதத்தில் சைவ கோட்பாடுகளை எதிர்க்க முடியாது என்ற நிலை தோன்றியதும்  சிவபெருமானை தூஷணையாக, இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். மணிவாசகர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வாதத்தை முறையாக தொடராமல் இப்படியே  இழிவாக பேசிக்கொண்டிருக்கவே   மனம் நெகிழ்ந்த  மணிவாசகர்  மனதால்  கலைவாணியாகி  ஸரஸ்வதியை  தியானித்து  ''நாவுக்கரசியே, நாமகளே , இந்த பாதகன் எம்பிரானை இழிவாக பேசுவது என் காதில் நாராசமாக  இடிபோல் விழுந்து என்னை வாட்டுகிறதே. நாவில் உறையும் நீ எப்படி அம்மா  இதை அவன் பேசுவதை அனுமதிக்க இயலும்.  என் ஈசன் மீது ஆணை, நீ அவன் நாவில் இதை சகித்துக்கொண்டு  இந்த பாதகர்கள்  நாவில் உறைவது இனியும் தவறு'' என்கிறார்.

என்ன ஆச்சர்யம் அடுத்த கணமே பௌத்த குரு மட்டுமல்ல, அவனுடன் வந்த அனைத்து சீடர்களும் வாய் பேசமுடியாமல் ஊமையாகி  விடுகிறார்கள்.    அதிர்ச்சி அடைந்த அவர்கள்  வாதவூரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள்.  அவரது தெய்வ சக்தியை உணர்கிறார்கள்.  எங்களை மன்னித்து, எங்கள் தவறை பொருட்படுத்தாது மீண்டும் பேசும் சக்தியை அருளவேண்டும். எங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு  சைவ மதத்தில்  இணைகிறோம்  அதை ஆதரிக்கிறோம்'' என்று ஜாடையாக கதறுகிறார்கள்.  

மணிவாசகர்  தில்லை நடராஜனையும் சரஸ்வதியையும் வேண்டி அவர்களை மன்னித்தருள கோருகிறார். 
பௌத்தர்கள் பேச்சு சக்தியை மீண்டும் பெற்று அங்கேயே  சைவமதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.  ஈழத்தில்  பௌத்த மதத்தை சார்ந்த மன்னன் தனது மதத்தை தமிழ்நாட்டில் ஸ்தாபிக்க சென்ற குருவும் சிஷ்யர்களும்  தோற்று, ஊமையாகி பின்னர்  மணிவாசகர் அருளால் பேசும் சக்தி பெற்ரூ  சைவமதத்தை சார்ந்ததையும்  அறிகிறான்.  அவனுக்கு ஒரு பிறவியிலேயே ஊமையாக பிறந்த மகள். அவளை மணிவாசகர் பேச  வைத்தால் தானும் தனது நாடும் சைவத்தில் இணையும் என்று வேண்டு கிறான். 

''அழைத்து கொண்டுவாருங்கள் அந்த பெண்ணை ''என்கிறார் மணிவாசகர். தில்லை நடராஜன் சந்நிதியில்  அந்த பெண்ணை தனது அருகே அமர்த்தி பெண்ணே  இதோ எதிரில் இருக்கும் பௌத்தகுரு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீ தான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்''    தானே பௌத்தகுரு கேட்ட கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கிறார். கணீரென்ற குரலில் இதுவரை பேசாமடந்தையாக இருந்தவள் பட் பட்டென்று பௌத்த குருவின் கேள்விகளுக்கு சைவமதத்தின் பெருமையை கூறி வாதிடுகிறாள். வெல்கிறாள். அப்புறம் என்ன  ஈழ மன்னனும் மக்களும் சைவத்தை தழுவியதை  சரித்திரம் சொல்கிறது. 

இந்த கேள்வி பதிலை தான் மணிவாசகரின்  திருச்சாழல் பதிகங்கள்  திருவாசகத்தில் வினா விடையாக காட்டுகிறது. முடிந்தபோது  அதையும் படிப்போம். 



   



Sunday, December 29, 2019

THIRUK KOLOOR PEN PILLAI


திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN



  34  இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே

 பன்னிரண்டு ஆழ்வார்களில்  பொய்கை  ஆழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார்  எனும்  மூன்று  முதல் ஆழ்வார்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்.  ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். சந்தித்தவர்கள். பரம ஞானிகள்,  இணையற்ற  விஷ்ணு பக்தர்கள். சிறந்த தமிழ் வித்தகர்கள். அவர்களது பாசுரங்கள்  நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாஸ்வத  இடம் பெற்றவை. 


தனித்தனியே கிராமம் கிராமமாக  பல க்ஷேத்ரங்களை அடைந்து நாராயணன் புகழ் பாடிய  அவர்கள்  திருக்கோவலூரில் ஒரு  நாள்  உலகளந்த திருவிக்ரமனை தரிசிக்கிறார்கள்.  மனதார தரிசித்து வெளியே  செல்கிறார்கள். 

இரவு ஆகிவிட்டது. கடும் குளிர்.   மழை விடாது பெய்கிறது. இரவு எங்கு தங்குவது என்று  அவர்கள்  இடம்  தேடுகிறார்கள்.   கோவிலுக்கு  அருகாமையில்  ஒரு  சின்ன  வீடு மாதிரி ஒரு ஆஸ்ரமம். மிருகண்டு மகரிஷி வசித்த ஆஸ்ரமமாக இருந்த ஒரு பழைய வீடு. முதலில் அங்கு வந்த   பொய்கை யாழ்வார் அதை தேர்ந்தெடுத்து கதவை திறந்து உள்ளே நுழைகிறார்.  திண்ணை மாதிரி ஒரு சின்ன  அறை .   அவர் கண்டுபிடித்த  அந்த  இடம்  ஒரே ஒரு ஆள்  படுக்கக் கூடிய அளவிற்கு சிறியது. 

வாசல் கதவை சாற்றிவிட்டு   இந்த இரவுக்கு  இது போதுமே  என்று அந்த திண்ணையில் கால் நீட்டி ''நாராயணா '' என்று சொல்லி  பொய்கையாழ்வார் படுத்து தூங்கினார். 

சிறிது நேரத்தில் ''டொக் டொக்'' என்று  கதவை யாரோ தட்ட விழித்தார்!  கதவை திறந்தபோது வாசலில் நின்ற பூதத்தாழ்வார்   ''சுவாமி எனக்கு  இங்கே  தங்க சற்று  இடம் இருக்குமா?''  என்று கேட்கிறார். 
யாரோ ஒரு வைஷ்ணவர்  பாவம் மழையில் இருட்டில் தடுமாறுகிறார், என்று  இரக்கம் கொண்ட  பொய்கையாழ்வார்,

 “இங்கு ஒருவர் தான் படுக்கலாம், ஆனால்  நாம் இருவர் அமரலாம்! உள்ளே வாருங்களேன் ! என அழைக்கிறார். 

இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி  பரமாத்மா நாராயணனின் அருள் பற்றி பேச ஆரம்பித்து நேரம் போனதே தெரியவில்லை. 
மறுபடியும் கதவு தட்டப்படும் சப்தம்.  பேச்சை நிறுத்தி  கதவை திறந்த போது  உள்ளே  நுழைந்தவர்  பேயாழ்வார்.
''இங்கே தங்க ஏதாவது வசதி உண்டா ?'' என்கிறார். 
பொய்கை ஆழ்வார்:  “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், நீங்களும் வந்ததால்  நாம் மூவர் நிற்கலாமே .   தாராளமாக உள்ளே வாருங்கள்!” என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர்.  

இருட்டில்  முகம் தெரியாமல்  நெருக்கி நின்று கொண்டு மூவரும், பரமாத்மாவை  எண்ணி, அவன் புகழ் பாடி  பேரானந்தத்துடன்  இரவை கழித்தனர்.   சற்று நேரத்தில் தான்  அங்கே  இன்னொரு ஆசாமியும் நாலாவதாக தங்களுடன் நெருக்கி நின்று கொண்டிருப்பது அவர்களுக்கு புரிந்தது.  இருட்டில்  ஒருவர் முகம் இன்னொரு வருக்கு தெரிய வழியில்லையே.. வெளியே மழை, கும்மிருட்டு. திண்ணையில் நெருக்கம்.

யார் இந்த  நாலாவது மனிதர்??  வெளிச்சம் இருந்தால்  தெரிந்து கொள்ளலாம்.   ஆகவே  பொய்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடுகிறார்: 

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”
“இந்த பூவுலகம் ஒரு அகல்.  அதில்  கடல்  தான்  நெய் . அந்த பெரிய உலக ஆகலின் விளிம்பிலியே திரி எது தெரியுமா? சூரியன்.  இப்படி ஒரு ஒளி தீபத்தை ஏற்றி  நாராயணனின் திருவடிக்கு இதை மாலையாக சூட்டுகிறேன். இருள் நீங்கட்டும்'' என்று பாடுகிறார்.

பூதத்தாழ்வாருக்கு  உற்சாகம் பிறந்து விட்டது. தானும் ஒரு பாசுரம் பாடுகிறார். அது எப்படி தெரியுமா?

''அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான்

''அகல் கடலல்ல.  அன்பு .    தீபம் எரிய  அகலில்  நெய்  வேண்டுமே  அது திருமாலின் கல்யாண குணங்களை  அறிந்துகொள்ளும்  தீராத ஆர்வம்.   திருமாலை அறிந்து அவனை புரிந்து கொள்ளும்  அறிவு, ஞானம் தான் திரி.   இப்படி  ஒரு தீபம் இருந்தால்  நாம் ஒருவரை பார்ததுக்கொள்ளலாம்.' இப்படி ஒரு தீபம் நான் ஏற்றுகிறேன்.

பேயாழ்வார் இந்த இரு பாசுரங்களையும் கேட்டு அவர்கள் ஏற்றிய ஞான பக்தி தீபத்தின் ஒளியில்  தன்னுடன் இருந்த  இவரோடு  நாலாவதாக வந்து நெருக்கி நிற்கும்  நபர்  யார் என்பதையும் கண்ணால்  கண்டு  அறிந்து  பரம சந்தோஷம் அடைந்தார். அந்த நான்காமவர் யார் என்று பார்த்ததை ஒரு அற்புத   பாசுரமாக ஒலிக்கிறார். 

''திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

''ஹாஹா''  இன்று தானே திருக்கோவாலூரில்  திரிவிக்ரமனை தரிசித்தேன். அவனை இங்கும் கண்டேன், அவனது தங்கநிற மேனி இந்த இரு ஆழ்வார்கள் ஏற்றிய தீப  ஒளியில் தெரிந்தது. அவன் சங்கு சக்ரத்தோடு ஜொலிக்கும் அழகு கண்டேன்.  அவனது  செல்வ  பிராட்டியைக் கண்டேன்.  லக்ஷ்மியோடு சேர்ந்த நாராயணன் அவள் ஒளியால்  தனது கரிய  திருமேனி  பொன்னொளி வீச  இங்கே நிற்கிறானே. லக்ஷ்மிநாராயணன் சங்கு சக்ரதாரியாக தரிசனம் தர என்ன பாக்யம் பெற்றேன்'' என்று பாடுகிறார்.

இந்த திருக்கோவலூர் ''ராத்திரி சம்பவம்''  எங்கோ திருக்கோளூரில் இருந்த பெண்பிள்ளைக்கும் தெரிந்ததால் தானே அவள்  ராமானுஜரை கேட்கிறாள்:

“சுவாமி,  நான் முதலாழ்வார்கள் மூவர்  போல், அவனருளால் அஞ்ஞான  இருட்டு நீங்கி  அவனை தரிசித்தவளா?''   எப்படி இந்த புண்ய க்ஷேத்திரத்தில் வசிக்க  இயலும் . நீங்களே சொல்லுங்கள்?''

MAHARISHI RAMANA



 MAHARSHI TALKS WITH A MUSLIM VISITOR    J K  SIVAN 


Nearly 140 years ago on this day, December 30, in the year 1879 sage Maharishi Ramana was born.  We remember Him and pay our respects to the sage and recall his meeting with a Muslim devotee. The devotee was a  District Official in British Govt, and  visited Ramanasram in Thiruvannamalai and discussed his doubts with Ramana Maharshi, 

Maharishi patiently answered his questions, The exchange of talk between them  goes like this:

