Wednesday, March 31, 2021

PILLAIYARAPPAN 2

 


                                                    பிள்ளையாரப்பன்....2..   
                                                    நங்கநல்லூர்  J K  SIVAN 

பிள்ளையாருக்கு  எத்தனையோ பேர்கள். அதில் முக்கியமானது விக்னேஸ்வரன்.  விக்னம் என்றால் குறைபாடு, தடங்கல், இடையூறு.    எந்த காரியமும், எந்த எண்ணமும் குறையின்றி நிறைவேற வேண்டும் என்று அவனை முதலில் வேண்டிக்கொண்டு தான் எதையும்  ஆரம்பிக்கும் வழக்கம் நமக்கு தொன்று தொட்டு உண்டு.  எந்த தெய்வத்தை தொழுதாலும் முதலில் விக்னேஸ்வர பூஜை குட்டியாக ஒன்று பண்ணும் வழக்கம் இன்றும் உள்ளது.

எதை எழுதினாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதும் பழக்கம்  அக்காலத்தில்  பள்ளியில் உபாத்யாயர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதெல்லாம் இப்போது  தொலைந்து போய்விட்டது. போஸ்ட் கார்ட் எழுதினாலும் முதலில் பிள்ளையார் சுழி, கடையில் சாமான் வாங்க லிஸ்ட் போட்டாலும் முதலில் சின்னதாக ஒரு பிள்ளையார் சுழி  அப்போதிருந்தது.

கச்சேரிகளில் முதலில்  ஹம்சத்வனி ராகத்தில்  ''வாதாபி கணபதிம் பஜே''  கீர்த்தனையைப்   பாடிவிட்டு தான்  கச்சேரி தொடங்கி களை கட்டும்.    சில நிகழ்ச்சிகளில்  மஹா கணபதி என்று  நாட்டையிலும் ஆரம்பிப்பார்கள்.

முத்துசாமி தீட்சிதர் என்னும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்  பெரிய அம்பாள் உபாசகர்.  அவர்  தான்  ''வாதாபி கணபதிம்  பஜே எனும் கீர்த்தனையை எழுதியவர். திருவாரூரில் வாழ்ந்தவர்.    இருநூறு- இருநூற்றைம்பது வருஷமாக நமக்கு கிடைத்த அற்புத கீர்த்தனை இது.  ஆயிரக்கணக்கான முறை கேட்டும் அலுக்காத  கம்பீர பாடல்.   தீக்ஷிதர்   இதை திருவாரூரில்  மூலாதார கணபதியின் மேல்  பாடினார்.

 இந்த   கணபதியை 'வாதாபி கணபதி' என்று  வணங்குகிறோம்  இந்த கீர்த்தனையில் தீக்ஷிதர் மஹா கணபதியை   பதினாறு விதமான  பெருமைகளைக் கொண்ட  கணபதி என்று  போற்றி பாடியிருக்கிறார் . ஸம்ஸ்க்ரிதத்தில்  'ஷோடச கணபதி கீர்த்தனை' என்றும்  அந்த  கீர்த்தனைக்கு பெயர். 

பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ
அனுபல்லவி
பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்
சரணம்
பூராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்
கராம்புஜபாச'பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

''மஹா கணபதே , நமஸ்காரம், நீங்கள்  அழகான யானை முகம் கொண்டவராக அருள்பாலிக்கிறீர்கள்.  பக்தர்கள் வேண்டும்  வரங்களைக் கொடுக்கின்ற  வாதாபி கணபதி.  உங்களை பஜிக்கிறேன். 
நீங்கள்  கணபதி,  கணேசன்,  கணேஸ்வரன், கண நாயகன், கணநாதன், என்ற பெயர் கொண்ட  காரணம் நீங்கள்  சிவ கணங்களின் ,  பூத கணங்களின் தலைவர்.  அவர்கள்  உங்கள்  திருவடிகளை சதா பூஜிக்கிறவர்கள்.  பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும்    ஆளுமையில் கொண்டவர்.   எதிலும்  ஆசை  அற்ற யோகிகளால்  போற்றப்படுபவர்.  அகில  உலகத்துக்கே  காரணபூதர்.  எல்லா தடங்கல், குறைகள், இடையூறுகளையும் விலக்குபவர் .

முன்காலத்தில் கும்ப சம்பவர் எனப்  பெயர் பெற்ற அகஸ்திய ரிஷியால்  பூஜிக்கப்பட்டவர். மூன்று கோணங்க ளுடன் கூடிய யந்திரத்தின் நடு நாயகமாக  இருப்பவர்.  விஷ்ணு முதலிய   தேவர்களால், தெய்வங்களால், முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர். மூலாதார  க்ஷேத்ரமான  திருவாரூரில் இருப்பவர். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர். 
நீங்கள் தான்  பிரணவ ஸ்வரூபமான  ஓங்கார கணபதி. 

பிள்ளையாரை படமாக சித்திரிக்கும்போது  ஓம்  எழுதி அதையே அவர் உருவமாக நாம்  காட்டுகிறோம்.
எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.   இடது கையில் கரும்புத்துண்டு. தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்  கொண்டவர்.  பாபம்  நெருங்காதவர். பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர். பரமசிவன்,  சிவகுருவாகிய முருகன் ஆகியோர் தரிசித்து  மகிழும்  ஸ்வரூபி. 
ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானை  முகத்தோன்''

தீக்ஷிதர்  அற்புதமாக  கீர்த்தனை பதத்தில்  அக்ஷர பிரயோகத்தில்  அழகாக  ஆனைமுகனை படம்பிடித்து காட்டியிருக்கிறார். 

அது சரி,  திருவாரூர்  விநாயகர்  ஏன்  வாதாபி கணபதி எனப்பட்டார்?

தொடரும்  


ORU ARPUDHA GNANI

 

ஒரு அற்புத ஞானி       ---    நங்கநல்லூர்   J K SIVAN ---
சேஷாத்ரி ஸ்வாமிகள் 


               ''மாம்பழம் கொண்டு வா''


பகவான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லலாம்.  ஒரு ப்ரம்ம ஞானி எப்படி இருப்பர் என்று அவரைப் பார்த்தாலே  புரிந்துகொள்ளலாம்.

இப்போது கோடை துவங்கிவிட்டது. சூரியனின்  உஷ்ணம் கொரோனா பீதியோடு  எங்கும் நம்மை  வாட்டுகிறது.  இது மாமரங்கள் பூத்து காய்த்து கனியும்  காலம்.   ஒவ்வொரு சீசனிலும் ஒரு புஷ்பம், கனி நமக்கு  மகிழ்வூட்டுகிறதே.
 
மா, பலா, வாழை என்பன முக்கனிகள். மிக மிக ருசியான பழங்கள். இதில் மாம்பழம் முதல் பரிசு பெறும். எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால் மாம்பழ சீசனுக்காக  கோடை காலத்திற்காக  காத்திருக்க வேண்டும்.

எத்தனையோ வகையான மாம்பழங்கள் இருக்கிறதே. ஒரு முறை சீன யாத்திரிகர் ஒருவர் இந்தியா வந்து வடக்கே ஏதோ ஒருஊரில் மாம்பழத்தை ருசித்து அதன் ருசியை சீனா திரும்பியவுடன் சீன ராஜாவுக்குச் சொன்னபோது அவனுக்கு அதை ருசிக்க வேண்டும் என்று தோன்றியது. எங்கே போவது மாம்பழத்துக்கு?

அந்த யாத்ரீகன் சாப்பிட்டதோ சாதாரண நார் மாம்பழம். அதன் ருசியே அவனை கதி கலங்க அடித்து அதைப் புகழ்ந்தான். அல்போன்ஸோ , பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமானி எல்லாம் சாப்பிட்டால் என்ன சொல்வானோ?

ராஜாவுக்கு மிகவும் ஆர்வம் வந்து விட்டது.

''இதோ பார் உன்னை இங்கிருந்து விடபோவதில்லை. எப்படியாவது அதன் ருசியை எனக்கு நீ காட்டிக் கொடுக்கவேண்டும். இப்போதே நான் அதை அனுபவிக்க நீ  வழி செய்ய வில்லையெ ன்றால் உன் உயிர் தப்பாது'' என்று கட்டளையிட்டான். யாத்ரீகன் என்ன செய்வான்? . அவன் சாப்பிட்ட நார் மாம்பழ ருசியை எப்படி விளக்கலாம் என்று யோசித்தபோது ராஜாவின் மந்திரி எதிரே வந்தான்.

''யாத்ரிகா, என்ன முடிவெடுத்தாயா? இன்னும் அரைமணி நேரம் தான் உன் உயிருக்கு . அப்புறம் நீ விண்ணுலகம் தான் !'' என்று பயமுறுத்தினான்.

திடீரென்று ஒரு யோசனை யாத்ரீகனுக்கு. உயிரே மயிரிழையில் ஊசலாடும்போது எதையாவது பற்றிக் கொண்டு உயிர் தப்ப வேண்டாமா? . மந்திரியின் முகமே சமயசஞ்சீவியாக வந்தது.

''ராஜா, இதோ உங்களுக்கு அதன் ருசியை உதாரணமாக காட்டுகிறேன். என்று மந்திரியை அழைத்து அவன் தாடியை தேனால் நிரப்பி ராஜா இதை ருசித்துப் பாருங்கள்'' என்றான் , ராஜா நார் மாம்பழம் ருசி அறிந்து கொண்டான்! . யாத்ரீகன் அதற்கப்புறம் மாம்பழம் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டாலும் யாரிடமும் சொல்வதில்லை !!! ஆனால் மந்திரிக்கு பாவம் ராஜாவிட ம் தினமும் முகவாயை  தேன்  தடவிக்கொண்டு  அரைமணி நேரமாவது தவிர்க்கமுடியாத வேலை இருந்ததே!!!

திருவண்ணாமலையில்  ஒரு நாள்  சேஷாத்ரி  ஸ்வாமிகளைப் பார்க்க ஜெயராம முதலியார் வந்த அன்று ஸ்வாமிகள் மிக உற்சாகமாக காலை ஆட்டிக் கொண்டு  சடைச்சி  சத்திரத்து  திண்ணையில் அமர்ந்திருந்தார்.

