Saturday, December 28, 2019

SRI RAMANUJACHARYA



ஸ்ரீ  ராமானுஜர்     J K  SIVAN    
                                                                    
                                          குரு  சிஷ்யனானார்          
                                              
ஒரு  தமிழ் பாடலில் ''மனைவி சற்று ஏறுமாறாய்  இருப்பா ளெனில் கூறாமல் சன்யாசம்  கொள் '' என்று ஒரு வரி உண்டு.   யாரோ அனுபவஸ்தன் சொன்ன உபதேசம்.

மனைவி தஞ்சாம்பாளின்  சில செயல்கள் ராமானுஜர் மனதை புண் படுத்தின.  அந்த  விவரம் எல்லாம் மீண்டும் வேண்டாம்.  மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்ட ராமானுஜருக்கு  இனி அவள் தன் மனைவியாக உறவு தொடரமுடியாது என்று நன்றாக  தெரியும்.    
                                                              
வீட்டை துறந்த  ராமானுஜர்,  காஞ்சி வரதராஜனை தரிசித்து விட்டு காவி உடுத்து  த்ரிதண்டம்  ஏந்திய  ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசியாகிறார். -  மனோ வாக்கு  காயம்  மூன்றிலும் அவர் இனி  விஷ்ணுவை சரணடைந்த  உடமை அடிமை.  இவ்வுலகம்   இனி ராமானுஜரை    யதி ராஜர் -- துறவிகளுள் அரசன்  -- என்று அறியும்.   இனி அவர் இருக்கும்  இடம் ராமானுஜ ஆஸ்ரமம்.   இரவும் பகலும் சிஷ்யர்களுக்கு  ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தங்கள், கோட்பாடுகள், வழிபாட்டு  நெறி,முறை  வேதாந்த விஷயங்கள் கற்பிக்கப்பட்டன.  வரஜராஜன்  ஆலயத்தின் அருகேயே  அவர் ஆஸ்ரமம். அவரது முதல்   சிஷ்யன் அவர் பெரிய தமக்கை மகன்  -- முதலி ஆண்டான் -. தாசரதி  என்ற பெயர்  கொண்டவர் . இரண்டாவது சிஷ்யர் கூரம்  என்ற  சிறு  ராஜ்ய அரசராக இருந்த  கூரத்தாழ்வார். கூரேசர் என்று பெயரில் அழைக்கப் பட்டவர்.  சிறந்த ஞாபக சக்தி,  மனோ பலம் கொண்டவர்.

ஒருநாள்  ராமானுஜரின்  குருவாக  இருந்த  யாதவப் பிரகாசரின்  தாய்   ராமானுஜர்  ஆஸ்ரமத்தில் அவரது அறிவுரைகளைக்  கேட்கிறாள். அவரது எளிமை, புலமை, ஞானம் அவளை ஈர்க்கிறது. சிறந்த விஷ்ணு பக்தையான  அந்த தாய்க்கு தனது மகன்  அத்வைத ஈடுபாடு கொள்வது ஏமாற்றத்தை அளித்தது. '' 
''யாதவா,  நீ  அவசியம்  ராமானுஜரை  அணுகவேண்டும் ''  என்று  மகனிடம் சொல்ல, அந்த இரவே ''நீ   இனி  ராமானுஜனின்   சிஷ்யன் '' என்று  ஒரு குரல் அழுத்தமாக கனவாக  வருகிறது.

அடுத்த  நாள் காலை  யாதவப் பிரகாசர் வைஷ்ணவ ஆடைகள், குறிகள்  தரித்து  ராமானுஜர் முன்னே அவரது  ஆஸ்ரமத்தில்  நிற்கிறார்.
ராமானுஜருக்கு  தனது முன்பு  குருவாக இருந்த  அத்வைதி யாதவ பிரகாசர் வந்து வைஷ்ணவராக நின்றதும் சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் கலந்து இருந்தது.  தக்க மரியாதையோடு  அவரை வணங்கி  ஆசனம் அளித்து :

''சுவாமி  நீங்கள் ஏன்  சங்கரரின் அத்வைத  முறையை  புறக்கணித்து விட்டீர்கள் ?''  எதற்கு இந்த வைணவ உடை, குறிகள்'' எந்த சாஸ்த்ரத்தில்  இப்படி கூறியிருக்கிறது ?  ஆதாரத்தோடு சொல்வீர்களா ?”   என்று கேட்கிறார்.
யாதவ பிரகாசர்  பதில் சொல்லவில்லை.  மௌனமாக நிற்கிறார்.

