Thursday, March 18, 2021

CHANAKYAN


 

சகலகலா வல்லவன்  சாணக்கியன்  --  நங்கநல்லூர்   J K  SIVAN -
அற்புதமான  தீர்க்கதரிசி மட்டுமல்ல  அனுப வஸ்தன், ஞானஸ்தன்  இந்த  கௌடில்யன் எனும் சாணக்கியன். ஆயிரக்கணக்கான வருஷங்கள் கழிந்தாலும்  அவனது அறிவாற் றல்  இன்னமும்  மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டுகிறதே.
*அடேய், முட்டாளே,  வாழ்க்கையில்  வெற்றி பெற  அதிர்ஷ்டம்  எங்கோ மேலிருந்து கையில் வந்து விழும் 
என்று  அதை மட்டும்  நம்பினால்  இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல எந்த  ஜென்மத் திலும் வெற்றியின் வாசனை கூட உனக்கு கிடைக்காது. உழைக்க வேண்டும் முதலில், அப்புறம் அதன் பலன். 
* உலகில் குறை இல்லாத  ஜீவனே கிடையாது .  ஏதோ உனக்கு மட்டும் தான் நிறைய  குறை  என்று எண்ணி உன் கஷ்டங்களை, குறைக ளை, எல்லோரிடமும் சொல்லி  அழாதே.  உன்னைவிட  பெரிய  ப்ராப்ளங்களில்  அவர்கள் முழி பிதுங்கி தவித்துக்கொண்டி ருப்பது  உனக்குத் தெரியாது.  மேலுக்கு சிரிப்பதில் அது மறைந் திருக்கும்.   குறைகள்  இன்னொருவரிடம் சொன்னால் குறைந்து போகாது. அதை நீக்க உன்னிடம்  இருக்கும்  குறைகளை என்ன என்று  முதலில்  அலசி  ஆராய்ந்து அதற்கு சரியான தீர்வு என்ன என்று யாரிடமாவது கேட்டு  அதை  கடைப் பிடி.
*பொறுமை இல்லாதவனுக்கு   நிகழ்காலமும் எதிர்காலமும் கிடையாது.  எப்போதும் என்றோ நடந்ததையே பற்றி  நினைத்து  அதே மாதிரி மறுபடியும்  நடக்கும் என்று நம்புவது மனப்பால் குடிப்பது. 
*அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கி யத்திற்கு நல்லது.  சிலர்  வெளியே  சாப்பி டுவதற்கு என்று ஒரு வயிற்றில் ஒரு  தனி  இடம் வைத்திருப்பார்கள், அதை நிரப்ப முயல் வார்கள்.  வெகு சீக்கிரம் டாக்டரிடம் அது அழைத்துச் சென்றுவிடும்.
*வயதான காலத்தில் எப்போது எந்த  ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று தெரியாது. நிறைய  வழிகள் இருக்கிறது நம்மை  தூக்கிக் கொண்டு போவதற்கு.  ஆகவே, சின்ன  உபாதைகளைக் கூட  என்ன ஏது என்று புரிந்துகொண்டு அதை அலட்சியப்படுத்தா மல்  அதிலிருந்து  தப்ப முயலவேண்டும். 
*திருடுவதைவிடச் சாவது மேல் ''  கௌடில்யா!,    உன் தீர்க்கதரிசனம் இதில் தோற்றுவிட்டதடா. நமது பாரத தேசம் இப்போது மிகுந்த ஜனத் தொகை கொண்டது.  உன் கொள்கைப் படி பார்த்தால்  முக்கால் வாசி  மனிதர்கள்  காணாமல் போயிருக்க வேண்டுமே!
*பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.  வாஸ் தவம். அன்றுமுதல் இன்றுவரை  எண்  சாண்  உடம்புக்கு  வயிறே  பிரதானமா கத்தான்  இருந்து  வாட்டி வதைக்கிறது. அதை ரொப்புவ தற்கு  எத்தனை பொய்  பித்தலாட்டம், ஏமாற்று வித்தைகள் சிலருக்கு அவசியமாகிவிட்டது.
*பாத்திரமறிந்து தானம்செய்.''     நீ எவ்வளவு  சாதம்  மீந்ததை  போடப்போகிறாய் என்ற அளவு இல்லை இது. பாத்திரம் என்றால் இங்கு ஆசாமி.  தானம் பெற தகுதியானவனா, தானம் அவனுக்கு அளிப்பதன் மூலம் சரியான காரி யத்துக்கு பயன்படுமா?  நோக்கம்  வீணா குமா?  என்று ஆராய்ந்து, பரிசீலித்து உதவுதல்.வேஷத்தில் மயங்காதே. 

*வயதுக்கேற்ற ஆடை அணி'' .    சாணக்யா,  ஆடைகளின் வகைகள் ரொம்பவே  மாறிவிட்ட தடா. இப்போதுள்ள ஆடைகளில்  ஆணா  பெண்ணா என்றே  தெரியவில்லையடா. ஆடை  பொதுவாக ஆகிவிட்டது.  ஆடைகள் உடலை மறைக்கவா, மறைக்கவேண்டியதை காட்டுவதற்கா என்றும் தெரியவில்லையடா.  ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது உன் காலத்தில்.   அதிக ஆடை  அநாகரீகம் இப்போது.  ஆடை அழகிய கோலம்  அப்போது. இப்போது அலங்கோலம்.
*மேதை, முட்டாள், நண்பன், ஆசிரியர் மற்றும் உன் எஜமானன், இவர்களுடன் தர்க்கம் செய்யாதே''.--  வாஸ்தவம்.அப்பா. மேதையு டன் வாதம்  தோற்கும்.  முட்டாளுடன் தர்க்கம் வீண்.  நண்பனுடன் தர்க்கம் நெருக்கத்தை குறைக்கும்,  ஆசிரியருடன் தர்க்கம்  அவரை அவமதிப்பது, கர்வம்,  கடைசியில்  எஜமானனுடன் தர்க்கம் செய்தால்  அப்புறம்  நிம்மதியாக  வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டியது தான். சாப்பாட்டுக்கு??
*தாயார்தான் எல்லா குருமார்களை விடச்  சிறந்தவள்''. ஆமாம்  என்றும் அது தான்  மாறாதது.  அம்மாவிடம் தான் முதலில் ஒருவன் கற்கிறான். கல்விச்சாலை ஆலயம் என்றால்  தாய் தான்  தெய்வம்.
*கடைசியாக ஒரு நீதி வாக்கியம் . முட்டாள் நண்பனைவிட புத்திசாலி எதிரி சிறந்தவன்.   ரொம்ப நிதர்சன மான உண்மை. நம்பிக் கெட்டுப்போக   முட்டாள் நண்பனை விட வேறு யாரும்  சிறந்தவனில்லை என்று அரசியலே போதிக்கிறதே.
தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...