Devotee:  '' What is the necessity for reincarnation?''
Maharishi Ramana:  ''Let us first see if there is incarnation before we speak of reincarnation''.
D.: ''How?
M.: Are you now incarnated that you speak of reincarnation?
D.:Yes. Certainly. An amoeba developed into higher organisms until  the human being has been evolved. This is now the perfection in
development. Why should there be further reincarnation?
R.:" Who is to set limits to this theory of evolution?
D.:' Physically it is perfect. But for the soul, further development may  be required which will happen after the death of the man.
M.: '' Who is the man? Is he the body or the soul?
D.:'' Both put together''.
M.:'' Do you not exist in the absence of the body?
D.:  ''How do you mean? It is impossible''
M.: ''What was your state in deep sleep?
D.: ''Sleep is temporary death. I was unconscious and therefore I cannot  say what the state was''.
M.: ''But you existed in sleep. Did you not?''
D.: '' In sleep the soul leaves the body and goes out somewhere. Then it returns to the body before waking. It is therefore temporary death.
M.: A man who is dead never returns to say that he died, whereas the man who had slept says that he slept.
D.: ''Because this is temporary death''.
M.: '' If death is temporary and life is temporary, what is it that is real?
D.:  ''What is meant by the question?
M.:  ''If life and death be temporary, there must be something which is  not temporary. Reality is that which is not temporary''.
D.:  ''There is nothing real. Everything is temporary. Everything is maya''.
M.:  ''On what does maya appear?''
D.:  '' Now I see you; it is all maya.''
M.:   ''If everything is maya, how does any question arise?''
D.:  ''Why should there be reincarnation?''
M.:  'For whom?
D.: ' For the perfect human being''.
M.:  '' If you are perfect, why do you fear to be reborn? It indicates imperfection.''
D.:   '' Not that I fear. But you say that I must be reborn.''
M.:  '' Who says it? You are asking the question''.
D.:  ''What I mean is this.You are a Perfect Being; I am a sinner.You tell me that I being a sinner must be reborn in order to perfect myself?
M.:  'No, I do not say so. On the other hand I say that you have no birth and therefore no death.''
D.:  '' Do you mean to say that I was not born?
M.:  ''Yes, you are now thinking that you are the body and therefore confuse yourself with its birth and death. But you are not the body and you have no birth and death''.
D.: '' Do you not uphold the theory of rebirth?''
M.: '' No. On the other hand, I want to remove your confusion that you will be reborn. It is you who think that you will be reborn. See for whom this question arises. Unless the questioner is found, the questions can never be set at rest.''
D.: ''This is no answer to my question.''
M.: ''On the other hand, this is the answer to elucidate the point and all other doubts as well.''
D.:  ''This will not satisfy all others''.
M.: '' Leave others alone. If you take care of yourself others can take care of themselves''

Silence followed. He left in a few minutes apparently dissatisfied with the discourse.

Sri Bhagavan said after a few minutes: This will work in him. The  discourse will have its effect.  He does not admit any Reality. Well -who is it that has determined  everything to be unreal? Otherwise the determination also  becomes unreal. The theory of evolution is enlarged upon by the person in this state.  Where is it, if not in his mind?

NEW YEAR



ஒரு  கனவு புத்தாண்டு  J K SIVAN

தாத்தா   உங்க கிட்ட புத்தாண்டு வாழ்த்து வாங்க என்  பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க.

ஒருவரை ஒருவர்  வாழ்த்த  புத்தாண்டு என்ன பழைய ஆண்டு என்னடா?  வரச்சொல்.

எல்லோரும் ஹாலில்  உட்கார்ந்திருக்காங்க  நீங்க வாங்க அங்கே.

வெகு நேரம் உட்கார்ந்திருந்ததில் ரத்த ஓட்டம் நின்று  எனது  பழைய  கால்கள்   எழுந்து நிற்க மறுத்தது. 

 ''காலே, நீ ரொம்ப நல்லவன் அல்லவா?  2019 மாதிரி நல்லபிள்ளையா  எனக்கு  2020  லேயும்  நடக்கிறியா?''  மெதுவாக  உதறி விட்டுக் கொண்டே   ஹாலுக்கு நடந்தேன்.

20 சிறுவர் சிறுமியர்  எல்லாம்  10-15வயதுக்குள்.  '' வணக்கம் தாத்தா,   நிறைய  விஷயங்களை    நீங்கள் எங்களுக்கு  சொல்லித்தருகிரீர்கள்.   இன்றும் உங்கள்  பேச்சைக்  கேட்க   ஆவலாக இருக்கிறோம்.''

''குழந்தைகளே,  கடவுளிடம்  நாம் பிரார்த்திப்பது  என்பது   நமது தேவைகளை  பூர்த்தி செய்ய சொல்வது அல்ல. என்  ஆத்மாவில் வந்து குடி கொள்.  நான் செய்த  தவறுகளை இனி செய்யாமல்  திருத்து.  பிராத்தனையில் இதயம்  மட்டும் இருந்தால்  போதும், வெறும்  வார்த்தைகள் மட்டும்   இருந்தால் பயனில்லை. இப்படி சொன்னவர்  உங்களுக்கு   தெரிந்த இன்னொரு  தாத்தா.  காந்தி தாத்தா.

''ஏன்   தாத்தா இந்த  உலகத்திலே  நாம்   அனுபவிக்கிற  சுகம்  உண்மையில்லை  என்கிறீங்களே  எப்படி  தாத்தா?''  

உதாரணத்தோட  சொன்னாதான்   உங்களுக்கு  இது  புரியும்.  சொல்றேன்.    ஒரு  பெரிய  தவளை. அதை ஒரு  பாம்பு  பிடிச்சுடுத்து.  பாம்பின் வாயிலே  தவளை. அதோடைய  பாதி  உடம்பு  பாம்பு  வாயிலே இருக்கு. அப்பவும   அந்த தவளை  அந்த நேரத்திலே கூட    அது  வாய்க்கு எதிரே  ஒரு  பூச்சியைப்  பாத்துட்டுது.  டக்குன்னு  நாக்கை  நீட்டி  அந்த  பூச்சியை பிடித்து  விழுங்குது.  நாமும்  தவளை  போலே  தான்.   காலம்  என்கிற  பெரிய  பாம்பின்  பிடியில்  இருக்கிறோம்.   இதை உணராமலே, புலன் இன்பத்தில்  திளைத்து  வாழ்வது   சாஸ்வதம் என்று  மனப்பால்  குடிக்கிறோம்.   இதற்காக இரவும்  பகலும்  பிரயாசைபடுகிறோம்..   இப்போது தெரிகிறதா?"".

தாத்தா   நாங்க  வரும்போது   நீங்க ஏதோ   உரக்க பாடிக் கொண்டிருந்தீன்களே  அது   என்ன பாட்டு.

உங்களுக்கு  சொன்ன   விஷயமே தான்.  மறுபடியும்  பாடறேன் கேளுங்க

''ஆங்காரமும்  ஒடுங்கார், அடங்கார் , ஒடுங்கார்,  பரமானந்தத்தே  
தேங்கார்  நினைப்பும்  மறுப்பும்   அற்றார்  தினைப்போது  அளவும்
ஓங்காரத்து  உள்  ஒளிக்குள்ளே  முருகன்  உருவம் கண்டு
தூங்கார்  தொழும்பு  செய்யார் என் செய்வார் யம  தூதருக்கே''  

இதன்  அர்த்தம்  என்ன தெரியுமா பசங்களா,  எவன்  ஒருவன் தன்னுடைய  ஆங்காரம், அகம்பாவம்  இதெல்லாவற்றையும்  துண்டித்து  புதைக்கவில்லையோ, எவன்  அவனது புலன்கள் இழுத்துச் செல்லும் வழியில் ஒரு   வித கட்டுப்பாடும்  இன்றி  போகிறானோ,  எவன்  ஒரு  தினை  அளவு கூட  இறைவனை நினைக்கவில்லையோ,  ஓம்   என்கிற  பிரணவ ஸ்வரூபமாக   உள்ளே இருக்கும்  முருகனை உணர வில்லையோ,  எவன்   தேவையற்ற எண்ணங்களில் உழன்று,   என்றும் ஸாஸ்வதமான  உள்ளே  உள்ள ஆத்மாவை  மறந்த  நிலையில்  இருக்கிறானோ,  பாவம்  எம  தூதர்கள்  கையில்  பாசக்கயிருடன்  அவனைக் கட்டி  நரகத்துக்கு  இழுத்துச்  செல்லும்போது  என்ன  செய்வான்?    இப்படி கவலைப்படுபவர்   யார் ? தெரியுமா?

