Wednesday, November 16, 2022

LIFE LESSON

 ஒரு சிந்தனைச் சிதறல்...  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
முருகன்  என்றால்  எனக்கு முதலில் மனக்கண் முன்பு தோன்றுவது நான் சிறுவயதில் தொட்டு விளையாடிய  பழனி ஆண்டவன்,  ஒரு பெரிய  கலர்  முருகன் படம்.   வடபழனி ஆண்டவன் சிலை வருவதற்கு முன், ஆலயம் பெரிதாக  வளரும் முன், ஒரு கீத்துக் கொட்டகையில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த பெரிய முருகன் படம். இணைத்திருக்கிறேன். 

பெரிசாக முருகன் வேலோடு   எல்லோருக்கும் ''யாமிருக்க பயமேன்?'' என்று சிரித்துக்கொண்டு  காலண்டர்களில், படங்களில் சொல்பவன். 
'வயது ஏற ஏற  ஞானம் முற்றும் என்பார்கள்.  ஞானம் எங்கே சார் கிடைக்கும் சொல்லுங்களேன். எனக்கு நிறைய தேவையாக இருக்கிறதே?   பேப்பர் படித்தால் கிடைக்குமா என்று பார்த்தால், சண்டை எப்படி போடுவது, எப்படி திருடுவது என்று படம் போட்டு சொல்லிக் கொடுக்கிறார்கள். 90 வயது கிழவியை  ஒரு  பையன் ..... ஒரு சின்ன  ஐந்து வயது  பெண்குழந்தையை ஒரு  60 வயது கிராதகன்........கிட்டத்தட்ட  57 வயதில் ஒருவன் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொண்டது.... கல்யாணம் பண்ணிக்கொண்டு கஷ்டப்பட்டால் தேவலையே..... அவர்கள் சொத்துக்கள் அத்தனையும் அபேஸ் பநத்தை பணத்தை அபேஸ் பண்ணிவிட்டு  ஓடியது....  தேங்காயை  தாடியோடு  கிலோ கணக்கில் நிறுத்து விற்பது.... தினம் ஒரு கட்சி,  வருமான வரி எப்பு, திருட்டு சொத்து.....கோவிலை இடிப்பது....பல வருஷங்களாக எத்தனையோ  கோவில்களில் சிலை  திருட்டு..உடந்தையாக கோவிலை பாதுக்காக்க வேண்டிய  அதிகாரிகள் .  சங்கிலி பறிப்பு...தப்பான மருந்து  ஆப்பரேஷன் பண்ணும்  போலி டாக்டர்கள் .  சுண்டுவிரல் கதவு இடுக்கில் நசுங்கிஎதற்காக  உடம்பு முழுக்க MRI  ஸ்கேன் எடுக்க சொல்பவர்கள்..... சீ சீ    உலகமே அலுத்து விட்டதடா முருகா.... இதெல்லாம் தெரிந்துகொண்டு இனிமேல் என்ன பண்ணப் போகிறேன்....  

அப்போதெல்லாம்  தினத்தந்தி யில் ''வெங்காய சருகு சேலை கட்டிய பெண்ணை......'' என்று முதல் பக்கமே கொட்டை எழுத்தில் வருவதே தப்பான நியூஸ் என்று பேப்பரை  எங்கள் கண்களில் படக்கூடாது என்று ஒளித்து வைத்துவிடுவார்  அப்பா..

நிம்மதி எங்கே சார்.?.....  சினிமாவில்  எங்கே நிம்மதி  எங்கே நிம்மதி  என்று சிவாஜி கையை தூக்கிக்கொண்டு பேண்டு  ஷர்ட் போட்டுக்கொண்டு தேடுவாரே  அதுபோல் ஓடவேண்டுமா?....அவர் அப்படி ஓடினால் காசாவது கிடைத்தது... நம்மை  பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்.  சரி....

ஒன்றுமே  வேண்டாம்  சாதாரணமாகவே  ஒருவரோடு  ஒருவர் (ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் அல்ல....அது  டேஞ்சரானது--  ஆபத்து அங்கே தான் உருவாச்சு)   அடிக்கடி மனம் விட்டு பேசினாலே  போதும்.  உலகத்தில் பாதி துன்பம் தீர்ந்துவிடும்.

உன்னை விட்டு  ஒருவர்  விலகுகிறார்  என்றால்  வருந்தாதே.  அவர் வழியில் அவர் போகட்டும். நீ அவர் பாதையில் இல்லை  என்று  தெள்ளத்  தெளிவாகிறது. துன்பமில்லையே  அதனால்.  . துன்பம் நேர்கையில்  யாழெடுத்து நம்மால்  வாசித்து   இன்பம் சேர்க்க முடியாது.  யாழ்  என்றால்  என்ன, வீணையா, தம்புராவா? வயலீனா?  

