Monday, December 16, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



 திருக்கோளூர் பெண் பிள்ளை  J K  SIVAN 


             26  அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

செல்வம் சேர்ந்துவிட்டால் இந்த உலகத்தில்  ஒருவனுக்கு  உறவு, நண்பர்கள் மறந்து போய் விடுகிறது. செல்வர்களின் நட்பு ஒன்று தான் பிரதானமாகிவிடுகிறது  பணக்கார வட்டம்  நட்பை, உறவை  தமக்குள்  அமைத்து கொள்கிறது. றான்.   அப்படி இருக்கும்போது  ஒரு பெரிய  மஹாராஜா, உலகத்தின் செல்வங்களுக்கு அதிபதி  ஒரு பரம தரித்ரன், ஏழை இளம்வயது நண்பனை நினைவு கொள்வானா? அப்படி  எதிர்பார்த்து தானே துரோணர் நண்பன் துருபதனிடம்  ஏமாந்து போனார்.   ஆனால்  
ஒரு மஹாராஜா  வித்யாசமானவன்.  

எத்தனையோ  வருஷங்கள்  ஆனபோதிலும்  சிறுவயதில் ஒன்றாக பாடசாலையில்  குருகுலம் பயின்றவன் வந்திருக்கிறான் என்றவுடன்   அந்த ராஜாவுக்கு  அளவுகடந்த சந்தோஷம்.  அரண்மனை வாயிலுக்கு ஓடி  பரம ஏழையாக பல காத  தூரம் நடந்து வந்த   இளம் வயது நண்பனை  அணைத்து அரண்மனைக்குள்  அழைத்துச்  சென்று உபசரித்து அளவளாவுகிறான்.   அது தான் மிகப்பெரிய  செல்வந்தனுக்கும்  சாதாரணனுக்கும் உள்ள வித்யாசம். 


அந்த மஹாராஜா  ஸ்ரீ கிருஷ்ணன்.  ஏழை நண்பன் குசேலன்.  குசேலனை  தனது சிம்மாசனத்தில், சயன படுக்கையில் அமர்த்தி கால் பிடித்து விடுகிறான் கிருஷ்ணன்.  பாலிய வயது பழங்கதைகளை வாய் ஓயாமல் இருவரும் பேசுகிறார்கள். 

குசேலன்  கிருஷ்ணனை தேடி நாடி வந்தது பொருளுதவி பெற்று தனது வறுமையைப் போக்கிக் கொள்ள . ஆனால்  நண்பனை சந்தித்ததில் அது  எல்லாம் மறந்து போய்விட்டது. பழைய அன்பு பாசம் மட்டுமே அவர்களுக்குள் இருந்ததால் மற்றவைக்கு நெஞ்சில் நினைவில் இடமில்லை. 

பழைய நண்பனை சந்திக்கும்போது ஏதாவது பரிசு கொடுத்தால்  நன்றாக இருக்கும்.  என்ன கொடுக்க இயலும்?  எதற்குமே வழியில்லாத  தரித்திரம்  வீட்டில் இருந்த  கொஞ்சம்  அவல் பொரியை  மேல் துண்டில் மூட்டை  கட்டிக்கொண்டு போக செய்தது.  அதோடு  வந்தார் குசேலர்.  அதையும் மஹாராஜா கிருஷ்ணனுக்கு கொடுக்க வெட்கம் தடுத்தது.  ஆனால்  கிருஷ்ணன் விடுவானா?. 

எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கிறாய்   சுதாமா? என்ன கொண்டுவந்தாய் எனக்கு? முன்பெல்லாம் குருகுலத்தில் ஏதாவது கொண்டுவந்து கொடுப்பாயே  என பழைய ஞாபகத்தோடு  கேட்ட கிருஷ்ணன் கண்களில் குசேலர் ரகசியமாக கட்டி வைத்திருந்த  சின்ன  அவல் பொரி மூட்டை பட்டுவிட்டது. ஆர்வமாக அதை பிடுங்கி அவிழ்த்து   ஒரு பிடி அவல்  பொரியை வாய் நிறைய  போட்டுக்கொண்டான் கிருஷ்ணன்.  

சில நாளில் குசேலர்  கிருஷ்ணனிடம்  பொருளுதவி  கேட்க வந்த விஷயத்தை  முற்றிலும் மறந்து வீடு திரும்பினார் .   திரும்பும்  போது  தான்  ''அடாடா  சுசீலை உங்கள்  பழைய நண்பன் ராஜாவாக இருக்கிறானே. அவனிடம் சென்று  கொஞ்சம் பொருள் உதவி கேளுங்கள் என்று அனுப்பினாளே , நாம்  மறந்து போய்விட்டோமே?  நமது தரித்திரம் நம்மை விட்டு  போகாது போல் இருக்கிறதே  என்று  வருத்ததோடு   கிருஷ்ணன் அனுப்பிய  தேரில் உட்கார்ந்து கொண்டு  ஊருக்கு வந்து சேர்ந்தார்.   ஆனால் என்ன ஆச்சர்யம்.? அவர் வீடே அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

 அவர் கேட்காமலேயே அவர் வீட்டில் செல்வம் பொங்கி வழிந்திருந்தது. அவர்  மனைவி சுசீலை, 27 குழந்தைகள் எல்லோரும்  நல்ல ஆடை ஆபரணத்தோடும்   சகல வசதிகளோடும் புதிதாக அமைந்த வீட்டில் இருப்பதை காண்கிறார். அதிசயிக்கிறார்.   

''கொஞ்சூண்டு  கொடுத்த  பொரிக்கே  இவ்வளவா?  ஆமாம்.   அவன் தான் அன்போடு பக்தியோடு  யார்  ஒரு துளி ஜலம் , ஒரு இலை,  ஏதேனும் காய்ந்த சிறு பழம் கொடுத்தாலே  திருப்தியடைந்து  குபேரனாக்கி
விடுவானே.!!

இந்த விஷயம்  நமக்கு தெரிந்திருக்கும்போது  திருக்கோளூர்  பெண்மணிக்கு தெரியாமலா இருக்கும்?.  அதனால் தானே அவள்   ''ஐயா  ஸ்ரீ ராமானுஜரே , " குசேலரைப்போல அன்பு மட்டுமே உள்ளத்தில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனை மட்டுமே கருத்தில் கொண்டு அவல்  பொரியையாவது  என்றாவது  நான் கொடுத்ததுண்டா? நான் எப்படி  இந்த திருக்கோளூர் க்ஷேத்ரத்தில் வசிக்க உரிமை கொண்டவள்? என்று கேட்கிறாள். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...