''நீங்களா  தாத்தா?'' ஒரு பையன்  பட்டென்று   என்னைக்  கேட்டான்.
''இல்லேடா பையா.  இப்படி  நமக்காக  எண்ணுபவர்  அருணகிரிநாதர்.  இது  கந்தரலங்காரத்தில்  வருகிறது.
போய் விளையாடுங்கோ.  நான்  நிறைய   அப்பறமா சொல்றேன்.  
ஒரு குட்டி பெண்  ''தாத்தா  புது வருஷம் ரெண்டு நாளிலே வருதே.  உங்களுக்கு  ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி விட்டு  ஓடியது..'

புது வருஷம் என்றால்  இத்தனை  நாள் கிழித்த காகிதம்  தீர்ந்து போய்   புது அட்டை  தேவைப்படுவது என்று தான் எனக்கு அர்த்தம்.   நமக்கும் ஜனவரி 1க்கும்  ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.  வெள்ளைக்காரன் போய்விட்டாலும் இன்னும் நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும்  ப்ராரப்தம்.
அந்த கால  வெள்ளைக்காரர்கள்  ஜூலியன் காலண்டர்  ரோமன் காலண்டர்கள் உபயோகப்படுத்தி  ஜனவரி 1ல் இருந்து வருஷத்தை  எண்ணினார்கள்.
ஏற்கனவே  இருந்த பழைய கிராமத்தின் பெயரை மறைத்து கே கே நகர்  அண்ணாநகர்  என்று பெயர் மாற்றி அழைப்பது போல் இது நமக்கு  ஒரு  கனவு மாற்றம். . 
புது வருஷம் என்பது அவரவர் நம்பிக்கையில் முன்னோர் வழக்கப்படி  கொண்டாடுவது. வெள்ளைக்காரர்களை நாம் ஏன் முன்னோர்களாக கொண்டு அவர்க
ள் பழக்கத்தை பின்பற்றவேண்டும். நாம் கூப்பிடாமலேயே வந்து நம்மை ஆண்டு அவர்கள் பழக்க வழக்கங்களை திணித்து அதற்கு பதிலாக நமது செல்வங்களை வாரி அள்ளி  கொண்டுசென்றவர்களின் புது வருஷம் நமக்கு எதற்கு.ஏன் அன்று விடுமுறை?நம்மை போன்ற பெரிய தேசம் சீனாவில் அவர்கள் புது வருஷம் ஜனவரி 1 அல்ல. சின்ன தேசம் வியெட்னாமிலும்  திபெத்திலும்  கூட  ஜனவரி 1 புதுவருஷம் இல்லை.ஈரானில் நவ்ரோஸ் புதுவருஷம் ஜனவரியில் இல்லை.பாலி தீவு காரர்கள் கூட  புத்துவருஷம் மார்ச்சிலிருந்து எப்போதோ ஆரம்பிக்கிறார்கள்.  நமக்கு சித்திரை  ஏப்ரலில் இருந்து ஆரம்பம்.நமது  தேசத்திலேயே   கன்னட,  தெலுங்கு புது வருஷம்   அப்போது தான் வரும்.  காஷ்மீர்கார்கள் அப்போது தான் புது வருஷம் தொடங்குகிறார்கள்.மஹாராஷ்ட்ரா  குடி பட்வா, கோவாவில்  சன்ஸ்கார் பட்வா , சிந்திக்கார்களுக்கு  எல்லாம் கூட  மார்ச் ஏப்ரலில் தான் புதுவருஷம்.பஞ்சாபில்  ஏப்ரல் தான்  .. வைசாகி நானக்சஹி காலண்டர் அப்போது தான் புதுவருஷம் காட்டும். நேபாளத்திலும்  அப்படியே
இந்தியாவின் பல பாகங்களை,  உலகின் பல நாட்டு பழக்கங்களை பற்றி இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். எதுவுமே ஜனவரி 1ல்  புதுவருஷம் ஆரம்பிப்பதில்லை.
நாம்  இங்கிலீஷிலேயே  பேசுகிறோம்,  அவனை அனுப்பிவிட்டு அவன் பழக்கங்களை வழக்கங்களை  வைத்துக்கொண்டிருக்கும் வரை ஜனவரி  1  ஒரு கனவு புதுவருஷம் நமக்கு.

THIRUVEMBAVAI



திருவெம்பாவை   J K  SIVAN 


                                                            வாதவூரரும்  ஆவுடையாரும் 

14. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்  
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

எல்லா பெண்களும் அழகிய பொன்னாலான தோடுகளை, குழைகளை பளிச் பளிச்சென்று மினுக்க ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். தோடு அவனுக்கு பிடிக்கும். அவன் தோடுடைய செவியன் அல்லவா. பூமாலை அந்த பெண்கள் கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து அந்த பெண்கள் பாடுவதை கேட்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு மனதில் குடிபுகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் போற்றுகிறார்கள். அவன் எப்படிப்பட்டவன் நினைவிருக்கிறதா. ''நான் அசந்தால் அசையும் அகிலமெல்லாமே'' ஞாபகம் வருகிறதா. ஞான மயன், ஜோதி மயன், கொன்றை மலர் சூடியவன். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றியவன். அசையாத மோனா தேவகி செல்வனும் அவனே. மானாட மழுவாட, சிவகாமியாட எல்லா அசைவுகளுக்கும் காரணனும் அவனே. அந்தச் சிவனே. அவனை ஊக்குவிக்கும் சக்தியை வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் மேன்மையை பாடுங்கள். ஆடுங்கள்.

ஆண்டவனுடைய மலர்ப்பாதம் தேவர்களால் துதிப்பதற்கு அடங்காமல் அவர்களுடைய வாயைக் கூசச் செய்கிறது. நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது. அவனருளால் தான் அவன் தாளை வணங்க முடியும். தெய்விக தேஜஸ் உடையவன். ஒளிச் சுடர். சிவலோக நாதன். அடியார்க்கு அடியான். சிதம்பரேசன்.  


மாணிக்க வாசகர் அநேக  சிவாலயங்கள் சென்று  பாடல்கள் பாடியவர். இருப்பினும் முக்கியமாக அவரோடு சம்பந்தப்பட்ட இரு  ஆலயங்கள்  திருப்பெருந்துறை  எனும்  ஆவுடையார் கோவிலும்  சிதம்பரமும் என்று சொல்லலாம். இன்று  ஆவுடையார் பற்றி சொல்கிறேன்.

