Tuesday, November 8, 2022

SITHTHARGAL

 நந்தவனத்தில் ஓர் ஆண்டி -    நங்கநல்லூர் J.K. SIVAN


முன்பெல்லாம், அதாவது நூறு வருஷங்களுக்கு முன்னால் என்று வைத்துக் கொள்வோம். கடைகள் ஹோட்டல்கள், டாக்டர்கள், போக்குவரத்து  பஸ் வாகனங்கள் டெலிபோன் எதுவுமே இல்லை.  ஆஹா  செலவே இல்லையே! என்று சந்தோஷப்படவேண்டாம். செலவழிக்க யாரிடமும் பணமும் கிடையாது. இருப்பதெல்லாம் இயற்கை அளித்த  காய் கனி கிழங்குகள், மர  நிழல், வீடு, மாடு வீடு பசு, நாய்.  அவரவர்  தம்முடைய தொழிலை குடிசைத் தொழிலாக  வீட்டிலேயே  செய் து வந்தார்கள்.  தங்கத்தில் நகை செய்ய  தட்டார் வீட்டுக்கு போகவேண்டும். மரவேலை ஆசாரி வீட்டுக்கு போய் வேண்டியதை பண்ணிக்  கொடுக்க சொல்லலாம். தறிநெய்பவர்கள் வீட்டுக்கு, தெருவுக்கு சென்றால், வேண்டிய புடவை வேஷ்டி கிடைக்கும். டாக்டர்கள்  வீடு தேடி வந்து திண்ணையில் அமர்ந்து  பாட்டுப்பாடி லேகியம், குளிகை, மாத்திரைகள் கொடுத்து ஒரு சொம்பு  மோர் fees  வாங்கி குடித்து ஏப்பம் விட்ட காலம்.
கடுவெளி சித்தர் காலம் இன்னும் ரொம்ப பழையது.  

இந்த சித்தரை   நான் பாண்டிச் சேரியிலே அவர்  அதிஷ்டானத்தில் தரிசித்தேன். ஒரு குளக்கரையில் இருந்தது.மணல் குளம் என்ற பெயருள்ள அந்த குளத்தின் கரையில் ஒரு பிள்ளையார்  ரொம்ப  பிரபலம்.  அவரை  மணல் குள வினயாகர்  என்று சொல்வார்கள். அது இப்போது மணக்குள விநாயகர் கோவில் ஆயிட்டுது.

 அந்த குளத்தங்கரையிலே ஒரு அரச மரத்தின் கீழே  தான்  கடுவெளிச்சித்தரின் அதிஷ்டானம். சரி அந்த குளத்து ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணுவோமே   என்று  அஜாக்ரதையாக ஒரு படியிலே காலை வைத்தேன்.  படிக்கல்லு ஆடியதும்   பாலன்ஸ் 
இழந்து  சாய்ந்தேன். பிடித்துக்கொள்ள எதுவுமில்லையே.  இடது கால்லே மளுக் என்று ஒரு சப்தம். ட்விஸ்ட் ஆகிட்டதா?  அப்போது 75 இருக்கும்.  கொஞ்சம் வலி. எப்படியோ பொறுத்துகே கொண்டு  சித்தரை  நமஸ்காரம் பண்ணிவிட்டு (குளத்து ஜலம்  ப்ரோக்ஷணம் பண்ணிவிட்டு தான்  விந்தினேன்.

பிறகு தான் ஆரம்பித்தது  விட்டு விட்டு முட்டி வலி. மளுக் மளுக். கிலுகிலுப்பை ஒன்றை இலவசமாக முழங்கால் முட்டிக் குள்ளே சம்பாதித்துக்கொண்டு சென்னை திரும்பினேன்.

ஒரு மாசம் ஒன்றரை மாசம் கழித்தும் வலி விடவில்லை.  விஜயா ஹாஸ்பிடல்  ராஜசேகர ரெட்டி டாக்டர்  பார்த்து ray எடுத்து, மருந்து எல்லாம் வாங்கி ஒத்தடம் கொடுத்து கடைசியில்  அந்த கடுவெளி சித்தர் கிட்டேயே ''வலி கடு'மையாக இருக்கிறதே சரி பண்ணுங்களேன் உங்களைப் பாக்கதானே வந்தேன் என்று பேரம் பேசி அவர் சரி பண்ணிவிட்டதால்  சாதாரணமாக நடக்க முடிந்தது. நடந்தேன். நடக்கிறேன். நடப்பது நடக்க வேண்டியது நடந்து விட்டதே.

தமிழ்  கூறும் நல்லுலகத்தில்  எத்தனையோ சித்தர்கள் யோக சக்தியால் எண்ணற்ற சக்தி  இருந்தாலும்  வெளியே காட்டிக் கொள்ளாமல்  தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து  தியானித்தவர்கள். நம்மிலிருந்து முற்றிலும்  மாறுபட்டவர்கள். 

