Wednesday, December 11, 2019

HAYAGREEVAR


கல்விக்கடவுள்   J K  SIVAN  
                                                                                                                                                                                                 கலைமகள்  ஸரஸ்வதிக்கு  ஆசான்  ஹயக்ரீவர்.   சென்னையிலிருந்து கடலூர் ரொம்ப கிட்டவே இருக்கிறது. இப்போதெல்லாம் நிறைய  பஸ் , ரயில் வசதிகள், அது தவிர  சாலையிலும்  ரெண்டு மூன்று மணிநேரத்தில் கடலூருக்கு அருகே 8 கி.மீ. தூரத்தில்  ஹயக்ரீவர்  இருக்கும்  திருவஹீந்திர புறம் சென்றுவிடலாம்.

ஹயக்ரீவருக்கு வந்தனம் செலுத்தி '' ஆதாரம்  சர்வ வித்யானாம்  ஹயக்ரீவம் உபாஸ்மஹே :  சகல வித்தைகளுக்கும்  ஆதாரம்  ஹயக்ரீவர்.  இப்படி தான்  குழதைகளுக்கு  வித்யாரம்பம் செய்கிறோம். விஜயதசமி அன்று ரொம்ப விசேஷம்.  இந்த பெயருக்கு அர்த்தம்:   ஹயம்  :  குதிரை.  க்ரீவ:   கழுத்து.    வதன:  முக    கு
திரை கழுத்து, குதிரை முகம் கொண்டவர்  ஹயக்ரீவர், ஹயவதனர் . வெள்ளை குதிரை முகம்.
எண்ணற்ற  விஷ்ணு அவதாரங்களில் ஒன்று  ஹயக்ரீவர்.   வேதங்களை  மது கைடபர்கள் எனும்  ராக்ஷஸர்களிடமிருந்து  மீட்க  எடுத்த  ஒன்று.  மத்ஸ்யாவதாரம் எடுப்பதற்கு முந்தியது.   
ஸ்ராவண நக்ஷத்ரம்,  ஆவணி மாதம்,  பௌர்ணமி திதி, நீண்ட வெள்ளை குதிரை முகம்,  விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டும் ரெண்டு காதுகள்.  சூரிய கிரணங்கள்  பிடரி. பூமி  தான் நெற்றி.  கங்கையும் சரஸ்வதியும்  இரு புருவங்கள்,  சந்திர சூரியன்கள் இரு கண்கள். சந்தியா தேவதை    நாசித்துவாரம் .பித்ரு தேவதைகள் பற்கள்.  கோலோகமும் ப்ரம்மலோகமும்  மேலுதடு, கீழுதடுகள். காலராத்ரி தான் கழுத்து.
இப்படி ஒரு உருவத்தை கண்ணை மூடி கற்பனை செய்து கொள்ளுங்கள்.  கை கூப்பி சரணடையுங்கள் . எதிரே மனக்கண் முன்பு ஹயக்ரீவர் தோன்றுவார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...