Monday, November 28, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K   SIVAN 

    
''கணபதி சுப்ரமணியன் ''

''யார் சார்  இந்த  கணபதி சுப்பிரமணியன்''  உங்கள்   ஸ்ரீ  க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி நிகழ்ச்சியில் பேர் வருகிறதே.''அவர்  90  வயது துறு துறு  இளைஞர். ஒடிசலான இருப்பார். சிரித்த முகம். கையில் ஒரு மஞ்சள் பை  அவருடைய கவசம். திருச்சி நேஷனல் காலேஜ் பௌதிக  ப்ரொபஸர். சங்கீத சாஸ்திரம் தெரிந்தவர். நிறைய வினாடி வினாக்கள் நடத்தியவர். எங்களுக்கு ஒரு நல்ல நண்பர். பழகுவதற்கு   தேன் .போதுமா?.

''இல்லே  இந்த பேரை  எங்கோ  தெய்வத்தின் குரலிலேயே  வரகூரான் நாராயணன் என்கிறவர்  எப்போவோ எழுதின பெரியவா சமாச்சாரத்தில் படிச்சதும் உண்டு.    வரகூரான்  ஒரு தேனீ என்று சொல்லி இருக்கிறேன். மனிதர் எப்படித்தான்  தேடுவாரோ, எங்கு தேடுவாரோ, யாரைப் பிடிப்பாரோ, அடாடா , அற்புதமான  மஹா பெரியவா விஷயங்களை  அள்ளித்தருபவர்.  எண்ணெய் போன்றவர்கள்  மொத்த வியாபாரியிடமிருந்து  கடன் வாங்கி  தெருவில் கத்திக்கொண்டு விற்கும் சில்லறை  கூடைக்காரர்கள்.  ஆம்  இது வாஸ்தவம்.

நான் கூட  காஞ்சி மட வலை தளத்தில் இது பத்தி  ஒரு தரம் படித்தேன்.  அதைத் தான் இப்போ  சொல்றேன்.இந்த விஷய தானம் பண்ணினவர்  ஸ்ரீ  பி. ராமகிருஷ்ணன். எடுத்து சொன்னவர்  வரகூரான் நாராயணன். அவரை நான் இன்னும் பார்க்க பாக்யம் இல்லை.   டெலிபோனில்  பேசியது உண்டு.  தாம்பரம் சென்றபோது சந்திக்க முயன்று  தோல்வி அடைந்தேன்.  அவசியம் ஒருநாள்  வரகூரானை சந்திக்க விருப்பம்.
++
ஒரு சமயம் வழக்கமா மடத்துக்கு வந்து ஆசார்யாளை தரிசிக்கறவா கூட்டம் அதிகமாவே இருந்தது.
 
அந்த கூட்டத்துல சென்னைல அப்போ பிரபலமா இருந்த  ஒரு ஆடிட்டர் குடும்பமும் இருந்தது. பட்டம், பதவின்னு எத்தனை இருந்தாலும் பரமாசார்யா முன்னால எல்லாரும் சமம்தானே! அதனால, எல்லாரை யும்போல அவாளும் பெரிய வரிசையில தங்களோட முறைக்காக காத்துண்டு மெதுவா நகர்ந்து வந்துண்டு இருந்தா.

வரிசை நகர்ந்து ஆடிட்டர் குடும்பத்தோட முறை வந்தது. சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார். ஆடிட்டர். கூட  வந்திருந்த  ஒரு பெண்  கையில் இருந்த பச்சைக் குழந்தையை பெரியவா முன்னால ஒரு துண்டுல விட்டுட்டு, தான் நமஸ்காரம் பண்ணினா.
 
 ”பெரியவா இவன் என்னோட பேரன். குடும்பத்துக்கு மொத வாரிசு. பொறந்து மூணு மாசம் ஆறது. பெரியவா வந்து அனுகிரஹம் பண்ற பேரைத்தான் வைக்கணும்னு காத்துண்டிருந்தோம். யாத்திரை முடிச்சுட்டு நீங்க மடத்துக்கு வந்துட்டேள்னு தெரிஞ்சுது.இதோ உங்க  கடாட்சம் வேண்டி குழந்தையை எடுத்துண்டு வந்துட் டோம். நீங்கதான் குழந்தைக்கு நாமகரணம் செஞ்சுவைக்கணும்''   ஆடிட்டர்  உணர்ச்சி வசத்தில் பேச கஷ்டப்பட்டார்.
 
குழந்தையை கொஞ்ச நாழி உத்துப்பார்த்தார்,மகாபெரியவா. அன்னிக்கு சங்கடஹர சதுர்த்திங்கறதால மடத்துல ஒரு இடத்துல சில வேதவித்துக்கள் கூடி கணபதிக்கு உரிய மந்திரங்களைச் சொல்லிண்டு இருந்தா. அந்த கோஷம் எங்கேர்ந்து வருதுன்னு பார்க்கறாப்புல குழந்தை மெதுவா மெதுவா தலையைத் திருப்பித்து.
 
“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!” அப்படின்னார்,ஆசார்யா.
 
“ரொம்ப சந்தோஷம் பெரியவா.குழந்தைக்கு நீங்க நாமகரணம் பண்ணிவைச்ச இந்த நாள் சதுர்த்திங்கறது காலத்துக்கும் ஞாபகத்துல இருக்கறாப்ல கணபதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சிருக்கேள். அதோட சுப்ரமண்யன்கறது எங்க குல தெய்வமான பழனி ஆண்டவனோட பேராவும் அமைஞ்சுட்டதுல எங்களுக்குப் பரம சந்தோஷம்!” சொன்ன ஆடிட்டர்,குழந்தையைத் தூக்கிண்டார். பிரசாதம் வாங்கிண்டு புறப்படத் தயார் ஆனார்.
 
“ஒரு நிமிஷம் நில்லு. கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா.அண்ணா வந்தாச்சுன்னா, அடுத்து தம்பியும் வரணுமே! அதனாலதான் கணபதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சேன். என்ன புரியறதா?”  சொன்ன பெரியவா ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.
 
இது நடந்து ரெண்டு மாசம் ஆச்சு. அதே ஆடிட்டர் இப்போ தன்னோட ஆத்துக்காரி, மூணு புள்ளைகள், மூணு மாட்டுப் பொண்கள், குழந்தை கணபதி சுப்ரமண்யன்னு எல்லாரோடேயும் பெரியவாளைத் தரிசிக்க வந்தா.
 
ஆசார்யா முன்னால நின்னதும் ஆடிட்டரோட உடம்பு லேசா நடுங்கித்து. ரொம்பவே உணர்ச்சிவசப்படறார் அவர்ங்கறது பார்த்தாலே புரிஞ்சுது.
 
“பெரியவா..நீங்க நிஜமாவே தெய்வம்தான்.போன   தரம் நான் இங்கே வந்தப்போ,குழந்தைக்கு நாமகரணம் பண்ணணும்னு மட்டும்தான் உங்ககிட்டே கேட்டுண்டேன்.ஆனா,சொல்லாத பெரிய விஷயம் மனசுக்குள்ளே பாறாங்கல்லாட்டமா அழுத்திண்டு இருந்தது. எனக்கு மூணு புள்ளைகள்   மூத்தவனுக்கு கல்யாணமாகி ஆறேழு வருஷமா குழந்தையே இல்லை.ரெண்டாவது புள்ளைக்கு கல்யாணமாகி ஒரே வருஷத்துல
இவன் பொறந்துட்டான். மூத்தவனுக்கு இன்னும் குழந்தை பாக்யம் உண்டாகலையேன்னு மனசுக்குள்ளே மறுகிண்டு இருந்தேன்.
 
பெரியவா தெய்வ வாக்காட்டம் கணபதி வந்துட்டான்.அடுத்து சுப்ரமண்யன் வருவான்னு சொன்னேள்   இதோ  இப்போ என்னோட மூத்த நாட்டுப்பெண்ணும் உண்டாகி இருக்கா. டாக்டர்லாம் பரிசோதிச்சுட்டு, மூணுமாசம் ஆகறது.கரு நன்னா உருவாகி இருக்குன்னு சொல்றா.
 
இத்தனைகாலம் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம்இல்லை. அன்னிக்கு இங்கே வர்றச்சே  கூட உங்ககிட்டே விண்ணப்பிச்சுக்கணும்னு நினைச்சுண்டுதான் வந்தேன். ஆனா, ஒருத்தனோட குழந்தைக்கு நாமகரணம் செய்யறச்சே, இன்னொருத்தனோட குறையை பேசவேண்டாமேன்னு  தோணித்து .  ஆனா, நீங்க அதையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுண்டு, அப்படி ஒரு வாக்கைச் சொன்னேள்.
 
ஒரு பெண்ணுக்கு எப்ப சூல்  உண்டாகும்கறது பரமேஸ்வரனுக்கு மட்டுமே தெரியும்னு சொல்லுவா. அந்த வகையில நீங்களும் அந்த சாட்சாத் பரமேஸ்வரனாகவே எனக்குத் தெரியறேள்!” தழுதழுக்க சொன்ன ஆடிட்டர். அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா திருப்பாதத்துல விழுந்து நமஸ்காரம் செஞ்சார்.

எல்லாம் அந்த சந்திரமௌளீஸ்வரரோட அனுக்ரஹம்” அப்படீங்கற மாதிரி ஒரு நிமிஷம் கண்ணை மூடி த்யானம் பண்ணினார் மஹா பெரியவா..


Sunday, November 27, 2022

PERIYA NAMBI

 



பெரிய நம்பி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்ரீ வைஷ்ணவத்தில்  குரு  அவரது சிஷ்யன்  ரெண்டு பேருமே  100  வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள்  உண்டா என்றால்  ராமாநுஜரையும் அவரது பிரதம குரு  பெரிய நம்பியும்  தான்  அப்படி  என்றே சொல்லலாம்.