தன்னை வணங்கிய முதலியாரிடம் ''போ எனக்கு ஒரு மாம்பழம் கொண்டுவா ''

''ஸ்வாமி , இது மாம்பழ காலம் இல்லையே. கிடைக்காதே. பால் கொண்டு வருகிறேன்.  அதை சாப்பிடுங்கள்''

''இல்லே இல்லே, மாம்பழம் சாப்பிட்டுட்டு பால் குடிச்சா திருப்தியா இருக்கும். எனக்குன்னு ஒரு மாம்பழம் எங்கேயாவது இருக்கும் பார். போய் தேடிக் கொண்டுவா '' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஸ்வாமிகள்.

முதலியார் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தபோது  கடைத்தெருவில்   எங்கோ   ஒரே  ஒரு கடையில்  ஒரு மாம்பழம் கிடைத்தது. அந்த கடைகாரர்   சேஷாத்ரி ஸ்வாமிகள்  பக்தர்.   ஸ்வாமிகளின்  படம் வைத்து பூஜை செய்பவர். 

 கடைக்காரரிடம் விஷயம் சொன்னபோது  அவர்     ' ஐயா,  யாரோ இதைக்  கொண்டு வந்து இன்று தான் என் கடையில்  கொடுத்தார்கள். ஒரே ஒரு பழம் அதை எப்படி விற்பது?

எனவே ஸ்வாமிகள்   படத்துக்கு   நைவேத்தியம் செய் து இதோ தனியாக வைத்திருக்கிறேன்.  நீங்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு மயிர்க்கூச்செறிகிறது.   ஆஹா  ஸ்வாமிகளே  மாம்பழம் வேண்டும் என்று கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  எனக்கு  மனதுக்கு  ரொம்ப திருப்தி. காசு வேண்டாம். எடுத்துச் செல்லுங்கள் ஸ்வாமிகளிடம் சேர்ப்பியுங்கள் '' என்கிறார் கடைக்காரர்.

ஒருநாள் ஸ்வாமிகள் நடுத்தெருவில் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்.  இதைக்  தெருவில் சென்றவர்கள் எதற்கு?   யாருக்கு நமஸ்கரிக்கிறார் என்று புரியாமல் தூர நின்று   வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஒரு  பக்தர்  துணிந்து   கிட்டே சென்று  '' ஸ்வாமி,  எதற்கு இந்த நமஸ்காரம்? '' என்று பவ்யமாக கேட்டார்.

''தெரியலேயா உனக்கு. இதோ பார். ஏகாம்பரநாதர் காஞ்சிபுரத்தில் ரதத்தில் ஏறுகிறார். கண்கொள்ளாக் காட்சி.    நீயும் பார்.  வா.   நமஸ்காரம் பண்ணு'',

நாற்பது ஐம்பது நமஸ்காரங்கள் பண்ணினார் ஸ்வாமிகள்.  எங்கேயோ இருக்கும்  காஞ்சிபுரத்தில்  கோலாகல உத்சவம்.  காஞ்சியில் ஜே ஜே என்று கூட்டம். ரதோத்ஸவம். ஏகாம்பரேஸ்வரர் பவனி வந்துகொண்டிருந்தார்.
எப்படி  ஸ்வாமிகள் கண்ணுக்கு  ஏகாம்பரநாதர்  காட்சி அளித்தார்?

திருவண்ணாமலை எங்கே காஞ்சிபுரம் எங்கே? உங்களுக்கும் எனக்கும்   ஏகாம்பரர் தரிசனம் கிட்டுமா?  

ஸ்வப்ன திருஷ்டி என்றால் கனவில் தோன்றுதல். ஒருவர் கனவில்   ஒரு மனிதரோ,  கடவுளோ  காட்சி தந்து  தோன்றுவதோடு மட்டுமல்ல. எந்த விஷயம் அறிவிக்க வேண்டுமோ அதற்கான விஷயத்தையும்  அறிவித்து, தெரிவித்து விடுவதும்  சொல்வதும்  உண்டு.   நிறைய  இது பற்றி கேட்டிருக்கிறேன். 

இந்த மாதிரி  கனவுகள்  எல்லோருக்கும் வருவதில்லை,   குறிப்பிட்ட மனிதர்களுக்கு தக்க சமயத்தில் உண்டாகும்.  ஸ்வாமிகள்  எத்தனையோ பக்தர்கள்  எங்கோ இருப்பவர்கள்  கனவில் தரிசனம் தந்து ஏதேனும் சொல்வது உண்டு.  

 இந்த சக்தி ஸ்வாமிகளுக்கு அதீதமாக உண்டு. கனவில் வரும் காட்சிகள் நிச்சயமாக நேரில் நடப்பது போல் தோன்றுவது உங்களுக்கு தெரியுமே. கனவு நிஜமாவது உண்டு. நிறைய பேர் அனுபங்கள் இருக்கிறது.

சில பக்தர்களுக்கு கனவில் நடந்த ஸ்வாமிகள் சம்பந்தப் பட்ட சம்பவங்கள் சிலவற்றை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


SURDAS

 


ஸூர்தாஸ்   --    நங்கநல்லூர்   J K  SIVAN 

31.  நான் உன்னை முதல் முதலாக பார்த்த போது .......

சூரியன் வெகு மும்முரமாக கண்ணில் பட்டதை எல்லாம் தங்க நிறமாக்கிக் கொண்டிருந்தான். ஆகவே அது பொன்  மாலை வேளை. தங்க  ரஸவாத  வித்தை  எதிலும்  காணப்பட்டது.    
காற்று சுகமாக வீசியது. பிருந்தாவன சிறுவர்கள் குதூகலமாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடை எல்லாம் வியர்வை. தெருப்புழுதி.   அவர்கள் நடுவிலே  அதோ பாருங்கள்   கண்ணனை.  அவன் இடுப்பில் மஞ்சள் வஸ்திரம். பொன் வெயிலில் அவனது மஞ்சள் ஆடை பளபளக்கிறது.புத்தி விளையாட்டில் இருப்பதால் புல்லாங்குழலுக்கு  ஒய்வு.  இடுப்பில் தலையை நீட்டிக்கொண்டு ஆடையில் செருகப்பட்டு இருக்கிறது. ஒரு கூட்டம் அவனைச் சுற்றி  எப்போதும் உண்டே.

ஓஹோ, கையில் சாட்டை எனும் கயிற்றால் பம்பரத்தை சுற்றி வேகமாக அதை சுழல வைக்கிறார்கள். பம்பர விளையாட்டா?

அவன் தலையில் அழகிய ஒரு மயில் பீலி இறகு , பல வண்ணங்களோடு கண்ணைப்பறிக்கிறது. அவன் குனிந்து நிமிர்ந்து ஓடி ஆடும்போது அவன் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் ஆடுகின்றன. சூரிய ஒளியில் பல சூரியன்களாக மின்னுகிறது.

ஏதேதோ சிரிப்பாக பேசுகிறான் போல் இருக்கிறது.    கூட இருக்கும் அத்தனை பையன்கள் முகங்களும் பிரகாசித்து ஆனந்த மயமாக காட்சி அளிக்கிறதே. கிருஷ்ணன் வாய் கொள்ளாமல் சிரிக்கும்போது அவன் முத்துப் பல் வரிசையின் அழகை எந்த வார்த்தையை உபயோகித்து என்னால் எழுத முடியும்?  உங்கள் மனத்தில் நீங்களே கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய சந்திரன்களை பூரண ஒளியோடு வாயில் வைத்துக்  கொண்டிருக்கிறானோ? உடம்பு பூரா கமகமக்கும் சந்தன பூச்சு.

விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனின் பார்வை யதேச்சையாக சற்று தூரத்தில் இருந்த யமுனா நதிக்கரை மேல் சென்றது. யார் யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ...... அது யார் ?

நெற்றியில் மஞ்சள் திலகம்... தொள தோளவென அவளை சுற்றிக்கொண்டு இருந்த ஆடை. விரிந்த பல கொசுவங்கள் கொண்ட நீண்ட பாவாடை இடையில் பாந்தமாக அணிந்திருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் நீல நிறத்தில், அவனுக்கு பிடித்த வண்ணத்தில், மேலே உடலை மறைத்த சட்டை. நீண்ட அலை அலையாக கூந்தல் பின்னல் கருநாகம் போல் அவள் நடைக்கேற்ப நெளிகின்றதே . அடேயப்பா, இவ்வளவு அழகா? அழகிய மற்ற பால்காரி களுக்கிடையே அவள் தனித்து தென்படுகிறாளே. வெண்மேக கூட்டத்திடையே தங்க நிலா போல அல்லவோ இருக்கிறாள்.

கிருஷ்ணனின் ஊடுருவிய பார்வை அந்த பெண்ணின் பார்வையை சந்தித்தது. கடல் போன்ற அன்பும் ப்ரேமையும் கொண்டு அவள் பார்வையை கிரஹித்தது. அவள் பார்வையிலிருந்து அது உள்ளே இறங்கி அவள் மனதை நிரப்பியது. அதே வேகத்தில் திரும்பி அவள் மனத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மனதோடு இணைத்தது. என்ன அதிசயம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்கிறது! கண்ணன் அவளைப் பார்த்துக்க்க்க்க்க்க்க்க் கொண்டே இருந்தான்.

சூர்தாஸ் கிருஷ்ணன் ராதையை முதல் முதலாக பார்த்ததை வர்ணிக்கிறார்.

Krishna went playing in the lanes of Braj,
a yellow silk garment round his waist,
holding a top and a string to spin it with,
a crown of peacock-feathers adorning his head
his ears with charming ear-rings decked,
his teeth flashing brighter than the sun's rays,
his limbs anointed with sandalwood-

On the Yamuna bank he chanced to see Radha;
a tika mark of turmeric on her brow,
dressed in a flowing skirt and blue blouse,
her lovely long wreathed hair dangling behind,
a stripling, fair, of beauty unsurpassed
with he a bevy of fair milkmaids:

Krishna's eyes met her's;
love woke in his heart,
says Suradasa, bewitched by her,
he gazed and gazed.

