Monday, November 7, 2022

VISION

 


பார்வை ஒன்றே போதுமே.... நங்கநல்லூர்  J K   SIVAN 

கண் எதிரே  கண்ணாடியை ஞாபக மறதியாக  வைத்துவிட்டு  தேடுபவர்களில் நானும் ஒருவன். சில சமயம்  கண்ணாடிஹயை தலைக்கு மேலே  தூக்கி விட்டுக்கொண்டு  வேறெங்கேயோ எல்லாம் தேடுபவன்.

இப்போதெல்லாம்  கண்ணாடியை விட  மொபைல் போனை தான்  அடிக்கடி  தேடுகிறேன்.   எங்காவது வைத்துவிட்டு அதை தேடி  அலைவது  வழக்கமாகிவிட்டது.  பேரன்  யாரையாவது விட்டு  ''என் நம்பரை அடி '' என்று சொன்னால்  பக்கத்திலேயே  நியூஸ் பேப்பர் அடியிலிருந்து குரல்    'இதோ இங்கே இருக்கிறேன்'' என்று  கொடுக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, விழி கண் குருடு என்று ஒரு விஷயம்.   விழித்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால்  பார்வை இருக்காது. சிலருக்கு பார்வை இருக்கும். ஆனால் எதிரே இருக்கும் வஸ்துவை தேடிக்கொண்டிருப்பார்கள். ரெண்டாம் ரக ஆசாமிகள் நம்மில் அநேகம்.  அதற்கு காரணம், கண் எதை தேடுகிறதோ மனம் அதை நினைப்பதில்லை, எதையோ நினைத்துக் கொண்டு  தாவி விடுகிறது. முதலில் நினைத்த   வஸ்து அதற்கு மறந்து போனதால் கண்ணுக்கு  அது எதிரிலேயே இருந்தாலும் கண்டுகொள்ள, அடையாளம் காண  முடியவில்லை.  அப்புறம்  யாராவது  ''என்ன தேடுறீங்க ?'' ன்னு கேட்கும்போது 

''இங்கே  என்னுடைய  பர்ஸ் வைத்திருந்தேன்  எங்கே ன்னு பார்க்கறேன்''

''இதோ உங்க  சட்டை பாக்கெட்டிலேயே  வைத்திருக்கிறீர்களே ''  எங்கே ஞாபகமோ?
....
ஒரு  குட்டி நீதிக்கு கதை இந்த கண்  பார்வை சம்பந்தமானது நினைவுக்கு வருகிறது. அதைச் சொல்லி முடிக்கிறேன்.

குண்டப்பட்டி கிராமத்தில் கணேச வாத்தியாருக்கு கண் தெரியாது. எங்கே போனாலும் கையில் ஒரு ஹரிக்கேன் லாந்தர் எடுத்துக்கொண்டு போவார். ராத்திரி பகல் எதுவென்று அவருக்கு தெரியாதே . எதற்கு எரியும்  ஹரிக்கேன் விளக்கு.

ஒருநாள்   மாலை நேரம்  வழக்கமாக  சாப்பிடும் இடத்திலிருந்து மெதுவாக பழக்க தோஷத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். கையில் ஹரிக்கேன் லைட். எதிரே  சில யாத்ரீகர்கள். கண் தெரியாமல் வெள்ளைக் கொம்புடன்  மெதுவாக வரும் கணேச வாத்யார். ஒரு கையில் எரியும் ஹரிக்கேன் லைட்.  அவர்கள் அவரைப் பற்றி கேலியாக பேசி சிரித்தார்கள்   ஒருத்தன்  வாத்யாரைக் கேட்டான்:

''குருட்டு ஐயரே, உன்னாலே  தான்  பார்க்க முடியாதே எதுக்கு விளக்கு?''

'' ஆமாம்  பா,  நல்லா கேட்டே கேள்வி.  இந்த விளக்கு எனக்கு இல்லை. உன்னை மாதிரி என் எதிரே வர்றவங்களுக்கு எதித்தாப்பலே ஒரு குருடன் வாரான் அவன் மேலே  இடிட்ச்சுடக்கூடாது ன்னு தெரியறதுக்கு.'' 

''புரியுது ஐயரே, நான் கிண்டலா கேட்டதுக்கு மன்னாப்பு கேக்கறேன். நீங்க  ரொம்ப விசயம்  தெரிஞ்சவரு''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...