Friday, December 27, 2019

GITANJALI



கீதாஞ்சலி      J K SIVAN                
ரவீந்திரநாத் தாகூர் 
                                           
 27.  வழிமேல்  விழி வைத்தேன் கண்ணா 

27  Light, oh where is the light? Kindle it with the burning fire of desire!
There is the lamp but never a flicker of a flame---is such thy fate, my heart? Ah, death were better by far for thee!
Misery knocks at thy door, and her message is that thy lord is wakeful, and he calls thee to the love-tryst through the darkness of night.

The sky is overcast with clouds and the rain is ceaseless. I know not what this is that stirs in me---I know not its meaning.
A moment's flash of lightning drags down a deeper gloom on my sight, and my heart gropes for the path to where the music of the night calls me.

Light, oh where is the light! Kindle it with the burning fire of desire! It thunders and the wind rushes screaming through the void. The night is black as a black stone. Let not the hours pass by in the dark. Kindle the lamp of love with thy life.

எங்கே அந்த தீபம். என் எண்ணங்கள்,   என்னை எரிக்கும் ஆசைகள் என்ற சுடரால் அது எரியட்டும். எரியாத விளக்கு இருந்தென்ன லாபம்? என் இருதயமே, இது தானா உன் கதி,  உன் நிலை ? நீயும் ஒரு எரியாத உதவாக்கரை விளக்கா?  ஓஹோ  ஒளியில்லா விளக்கே, தீபமே,  அப்படியானால் மரணம் உன்னைவிட பலமடங்கு  சிறந்தது. 
துன்பங்கள் ஒன்று  மாற்றி  ஒன்றாக என் மன வாசல் கதவை டபடப என்று இடிக்கிறது. ஓஹோ  துன்பம் துயரம் இருந்தால் தான் என் கிருஷ்ணன்  இருப்பது தெரியுமா?  துன்பமும் துயரமும் தான் அழைப்பிதழா?  அவன் விழிப்போடு  காத்துக்கொண்டிருக்கிறானா? 
''நீ ஏன்  கலங்குகிறாய்  வா என்னிடம் என்கிறானா? அதோ அங்கிருக்கிறான் வா என்று  துன்பமே  துயரமே  நீ தான் என்னை அழைக்கிறாயா? உன் மூலம் தான் நான் அவனை பெறுவேனா?  இரவே, இருளே,    நீ   இனி நீண்டு கொண்டே இரு.  அவனுடன் நான் களிக்கும்,  கழிக்கும்,   நேரம் எல்லை இல்லாமல்  இருக்கட்டுமே. 

வானம் எப்போதும்போல் இருண்டு கறுத்து தான் காணப்படுகிறது. இருள்  ஒரு கரிய பெரிய  ராக்ஷஸன் தான் சந்தேகமே இல்லை.  கையை தலைக்கு மேல் நீட்டினால் மேகத்தை தொடலாம் போல் இருக்கிறதே.  பெய்த மழை போதாது என்று இன்னும்  சூல் கொண்ட மேகமா?  அடாது பெய்யும் மழை விடாதோ ? என்னை ஏதோ வேகமாக அவனிடம் காந்தம் போல்  கவர்ந்து செல்கிறதே. என்னை அவன் பால் செலுத்துகிறதே அது என்ன? அதன் பெயர், அர்த்தம் என்ன? ஒன்றும் தெரியாதபோதே  இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே.!

காரிருளில்  நான்  செல்கிறேன்.  இருட்டில் தடுமாறி செல்லக்கூடாது என்பதற்காக ஒரு ''டார்ச்''  அடித்திருக் கிறான் கிருஷ்ணன். பளிச் என்று கண்ணைப் பறிக்கும் மின்னல், அந்த
இருட்டில் அவனை நோக்கி செல்லும் பாதையை  வெள்ளிக் கம்பியாக  காட்டி விட்டது.  அவன் குழல் ஓசை  வந்த திக்கை நோக்கி செல்கிறேன்.குழலா யாழா, எதுவாயினும்  அந்த சுநாத  இனிமை காற்றில்  ஒலிக்கும்  பக்கமாக என்  கால்கள்  நகர்கிறது.  என் கால்களை விட என் இதயம் அவனை அடைய வேகமாக துடிக்கிறதே.

எங்கே அந்த எரியாத விளக்கு? என் ஆசைகளால், அவன் பால்  உள்ள  ஆர்வத்தால்  அதை ஒளிபெற செய்கிறேன். 
காது செவிடுபட ஒரு பெரிய இடி சப்தம்.  இடிக்கட்டும் இடிக்கட்டும் நன்றாக இடிக்கட்டும். அதை இன்னும் ஒலிக்கச்  செய்ய  இந்த பலமான  காற்றும்   ஒத்துழைக்கட்டும்.  கும்மிருட்டில்  இரண்டும்  நல்ல ஜோடி..


தொட்டால் ஒட்டிக்  கொள்ளும்  அளவு  அட்டை கருப்பான இருட்டு.  கரும் பாறை சூழ்ந்தது போல்   எங்கும் இருள்.  போதும் கிருஷ்ணா, இந்த இரவின் இருள். இப்படி நேரம் நீண்டு போக வேண்டாம். வாழ்வில் உன் அருளால் என் அன்பு தீபம் எரிந்து வழி காட்டட்டும். உன்னை அடைய அது உதவட்டும். ஆம் கிருஷ்ணா. உன்னை அடைய இருளும், இடியும், துன்பமும் துயரமுமாகி என்னை தாக்கட்டுமே. உன் அருள் பெற இந்த இருள்  தான்  வழி என்றால் அது வேண்டும் எனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...