ராமானுஜர்  கூரத்தாழ்வானை அழைத்து   ''  கூரேசா,  யாதவப் பிரகாசருக்கு வைணவ ஆடை, குறி,  சம்ப்ரதாயம் பற்றி சாஸ்த்ரத்தில் இருப்பதை எடுத்துக்  கூறு.'' என்கிறார் ராமானுஜர். கணீரென்ற  குரலில்    கூரேசன்  சுருதி யிலிருந்து மேற்கோள்  காட்டுகிறார்.  அங்கிருந்தோர்  அவரது உரையை அமைதியாக  கேட்கிறார்கள்.

 sa te visnorabja-cakre pavitre,
 janmambodhim tartave carnaninra
mule bahvordadhate'nye purana
 linganyamge tavakanyarpayanti''

''சம்சார  சாகர இறப்பு பிறப்பு என்ற  ஓயாத அலைகளினின்று  விடுதலை பெற , மனிதர்களில் சிறந்த வர்கள் தமது உடலில்  ஸ்ரீ  விஷ்ணுவின்  தாமரை பாதம்,  விஷ்ணுவின் சங்கு, சக்ர குறிகளை தரிக்கிறார்கள்''

aibhirbayamurukramasya cihnai rahnkita loke subhaga bhavamah
tad visno paramam padam ye'dhigaccanti lacchata

 ''ஸ்ரீ விஷ்ணுவின் வாசஸ்தலமான  வைகுண்டம் செல்வோர், அணிவது போல் வைணவ பக்தர்கள்  சங்கு,  சக்ரம், நாராயணனின் தாமரை திருவடி சின்னம், கதை போன்றவற்றை குறியிட்டு  தமது உடலை தெய்வீக யாத்ரைக்கு தயார் செய்வார்கள் ''

upavit-adi-baddharyah sanka-cakradayas tatha
brahmanasya visesena vaisnavasya visesatah

பிராமணன் என்பவன்  வெறும் உபவீதம் மட்டும் தரித்துக் கொண்டால் போதாது. உடலில் சங்கு சக்ர , விஷ்ணுவின்  தாமரை பாதங்கள்,  கதை,  ஆகிய ஸ்ரீ வைஷ்ணவத்தை  குறிக்கும் சின்னங்களை இட்டுக்கொள்ளவேண்டும்.

.hare padakrtim atmano hitaya madhye cchidram-urdhva-purndram
yo dharayati sa parasya priyo bhavati sa punyavan bhavati sa muktiman bhavati.

 “எவனொருவன்  ஸ்ரீ விஷ்ணுவின் இரு பாதங்களை நடுவிலே இடைவெளியோடு திலகமாக சாற்றிக் கொள்கிறானோ அவன் பரமாத்மாவுக்கு மிகவும் ஆப்தன், அமைதியானவன், மோக்ஷத்திற்கு பாத்ரமானவன்.”

கூரேசன் மேற்சொன்ன ஸ்லோகங்களால்  வைஷ்ணவ சம்பிரதாய சின்னங்களை சாஸ்திர ரீதியாக விளக்கியபின், யாதவப் பிரகாசர்  கூரேசரிடம்   ''விசிஷ்டாத்வைதம் சங்கரரின் கோட்பாடுக்கு முரணாக இருக்கிறதே -  பிரமத்திற்கு குணம் இல்லையே? இதற்கு  என்ன ஆதாரம் இருக்கிறது?  என்று கேட்கிறார்

கூரேசர் : சுருதி மேலும் சொல்கிறது என்னவென்றால் ''யா சர்வஞாசர்வவித்''   அதாவது சத்தியத்தின் பிரமாணம்  என்னவென்றால்  பிரம்மன்  சர்வமும்அறிந்தவன்  எங்கும் வியாபித்திருப்பவன் ''உபநிஷத்துகள் அவனது குணத்தை விவரிக்கின்றது என்னவென்றால்:

 na tasya karyam karanans ca vidyate[
na tat samas cabhyadhikas ca drsyateæ
parasya saktir-vividhaive-sruyate
svabhaviki jnana-bala-kriya ca

அவனுக்கு  ரூபம் இல்லை. அவன்  ஞானமாகவும் அங்கிங்கெனாதபடி  எங்கும் பிரகாசமானவன் ஆனந்தஸ்வரூபி . அவனுடைய  உடலோ ஆன்மாவோ வித்தியாசமில்லாதது. அவன் தெய்வீகன். சர்வ பதார்த்தமானவன். எதுவும் அவனைவிட பெரியதுமில்லை, சமமுமில்லை. எண்ணற்ற சக்தி கொண்டவன். அவன் சங்கல்பத்திலேயே சகலமும் இயங்குகிறது.