பெரியநம்பி வைஷ்ணவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் என்பதால் அவருக்கு மஹா பூர்ணர் என்று ஒரு பெயரும் உண்டு.  பராங்குசதாசர் என்பதும் இவரையே. 

 

ஆளவந்தார் என்ற ஆசார்யனின்  பிரதம சிஷ்யன். இவர்கள் அனைவருமே  ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய  போட்டோ இல்லாதவர்கள். ஆதார் இல்லாவிட்டாலும்  ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு  ரொம்பவே ஆதாரமானவர்கள்.
பெரிய நம்பியைப் போலவே  ஆசார்யர்  ஆளவந்தாரின் மற்ற சிஷ்யர்கள்  திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி,  திருமலை ஆண்டான், போன்றவர்கள். 

எல்லோருக்குமே  வழிகாட்டி  ஸ்ரீரங்கநாதன்  ஸ்ரீ காஞ்சி வரதராஜன் எனும் பெருமாள் தான் . வரதராஜனை ஸ்ரீ அருளாளப்பெருமாள் என்று வழிபட்டவர்கள்.

ஆளவந்தாருக்கு  ராமானுஜரை ரொம்ப பிடிக்கும் என்றாலும் நேரே பார்த்து பேசியதில்லை.  பெரிய நம்பி தான் சகல விஷயங்களையும் அவரைப்பற்றி ஆச்சர்யனுக்கு அளித்தவர்.  

''பெரியநம்பி,    உனக்கு தான் ராமானுஜனை நன்றாக தெரியுமே .அவனைப் பற்றி  உயர்வாக கேள்விப்பட்டதிலிருந்து நான்  அவனை பார்க்க  ஆவலாக இருக்கிறேன்.  நீ உடனே காஞ்சிபுரம் சென்று அவனை இங்கே என்னிடம் அழைத்து வா...ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத பிரச்சாரம் பற்றி  நிறைய பேசவேண்டும்..''  

ஆளவந்தார் விருப்பத்தை நிறைவேற்ற  பெரியநம்பி   ஸ்ரீ ரங்கத்திலிருந்து  காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை  ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்ல வந்து இருவரும் ஸ்ரீரங்கம் சென்றபோது  ஆச்சார்யர்  ஆளவந்தார் விண்ணுலகெய்திவிட்டார்.  ராமானுஜரை  பெரிய நம்பி  மதுராந்தகம்  ஏரிகாத்த ராமன் கோவிலில் பார்த்து அவருக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய சங்க சக்ர  முத்ரை  அளித்த ஸ்தலம் மதுராந்தகம்.  அந்த இடத்தை  இன்றும்  நாம் பார்க்க முடிகிறது.

மாறனேரி நம்பி  என்பவர்  நோய்வாய்ப்பட்டு  அந்திம கதி அடைந்தபோது அவருக்கு பெரிதும் உபகாரமாக இருந்தவர்  மட்டும் அல்ல அந்திம கிரியைகளை புரிந்தவரும்  பெரிய நம்பி தான்.  ஜாதி வித்யாசம்
 பார்க்காதவர். அதனால் மற்ற வைஷ்ணவர்கள் அவரை  பஹிஷ்கரித்து புறக்கணித்தனர்.  ஸ்ரீ ராமானுஜர் அவரிடம்  ''குருவே,  எதற்கு இப்படிச் செயது,  அவப்பெயர் வாங்கினீர்கள்?''எனக் கேட்டார்?

''ராமானுஜா,   எனக்கு ராமாயணத்தில் ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.  ஸ்ரீ ராமன்  ஜடாயுவை குற்றுயிரும் குலையுயிருமாக கடைசி தருணங்களில் பார்த்து ராவணன் சீதையை  கடத்தியதை சொல்லி உயிர் நீங்குகிறான்... ஜடாயுவுக்கு  அந்திம கிரியைகளை ஸ்ரீ ராமன் புரிந்தார்.  நான்  ராமனைக் காட்டிலும் பெரியவனுமில்லை, ஜடாயுவை விட தாழ்ந்தவனுமில்லை ''

''குருவே  நீங்கள் ஒரு சிறந்த மஹான் என்று அவரை வணங்கினார்  ராமானுஜர். மற்ற வைணவர்கள் அவரை  ஏற்க தயாரில்லை.  ஆகவே ஒரு சம்பவம் அவர்கள் அனைவரையும் மாற்றியது.

 ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் உற்சவர் வீதி உலா வரும்போது தேர் பெரிய நம்பிகள் இல்லத்திற்கு எதிரே வந்தபோது அவரை வைஷ்ணவர்கள் மதிக்கவில்லை,  பெருமாள்  தீர்த்தமும் தரவில்லை. வீட்டிலிருந்தே  பெருமாளை  வணங்கினார்  பெரியநம்பிகள்.  அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எவ்வளவு முயன்றும் ரங்கநாதன் தேரோடு  பெரியநம்பி இல்லத்தின் எதிரே இருந்து நகரவே இல்லை.  அப்புறம்  யாரோ சொல்லி  பட்டாச்சாரியார்  பெருமாள் தீர்த்த  பிரசாதத்தை பெரியநம்பிக்கு  அளித்த பிறகு தான் பெருமாள் தேரைக் கிளப்ப அனுமதித்தார். வைணவர்களின் எண்ணத்தை பெருமாள் சுலபத்தில் மாற்றினார். 

ராமானுஜன் என்பவன் யார்,   வைணவம் என்ற  ஒரு மதத்தை சைவத்துக்கு எதிராக பரப்பும் அவனை எங்கிருந்தாலும்   உடனே பிடித்து  இங்கே கொண்டுவாருங்கள் என்று  வீர சைவ சோழ ராஜா  கட்டளையிட்டு வீரர்கள் ராமானுஜரை தேடி சென்றார்கள்.  எப்படியோ விஷயம்  அறிந்து ராமானுஜரின் பிரதம  சிஷ்யர்  கூரத்தாழ்வான் ஓடிவந்து ராமானுஜரை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி ஆழ்வானும் பெரிய நம்பி களும்
 வீரர்களோடு சோழனை சந்திக்கிறார்கள்.  இருவர் கண்களையும்  பிடுங்கி குருடாக்கினான் சோழன்.  வயதான காலத்தில் கண்ணிழந்து ரத்தம் சிந்தி பெரியநம்பிகள் மறைகிறார்.  

ஆசார்யனுக்காக  உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், சிஷ்யனுக்காக  உயிர் கொடுத்த குருவை பெரிய நம்பி மூலம் அறிந்து வணங்குகிறோம்.

Saturday, November 26, 2022

charity

 


கீரை இட்லி சாஸ்திரம்...நங்கநல்லூர் J K  SIVAN  

இப்போதெல்லாம்  முளைக்கீரை, சிறு கீரை எல்லாமே  விலை உயர்ந்து விட்டது. ஒரு கட்டு  30 -35 ரூபாய் வரை விற்கிறது   .மணல்தக்காளி கீரை  ராஜ குலம் . ஒஸ்தி.  இன்னும் கொஞ்சம் விலை கூட.  கீரைத் தண்டை
கண்ணால் பார்த்து வெகுகாலம் ஆகிறது.  முருங்கைக் கீரை  பேப்பரில் படித்ததோடு சரி. எங்கள் வீட்டில் முருங்கை மரம் ஒன்று இருந்தபோது அடிக்கடி  முருங்கைக் கீரை கூட்டு, முருங்கை இலை போட்ட அடை சாப்பிட்ட காலம் பறந்து விட்டது.  அம்மா வெண்ணை காய்ச்சும்போது முருங்கை இலை  போட்டதாக லேசாக ஒரு ஞாபகம்.  
எழுபத்தைந்து  வருஷத்துக்கு முந்திய  ஒரு பழைய நினைவு  குறுக்கிடுகிறது.
''கீரைமா  கீரை''  வழக்கமாக  கீரை விற்கிற  பட்டு வாசலில்  நின்று குரல் கொடுத்தாள் .
அம்மா உள்ளே இருந்து  வந்தவள் 
''பட்டு  என்னடி கீரை வச்சிருக்கே'
''முளைக்கீரை, மணல் தக்காளி, பசலைக் கீரை, அரைக்கீரை. மா.. . எது வேணும்?''
அப்பா  வீட்டில்  அடுத்த பக்கம் இருக்கும் குட்டி  திண்ணையில் ஹிந்து பத்திரிகை படித்துக் கொண்டு
 உட்கார்ந்திருக்கிறார்.
 " ஒரு கட்டு முளைக் கீரை என்னடி  விலை....?"
 " ஓரணாம்மா"
 "ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.  வழக்கமா  அரையணான்னு  தானே  தருவே...
''அது சின்ன கட்டு  அம்மா. இன்னிக்கு பெரிய கட்டு தான் இருக்குது''
'சரி முக்கால்  அணா ன்னு சொல்லி  நாலு கட்டு கொடுத்த்துட்டு போ"
 "இல்லம்மா வராதும்மா".
 " அதெல்லாம் முடியாது.  முக்காலணா  தான்''   அம்மா பேரம் பேசுகிறாள்.
'' சரிம்மா  மேலே ஒரு காலணா போட்டு கொடும்மா. உன் கை  ராசி'' 
 "சொன்னா சொன்னது தான் பட்டு. மேலே கீழே  எதுவுமே  கிடையாது. நாலு கட்டுக்கு மொத்தம் மூணு அணா தான் தருவேன்.முடிஞ்சா கொடு இல்லேன்னா  போம்மா'' 

 கீரைக்காரி பட்டு  கொஞ்சம் பேசாமல் யோசித்தாள் " உன் கை  தாம்மா போணி ...சரிம்மா உன் இஷ்டம்" என்று  சொல்லி   பெரிய  திண்ணையில் ஓரத்தில் நாலு கீரை கட்டு வைத்தவள்  மூணு அணாவை வாங்கி 
சுருக்குப் பையில் போட்டு கூடையில் வைத்தவள் திரும்ப  கூடையை தூக்கி தலையில் வைத்துக் கொள்ள முயன்று திண்ணையில் குப்புற சரிந்தாள் ''
''என்னடி  பட்டு  என்ன ஆச்சு உனக்கு....''
அம்மா வந்து அவளை தூக்கி திண்ணையில் உட்கார வைத்தாள் 
''பசிம்மா....
''காலையிலிருந்து ஒண்ணுமே  சாப்பிடலேயா  நீ ?''
''இல்லேம்மா. ஊட்டுக்கு போய் தான் கஞ்சி  காச்சணும்''
  "சரி. உட்காரு . இதோ வர்றேன்." 