 

PILLAIYAR

 

பிள்ளையாரப்பன்.....   நங்கநல்லூர்  J K  SIVAN 

எல்லோர் மனத்திலும்  எளிதில் இடம் பிடித்த  தெய்வம்   பிள்ளையார்.   எவனுக்கோ ஒருவனுக்கு அது களிமண் என்று தோன்றியது அவன் மண்டையில்  அது  இருப்பதின் நினைவால்.  களிமண் என்பது ஒருவகையில் சரிதான். மண்ணுலகே களிக்கும்  தெய்வம் பிள்ளையார்.  யானையை,  குரங்கை, கடலைப் பிடிக்காத குழந்தை இதுவரை பிறக்கவில்லை.  நாமெல்லாம் இது மூன்றையும் எத்தனை மணி நேரங்கள் நமது வாழ்வில் இது வரை பார்த்திருக்கிறோம் என்று கணக்கெடுத்தால், தூங்கிய, படித்த, உண்ட, நேரம் தவிர அதிக நேரம் இதுவாகத்தான் இருக்கும்.


எங்கள் வீட்டில் ஒரு இருநூறு வருஷ பிள்ளையார் இருக்கிறார். அவரைப் பற்றி முதலில் சொல்லிவிட்டு  ஒரு நீளமான  கட்டுரை பிள்ளையாரைப் பற்றி தொடரும்.   

எங்கள்   வீட்டு இருநூறு வருஷ பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாத அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர்.  நான் எப்போதிலிருந்து அவரை அறிந்தேன்?

எனக்கு நினைவு தெரிந்தது முதல் எங்கள் வீட்டில் தான் இருந்தார். 1942-44 களில் நாங்கள் திருவல்லிக் கேணி யில்- குடியிருந்தபோது எனக்கு  3 -4 வயதில்  ஒன்றும் தெரிந்து கொள்ள்ள இயலவில்லை. முதல் உலக மகா யுத்த காதில் எம்டன் எனும் நீர் மூழ்கி ஜெர்மனி கப்பல் சென்னையை தாக்க முற்பட்டது. அதன் குறி தப்பி ஹை கோர்ட் அருகே சுவற்றில் குண்டு வெடித்து விழுந்தது. அந்த இடத்தை இன்னும் மெரினா கடற்கரை சாலையில் உயர்நீதி மன்ற வளாக பாதுகாப்பு சுவற்றில் ஞாபகார்த்த சின்னமாக ஒரு கல்வெட்டுடன் பார்க்கலாம். 

இரண்டாம் உலக மஹா யுத்த காலத்தில் ஜப்பானிய விமானங்கள் தாக்கும் என்ற பயம் சென்னையில் இருந்தது. சிங்கப்பூர் விழுந்து விட்டது. அந்தமான் தாக்கப்பட்டது.. எந்த நேரமும் ஜப்பானியன் நம்மை எல்லாம் அழிக்க வருகிறான். திருவல்லிக்கேணி அடையார் மைலாப்பூர் எல்லாம் ஜப்பான்காரன் குண்டினால் அழியும் என்று ஒரு புரளி, பீதி, மக்கள் மனதில் விழுந்து பல குடும்பங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேறின. வெள்ளைக்காரன் ஆட்சியில் மிக கடுமையான சோதனை காலம். ARP (AIR RAID PRECAUTION) என்று முன்னெச் சரிக்கை விளம்பரங்கள் ஒலிபெருக்கி வழியாக தெருத்தெருவாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டே போகும். கும்பலுக்கு ஆள் சேர்க்க எம். கே. தியாகராஜரின் சினிமா பாடல்கள் பாடிக்கொண்டே போகும்.

அவசரமாக   சென்னை  கடலோர பகுதி மக்கள் குடி பெயர்ந்தனர். 
 எங்கள் குடும்பமும் அதில் ஒன்று. என் தாய் படிக்காதவள்    ''நாங்கள் ஏவாகேஷன்'' (evacuation தான் அவளால் சொல்லப்பட்ட ஆங்கில வார்த்தை) போது கட்டின துணியோடு வடபழனி முருகனிடம் வந்து விட்டோம்'' என்பாள்.

வடபழனி கோவில் அருகே ஒரு அக்ரஹாரம் போல ஒரு பிள்ளைமார் தெரு. தெரு கோவில் குளத்தை ஒட்டி இருந்தது. மண் தெரு. எல்லா வீட்டிலேயும் ஓடு வேய்ந்து இருக்கும். திண்ணைகள் உண்டு. அதில் சாயந்திரங்களில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். தெருவில் நாங்கள் விளையாடுவோம். பெரிய பெரிய நில சுவான்தார்கள், கர்ணம் , முன்சீப், போன்ற உத்யோகங்கள் வகித்த பணக்கார சைவ பிள்ளைமார்கள் சொந்தக் காரர்களோடு வாழ்ந்த இடம். ரெங்கநாதம் பிள்ளை வீட்டில் எங்களுக்கு இடம் கிடைத்தது. வாசலில் பெரிய மகிழ மரம் விளையாட வரப்பிரசாதமாக இருத்தது. அதன் நிழலில் பகலில் நிறைய விளையாடியிருக்கிறேன். எதிர்த்த வீட்டில் பத்மநாப பிள்ளை, முன்சீப். அவர்களுக்கு புத்ர பாக்யம் இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம் அவர்கள் வீட்டில் சலுகை. நிறைய தின்பண்டங்கள் கொடுப்பார்கள் . எனக்கு சற்றே மூத்தவன் அண்ணா   ஜம்புநாதன். என் தாத்தா பெயர் கொண்டவன். பள்ளிக்கூடத்தில் ஜம்புலிங்கமானவன். அவனுடன் தான் எனக்கு எப்போதும் சண்டை விளையாட்டு ரெண்டுமே.  அவன் 69 வயதில்  உலகை  விட்டு மறையும் வரை  ஏதேனும் ஒரு சண்டை பிடித்த்துக்கொண்டே இருந்தவன்.  ஜெயிப்பது எப்போதும் அவன் தான்.   நாங்கள் விளையாடும் இடம் வடபழனி ஆண்டவரின் கூரை வேய்ந்த கோவில். கோவணாண்டி வடபழனி முருகனும் நாங்களும் தான்.  கோவிலில்  வேறு யாரும் இல்லாத காலம். சுந்தர குருக்கள் வீடு அருகிலேயே. அவரும் அவர் அப்பாவும் தான் பூஜை செய்யும் அர்ச்சர்கர்கள். சுந்தர குருக்கள் குரல் அற்புதமாக கணீரென்று இருக்கும். கோவில் நந்தவனம் மரங்கள் சூழ்ந்து இருக்கும். கோவிலுக்கு கதவு கிடையாது. அது நாங்கள் ஓடியாடி விளையாடும் ஒரு அழகான இடம்.

என் தாத்தா ஜம்புநாத சாஸ்திரி, பாட்டி சீதாலட்சுமி இருவரையும் நான் பார்த்ததில்லை. படத்தில் எப்போதோ சிறுவயதில் பார்த்தது. மீசை தாடியோடு பாரதியாரை பார்க்கும்போது தாத்தா ஜம்புநாத சாஸ்திரி ஞாபகம் வரும். பாரதி நெற்றியில் குங்குமத்தில் பெரிய நாமம் தரித்திருப்பார். தாத்தா விபூதி பட்டை. இன்னும் பெரிய தாடி, முறுக்கி விட்ட மீசை, கன்னங்களில் முனைகளில் புஸ் என்று பந்தாக சுருண்டு கம்பீரமாக இருப்பார். தலையில் முண்டாசு.  
முகத்தில் தெரிவது பரந்த நெற்றி மட்டுமே.  அதில் கீர் சந்தனம் விபூதி கீற்று, குங்குமம். தீர்க்கமான மூக்கு மீசைக்கு மேலே தனித்து நிற்கும். அடர்ந்த கம்பளி பூச்சி புருவங்களின் நிழலில் ஆழமான பார்வை .. கூர்மையான கண்கள். காதை மறைந்த முண்டாசு. கழுத்தை மறைத்த கருப்புகோட்டு அதில் வரிசையாக நிறைய பெரிய பெரிய இரும்பு பொத்தான்கள். இப்படி ஒரு பழுப்பேறிய கருப்பு வெள்ளைப்படம் ஒன்று தான் என் தாத்தாவை எனக்கு காட்டியது. அதுவும் எப்போதோ எப்படியோ காணாமல் போனது. வீட்டில் ஒரு பாணா தடி ஆறு  அடி  நீளத்தில்   கனமாக  சுவற்றில் சாற்றி வைத்திருந்தது நினைவிருக்கிறது. ஒருபாத ரோட்டு கட்டை.  மரத்தில் குமிழ் வைத்து அதை கால் கட்டைவிரல் ரெண்டாவது விரல் இடையில் செருகி மரச்செருப்பின் இடையே ஒரு தோல் நடுவில் குறுக்காக பட்டையாக செல்லும். அது தான் பாதம் அந்த மரக்கட்டை காலணி நழுவாமல் பிடித்துக் கொள்ளும்.

எங்கள் வீட்டு பிள்ளையார் தாத்தாவின் அப்பா, என் கொள்ளுத்தாத்தா  மிருத்யுஞ்சய அய்யர் காலத்தில் இருந்து இருக்கிறார். எங்கள் தாத்தாவிற்கு பிறகு என் தந்தையிடம் வந்தது, தற்போது என் தமையனிடம்  உள்ளகரத்தில்  இருக்கிறார்.   அவரை  வணங்கி  எத்தனையோ  பரிக்ஷைகள் எழுதி இருக்கிறேன். எனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டிருக்கிறேன். தந்திருக்கிறார். அவருக்கு என் தந்தையார் தாம்பாளத்தில் வைத்து அபிஷேகம் செய்து வஸ்திரம் உடுத்தி (ஒரு சின்ன பிள்ளையார் துண்டு, சிவப்புபார்டர் கரை யுடன்) பூணல், சந்தனம், குங்குமம், விபூதி  அணிவித்து  பூஜை செய்வது நினைவில் இருக்கிறது.  

அற்புத விநாயகர். எங்கள் குடும்ப கஷ்டம் நஷ்டம், நல்லது  கெட்டது அனைத்தும் தெரிந்தவர். எங்களை இன்னும் வாழ்விக்கும் வள்ளல்.   சொல்ல சொல்ல ஊற்றுபோல் பழைய விஷயங்கள் நிறைய தோன்று கின்றதே.

