Thursday, December 5, 2019

THULASIDASAR




துளசி தாசர் J K SIVAN

இதை நான் எழுதவில்லை...

துளசிதாசருக்கு எந்த மந்திரமும் மாயமும் தெரியாது. அவருக்கு தெரிந்த ஒரே ஒரு வார்த்தை ''ராமா'' அதுவே அநேக மந்திரங்களை மாயங்களை நிகழ்த்தியது எனலாம். அதுவும் வாஸ்தவம் தான்.
டில்லியில் அக்பர் பாதுஷா துளசிதாஸரின் பக்தியின் மஹிமையை, சக்தியை சோதிக்கப்போக , அதன் விளைவு ''ஐயோ போதும் போதும்'' என்ற அளவுக்கு நொந்துபோய் தவிக்க வைத்ததற்கு காரணம் துளசிதாசர் அல்ல. ஆஞ்சநேயர். ராம தூதனின் சைன்யம் என்று பார்த்தோம். அதற்கப்புறம் அக்பர் துளசிதாசரை பக்தியோடு வணங்கினார்.

துளசிதாசர் டில்லியில் ஒரு வருஷம் போல இருந்தார். நிறைய ராமரைப் பற்றி ப்ரவசனம் செய்தார். பிரசங்கங்கள் நிகழ்த்தினார். மக்கள் ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்தனர். எங்கும் ''ராம் ராம் ஜே ஜே ராம் , ஜே ராம் சீதா ராம் ''போன்ற குரல்கள் தான் கேட்டது.

ஒருநாள் அக்பர் பாதுஷாவிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்த மதுராபுரி போக துளசிதாசர் விருப்பம் கொண்டார். நேராக கோகுலம் வந்தார். யமுனையில் க்ரிஷ்ணன் நினைவில் ஆனந்தமாக ஸ்நானம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் முடிந்ததும் பிருந்தாவனம் வந்தார். அங்கும் கிருஷ்ணனை கண்குளிர தரிசனம் செய்தார்.
(ஏப்ரல் மாதம் ஒரு 45-50 பேர் பிருந்தாவனம், மதுரா எல்லாம் க்ஷேத்ராடனம் போகிறோம். ஏற்கனவே இது பற்றி முகநூலில் யார் யாருக்கு என்னோடு சேர்ந்து செல்ல விரு
ப்பமோ வரலாம். அது விஷயமாக ISKCON நண்பர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் என்பவர் பொறுப்பெடுத்து ரயில் பிரயாணம் ஏற்பாடு செயகிறார் அவரிடம் முதலில் பெயர் கொடுத்து ரயில் கட்டணத்தை முதலில் செயது ரயில் பிரயாணம் ஊர்ஜிதம் செய்து
கொள்ளுங்கள் என்று அறிவித்திருந்தேன். நம்பர் எல்லாம் கொடுத்திருந்தேன். நான் ஐம்பதில் ஒருவன் தான்)

கிருஷ்ணனோடு பிருந்தாவனத்தில் துளசிதாசர் ஒரு மாதகாலம் தங்கி அவனை தரிசித்து வணங்கி ஆடிப்பாடி ஆனந்தமாக இருந்தார். பிறகு அங்கிருந்து மதுராபுரி சென்றார். யமுனையில் ஆர்வத்தோடு மீண்டும் நீராடினார். ஸ்ரீ கிருஷ்ணனை எங்கும் கண்டார். வழிபட்டார். அநேக வைஷ்ணவர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் வணங்கினார். வாழ்த்தினார். மதுரா, கோகுலம், பிருந்தாவனம், ஆகிய இடங்களில் வைஷ்ணவர்கள் புநித யாத்திரை செய்து தங்கி வசிப்பது வழக்கம். எங்கும் ஹரி நாம பஜனம் நடக்கும், ஆண் பெண் அனைவரும் வித்தியாசமின்றி கிருஷ்ண கானத்தில் மூழ்கி அவனே நினைவாக காண்பார்கள். இரவும் பகலும் எங்கும் பேச்சு, பாட்டு, ஸ்மரணை, எல்லாம் '' கிருஷ்ணா கிருஷ்ணா'' தான்.

துளசிதாசர் சென்ற காலத்தில் மதுராவில் பிரியதாஸ் என்று ஒரு தீவிர கிருஷ்ண பக்தர் வாழ்ந்தார். விஷ்ணு அவரது அவதாரங்களை பற்றியே பேசினார், படித்தார். உலக ஈடுபாடுகளில் ஆர்வம் காட்டாதவர். கலியுகத்தில் விஷ்ணுபக்தர்கள் சாதித்த விஷ்ணு லீலை அனுபவங்களை திரட்டி ஸமஸ்க்ரிதத்
தில் ஒரு புஸ்தகம் எழுதியவர். துளசிதாசர் இந்த நூல் பற்றி கேள்விப்பட்டிருந்தார். ஆகவே அந்த மகான் பிரியதாசரை நேரில் சந்திக்க ஒருநாள் சென்றார்.

பிரியதாசரை சந்தித்த துளசிதாசர் சாஷ்டாங்கமாக அவர் அடிகளில் விழுந்து ஆசி பெற்றார்.
'பிரியதாச சுவாமி, தங்களது திவ்ய நூலை நான் படிக்கவோ பார்க்கவோ கூட பாக்யம் இல்லை. அதை தாங்கள் தயவில் கண்ணாலாவது தரிசிக்கலாமா? என்கிறார்.

