Tuesday, March 23, 2021

NARADHA AND NARAYANA

 THIS IS JUST A SHORT IMAGINARY WRITE UP FOR FUN ONLY. WE NEED CHANGE ISN'T IT ?


''இது என்ன பேத்தல்.'' நங்கநல்லூர் J K SIVAN -
'
'நாரதா என்ன ஒன்றும் பேசாமல் இருக்கி றாய். அது என்ன உன் முகத்தில் ஏதோ ஒரு துணி மாதிரி சுற்றி இருக்கிறாய்?''
''கிட்டே வராதே நாராயணா, நான் பாரத விஜயம் செய்து விட்டு வருகிறேன். முதலில் கை கால் முகம் கழுவிக்கொண்டு அப்புறம் பேசுகிறேன். ஆறு அடி தள்ளியே நில்லு ''
''என்ன இதெல்லாம், உன்னுடைய வழக்கமான நாடகமா?''
''பிரபு, நான் உயிர் தப்பியதே பெரிய விஷயம். தெரியாத்தனமாக எங்கோ ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தில் மாட்டிக்கொண்டு நெரிசலில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தேன். இனி கொஞ்சம் வருஷம் அந்த பக்கமே தலை காட்ட மாட்டேன்.''''என்ன ஆயிற்று .. உன் பேச்சே புரியவில்லையே'' பல மொழிகளில் பேசுவ தால் ஒருமொழி இன்னொருவருக்கு பிடிக் காது.பொது மொழியாக ஒன்றும் வேண்டாம் என்பதால் ஒருவர் பேசுவது இன்னொரு வருக் கு புரியவில் லை. புரிந்தாலும் தெரியாதது போல் நடக்கிறார்கள். அப்படியே தனித் தனியாக பேசிக் கொண்டு நிற்கிறார்கள் ஆனால் எல்லோரும் பொதுவாக பயப்படுவது கொரோனா ..
''கொரோனா வா அப்படியென்றால்?''
யாருக்குமே தெரியாது. ஏதோ ஒரு கிருமி, நாராயணா உன்னை விட சக்தி வாய்ந்தது. எங்கிருந்து எப்போது எப்படி யார் மூலம் வரும், தாக்கும் என்றே தெரியாது. உடம்பெல் லாம் துளைபோட்டு ஊசி, அப்படியும் தப்பு வது கடினம். தடுப்பு ஊசி மூலைக்கு மூலை இலவசமாகவும் கொஞ்சம் காசுக்கும் எங்கும் அங்கே போடுகிறார்கள். ''கொரோனா ராக்ஷஸனா என்ன, அவ்வளவு பெரிசா ,
பொல்லாததா''''
ஆஹா , பெரிசு என்றால் முதியவர்கள் என்று தமிழ்நாட்டில் அர்த்தம். பெரிசுகள் அதிலி ருந்து மீளாது . வெளியே தலை காட்டுவ தில்லை. பாவம் எமனுக்கு நிறைய வேலை. ஆள் அதிகம் வேலைக்கு தேவை என்கிறான். வழியில் பார்த்தேன். பெரிசுகள் தான் அதிகம் மூச்சு முட்டி விறைத்து போகும் என்கிறான். . வீட்டிலே யே முடங்கி கிடக்கிறார்கள். இதில் எலெக்க்ஷன் வேறு?'

'எலெக்ஷனா,, அது என்ன புது வார்த்தை?''