தொடரும்  


Tuesday, March 30, 2021

NOSTALGIC THOUGHT

 



அது   அக்காலம்......   நங்கநல்லூர்   J K  SIVAN 

காலையில் பேப்பரை திறந்தால் அதிகமாகும்  கொரோனா கேஸ்கள் பற்றி சொல்கிறது. குழந்தைகள் வெளியே சென்று விளையாட முடியவில்லை.  பொது இடங்களில் சென்று  விளையாட வழியில்லை. வீட்டிலே இருந்தாலும்  ஒவ்வொன்றின் கையிலும் மொபைல்  டிஜிட்டல் கேம்,  டிவி  பார்ப்பது குறைந்து விட்டது. புத்தகம் படிக்கும்  பழக்கம் பறந்து போய்விட்டது..  ஓடி ஆடி  விளையாடும் குழந்தைகள் குறைந்துவிட்டன.  
  
75 வருஷங்களுக்கு  முன்பு எனக்கு   விளையாட  நிறைய  இடம் இருந்தது.  பையன்களும் நிறைய பேர்  அண்டை அசலில் இருந்தார்கள். வீட்டிலும்  யாரும் தடுக்கவில்லை. எல்லோருமே  அநேகமாக   சட்டையில்லாமல் தான்  அரை நிஜாரோடு சுற்றினோம். காலில் செருப்பு எவருக்குமே  இல்லை.
 ஓடிப்பிடிப்பது.  கில்லி  தண்டு, பச்சை குதிரை தாவுவது. ஒளிந்து கொண்டு பிடிபடும் ''டீயாண்டோர்'' (இன்று வரை இதற்கு அர்த்தம் தெரியாது. ஆனால் விளையாட்டு விதிகள் நினைவிருக்கிறது).  நெருப்பு பெட்டிக ளுக்கிடையே  நீண்ட  கம்பியையோ,  காற்றாடி மாஞ்சா  நூலோ  இணைத்து,  தூர  ஒரூ முனையில் ஒருவன் மற்றொரு முனையில் மற்றொருவனோடு  பேசுவோம்.  நாங்கள் கண்டுபிடித்த டெலிபோன் இது.

கில்லி தாண்டு  விளையாட்டில் ஜான் பாஷா கூரான  இரு முனைகளை கொண்ட குண்டு மரத்துண்டு ஒன்றை வேப்பமரத்துக் கிளையில்  செதுக்கிக் கொண்டு வருவான் அதுவே கில்லி.  ஒரு சிறு குழி தோண்டி அதில் கில்லியை படுக்க போட்டு, குச்சியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால்  வேகமாக கில்லியை  குழியை விட்டு நெம்பி தள்ளி  யார்  அதிக தூரம் தள்ளுகிறார்களோ. அவர்கள் தப்பினார்கள். அருகிலேயே விழுந்தால் அவ்வளவு தான். அந்த துரதிர்ஷ்ட சாலி ''காஞ்சி காய்ச்ச்சப்' படுவான்.

குழியைச்  சுற்றி ஒரு வட்டம். அதற்குள் கில்லியை போடவேண்டும்.  குச்சியாளன்  அதை தடுக்கவேண்டும். வட்டத்துக்குள் விழுந்தால்  அவன் அவுட்.  வெளியே விழுந்தால். அங்கிருந்து கில்லியை அடித்து தூர அனுப்புவார்கள்.  கில்லியை அடிக்க ஒரு தடிமனான  ஒன்றரை அடி நீள  குச்சி தான் தண்டு. இந்த விளையாட்டில் முதலியார் வீட்டு பையன்  பாலன்  டெண்டுல்கர்.,  கில்லியின் ஒரு முனையை  கீழே வேகமாக  தட்டி  மறு முனையோடு அது மேலே எழும்பும்போது குறிபார்த்து  லாகவமாக அதை குச்சியால்  அடிப்பான். விர்ரென்று பறக்கும்.  பல வீரர்கள் அதை பிடிக்க முயல அவர்கள் தலைக்கு மேல் அது சிக்ஸர்  பிரயாணம் செய்யும்.  அது விழுந்த இடத்தில் இருந்து கில்லியை   எதிர்கட்சி  யாளன்  குழியை நோக்கி  வீசுவான். வட்டத்தை விட்டு வெளியே எங்கோ விழுந்த கில்லி  மீண்டும் அடி பட்டு  பறக்கும். இப்படியே  வெகு தூரம் கில்லி செல்ல செல்ல,  'தோற்றவன் ''கத்திக் காவடி நவாப்பு சாவடி'' என்று கத்திக்கொண்டே தலைக்கு மேல்  குச்சியை பிடித்துக்கொண்டு நொண்டிகொண்டே  வர  வேண்டும். . சும்மா சொல்ல கூடாது. நுரை தள்ளிவிடும்  ஓடி ஓடி.

பச்சை குதிரை விளையாட்டில்  முதலில்  சின்ன பையன்கள், குள்ளமானவர்கள் குனிந்து முழங்காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு  நிற்பார்கள். மற்றவர்கள்  ஓடி வந்து அவர்கள் முதுகில் கைகளை ஊன்றி  அவர்களைத்  தாவ வேண்டும். கால்கள் குனிந்தவன் உடலில் படக்கூடாது.  தாவும் போது தவறி விழுந்தால் அவுட்.  சின்ன பையன்களை தாண்டி விட்டு  அடுத்து   பெரிய பையன்களை  தாவுவது சிரமம்.  கொஞ்சம் கொஞ்சமாக  குனிந்தவன் நிமிர்ந்து கொண்டே வருவான். அவனை அப்போது தாண்டுவது முடியாத காரியம்..

கபடி ஆடுவோம்.  காற்றாடி சீசனில் கலர் கலராக  காற்றாடிகள்  பறந்து மரங்களில் சிக்கும். யார் வீட்டு  மொட்டை மாடியிலாவது அறுந்து விழுந்து அவர்கள் வீட்டிற்குள்  மாடி ஏறி திட்டு வாங்குவது வழக்கம். இருட்டு வேளைகளில் விளையாட்டு நின்று விட்டு,   கூட்டமாக அமர்ந்து கதை கேட்போம்.

சொக்கலிங்கம்  பேய்க் கதைகள் சொன்னால் மெய் சிலிர்க்கும்.  அடுத்து உட்கார்ந்திருப்பவனை பார்க்கும் போதே  அவன் கால்  தரையில் ஊன்றி இருக்கிறதா என்று பார்க்க தோன்றும்.  பேய்க்கு தரையில் கால் பாவாது என்பான் சொக்கலிங்கம்.  திகில் மன்னன் சொக்கலிங்கம். கோடம்பாக்கத்தில் ஒரு புத்தக பிரஸ் ஒன்றில்  பைண்டிங்  வேலை செய்வான். காலை வேளைகளில் மோரும்  கொடுக்காப் பளிக் காயும் விற்பான். அவனிடம்  கதைகள் கேட்டால்  மரங்கள், நிழல்கள்  எல்லாம்  பேயாக தோன்றும். காற்று சத்தம் பேயின்  ஓலமாக  கேட்கும். இரவு தூக்கம் பாதிக்கும். யாராவது அருகில் இருந்தால் தான் படுப்போம்.  தனியாக படுப்பது என்பது   நினைத்துக்கூட  பார்க்க முடியாத ஒன்று.  கரெண்ட் இல்லாத காலம்.  எங்கும்  லாந்தர் விளக்கு. வீட்டில்  நிறைய நிழல்களுடன் ஹரிக்கேன் விளக்கும்.  வெளிச்சத்தை விட இருட்டு எங்கும் அதிகம். பேய் கற்பனைக்கு இதை விட  தோதாக  ஒரு சூழ்நிலை கிடைக்குமா?

வீட்டில் ஏதாவது ஒரு வேஷ்டியோ நீளமான துண்டோ  கிடைத்தால்  அதை தலைக்கு மேலே இரு கைகளிலும் பிடித்துக்  கொண்டு வேகமாக ஓடும்போது அது  நீளமாக  பாரசூட்  குடைபோல் காற்றில் விரியும். இது ஒரு விளையாட்டு. வேகமாக ஓடினால் தான் காற்றில் அது நீளமாக  தலைக்குமேலே  விரியும்.

கைகளை ஸ்டீரிங் வீலாக  வளைத்து வளைத்து  அசைத்து  வாயில்  கார்  சப்தம்,   சக்கரம்,பெட்ரோல் இல்லாத கார்  இப்படி   ஒட்டியிருக்கிறேன். ஹாரன் சப்தம்  வாயில்  ஒலித்துக்கொண்டு  என்னோடு  ஓடும் நண்பர்கள் இருந்தார்கள். வீட்டில்  எதாவது சாமான் வாங்கி வா என்று கடைக்கு அனுப்ப மாட்டார்களா என்று காத்திருப்பேன். உத்தரவு கிடைத்தால் என் கார்  ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சத்தம் போட்டுக் கொண்டு கடையை நோக்கி  ஓடும். சாமானோடு திரும்ப வந்து வீட்டில்  எங்காவது ஒரு மூலையில் கார் நிற்கும். என் சட்டையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடி வருபவன் தான்  காரில் என்னோடு சக பிரயாணி.

யார் வீட்டிலாவது  ஊஞ்சலில்  (அனேக வீடுகளில் அப்போதெல்லாம் ஊஞ்சல் இருந்தது)   உட்கார்ந்து  ரயில் மாதிரி சப்தம் செய்து  ஸ்டேஷன்கள் நிறைய  கடந்து  அங்கங்கே பிரயாணிகள் மூட்டை முடிச்சோடு   இறங்கி ஏறி  விளையாடியது மீண்டும் இனி  நடக்கப்போவதில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால்,  ரயில் ஓட்டுபவன், பெஞ்சில் நடுவில் அல்லது ஒரு ஓரத்தில் இருந்து ரயில் என்ஜின் மாதிரி கத்திக்கொண்டு  சைதாப்பேட்டை, அதை அடுத்து மாயவரம், என்று மனம் போன படி எல்லாம்  ஊர்  பேர் சொல்வான். அவனுக்கு எது எங்கே இருக்கிறது என்று தெரியாது. பேர் மட்டும் கேட்டிருப்பான். ஒருவன் டிக்கெட் கொடுப்பான். ஓசிப் பயணம் கிடையாது.