ஆவுடையார் ஆலயத்தில் சிவன் பெயர்  ஆத்ம நாதர். அம்பாள் யோகாம்பாள். மூர்த்தி மாணிக்கவாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும். காமதேனு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது.

மற்ற  சிவாலயங்களில் இருப்பதை போல்   இங்கே  இராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, கொடிமரம் இங்கு கிடையாது. நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் வாசிப்பதில்லை. து. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே..

ஆத்மநாதர் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்க வாசகராகவும் காட்சி தருகிறார்கள்.  குருந்தமரம்  இங்கே  சிவனாக வணங்கப்படுகிறது.  மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம்  நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது.   ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால்  “ஆத்மநாதர்” என்ற பெயர்.

ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை  நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.

ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள  தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும்

இங்கே  உள்ள  சிற்ப அதிசயங்கள்: டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.   ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.

சப்தஸ்வரக் கற்தூண்கள். கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.

MARGAZHI VIRUNDHU




மார்கழி  விருந்து   J K  SIVAN 



                                                          14    பங்கயக்கண்ணான் பரம தயாளன்

நாம் என்ன பாவம் செய்தோமோ கிராமங்களில் மனிதர்கள் வாழவே, பிழைக்கவே முடியாது என்று முடிவெடுத்து கூட்டம் கூட்டமாக அநேகர் வெளியேறி விட்டோம். கிராமங்கள் தான்  நகரத்தின், நாட்டின் உயிர்நாடி. கர்ப்பத்தின் இருட்டறையில் அதிகமாக இடமின்றி கைகால்களை குறுக்கிக்கொண்டு தலை குனிந்துகொண்டுதான் முதலில் உருவானோம். பிறகு தான்  பெரிய பங்களா, கார், ஏரோபிளேன்  ஐந்து ஆறு ஏழு எட்டு நக்ஷத்திர ஹோட்டல்.  அது இல்லையென்றால் இது இல்லை.

நல்ல வேளை அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மீண்டும் அநேகர் கிராமங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இது சுபிக்ஷத்தின் அறிகுறி. ஆரம்பத்தில் பட்டணம் ஸ்வர்கபூமியாக காட்சியளித்தது. கை நிறைய காசு. வசதிகள், நாகரிக வாழ்க்கை, சொகுசு என்று கனவில் மிதந்து இங்கே நாளாக நாளாக நகரவே இடம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மின்சாரம் குறைந்து, வெட்டப்பட்டு, திருடும் கொலை கொள்ளையும் அதிகரித்து பயத்தில் வாழ்ந்து, ஒன்றுக்கு பத்தாக பணம் இறைத்து நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி விட்டது. நட்பு, பிரேமை, அன்பு எல்லாம் பறிபோனது. மனிதாபிமானம் ஏட்டுக்குள் அடங்கி விட்டது. இப்போது கெட்டுப்  போனபின் சூரிய நமஸ்காரம் செய்ய தோன்றி இருக்கிறது.

''சார் நான் ரிட்டையர் ஆனபின் அக்கடா என்று கிராமத்தில் போய் சுகமாக இருக்கப்போகிறேன். காசு கொடுத்து இந்த ஜென்மத்தில் இனிமேல் கத்திரிக்காய் கொத்தமல்லி கூட வாங்கமாட்டேன். குழாய் தண்ணீருக்கு சண்டைபோடமாட்டேன். குளத்தில் நீஞ்சுவேன்''

'' சாரி, நாம் ரொம்ப லேட். கிராமங்களும் கெட்டுப்போக ஆரம்பித்துவிட்டன. நமது தவறான முடிவால் அவசர வாழ்க்கை முறை அங்கும் பரவிவிட்டது.... போகட்டும்.... இருந்தாலும் மீண்டும் அவற்றை புனருத்தாரணம் செய்வோம். ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த , அவர்கள் பெற்றோர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்களை நாடுவோம், திரும்ப அவற்றை பரிமளிக்க உதவுவோம்.

கிராமங்கள் என்றால் பொழுதே போகாது என்பார்கள். ரொம்ப தவறு. பொழுது போய்விடுகிறதே என்று ஏங்கும் அளவுக்கு இயற்கை கொழிக்கிறது  அங்கே. இப்பவே இப்படியென்றால் 5-6000 ஆண்டுகளுக்கு முன்புஆயர்பாடி கிராமம் எவ்வளவு  தேவ லோகமாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக தெய்வமே அங்கே வாழ்ந்தபோது! மார்கழி 13வது நாள் நகர்ந்து மார்கழி 14வதுக்கு வழி விட்டது.

ஆண்டாள் ஒரு இயந்திரம் மாதிரி. சொல்லி வைத்தாற்போல் அதிகாலையில் எழுந்து மற்றவர்களையும் எழுப்ப வந்துவிட்டாள். அவள் தோழியர்கள் அனைவரும் ஏறக்குறைய வந்தாகி விட்டதே. ஒரு சிலரைத் தவிர. ஆண்டாள் தேடுகிறாள் யார் இன்னும் வரவில்லை என்று.?

''ஆண்டாள் இதைப் பார்த்தாயா, இந்த கோமளா வீட்டு புழக்கடையில் இதோ தெரிகிறது பார் இந்த அல்லிக்
குளத்தில் நேற்று ராத்திரி பூத்த ஆம்பல் தூக்கம் வந்து மெதுவாக கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே ஜோராக மொட்டவிழ்ந்து மெதுவாக மலர்கிறதே. "

ஆண்டாள் தலை அசைத்தபடியே கோமளா வீட்டு வாசலில் வந்து கதவைத்தட்டி எழுப்புகிறாள்.

''அடியே, கோமளா, உன் வீட்டு பின்புறம் குளத்துக்கு அப்பால் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சில துறவிகள்
செல்வதை வெளியே வந்து பாரடி பெண்ணே!    வெள்ளையாக தாடி, மீசை, பல், உடலில் செங்கல் நிற காவி உடை, கையில் வெள்ளை சங்கு. அதன்  மூலம் தான் பெருமாள் முன் நின்று பரவசத்தோடுஅவர்கள் ஊதி சுப்ரபாத சேவை பண்ணப் போகிறார்கள். ''வா, அவர்களை பார்த்துக் கொண்டே நாம் நதிக்கு சென்று நீராடி, வழக்கமாக செய்யும் நோன்பு பிரார்த்தனைகள் முடித்து பிறகு நாமும் பெருமாள் கோவிலுக்கும் செல்வோம்''

ஆண்டாள் குரல் கோமளாவுக்கு உள்ளே கேட்டதோ இல்லையோ, தென்கோடியில் வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தருக்கு ஸ்பஷ்டமாக கணீரென்று கேட்டது. நேற்றைய குளிர் இன்று இன்னும் அதிகமாகிவிட்டது. எனினும் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் முடிந்து பூஜைக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். கோதை அன்றைய பாசுரத்தை எழுதி தயாராக வைத்திருந்ததால் அதையும் ஆவலாக ரசித்து படித்தாகி விட்டது. அவரது மனம் அந்த ரசானுபவத்தில் தான் ஆயர்பாடி ஆண்டாள் நினைவில் கொண்டு நிறுத்தியது.