'''நீ மனிதனை உண்டாக்கினாய், அவன் என்ன வெல் லாமோ உண்டாக்கி இருக்கிறான்'' நீ பண்ணின பெரிய தப்பு மனிதனை உண்டாக் கியது கண்ணா. BAD EXPERIMENT . பேசாமல் பறவைகள் மிருகங்களோடு நிறுத்திக் கொண்டி ருக்கலாம்.''
எலெக்க்ஷன் கிலெக்ஷன் என்று ஏதோ சொன் னாயே, அதைப் பற்றி பேசு முதலில்..''
''ஐந்து வருஷத்துக்கு ஒரு தரம் நாட்டை ஆள புது ராஜா போல் ஒருவனை நியமிக்கிறது வழக்கம். ஆனால் தனிமனிதன் ராஜாவாக முடியாது. அவனுக்கு கட்சி பலம் வேண்டும்.
''அப்படியென்றால்
'''அவனுக்கு ஆட்கள், கொடி , பத்திரிகை டிவி சேனல் எல்லாம் இருக்கவேண்டும். போட்டி யில் நின்று ஜெயிக்கவேண்டும். அவன் பிறகு தலை வன். ராஜாமாதிரி, எது வேண்டு மானா லும் செய்வான். கேட்க ஆள் கிடையாது.'
'நாரதா, நீ சொல்வது புரியவில்லையே, ஒருவன் ஜெயிப்பதற்கு மக்களை, நாட்டை ஆவதற்கும் என்ன சம்பந்தம் ?''
'' ஒவ்வொரு மனிதனும் , ஆணும் பெண்ணும் வோட் , வாக்களிப்பது என்றும் சொல்கிறார் கள், அதை ஒருவனுக்கோ ஒருவளுக்கோ அவன் கட்சிக்கு போட்டு அவன் நாட்டை ஆள்வான் என்று சொன்னேனல்லவா. அதற்கு அவன் எதை வேண்டுமானாலும் ''சும்மா'' தருவான். உழைக் காமல் வீட்டிலேயே இருந்துகொண்டு சாப்பிட லாம். எப்படி?
''உழைக்காமல் எப்படி சம்பாதிப்பது?''
''உனக்கு புரியாவிட்டால் யாருக்கு கவலை?
இங்கு கூட வைகுண்டத்தில் அந்த மாதிரி கட்சி, கொடி எல்லாம் உண்டாக்கி, முதலில் உன்னை இறக்கி விட்டு நான் ஆள் சேர்த்து எனக்கு ஆதரவு கொடுத்து உன் ஆதிசேஷன் மேல் நான் அமர் வேன்.'' அதற்காக என்ன கட்சி, கொடி, என் கட்சிக்கு யாரெல்லாம் ஆள் என்று முதலில் நான் யோசிக்கப் போகிறேன்..
''என்ன நாரதா உளறுகிறாய். நான் இல்லா மல் வைகுண்டமா? நீ நானாகி விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
''என் கட்சி ஜெயித்து உன்னை கிளப்பிவிட்டால் நீ அப்புறம் என் எதிரே நின்று கத்துவாய். உன் பெயர் எதிர் கட்சி தலைவன். . உன் கிட்ட இருப்பவர்களை நான் ஒவ்வொருவராக நான் விலைக்கு வாங்கி உனக்கு துரோகம் செய்ய வழி உண்டு. '
'''என்ன பேத்தல் இது நாரதா?'''
'ஆனால் இங்கு இல்லாதது அங்கு இருக்கிறது. ஜாதி, பட்டியல் என்று ஏதோ சொல்கிறார்கள். அது அவசியம். அதில் இருக்கிறவர்களை ஒன்று சேர்த்து கட்சி அமைத்தால் தான் வெற்றி நிச்சய மாம். இங்கு ஜாதியில்லையே என்ன செய்வது என்று யோசிக்கிறேன். ஒரு வழி கிடைக்காமலா போய்விடும். அது ஒட்டு பெற பலம். ஆனால் ரொம்ப கஷ்டம். அவர்களை ஒன்று சேர்ப்பது முடியாத காரியமாம். முடிந்தால் அவர்களைி சேர்ந்த ஒருவனை நிற்க வைத்து அவர்கள் ஆதரவு திரட்ட வேண்டும். அவர்கள் வாக்களித் தால் ஜெயிக்கலாம் . நல்லவனா கெட்டவனா என்பது முக்கியமில்லை. ஆளு அவன் ஆளாக இருக்கவேண்டும். இது தவிர காசும் கொடுக்க லாம் அதுவும் நல்லா வேலை செய்யும்.''
''நாரதா உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது.. பாவம். இப்போதெல்லாம் ரொம்பவே நீ மனிதர்களோடு பழகி கெட்டுப்போய் விட்டாய்.
'''நாராயணா , பூலோகத்தில் பதவி பதவி மோகம் இருப்பதால் யார் யாரோடு வேண்டுமா னாலும் சேர்ந்துகொண்டு ஆட்சியை பிடிக்க லாம், கவிழ்க்கலாம். சின்னம் அவசியம்'' கொள்கை தான் முக்கியம்.
''கொள்கையா? அப்படியென்றால்?'
'அடிக்கடி மாறும் என்பதால் அதை விளக்க முடியாது'' அப்பப்போ தேவைப்பட்டபோது அதை சாதகமாக்கிக் கொள்ளலாம். ஆம் சின்னமும் கொடியும் மக்கள் மத்தியில் பரவ வேண்டும்''
''என்னடா சின்னம் அன்னம் என்று ஏதேதோ பேத்துகிறாய் ''
''திடீரென்று ரெய்டு வரலாம். கும்பலாக திடீரென்று அவர்கள் வந்து சந்து, பொந்து , மூலை முடுக்கு எல்லாம் தேடி எங்கெங்கோ யார் யார் கிட்டேயே இருக்கும் கட்டு கட்டு கலர் காகிதத் தை மூட்டையாக கட்டி கொண்டு போய்விடுவார்கள். வைத்திருத்தவனை உள்ளே தள்ளி கம்பி எண்ண வைப்பார்கள்''
''நாரதா நிறுத்து, உனக்கு ஏதோ ஜுரம் வந்து கடுமையாகி நாக்கு உளறுகிறது.'
''இல்லை பிரபு, எதிர்ப்பு அவசியம். போட்டி போடுபவன் எதிர் கட்சி நல்லது செய்தால் அதை திட்டவேண்டும், எதிர்க்கவேண்டும். எதிலும் கமிஷன், லஞ்சம் கொடுக்க வேண்டும் அப்போது தான் காரியம் நடக்கும். ஒவ்வொன்றுக்கும் பல கை களுக்கு ''பச்சா '' வைக்கவேண்டும். அப்போ துதான் நாட்டுக்கு சேவை செய்யமுடியும், நல்லாட்சி தரமுடியும். ராஜா பிள்ளை ராஜா என்ற பழைய நல்ல பழக்கம் கொண்டு வர வேண்டும். அவர்களால் தான் சுபிக்ஷம் பெற லாம். நல்லது செய்ய முடியும். எதை வேண்டு மானாலும் இலவசமாக தரமுடியும்.'' தொண்டன் குண்டன் எல்லாம் சுலபமாக கிடைப்பான்.