இரும்பு வளையங்கள்  கொண்டு வந்து  அவற்றை  இயக்க  கம்பிகளின்  முனையில்  U  மாதிரி வளைத்து  U வில் வளையத்தை வேகமாக தள்ளி வண்டி விடுவோம். இதில் ரேஸ் உண்டு.  ஜெயித்தவனுக்கு  எத்தனை  தீப்பெட்டி  லேபில் என்று கணக்கு உண்டு. ' மேச்சஸ்'   என்று பெயர் அந்த லேபிலுக்கு. இதிலும் ஜான் பாஷா  நிபுணன். அவன் சக்கரம்  கீழே  சாயவே சாயாது . வேகமாக ஓட்டிக்கொண்டே ஓடுவான். சில பேர்  சிகரெட் பாக்கேட்களின்  அட்டைகளை வெட்டி நிறைய சேர்த்து வைத்திருப்போம்.  என்னிடம்   இருந்தவைக்கு  பாசிங்க்ஷோ, வில்ஸ்,  சார்மினார்  என்றெல்லாம்  பல பெயர்கள் உண்டு .   பேர்கள் இப்போது மறந்து விட்டது. கோபால கிருஷ்ணன்  எங்கள்  வீட்டிற்கு மூன்றாவது வீடு. பிள்ளையார்  கோவிலுக்கு பின்னால் இருந்த  கோவில் அர்ச்சகர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் பையன். நிறைய சிகரெட் பாக்கெட்டுகளின்  பேர் ஒப்பிப்பான்.  அவன் அப்பா காதில் பட்டதில்லை.  விழுந்திருந்தால் தோலை  உறித்திருப்பார். ,

பம்பரம் சாட்டை ஒரு காலத்தில் போட்டி நடக்கும்.  குண்டு பம்பரங்களில் ஆணி  கூறாக கீழே நீட்டி இருக்கும். சாட்டை என்ற கயிற்றை பம்பரத்தின் வயிற்றில் சுற்றி இழுத்து விடுவான். அந்த சுழற்சியில்  பம்பரம் கீழே விழுந்து சுற்றும். அதை கையில் ஏந்துவது ஒரு கலை. கையால் அதை சுற்றும்போது ஏந்தி அடுத்தவனின்  சுழலும் பம்பரத்தை அது தாக்கி.  அந்த மற்றவன் பம்பரம் செத்து விழும். அதை ஒரு வட்டத்தில் வைத்து  மற்ற பம்பர தாரிகள் அதன் மீது   தங்கள் பம்பரத்தை சுழற்றி குத்து வார்கள். அது ரணகளப்படும் . அதன் சொந்தக்காரன் கண்களில் ரத்தம் சொட்டும். கையை உயர்த்தி பம்பரத்தை கயிற்றிலிருந்து விடுவித்து குறி பார்த்து  அந்த  அப்பாவி பம்பரத்தை குத்தி குதறுவது   ஒரு வீர விளையாட்டு.

பெண்கள்  தாயக்கட்டை, பல்லாங்குழி, ஸ்கிப்பிங்,   ஏழு கல்,  அம்மானை, மண்ணில் பள்ளம் தோண்டி  புளியங் கொட்டையை புதைத்து மேடுறுத்தி, இரு கைகவிரல்களை கோர்த்துக்கொண்டு  ஏதாவது ஒரு இடத்தில் தொபீர் என்று வைக்கவேண்டும். அந்த பகுதியில் புளியங்கொட்டை கிடைக்கா விட்டால் மீண்டும்  தேடல்.  இது மிகவும் சுவாரசியமாக விளையாடுவார்கள்.  ஏரோப்ளேன்  என்று  பாண்டி  ஆட்டம். ஒரு மரத்தடியில் நடக்கும்.   கண்களை துணியால் கட்டிக்கொண்டு  பிடிப்பது கொஞ்சம் டேஞ்சர் தான்.   ஆனால்  போடமாட்டார்கள், கையால் துழாவிக்கொண்டே  சுற்றி சுற்றி நடப்போம்.

வீட்டிலோ  பள்ளியிலோ  விசேஷம் என்றால்  பெண்கள்  இடுப்பில்  ஒட்டியாணம் கட்டிக்கொண்டு  கும்மி அடிப்பது விநோதமாக இருக்கும்.  நடுவில் கூடையை வைத்து சுற்றி சுற்றி வந்து கைகோர்த்து  கை தட்டி பாடிக்கொண்டு   பச்சை மலை  பவழ மலை  எங்கள் மலை அம்மே   பாடி ஆடுவார்கள்.  எல்லா பெண்களுமே பூ தொடுப்பார்கள்.  தலை நிறைய  பூ வைத்திருப்பார்கள்.

உட்கார்ந்தால்  பிடிப்பாயா, நின்றால் பிடிப்பாயா  என்று அகப்பட்டுக்கொண்ட ஒருவனை பிடித்து ஆப்ஷன் கேட்டு அவனைத் திணற அடிப்போம்.  நின்றால் பிடிப்பேன்  என்று சொன்னால்  எல்லோரும் நிற்பார்கள். யாரையாவது பிடிக்க வருவதற்குள் அவன் அமர்ந்துவிடுவான்.  அதேபோல் உட்கார்ந்தவனைப் பிடிக்க வரும் முன்பு அவன் சட்டென்று எழுந்து விடுவான்.

இப்போதெல்லாம் உட்காரவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லையே.

தெருக்கூத்து  சில தினங்கள் பனைமரத் தோப்பில் நடக்கும். ஐந்து ஆறு மணிக்கே  கூட்டம் சேர ஆரம்பித்து விடும்.  இருட்டிய பிறகு, தீ வட்டி வெளிச்சத்தில் அல்லது வசதி உள்ள இடங்களில் பெட்ரோமாக்ஸ்  விளக் கொளியிலும்  கூட  கூத்து நடைபெறும். அனைவருமே ஆண்கள் தான்.. பெண்கள் வேஷம் போட்டுக் கொண்டு ஆடுவார்கள் பாடுவார்கள்.  ஜெயராமன்  என்ற  எங்கள் வீட்டுக்கு துணி வெளுப்பவன் தான் கிருஷ்ணன். முன் பற்கள்  மூன்று இல்லை. ஐந்தடி  உயரத்தோடு முதுகு கொஞ்சம் கூனி  இருக்கும்.  முன் வழுக்கை தலைக்கு பின் புறம்  கழுத்து வரை  சுருள் சுருளாக முடி. , சூம்பிய சுருங்கிய  மாவடு  முகத்தில் நிறைய  பச்சையும்  நீலமும்  சாயம் பூசிக்கொண்டு, தலையில் ஜரிகை கிரீடம் வைத்துக்கொண்டு,

முழுக்கை சட்டையின் மேலே  அங்கங்கே  கை, கழுத்து  மார்பு எல்லாம் மறைக்க எல்லா வித நிற பட்டை பட்டையாக  மணிகள் கோர்த்த அட்டை மாலை, கவசம்  அணிந்து, காதை சுற்றி  ஒரு குண்டலம் மாட்டிக்கொண்டு  கையில்  ஒரு மூங்கில் குச்சி (அது தான்  புல்லாங்குழல்)   கீச்சு குரலில் பாடிக்கொண்டே  சுற்றி சுற்றி வருவான்.  கழுத்தில்  காகிதப்பூ மாலைகள் நிறைய அணிந்திருப்பான். சட்டையை உள்ளே விட்டு  வேஷ்டியை இருப்பில் வரிந்து முடிந்து  கீழ்ப் பாஸ்  கட்டிக்கொண்டு இருப்பான். இது தான்  பீதாம்பரம்.  ஒவ்வொரு காட்சியில் இடைவெளியில்  பனை மரத்தடியில்  பீடி குடிப்பான். கிட்டேயே வரமுடியாத துர்கந்தம். ஜெயராமன்  நிறைய  நாட்டுப் பாடல்கள் மனப்பாடம் பண்ணி  பாடுவான். அல்லி அர்ஜுனா, சுபத்ரா கல்யாணம், நல்ல தங்காள் பழையனூர் நீலி, அண்ணன்மார் கதை,   தெருக்கூத்து போடுவார்கள். இரவெல்லாம்  நடக்கும். நிறைய  பேர்  அசையாமல் உட்கார்ந்து பார்த்து கூடவே பாடி, ஆடி கைதட்டுவார்கள். பெண்கள்  அழுவார்கள். ஜெயராமன் மற்றவர்களுக்கு,   தான் கற்பனை செய்த  டயலாக்  சொல்லிக் கொடுப்பான். அவர்கள்  யாருக்குமே  எழுத  படிக்க தெரியாது. எனவே  வாயால் சொல்லி மனப்பாடம் செய்வார்கள்.

இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஞாபகம் வரும்போது  சொல்லட்டுமா?

LIFE LESSON

 

LIFE LESSON:
OVERCOME THE  FEAR  --  Nanganallur  J.K. Sivan 
I once read a powerful  speech and noted  the thoughts conveyed in my mind as it  appealed greatly to me.  It was about Fear.
We are afraid of so many things,  the most  important of it  being the Fear of Death.  Philosopher J.Krishnamurthy used to say 'Death  is a pleasant experience because it is not only inevitable but it also frees one of disease, worry, attachment, possession and feelings about anyone or anything.  We are afraid of expressing our views, disagreement and  do not  protest anything  we find wrong . Instead we get emotionally upset accepting any insult without opposing it.  Many fear God  which is unfortunate. God is never cruel and do not punish anyone.  In many houses, elders misguide the children that  God is watching their every action and will punish, even blinding the eye, if they did anything wrong.

Another fear generally  is about  what will happen after death.   Some feel they have sinned would be tortured and pushed into hell, where  hot burning oil would wait for them to be roasted. No. it is not so. May be  such a fearful idea was conveyed to  prevent one from committing wrongful actions and to put them on the righteous path.   

Every action has a simultaneous reaction. Good begets good  as love begets love.  'As you sow so you reap' teaches adequately instead of threats of torture and hell.

The life we live now on earth,  is in fact,  the heaven or hell -- both being  of our own  making and  creation. One can live happily and create very happy and pleasant moments of every second   lived,  for himself and others.  He has  option to  pollute  and cause an atmosphere of menace to  himself and others  as well.

Man is the form of what he thinks. His education,  personal background and character contribute greatly to what he is. A honest person, disciplined as he is, has nothing to fear and is always straight forward and bold. Nobody fears himself. Only those who have respect for their conscience and are aware fully of  their misdeeds,  show signs of restlessness and fear for consequence of what they intentionally and knowingly did , which they know is incorrect, improper or illegal.

