Friday, November 11, 2022

SANEESWARA BAGAVAN

 சனீஸ்வர பகவான்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


இன்று  
சனிக்கிழமை  சனீஸ்வர பகவான்  நினைவு வருவது சகஜம்.  
ஆனால்  சனீஸ்வரனை நினைப்பதில் ஒரு  சங்கடம்.  பக்தியை விட பயம் அதிகம் பலர் முகத்தில் தெரிகிறது.   சனீஸ்வரன்  நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை.  சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் ஏன்?  சனிதோஷம் விலக  பரிஹாரம் தேடத்தானே . நமது தேசம் முழுதும்  சனி பகவான் கோவில்கள் சில முக்கியமானவை.  எனக்கு எல்லா சனி பகவான் கோவில்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள்  பெரியவன் யமன். சின்னவன்  சனீஸ்வரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக்  கொடுப்பவன்.  எல்லா கோவில்களிலும்  நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார்.

சனீஸ்வரன்  பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி  நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம்.  அம்மா சாயா  தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம்.  ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே  மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர்  என்ற இடத்தில் ரொம்ப பெரிய  கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா  எங்கிற கிராமத்தில்    5 1/2 அடி  உயர கருப்பு கல் ரூபத்தில்  அருள்  பாலிக்கிறார்.   மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த  சனி பகவான் கோவில்.

பம்பாயில்  தியோனார் அருகே  ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி  உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார்.  சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில்  தானே மாவட்டத்தில்  தித்வாலா எனும் ஊரிலும்  ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில்.

தெற்கே  தமிழ்நாட்டின்  அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம்  திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான  தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு  இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே  நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ   சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற  பிரச்னைகள் தீரும்.  திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில்  சனி தாம்  என்று  சந்தர்பூர்  சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும்  சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே  அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக  சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது.  உலகத்திலேயே  ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே  சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள்.  கடுகு எண்ணெய்  அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம். 

மத்திய பிரதேசத்தில் சனி சாரா  கோவில் ஒன்று  சனி பர்வதம் என்ற  பகுதியில்  இருக்கிறது.  குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான்  லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.

இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி  ராணி  ஹோல்கர் வம்சத்தவள்  அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலேயும் புராண காலத்து கோவில் தான்.  கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று  சொல்கிறார்கள்.  
''எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?''
"கண்ணை திறந்து பார் தெரியும்'' என்றான் சனீஸ்வரன்  திவாரிக்கு கண் திறந்து மலையை த் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது.

சனி பகவான்  ஒவ்வொரு  ராசியிலும் சௌகர்யமாக  ரெண்டரை வருஷம் இருந்துவிட்டு  மெதுவாக நகர்பவர்.  சனைச்சரன் என்றால் மெதுவாக நடப்பவன் என்று அர்த்தம். அதே சமயம் நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே  ஈஸ்வரன் பட்டம்.

ஆந்திர தேசத்தில்  தெலுங்கானாவில்  மேடக் மாவட்டத்தில்  எர்டானுர்  என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது.   சனிபகவான் 20 அடி  உயரம்.  அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.

ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில்  சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..

கர்நாடகாவில்  உடுப்பிக்கு பக்கத்திலேயே  பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது.  23 அடி  உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.

நம் தமிழகத்தில்  தேனீ பக்கத்தில்  குச்சனுரில் உள்ள  ஸ்வயம்பு  சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர்  கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம்.  அங்கே வெட்டவெளியில் 27 அடி  உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என    நீளமான பெயர்.  பஞ்சலோக விகரஹம். பீடத்தையும் சேர்த்தால்  33 அடி . ரொம்பபெரியவர்.  இங்கே  அவர் வாஹனம் காக்கை இல்லை  கழுகு.   ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம்.  நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத  ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...