Friday, December 13, 2019

VISHNU SAHASRANAMAM



ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்   J K  SIVAN 

                                      ஆயிர நாமன்   (297-312)

297. காமா: பக்தர்களை ஈர்க்கும் தேன். ஆனந்த காந்தம். பரமானந்தம் ஒன்றே எல்லோரும் நாடுபவது. அதுவே விஷ்ணு.
298. காமப்ரதா: வேண்டியதை தந்தருள்பவர். எண்ணங்களை நிறைவேற்றுபவர். த்யான பலன் அருள்பவர்.

299. பிரபு: எஜமான். நம்மை ஆள்பவர். நம்மை ஆட்டுவிப்பவர். சர்வ சக்திமான். மஹாஹாஹா விஷ்ணு.

33. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்||

300. யுகாதிக்ருத்: காலத்தை யுகங்களாகவும் வருஷம் மாதம் போன்ற பல பகுதிகளாகவும் பிரித்தளித்தவர்.

301. யுகாவர்த்தா: காலத்தை பிரித்ததோடல்லாமல் காலச் சக்கரத்தை நடத்திச் செல்பவர்.

302. நைகமாயா: எண்ணற்ற மாயத் தோற்றங்கள் கொண்டவர்.

303. மஹாஸனா: நமது வாசனாக்களிலிருந்து உருவாகும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குபவர்   .

304. அத்ரிஸ்யா : சர்வ சாக்ஷி. ஐம்புலன்கள்,மனம், புத்தி, அஹங்காரம் அனைத்தின் வெளிப்பாடுகளையும் அறிந்து கொள்பவர்.காண்பவர்.

305. வ்யக்த ரூபா: தியானிப்பவனின், யோகியின், த்யானத்தில் காட்சிப் பொருளாக காணப்படுபவர். பக்தனின் மனதில் காண்பவர்.

306. சஹஸ்ரஜித்: தீய சக்திகளை ஆயிரக்கணக்கில் வெற்றிகொள்பவர். நமது மனத்தில் தோன்றும் தீய எண்ணங்கள் தான் ராக்ஷஸர்கள். மன அமைதியை விழுங்கும் அவற்றை வெற்றிகொள்ளும் ஆன்மா தான் விஷ்ணு.

307. அனந்தஜித்: என்றும் எப்போதும் வெற்றியே கொள்பவர்.

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: ||

308. இஷ்டா : வேதம் சொல்லும் அநேக வழிகளின் மூலம் இஷ்ட தெய்வமாக அடைய படுபவர் என்றும் சகலராலும் விரும்பப் படுபவர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஆன்ம த்ரிப்தியாக நம்முள் ஒளிர்பவர்.

309. விசிஷ்டா: மிகவும் ஸ்ரேஷ்டமான, மேன்மையான, ஹ்ருதயவாசி

310. சிஷ்டா-இஷ்டா : தன்னை வணங்குபவர்க்கும், விரும்புபவர்க்கும் பக்தர்க்கும் 
வேண்டுவோர்க்
 கும் அருள்பவர்.

311. சிகண்டீ: மயிலிறகு அணிந்தவர் . கிருஷ்ணன் மயிலிறகின் கண் அணிவதால் கண்ணன் ஆகிறான்.
312. நஹுஷன்: நஹம் என்பது பந்தத்தை குறிக்கும். பந்தங்களை அறிந்தவன். மாயன்.மாயத் தளையில் ஜீவன்களை பிணைப்பவன். விடுபடவும் செய்பவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...