மார்கழி மாதத்தில் முப்பது நாளுக்கு பதிலாக முன்னூறு நாளாக இருக்கக்கூடாதா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அப்படி இருந்தால் நமக்கு தினமும் ஆண்டாளின் பாசுரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்குமே என்ற பேராசை!

மீண்டும் ஓலைச்சுவடியை எடுத்து கோதையின் வார்த்தைக் கோர்வை அழகைப் படித்தார்.

'' உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

மேலெழுந்தவாரியாக இதில் வர்ணனை என்று தென்பட்டாலும் வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவரைக் கவர்ந்தது. ஞானத்திலும் கண்ணன் மீதுள்ள பற்றிலும் கோதை சிறு பெண்ணல்ல. பழுத்த கிழவி. அவளது திருப்பாவை ஒரு உபநிஷதம், என்ன ஞானம் அவளுக்கு! நாக்கு உணவை ருசிக்க மட்டுமல்ல. சாக்ஷாத் கிருஷ்ணனின் பெருமையைப் பாடுவதற்காகவே .

'வா, வந்து க்ரிஷ்ணனைத் துதி செய்' என்று அந்த தூங்கும் பெண்ணையா எழுப்புகிறாள்.? அல்ல, அஞ்ஞானத்தில் உழலும் மாந்தர்களே நீவிர் உய்வீர்களாக என்று உலகத்துக்கே ஒரு வரியில் வழி காட்டுகிறாளே !

''அப்பா''

கோதை அழைக்கும் குரல் கேட்டு சிந்தனை தடைப்பட்டு ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றார் விஷ்ணு சித்தர்

DHARSANAM



மீண்டும்  தரிசனம்    J  K   SIVAN 
                            
அவன்   சிரஞ்சீவி  அல்லவா?  ராமனோடு இருந்த   த்ரேதா  யுகம் முடிந்தாலும்  தன்  உயிருக்குயிரான  ராமன் மறைந்தாலும் ஆஞ்சநேயன்  ராமனையே  நினைத்து ஜெபத்தில்  தனது வாழ்வின்பெரும்பகுதியை  தனிமையில்  கடத்தினான்.  அடுத்த  யுகமான  துவாபர யுகம் வந்து விட்டது என்பது கூட அவன் நினைவில் இல்லை. அவன் எண்ணமெல்லாம்  ராமன் ராமன் ராமன்  ஒன்றே தான்.  இமயமலையில் எங்கோ ஒரு  தனி இடத்தில்  ஆஞ்சநேயன் ராம த்யானத்தில் இருந்த பொது தான் நாரதன் அவனை சந்தித்தான்.

"ஆஞ்சநேயா   இன்னும்  எத்தனை நாள்  ராமனையே  நினைத்து  ஜபம்  செய்வாய்?"

"நாரதா,  முனீஸ்வரா, என் மூச்சே  ராமன்தான்.  ஆகவே  மூச்சு முடியும் வரை  ராமன் தான்  எனக்கு  எல்லாம்."

நாரதன் சிரித்தான்.

"ஏன்  சிரிக்கிறாய்  நாரதா?"

"நிஜத்தை  விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய்'' என்று அறிந்தபோது சிரிப்பு வராதா?"

"என்ன சொல்கிறாய் நாரதா  நிஜமாவது நிழலாவது....எனக்கு புரியவில்லையே""

"எப்படி புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால்  அல்லவோ  புரியும்!"

நாரதா  நிஜம்-நிழல்  என்கிறாய்,   என்  ராமனையா   நிழல் என்கிறாய்?"

"ஆம், வேறென்ன.  நாராயணனின்   ராம அவதாரம் முடிந்தவுடன் ராமன் மறைந்தான். இந்த  புது  யுகத்தில் அவன்  வேறு அவதாரம் தொடங்கி விட்டானே உனக்கு தெரியாதா?"

" அட  ... ஆச்சர்யமாக இருக்கிறதே...  என்  ராமன்  என்னவாக  அவதாரம்  எடுத்துள்ளான். இப்போது   எங்கிருக்கிறான். சீக்கிரம்  சொல்." 

"இந்த துவாபர யுகத்தில் அவன்  பெயர்  கிருஷ்ணன்.  த்வாரகையில் உள்ளான்.  சமீபத்தில் அவனிடம் பேசும் போது தான்  உன்னைப்  பற்றியும் பேச்சு வந்தது".

"என் பிரபு என்னை  நினைத்துகொண்டிருக்கிறாரா.  ஹாஹா  நான்  அவரை  பார்க்கவேண்டுமே "

"உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால்   நீ  ஒரு  மாறு  வேடத்தில்  துவாரகைக்கு  வா.  அங்கு  ராம  நவமி அன்று  அன்னதானம்செய்.  நான்  அப்புறம் உன்னை பார்க்கிறேன்".

நாரதன்  நகர்ந்தான்.

ஆஞ்சநேயன்  ராமனை தரிசிக்க  ராமநவமிக்கு  காத்திருந்து    ஒரு  பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான்.    துவாரகையில்  ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தான்  எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான்.  வரிசை  வரிசையாகஅமர்ந்திருக்கும்  மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும்  அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தையோடு  அனைவருக்கும்  அவர்கள்  இலையில் நிதானமாக   அன்னமிட்டான்.

"என்ன  இது?    திடீரென்று வானம் சுழன்றது. பூமி  கிடுகிடுவென்று ஆடியது. மரங்கள் செடிகள் அருகில் இருந்தோர் எல்லாருமே ஏன் வேகமாக  சுற்றுகிறார்கள்.....  தலை சுற்றியது    கை  நடுங்கியது. உடலில் பலமெல்லாம்  எங்கே போயிற்று.... ஆஞ்சநேயனுக்கு  அதிர்ச்சியா  ஆச்சர்யமா...!..  

ஒரு வரிசையில்  அன்னதானத்தில் சாப்பிட   கால் மடக்கி  அமர்ந்திருந்த  ஒரு  வயோதிக  பிராமணருக்கு  எதிரில் ஆஞ்சநேயன்  குனிந்து கையில் அன்ன  வட்டிலோடு பரிமாற  குனிந்தவன்  அப்படியே  ஏன்  நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.

ஏன்?  ஏன் ?  இது எதற்காக?  நான்  என்ன அபசாரம் செய்து விட்டேன்?"

