Tuesday, November 8, 2022

GURU STHOTHRAM

 


குரு ஸ்தோத்ரம் -  நங்கநல்லூர்  J K   சிவன்

தெளிவான  ஆங்கிலத்தில் மிருதுவாக  உபன்யாசம் செய்து எண்ணற்ற அன்பர்களுக்கு  ஞானம் வழங்கிய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளை நினைவிருக்கிறதா. அவரது பல உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்.  அவரால் பிரபலமானது  குரு ஸ்தோத்ரம்.  இது  ஸ்காந்த புராணத்திலிருந்து நமக்கு  கிடைத்த  பரிசு.   பாண்டவ கீதா   குருகீதா  என்ற பிரிவுகளில்  இருந்தும்  அறியப்படும் அற்புத ஸ்லோகங்கள். குருவின் மஹிமையை  அறிவிப்பது.   குரு எப்படி  நம்மை  உயர்விப்பார் என்று கூறும், அவரை நன்றியோடு வணங்கி  சரணடைய வேண்டும் என்று புரியவைக்கும்  ஸ்லோகங்கள்.

குருவில்லாமல்  ஞானம் பெறுவது எளிதல்ல  முறையல்ல.   ப்ரம்ம ஞானிகள் மனிதராக பிறந்தால் மட்டுமே அது சாத்தியம்.  சேஷாத்ரி ஸ்வாமிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர்,  ரமணர்  போன்றவர்கள் அப்படி தோன்றியவர்கள்.  நம்மைப் போன்றோர்  கடைத்தேற  நமக்கு ஒரு வழிகாட்டியாக  அநேக  ஆசார்யர்கள் வாழ்வில் தேவை.

யார்  அந்த குரு?  அவர்  எப்படிப்பட்டவர்?  ஞானிகளுக்கு யார்  குரு ? என்றெல்லாம் கேள்விகள் எழும்.  ஒரு குட்டி ஸ்லோகம் அதற்கு பதிலளிக்கிறது.  அது    ஆதி சங்கரரின்  குரு ஸ்தோத்ரம் என்ற பதிவில் வருகிறது.

1.  गुरुर्ब्रह्मा ग्रुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॥
1. Guru Brahma Gurur Vishnu  Guru Devo Maheshwara  Guru Saakshat Para Brahma  Tasmai Sree Gurave Namaha
1. குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:  குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரு  மாயா ஜாலங்களைசெப்பிடு கண்கட்டு  வித்தைகள்  செய்யாதவர்.  ப்ரம்மா விஷ்ணு  சிவன் எனும் த்ரிமூர்த்திகளின் அம்சமாக  நமக்கு வழிகாட்டுபவர். அரும்பாடு  பட்டு  தவம் புரிந்து, த்யானம்  செய்து ஞானம் பெற்று  அறியாமையை அழித்து,  அருள்மொழிகளால் நம்மை வழி நடத்துபவர்.  அவர் தான் குரு.

2. अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥२॥
2. akhanda-mandalakaram vyaptam yena cara’caram ।tatpadam darsitam yena tasmai srīgurave namah ॥ 3॥
2. அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ:

முழுமையான, பிரிவோ,  துண்டோ இல்லாத,  எங்கும் நிறைந்த, அசைவும், அசைவில்லாததுமான  ஆத்மா ஒன்று தான் குரு.   இப்படி  தக்ஷிணாமூர்த்தியைப் போன்ற  தெய்வத்தை பிரம்மத்தை அறிந்தவர் தான் குரு. அவரையே சரணடைந்து வணங்கி  ஞானம் பெறுவோம். .

3 अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशालाकया ।चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥३॥.
3. Agnyaana TimiraandhasyaGnyaana Anjana Shalaakayaa Chakshuhu Unmeelitam Yenam Tasmai Sree Gurave Namaha
3 அஜ்ஞானதிமிரான்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஶலாகயா  சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  

அஞ்ஞான இருளிலிருந்து விலக்கி , ஞானமாகிய ஒளியை அளிப்பவர்  தான் குரு.  ஆத்மஞானம் எனும் பிரம்மத்தை நமக்கு அடைய உதவுபவர்  குரு. அவரை வணங்குகிறேன்.

4. स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरम् ।  तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥४॥
4. Sthaavaram Jangamam Vyaaptam Yatkinchit Sacharaa Charam Tatpadam Darshitam Yena Tasmai Sree Gurave Namaha
4. ஸ்தாவரம் ஜம்கமம் வ்யாப்தம் யத்கிம்சித்ஸசராசரம்  தத்பதம் தர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  4

நாம்   எதை தெரிந்து கொள்ளவேண்டும், எது தேவையல்ல என்பதே தெரியாத நிலையில்  வாழ்பவர்கள்.  அதை உணர்வித்து அறிவு புகட்டும், சர்வ வியாபியான, அசையும் அசையா ஜீவன்கள், பொருள்கள் யாவிலும்  உள்ளுறையும்பிரம்மமே,  குருவே, உங்களுக்கு  நமஸ்காரம்.    விழிப்பு, ஆழ்ந்த உறக்கம்,  கனவு எந்த நிலையிலும் எனக்கு ஞானம் அளிக்கும் தெய்வமே,  நமஸ்காரம்.

5. चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरम् । तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥५॥
Cid[t]-Rupenna Pari-Vyaaptam Trai-Lokyam Sa-Cara-Acaram |Tatpadam Darshitam Yena Tasmai Sree Gurave Namaha
சிதரூபேண பரி வ்யாப் தம்  த்ரைலோக்யம் ஸசராசரம் |தத்பத³ம் த³ர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 5 ||

இந்த மூவுலகிலும்  ஜீவிக்கும்  ஸ்தாவர  ஜங்கம , அசையும்  அசையா சர்வ, சகல,  ஜீவன்களுக்குள்ளும்  உறைந்து உணர்விக்கும் பராபரமே,  தங்கள் திருவடிகளை  சரணடைந்த என்னை ஆட்டுவித்து,  ஆத்ம ஒளி பெற  உதவும்   குருநாதா, உங்களுக்கு நமஸ்காரம்.

6. सर्वश्रुतिशिरोरत्नसमुद्भासितमूर्तये । वेदान्ताम्बूजसूर्याय तस्मै श्रीगुरवे नमः ॥६॥
Sarva-Shruti-Shiro-Ratna-Sam-Udbhaasita-Muurtaye | Vedaanta-Ambuuja-Suuryaaya Tasmai Shrii-Gurave Namah |
ஸர்வஶ்ருதிஶிரோரத்ன சமுத் பாசிதம்ம் மூர்த்தியே, வேதாந்தாம்புஜஸூர்யோயஃ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  6

நாதம்  சப்த ஸ்வரங்களிலும் ஸ்ருதிகளிலும்  அடங்கியது.  நாதோபாஸனையாக  என் குருவே  உங்களை  நமஸ்கரிக் கிறேன்.  நாத ஸ்வரூபனே ,சகல  வேதாந்த சாரமே,   ஞானம் நிறைந்த சிரத்தின் மேலிருந்து  ஒளிவீசும் ரத்னமாக  திகழும்  குருவே  உங்களை நமஸ்கரிக்கிறேன்,

7,  चैतन्यः शाश्वतः शान्तो व्योमातीतोनिरञ्जनः ।बिन्दूनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः ॥७॥
Caitanyah Shaashvatah Shaanto Vyoma-Atiito-Niran.janah | Binduu-Naada-Kala-[A]atiitas-Tasmai Shrii-Gurave Namah ||7||
சைதன்யஃ ஶாஶ்வதஃஶான்தோ வ்யோமாதீதோ னிரம்ஜனஃ பின்துனாத கலாதீதஃ தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  7

பரமேஸ்வர ஸ்வரூபமான  குருவே,  நீங்கள் தான்  ஞான சிகரம், அமைதியின் சின்னம், பரிசுத்தமாந ஸ்படிகம் போன்ற  சைதன்ய ஸ்வரூபம். பிந்து நாத கலா நிலைகளைக்  கடநத  ஆத்மன்.நமஸ்கரிக்கிறேன்.

8. ज्ञानशक्तिसमारूढस्तत्त्वमालाविभूषितः । भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः ॥८॥
Jnyaana-Shakti-Sama-Aruuddhas-Tattva-Maalaa-Vibhuussitah |Bhukti-Mukti-Pradaataa Ca Tasmai Shrii-Gurave Namah ||8||
ஜ்ஞானஶக்திஸமாரூடஃ தத்த்வமாலாவிபூஷிதஃ  புக்திமுக்திப்ரதாதா ச தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  8

ஞான மேருவான குருவே, சக்தி வடிவமே, தத்வ மாலதாரி, சத்ய ஸ்வரூபமே, உலக சுகானுபவம் தவிர மோக்ஷ லாபமும் தரும்  வள்ளலே, ஸாஷ்டாங்க நமஸ்கரங்களை அர்ப்பணிக்கிறேன்.

9. अनेकजन्मसम्प्राप्तकर्मेन्धनविदाहिने ।आत्मञ्जानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः ॥९॥
Aneka-Janma-Sampraapta-Karme[a-I]ndhana-Vidaahine |Aatma-N.jaana-Agni-Daanena Tasmai Shrii-Gurave Namah ||9||
அனேகஜன்மஸம்ப்ராப்த கர்மபன்தவிதாஹினே ஆத்மஜ்ஞானப்ரதானேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  9

எனக்கு தெரியும், என்    எததனையோ ஜென்ம  கர்ம பந்தங்களை எரித்து சாம்பலாக்குபவர்  என் குருவாகிய   நீங்களே.  ஆத்ம ஞானத்தை எனக்களித்து  என்னை சத்யம் சாஸ்வதமான  ஞானச் சுடர் ஒளியை அனுபவிக்க உணர்த்திய ணரவைத்த தெய்வமே குருவே,  ஸாஷ்டாங்க  நமஸ்காரங்கள்.