அம்மா உள்ளே சென்று  ஒரு வாழை   இலை யில்  ஆறு சூடான இட்லியும், தேங்காய்  சட்னியோடும்  வந்தாள். " ''இந்தா சாப்டுட்டு  போ" 

 கீரைக்காரி சாப்பிட்டு முடித்து  ''அம்மா  நீ  மவ ராசியா இருக்கோணும்  ''  என்று வாழ்த்தி விட்டு சென்றாள் .

இதெல்லாம் குட்டி திண்ணையில் இருந்து பேப்பரை தூக்கிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த அப்பா

''ஏண்டி ஒரு காலணாவுக்கு  இவ்வளவு பேரம் அவளோடு பேசினே,  ஒரு  இட்லி  அரையணான்னு வச்சிண்டா கூட ஆறு இட்லிக்கு  மூணணா  எப்படி  உட்டுக்  கொடுத்தே''  என்று கேட்டார்.

''ஆமான்னா ... அது வேறே  இது வேறே.. வியாபாரத்துல தர்மம் பார்க்க படாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க படாதும் பா.  உங்களுக்கு தெரியாததா....'' என்றாள் 


HRUDHAYAM


 

ஹ்ருதயம்     #நங்கநல்லூர்_J_.K_SIVAN


''பகவானே, எனக்கு  ஒரு சந்தேகம். நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் '

பகவான் ரமணர் அந்த பக்தனை பார்த்து தலை அசைத்தார்.

''ஹ்ருதயம் வலது பக்கம் இருக்கிறது என்கிறீர்களே. விஞ்ஞானிகள், உடல் சாஸ்திர வல்லுநர்கள்  இடது பக்கம் தான் இருக்கிறது என்று எழுதுகிறார்களே. எது சரி ?''

''இதயம் என்கிற உறுப்பு இடது பக்கம் தான் இருக்கிறது. நான் சொல்லும் ஹ்ருதயம்  உடலில்  இயங்கும் கண்ணுக்கு தெரியும்  உறுப்பு அல்ல.  வலப்பக்கம் தான் உள்ளது. எனது அனுபவத்தில் தெரிந்த விஷயம் இது. இது விஷயமாக  ஏதாவது சான்று வேண்டுமானால் மலையாள ஆயுர்வேத புத்தகம் ஒன்றில்,  சீதா உபநிஷத் ஆகியவற்றில் பார்க்கலாம் . 

 ''எனக்கு தெரியும்.   பகவான் அதிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்.

நமக்குள் இருக்கும் ஜீவன் என்பது   ஹ்ருதயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. மூளையில்  அது விழிப்பு நிலையில் இருக்கிறது. நான் சொல்லும் ஹ்ருதயம்  ஒரு சதையின் குழிவு . ரத்தத்தை அழுத்தி அனுப்புவது இல்லை. வேதங்கள் சொல்லும், நூல்கள் விவரிக்கும்  ''நான்'' என்பதை உணர்த்தும்  ஒரு மைய பாகம்.  இது என்ன சதைப்பிண்டத்திலா உருவாகிறது.? இல்லை. நமது தேகத்தில் எங்கோ மைய பகுதியில் அமர்ந்து ஆணையிடுகிறது. எல்லாமே ஆத்மாவின் வெளிப்பாடு.  ஆகவே தான்  இந்த ஹ்ருதயம் என்பது  முழு தேகமும், அதை கடந்த இந்த பிரபஞ்சமும் ஆகும் ''நான் '' என்பதின்  உருவகம்.

 ஆத்மாவை, பிரம்மத்தை, எங்கோ ஒரு இடத்தில்  ஸ்தாபிக்க  அப்பியாசம் செய்து ரிஷிகள் கண்டுபிடித்த  இடம் தான் ஹ்ருதயம்.  ஆத்மாவின்  இருப்பிடம்.  எங்கும் வியாபித்துள்ளது. அதுவே எல்லாம்,''நான்'' என்பது அதுவே. இந்த உடம்பு இல்லை. இனிஷியல்  ஒரு பெயர், அதற்கப்புறம் ABCD என்று படித்த டிக்ரீ எல்லாம் போட்டுக்கொள்ளும் இந்த ஆசாமி இல்லை.   

ஏதாவது மையமாக முக்யமாக இருந்தால் அதை ஹ்ருதயம் என்போம். பூரண பரிசுத்த மனது, ஆத்மா. சதையிலோ, எலும்பிலோ இல்லாமல்  வலது மார்பில் குடிகொண்டது. உணர்வு.  உலகை இயங்க வைக்கும் சுவிட்ச் போர்டு.    தேகத்தோடு மனதை சம்பந்தப்படுத்தாமல் தெரிந்து கொள்ளவேண்டிய ரஹஸ்யம்.  தேகத்தை முதலில் ஆத்மா என்று நம்புவதை அடியோடு மறக்க வேண்டும். 

Friday, November 25, 2022

THIRUPATHI TEMPLE




திருமலேசன் வழிபாடு 'திட்டம்' -
#நங்கநல்லூர்_j_k_SIVAN
 
சனிக்கிழமை  விசேஷ செய்தி

நாம் நினைப்பது போல் இல்லை. யாரோ  எதுவோ  செய்கிறார்கள் நாம்  பார்க்கிறோம் என்று இல்லை.  திட்டமிட்டு முறைப்படி  தான்  கோவில்கள் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.  முக்கியமாக  திருப்பதி பெருமாள் கோவிலில்  ஒவ்வொருநாளும் எப்படி என்னென்ன செய்யவேண்டும் என்று பல  விஷயம் தெரிந்தவர்கள் கூடி கலந்தாலோசித்து வழிமுறைகளை, வழிபாடு நெறிகளை  பல நூற்றாண்டுகள் முன்பே  வகுத்துள்ளனர்.  

1803ல் கிழக்கிந்திய  கம்பெனி வெள்ளைக்காரன்  ஆட்சியில் திருப்பதி கோவில் அவர்கள்  கட்டுப்பாட்டில் இருந்த போது  கர்னல் மெக்கென்ஸி  தான்  அதிகாரி. அவன் கோவில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல்  பக்தர்கள்  மனம் கோணாமல்  ஆகம  விதிகளுக்குட் பட்டு பெருமாளுக்கு சேவைகள் செய்பவை பற்றி ரொம்ப ரொம்ப  ஆழ்ந்து கவனம் செலுத்தி ஒன்று விடாமல் எழுத  வைத்து,  அதை அப்படியே தவறாமல் பின்பற்ற கட்டளை  இட்டிருக்கிறான்.  ''திட்டம்'' என்று அதற்கு பெயர். மராத்தி மொழியில்  நாராயண ராவ்  எழுத்தில் வடித்தது. TTD தேவஸ்தானம் இன்றும் அதன்படியே  நடக்கிறது. அதில் சில ருசிகர விஷயங்கள்  இருப்பதை அறிந்தேன். கொஞ்சம்  இப்போது சுருக்கி தருகிறேன்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வெளியூர் காரர்கள் வந்தால் ''பரஸா '' என்ற  காணிக்கை தர வேண்டும். 1800 ல்   ஜீயங்கார், ஏகாக்கிகள்,  கோவில் நிர்வாகத்தை  பொறுப்பாக கவனிததாக தெரிகிறது. .  திருப்பதி திருமலை வாழ் மக்களிடமும், ஏழைகளிடமும் கட்டணம் வசூலிக்க கூடாது.  எல்லோரும்  பெருமாள் முன் நின்று  ஆர அமர  தரிசனம் செய்யட்டும்.  வசதி படைத்தவர்கள் பணக்காரர்களிடம்  குறிப்பிட்ட தொகை காணிக்கையாக  கட்டி  தரிசனம் பெற அனுமதிக்க வேண்டும்.  

திருமலை ஏறுவதறலோ இறங்குவதற்கோ ஏழைகள் பணம் கட்டவேண்டாம். பணக்காரர்கள் பணம் கட்டாவிட்டால் இறங்கும்போது அரசாங்க  காவல் காரர்கள் பிடித்து பணம் வசூலிப்பார்கள்.

இல்லாவிட்டால் சிறை. 24 துக்காணி, தம்பிடி, தான் மலையேற இறங்க சார்ஜ். யோகிகள் பைராகிகள் பிச்சைக்காரர்கள் இலவசமாக ஏறி இறங்கலாம். 
ஒவ்வொரு அதிகாலையிலும்   கோவில் காப்பாளர்  பெரிய ஜீயங்கார் மடத்துக்கு வந்து சாவி வாங்கி போகவேண்டும்.கோவில் வாசல் பூட்டு திறந்து உள்ளே  உக்ராணம் கதவு பூட்டு திறந்து  அன்றைக்கு  தளிகைக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அரிசி, நெய் சர்க்கரை,பருப்பு வகைகள் எடுத்து ஸ்வயம்பாகிகளுக்கு(ஆலய  சமையல்காரர்கள்)  அளந்து கொடுப்பார்கள்.