ஆஞ்சநேயன்  கதறினான்.

அந்த   முதியவரின்  கால்கள்  அவனுக்கு நிறைய  பரிச்சயமானவை.  சாக்ஷாத்  ராமனின்  கால்கள். எத்தனை கோடி முறை வணங்கியிருக்கிறான்..

''பிரபு  என்ன இது? .   என்னை  இப்படியாசோதிக்கவேண்டும்?'' அலறினான் ஆஞ்சநேயன்.  பிராமணர் சிரித்தார்.  மெதுவாக எழுந்தார்.  அருகில் அமர்ந்திருந்த  மற்றொரு பிராமணரான நாரதரும்  எழுந்தார். முதியவர் வேடத்தைக்  களைந்து கிருஷ்ணன்  ஆஞ்சநேயனை  அணைத்துகொண்டான்.

 நீண்ட  பிரிவல்லவா?  ஆஞ்சநேயா.  உன் கையால்  சாப்பிட  ஆசை வந்தது.எனவே நானும்  நாரதனும்  உனைக்காண வந்தோம்.''

"பிரபு  எனக்கு  ஒரு வருத்தம்!"

"என்ன  ஆஞ்சநேயா?"

"நான்  உடனே  துவாரகைக்கு  வரவேண்டும் உங்களையும்  என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.. உங்களைத்  தனியாக  பார்த்தால்  எனக்கு  பழைய  வனவாச  ஞாபகங்கள்  வந்து வதைக் கின்றன. இனிமேல் உங்களை சேர்ந்தே பார்க்கவேண்டும்''

"வாயேன்  எங்களோடு"

ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு  துவாரகை சென்றான்.   ருக்மிணி என்கிற உருவில் தனது   மாதாவைக்  கண்டான்.  பலராமன்   என்ற உருவில்  லக்ஷ்மணனையும் கண்ணாரகண்டு களித்தான்.

ஆஞ்சநேயனுக்கு  மேலே  பேச  நா  எழவில்லை.   எனக்கும்   இதை  எழுத முடியவில்லை. எண்ணங்களின் வேகத்திற்கு பேச்சும் எழுத்தும்  ஈடு கொடுக்க முடியாது  

Saturday, December 28, 2019

THIRUK KOLOOR PEN PILLAI


திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K SIVAN   
       

  33    ''இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே''

ப்ரம்ம ராக்ஷசன் என்பது ஒரு பிசாசு என்று ஓரளவுக்கு தெரியும்.   அவனைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. 

தவறு செய்த பிராமணன் தான்  ப்ரம்ம ராக்ஷஸன் எனும்  ஒரு வித பிறவியாகிறான்.  தேவதைகள், மிருகங்கள்,  பக்ஷிகள், பல விதமாக  இருப்பது போல்  பிசாசுகளிலும் பலவிதம் உண்டு.   சாப விமோச்சனம் கிடைக்கும் வரை ப்ரம்ம ராக்ஷஸன் மரங்களில் வசித்து, வேத  ப்ராம்மணர்களை,  உத்தமர்களை  தின்பவனாக வாழ்பவன். முக்கியமாக  அரசமரத்தில் உறைபவன் என்று  கேள்வி ஞானம். நேரில் பார்த்தது இல்லை, பார்க்க விருப்பமும் இல்லை.

மஹா பெரியவா  அவனைப் பற்றி  சொல்லியிருப்பது :

 ''யார் ப்ரம்ம ராக்ஷசனாக மாறுவார்கள் என்றால்  அதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு:  “பிசாசோ குஹ்யக: ஸித்தோ பூதோ (அ)மீ தேவயோநய:” என்று ‘அமர’த்தில் முடிந்திருக்கிறது.) வேதாத்யயனம் நன்றாகப் பண்ணியும், துன்மார்க்கத்தில் போய் மற்ற ப்ராம்மணர்களுடைய ஸொத்து, ஸ்த்ரீ முதலானவற்றை அபஹரித்து அல்பாயுசில் செத்துப் போனவர்கள் அந்த வேத ஞாபகத்தோடேயே பிசாசு மாதிரி இருப்பதுதான் ப்ரம்மரக்ஷஸ்.  தான் அறிந்த விததையை மற்றவர்க்கு கற்று தராதவன் இம்மாதிரியான  பிரம்மராக்ஷசனாகிறான்.  அவனுக்கு  ஆஹாரம் தினந்தோறும் வேதம் தெரிந்த ஒரு ப்ராம்மணனைச் சாப்பிடுவதுதான்!  இல்லாவிட்டால் தெய்வ பக்தி உள்ளவர்கள் வாக்கு தவறினால் அவர்களை சாப்பிடுவது.

ப்ரம்ம ராக்ஷஸன் மாறுவேஷத்தில் போய் வேத அத்யயனம் செய்தவர்களிடம் நயமாகப் பேசி நீள இழுக்கடித்துக் கொண்டு தனியிடத்துக்குப் போய் வேத சாஸ்த்ர ஸம்பந்தமாகவே அநேகம் கேள்விகள் கேட்கும். அவர்கள் பதில் தெரியாமல் முழிக்கும்போது அடித்து பக்ஷித்துவிடும். ‘ப்ரம்ம ராக்ஷஸம் அடிச்சுப் போட்டுடுத்து’ என்று க்ராமாந்தரங்களில் சொல்வதுண்டு.''

 இப்படி பார்த்தால்  இந்த காலத்தில் ப்ரம்ம ராக்ஷஸன்  கிடையாது  போல் தோன்றுகிறது.   இருந்தாலும்  அநேகமாக  பட்டினியால்  சாகவேண்டியவன் தானோ? தினமும் இப்படி வேதம் அறிந்த பிராமணன்  ஒருவன் சாப்பிட  எங்கிருந்து கிடைப்பான்.   இருக்கும் ஒரு சிலரையும்  தின்று விட்டால் அப்புறம்?

வராக அவதாரத்தில் நாராயணன்  பூமி தேவியை பிரளயத்தின் பிடியில் இருந்து மீட்டு தன் மடியில் இருத்தி,  உபதேசித்தது தான் கைசிக மஹாத்ம்யம்.  இதை சொல்வது வராஹ  புராணம்.

திருக்குறுங்குடியில்  என்று ஒரு  பாணர் குல  வைஷ்ணவ  பக்தர்.  அவரது ஊர்  முனி கிராமம்  என்பார்கள். .   திருக்குறுங்குடி நம்பி எனும்  பெருமாளுக்கு  இந்த பாணர்  தன்னை புகழ்ந்து படுவது ரொம்ப பிடித்து  அவரை  ''நம் பாடுவான்'' (நம்மை நன்றாக பாடுபவன்)  என்று புகழ்ந்தார் என்றால் எந்த அளவுக்கு அந்த பாணரின்  பக்திரஸ  பாடல்கள் அமைந்திருக்க வேண்டும்!    
ஏகாதசி  உபவாசம் இருந்து  திருக்குறுங்குடி மலை ஏறி நம்பியை பாடி துவாதசி பொழுது புலர்ந்ததும் வீடு  திரும்புவார்.  

