Friday, December 20, 2019

VISHNU SAHASRANAMAM



ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  J K  SIVAN 

                     ஆயிர நாமன்    (345-360)

345. பத்ம நிபேக்ஷணா :  தாமரைக் கண்ணன்

38. பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

346. பத்மநாபா:  தனது நாபியில் கமலம் உதிக்கச்செய்தவர். பக்தர்களின் இதய தாமரையில் உறைபவர்.

347. அரவிந்தாக்ஷன்:  அன்றலர்ந்த தாமரை போன்ற அமுதூறும்  அழகிய கண்களை உடையவர்.

348. பத்மகர்பா:  யாரை நாம்  போற்றி ஹ்ருதய தாமரையின் மத்தியில்  பதித்து பூஜிக்கிறோமோ  அவர்  .

349. சரீரபிரித் : பிரபஞ்சத்தில் உயிர் வாழும் அனைத்து ஜீவர்களின் உடலைப்பேணி  காத்தருள்பவர். பிராணனும் அன்னமும் அருள்பவர்.

350. மஹர்த்தி:   அளவுகடந்த சக்தி, வளம், ஐஸ்வர்யம், பெருமை வாய்ந்தவர்.

351. ரித்தா:  தன்னை  பிரபஞ்சமாக  விரிவு படுத்திக்கொள்பவர்.   அண்ட பேரண்ட மாக வியாபித்துள்ளவர்.

352. விரித்தாத்மா : புராதன  ஆன்மா. காலத்தால் பாதிக்கப் படாதவர். புத்திக்கு   எட்டாதவர்.

353. மஹாக்ஷா :  அகன்ற நயனங்களை உடையவர். விசாலாக்ஷன். பிரபஞ்சத்தை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த நயனங்களை  உடையவர்.

354. கருடத்துவஜ : தனது  கொடியில் கருடன் சின்னம் பொறிக்கப் பட்டவர்.  கருடன் தீர்க்கமான பார்வை கொண்ட பறவை. வெகு உயரத்தில் இருந்தாலும்  பூமியில்  சிறு உருவம் கூட அதன் பார்வையில் இருந்து  தப்ப முடியாது. விஷ்ணு பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவனையும் கண்காணித்து பராமரிப்பவர். அதனால் தான் கருடன் அவர் வாஹனம்.

ஒவ்வொரு நாமமும் எவ்வளவு அர்த்த புஷ்டியாக இருக்கிறது ரசித்தீர்களா? ருசித்தீர்களா?

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய: ||

355. அதுலா: மூவுலகிலும் ஒப்புமையில்லாதவர்.

356. சரபா: எண்ணற்ற சரீரங்களில் உள் நின்று உலவுபவர்

357. பீமா: மஹா சக்திமான். உற்சாகமூட்டுபவர். எதிர்க்கமுடியாதவர்.அடைக்கலம் தருபவர்.

358. ஸமயஞா: ஷட் தர்மங்கள், ஆறு கோட்பாடுகள் அனைத்தும் உணர்ந்தவர். பிரஹலாதன் ''சர்வ சமமாக சதா இருப்பதே அச்சுதனை வழிபடும் வழி'' என்றான்.
359. ஹவிரஹரிஹி: எல்லா யஞங்களிலும் ஹவிர் பாகம் பெறுபவர். ''அடே அர்ஜுனா, எல்லா யாகங்களிலும் நானே நாயகன் என்பதால் எனக்கே அவிர்பாகம் அளிக்கிறார்கள்'' என்றான் கிருஷ்ணன் கீதையில். நமது வாசனாக்களை தான் பெற்று நம்மை விடுவிப்பவர் விஷ்ணு.

 360. சர்வ லக்ஷண லக்ஷண்யா: நிதர்சனமாக எல்லா வழிகளிலும், ஆய்வுகளிலும், முறைகளிலும் ஆதாரமாக காணப் படுபவர்.
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...