Thursday, December 26, 2019

sheerdi baba



மனிதரில் ஒரு தெய்வம் j k sivan
ஷீர்டி ஸாயீ பாபா.
''இது ஒரு வைரக்கல். தப்பாக எடை
போடவேண்டாம்''

ஊருக்கு திரும்பும் வழியில் சந்தித்த அதிசய, மந்திர சக்தி கொண்ட இளம் வயது பக்கிரியை' பற்றி பாடீல் ஊரில் வாய் ஓயாமல் எல்லோரிடமும் பேசிக்கொண்டே இருந்தார்.... தனது காணாமல் போன குதிரையை கண்டுபிடித்து கொடுத்தது, தரையில் இருந்து அக்னி, ஜலம் எல்லாம் ஒரு குச்சியால் தரையை தட்டி வரவழைத்தது போன்ற மாயா ஜாலங்களை சொல்லிக்கொண்டே வந்தவர் அந்த பக்கிரியை தனது வீட்டில் ஒரு அதிதி விருந்தாளியாக வேறு வைத்திருந்ததால் அநேகர் இளம் பக்கிரியை வந்து வணங்கினர்.

இந்த நேரத்தில் தான் பாட்டீல் வீட்டில் கல்யாணம் ஏற்பாடு தடல்புடலாக நடந்தது. எல்லோரும் ஷீர்டி கிராமத்திற்கு கல்யாணத் துக்கு குடும்பத்தோடு கிளம்பிவிட்டார்கள்.

''எங்களோடு நீங்களும் வரவேண்டும்'' என்று பக்கிரியையும் உடன் அழைத்து சென்றார் பாட்டீல்.

ஷீர்டியில் அந்த கல்யாண கும்பல் மகல்சாபதி என்பவரின் நிலத்தை ஒட்டி இருக்கும் கண்டோபா கோவில் அருகே இருந்த பிரம்மாண்டமான ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுத்து தங்கியது. கண்டோபா கோயில் மண்டபத்தின் வாசல் நிழலில் கூண்டு வண்டிகளி லிருந்து மாடுகள் அவிழ்க்கப்பட்டு அவற்றிற்கு தண்ணீர், ஆகாரம் கொடுத் தார்கள். எல்லோரும் வண்டியில் இருந்து இறங்கி கண்டோபா கோவில் தாழ்வார த் தில் இளைப்பாறினார்கள் . கடைசி யாக வண்டியை விட்டு பக்கிரி இறங்கினார்.

மகல்சாபதி இதெல்லாம் பார்த்துக் கொண்டி ருந்தவர் ஓடி வந்தார். பக்கிரியின் கையை பிடித்துக்கொண்டு ''யா ஸாயி '' (வாருங்கள் ஸாயி என்று அர்த்தம்.) என்று உரக்க கூவினார். எல்லோரும் அதுமுதல் இளம் பக்கிரியை ஸாயிபாபா என்று அழைக்க ஆரம்பித்தனர்

கல்யாணம் விமரிசையாக நடந்தது. ஷீர்டியிலிருந்து பாடீல் குடும்பம் தூப் கிராமம் திரும்பும்போது ''பக்கிரி நான் வரவில்லை நான் இங்கேயே இருப்பேன். நீங்கள் போகலாம்'' என்று படீலிடம் சொல்லிவிட்டார்.

ஷீர்டியில் ஸாயிபாபா அது முதல் ஒரு சிதில மான மசூதியில் தங்க ஆரம்பித்தார்.
ஷீர்டி யில் ஏற்கனவே பாபா வருவதற்கு முன்பே பல வருஷங்களாக தேவி தாஸ் என்ற ஒரு துறவி வாழ்ந்து வந்தார். பாபா அவரை சந்தித்தது முதல் இருவரும் நண்பர்களாயினர். சாவடியில் மாருதி கோவில் ஒன்று இருந்தது. அதில் தான் தேவிதாஸ் இருந்தார். ''இங்கே வாருங்கள்'' என்று அழைக்க பாபா சாவடிக்கு சென்றார். ஒரு இடத்தில் அங்கே தனியாக இருந்தார்.

சிறிது காலத்தில் இன்னொரு துறவி வந்து சேர்ந்தார். ஜானகிதாஸ் என்று பெயர். இந்த இருவருடன் அளவளா வுவதில் பாபாவின் பெரும்பகுதி நேரம் கழிந்தது. ஜானகி தாஸ் பாபா தங்கியிருந்த இடத்துக்கு வர ஆரம்பித்தார்
.
பிறகு கங்ககிரி எனும் ஒரு வைசிய குடும்பஸ்தர், துறவியாகி புண்டம்பே கிராமத்தில் இருந்து வந்தார். ஷீர்டி பாபா தினமும் அருகிலிருந்த கிணற்றிலிருந்து நீர் முகர்ந்து இரு கைகளிலும் தூக்க முடியாத கனத்தோடு மண்பாத்திரத்தில் நிறைய ஜலம் கொண்டு வந்து தோட்டத்தில் தான் வளர்த்த செடி கொடிகளுக்கு நீர் வார்ப்பது வழக்கம். இதை ஒருநாள் கங்க கிரி பார்த்தார்.

''ஹா இந்த ஷீர்டி கிராமம் எவ்வளவு புண்யம் செய்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு நவரத்தினம் இந்த ஊருக்கு கிடைத்திருக்கிறதே'' என்கிறார். ''ஏதோ தண்ணீர் சுமந்து செடிக்கு ஊற்றும் தோட்டக்காரனாக இவரை நினைக்க வேண்டாம். இந்த மண் செய்தபுண்யம் இவர் 'கிடைத்திருக்கிறார்''

இன்னொரு துறவி அங்கே வந்தவர் ஏவலா மடத்தை சேர்ந்த ஆனந்த நாத், அவர் அக்கல்கோட் மகாராஜ் என்கிற சந்நியாசியின் பக்தர். சீடர். ஷீர்டி பக்தர்களோடு ஒருநாள் அவர் பாபாவை தரிசிக்கிறார்.
'
'ஆ ஹா'' இந்த விலையுர்ந்த வைரக் கல்லை சாதாரண கல்லாக எடை போடாதீர்கள். பார்ப்பதற்கு ரொம்ப எளிமையாக சாதாரணமனிதராக தென்பட்டாலும் மிகச்சிறந்த யோகி. போகப்போக இதை உணர்வீர்கள்'' என்று ஏவலா மடம் திரும்பிப்போகும் முன்பு சொன்னார் ஆனந்தநாத் . அப்போது ஸாயீ மஹான் ஒரு இளைஞர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...