Friday, December 13, 2019

APPAIYA DIKSHITHAR




அப்பைய தீக்ஷிதர்               J K SIVAN  
மார்க்க பந்து ஸ்தோத்ரம்  
                                                          வழித்துணைவா  உன்னை நமஸ்கரிக்கிறேன் 

''வெகுகாலம் வரை மார்க்க பந்து ஸ்தோத்ரம்   இயற்றியது என்று நினைத்துக் கொண்டிருந் தேன் சார்''  என்றார் புஜங்கராவ்.  

''இல்லை ராவ் ஸார் . இது  அப்பய்ய தீக்ஷிதர் எழுதியது.  அப்பய்ய  தீக்ஷிதரும் ஒரு சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில்  பாண்டித்யம் மிகவும் உள்ளவர். அவர் சிவபெருமானை எனக்கு துணைக்கு வா என்று பயணம் மேற்கொள்ளும்போது வழியில் எந்த ஆபத்தும் வராமல் காக்கவேண்டும் என்று கேட்பது அற்புதமாக  புரிகிறாற்போல் உள்ளது:   

என் தகப்பனார் வீட்டை விட்டு எங்கு சென்றாலும் இந்த ஸ்லோகங்களை சொல்லிக்
கொண்டே  நடப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.  நொண்டிச்சிந்து ராகத்தில், ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி''  மெட்டில் பாடிப் பாருங்கள் உற்சாகமாக இருக்கும்.

शिव शम्भो महादेव देव शिव शम्भोशम्भो महादेव देव ..  
Shambho Maha deva deva, Shiva Shambho Maha deva devesa Shambho, Shambho Mahadeva deva…

மகாதேவா  நீயே  வாழ்வளிப்பவன், சாந்தி அருள்பவன், சகல சௌபாக்கியங்களும் அள்ளி  தருபவன். உன்னை சாஷ்டாங்கமாக  நமஸ்கரிக்கிறேன்.

फालावनम्रत् किरीटं
भालनेत्रार्चिषा दग्धपंचेषुकीटम् .
शूलाहतारातिकूटं
शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबंधुम् .. शम्भो..

Phalavanamrath kireetam, Phala nethrachisha,  Dagdha pancheshu Keetam,  Soolahathaaraathikootam, Shudhamradhendu choodam,Bhaje Margabandhum   Shambho Mahadeva deva…

என்னை  வழிகாட்டி நடத்திச் செல்லும்  என்  உற்ற நண்பன்  சாம்பசிவன் தலையில்  பளபளவென்று மின்னும்  கிரீடம் அணிந்தவன், கையில் தரித்த சூலாயுதத்தால்  எதிரிகளை த்வம்சம் செய்பவன். குளிர்ச்சியோடு கண்ணைப் பறிக்கும்  அமிர்தம் சொட்டும் இளம்பிறையை சிரத்தில் சூடியவன்,  அதே சமயம்  நெற்றிக்கண் அக்னியால்  மன்மதன், திரிபுரத்தையும் அழித்தவன்,  பரமேஸ்வரா,  நீயே  எனக்கு  வழித்துணைவனாக  மார்கபந்துவாக வந்து ரக்ஷிக்க  வேண்டும். 

अंगे विराजद् भुजंगं
अभ्र गंगा तरंगाभि रामोत्तमांगम् .
ॐकारवाटी कुरंगं
सिद्ध संसेवितांघ्रिं भजे मार्गबंधुम् .. शम्भो..

Ange virjangu jangam,  Abhra Ganga tharangabhi Ramothamangam, Omkaravati kurangam,Sidha samsevathangrivyagram,
Bhaje Margabandum Shambho Mahadeva…

சர்ப்பம்  சங்கரனின்  ஆபரணம்.  அவன் உடலில் கழுத்தில், சிரத்தில் நாகம் குடிகொண்டிருக்கும். இன்றும் எத்தனையோ சிவாலயங்களில்  நாகம் வசிக்கிறது. அம்புலியோடு  அழகிய கங்கையையும்  சிரத்தில் சூடியவனே,  பிரணவம் எனும் ஒம்கார நந்தவனத்தில் மான் போல் துள்ளி விளையாடுபவராக காணும்   ஆனந்த நடேஸா , சகல ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும், ஞானிகளும்  பூஜிக்கும் திருவடியை உடையவனே,  வா  வந்து வழிகாட்டு  வழித்துணைவா, மார்க்க பந்துவே  உன்னை நமஸ்கரிக்கிறேன் என்னை ரக்ஷித்தருள்.  

नित्यं चिदानंदरूपं
निह्नुताशेष लोकेश वैरिप्रतापम् .       
कार्तस्वरार्गेद्र चापं
कृतिवासं भजे दिव्य मार्गबंधुम् .. शम्भो..