''ஐயோ, நாராசம் நிறுத்து முதலில் நாரதா. உன் பேச்சு நன்றாக இல்லை...''..'

'அது தான் நல்லாட்சி தருவது என்பது... நாரா யணா, இங்கே கூட முதலில் கட்சி ஒன்று ஆரம்பித் து நல்லாட்சி தரப்போகிறேன். ..'

'தலை சுத்துகிறதடா. நீ போன இடத்தில் இதெல் லாமா .... எனக்கு புரியவில்லையே எங்கே கற்றுக்கொண்டாய் இப்படியெல்லாம் பேச? யார் காரணம் இதற்கெல்லாம்?''

ஆம் பேச்சு... பேசத் தெரியவேண்டும் நாராய ணா வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். வேண்டுமென்றால் ஒரு பேச்சு, வேண்டாமென் றால் அதையே மாற்றி பேசவேண்டும். தப்பாக பேசியதை கண்டுபிடித்தால், நான் அப்படியெல் லாம் பேசவில்லை, பொய்யாக அபாண்டமாக என் மேல் பழி '' என்று கத்தவேண்டும்.'

'எனக்கு இதெல்லாம் கேட்கவே பிடிக்கவில்லை, மக்கள் இதெல்லாம் விரும்புகிறார்களா அங்கே எடுபடுமா இப்படியெல்லாம் செய்தால்?''

''ஆஹா ஓஹோ என்பார்கள். கை தட்டுவார் கள்..ரசிப்பார்கள். ''மீம்ஸ்'' தெரியுமா உனக்கு நாராயணா?'''

நிறுத்து உன் பேச்சை. நாரதா. நான் சுதர்சன சக்ரத்த்தை எடுப்பதற்கு முன் என் முன்னே யிருந்து தொலைந்து போ. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு'''

'இதைத் தான் எதிர்பார்த்தேன் நாராயணா உன்னிடம். இதைத் தான் அங்கே எல்லோரும் செய்கிறார்கள். பொறுமை காக்கிறார்கள் சிந்திக்கிறார்கள். ஆராய்ந்து பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் வீட்டிலேயே இருப்பதால் சிந்திக்க நிறைய நேரம் இருக்கிறது. நல்லதைச் செய்வார்கள். எல்லாருமே மாறுதல் அவசியம் என்கிறார்களே. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்ச மாக மாறலாம்... நான் முதலில் போய் இதற் கெல்லாம் சேர்த்து தலை முழுகிவிட்டு வருகிறேன்.
''நாரதா, இதுவரை பேசியது எல்லாம், நீ யாரையோ எதையோ மனதில் வைத்துக் கொண்டு அல்லவோ உளறுகிறாய்.''
''ஐயோ நாராயணா, மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன், நான் பார்த்ததை கேட்டதை, ஒன்று சேர்த்து ஏதோ ஒன்றை சொன்னேன், எவரையும் மனதில் வைத்துக்கொண்டோ, குறிப்பிட்டோ, எவரையோ புண்ணாக்கவோ இல்லவே இல்லை. எனக்கு எதற்கப்பா அந்த அவசியம்?. எனக்கு இது வேடிக்கையாக தோன்றி யது. வேடிக்கைக்காக அங்கே நடப்பதைச் சொல்ல விருப்பமாக இருந்தது சொன்னேன். அவ்வளவு தான்.. வேறொன்று மறியேன் பராபரமே. எப்படியும் இன்னும் ஒருவருஷம் பூலோகம் போகப்போவதில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...