மக்களோடு  உறவாடும்  நட்பு  ''ப்ளூ டூத்'' என்கிறார் களே அது போல். அருகில் இருந்தால் ஒருவரோடு ஒருவர்  இணையலாம். அப்படியே  எல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விஷயங்கள்  தாவி விடும்.     எட்டிப் போனால் தான்  '' எந்த சுப்ரமணியன்?' என்று ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒரு அனுபவ உண்மை சொல்கிறேன்.  துன்பம் வருவதால்  ரெண்டு நன்மை. ஒன்று  எப்படி  அதிலிருந்து தப்புவது என்று அறிய வழி கிடைக்கிறது. மற்றொன்று இதுபோல் இனி வராமல் இருக்க  என்ன செய்யவேண்டும் என்ற புத்திமதி. வராமல் இருக்க வழி தேடியே  வாழ்க்கை முடிந்துவிடுகிறதே.
 
 நம் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே போதாது.  கிருஷ்ணன் ஞாபகமும் வர வேண்டும்.

கொதிக்கும், கொப்புளிக்கும் நீரில்  உருவம் தெரியாது. தெளிந்த நீர்  தான் நமது''அழகிய முகத்தை'' அப்படியே
 காட்டும். இந்த உதாரணம் எதை சொல்கிறது?

கோபத்தால் கொதிக்கும் உள்ளம் உண்மையை அறியாது. ஏற்காது. அது போனவழியே  தான்  போகும். அமைதியான உள்ளம்  தான்  சரியான வழி காட்டும். ஏதோ,  எதிலோ வெற்றி கிடைத்தவுடன்  தலை கால் புரியவில்லை.  எது மாதிரி? அழகிய மலர் போல்.  விரைவில் வாடிவிடும். அழியும்.  தோல்வி அம்மா மாதிரி . நான் சொல்வது  அவரவர் அம்மாவை. காயத்தை  ஆற்றும் ஒளஷதம்.   இதமாக  எங்கே  தவறு, எதால், எவரால், ஏன் நடந்தது எப்படி என்றெல்லாம் விளக்கும். மறுபடி நேராது காக்கும்!

நட்பு எப்படி பெருகுகிறது?   நல்ல மனசினாலே. நல்ல இதயம் நிறைய நட்பை பெறுகிறது. (எனக்கு நிறைய நண்பர்கள் சேர்ந்து விட்டார்களே.  ஒருவேளை நான் நல்லவனோ?)   நல்ல குணம் எண்ணற்ற இதயங்களை கவர்கிறது  என்று சொல்கிறார்களே.  மகிழ்ச்சியை அள்ளி வாரி வீசுகிறது!   என்து சின்ன 'லெவல்'  லேயே  இதை நான் அனுபவிக்கிறேனே.

அன்போடு, நட்போடு  ஒருவர்  தலையை, முதுகை   தட

விக்கொடுக்கும்போது,  தோளில்  அணைத்துக் கொள்ளும் போதுஅவரது துன்பம்  பாதிக்கு மேல்  விலகுகிறது . உண்மையான அன்புக்கு அத்தனை பவர். மந்திரக் கோல் மாதிரி.  எவ்வளவோ பேர் இதற்கு ஏங்கித் தவிக்கிறார்கள்.  கள்ளங்கபடற்ற ஒரு சிரிப்பு ஒன்றே போதுமே. கனிவான பார்வை ஒன்றே  போதுமே.  பொட்டுக் கூடை பேச்சு அதுவே பேசுமே.   ''உள்ளொன் று வைத்து புறமொன்று பேசுவோர்  உறவு கலவாமை வேண்டும்'' என்று   அதனால்  தான் வள்ளலார் பாடினாரோ?

தோட்டத்தில் நிறைய மரங்கள்.  ஒரு மரத்தில்  தேனீ  ஒன்று  சுறு சுறுப்பாக  தேனை  சேகரித்து வந்து கூட்டில் நிரப்பிக்  கொண்டிருந்ததை  பார்த்து விட்டு  ஒரு  பறவை கேட்டது.

 ''ஏ தேனீ,  நீ ஒரு முட்டாளா? ஓடி ஓடி  இவ்வளவு தேனை  சேகரித்து வைக்கிறாயே.  எல்லாம் அந்த  மனிதன்  வந்து ஒருநாள்  கொண்டு போகப் போகிறானே  மறந்து விட்டாயா?  கஷ்டப்பட்டு சேர்த்த  தேனை இப்படி   கோட்டை விட்டால்  உனக்கு  அப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்காது?''

சிரித்துக்கொண்டே  தேனீ  பதில் சொன்னது: 
''இல்லை  நண்பா.  என்றைக்கும்  மனிதனால் தேனை  உண்டாக்க முடியாது. என்னிடமிருந்து எடுத்துக்கொ ண்டு போக வேண்டுமானால் முடியும்.  தேனை தயாரிக்க  எனக்கு மட்டும்  தான் தெரியும்.'  இதே எனக்கு பெருமை அல்லவா?''
இதற்கு  வேதங்கள் உபநிஷங்கள் எல்லாம் நீள  நீளமாக  என்ன வெல்லாமோ சொன்னாலும்  ஒரே வார்த்தை   ''இது தான்  தியாகம்''

அது சரி, நான் கதோபநிஷத்  விளக்கம் எழுதுகிறேன், புரிகிறதா,? பிடிக்கறதா?  படிக்கவே பிடிக்காமல் ஓடி விட் டீர்களா? ஏன் இவனுக்கு இப்படி புத்தி போயிற்று என்று வசனமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...