Wednesday, November 9, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
மஹா பெரியவாளிடம் 100 கேள்விகள்.

18, '' மஹா பெரியவா  ரெண்டு நிமிஷம்  ஏதாவது எனக்கு சொல்லுங்கோ பெரியவா''

'' எதைடா  சொல்லணும்?''

''மனுஷ  ஸ்வபாவம் பத்தியே  சொல்லுங்களேன்''

''நான் கவனிச்ச வரைக்கும்  எல்லாருக்கும் பண ஆசை இருக்கு.  நிறைய வேணும்னு  தோணினா பரவாயில்லை. மத்த வனை விட அதிகம் வேண்டும் என்கிற  ஆசை  இருக்கு. அதனால் தான்   போட்டியும், சச்சரவு  சகலமும் வருது.  நமக்கு தேவையான  சௌகரியம் இருந்தால் மட்டும் போதாது; இன்னொருத்தனைவிட அதிகமாக இருக்கணும் என்கிற போட்டி மனப்பான்மையே மனித சுபாவம். எல்லோருக்கும் எல்லா சௌகரியங்களும் சமமாய்க்  கிடைக்கும் என்று  தெரிந்தால் கூட  அது தனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்கிற  போட்டி மனப்பான்மை இருக்கு. இங்கேயே  மடத்தில் பார்க்கி
றேனே .
 நான் அத்தனை பேருக்கும் தீர்த்தம் தந்து விட்டுத்தான் உள்ளே போவேன் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், அமைதியாக, வரிசையாக நமக்குக் கிடைக்கிற போது கிடைக்கட்டும் என்று  இருக்க முடிகிறாதா? கிடைத்தால் மட்டும் போதாது, முதலில் கிடைக்க வேண்டும் என்று ஒருவரையருவர் இடித்துக் கொண்டு, விழுந்து வாரி, சண்டை போட்டுக் கொண்டு தானே வருகிறீர்கள்?  ஒன்னு தெரிஞ்சுக்கோ,  போட்டி இருக்கும் வரையில் மனநிறைவு யாருக்கும் உண்டாகாது.

பொருளாதார 'வசதி' மட்டும் இருந்துவிட்டால்  இந்தப் போட்டி குறையாது. போட்டி போகணும்  என்றால்  போட்டி போட இன்னொரு வஸ்துவே இல்லை என்ற ஞானம் வரவேண்டும். அப்போதுதான் சாந்தியோடு நிறைந்து வாழலாம்.

ஞானமெல்லாம் எதற்கு?' என்று  கேட்காமல்  எப்போதும் ஸாஸ்வதமா  செய்யவேண்டிய காரியம் ஆத்ம விசாரம்தான். உலகத் துன்பங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும்  என்றால்  'இந்த உலகம் என்பது நாம் நினைக்கிறப்படி  யில்லை; இதுவே சிவ மயமானது; அது வேறு—இது வேறு அல்ல. மரமே யானை; பார் தான்  பரம் என்ற நினைப்பு  மனசுலே 
இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

இந்த ஞானம் இல்லாவிட்டால் எத்தனை பொருளாதார முன்னனேற்றம் வந்தாலும் லோகம் இருட்டில் அகப்பட்டுக் கொண்டிருப்ப தாகத் தான்  அர்த்தம். இருட்டை விரட்டும் ஞானப்பிரகாசத்தை அடைகிற பிரயாசையை நாம் ஒருபோதும் தளரவிடக்கூடாது.
சூரியன் போனால்கூடப் பாதகமில்லை. இந்த ஞான ஒளி நம்மை விட்டு ஒருபோதும் போகவிடக்கூடாது.''

போய்ட்டு வா  அப்புறம் மீதி  சொல்றேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...