Monday, November 28, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K   SIVAN 

    
''கணபதி சுப்ரமணியன் ''

''யார் சார்  இந்த  கணபதி சுப்பிரமணியன்''  உங்கள்   ஸ்ரீ  க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி நிகழ்ச்சியில் பேர் வருகிறதே.''அவர்  90  வயது துறு துறு  இளைஞர். ஒடிசலான இருப்பார். சிரித்த முகம். கையில் ஒரு மஞ்சள் பை  அவருடைய கவசம். திருச்சி நேஷனல் காலேஜ் பௌதிக  ப்ரொபஸர். சங்கீத சாஸ்திரம் தெரிந்தவர். நிறைய வினாடி வினாக்கள் நடத்தியவர். எங்களுக்கு ஒரு நல்ல நண்பர். பழகுவதற்கு   தேன் .போதுமா?.

''இல்லே  இந்த பேரை  எங்கோ  தெய்வத்தின் குரலிலேயே  வரகூரான் நாராயணன் என்கிறவர்  எப்போவோ எழுதின பெரியவா சமாச்சாரத்தில் படிச்சதும் உண்டு.    வரகூரான்  ஒரு தேனீ என்று சொல்லி இருக்கிறேன். மனிதர் எப்படித்தான்  தேடுவாரோ, எங்கு தேடுவாரோ, யாரைப் பிடிப்பாரோ, அடாடா , அற்புதமான  மஹா பெரியவா விஷயங்களை  அள்ளித்தருபவர்.  எண்ணெய் போன்றவர்கள்  மொத்த வியாபாரியிடமிருந்து  கடன் வாங்கி  தெருவில் கத்திக்கொண்டு விற்கும் சில்லறை  கூடைக்காரர்கள்.  ஆம்  இது வாஸ்தவம்.

நான் கூட  காஞ்சி மட வலை தளத்தில் இது பத்தி  ஒரு தரம் படித்தேன்.  அதைத் தான் இப்போ  சொல்றேன்.இந்த விஷய தானம் பண்ணினவர்  ஸ்ரீ  பி. ராமகிருஷ்ணன். எடுத்து சொன்னவர்  வரகூரான் நாராயணன். அவரை நான் இன்னும் பார்க்க பாக்யம் இல்லை.   டெலிபோனில்  பேசியது உண்டு.  தாம்பரம் சென்றபோது சந்திக்க முயன்று  தோல்வி அடைந்தேன்.  அவசியம் ஒருநாள்  வரகூரானை சந்திக்க விருப்பம்.
++
ஒரு சமயம் வழக்கமா மடத்துக்கு வந்து ஆசார்யாளை தரிசிக்கறவா கூட்டம் அதிகமாவே இருந்தது.
 
அந்த கூட்டத்துல சென்னைல அப்போ பிரபலமா இருந்த  ஒரு ஆடிட்டர் குடும்பமும் இருந்தது. பட்டம், பதவின்னு எத்தனை இருந்தாலும் பரமாசார்யா முன்னால எல்லாரும் சமம்தானே! அதனால, எல்லாரை யும்போல அவாளும் பெரிய வரிசையில தங்களோட முறைக்காக காத்துண்டு மெதுவா நகர்ந்து வந்துண்டு இருந்தா.

வரிசை நகர்ந்து ஆடிட்டர் குடும்பத்தோட முறை வந்தது. சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார். ஆடிட்டர். கூட  வந்திருந்த  ஒரு பெண்  கையில் இருந்த பச்சைக் குழந்தையை பெரியவா முன்னால ஒரு துண்டுல விட்டுட்டு, தான் நமஸ்காரம் பண்ணினா.
 
 ”பெரியவா இவன் என்னோட பேரன். குடும்பத்துக்கு மொத வாரிசு. பொறந்து மூணு மாசம் ஆறது. பெரியவா வந்து அனுகிரஹம் பண்ற பேரைத்தான் வைக்கணும்னு காத்துண்டிருந்தோம். யாத்திரை முடிச்சுட்டு நீங்க மடத்துக்கு வந்துட்டேள்னு தெரிஞ்சுது.இதோ உங்க  கடாட்சம் வேண்டி குழந்தையை எடுத்துண்டு வந்துட் டோம். நீங்கதான் குழந்தைக்கு நாமகரணம் செஞ்சுவைக்கணும்''   ஆடிட்டர்  உணர்ச்சி வசத்தில் பேச கஷ்டப்பட்டார்.
 
குழந்தையை கொஞ்ச நாழி உத்துப்பார்த்தார்,மகாபெரியவா. அன்னிக்கு சங்கடஹர சதுர்த்திங்கறதால மடத்துல ஒரு இடத்துல சில வேதவித்துக்கள் கூடி கணபதிக்கு உரிய மந்திரங்களைச் சொல்லிண்டு இருந்தா. அந்த கோஷம் எங்கேர்ந்து வருதுன்னு பார்க்கறாப்புல குழந்தை மெதுவா மெதுவா தலையைத் திருப்பித்து.
 