பெரிய  ஜீயங்கார் குளித்துவிட்டு  ஆலயம் செல்ல தயாராக இருப்பார்.  கொல்லவார் எனும் உத்தி யோகஸ்தர் அவரை அழைப்பார். எல்லோரும் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள். கோவில் கர்பகிரஹ சாவியோடு ஜீயங்கார் செல்வார். நமஸ்காரம் பண்ணிவிட்டு  கதவை திறப்பார்.  நம்பி என்கிற  அர்ச்சகர் அங்கே தயாராக இருப்பார்.  ப்ரம்ம தேவ தீபம்,  நெய்  திரி யோடு ஏற்றி,  முதல் நாள் அலங்கார புஷ்பங்கள், நிர்மால்யம் எல்லாம் களைந்து,  சயன அறை  பள்ளியறை  கட்டிலில் இருந்து புஷ்பங்கள் எடுத்து, ஸ்ரீனிவாச மூர்த்தி உத்சவ விகிரஹத்தை எடுத்து நகைகள் ஆபரணங்கள்,  பூஜா பாத்திரங்கள் எல்லாம் சரிபார்த்து,  அர்ச்சனை பண்ணி விட்டு, தீர்த்த கந்த அபயஹஸ்தம் தொட்டு அர்ச்சகர்  பெரிய ஜீயங்காருக்கு தீர்த்தம் அளிப்பார்.சடாரி  சார்த்துவார். கொல்லவாருக்கும் உண்டு. கையில் தீவர்த்தி எடுத்துச் செல்பவரும் அருகே இருப்பார்.  கொல்லவார் திருமஞ்சன கட்டிலில் இருக்கும் வஸ்திரங்கள், தலையணை எல்லாம் அகற்றுவார் .  அப்புறம்  வத்த பாராயண  குரூப் வரும், ஆசார்ய புருஷருடன் சேர்ந்து ஸ்தோத்ரங்கள்  சொல்லி மங்கள ஆரத்தி.
அப்பறம் பால்  நைவேத்யம்  பெருமாளுக்கு. ஏகாங்கிகள்  குடும்பம் இல்லாத  அர்ச்சகர்கள்.  பெரிய  ஜீயங்கார் மங்களார்த்தி தயார் செய்து ஏகாங்கிகளிடம் கொடுக்க அவர்கள் நம்பியிடம் கொடுக்க   அவர் பெருமாளுக்கு  தீபாராதனை செய்கிறார். பிறகு ஜீயங்காருக்கு தீர்த்தம் சாதிப்பார்.  அப்புறம் எல்லா பக்தர்களுக்கும்  தீர்த்த பிரசாதம்.  எல்லோரும் விடை பெற்றபின் கர்பகிரஹம் ஆகாச கங்கை ஜலத்தாலும்  ப்ரம்ம பாவி கிணற்று   நீராலும் சுத்தம் செய்யப் படும்.மலர்மாலைகள்  கந்த திரவியங்கள் நந்தவனத்தி லிருந்து  கொண்டுவரப்பட்ட மலர் மாலைகள் அணிவிக்கப்படும்.  அப்புறம்   தோமாலை சார்த்தப்பட்டு  கற்பூர ஆரத்தி காட்டுவார். 

தோமாலை சேவைக்கு பிறகு ஸ்ரீனிவாச மூர்த்தியை ரங்க மண்டபத்தில் கொலுவுக்கு  ஏளப்பண்ணுவார்கள் . அர்ச்சனை, மந்திர உச்சாடனங்கள்  நடைபெறும். யாத்ரா தானம்  பிராமணர்களுக்கு  அளிப்பார்கள். பஞ்சாங்கம் படித்து விட்டு,  பெரிய ஜீயங்காரின் குமாஸ்தா  அன்றாட வரவு செலவு கணக்கை ஸ்ரீனிவாசனுக்கு படித்துக் காட்டுவார்.  வாகன, அன்னதான, பிரசாத  செலவுகள்,  காணிக்கைகள் வஸ்திரங்கள், ஆபரணங்கள் கணக்கு ஸ்டாக் நிலவரம்  சொல்லப்படும்.  கணக்கு முதல் நாள் காலை வரை அளிக்கப்படும்.

கற்பூர தீபம் மங்கள ஆரத்தி நடை பெறும் . கீதம் கணம், மங்கள வாத்யம் ஒலிக்கும்.  சாமரம் வீசப்படும், குடை பிடிக்கப்படும். கண்ணாடி காட்டி , ராஜோபசாரம் நடைபெறும்.  ஸ்ரீனிவாச மூர்த்திக்கு நைவேத்யம் ஆனபிறகு பிரசாத விநியோகம்.  சஹஸ்ரநாம அர்ச்ச னை,  புஷ்ப மாலார்ச்சனை, வெங்கடாசலபதி கத்யம், ஆகியவற்றை நம்பி முன்னிலையில் தொடரும்.  முதல் மணி ஒலிக்கும். பிரபந்தம்  ஆரம்பமாகும்.  தீர்த்த பிரசாதம், சடகோபம் எல்லாருக்கும் சார்த்தப்படும்.  ஆலவட்டம் விசிறுவார்கள்.

பரஸாக்கள் அப்புறம் தரிசனம் பெறலாம். காணிக்கை கள்  பெறப்படும். பெரிய  வெள்ளிப் பேலா , வாயக லமாக, கர்பகிரஹத்தி லிருந்து கொண்டுவந்து தங்கம் வெள்ளி, பணம்  காணிக்கைகளை அதில்  நம்பி கலெக்ஷன் பண்ணுவார்.  வெள்ளைக்கார உத்யோகஸ் தர்கள், கொல்லவாரோடு  சேர்ந்து  அதை கண் காணிப்பார்கள்.

கணக்கு பார்த்து  எழுதிக் கொண்டு காணிக்கைகள்  கோவில் நிர்வாகத்துக்கு அனுப்பப்படும்.சிப்பாய்கள் கூடவே போவார்கள்.  பெரிய  உண்டியை திரைக்குள் போர்த்தி வைத்திருப்பார்கள், திரை இடைவெளியில் கை  உயர்த்தி உண்டியல் வாய்க்குள்  காணிக்கை களை  வெங்கடாச்சலபாதிஹ்யை வேண்டிக்கொண்டு போடும் வழக்கம் உருவானது. உண்டியல் காணிக் கைகள்  துணியால் சுற்றி மூடி  ஹனுமான் முத்திரை , ஸ்ரீனிவாச முத்திரை  சீல் வைத்து ஜீயங்காரிடம் கொண்டு செல்வார்கள். உண்டியல் எடை பார்த்துவிட்டு நிர்வாகத்துக்கு போகும்.   மதியம் ரெண்டுமணிக்கு  கர்பகிரஹம்  நிலைக்கதவை   ஏகாங்கிகள்  பெருமாளுக்கு நைவேத்யம் சமர்ப்பித்துவிட்டு   சார்த்துவார்கள்.  அப்புறம் எல்லோருக்கும் தீர்த்த பிரசாதம்.

ரங்க மண்டபத்தில் தரிசனம் பெற  பக்தர்கள் அமர அனுமதி உண்டு.  அலங்காரம்  அர்ச்சனை  அபிஷேகங்கள் தரிசித்துவிட்டு காணிக்கை ககள் செலுத்துவார்கள்.  தேர் வாகனங்களை தரிசிப்பார்கள். கருட வாகன   தரிசனத்துக்காக   நிறைய பக்தர்கள் கும்பலாக காத்திருப்பார்கள். உத்சவர்  ஊர்வலம் போகும்போது காஸ் லைட்டுகள், தீவர்த்திகள்  ஜெகஜோதியாக இருக்கும் இருளை  இனிய  கானாம்ருத சங்கீதம்  கலைக்கும். பக்தர்கள் மனம்  மலையின் குளிர்ந்த காற்றைப்போல  நிறைய குளிரும். 

இன்னும் நிறைய விஷயங்கள்  அந்தக்கால புத்தகங்களில் இருக்கிறது.   அப்புறம் சேர்ந்து அனுபவிப்போம்.

 

kaanchi kamakshi


 அன்னபூரணி அர்த்த நாரீஸ்வரி மாதா -   

#நங்கநல்லூர்__J_K_SIVAN


இன்று வெள்ளிக்கிழமை.  இந்திய  கிரிக்கெட் அணி  நியூஜிலாந்திடம்  தோற்று போய்விட்டாலும்  சென்னையில் வெளியே  மழை இல்லாவிட்டாலும் குளிர் இருக்கிறது.  கொசு மண்டிக்கிடக்கிறது . கார்பொரேஷன்  வண்டி புகை  போனாலும்  அது கொசுவுக்கு  அதிக பலம் தரும்  டானிக்காக தான் இருக்கிறது. விளக்கேற்றி விட்டு  உமாதேவையைப்  படத்தில் பார்த்ததும்  அவள் பற்றிய ஒரு நினைவு வந்தது.   ஓஹோ.!   மூக பஞ்சசதி   ஆர்யா சதகம்  எழுதும்போது   இதை தான் சொன்ன  ஞாபகம்.  மஹா பெரியவாள் சதா வணங்கும்  காஞ்சி காமாக்ஷி தேவி.அவரையே  காமாக்ஷி ஸ்வரூபம் என்று சொல்வோமே. ஆஹா!  இது  மஹரிஷி ரமணர்  ஒரு முறை பக்தர்களுக்கு சொன்ன கதையாயிற்றே.
+++
பார்வதி தேவி காசியிலிருந்து காஞ்சிபுரம் சென்றாள் . அங்கே ஜிலுஜிலுவென்று ஓடிக் கொண்டி ருந்த புண்யநதி கம்பா அவள் மனத்தைக் கவர்ந்தது. அதன் கரையிலேயே தியானம் செய்ய அமர்ந்துவிட்டாள் . தனது ஆபரணங்களை கழற்றி எறிந்து விட்டு ருத்ராக்ஷ மாலைகளை அணிந்தாள் . தனது பளபளக்கும் ஆடைகளை களைந்துவிட்டு மர உரி அணிந்தாள் .தேஹம் பூரா சாம்பலை விபூதியாக அணிந்தாள். புற்கள் சிறு தாவரங்களின் இளம் தளிர்களை மட்டுமே உணவாக கொண்டு '' ஹர ஹர சிவ சிவ ஓம் நமசிவாய'' என்று த்யானத்தில் ஈடுபட்டாள் . மூன்று வேளையிலும் கம்பாநதி ஸ்னானம். 
அதன் கரையில்  மணலில் சிவலிங்கம் கையால் பிடித்து அர்ச்சித்து வழிபட்டாள் . வில்வதளம் கொன்றை மலர் போன்றவற்றால் அர்ச்சனை. அவள் இருப்பதை உணர்ந்த ரிஷிகள் முனிவர்கள், யோகிகள் எல்லாம் அவளைத் தேடி வந்தபோது அவர்களை உபசரித்து வணங்கினாள் .

