Monday, December 9, 2019

VISHNU SAHASRANAMAM

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  J K  SIVAN 

                            
                                                               ஆயிர  நாமன்   ( 265-280)

எனது  ஐந்தாம் வேதம் (முழுமையான  மஹா பாரதம்)   புத்தகத்தின் ரெண்டு பாகங்களில்  ரெண்டாவது பாகம் தான் உங்களுக்கு தினமும் வந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது யுதிஷ்டிரருக்கு பீஷ்மர்  இன்னும் சற்றே தினங்களில் உத்தராயணத்தில் விண்ணுலகம் செல்வதற்கு முன் விஷ்ணு வின் ஆயிரம் நாமங்களை உபதேசிக்கும்  இடத்தில்  இருக்கிறோம். இதுவரை  264 நாமங்களை அறிந்ததை தொடர்ந்து மேலும் இன்று 15 நாமங்கள்:

29, ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: ||

265. சுபுஜா:   சிறந்த திண்மையான  புஜங்களை கொண்டவர்.  சரணடைந்த பக்தர்களை , ஏன் இந்த பிரபஞ்சத்தையே தாங்க சக்தி வாய்ந்த புஜங்கள் இருக்கவேண்டாமா?.

266.  துர்த்தரா:  எளிதில் எல்லோராலும் அறிய முடியாதவர்  மஹா விஷ்ணு. எங்கும் சர்வ வியாபியாக இருந்தும் பக்தர்கள் மட்டுமே உணரமுடிபவர்.
267. வாக்மீ : நாவினிக்க போற்றுதலுக்கு  உடையவர். ரிஷிகள், ஞானிகள்,மஹான்கள் எல்லோராலும் போற்றப்படுபவர்.

268. மஹேந்திரா : இந்திரனுக்கும் மேலான தெய்வம்.  உண்மையில்  நமது மனம் தான் இந்திரன். அதை வென்று ஆள்பவர்.

269. வஸுதா:  செல்வம் நிறைந்தவர். வாரி வழங்குபவர். நல்ல எண்ணங்களாகிய செல்வத்தை நமது மனத்தில் நிரம்பச்செய்பவர்.

270. வசு : வசிப்பவர்:   தன்னுள் ''வசதி'' யாக நம்மை வைத்துள்ளனர்.  நம்முள் அவர் ''வசிக்க '' நாம் தேடுபவர்.

271. நைகரூப:  அநேக ரூபம் கொண்டவர். சகல காரணர்.காரணமும் காரியமும் அவரே. விஷ்ணு.

272. ப்ரிஹத்ரூபா: அளவிலாத எல்லையற்ற பரிமாணங்கள் கொண்டவர். இந்த பிரபஞ்சத்தை விட பெரியவர் ஒரு பத்து அங்குலம் ''தசாங்குலம் ''அதிகமான அளவு கொண்டவர் என்று புருஷ சூக்தம் சொல்கிறதே '
 
273. சிபிவிஷ்டா:   யாகப் பசு வுக்கு சிபி என்று பெயர். தன்னை லோகஷேமத்திற்காக  அர்பணிப்பவர். ''அடே  அர்ஜுனா, சூரியனில் ஒளியும் சக்தியும் நானே தான். அதே போல தான் சந்திரனின் குளுமையிலும் இனிமையும் நானே,  புரிகிறதா?''--    கிருஷ்ணன் கீதையில்.

274. ப்ரகாசனா:  ஒளிவீசுபவர்.  சாட்சியாக மனதில் நின்று சத்ய தர்மமாக பிரகாசிப்பவர்.

275. சர்வஞன். எங்கும் நிறைந்தவர். யாதுமானவர்.

பீஷ்மர்  விஷ்ணுவின் அருமை பெருமைகளை  அற்புதமாக  விஷ்ணு  ஸஹஸ்ரநாமத்தில் சொல்வதை கிருஷ்ணனே சிரித்துக்கொண்டு அருகில் நின்று கேட்டுக் கொண்டி ருக்கிறார்.

30. ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: ||

276. ஓஜஸ் தேஜோத்யுதிர : விஷ்ணு வீர்யம், உடைமை, சாதுர்யம் ஸ்திரம் கம்பீர அழகு ஆகிய கூட்டு ஒளிரும் தன்மையர். ''அடே அர்ஜுனா, சக்தி படைத்ததாக இருக்கிறதோ அதில் நானே அந்த மஹாசக்தி, எதிலெல்லாம் புத்தி கூர்மை வெளிப்படுகிறதோ அதில் நானே அந்த சாதுர்யம்'' .   புரிகிறதா? ---  கிருஷ்ணன், கீதையில்.

277. ப்ரகாசாத்மா: எல்லா இதயங்களிலும் ஒளியாகத் தோன்றும் ஆத்மா.
278. பிரதாபனா: உஷ்ணவஸ்துக்களில் உஷ்ணமாகவும், குளிர்ந்த வஸ்த்துக்களில் குளிர்ச்சியாகவும், சக்தி வாய்ந்தவைகளில்  சக்தியாகவும் ஆதாரமாகவும்  உள்ளவர்.

279. ரித்தா: செழுமையும் வளமையும் ஆனவர். செல்வமே உருவான ஸ்ரீ யின் பதி புகழுக்கு பாத்திரமானவர்
279. ஸ்பஷ்டாக்ஷரா: ஓம் எனும் நாத சப்தத்தில் கணீர் என்று ஒலிக்கும் சொல்லானவர். க்ஷரம் என்பது அழிவது. அக்ஷரம்== அழிவற்றது.
280. மந்த்ரா: வேத மந்த்ரமானவர் விஷ்ணு. மந்திரங்கள் மட்டுமே நம்மை அழியும் உலகிலிருந்து, அழிவற்ற பரம்பொருளை அடைய உதவும் வாகனம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...