“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!” அப்படின்னார்,ஆசார்யா.
 
“ரொம்ப சந்தோஷம் பெரியவா.குழந்தைக்கு நீங்க நாமகரணம் பண்ணிவைச்ச இந்த நாள் சதுர்த்திங்கறது காலத்துக்கும் ஞாபகத்துல இருக்கறாப்ல கணபதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சிருக்கேள். அதோட சுப்ரமண்யன்கறது எங்க குல தெய்வமான பழனி ஆண்டவனோட பேராவும் அமைஞ்சுட்டதுல எங்களுக்குப் பரம சந்தோஷம்!” சொன்ன ஆடிட்டர்,குழந்தையைத் தூக்கிண்டார். பிரசாதம் வாங்கிண்டு புறப்படத் தயார் ஆனார்.
 
“ஒரு நிமிஷம் நில்லு. கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா.அண்ணா வந்தாச்சுன்னா, அடுத்து தம்பியும் வரணுமே! அதனாலதான் கணபதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சேன். என்ன புரியறதா?”  சொன்ன பெரியவா ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.
 
இது நடந்து ரெண்டு மாசம் ஆச்சு. அதே ஆடிட்டர் இப்போ தன்னோட ஆத்துக்காரி, மூணு புள்ளைகள், மூணு மாட்டுப் பொண்கள், குழந்தை கணபதி சுப்ரமண்யன்னு எல்லாரோடேயும் பெரியவாளைத் தரிசிக்க வந்தா.
 
ஆசார்யா முன்னால நின்னதும் ஆடிட்டரோட உடம்பு லேசா நடுங்கித்து. ரொம்பவே உணர்ச்சிவசப்படறார் அவர்ங்கறது பார்த்தாலே புரிஞ்சுது.
 
“பெரியவா..நீங்க நிஜமாவே தெய்வம்தான்.போன   தரம் நான் இங்கே வந்தப்போ,குழந்தைக்கு நாமகரணம் பண்ணணும்னு மட்டும்தான் உங்ககிட்டே கேட்டுண்டேன்.ஆனா,சொல்லாத பெரிய விஷயம் மனசுக்குள்ளே பாறாங்கல்லாட்டமா அழுத்திண்டு இருந்தது. எனக்கு மூணு புள்ளைகள்   மூத்தவனுக்கு கல்யாணமாகி ஆறேழு வருஷமா குழந்தையே இல்லை.ரெண்டாவது புள்ளைக்கு கல்யாணமாகி ஒரே வருஷத்துல
இவன் பொறந்துட்டான். மூத்தவனுக்கு இன்னும் குழந்தை பாக்யம் உண்டாகலையேன்னு மனசுக்குள்ளே மறுகிண்டு இருந்தேன்.
 
பெரியவா தெய்வ வாக்காட்டம் கணபதி வந்துட்டான்.அடுத்து சுப்ரமண்யன் வருவான்னு சொன்னேள்   இதோ  இப்போ என்னோட மூத்த நாட்டுப்பெண்ணும் உண்டாகி இருக்கா. டாக்டர்லாம் பரிசோதிச்சுட்டு, மூணுமாசம் ஆகறது.கரு நன்னா உருவாகி இருக்குன்னு சொல்றா.
 
இத்தனைகாலம் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம்இல்லை. அன்னிக்கு இங்கே வர்றச்சே  கூட உங்ககிட்டே விண்ணப்பிச்சுக்கணும்னு நினைச்சுண்டுதான் வந்தேன். ஆனா, ஒருத்தனோட குழந்தைக்கு நாமகரணம் செய்யறச்சே, இன்னொருத்தனோட குறையை பேசவேண்டாமேன்னு  தோணித்து .  ஆனா, நீங்க அதையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுண்டு, அப்படி ஒரு வாக்கைச் சொன்னேள்.
 
ஒரு பெண்ணுக்கு எப்ப சூல்  உண்டாகும்கறது பரமேஸ்வரனுக்கு மட்டுமே தெரியும்னு சொல்லுவா. அந்த வகையில நீங்களும் அந்த சாட்சாத் பரமேஸ்வரனாகவே எனக்குத் தெரியறேள்!” தழுதழுக்க சொன்ன ஆடிட்டர். அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா திருப்பாதத்துல விழுந்து நமஸ்காரம் செஞ்சார்.

எல்லாம் அந்த சந்திரமௌளீஸ்வரரோட அனுக்ரஹம்” அப்படீங்கற மாதிரி ஒரு நிமிஷம் கண்ணை மூடி த்யானம் பண்ணினார் மஹா பெரியவா..


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...