No one is afraid of himself.  Fear is only towards  people and things other than him.  The  fear is restricted towards the  persons who  disagree with him, not  being of  same wave length and frequency, differing  with his way of thinking. The person who fears others, is much worried about the reaction of others and their behaviour.

Fear is an emotional product. We  need to handle it  carefully and calmly using our intellect.  We are afraid of voicing our views and express our objection when  we know we differ with what others say or do and feel it is not  right.

There is a fear of even opening the heart in love  because of the fear that the other person concerned can take advantage of it. There is fear of waking up in the morning for some as they have to face the world with the sunlight and this keeps them behind their covers until they can sleep no more.

Fear arises when one is not confident of himself or aware that he is  doing a wrong thing.  Thought patterns are originated and stagnated in one's mooladhaara chakra.  Mooladhaara means root base.   Our negative thoughts create the fear.  Until we  make an attempt  to overcome the negative thinking  fear will  continue to haunt.

Fear prevents  one  from acting boldly in situations where people dominate and have a right of their way. What to do then?  The solution is:

1. Keep the mind calm, whatever may come. Let anyone do whatever they wish and  let anything happen around me, I shall remain calm, quiet and composed. I shall be happy and cheerful.  Then fear is  weakened and cannot oppress..

2 Pray to  God.  I cannot do everything as I wish, and I have to accept what comes. Let me do what is right and good as my conscience prompts me to do.  That is all. Result is not something for me to worry about. It is His domain.

Every one is born with fear and eliminating it absolutely is impossible.  When we are emotional,  fear is part of it.  Fear  necessitates building up  character and teaches us how to act with courage. Fear is a natural response for  all  when things are uncontrollable.
''Fear of the unknown'' is the general term by which we refer to our fear for something  we haven't anticipated, or exposed to before.  Direct confrontation with  such fear is the best way to overcome  it.  It will prove beneficial  when confronted   head on , with  a particular person or situation  we are  afraid of.  Mental strength to encounter the source of our fear removes the scare and fear we have about the  person  or situation.

Always be prepared to face and deal  with failure. Confronting a fear is hard.  It may not  always lead to a successful end . Yet we have  to confront the  fear many times before we  conquer it.   Don't confuse fear with fate.

If you're afraid of failure, you might decide that it is your fate not to start  an action you  always wanted.  The truth is, you have control of your future. You have the power to determine the path you will take. Resist the temptation to hope things turn out for the best and leave it up to fate. This is the positive attitude. 

Don't let other people control you.  When someone feeds your fears, it kills your  enthusiasm, discourages you, brands you by telling you're inadequate or incapable of changing.  Avoid such people.

Surround yourself with people who want you to overcome your fears and reach your potential.   Courage can't come into play unless you have a fear to face and solve. By owning your feelings you've taken the first step toward gaining control over the situation.

Name your fear. Sometimes fear makes itself known immediately, clearly, and other times its more difficult to name the cause of those anxious feelings lurking in the back of your mind. Let your fear rise to the surface and give it a name.
Write it down. Writing down your fear is a way to officially admit that you have a problem you want to overcome. Keeping a journal is a good way to track your progress as you work toward conquering your fear. It can serve as a guide for the next time you've got a problem that needs to be solved. You can overcome fear by facing it every time it comes your way, and, once you decide to make up your mind, your fears will dissolve away.

Monday, March 29, 2021

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்     --   நங்கநல்லூர்    J K  SIVAN  


       குப்பை எல்லாம் இங்கே கொட்டுங்கோ 
                  
நமக்கு  ஒரு குணம் பொதுவாக.   நம்மை விட  சிலரை  அறிவில் குறைந்தவர்  என்று உதாசீனம் செய்வது. மஹான்கள் ஞானிகள்  எவரையும்  வித்யாசமாக பார்ப்பதில்லை.  மஹா பெரியவா எல்லோரையும்  ஒன்றாக அன்போடு ரக்ஷித்தவர்.  ஒரு  விவரம் சேகரித்தது.  எங்கோ யாரோ எழுதியது நான் படித்தது தான். 

ஒண்ணுக்கும் உதவாதவன் இவன் என்று  பிறர்  கரித்து கொட்டினாலும்   அவனும் நம்மைப் போல தான்  என்று  பாசத்தோடு, அன்போடு  ஏற்றுக் கொள்பவர்  மஹா பெரியவா.   பிறருக்கு நாசூக்காக  இதை புரியவைப்பவர். அது தான்  பேசும் தெய்வம் பெரியவாவின்  அன்பு, எளிமை .
இப்படி  எல்லோராலும்  இது தண்டம், எதுக்கும் உதவாத  ஒதியமரம்  என்று புறக்கணிக்கப்பட்ட  ஒரு  இளம் வயது வாலிபன்  எங்கும்  தனக்கு பிழைக்க  ஆதரவு இல்லாததால்  எல்லோருக்கும் சரணாலயமாக  விளங்கும்  மஹா பெரிய வாளின்  காஞ்சி மடத்துக்கு வந்து  அங்கே  ஏதோ தன்னாலான  கைங்கர்யம் பண்ணிக்கொண்டி ருந்தான்.

ஒருநாள்,   மேற்படி  வாலிபன்  வாழ்ந்த  ஊரைச்  சேர்ந்த ஒருவர்  மடத்துக்கு  பெரியவா தரிசனத் துக்கு வந்தார்.  அங்கே  தங்கள் ஊர்  உதவாக் கரை  பெரியவா மடத்தில் இருப்பதைப் பார்த்ததும்  ஆச்சசர்யம்.

அன்று அவருடைய  அதிர்ஷ்டம்  பெரியவா மௌன விரதம் இல்லை. எல்லோருடனும்  பேசினார்.  இந்த  பெரிய மனிதர்  பெரியவாளுக்கு   நமஸ்காரம் பண்ணிவிட்டு  

''பெரியவா  இங்கே  இருக்கிற  அதோ அந்த பையன்  எங்க ஊர்க்காரன்?''

'ஓஹோ..''

''ஆனா  அவன்  ரொம்ப மந்த புத்திக்காரன்.  எங்க ஊர்லே  எல்லோரும் அவனை  '' கால் காசுக்கு பிரயோஜன மில்லாதவன் ! வெறும் குப்பை!  என்பார்கள்.    எங்க ஊர்ல குப்பை கொட்டியாச்சு! இப்ப இங்க மடத்துல வந்து குப்பை கொட்டறா னாக்கும்'' என்று கொஞ்சம் அளவுக்கு மீறி பேசி விட்டார்.

மஹா பெரியவாவிட மே  அவரது மடத்தில் இருந்த ஒருவனைப் பற்றி  இப்படி பேசுகிறோம் என்ற மரியாதை தெரியாமல்  அந்த தொண்டனைப்  பற்றி குறை சொன்னதை  மஹா  பெரியவா எப்படி எடுத்துக் கொண்டார்?  நாமாக இருந்தால் கோபம் கொள்வோம்.

''உங்க ஊர்க்காரனாக இருந்தாலும்  நீ  ஏன்  அவன் மேலே  குத்த பத்திரிகை வாசிக்கிறே.  ஒருவேளை  அவன் உன்னைத் தெரிஞ்சுண்டு,  ஒரே  ஊர்க்காரன் னு உபசாரம் பண்ணி வரவேத்து, என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தலை  என்கிற   காரணமோ?''  என்று  நிதானமாக கேட்டார்.

அந்த மனிதர்  பதில் பேசவில்லை. கை  கட்டி நின்றார்.   பெரியவா தொடர்ந்தார்.

"அவனை குப்பைன்னு தானே சொன்னே! நீங்கள்ளாம் சுத்தம் பாக்கற பெரிய மனுஷா. அதனால குப்பை-கூளம் ஒங்களுக்கு ஒதவாது தான். ஆனா லோகம்னு  இருந்தா  குப்பை  கூளமும்   இருக்கத் தானே செய்யும்? அதை கொட்டி வெக்கவே குப்பை தொட்டின்னும்   ஒண்ணு  இருக்கத்தானே இருக்கு? நான்தான் அந்த குப்பை தொட்டி. ஒங்க  யாருக்கும்   தேவைப்படாத, வேண்டாத  குப்பையும் கூளமும் எனக்கு தேவை .

 "இதோ பாரு! குப்பையிலும் கூட   ஒங்க மாதிரி சுத்தம் பாக்கறவாளுக்கு  இஷ்டமானது கெடைக் கும் னு உனக்கு  தெரியுமோ? 

  இந்த மடத்து குப்பை குழிலேந்து தான் ஒரு பரங்கி கொடியும், பூஷணி கொடியும் மொளச்சு, ஒன் மாதிரி  சுத்தக்காராளும், "இந்த மாதிரி டேஸ்ட் சாப்பிட்டதே இல்லைன்னு" சந்தோஷமா சாப்டுட்டு போய்ண்டே இருக்கா. தெரிஞ்சுக்கோ!

குப்பையிலேதான்   "குருக்கத்தி"  ன்னு ஒசந்த ஜாதி புஷ்பம் பூக்கறது.       "குப்பைமேனி"   ன்னு மூலிகை  கீரையே இருக்கு என்கிறதை  தெரிஞ்சுக்கோ. 

குப்பையை கிளறாதேங்கறாளே அதைத் தான் சொல்றேன். கிளறினா பூச்சியும், புழுவும் வந்து பிடுங்கும். இப்ப நீ குப்பையை கிளறினதாலதான், நான் ஒன்ன பிடுங்கறேன்''

பெரியவா  கோபம் காட்டவில்லை.  ஆனால்  அவர்  வார்ததைகளில்  இருந்த  உஷ்ணம்  அந்த மனிதரின் மனதை சுட்டது.  கண்களில் நீரோடு   பெரியவாவிடம்    தான் பேசியதற்கு  மன்னிப்பு கேட்டார்.

தன் பணியாளன் ஒருவனைப் பற்றி  யாரோ ஒரு வார்த்தை  குறையாக சொல்லிய தைத்   தாங்கா மல், தன்னையே குப்பை தொட்டி என்று சொல்லிகொண்டதில்  தான் எத்தனை எளிமை, வாத்சல்யம், உட்பொருள்!  பரந்த மனம்.  இப்படி யார்  இருப்பார்கள்?  உலகமுழுதுமுள்ள  பக்தர் கள்   அவரை இன்னும்  நாடி தேடி  வணங்கி  அவர் அருள் பெற அலைவது ஏன் என்று புரிகிறதல் லவா?

