Wednesday, December 11, 2019

SOKKAPANAI

       பனையே  உனக்கு நன்றி நன்றி நன்றி  
                                        J K  SIVAN 

கார்த்திகை தீபத்தை தொடர்ந்து  முக்கியமாக  எல்லா சிவாலயங்களிலும்  முருகன் ஆலயங்களிலும் நடைபெறுவது சொக்கப்  பனை  தீபம்.   இதை  சொக்கப்பானை  என்று வெண்கலப்பானை , சட்டிப்பானை  மாதிரி சொல்வது காலத்தின் கோளாறு.

கோயிலுக்கு  அருகாமையில்,   உயரமான ஒரு  தென்னை , அல்லது பனை மரத்தை நட்டு, அதை பனை ஓலையால் சுற்றி, மாலைகள் சூட்டி,  கோபுரம் போல்  அமைத்து, அதன் உச்சியிலிருந்து  தீபமிட்டு  அடி பாகம் வரை தீ மூட்டி  ஜோதி மயமாக்கி  சிவனை,   கார்த்திகேயனை, ''அரோஹரா''  கோஷமிட்டு  வணங்குவது  வழக்கம். 

சிவாலயம் எதிரில் சொக்கப்பனை கொளுத்துவது  நமது ஆணவமலம், அறியாமை, அஞ்ஞானம்  எரிக்கப்படவேண்டும் என்று நினைவுகூருவதற்காக. சிவன்  சம்ஹார மூர்த்தி.  திரிபுரம் எரித்தவன். நமது மும்மலங்களை அழிக்கட்டும் என்பதற்காக.

பனை மரம் பெரும்பாலும் தானாக வளர்வது. சிலர்  பனந்தோப்பு வளர்ப்பார்கள். அதன் எந்த பாகமும் நமக்கு மிகவும் உபயோகமானது. அதன் ஓலை, வீட்டுக்கூரை, அதன் பழம், கோடையில் நுங்கு  தருவது, பனங்கிழங்கு உடலுக்கு நல்லது. வியாதி களுக்கு ஒளஷதம்.  பனைமரம் வீடுகளுக்கு  தூண்,உத்தரம், பனங்கல்கண்டு, பனைவெல்லம்  ஆகியவை மருந்துகள்.  பனங் கள்  ஒரு போதை பணம்.  பனை யிலிருந்து உடலுக்கு அவ்வளவு நல்லது. பனை நார்  கயிறு செய்ய உதவும். பனை ஓலையில் வீட்டுக்கு தேவையான முறம்,தடுக்கு, கூடைகள் செய்வார்கள்.   முக்கியமாக நிலங்களுக்கு எல்லைக் கல்லாக  பனைமரம் நடுவார்கள். காலம் காலமாக எல்லையாக இன்றும் இருக்கிறது.  வேர் முதல் ஓலை வரை  நமக்கு வேண்டியது எல்லாம் தரும்  பனைமரத்தை  கல்பதரு என்பார்கள். பனை ஓலை  ஈரமாக இருந்தாலும் குபீரென்று தீப்பிடிக்கும்.

எங்கள் காலத்தில்  சட பட வென்று சுடர் விட்டு எரியும் மாவலி என்ற தீபாவளி பட்டாசை  பையன்கள் தயார் செய்வார்கள், கொட்டாங்கச்சி, பனை நார், ஓலை, உப்பு, கந்தகம் எல்லாம் தகுந்த அளவில் சேர்த்து பொடித்து மூட்டை கட்டி  கயிற்றில் அதை  கட்டி, கொளுத்தி   வேகமாக  ஆட்டி வீசும்போது பொரிபொறியாக சுடர் விடும் சத்தமும் வரும். இது ஒரு காசில்லாத பட்டாசு.  மாவலி என்று பெயர்,  மஹாபலி பெயரால் என்று சொல்பவர்கள் பற்றி எனக்கு விவரம் தெரியாது. நேரம் இல்லை. அதை அலச.

பிறருக்கு  முழுதுமாக  உபயோகமாக இருக்கவேண்டும் என்று காட்டவே  பனைமரத்திற்கு இந்த சிறப்பு  விழா.
பனை உயரமாக வளரக்கூடியது  அடி முடி காணமுடியாத  சிவனை  ஜோதி மயமாக வணங்க  இந்த சொக்கப்பனை விழா.

காதி கிராமோத்யோக்  பண்டகசாலையில்  பதநீர் சாப்பிட்டிருக்கிறேன். பனம் ஜூஸ் விற்பார்கள்.  கருப்பட்டி, பனை வெல்லம் , பணம்கற்கண்டு,  பனை சாக்லேட் எல்லாம் வாங்கி வந்து வீட்டில் குழந்தைகள் சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...