காஞ்சி அப்போது எங்கும் வனப்பிரதேசம், வனப்பாக காட்சியளிக்க, அங்கிருந்த மலர்களைப் பறித்தாள் . மணல் லிங்கத்துக்கு அர்ச்சித்து பூஜித்தாள் .

ஒருநாள் கம்பா நதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது. இதற்கு முன் இல்லாத பெரிய அளவில் ஹோ வென்று வெள்ளம் உயர்ந்து கரை புரண்டது. ஆக்ரோஷத் தோடு கம்பா ப்ரவாஹமாக ஓடினதைக் கண்டு

''அம்மா, கண் விழியுங்கள் எதிரே பாருங்கள் கம்பாவில் வெள்ளம்'' என்று தோழியர் அம்பாளின் தியானத்தை கலைத்தனர்.

''ஆஹா என் தியானத்துக்கு இடையூறா? என் சர்வேசா'' என்று மணல் லிங்கத்தை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற இறுக்கி அணைத்துக் கொண்டாள். வெள்ளத்தில் கரைந்து விடுமோ? என பயந்தாள். என் தவமும் தியானமும் தடை படக்கூடாது . என் தர்மத்தை விடாமல் காப்பேன். என் தவ நோக்கம் சிதையாமல் தொடர்வேன். என் தியானலிங்கம் கரைந்து மறைந்தால் நானும் மறைவேன் . இந்த மாபெரும் வெள்ளம் என் பரமேஸ்வரனின் சோதனை. என் தவம் எத்தகையது என்று சோதிக்கவே கம்பா நதி வெள்ளம் என்கிற மாயையை தோற்றுவித்திருக்கிறார்.   பயத்தை விடுவேன். தவத்தை தொடர்வேன். தோழியரே என்னைத் தனிமையில் விட்டுச் செல்லுங்கள்'' என்று அம்பிகை மணல் லிங்கத்தை அணைத்துக் கொண்டு பேசினாள். வெள்ளம் அவளை சூழ்ந்துகொண்டது. மணல் லிங்கத்தை மார்போடு அணைத்துக்கொன்டு மகாதேவனை மனதார ஏகாக்ர சித்தத்தோடு தியானித்தாள் . வானத்தில் அசரீரி ஒலித்தது அவள் காதில் கேட்டது

''பெண்ணே, வெள்ளம் நின்றுவிட்டது. உன் சிவலிங்கத்தை விடுவி. உன்னால் அணைக்கப்பட்ட இந்த மண் சிவலிங்கம் ப்ரஸித்தமானதாகும். தேவாதி தேவர்கள் விண்ணவர்கள் மண்ணவர்கள் வழிபடும் தெய்வமாகும். கேட்ட வரம் அளிக்கும் கைகண்ட சிவலிங்கமாகும் . உன் தவம் வெற்றிகரமாக நிறைவேறட்டும். தர்மத்தை ரக்ஷிக்க உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள் புரிந்து என்றும் சாஸ்வதமாக காக்கும். நானே அருணாசலமாக அண்ணாமலையில் முக்தி அளிப்பேன். பாபங்களை அழிப்பேன். பந்த பாசம் விலக்கி மோக்ஷ பதவி யளிப்பேன். எண்ணற்ற ரிஷிகள், சித்தர்கள் கந்தர்வர்கள், யோகிகள் அங்கே என்னை எப்போதும் சூழ்ந்து கொண்டு வழிபடுவார்கள். கைலாச பர்வதம் மேரு மலையை விட இது எளிதாக அவர்களால் நாடப்படும். நீ அங்கே சென்று கௌதம ரிஷியை சந்தித்து அவரிடம் என்னைப் பற்றி உபதேசம் பெற்று தவத்தை தொடர்வாயாக. என்னை ஜோதி பிழம்பாக அங்கே தரிசிப்பா யாக. சர்வ பாபங்களும் விலகி பூமியில் சுபிக்ஷம் நிலவும்''

பரமேஸ்வரனின் இந்த அருளாசி அசரீரியாக பார்வதிக்கு கேட்டபோது ஆனந்தமடைந்தாள் .

''பரமேஸ்வரா,  உங்கள் கட்டளைப்படியே நடக்கிறேன்'' என்று விழுந்து வணங்கினாள் பார்வதி. அருணாசலம் நோக்கி நடந்தாள் . அவளைப் பின் தொடர்ந்த ரிஷிகளை, யோகிகளை நோக்கி ''நீங்கள் இங்கேயே கம்பா நதி தீரத்தில் இருங்கள். உங்கள் தவத்தை தியானத்தை தொடர்ந்து புரியுங்கள் '' இந்த லிங்கத்தில் நான் அணைத்த அடையாளம் என்றும் தெரியும். அதை விடாமல் அர்ச்சித்து வழிபடுங்கள். இங்கே காஞ்சிபுரத்தில் வந்து வழிபடும் பக்தர்கள் என்னை காமாக்ஷியாக கண்டு என் அருளாசி பெறுவார்கள். அவர்கள் மனோபீஷ் டத்தை நிறைவேற்றுவேன். வரமருள்வேன்”

அருணாசலத்தில் அம்பாள் சித்தர்கள், ரிஷிகள், தேவர்களை எல்லாம் சந்தித்தாள் . அவர்கள் அவளை தங்களோடு இருந்து அருள் புரிய வேண்டினார்கள்.

''நான் கௌதம ரிஷியை உடனே சந்திக்க வேண் டும் என்று சொன்னதும் அவள் எண்ணத்தை நிறைவேற்ற அவளை கௌதமர் ஆஸ்ரமம் இருந்த பவழக் குன்று அடிவாரத்துக்கு வழி காட்டினார்கள்.
அவளைக் கண்டதும் கௌதம ரிஷியின் மகன் சதானந்தன் ஓடிவந்தான், வணங்கினான்.

''அம்மா, சற்று இங்கே ஓய்வெடுங்கள். நான் காட்டுக்குள் சென்று தர்ப்பை புற்களை எடுத்து வர சென்ற என் பிதா கௌதமரிஷியை அழைத்து வருகிறேன்'' என்று ஓடினான். எதிரே திரும்பி வந்து கொண்டிருந்த ரிஷியிடம்

''அப்பா, அம்பாள் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறாள். சீக்கிரம் வாருங்கள்''
என்று படபடவென்று உணர்ச்சி பொங்க கூறினான்.

அம்பாள் காலடி பட்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வனப்பிரதேசமே பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள், இலைகள், காய் கனி வகைகள் நிரம்பிய அழகிய நந்தவனமாகிவிட்டது.

''ஆஹா நீ சொல்வது ஆனந்தம் தருகிறதடா மகனே'' என்று மகிழ்ந்தார் மஹரிஷி கௌதமர். எங்கும் தோன்றிய மாற்றம் அவரை வியக்க வைத்தது. வேகமாக ஓடி ஆஸ்ரமம் சென்று அம்பாளை வணங்கினார்.
கௌதமர் சொல்லியபடியே அம்பாளின் தவம் தொடர்ந்தது. மஹாதேவன் மாதா முன் தோன்றினான்.

''தேவி, நீ கேட்டதை அளிப்பேன் கேள்'' என்றபோது

''எனக்கு வேறென்ன வேண்டும் பரமேஸ்வரா, உன்னில் பாதியாக உன்னை இணைபிரியாமல் நான் இருந்தால் அதுவே போதுமே. எனக்கென ஒரு தனி உடல் வேண்டாம் பகவானே. இருந்தால் மீண்டும் ஏதாவது தவறு செய்வேன். எண்ணற்ற காலம் உன்னை தவம் செய்து மீண்டும் அடையவேண்டி வருமே. உனைப் பிரிந்து இருக்க என்னால் முடியாது தெய்வமே'' என்றாள் உமை .
அம்பாள் அர்த்தநாரிஸ்வரியான கதை இது என்று பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் சொல்லி முடித்தார் பகவான் ரமண ரிஷி.

Thursday, November 24, 2022

OOTHU KAADU

 மாலனை பாடியவரின் வேலன்  பாட்டு  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் 

தேனினும் இனிய தமிழ் மொழியில் தெய்வத்தைக்  காட்டும் சக்தி  அருட் கவிகள் ஒரு சிலரே. ஊத்துக்காடு தனது  பாடல்களில் கிருஷ்ணனை நம்மோடு  ஆடச் செய்பவர்.   ''ஆடாது அடங்காது வா கண்ணா,  அசைந்தாடும் மயில் ஒன்று கண்டேன், அலை பாயுதே கண்ணா,  பால் வடியும் முகம் ,  பார்வை ஒன்றே போதுமே.தாயே யசோதா, புல்லாய் பிறவி,  ஸ்வாகதம் கிருஷ்ணா.''. ...  ஆஹா,   எத்தனை அற்புதமான பாடல்கள்!!   வேறொருவர் இதுபோல் எளிய தமிழில் எழில் மிகு கண்ணனை   கண் முன்னே கொண்டு வந்து காட்ட முடியுமா?   ஆடலிலும் பாடலிலும் அவர் பாடல்கள் இன்றும் மேடைகளில் செவிக்கு அலுக்காத  விருந்து.

