Friday, November 11, 2022

HINDU TEMPLE MYSTERIES



 நம்முடைய பொக்கிஷம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


உலகத்திலேயே தம்முடைய அருமை பெரியாத இனம் ஒன்று உண்டென்றால் அது நாம் தான். ஹிந்துக்கள் தான். அப்படி தெரிந்து கொண்டாலும் அது ரொம்ப லேட்டாகவே தான். அதிலும் நமக்கு ஈடு இணை எவரும் கிடையாது. நமது முன்னோர்கள், சித்தர்கள் ஞானிகள், ரிஷிகள் அறியாத விஷயம் எதுவும் கிடையாது. அதை வெள்ளைக்காரர்கள் மற்றவர்கள் எல்லாம் அறிந்து எப்படியோ சிலவற்றை தெரிந்து கொண்டு தம்முடைய நாட்டுக்குப் போய் தாம் கண்டுபிடித்ததாக நமக்கே சொல்லி நாம் கைதட்டுபவர்கள்.

பல கோடி டாலர்கள் (சமீபத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நமது ரூபாய் 75 வரை எகிறியது) தண்ணீராக கரைத்து எட்டு வருஷத்துக்கு மேல் ஆராய்ச்சி.... கண்டுபிடித்து அறிவித்த விஷயம் என்ன தெரியுமா?

'' சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி centre Point of World’s Magnetic Equator இருக்கிறது''

நமது சித்தர்கள், யோகிகள், ஞானிகள், ரிஷிகள் பலர், பைசா என்றால் எப்படி இருக்கும் என்று கூட பார்க்காமல் எந்த விதமான டெலஸ்கோப்பும் இல்லாமலேயே இதை அறிந்து சொல்லி இருக்கி றார்களே, இப்போது அல்ல, 5000 வருஷம் முன்னா லேயே. அதை அப்படி சிலையாக வடித்து சரியான இடத்தில் பிரதிஷ்டை வேறு பண்ணி இருக்கிறார்கள்.
திருமூலர் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பது இன்னும் பல வருஷங்களுக்கு பிறகு எவனோ ஒரு வெள்ளைக்காரன் சொல்லி நாம் கை தட்ட தயாராக இருப்போம்.

நமது முன்னோர்கள் இங்கிலிஷ் பேசவில்லை, தெரியாது. அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு சீரிய அறிவு பூர்வமான சிந்தனையின் அடிப்ப டையில் உருவானது. நமது புராதன கோயில்கள் கலைப் பொக்கிஷங்கள், ரகசிய சுரங்கங்கள். நமக்கு அவற்றின் மதிப்பு தெரியவில்லை என்பது நாம் அவமானப்பட்டு வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். இடித்து விட்டு சென்றவனைப் பற்றி பேசவேண்டாம். அவன் கணக்கிலே சேராதவன். தப்பி விபத்தாகமனிதனாய் தோன்றிய மிருக வகை.

எத்தனையோ வெளி நாட்டவர்கள் மாதக்கணக்காக வருஷக்கணக்காக தஞ்சாவூர் சிதம்பரம் கோவில் சிற்பங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து படம் பிடித்து என்றோ ஒருநாள் புத்தகம் எழுதி கோடானு கோடி சம்பாதிக்கப் போகிறார்கள், நாம் அதைப் படித்துவிட்டு அவர்களை புகழப்போகிறோம்.
சிதம்பரம் சிவாலயம் உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையபகுதி. ( Center Point of World's Magnetic Equator ).

ஆகாசம் ether, space, எனும் பஞ்ச பூத ஸ்தலம். , காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப் பதை போன்று பார்த்தால் மட்டுமே துல்லியமாக விளங்கும். அன்றைக்கே இது கணிக்கப்பட்டது ஒரு உயர்ந்த ஞானம்.

சிதம்பரம் ஆலய 9 நுழைவு வாயில்களும், நமது தேகத்தின் 9 நவத்துவாரங்கள் ''ஒன்பது வாசல்''.((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரையில் 21,600 தங்கத்தகடுகள் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் நாம் சுவாசிப்பதை காட்டுகிறது (15x 60x 24 = 21,600).

21,600 தகடுகளை பாதிக்க 72,000 தங்க ஆணிகள் ஏன் 72,000? நமது உடலில் இருக்கும் ஒட்டு மொத்த நாடிகள் 72000. இதில் சிலது கண்ணுக்கே தெரியாத நுண்ணியவை . எப்படி சித்தர் இதை அறிந்தார்? ல் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே ''


, அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம்,அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப் பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்ப தாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாக்ஷர படி" என்பார்கள். "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன, நாலு தூண்கள் 4 வேதங்களை குறிக்கின்றது, பொன்னம் பல
த்தில் 28 தூண்கள் ஏன்? இவை ஆகமங்களையும், சிவனை வழிபடும் வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண் டுள்ளது (BEAM ),இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், நவ சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance"என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப் படுகின்றது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...