Tuesday, November 1, 2022

AYUSHYA SOOKTHAM


 


ஆயுஷ்ய ஹோம ஸூக்தம் - #நங்கநல்லூர்_j_k_SIVAN

யஜுர் வேதத்தில் ஒரு அருமையான 9 ஸ்லோகங்கள். அதற்கு ஆயுஷ்ய சூக்தம் என்று பெயர். நீண்ட ஆயுள் பெற நாம் எல்லோரும் வீடுகளில் ஆயுஷுஹோமம் செயகிறோம் அல்லவா. அப்போது வாத்யார் சொல்லும் மந்திரம் ஆயுஷ்ய சூக்தம். எல்லா தேவ தேவிகள், தெய்வங்களையும் வணங்கி அவர்கள் அருளால் நீண்ட காலம் வாழ நமஸ்கரிக்கும் மந்திரம் இது.

இந்த உலகத்தில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதப் பிறவியும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இங்கு வாழ அருகதை பெற்று அனுப்பப்பட்டவர்கள். நம்முடைய அறியாமையால், தவறுகளால், அந்த குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே நமது வாழ்வை முடித்துக் கொள்கிறோம். ஆயுஷ்ய சூக்தம் நமக்களிக் கப்பட்ட கால வரையறையை பூர்ணமாக அனுபவிக்க தெய்வங்களை வேண்டுவது தான் இந்த சூக்தம். நாம் விரும்புவதை அடைய முடிவது மனிதப் பிறவியில் மட்டுமே தான் என்பது கவனத்தில் இருக்க வேண்டும். மற்ற பிறவிகளில் இந்த சலுகை கிடையாது. மற்றவை போக சரீரங்கள். உண்டு மாண்டுபோகிறவை. கர்ம சரீரங்கள் அல்ல. ஆயுஷ்ய சூக்தம் நமது கர்மாக்களை சரிவர செய்து பூலோக வாழ்வை சுகமாக அனுபவிக்க அருள் தர சகல தெய்வங்களையும் வேண்டும் மந்திரங்கள்.

நிறைய மந்திரங்கள், ஸ்லோகங்கள் நாம் படிப்பதில்லை, அர்த்தம் புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு பரந்த மனத்துடன் பக்தி பூர்வமாக நமது முன்னோர்கள் ரிஷிகள் இவற்றை நமக்கு மனப்பூர்வமாக அளித்திருக்கிறார்கள் என்று புரிந்தால் இதை எல்லோருக்கும் அனுப்பி வாழ்த்தலாம்.

यो ब्रह्मा ब्रह्मण उज्जहार प्राणैः शिरः कृत्तिवासाः पिनाकी ।
ईशानो देवः स न आयुर्दधातु तस्मै जुहोमि हविषा घृतेन ॥१॥

யோ பரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜஹார ப்ராணை ஸிர: க்ருத்திவாஸா: பிநாகீ
ஈஸானோ தேவ: ஸ ந ஆயுர்-ததாது தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன

yo brahmā brahmaṇa ujjahāra prāṇaiś-śiraḥ kṛttivāsāḥ-pinākī |
īśāno devas sa na āyur-dadhātu tasmai juhomi haviṣā ghṛtena ||1||

நம்மை படைத்தவன் ப்ரம்மா. அதற்கு அவன் உருவானது ப்ரம்மத்தின் மூச்சிலிருந்து. ப்ராணனிலிருந்து. பிநாகபாணி எனும் சூலாயுதம் தாங்கியவன், யானைத்தோலை உடுத்த சிவன் ப்ரம்மத்தின் சிரஸிலிருந்து தோன்றியவன். ப்ரம்மா விஷ்ணு சிவன் ஆகிய த்ரிமூர்த்திகளையும் நீண்ட ஆயுள் பெற வேண்டிக்கொண்டு ஹோமத்தில் நெய் சமர்ப்பித்து ஹோம அக்னியை வளர்ப்பேனாக.

विभ्राजमानः सरिरस्यमध्याद्रोचमानो घर्मरुचिर्य आगात् ।
स मृत्युपाशानपनुद्य घोरानिहायुषेणो घृतमत्तु देवः ॥२॥

vibhrājamānas-śarīr- asya madhyādrocamāno gharmarucirya āgāt |
sa mṛtyupāśān-apanudya ghorān ihāyuṣeṇo ghṛtamattu devaḥ ||2||

விப்ராஜமாந: ஸரிரஸ்ய மத்யாத் ரோசமானோ தர்மருசிர்-ய ஆகாத்
ஸ ம்ருத்யு-பாஸானபனுத்ய கோராநிஹா-யுஷேணோ க்ருதமத்து தேவ:

ஒளி வீசும் அக்னி, குளிரிலிருந்து நம்மைக் காக்கும் வெப்பம், பிரம்மனின் மார்பிலிருந்து உதித்தது. மரணத்தின் பிடியிலிருந்து விலக , பிறப்பு இறப்பு களிலிருந்து மீள, இதோ ஹோமத்தில் நெய் சமர்ப்பித்து அக்னியை வணங்குகிறேன்.