அவன் எண்ணமே  சத்தியமாகவும் சாத்தியமாகிறது. அவன் சக்தி மூவிதமானது:  
 1. அவனது ஞான சக்தி - சித்  சக்தி, சம்வித் சக்தி  எனவும் சொல்லலாம்.   2. அவனது பல (bala)  சக்தி  - அவனது  இயற்கை சக்தி,  சத், சந்தினி சக்தி, 3.  அவனது  கிரியாசக்தி - ஆனந்த சக்தி , ஸ்வபாவ  ஹ்லாதினி சக்தி.

'' நாராயணா  பரம் பிரம்ம தத்வம்  நாராயணா: பரா: ''
''ஹரி: பராயணம்  பரம் ஹரி பராயணம் ''
புன: புனர்வதம்யஹம் ஹரி: பராயணம் பரம்:''

''நாராயணன் ஒருவனே உயர்ந்த பரம சத்யம். உண்மை. சாஸ்திர  பிரமாணம்.
கடவுள் என்றாலே உணரக்கூடிய  உயர்ந்த பரம்பொருள்  ஸ்ரீ  ஹரி.  அவன் ஒருவனே நிரந்தர தஞ்சம், சரணாகதி. முடிவான பேரின்பம்  திரும்ப திரும்ப  இந்த உண்மையை, சத்தியத்தை கூறிக்கொண்டே இருக்கிறேன்.  ஸ்ரீ ஹரி ஒருவனே மிக உயர்ந்த முடிவான சக்தி பரம்பொருள்,பகவான்“

கூரேசன் இவ்வாறு ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தை, விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை பல  மேற்கோள்  களை உபநிஷத், வேதங்களில் இருந்து காட்டி விளக்கியபோது  யாதவப் பிரகாசர்  ஆழ்ந்து அதை அசை போடுகிறார்.    ராமானுஜரின் சிஷ்யனான கூரேசனுடைய  ஞானம் அவரை வியக்க வைத்தது.  சிஷ்யனே  இப்படியென்றால், குரு???    அப்போது தான் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. கனவில் தன்னை உணர்வித்த குரல் சொன்னதும்  தெளிவானது.

 பழைய  சம்பவங்கள் ,   செய்த சில தவறுகள் அவருக்கு ஒன்றன் பின் ஒன்றாக  எண்ண அலைகளாக ளாக மேல் எழும்பியது.  வயதில் சிறியவரானபோதிலும்   எவ்வளவு பெரிய மகான், இப்படி நடந்து விட்டதே என்னிடம்  அவர்  சிஷ்யனாக இருந்தபோது  என்று  உறுத்தல் அவரை ஆட்கொண்டது...
தடாலென்று வேரற்ற மரமாக  யாதவப் பிரகாசர்  ராமானுஜர் திருவடிகளில் விழுந்தார். அவருடைய ஆசிக்காக வேண்டினார். அவரே சரணாகதி என்று முடிவானார். சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார். --  ராமானுஜர் அவரை ஆட்கொண்டு  ஏற்றுக் கொண்டு  அந்தக் கணம் முதல் யாதவப் பிரகாசர்  கோவிந்த ஜீயர்  ஆனார்.சிறந்த சிஷ்யர் ஆனார்.  சன்யாசம் மேற்கொண்டார்.  ஸ்ரீ ராமானுஜர் பற்றியும், ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் பற்றியும்  உலகிற்கு  பிரகடனம் செய்தார்.  

''கோவிந்தா,  நீ  வைஷ்ணவ சந்நியாசிகள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடத்தை, ஒழுக்கம், பற்றி விளக்கமாக எழுதவேண்டும் என்று  ஸ்ரீ ராமானுஜர் பணித்தபடி  அவர் எழுதியது தான் '' யதி தர்ம சமுச்சயம்'' இன்றும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சந்நியாசிகள் பின் பற்றி வரும் கட்டுப் பாடு பற்றிய உரைநூல்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...