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700 - 1765)  65 வயசு தான் வாழ்ந்தார் இன்னும் மறையவில்லை என்றும் மறைய முடியாதவர். திருவாரூர் தக்ஷிண   த்வாரகை எனப்  பெயர்  பெற்ற   மன்னார்குடியில் பிறந்தவர்  வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என்ற பெயர் கொண்ட  ஊத்துக்காடு.  கும்ப கோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது.  நீடாமங்கலம்  நடேச ரத்தின பாகவதர் தான்  குரு. அப்புறம்  கிருஷ்ணனே  குரு.

ஒரு அற்புத  பாடலை மாலின் மருகோனே  முருகன் மேல் பாடி இருக்கிறார். இன்று தான் கேட்டேன்... மஹாராஜாபுரம் சந்தனத்தின் அருமைக் குரலில் ஆனந்தமாக ரசித்தேன்.  மாமனை அழகாக காட்டியவர் மருகோ னையும் இந்த பாடலில் அவனுக்கு பிடித்த  ஷண்முக ப்ரியா  ராகத்தில் எப்படி காட்டுகிறார்.! 
கிளிக் பண்ண  லிங்க்   

 
https://youtu.be/VIos2M9Vvs4

பாட்டை கீழே தந்திருக்கிறேன்,  அர்த்தம் தேவை இல்லை என்றாலும் சொல்ல ஆசை. அர்த்தம் இது தான்: 

முருகா,  மரகத பச்சை மயில் வாகனனே,ஆறுமுகா , எனக்கு ஒரு வரம் கொடுடா.  பரமேனும் ப்ரம்மத்தின்  ப்ரணவஸ்வரூபா, பச்சை பொண்ணு பார்வதிக்கும்  பரம ப்ரம்ம ஞானியான  பரமசிவனுக்கும் நடுவே உட்கார்ந்திருக்கும் சோமஸ்கந்தா, உன்னிடம் நான் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று பெரிய லிஸ்ட் எதுவும் தரப்போவதில்லே, ஒன்றே ஒன்று.தான் கேட்பேன்..

எனக்கு பொன்னும் பொருளும் வேண்டவே வேண்டாமாடா,  சிரிக்கும் சிங்காரவேலா உன் முகம் பார்த்ததும் அதெல்லாம் எனக்கு புளிச்சுப் போச்சு... உன்னைப் பார்க்கும் முன்பு உலகத்தில் என்னென்னவோ இன்பங்கள் தரும் வஸ்துக்கள் இருக்கு என்று தெரிந்து வைத்திருந்தேன்,  அது அத்தனையும் உன் மயில் ஆடும் ஆட்டத்தில் உன் அழகைப்  பார்த்ததும் அடியோடு மறந்தே போச்சு.  வாயில் எந்த வார்த்தையும் இப்போது வருவதே இல்லை. எப்பவும் முருகா முருகா என்ற ஒரே சொல் தான்..அது தரும்  ''கிக்''  கில்  மோகவெறி  தலை சுற்றி, பாஷையே மறந்து போச்சுடா.
அப்பனுக்கு உபதேசம் காதில் கிசு கிசு வென்று சொன்னாயே அதை எனக்கும் சொல்லுடா... அறுபடை வீடு கொண்ட வீறு நடைபோடும் வேல் முருகா,  உன் திருப்பதம் தா..தாயாயினும் சாலப்பறிந்து அருளும் தயாளா....


ராகம்: ஷண்முகப்பிரியா    தாளம் :ஆதி

வரம் ஒன்று தந்தருள்வாய்! வடிவேலா!                                                                      
வரமொன்று தந்தருள்வாய்! --எங்கள்                                                    
மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா         (வரமொன்று)

அனுபல்லவி
“பரம்” என்ற சொல்லுக்கொரு பொருளே! --பரத்தில்                                    
பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே!---இளம்                                        
 பச்சைக்கும் இச்சைக்கும் நடுப் பொருளே!                                                
பல பொருள் கேட்டுனை அது இது எனாது                                                                
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த       (வரமொன்று)

சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை--                                        
புளித்துப் புளித்துப் போச்சே!--- ஏனென்றால் உந்தன்                                    
 புன்னகை முகம் கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம் என்றவை---                                                                  
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்                                              
ஏறுமயில் நடம் கண்டதாலாச்சே!
முன்னும் மனம் உருக “முருகா முருகா” என்று                                                          
மோஹமீறித் தலை சுற்றலாச்சே!-- சொல்ல வந்த                                                  
மொழி கூட மறந்துதான் போச்சே!
பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே (ஏதோ)--அந்தரங்கம்                                      
போதும் என்று கேட்கவும் ஆசை ஆச்சே

மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்!  புகு மதக்களிறு நடையுடையாய்!
இனித்த நறு வைங்கலவை அதனினும்-- இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்கும் ஒரு பதம் தந்தருள மணமணக்க வரு  தமிழருளுடையாய்
அன்னையினும் சிறந்ததான அருளொடு நிறைந்ததான அறுமுக வடிவேலா
(வரமொன்று)

Wednesday, November 23, 2022

GURU PEYARCHI

 குரு பகவான்  - நங்கநல்லூர் J K SIVAN 


பூமியில் வாழும் நமது வாழ்க்கை ஓட்டத்தை  கண்காணித்து நடத்தி செல்வது நவகிரஹங்கள் எனும் ஒன்பது  சுழலும் கோளங்கள் . ஒவ்வொன்றும் வித விதமான  ஓட்டத்தை கொண்டது.  இந்த ஒன்பது கிரஹங்களையும்  பன்னிரண்டு ராசி எனும் கட்டங்களின்  உள்ளமைப்பில் வான சாஸ்திரம்  கட்டுப்படுத்தி வைத்து  இருக்கிறது.  வித விதமான  ஓட்டத்தை கொண்டதால்  ஒரு  கிரஹம்  இடம்  பெற்ற  வீட்டிலிலேயே  வேறு சில  கிரஹங்களும் குடி புகும். அததன்  ஓட்டத்திற்கேற்ப இடம் மாறும்.  

நமது பிறப்பு  நக்ஷத்ரங்களை அடிப்படையாக கொண்டதால்  12 ராசிகளில் 27 நக்ஷத்ரங்களும்  அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே  எந்த ராசியில் எந்த நவகிரகம்  குடி இருக்கிறதோ அந்த ராசியில் உள்ள  நக்ஷத்ரக்காரர்களின் வாழ்க்கையில் நல்லவை கெடுதலான காரியங்கள் நடைபெற  கிரஹங்களே  காரணம் என்று நம்புகிறோம்.  அப்படி சில சக்தி உள்ள கிரஹங்கள் நல்லது செய்வதற்கு அவற்றை திருப்திப் படுத்த  பரிகாரங்களை தேடுகிறோம்.  அந்தந்த கிரஹம்  முக்கியமாக இருக்கும் க்ஷேத்ரங்களுக்கு  சென்று  பூஜைகள்  அர்ச்சனைகள் செய்கிறோம். 
  
அப்படி  இடம் பெயரும்  கிரஹங்களில் ஒருவர்  குரு பகவான். வியாழன்.  பிரஹஸ்பதி.  அவர்  வேகமாக  சஞ்சாரம் செய்யும்போது  அந்த  ஓட்டத்தை  அதிசாரம்  என்பார்கள். நவகிரஹங்களின் ஓட்டமே  சூரியனைச் சுற்றி வருதல் தான். 

ஜோசியர்கள்  ஜாதகத்தைப் பார்த்து  சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, போன்றவைகள் எப்போது, அதற்கு என்ன பரிகாரம் என்று சொல்வார்கள். 

உதாரணமாக  இது வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், 11-ம் வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு விரய வீடான மீன ராசியில் ஆட்சிப் பெற்று அமர்கிறார்..

குருபெயர்ச்சி பற்றி சொல்லும்போது  ஒரு முக்கியமான விஷயத்தை மறுபடியும்  இங்கே  நினைவூட்டுகிறேன்.

குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று இருளை நீக்கி ஒளி தருபவர்.
குரு என்ற பெயரில் ரெண்டு பேரை நாம் வழிபடுகிறோம். தக்ஷிணாமூர்த்தி எனும் தென் திசை நோக்கி அமர்ந்து மௌன த்யானத்தில் இருப்பவர் ஒருவர்.  அவர்  ஸாக்ஷாத் பரமேஸ்வரன்.  இன்னொரு குரு   வியாழன் எனும் நவகிரஹ  குரு. வியாழக்கிழமை நாம் தேடும் குரு பகவான். இவர் தேவகுரு பிரஹஸ்பதி.  