ब्रह्मज्योतिर्ब्रह्मपत्नीषु गर्भं यमादधात् पुरुरूपं जयन्तम् ।
सुवर्णरंभग्रहमर्कमर्च्यं तमायुषे वर्धयामो घृतेन ॥३॥

ப்ரஹ்மஜ்யோதிர்-ப்ரஹ்ம -பத்நீஷு கர்பம் யமாததாத் புரு ரூபம்
ஜயந்தம் ஸுவர்ணரம்பக்ரஹ-மர்க்-மர்ச்யம்-தமாயுஷே வர்தயாமோ க்ருதேந

brahmajyotir brahmapatnīṣu garbhaṃ yamādadhāt pururūpaṃ jayantam |
suvarṇaraṃ-bhagraham-arka- m-arcyaṃ tam āyuṣe vardhayāmo ghṛtena ||3||

பிரம்மத்தின் ஜோதியிலிருந்து, ஒளியிலிருந்து பிறந்தவன் உயிர் காக்கும் பொன்நிற கிரணங்களைக் கொண்ட சூர்யன். சூர்யபகவானே,உன் அருளால் நீண்ட ஆயுளை பெறவேண்டும் என்று வேண்டி இந்த நெய்யை ஹோமத்தீயில் இடுகிறேன்.


श्रियं लक्ष्मीमौबलामंबिकां गां षष्टीं च यामिन्द्रसेनेत्युदाहुः ।
तां विद्यां ब्रह्मयोनिं सरूपामिहायुषे तर्पयामो घृतेन ॥४॥

śriyaṃ-lakṣmīm-- aubalām-aṃbikāṃ-gāṃ ṣaṣṭīṃ ca yām-indrasenetyudāhuḥ |
tāṃ-vidyāṃ brahmayonigṃ sarūpām-ihāyuṣe tarpayāmo ghṛtena ||4||

ஸ்ரியம் லக்ஷ்மி – மௌபலா-மம்பிகாம் காம் ஷஷ்டீஞ்சயாமிந்த்ரேஸேநேத்யுதாஹு:
தாம் வித்யாம் ப்ரஹ்மயோனி ஸரூபமிஹாயுஷே தர்பயாமோ க்ருதேன

மஹா லக்ஷ்மி தேவி ஞான பொக்கிஷம். ப்ரம்மத்திலிருந்து உருவானவள். ஸ்ரீ, லட்சுமி, ஒளபலா, அம்பிகா, காம், இந்த்ரஸேனா என்றெல்லாம் அழைக்கப்படுபவள். அம்மா தாயே நீண்ட ஆயுள் வழங்கு.


दाक्षायण्यः सर्वयोन्यः स योन्यः सहस्रशो विश्वरूपा विरूपाः ।
ससूनवः सपतयः सयूथ्या आयुषेणो घृतमिदं जुषन्ताम् ॥५॥

dākṣāyaṇyas-sarvayo- nyas-sa yonyas-sahasraśo viśvarūpā virūpāḥ |
sasūnavas-sapatayas-sayūt- hyā āyuṣeṇo ghṛtam-idaṃ juṣantām ||5||

தாக்ஷõயண்ய: ஸர்வயோன்ய: ஸ யோன்ய: ஸஹஸ்ரஸோவிஸ்வரூபா: விரூபா:
ஸஸூநவ: ஸபதய: ஸயூத்யா ஆயுஷேணோ க்ருதமிதம் ஜுஷந்தாம்

முத்தேவிகளில் முக்யமானவளான தாக்ஷாயணி லோகநாயகி, லோக மாதா, அம்மா, உன் பரிவார தேவதைகள் அனைவருக்கும் உனக்கும் நமஸ்காரங்கள். உன்னருளால் தீர்க்காயுசு பெற வேண்டுகிறேன்.