கடு வெளி என்றால் வெட்ட வெளி.   எங்கும் பறந்து காணும் காலி இடம், வெட்ட வெளி.  அந்த உருவமற்ற  பரவெளியை தியானித்து சித்தி பெற்றதால் அவர்  கடுவெளிச் சித்தர் என  பெயர் பெற்றவர். கடுவெளி சித்தரின் பாடல்கள் மிக அருமையாக  
எளிமை
யாக  இருக்கிறது. சித்தர்கள் நமது பொக்கிஷம். பலரைப் போலவே இந்த சித்தரின் வாழ்க்கை  குடும்ப வரலாறு சொந்த பெயர்  எதுவும்  தெரியாது. சோழ நாட்டிலுள்ள கடுவெளி  என்கிற  ஊரிக்காரர் என்கிறார்கள். 

 பதினாறாம் நூற்றாண்டு  மஹான் இந்த  கடுவெளிச்சித்தர். தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம். கடுவெளி சித்தாலாத்தூர் என்கிற ஊரில் சமாதியடைந்ததாக ஒரு பேச்சு.எனக்கு  விவரம் தெரியவில்லை. 

இன்று கடுவெளிச் சித்தரின் எல்லோரும் அறிந்த ஒரு பாட்டு சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

“நந்தவனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி“

ரொம்ப பிரபலமான பாடல் இது. ஐந்து ஆறு வயதில் இதை பாடிக்கொண்டே தெருவில் ஓடி விளையாடியது ஞாபகம் வருகிறது. உங்களில் பலருக்கு அறிமுகமா கியிருக்கும்.

பரம ஏழையான ஒரு ஆண்டி. தினமும் பிச்சை எடுத்து உண்பவன். சத்திரத்தில் திண்ணையில் தூங்குபவன். இல்லையேல் இருக்கவே இருக்கிறது மரத்தடி ஏதாவது. ஒருநாள் நடந்து செல்லும்போது அவன் பார்வை ஒரு நந்தவனம் மீது விழுந்தது.

''ஆஹா என்ன அற்புதமான வர்ணங்களோடு வித விதமான வண்ண மலர்கள். அதே அருகே அங்கே ஒரு குளம் கூட இருக்கிறதே. அடாடா இந்த குளத்து நீரை எடுத்து நந்தவன செடி கோடிகளுக்கு ஊற்றுவோம் என்றால் குடம் ஒன்றும் கைவசம் இல்லையே. வெயில் சுள்ளென்று அடிக்கிறது. செடிகளுக்கு நீர் ஊற்றவேண்டுமே.  நம்மிடம் ஒரு குடம் (தோண்டி) இருந்தால் குளத்து நீரை தினசரி  மொண்ட,   நந்தவனத்தில் ஊற்றி, பல மலர்கள் செடி கோடிகளில் பூக்குமே. அந்த மலர்களை விற்று வரும் காசை வைத்துக்கொண்டு ஒரு மண்டபம் கட்டி அதில் என் போல பல ஆண்டிகளை தங்க  வைக்கலாமே ''.ஆண்டி  அபாரமான  கற்பனையில் மிதந்தான்.
பக்கத்து ஊரில் உள்ள குயவனிடம் சென்றான்.

''ஐயா எனக்கு ஒரு குடம் தானமாக வேண்டுமே ''
''ஆண்டி பண்டாரம், உனக்கு எதற்கு குடம் ?''
ஆண்டி தனது திட்டத்தை சொன்னதும் குயவன் இணங்கவில்லை. ஆண்டி பத்து மாதங்கள் அங்கு மிங்குமாக நடந்து குயவனிடம் மன்றாடியதால்,  குயவன் ஆண்டியின் தொந்தரவு தாங்காமல்  அவன் மனம் இளகி ஒரு மண் குடத்தை தானமாக கொடுத்தான்.
ஆண்டி தனக்கு பெரிய ஒரு மண் தோண்டி கிடைத்த சந்தோசத்தில் அதை தலையில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெ ல்லாம்   ஆடினான்.   மண் தோண்டி கீழே விழுந்து   சுக்கல் சுக்கலா  உடைந்து சிதறியது. பத்து மாதங்கள் மன்றாடி வாங்கிய தோண்டியை பத்து நிமிஷத்தில் உடைத்து விட்டான்  ஆண்டி என்று பாட்டு சொல்கிறது.

இது ஒரு சாதாரண  ஒரு ஆண்டி, குயவன், தோண்டி கதை இல்லை ஸார்.

அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது என்று  தெரிந்து பல காலம்  தவம் இருந்து  ஒரு பத்து மாத காலம் காத்திருந்து  தவம் செய்து பெற்ற இந்த மனித உடலைப்  போற்றி பாதுகாக்காது அற்ப சுகங்களுக்கு ஆசை பட்டு மனித உடல் என்னும் தோண்டியைப்  போட்டு உடைக்கின்றாயே. இந்த உடல் இருக்கும்போதே ஆன்மா இறையுடன் கலக்க வழி தேட வேண்டாமா என்று கேட்கிறார் கடுவெளி சித்தர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...