1.தக்ஷிணாமூர்த்தி:
தக்ஷிணம் என்றால் தெற்கு.தெற்கு நோக்கி வீற்றிருப்பதால்  பரமேஸ்வரனை  தக்ஷிணாமூர்த்தி என்றழைக் கிறோம்
.
சிவாலயத்தில் கருவறையின் வெளிப்புறத்தில், கோஷ்ட மூர்த்தி. ஆகம முறைப்படி   அவருக்கு தனிச் சன்னதி இல்லை. சிவ பெருமானுக்குறிய 64 திருமேனிகளுள் 25 திருமேனிகள் "மாஹேஸ்வர மூர்த்தங்கள்"  எனப்படும்.   அந்த  மாஹேஸ்வர மூர்த்தங்களுள் தக்ஷிணாமூர்த்தி ஒருவர்.  மேலான ஞானத்தை அருளும் ஞான குரு. நன்கு கற்று வல்லவர்களான சனகர் ,சனந்தனர் ,சனாதனர் ,சனத்குமாரர் என்னும் நான்கு மகரிஷிகளுக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து மௌனமாகச் சின் முத்திரை காட்டி  மௌன உபதேசம் செய்து ஞானத் தெளிவை தந்தவர் தக்ஷிணாமூர்த்தி.  கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டு, அக்  காலின் கீழ் முயலகன் எனும் அசுரன் இருக்க, நான்கு கரங்களுடன்- மேற்கரங்கள் இரண்டில் ஜபமாலை மற்றும் மழுவும் இருக்க, கீழ்க்கரங்கள் இரண்டில் வலக்கரம் சின்முத்திரை காட்ட, இடக்கரத்தில் சுவடி ஏந்தி காட்சிதருகிறார்.

ஈஸ்வரனுடைய மூவகை வடிவங்களுள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் யோக  வடிவம் ஆகும்.இவரிடம் உபதேசம் பெற்ற நான்கு மகரிஷிகளும் இவருடைய திருவடிக்கீழ், வரிசையாகவோ, பக்கத்துக்கு இருவராகவோ கை கூப்பி அமர்ந்திருப்பார்கள். 
.
தக்ஷிணாமூர்த்திக்கு சின்முத்திரை, ஞான முத்திரை ஆகிய இரண்டும் உண்டு.இவருக்கு ஆலமர் செல்வர், தென்முகக் கடவுள்,தென்னவன் என்னும் பெயர்களும் உண்டு. சிவனின் த்யான ஸ்வரூபம். உபதேச குரு. குரு மூர்த்தம். அசையாமல் இருப்பவர். இடம் பெயர்வதில்லை. எனவே குருப்பெயர்ச்சிக்கும்  இவருக்கும்  துளிக்கூட  சம்பந்தமே இல்லை. 

ஆகவே  இவருக்கு மஞ்சள் துணியோ ,கொண்டை கடலை மாலையோ,முல்லை மலரோ அணிவிக்க தேவையே இல்லை. .சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களே தான் இவருக்கும். இன்னும்  இதை பற்றி சிந்தக்காதவராகில் அநேகர் இருக்கிறார்கள். 


இப்போது அந்த இன்னொரு குருவான  நவகிரஹ குரு  பற்றி கொஞ்சம் அறிவோம்:
2.வியாழ பகவான் குரு.(பிரஹஸ்பதி)  தேவர்களுக்கு குரு.. ஆங்கீரச மகரிஷிக்கும் ஸ்ரத்தா தேவிக்கும் புதல்வராகப் பிறந்தவர். காசியில் சிவபெருமானை வழிபட்டு,தேவர்களுக்கு குருவாக ஆகும் பதவியை பெற்றவர்.  வியாழ பகவான் என்றும் அழைக்கிறோம்.  நவகிரஹ  மண்டலத்தில் ஐந்தாவதாகச் சூரியனுக்கு வடக்கில் விளங்குபவர். இவரை சுப கிரஹம் என்கிறோம். நல்ல பலன்களைக் கொடுப்பவர். குரு  பலன் கூடினால்தான் திருமணம் முதலிய சுபச் செயல்கள் நடைபெறும் என்கிறது ஜோதிடம்.

1867ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.அவை என்ன தெரியுமா?
1.அந்தணன், 2.அமைச்சன் 3.அரசன் 4.ஆசான் 5.ஆண்டளப்பன் 6.குரு 7.சிகிண்டிசன் 8.சீவன் 9.சுரகுரு 10.தாராபதி 11.தெய்வமந்திரி
12.நற்கோள்  13.பிரகஸ்பதி 14.பீதகன் 15.பொன்னன் 16.மறையோன் 17.வேதன் 18. வேந்தன்

நவகிரஹ  குரு வின் சக்தி- தாரா , நிறம்-பொன்னிறம், வாகனம்-யானை(அன்னமும்,குதிரையும் கூட வாகனமா கிறது).
நான்கு கரங்களில் ஜபமாலை ,யோக தண்டம்,கமண்டலம்,வரதம் கொண்டவர்.
குருவின்  ஸ்தலம் ஆலங்குடி. சென்னையில்  போரூர் சிவன் கோவில்.

எங்கள் தெருவில் செய்தித் தாள் போடும் காந்தி என்பவர் பேர் மட்டும் ஒன்றாக இருப்பதால் எப்போதும் பட்டினிகிடந்து, சிறை சென்று, சட்டை போட்டுக்கொள்ளாமல் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர  இந்த பேப்பர் காரர் இல்லை. அவரை யாரும் சுடவும் இல்லை. அவர் தான் வீட்டில் அப்பளம் சுடுவார்.



BAGEERATHA

 ஒரு  அதிசய ராஜா.   -  நங்கநல்லூர்  J K  SIVAN 


மகரிஷி ரமணருக்கு ரொம்ப பிடித்த ஒரு நூல்   யோக வாசிஷ்டம். அதில்  பகீரதனைப் பற்றி ஒரு சமாசாரம். 

ராஜ்ய பாரம் வேண்டாம் என்று துறவியாகி பகீரதன் ஆத்ம விசாரம் செய்ய காட்டுக்குப் போகும்போது  தனது 

 சொத்துநகை, உடைமைகள் சகலத்தையும்  தானமளித்து  எனக்கு ராஜ்யமும்  வேண்டாம்   ஒரு மண்ணும் வேண்டாம் என்கிறான்.   வேண்டும் என்பவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம்.''   என்றான்.  ஆனால்  எவருமே அவன் ராஜ்யத்தை  ஏற்றுக் கொள்ள  முன் வரவில்லை. அவனை மாதிரி நேர்மையாக யார்  ஆள முடியும் ? பகீரதன் என்ன செய்வது என்று யோசித்து  ஒரு   எதிரி நாட்டரசனை  அழைக்கிறான்.  

'அப்பனேநீ   பல முறை விரும்பிய எனது ராஜ்யத்தை சண்டை போடாமலேயே  எடுத்துக் கொள், நானே  உனக்கு  மனமுவந்து தருகிறேன்'' என்கிறான்.   தானாக வரும் ராஜ்ய லக்ஷ்மியை அந்த ராஜா  வேண்டாம் என்பானா?  அவன் ராஜாவாகி விட  அவனிடம்  பகீரதன்  பிக்ஷை வாங்கிக்கொண்டு காட்டுக்குச்  செல்கிறான்.

 பகீரதன்  அன்றாடம் உஞ்சவிருத்தி எடுத்து அதில் கிடைப்பதை உண்டு காட்டில் ஆத்ம விசாரத்தில்  (ஆத்ம  ஜிஞ்ஞாஸம் )  முழுகினான்.  ஊர் ஊராக  சென்று பிக்ஷையில் வாழ்ந்தான்


ஒருநாள் எங்கோ ஒரு தேசத்தில்  அந்த ஊர்க்காரர்கள்  பகீரதனை  ராஜாவாக்கு கிறார்கள்.  வேறுவழியின்றி அந்த நாட்டுக்கு ராஜாவாகிறான்.  நாடு நாடாக  சென்றான். ஒரு நாள்  தனது நாட்டுக்கே  திரும்பி  வருகிறான்


அவனது அரண்மனையின்  பழைய விசுவாசமான ஒரு  சேவகன் பகீரதனை  அடையாளம் கண்டு கொண்டு ஓடிப்போய் மந்திரிகளிடம் சொல்கிறான்.   அப்போது பகீரதன் நாட்டை  ஆண்டு கொண்டு  வந்த  அரசன் இறந்து போய் வேறு ஒரு புது  ராஜாவை  நியமிக்க  யோசித்துக் கொண்டிருந்த மந்திரிகளுக்கு சேவகன் சொன்ன சேதி தேனாக  காதில் இனிக்க அவர்கள் ஓடி  வந்து பகீரதனையே  திரும்ப  ராஜாவாக்கி விடுகிறார்கள். நாட்டு மக்களும்     ''ஆஹா  பகீரதன் ஒருவனே  சரியான நல்ல ராஜா.  நமது  பழைய நல்ல ராஜாவே  கிடைத்துவிட்டார்''  என்று   வரவேற்கிறார்கள்.   வேறுவழியின்றி பகீரதன் ராஜ்யபாரம் திரும்ப ஏற்றுக்கொள்கிறான்.    


தாமரை இலைத்  தண்ணீராக  சுயநலம் இன்றி பொதுநலம் கருதிய ராஜாவாக  ஞானி பகீரதன்  ஆட்சியில் எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கிறார்கள்''.


இப்படி  ஒரு ராஜா நம்மை ஆள  நமக்கு கிடைத்தால்  எப்படி இருக்கும்? 


 


KRISHNA'S PLAN

 


கண்ணனின் திட்டம்.....-  நங்கநல்லூர்  J K  SIVAN 

கதை எந்த மொழியில் இருந்தால் என்ன?  கதை என்பது  ஒரு உணர்வு. யாரோ ஒருவர்   அனுபவம், அப்படியேயோ அல்லது கொஞ்சம்  திரித்தோ உருவம் பெறுகிறது.  உண்மை கற்பனையோடு சேர்ந்து புது உருவம் பெறும்போது  ஒரே கடலை மாவில் செய்த பஜ்ஜியோ பக்கோடாவோ தான் கவனத்துக்கு வரும்.  ஒரு வெள்ளைக்காரனை  கபாலியாக்கி இதை அளிக்கிறேன்.