ஒரு  ஏகாதசி அன்று காலை நம் பாடுவான்  இவ்வாறு குறுங்குடிக்கு நடந்துகொண்டிருந்த  போது   வழியில் பசியோடு ஆகாரம் தேடிக்கொண்டிருந்த   ஒரு  ப்ரம்ம ராக்ஷஸன் அவரை  நிறுத்தி ''இன்று எனக்கு நீ தான்  உணவு '' என்றான்.

''ப்ரம்ம ராக்ஷஸா, ரொம்ப  சந்தோஷம், உனக்கு  நான்  ருசியாகவே இருப்பேன்.   ஆனால் உன் உணவு கொஞ்சம் லேட்டாக தான்  உனக்கு கிடைக்கும்.   நான்  இந்த மலை மேல் ஏறி நம்பியை இன்றெல்லாம் பாடி , நாளை  காலை திரும்புவேன்  அப்போது நீ  என்னை சாப்பிடு''   என்கிறார் பாணர்.

'' ஆஹா,  உன்னை நான்  இப்போது விட்டால் நீ  தப்பி விடுவாய்  ஆகவே  காத்திருக்க முடியாது''  '

'இல்லை  ப்ரம்ம ராக்ஷஸா,   திருக்குறுங்குடி நம்பியின் பக்தன்  ஒரு நாளும்  பொய்  பேசமாட்டேன் . இது சத்தியம்''  என்கிறார் பாணர்.   சரி என்று  ப்ரம்ம ராக்ஷஸன் ஒருவாறு அரைமனதோடு ஒப்புக்கொள்கிறான். தப்பிப் போகாமல் வழி மேல் விழி வைத்து பாணர் வரும் வரை காத்திருக்கிறான். 

நம்பாடுவான் கவலையில்லாமல்  ஆனந்தமாய்  நம்பியை நாடி போனார். பாடினார். இரவெல்லாம் ஆனந்தமாக நேரம்  சென்றது.  காலை  துவாதசி தீர்த்த பிரசாதம் உண்டு திரும்பினார். திரும்பி வரும் வழியில் ஒரு கிழ பிராமணன் சந்திக்கிறான்.  அவனை  வணங்குகிறார்  பாணர்.

''சுவாமி நீங்கள் எங்கே இவ்வளவு  அவசரமாக  வேகமாக  செல்கிறீர்கள்?''  என்று கேட்கிறார் கிழவர் .

''பெரியவரே,  நான்  ஒருவன் பசியாக இருக்கிறான் அவனுக்கு உணவாக போகிறேன் . நேற்றிலிருந்து எனக்காக ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் காத்திருக்கிறான்.  சொன்ன வார்த்தை மீறக்கூடாது அல்லவா?''

''இந்த வழியாக போனால் தானே  அவன் உம்மை  பிடித்துக் கொள்வான். வேறு வழி இருக்கிறது. காட்டுகிறேன். நீர் தப்பி போகலாம்''

''இல்லை  சுவாமி எனக்கு தப்ப எண்ணமே இல்லை.  இன்று என் கடைசி நாள்  உம்மை சந்தித்ததில் மகிழ்ச்சி''

''ஆஹா  உமது  பாட்டைப் போல உமது பேச்சும்  ஆனந்தமாக இருக்கிறது '' என்று மனதில் நினைத்துக் கொண்டார்  கிழ பிராமணனாக வந்த திருக்குறுங்குடி நம்பி. 

நம் பாடுவான்  தன்னை நோக்கி வருவதை  தூரத்திலேயே  பார்த்துவிட்டான்  பிரம்ம ராக்ஷசன், 

'' ஐயா,  நீங்கள் என்னை இப்போது சாப்பிடலாம். ஒருநாள் உங்களை பட்டினி போட்டுவிட்டேன். ஆனால் நல்லது தான். ஏகாதசி அல்லவா.'' என்றார் நம் பாடுவான்.

''சுவாமி நீங்கள் உண்மையான  விஷ்ணு பக்தர்.  உம்மை பார்த்தவுடனே எனக்கு  பசி தாகம் எல்லாம் போய்விட்டது.   நீர்  குறுங்குடி நம்பியை  பாடின பலனை எனக்கு அளித்து  எனக்கு சாப விமோசனம் அருள வேண்டும்.'' என்று கெஞ்சினான் பிரம்மராக்ஷசன். 

''  அப்பா ப்ரம்ம  ராக்ஷஸா, நம்பியை பாடியதால் தான்  பலன் என்று இல்லை,  பாடுவதே பூர்வ ஜென்ம பலன் ''

'' சுவாமி  நீங்கள்  நேற்று ஏகாதசி அன்று நம்பியை   நிறைய பாடி இருப்பீர்கள்,  கடைசி பாடல் எந்த பண்ணில் (அப்போது ராகம் என்பது பண் ) பாடினீர்கள்?''

''கைசிகம்''

''அந்த கைசிக பண்ணை  பாடிய   பலனையாவது எனக்கு அருளி   நான்  சாப விமோசனம்  பெற வேண்டும்''

''குறுங்குடி நம்பி பகவானே, இந்த ப்ரம்ம ராக்ஷஸன் தவறை மன்னித்து அவன்  சாப விமோசனம் பெற அருளவேண்டும்'' என்று  வேண்டுகிறார் நம் பாடுவான்.  

''அட,  ப்ரம்ம ராக்ஷஸனை  காணோமே,   அங்கே   சோம சர்மா என்ற ஒரு அந்தணன் நின்றான். வணங்கி னான். ''நான் யாகத்தை முறைப்படி செய்யாத குற்றத்தால் ப்ரம்ம ராக்ஷஸனானேன், உங்களால் சாப விமோசனம்  பெற்றேன்'' என்று சொல்லி அவன்  மறைந்தான்.

திருக்குறுங்குடி  க்ஷேத்ரத்துக்கு  ஒரு  தனி  விசேஷம் உண்டு.   ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்குறுங்குடி நம்பி  தானே  அவரது  சிஷ்யராக மாறி சேவை செய்த ஸ்தலம்.

திருக்கோளூர் பெண்மணிக்கு தான்  எல்லாமே தெரிந்திருக்கிறதே . திருக்குறுங்குடி  ப்ரம்ம ராக்ஷஸனின் பசி தாகம் களைப்பு எல்லாம்  நம் பாடுவான் போக்கியது தெரியாதா?    

'' ஐயா, ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன  “நம் பாடுவான் போல் பிறருக்கு உதவி புரிந்தவளா?  எப்படி நான் இந்த  திருக்கோளூர் க்ஷேத்திரத்தில் வசிக்க  இயலும்?  என்று கேட்கிறாள்.


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...