துளசிதாசரே , நான் எனது புத்தகத்தில் நான்கு யுகங்களில் வாழ்ந்த விஷ்ணு பக்தர்களை பற்றி விவரங்கள் அறிந்து, விவரித்து, குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதில் என்னவோ துளசிதாசர் வாழ்க்கை பற்றி நான் எழுதவில்லையே'' என்று எனக்கு குறையாக இருக்கிறதே'' என்றார் பிரியதாசர் .

''இதற்கு எதற்கு குறைப்பட்டுக் கொள்ளவேண்டும். நான் அவ்வளவு பெரிய விஷ்ணு பக்தன் இல்லையே. அதனால் தான் நீங்கள் என்னைப்பற்றி எழுத அவசியமே இல்லை''' என்று அவரை சமாதானப்படுத்தினார் துளசிதாசர். அவர்கள் இதை பேசும்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

அவர்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது ஆளாக ஒருவர் தோன்றினார். அவர் சாக்ஷாத் ஸ்ரீ ராமரே. ராமர் வந்ததும் ஏதோ தனது புத்தகத்தில் எழுதியதும் ஒரு க்ஷணம் பிரியதாசர் கானுக்கு தென்பட்டது. ஸ்ரீ ராமர் ப்ரியதசர் எழுதிய புத்தகத்தை வாங்கி பார்த்தார், அதில் தனது கையினாலேயே துளசிதாசர் வாழ்க்கை வரலாறு ராம அனுபவ லீலைகளை பற்றி எழுதினார். உள்ளே இது நடக்கும்போது வாசலில் பெரிய ரெண்டு திண்ணைகள் பூரா பிரியதாசரின் விஷ்ணு பக்த ப்ரவசனத்தை கேட்க அநேக பக்தர்கள், வைஷ்ணவர்கள் காத்திருந்தனர்.
பிரியதாஸ் வழக்கங்கள்போல் திண்ணையில் வந்து தனது புத்தகத்தோடு அமர்ந்தார். உரக்க ஸ்லோகங்களை படிக்க ஆரம்பித்தார். துளசிதாசரும் ஆனந்தமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது துளசிதாசர் ' பிரியதாஸ் ஸ்வாமிகளே, இவற்றை எழுதியதோ, சொல்வதோ நீங்கள் இல்லை, உங்களுக்குள் இருந்து உங்களை இப்படி உபயோகப்படுத்திக் கொள்ளும் ஸ்ரீ விஷ்ணுவே தான்.'' என்கிறார்.

நான் இப்போது சொல்லிய சரித்திரம் ''துளசிதாசர் சரித்திரம், நான் எழுதவில்லை. இப்போது இதை எழுதியது சாக்ஷாத் ஸ்ரீ ராமனே. அவன் தனது கையால் எழுதியதை நான் பார்த்தேன். ஏனென்றால் நான் துளசிதாசரை பற்றி எனது புத்தகத்தில் எழுதவில்லை. அது என் தவறு. ஆகவே ஸ்ரீ துளசிதாசர் சொல்லியது நிஜம். இந்த புத்தகத்தில் உள்ள வைஷ்ணவ பக்த மகான்களை பற்றி எழுதியது பகவானே தான்'' என்கிறார் பிரியதாசர். அங்கு கூடிய;இருந்த பக்தர்கள் அனைவரும் ஓடிவந்து ராமனின் திருக்கரத்தால் எழுதிய அந்த எழுத்துகளை பார்த்து கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

பிரியதாசரின் புஸ்தகம் ஸமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்டது. பின்னர் குவாலியர் மொழியில் நாபாஜி சித்தர் 1630 அதை '' பக்த சாரம் '' என்ற தலைப்பில் 700 விஷ்ணு பக்தர்களின் சரித்திரத்தை எழுதினார். அவரை ப்ரம்மாவின் அவதாரம் என்பார்கள். அவர் உத்தவ சித்தர் என்கிற சிஷ்யருக்கு உபதேசம் செய்து உத்தவ சித்தர் அதை குவாலியர் மொழியில் கொஞ்சம் சுருக்கி ''பக்த மாலா'' என்ற பெயரில் எழுதினார்.
மராத்தி மொழியில் இதில் கண்ட ஞான உபநிஷத சம்வாத விஷயங்களை நீக்கி ''பக்த விஜயம்'' என்கிற பெயரில் 1780ல் ஸ்ரீ மஹீபதி பாவாஜி எழுதினார் . பிற்பாடு அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் என்னால் படிக்க முடிந்தது. மராத்தி தெரியாதே! அதை சுருக்கி 100 கதைகளாக நான் தெவிட்டாத விட்டலா என்ற பாண்டுரங்கன் பக்தர்களை பற்றி எழுதினேன். பாண்டுரங்கன் தான் விட்டலன், விடோபா, கிருஷ்ணன், விஷ்ணு எல்லாமே. இல்லையா? இந்த கட்டுரையும் சேர்ந்து தெவிட்டாத விட்டலா ரெண்டாம் பாகம் பிராப்தம் இருந்தால் புத்தகமாக வெளிவரலாம். எல்லாம் கிருஷ்ணன், பாண்டுரங்க, விட்டலன் செயல்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...