டாக்டர் கபாலி ஒரு சிறந்த புற்று நோய்  நிபுணர். அர்ஜண்டாக ஒருநாள்   ஒரு பெரிய மருத்துவ மாநாடு செல்வதற்கு புறப்பட்டார்.  கபாலியின்  புதிய ஆராய்ச்சி மருத்துவ உலகில் பல உயிர்களை காப்பாற்றப்  போகிறது.  உலகமே வியக்கப்  போகிறது.  ஒரு பெரிய உலக அளவு மருத்துவர்கள்  கலந்து கொள்ளும் மாநாட்டில் அழைத்து  கபாலிக்கு  சிறந்த  மரு த்துவ  மேதாவி  பட்டம் கொடுக்கப்  போகிறார்கள். இன்னும்  27 மணி நேரத்தில்  உலகம் அதை அறிந்து  வியக்கப்போகிறது.. சீக்கிரம் போகவேண்டும்.  ''நான் எவ்வளவு உழைத்து பெறுகிறேன் இந்த பட்டம்!.கிருஷ்ணா  எல்லாம் உன் அருளால்...'' மனமார  வணங்கி  புறப்பட்டு  விமானநிலையத்தில் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறதே.

துரதிர்ஷ்டம் யாரை விட்டது.  விமானம்  பறந்த  ரெண்டு மணி நேரத்திலே  அதில் கோளாறு.

''விமானத்தில் சிறு கோளாறு.  சற்று நிமிஷத்தில் ஓரிடத்தில்  தரை இறங்கப்போகிறது. பயப்படவேண்டாம்.  ஜாக்கிரதை யாக இறங்குவீர்கள்'.  ஒலிபெருக்கி  அலறியது.

கையில் பெட்டியோடு முகத்தில் கவலையோடு  எங்கோ வட  இந்தியாவில்  ஒரு சிறிய   தற்காலிக விமான அதிகாரியை போய் பார்த்தார்  கபாலி.

''ஒரு மாநாடு போகவேண்டுமே . இப்படி நடுவில் இறங்க  வேண்டியதாகி விட்டதே. எப்படி குறித்த நேரத்தில் இன்னும் பத்து மணி நேரத்துக்குள் அங்கே போய் சேர்வது. வேறு ஏதாவது இங்கிருந்து விமானம் செல்ல வழி உண்டா?

''அப்படி எதுவும் இல்லையே டாக்டர். ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள். இங்கே ஒரு வாடகை கார்  கிடைக்கும். அதில் ஒரு மூன்று நாலு மணி நேரம் பிரயாணம் செயது அடுத்து ஒரு பட்டணம் போனால் அங்கிருந்து சில ஹெலிகாப்டர்கள் குறித்த இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.''

கபாலி அந்த ஊரிலிருந்து  காரில் பறந்தார். அடாடா   ஒரு பெரும் புயல் எங்கிருந்தோ வந்து குறுக்கிட்டது.

இரவு நேரம்.  போகும் பாதையிலிருந்து வேறு பாதையில் தவறாக கார் பறந்தது.  அடாடா இன்னும் ரெண்டு மணி நேரம்  ஓடி விட்டதே. சரி அவ்வளவு தான் என் அதிர்ஷ்டம்.  எனக்காவது எல்லோர் எதிரிலும் மரியாதை பட்டமாவது ?  எனக்கு அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லையே. என்ன கிருஷ்ணா இது?  இப்படி ஒரு துரதிர்ஷ்டம் எனக்கு?

புயலைத்  தொடர்ந்து விடாத மழை. வானம் பொத்துக் கொண்டது. முன் பின் அறியாத ஏதோ ஒரு தெருவில் கார் மெதுவாக நுழைந்தது. தெருவெல்லாம் தொப்பம்.  பசி எங்கும் ஒரு வீடு கூட காணோம். கபாலிக்கு களைப்பு. மயக்கம் வரும்போல் இருந்தது. காரை ஓட்டிக்கொண்டே சென்றார்.

ஐயா  எங்கும் இருட்டாக இருக்கிறது. பள்ளம் எது தெரு எது என்று தெரியவில்லை. கொஞ்சம்  மின்சாரம் வரும் வரை எங்காவது சற்று நேரம்  வண்டியை நிறுத்தி  தங்குவோம். வேறே வழியில்லை.உயிரைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம்''  -  வண்டியோட்டி இந்தியில் சொன்னது புரிந்தது.

''அப்பாடா  ஒரு  தொத்தல் பழைய வீடு தெரிகிறது. அதி நோக்கிப்  போ'' உள்ளே விளக்கு ஒளி தெரிந்ததும் மூச்சு வந்தது. கொஞ்சம் தண்ணீராவது கேட்கலாம்.

காரை நிறுத்தி கதவைத் தட்ட ஒரு கிழவி கதவைத்  திறந்தாள்.

''உங்கள் வீட்டில் போன்  இருக்கிறதா  அர்ஜண்டாக போன் பேசவேண்டும்.''

''எங்கிட்ட அந்த வசதி எல்லாம் இல்லையே. உள்ளே வாருங்கள். கொஞ்சம் சூடாக ஆகாரம் இருக்கிறது தருகிறேன். இளைப்பாருங்கள்.'' 

''மிதுனபூர்  எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம்?

போக  வேண்டிய  இடத்துக்கு கிழவி  வழி சொன்னாள். நீங்கள் சாப்பிடுங்கள். நான் கொஞ்சம் பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றாள்  கிழவி.

சூடாக அவள் கொடுத்த ஆகாரத்தை விழுங்கி கொண்டே  டாக்டர் கபாலி அவளைப்  பார்த்தார்  . தரையில் விழுந்து வணங்கிய கிழவியின் எதிரே ஒரு தொட்டில். அசையாமல் அதில் ஒரு குழந்தை. முகத்தில் கவலையோடுஅந்த கிழவி தொடர்ந்து ப்ரார்த்தித்துக்கொண்டு இருந்தாள் .

'என்னம்மா  கவலை உங்களுக்கு?''
''என் பிரார்த்தனையை கிருஷ்ணன் நிறைவேற்றுவான் என்று நம்புகிறேன்''
'என்ன துன்பம் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்தால் உதவுகிறேன்'' டாக்டர் கபாலி  மனம் திறந்து நன்றியில்  சொன்னார்.
''கிருஷ்ணன் என் பிரார்த்தனை எல்லாம் நிறைவேற்றிவிட்டான். இன்னும் ஒன்று தான் பாக்கி. ஏன் அதை மட்டும் இன்னும்  நிறைவேற்றவில்லை என்று ஆச்சர்யப்படுகிறேன்''  என்றாள்  கிழவி.

''அது என்ன என்று என்னிடம் சொல்லலாமா'  என்று கெஞ்சினார் கபாலி
''இந்த தொட்டிலில் அசையாமல் இருப்பவன் என் பேர  குழந்தை கோபாலன். அவன் தாய் தந்தை இருவருமே ஒரு  கார் விபத்தில் நிமிஷத்தில் மறைந்து விட்டார்கள். ஏதோ ஒரு புற்றுநோய் இந்த குழந்தைக்கு. எல்லா டாக்டர்களும் கைவிட்டு விட்டார்கள்.  யாரோ ஒரு  டாக்டர் எங்கோ இருக்கிறாராம். அவர் தான் கடைசி நம்பிக்கை. அவர் தான் இந்த நோயை குணப்படுத்துவதில் நிபுணராம் . அவரை என்னைப்   போன்ற ஏழை எப்படி எங்கே போய் பார்த்து என் ஒரே வாரிசு இந்த உயிரை காப்பாற்றுவது?  கிருஷ்ணன் வழி காட்டுவான் என்ற நம்பிக்கை இன்னும் போகவில்லை.  விடாமல் அவனை தொழுது வேண்டிக்கொண்டு இந்த பேரக்குழந்தையை காப்பாற்ற சரணடைந்து கொண்டே இருக்கிறேன்.'' அழுது கொண்டே  கிழவி சொன்னாள் .
கபாலி சிலையாக நின்றார். கண்ணில் மழை.
''ஆஹா, நான்  புற்றுநோய் நிபுணன்.  எனக்கு மேதாவி பட்டம். கிளம்பினேன். விமானம் கோளாறு. போக முடியவில்லை. அப்படியும் தொடர்ந்து முயன்றேன். புயல், மழை, இரவில் பாதை மாறியது தெரியாது. வெகு தூரம் இங்கே வந்துவிட்டேன்.''
காரணம் ?
கிழவியின் பிரார்த்தனை.
''அம்மா கவலை படாதீர்கள்.  உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் முயல்வேன் . நான் தான் நீங்கள் தேடிய அந்த டாக்டர் 'கபாலி '
கிழவியின் இரு கரங்கள் சிரத்துக்கு சென்றன. '' கிருஷ்ணா. உன்னை  இந்த  முட்டாள் புரிந்து கொள்ளாமல் போய்விட்டேன். நீ  என் பாக்கி ஒரு பிரார்த்தனையையா  நிறைவேற்றிக்  கொண்டிருந்தாய்.   எந்த  சிறந்த  புற்று நோய் டாக்டர் என்  குழந்தையை காப்பாற்ற முடியுமோ அவரைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருக்கிறாய்......நான் புரிந்து கொள்ளவே இல்லையே''
டாக்டர்  அந்த குழந்தையை மறுநாள் காலை அடுத்த பெரிய பட்டணத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து தானே  அதற்கு வைத்தியம் செயது சிலநாட்களில் அது குணமடைந்து என்பது எல்லா சினிமாக்களிலும் வரும் கடைசி சுபம் சுபம் சுபம் காட்சி. அதற்குள்  டாக்டர்  தான் புதிதாக  கண்டுபிடித்த வைத்திய முறையில்  ஒரு சிறு குழந்தையின் புற்று நோய் குணமாகியது என்று உலகமுழுதும்  பத்ரிகைகள் கபாலியின் போட்டோவை பிரசுரித்தது.


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...