MANDOKYA UPANISHAD

 மாண்டூக்யோபநிஷத்  - 2     ---   நங்கநல்லூர்  J K  SIVAN  --


   

नान्तःप्रज्ञं न बहिष्प्रज्ञं नोभयतःप्रज्ञं न प्रज्ञानघनं
न प्रज्ञं नाप्रज्ञम् । अदृष्टमव्यवहार्यमग्राह्यमलक्षणं
अचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं
शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥  ७॥


 நாந்த:ப்ரஜ்ஞம் ந ப³ஹிஷ்ப்ரஜ்ஞம் நோப⁴யத:ப்ரஜ்ஞம் ந ப்ரஜ்ஞாநக⁴நம்
 ந ப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம் । அத்³ரு’ஷ்டமவ்யவஹார்யமக்³ராஹ்யமலக்ஷணம்
 அசிந்த்யமவ்யபதே³ஶ்யமேகாத்மப்ரத்யயஸாரம் ப்ரபஞ்சோபஶமம்
ஶாந்தம் ஶிவமத்³வைதம் சதுர்த²ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய: ॥ 7


 மனித வாழ்க்கையின்  மூன்று பரிமாணங்களை பற்றி    அறிந்தோம்.,விழிப்பு நிலை, கனவு,  ஆழ்ந்த உறக்கம்,  நான்காவது நிலை ஒன்று உண்டு.  அது உள்ளேயோ, வெளியேயோ,  அசையும் உணர்வு அல்ல.  இரண்டும்  சேர்ந்ததும் அல்ல.  இரண்டின் இனம்புரியாத கலவையுமல்ல,  உணரமுடியாததல்ல, உணர்வதுமல்ல,  கண்ணுக்கு புலப்படாதது, பிடிபடாதது, குணமற்றது, விளக்கமுடியாதது,  அது தான்  ஆத்மா  அதை உணரமுடிய வேண்டுமானால் கடும்  தியானப் பயிற்சி தேவை.  அது தன்னைத்தானே உணரவல்லது.  மென்மையானது, அமைதியானது, ஆனந்தமயமானது.  ஈடிணையற்ற  சுகானுபவம் அதை  உணரத்தான் முனிவர்கள் ரிஷிகள்   கடுமையாக தவம் இருக்கிறார்கள்.  


सोऽयमात्माध्यक्षरमोङ्कारोऽधिमात्रं पादा मात्रा मात्राश्च पादा
अकार उकारो मकार इति ॥ ८॥

 ஸோऽயமாத்மாத்⁴யக்ஷரமோங்காரோऽதி⁴மாத்ரம் பாதா³
மாத்ரா மாத்ராஶ்ச பாதா³ அகார உகாரோ மகார இதி ॥ 8॥


ஆத்மாவை   சப்த வடிவில் காட்டும்   ஓம்  எனும்  பிரணவ மந்த்ரம் மேலே  சொன்ன  நான்கு நிலைகளிலும்  உணரப்படும்.   ஓம்  என்பது  அ   உ   ம  எனும் மூன்று  அக்ஷரங்கள் தொகுப்பு.   ஓம்  என்பது  சப்த மாதா. 


जागरितस्थानो वैश्वानरोऽकारः प्रथमा मात्राऽऽप्तेरादिमत्त्वाद्
वाऽऽप्नोति ह वै सर्वान् कामानादिश्च भवति य एवं वेद ॥ ९॥

ஜாக³ரிதஸ்தா²நோ வைஶ்வாநரோऽகார: ப்ரத²மா மாத்ராऽऽப்தேராதி³மத்த்வாத்³
வாऽऽப்நோதி ஹ வை ஸர்வாந் காமாநாதி³ஶ்ச ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 9॥


jāgarita-sthāno vaiśvānaro’kāraḥ prathamā
mātrā’pter ādimattvād vā’pnoti ha vai
sarvān kāmān ādiś ca bhavati ya evaṁ veda.


வைச்வாநரம் என்பது  விழிப்பு நிலையை குறிப்பது.  அது தான் முதல் சப்தம். அ .    சகலமும் உள்ளடக்கியது இந்த  அக்ஷரம்.  எனவே அதையே  முதலாவதாக கொண்டார்கள் ரிஷிகள்.   அகாரம்    என்கிற  சப்தம், எழுத்து தான்  அநேகமாக எல்லா  பாஷைகளிலும் முதல்  எழுத்தாக உலகில் இன்றும்  காணப்படுகிறது.  எல்லாம்  அறிந்தவன் எல்லாவற்றிற்கும்  ஆதாரமான  முதல்   சப்தமாகிறான்.  இது தான் வேதம் சொல்வது.


स्वप्नस्थानस्तैजस उकारो द्वितीया मात्रोत्कर्षात्
उभयत्वाद्वोत्कर्षति ह वै ज्ञानसन्ततिं समानश्च भवति
नास्याब्रह्मवित्कुले भवति य एवं वेद ॥ १०॥


ஸ்வப்நஸ்தா²நஸ்தைஜஸ உகாரோ த்³விதீயா மாத்ரோத்கர்ஷாத் 
உப⁴யத்வாத்³வோத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸந்ததிம் ஸமாநஶ்ச ப⁴வதி 
நாஸ்யாப்³ரஹ்மவித்குலே ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 10॥


இரண்டாவது நிலையான கனவு  தைஜஸ்  என அறியப்படுகிறது.   இதற்கான  சப்தம்   உ  எனும்  அக்ஷரத்தால் உணரப்படுகிறது.   அற்புதமான சப்தம்  இது.  மற்ற  இரண்டின் தன்மையை தன்னுள் கொண்டது.  எவன் இதை  அறிந்தவனோ, அவன்  ஞானம் பெறுபவன்.  அவன்  வம்சத்தில் எவனும்  பிரம்மத்தை  அறியாதவனாக இருக்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு  சக்தி வாய்ந்த  சப்தம் இது. வேதம் இதை வலியுறுத்துகிறது. 


सुषुप्तस्थानः प्राज्ञो मकारस्तृतीया मात्रा मितेरपीतेर्वा
मिनोति ह वा इदं सर्वमपीतिश्च भवति य एवं वेद ॥ ११॥\

ஸுஷுப்தஸ்தா²ந: ப்ராஜ்ஞோ மகாரஸ்த்ரு’தீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இத³ம் ஸர்வமபீதிஶ்ச ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 11॥


மூன்றாவது நிலையான  ஆழ்ந்த உறக்கம்  மகாரம்   எனும் சப்தத்தால்  உணர்த்தப்படுகிறது. 
 பிரஞை எனும் சொல்லால் இந்த  நிலை குறிப்பிடப்படுகிறது.  இதில்  எல்லாம்  சேர்கிறது.  இதன் தன்மையை  உணர்ந்தவன்  சகலமும் அறிந்தவன் என வேதம்  சொல்கிறது.   


अमात्रश्चतुर्थोऽव्यवहार्यः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत
एवमोङ्कार आत्मैव संविशत्यात्मनाऽऽत्मानं य एवं वेद ॥ १२॥
         
அமாத்ரஶ்சதுர்தோ²ऽவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஶம: ஶிவோऽத்³வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஶத்யாத்மநாऽऽத்மாநம் ய ஏவம் வேத³ ॥ 12॥ ॥ இதி மாண்டூ³க்யோபநிஷத் ஸமாப்தா ॥  


மாண்டூக்ய உபநிஷத் முதல் பாகம் சொல்வது இவ்வளவு தான்.


மேலே சொன்ன   ஸ்லோகங்களில்  ஓம்  எனும் பிரணவ  ஆதார  மந்த்ரம்  அக்ஷரங்கள்  மூலம்  பகுத்துக் காட்டப்பட்ட து . ஓம்  எனும் மந்திரம்   அ  எனும் முதல்  சப்தத்தில் பிறக்கிறது அல்லவா.  அந்த   அ     எனும் ''அப்தி '' எனும்  சொல்லின் வடிவம்.  அப்தி  என்றால்  அடைவது,  சேர்வது.   ஆதி மாத்வம்.  (ஆதாரமான முதலாவது)  ரெண்டாவது சப்தமான உகாரம்  ,  உதகர்ஷம் (உயர்நிலை) .இதையே  உபயத்வம்   (நடுநிலை) என்பார்கள்.  மூன்றாவது சப்தம்  ம , மிதி எனும் சொல்லின் விளைவு.   மிதி என்பது  உருவாவது, விளைவது என்று அர்த்தம் தருவது.   மி  மினதி , அதாவது  அபிதி யை  சொல்வது.  அழிவு, சம்ஹாரம் பற்றி உணரவைப்பது.   நான்காவது    சப்த குறிப்பற்றது .  அதற்கு  தனியான  அக்ஷரம் இல்லை. ஏன்  எனில், அது  பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டது.  இப்படித்தான் மாண்டூக்யோபநிஷத்  பிரணவ சப்தம்  ஓம்  என்பதை ஆத்மாவாக   உணர்த்துகிறது. நான்காவது நிலை  துரீயம்  விளக்க வொண்ணாதது. தன்னுள் தானே   அனுபவத்தால் அறிவது. 


அன்பர்களே,  உபநிஷதுகள் பொறுமையாக  படித்து  அறிந்து கொள்ளவேண்டியவை. அவசரமாக   அணுகினால் உள்ளே நுழையாது என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறேன்.  ஓம்  எனும் பிரணவத்தை உள்ளர்த்தத்துடன் புரிந்துகொண்டு நெருங்கினால் உபநிஷதுகள் கொஞ்சம் எளிமையாக  புரியும்.
108  உபநிஷதுகள் இருக்கிறது.


மாண்டூக்யோபநிஷதுக்கு  வியாக்கியானம் முதலில் எழுதியவர்  கௌடபாதர்.  அத்வைத வேதாந்தத்தை தழுவியது இது.   த்வைத கோட்பாட்டை  நிலைநாட்டிய  மத்வாச்சார்யர் கூட  இதற்கு  உரை எழுதியுள்ளார். அவை  ஸ்ருதி சம்பந்தமானவை. விஷ்ணுபரமாக  பக்தியை  உணர்விக்க வல்லது என்கிறார்.  