10. शोषणं भवसिन्धोश्च प्रापणं सारसम्पदः ।यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः ॥१०॥
Shossannam Bhava-Sindhoshca Praapannam Saara-Sampadah | Yasya Paado[a-U]dakam Samyak Tasmai Shrii-Gurave Namah ||10||
ஶோஷணம் பவஸின்தோஶ்ச ஜ்ஞாபணம் ஸாரஸம்பதஃகுரோஃ பாதோதகம் ஸம்யக் தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  10

பொங்கி எழும்பி அல்லல் தரும் ஸம்ஸார சாகரத்தை அடக்கி, வற்றச்செய்பவரே , ஆத்மானந்த செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலே, குருவே  உங்கள பாத கமலத்தை ஸ்னானம் செய்வித்து  அந்த  அபிஷேக ஜலத்தை  பருகி ப்ரோக்ஷணம்  செய்து கொண்டு  ஸம்ஸார  பந்தங்களில் இருந்து விடுபட்டு என்  மனம்  ஆனந்தமயமாகி விட்டது. ஆன்ம செல்வத்தை அருளிய  குருவே  ஸாஷ்டாங்க  நமஸ்காரங்கள்.

11.न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः ।तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥११॥
Na Guror-Adhikam Tattvam Na Guror-Adhikam Tapah |Tattva-Jnyaanaat Param Naasti Tasmai Shrii-Gurave Namah ||11||
ந  குரோரதிகம் தத்த்வம் ந குரோரதிகம் தபஃதத்த்வஜ்ஞானாத்பரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  11

குருவை விட  சத்ய பிரமாணம் வேறு என்ன இருக்கிறது? குறிவைத்த தவிர  எளிமை  சாத்வீகம் வேறே எது? குரு உபதேசங்களைத் தவிர  சத்யா வாக்கு வேறே எது?ஸாஷ்டாங்க  நமஸ்காரங்கள்  குருவே.

12. मन्नाथः श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः ।मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ॥१२॥
Man[d]-Naathah Shrii-Jagannaatho Mad-Guruh Shrii-Jagad[t]-Guruh |Mad-Aatmaa Sarva-Bhuuta-[A]atmaa Tasmai Shrii-Gurave Namah ||12|
மன்னாதஃ ஶ்ரீஜகன்னாதஃ மத்குருஃ ஶ்ரீஜகத்குருஃமதாத்மா ஸர்வபூதாத்மா தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  12

என் குரு,  என் குரு தான்  சர்வ புவன குரு, பிரபஞ்ச நாதன்  என் ஆத்மாவே  சர்வாத்மா,  என் தெய்வமே குருவே,  ஸாஷ்டாங்க  நமஸ்காரங்கள்.

13. गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् ।गुरोः परतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥१३॥

Gurur-Aadira-Na-Adish-Ca Guruh Parama-Daivatam |Guroh Parataram Naasti Tasmai Shrii-Gurave Namah ||13||

குருராதிரனாதிஶ்ச குருஃ பரமதைவதம் குரோஃ பரதரம் னாஸ்தி தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ  13

குருவுக்கு முன்பு  சத்யம் இருந்ததா என்றால்  குரு என்றும் இல்லாமல் இல்லையே!  குரு தக்ஷிணாமூர்த்தி காலம் கடந்தவராயிற்றே, ஆதி அந்தமில்லா  அநாதி ஸ்வரூபமல்லவா. குருவே  ப்ரத்யக்ஷ  ஆத்மன், தெய்வம். ஸாஷ்டாங்க  நமஸ்காரங்கள்.

14/ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्  न्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।  एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षीभूतम्  भावातीतं त्रिगुणरहितं सद्गुरुंतं नमामि ॥१४॥

Brahma-[A]anandam Parama-Sukhadam Kevalam Jnyaana-Muurtim  Dvandva-Atiitam Gagana-Sadrsham Tat-Tvam-Asy[i]-Aadi-Lakssyam |
Ekam Nityam Vimalam-Acalam Sarva-Dhii-Saakssii-Bhuutam Bhaava-Atiitam Tri-Gunna-Rahitam Sad-Gurum-Tam Namaami ||14||

பிரம்மானந்தம்  பரம சுகதம்  கேவலம்  ஞான மூர்த்திம்   த்வந்ததிதம் ககன ஸத்ருசம்  தத்வமஸ்யாதி லக்ஷ்யம் . ஏக்கம் நித்யம்  விமலம் அசலம் சர்வ திஸாக்ஷி  பூதம்  பவஅதிதம்  த்ரி குண ரஹிதம் சத் குறும்  தம் நமாமி. 14

குருவே  ப்ரம்மம்.  பிரம்மானந்தம் அளிப்பவர். முழுமுதலானவர். ஞான வடிவம். சர்வமும் ஒன்றேயானவர்.  எல்லையற்ற ஆகாசம் போன்றவர். எல்லாம் தானாகவே  ஆனவர்.  தத்  த்வம்  அஸி  எனும்  உபநிஷத மஹா வாக்யத்தின் உருவம். ஸர்வ  சாக்ஷி யானவர். அன்பின் எல்லை.  ஸாஷ்டாங்க  நமஸ்காரம் குருவே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...