Nithyam, Chidanada roopam,  Ninhutha sesha lokesa vairi prathapam,
Kartheswaragendrachapam, krithivasam,  Bhaje divya sanmarga bandhum (Shambo mahadeva deva…) 

பரமேஸ்வரா, நீ  சத்யன், நித்யன், பரம்பொருள்,  சிதானந்த  ரூபன்,  சாதுக்களை இம்சிக்கும்  ராக்ஷஸர்களை, கொடூரர்களை உடனே  அழிக்கும் சக்தி ஸ்வரூபா,  களிற்றின்  தோலில் ஆடை அணிந்தவா,   தங்க மேரு போன்ற  வில்லை யுடையவரும்,  சத்யஸ்வரூபனுமான சாஸ்வதமானவருமான, மார்கபந்து, வழிகாட்டியருளும் தெய்வமே, உன்னை சரணடைந்தேன். நிர்பயமாக  நான் பயணத்தை மேற்கொள்ள  கூடவே வந்து வழித்துணை வனாக  காத்தருள்வாய். 

कंदर्प दर्पघ्नमीचं
कालकण्ठं महेशं महाव्योमकेशम् .
कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबंधुम् .. शम्भो..

Kandarpa darpagna meesam, Kala kantam Mahesam Maha vyoma kesam, Kundabhadandam Suresam, Koti surya prakasam, Bhajhe Marga bandhum. Shambho mahadeva deva…

மன்மதனுடைய  கர்வத்தை,  தலைக்கனத்தை அடக்கி  அவனை அழித்தவரும்,   ஆலஹால விஷத்தை விழுங்கிய  நீலகண்டரும்,  பரந்த  ஆகாகாசத்தை விரிந்த சடையாக  கொண்டவரும்,  வெண்ணிற  மல்லிகைப்பூக்களை, அரும்புகளை போல்  பற்களை கொண்டவரும், பொன்னார் மேனியர்,  கோடி சூர்ய பிரகாசத்தை  தனது ஒளியாக கொண்டவருமான  பரமேஸ்வரன்  மார்கபந்துவாக என்னோடு கூட  பிரயாணம் செயது என்  வழித்துணைவனாக வந்து
என்னை  ரக்ஷிக்கவேண்டும்.

मंदारभूतेरुदारं
मंथरागेन्द्रसारं महागौर्यदूरम् .
सिंदूर दूर प्रचारं
सिंधुराजातिधीरं भजे मार्गबंधुम् .. शम्भो..

Mandara Bhutherydaram,  Mandaragendrasaaram, Mahagouryudooram, Sindhoora dhoora pracharam,  Sindhoorajathi dheeram,
Bhaje Margabandhum Shambho Mahadeva deva…

மந்தார புஷ்பம்  சிவனுக்கு  ரொம்ப  விருப்பமான மலர். மந்தாரம்  ஒரு கற்பக விருக்ஷம்.  கேட்பதெல்லாம், விரும்பியதெல்லாம் அளிக்கும்,  சிவனின்  உடலோ  மந்தரமலையை விட உறுதியானது. பலமிக்கது.  கௌரியை  இணைபிரியா  அர்த்தநாரிஸ்வரா,  தாம்ரவர்ணா , ரிஷபாரூடராக எங்கும் காட்சி தருபவரே,  தைரியத்தில்  தீரத்தில்,  சமுத்ரராஜனை  மிஞ்சியவனே,   என்னோடு சேர்ந்து கூடவே  வழித் துணைவனாக வா,  மார்க்க பந்து, வழித்துணை நண்பா  உன்னை போற்றி வணங்குகிறேன். 

अप्पय्ययज्वेन्द्रगीतं स्तोत्रराजं
पठेद्यस्तु भक्त्या प्रयाणे |
तस्यार्थसिद्दिं विधत्ते
मार्गमध्येऽभयं चाशुतोषी महेशः ||

Appayyajjwendra Geetham stotra rajam, Patedhyasthu Bhakthya prayane, Thasyartha sidhim Vidathe , marga madhye Abhayam chaashuthosho Mahesa Shambho Maha deva Shambho…

இது பலச்ருதி.  யாரெல்லாம் பிரயாணம் மேற்கொள்கிறார்களோ, வழியில் எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல்  இனிய பயணமாக  நிறைவு பெற இந்த  மார்க்க பந்து  ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்துவிட்டு  பிரயாணம் துவங்கினால் சகல காரியமும் சித்தியாகும், சந்தோஷம் அபரிமிதமாக கிடைக்கும்,  இந்த அப்பய்ய தீக்ஷிதர் ஸ்லோகங் கள் பழையகாலத்தில்  வழிப்போக் கர்கள் விடாமல் சொல்லும் மந்திரமாக இருந்தன. அப்போது மின்சாரம் இல்லை,  துஷ்ட மிருகங் கள், கள்வர்கள் பயம்,  இருட்டு,  விஷ ஜந்துக் கள்  இவற்றிடமிருந்து பாது காக்க  உதவியாக இருந்தது.   இன்று வேறுவிதமாக  பயம் பிரயாணத்தில் இருக்கிறது என்பதால்  இந்த ஸ்லோகம் இன்றும்  மிக்க பயனுள்ளது. பயத்தை போக்குவது.   சிவன், சம்பு , கூடவே  வழித்துணைவனாக,  மார்க்க பந்துவாக வருவான் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...