DHROWPATHI

 



       ஆபத் சகாயன் -   J.K. SIVAN
       
எல்லோருக்கும் எல்லாமும் தெரியும்  என்று எண்ணுவது சரியல்ல. அதே நேரம்  யாருக்கும்  ஒன்றும் தெரியாது நம்மைத் தவிர  என்று எண்ணுவது மஹா மோசம்.   நாம் எங்கோ  படித்தோ, கிடைத்ததோ, ஒரு விஷயம்  புதிதாக  சொல்வதாக  கூறுவது   நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். பலர் பலமுறை படித்த சமாச்சாரம் என்றால் தொடக்கூட மாட்டார்கள்.  மஹா பாரதம் ராமாயணம்  கதைகள் சம்பவங்கள் எல்லோருக்கும் அநேகமாக தெரிந்தவைகள்  என்றாலும்  ஒவ்வொரு முறையும் யார்  வாயிலாக கேட்கும்போது படிக்கும்போது அதில் ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது ஒன்றே  போதும்    நமது இதிகாசங்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்று நிரூபிக்க . இப்போது நான் சொல்வதும் மஹாபாரதத்தில் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

திரௌபதி பஞ்ச மகா கன்னிகைகளில் ஒருவள். அவளுக்கும்   கிருஷ்ணனுக்கும்  உண்டான உறவு பகவானுக்கும் ஒரு  பக்தைக் குமான பரிசுத்த  அன்பு.   திரௌபதி  சாதாரணமாக நம்  போல் பிறந்தவள் அல்ல யாகத்தீயில்  சகோதரன்  த்ருஷ்டத்யும்னனோடு அவதரித்தவள்.  அவளை வளர்த்த தந்தை  ராஜா துருபதன் அவள்  கல்வி, கேள்விகளிலும் ஒழுக்கம், குடும்ப பாங்கு ஆகியவை அனைத்திலும்  தேர்ச்சி பெற  ஏற்பாடு செய்தான்.  அவள் பக்தி பூரா  கிருஷ்ணனிடமே இருந்தது.  அவளை கிருஷ்ணனுக்கு  திருமணம் செய்து வைக்க  துருபதனுக்கு  எண்ணம்.  கிருஷ்ணன்  "திரௌபதி  என்றும் என்னுடைய  பிரியமான சகி. அவளை நான் மனைவியாக நினைத்துக்  கூட  பார்க்ககூட முடியாதே”  என்று  கிருஷ்ணன்  மறுத்து விட்டான்.  ஆனால்   கிருஷ்ணனின் யோசனைப்படியே துருபதன் சுயம்வரம் நடத்தி அதில்  அர்ஜுனன் வெற்றிபெற்று  அவள் பாண்டவர்கள் மனைவியான விஷயம் ஒரு தனிக்  கதை.   மஹா பாரதத்தில் ஒவ்வொரு சம்பவமும் ஒரு அற்புத சரித்திரம்.

 திருதராஷ்ட்ரனுக்கு கண் இருந்தால்  ஒரு கண் வெண்ணை  ஒரு கண்  சுண்ணாம்பு  என்று சொல்லலாம். கண் இல்லாமலேயே அவன்  தனது புத்ரர்களுக்கு  சாதகமாகவே செயல் பட்டவன்.

பாண்டவர்களுக்கு என்று  தேசம் பிரித்தபோது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கும்  ஒன்றுமே விளையாத
 வறண்ட பூமியான காண்டவ ப்ரஸ்தத்தை பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்தான். கிருஷ்ணனுக்கு
 துரியோதனனின்  பங்கு இதில் அதிகம்  உண்டு என்று தெரியும்.   இருப்பினும், கிருஷ்ணன்  தேவலோக சிற்பி மயனை  அனுப்பி  காண்டவப்ரஸ்தத்தை அழகிய  சோலை வனம் மிக்க  பச்சை பசேலென்ற இந்திர பிரஸ்தமாக மாற்றி அமைத்தான். எல்லாம்  திரௌபதியின் மேல் இருந்த பாசத்தால்  தான்.  

பாண்டவர்களின் வளர்ச்சி புகழ் அனைத்தும் துரியோதனனை பொறாமைத்   தீயில் வாட்டியதால்  அவன்  மாமா  சகுனியின்  யோசனைப்படி பாண்டவர்களை சூதாட்டத்துக்கு அழைத்தான்.   

கிருஷ்ணனுக்கு சகுனியால் தான் கௌரவ வம்சமே அழியப்போவது  நன்றாகத்  தெரியும்.  அவன்  மூலமே மகாபாரத போர் மூளப்போகிறது  என்பது மட்டுமல்ல. சகுனியின் தந்தையின்  கால் எலும்பினால்  செய்யப் பட்ட தாயக்கட்டை தான்  கேட்கும்  எண்களைத்  தரப்போகிறது,   இதனால் தர்மன் தோல்வி நிச்சயம்  என்றும்  தெரியும். கவுரவர்  அழிவுக்கும் பாண்டவர் வெற்றிக்கும் முக்ய காரணம்  சகுனி  என்பதால்  கண்ணன்  தக்க சமயம் வர, காலம் கனிய பொறுத்தான் . 

துரியோதனனின்   சூதாட்ட வெற்றி தந்த மதி மயக்கத்தில், வெறியில்,  தம்பி  துச்சாதனனை அனுப்பி  தோல்வியுற்ற பாண்டவர்கள் மனைவி  திரௌபதியை  அலங்கோலமாக  சபைக்கு   இழுத்து வரச்  செய்து,   மானபங்கப்படுத்த  எடுத்த  முயற்சி  தோற்றதற்கும் கிருஷ்ணனுக்கு திரௌபதி மேல் இருந்த  அளவற்ற  பாசத்தால் மட்டுமல்ல அவளுக்கு கண்ணனிடம் இருந்த  பக்தியாலும் தான்.

 ஒரு சமயம்  பாண்டவர்களோடு திரௌபதியும்  கிருஷ்ணனும்  ஒரு  வடதேச யாத்ரை  சென்றபோது  அங்கு  ஒரு பெரிய  காட்டாறு  கடல்போல்  உருண்டு திரண்டு   ஓடிக்கொண்டிருந்தது அதன் பேரிரைச்சல்  சுற்று வட்டாரத்திலுள்ள  விலங்குகளுக்கு  கூட  அச்சத்தை உண்டு   பண்ணியது.  அப்போது  அதில் நீராடலாமா  என்று அர்ஜுனன் கேட்க  அனைவரும்  அந்த நதியில் இறங்கினர்.  

நதியில்  வெகுநேரம்  நீராடிய பின்  பாண்டவர்கள்  கரையேறினார்.  கிருஷ்ணன் மட்டும்  கரை ஏறாமல்  நீரிலேயே நின்று கொண்டிருந்ததை  திரௌபதி  கவனித்துவிட்டாள். கிருஷ்ணனின்  ஆடையை  வெள்ளம்  அடித்துக்  கொண்டு போனதை  அவள்  புரிந்து கொண்டுவிட்டாள். சமயோசிதமாக  கிருஷ்ணன் இருந்த பக்கமாக ஆற்றில்   தன்னுடைய  புடைவையில்  பாதி கிழித்து  கிருஷ்ணன்   பார்வை படும்படியாக போட்டாள்.  கிருஷ்ணன்  அதைப்  பிடித்து  உடுத்திக் கொண்டு  கரையேறினான். இதுவே   ஒரு மறக்க முடியாத   சம்பவமாக மனதில்  உறைந்து தக்க  சமயத்தில் திரௌபதிக்கு  துரியோதனன் சபையில்  முடிவில்லாத வஸ்த்ர தானம் செய்து கண்ணன்  உதவினான் என்று  சம்பவம் எங்கோ படித்தேன்.  கிருஷ்ணன் தக்க நேரத்தில் தனது நன்றிக் கடனை  திரௌபதிக்கு செலுத்தியது தான்  எல்லையற்ற புடைவை மயமா ?


அரசவையில் திரௌபதியின் க்ரிஷ்ணபக்தியை  மெச்சிய திருதராஷ்ட்ரன்  "திரௌபதி, உனது பக்தியும் கணவன்மார் மீது  உள்ள பதிவ்ரதா தர்மமும்  எனக்கு  மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது உனக்கு இரண்டு வரம் தர வேண்டும்  என்று தோன்றுகிறது. கேளேன்!” என்றான்.

''என் கணவர்களது மேல் அங்கவஸ்தரத்தையும்  அவர்களது மகுடங்களையம்  திருப்பிக்  கொடுத் தாலே போதும் ” என்றாள்  திரௌபதி. 

வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது  துரியோதனனிடமிருந்து வந்த வித்தை. பாண்டவர்களிடம் அக்ஷய பாத்ரம் இருந்து அதன் மூலம் அன்றாடம் அவர்களுக்கும்  வனத்திலிருந்த அனைத்து மக்களுக்கும்  உணவு கிடைக்கிறது, அனைவரும் உண்டு அந்த பாத்ரம் கழுவி வைக்கப்பட்டால் அவ்வளவு தான் அன்று உணவு என்றும் தெரிந்து,  துர்வாசரை தன்னுடைய 60000 சிஷ்யர்களோடு பாண்டவர்களைப்  போய்  மதியத்துக்கு மேல் போஜனம் அளிக்குமாறு  கேட்க வைத்தான்.  அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று கிருஷ்ணனுடைய  பிறந்தநாள். 

கிருஷ்ணன் பாண்டவர்களை அன்று  சந்திப்பது வழக்கம். துர்வாசர் தனது 60000 சிஷ்யர்களோடு ஸ்நானம் செய்து வருவதற்குள்  கிருஷ்ணன்  அக்ஷய பாத்ரத்தில் ஒட்டிகொண்டிருந்த ஒரு  கீரைத்துண்டின்  மூலம் தன் பசியாறி துர்வாசரும் அவர் சிஷ்யர்களும் பசியறியாதபடி  பண்ணினது   ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அல்லவா?  இதெல்லாம் திரௌபதிக்காக கிருஷ்ணன் செய்த ஆபத்சகாயம் தானே!!      இன்னொரு விஷயம், திரௌபதிக்கு ஒரு பெயர்  கிருஷ்ணா.


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...