दिव्या गणा बहुरूपाः पुराणा आयुश्छिदो नः प्रमथ्नन्तु वीरान् ।
तेभ्यो जुहोमि बहुधा घृतेन मा नः प्रजां रीरिषो मोत वीरान् ॥६॥

divyā gaṇā bahurūpāḥ-purāṇā āyuśchido naḥ-pramathnantu vīrān |
tebhyo juhomi bahudhā ghṛtena mā naḥ-prajāgṃ rīriṣo mota vīrān ||6||

திவ்யா கணா பஹு ரூபா: புராணா ஆயுஸ்சிதோ ந: ப்ரமத்நந்துவீரான்
தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மா ந: ப்ரஜா ரீரி÷ஷா மோத வீரான்

விண்ணிலுள்ள எண்ணற்ற திவ்ய தேவகணங்களுக்கும், ஸ்வரூபங்களுக்கும் நமஸ்கரித்து இந்த ஹோமத் தீயில் நெய் வார்க்கிறேன். தடங்கல், இடையூறு எதுவுமின்றி எனது உலக வாழ்வு சுபிக்ஷமாக நீண்ட காலம் வம்சம் வளர்ந்து, சந்ததியோடு வாழ ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.


एकः पुरस्तात् य इदं बभूव यतो बभूव भुवनस्य गोपाः ।
यमप्येति भुवनं सांपराये स नो हविर्घृतमिहायुषेत्तु देवः ॥७॥

ekaḥ-purustāt ya idaṃ babhūva yato babhūva bhuvanasya gopāḥ |
yam-apyeti bhuvanagṃ sāṃparāye sa no havir-ghṛtam-ihāyuṣettu devaḥ ||7||

ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோ பபூவ புவநஸ்ய கோபா:
யமப்யேதி புவனம் ஸாம்பராயே ஸ நோ ஹவிர்க்ருத-மிஹாயுஷே-த்து தேவ:

वसून् रुद्रानादित्यान् मरुतोऽथ साध्यान् ऋभून् यक्षान् गन्धर्वांश्च पितॄंश्च विश्वान् ।
भृगून् सर्पांश्चाङ्गिरसोऽथ सर्वान् घृतं हुत्वा स्वायुष्या महयाम शश्वत् ॥८॥

vasūn rudrān-ādityān maruto’tha sādhyān ṛbhūn yakṣān gandharvāgśca pitṛgśca viśvān |
bhṛgūn sarpāgścāṅgiraso’tha sarvān ghṛtagṃ hutvā svāyuṣyā mahayāma śaśvat ||8||

வஸூன் ருத்யான் ஆதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷõன் கந்தர்வாம்ஸ்ச பித்ரூம்ஸ்ச விஸ்வான்
ப்ருகூன் ஸர்பாம்ஸ் சாங்கிரஸோத ஸர்வான் க்ருதம் ஹுத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம ஸஸ்வத்

பிரபஞ்சம் உருவாகும் முன்பு தனித்து இருந்த ப்ரம்மம், மற்ற தேவர்கள், தேவிகள்,தேவதைகளை ஸ்ரிஷ்டித்தது .அதனால், வசுக்கள்,ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருந்துகள், சாத்தியர்கள், ரிபுக்கள் , யக்ஷர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள், ப்ருகுக்கள், நாகர்கள், அங்கீரஸ்கள் தோன்றினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பெடுத்து ஜீவன்களுக்கு உதவுகிறவர்கள். ப்ரம்மத்துக்கும், அதனால் உண்டான சகல தேவ தேவதைகளுக்கும் நன்றி சொல்லி நீண்ட ஆயுள் பெற ஆசிர்வதிக்குமாறு இந்த ஹோமத்தை செய்கிறேன்.

विष्णो त्वं नो अन्तमश्शर्मयच्छसहन्त्य ।
प्रतेधारा मधुश्च्युत उथ्सं दुह्रते अक्षितम्॥९॥

viṣṇo tvan no antamaśśarmayacchasahantya |
pratedhārā madhuścuta utsaṃ duhrate akṣitam ||9||

விஷ்ணோ த்வம் நோ அந்தமஶ்ஶர்மயச்ச ஸஹந்த்ய ।
ப்ரதேதாரா மதுஶ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதம் ॥

ஹே, மஹா விஷ்ணு, இந்த ஆயுஷ் ஹோம மந்த்ரங்களை, விடாமல், நடுவே இடையூறில்லாமல், செவி இனிக்க, வாய் மணக்க உச்சரிக்கிறேன். எங்களோடு இருந்து, கருணை புரிந்து, சர்வ சந்தோஷமும் நீண்ட ஆயுளும் அளித்து அருள் புரியவேண்டும் என்று நமஸ்கரிக்கிறேன்.

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...